Thursday, March 17, 2016

ஃபேஸ்புக்கில் யோசிச்சேன்....13



பிரபுதேவாவின் டான்ஸுக்கு நான் வெறியன். அவர் அளவிற்கு டான்ஸில் என்னைக் கவர்ந்தவர், குரூப் டான்ஸராக அவருடன் ஆடிய இந்த பெண்.
கல்லூரி வானில், அட ராமா, கலர்ஃபுல் நிலவு போன்றவை சட்டென்று நினைவில் வரும் பாடல்கள். சற்று பூசிய உடல்வாகு. ஆனால் பிரபுதேவாவிற்கு இணையாக ஆடுவார். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பையும், முகத்தில் புன்னகையுடன் போடுவார். அவர் பெயர்கூடத் தெரியாது. என்னைப் போன்ற ரசிகர்கள் இருப்பதும் அவருக்குத் தெரிந்திருக்காது.
சென்ற வாரம் எங்கோ அவரது பாடலைப் பார்த்தபோது, என் வீட்டுக்காரம்மாவிடம் இவரைப் பற்றிப் பாராட்டி சிலாகித்துக்கொண்டிருந்தேன். இப்போது என்ன செய்கிறாரோ தெரியவில்லையே என்றேன்.
இந்த வார விகடனில் அவர் பேட்டி. அவர் பெயர் லலிதா. தற்போது டான்ஸ் மாஸ்டராக இருக்கிறாராம். (அவரது கணவர் ஷோபியும் பிரபுதேவா குரூப் தான், பார்க்க ஹீரோ போன்று இருப்பார்.) வாடி ராசாத்தி பாடலுக்கு நடனம்கூட, லலிதா தானாம்.
பெயர்கூடத் தெரியாமல் ரசித்த ஒருவரை, மிக நல்ல நிலையில் பார்க்கும்போது வரும் சந்தோசத்தை என்னவென்று சொல்ல! ஏதோ தொடர்பற்றுப்போன ஸ்கூல் ஃப்ரெண்டை திடீரெனப் பார்த்த ஃபீலிங்!
விகடனுக்கு நன்றி.
பாகுபலியோட பட்ஜெட் வேற...புலியோட பட்ஜெட் வேற! அப்போ ரெண்டையும் கம்பேர் பண்றது தப்போ?
பாகுபலியோட டிக்கெட் விலை 120 ரூபா. புலியோட டிக்கெட் விலையும் 120 ரூபா. அப்போ, ரெண்டையும் கம்பேர் பண்றது சரி தானோ???
----------------------------------
//அமீர்கான் அடுத்த படத்திற்காக உடல் எடையைக் கூட்டி, சால்ட் & பெப்பர் லுக்கில் வருகிறார். உடல் எடை அதிகரித்துள்ளதால் அவரால் சரியாக நடக்க முடியாமலும், மூச்சு விட முடியாமலும் சிரமப்படுகிறாராம் - செய்தி //
நடக்க முடியலியாம்..மூச்சு வாங்குதாம்...போய்யா, பீத்தல் பீதாம்பரம்..... எங்க தல பல வருசமாவே இப்படித்தான்யா இருக்கிறார். என்னிக்காவது வாயைத் திறந்து சொல்லியிருப்பாரா? எவ்ளோ டீசண்டா இருக்கிறாரு?
நடக்க முடியலேன்னா, கோட் போட்டுக்கிட்டு ஸ்லோ மோசன்ல போய்யா..இதெல்லாமா வெளிய சொல்வாங்க?
தெறி மாஸ்..
சங்கிலியில் சிக்கி சின்னாபின்னமாவதுசில ஹீரோக்கள்' என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா? smile emoticon
ஸ்டார்.....சூப்பர் ஸ்டார்டா!
//நான் நடித்த பல காட்சிகளை ஏன் நீக்கினீர்கள்? என்று சிம்புதேவனிடம் ஸ்ரீதேவி கேள்வி - செய்தி //
அம்மணி...ஏன்னு தெரியலேன்னா, கீழே இருக்கும் ஃபோட்டோவை பாருங்க!
-----------------
உலகத்தில் நம் பொறுமையைச் சோதிக்கும் விஷயங்கள் என்று ஒரு பட்டியலிட்டால், பாஸ்களுக்கு லெட்டர் டைப் பண்ணித் தருவதும் அடங்கும்.
ஒர் கம்பெனியில் கிளையன்ட்டுக்கு லெட்டர் பிரிபேர் பண்ணி, பாஸ்கிட்டே கொடுத்தேன். 'With reference to your letter#..' என்று ஆரம்பித்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர் 'ஏம்ப்பா..அவங்க லெட்டரை அவங்களுக்கே சொல்லணுமா? டெலீட் பண்ணு' என்றார். 'இவங்க எப்பவுமே இப்படித்தான்' என்று நினைத்துக்கொண்டு டெலீட் செய்துகொடுத்தேன்.
ஒரு மாதம் கழித்து வந்த கிளையன்ட் ரிப்ளைக்கு, பதில் லெட்டர் தயார் செய்தேன், 'With reference to..' இல்லாமல்! அதைப் பார்த்துவிட்டு அவர் கேட்டார் : 'என்னப்பா இது? இப்படி மொட்டையா அனுப்பினால் எப்படி? 'With reference to-ன்னு ஆரம்பிப்பா' என்றார். "##$$**" என்று மனதுக்குள் திட்டிவிட்டு மாற்றிக்கொடுத்தேன்.
பிறகு ஹிட்ச்காக் சென்சாரிடம் செய்த ஒரு விளையாட்டு பற்றிப் படித்தேன்.
'Rear Window(1954)'படத்தில் ஒருபெண் ஜட்டி-பிராவுடன் வருவதுபோல் ஒரு சீன் ஷூட் செய்தார். யு.எஸ் சென்சார் போர்டு இப்போதைய நம்மூர் சென்சார் போர்டு போல் இருந்த நேரம் அது. எனவே இந்த சீன் சென்சாரைத் தாண்டாது என்று தோன்றியது. அவர் என்ன செய்தாரென்றால், அதே பெண்ணை வைத்து டாப்-லெஸ்ஸாக அதே சீனை ஷூட் செய்தார். அதை மட்டும் படத்தில் வைத்து சென்சாருக்கு அனுப்பி வைத்தார்.
பார்த்து கொதித்துவிட்டார்கள், 'டாப்லெஸ்ஸா? பிராகூட இல்லையே..என்ன அநியாயம்' என்று! நம் ஆள் அப்பாவியாக 'ஓகே பாஸ்..அப்போ பிராவோட மறுபடி ஷூட் பண்ணிக் கொண்டு வர்றேன்'என்று சொல்லிவிட்டு, முன்பே எடுத்த சீனுக்கு அப்ரூவல் வாங்கிவிட்டார். 'They need something..we should feed them!'என்பது அப்போது அவர் சொன்ன திருவாக்கு.
எனவே இப்போதெல்லாம் லெட்டர் டைப் செய்தால், தேதி தப்பாகப் போடுவது அல்லது 'Please note note that'என்று எழுதுவது. இது நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. 'என்னப்பா இது..மாத்தீட்டுவா' என்று அதை சுழிக்கிறார்கள்.
அப்போது 'சார்..செம ஷார்ப் சார் நீங்க. எப்படி சார் கரெக்ட்டா புடிக்கிறீங்க?' என்று கேட்டுவிட்டு ,பாஸ் முகத்தைப் பார்ப்பது பேரானந்தம், பேரானந்தம்!
----------------------------
//கத்தி பட கதைத் திருட்டு வழக்கில், நடிகர் விஜய் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு - செய்தி //
எனக்கு இதில் உள்ள நியாயம் புரியவில்லை.
ஒரு கதை என்பது கதாசாரியரால்(அல்லது எழுதிய இயக்குநரால்) தயாரிப்பாளருக்கு விற்கப்படும் ஒரு விஷயம். அது சம்பந்தப்பட்ட அக்ரிமெண்ட்டில் ஹீரோவிற்கு எந்த சம்பந்தமும் கிடையாது.
இதே படம் ரீமேக் செய்யப்பட்டால், தயாரிப்பாளருக்கும் கதாசிரியருக்கும் தான் பணம் கிடைக்கும். எனவே கதையில் ஹீரோவுக்கு எந்த உரிமையும் இல்லை.
அப்படி இருக்கும்போது, நடிகர் மீது வழக்குப் போடுவதும், அதை கோர்ட் விசாரணைக்கு ஏற்பதும் எதனால்?
அவர் நடித்ததால் என்றால், சமந்தா மீது ஏன் வழக்குப் போடவில்லை?
வழக்கு போட்டவர் நடிகரிடம் கதை சொல்லி, அதன் பிறகு கதைத் திருட்டு நடந்திருந்தால் இதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இதில் ஆவணரீதியாக சம்பந்தப்படாத ஒருவரை கோர்ட்டிற்கு இழுத்தடிப்பது ஏன்?
இதே போன்று ஒரு நடிகரோ நடிகையோ ஏதாவது சொல்லிவிட்டால், ஊர் ஊருக்கு ஒரே விஷயத்திற்காக கேஸ் போடும் கூத்தும் நடக்கிறது. எல்லா இடத்திலும் நேரில் ஆஜர் ஆக உத்தரவு வருவது இன்னொரு அதிசயம்.
என்ன சட்டமோ!
ஏதோ கருத்துக்கணிப்பாம்..’இவரை ஏன் சேர்த்தீங்க? அவரை ஏன் விட்டீங்க?’ன்னு ஒரே ரகளை. ஆனால் குஷ்பூவையும் சி.ஆர்.சரஸ்வதியையும் முன்னிறுத்தாமல் என்னய்யா கருத்துக்கணிப்பு எடுக்கிறீங்க?
தற்போதைய தமிழ்நாட்டு நிலவரம், எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மனப்பான்மை, தமிழர் பாரம்பரியம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, 2021-ல் நம்மை ஆட்சி செய்யும் தகுதியுள்ளவர்கள் குஷ்பூவும் சரஸ்வதியும் தான்.
என்னிடம் கேட்டால், குஷ்பூ முதல்வராக 99% ஆதரவு தருவேன். அந்த 1%-ல் என்ன பிரச்சினையென்றால், இந்த பாழாய்ப்போன சமூகம் குஷ்பூவையும் பின்னாளில் அம்மா என்று தான் அழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துமோ என்ற பயம் தான்!!
சி.ஆர்.சரஸ்வதியுடன் நமக்கு எவ்வித முன் ஜென்மத் தொடர்பும் இல்லையாதலால், அவருக்கு 100% ஆதரவைத் தருகிறேன். அந்த வகையில் அதிமுகவுடன் எப்போதுமே நமக்குப் பிரச்சினை இல்லை என்று வைத்துக்கொள்ளலாம். எனவே இனிமேல் கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் இவர்கள் இருவர் பெயரைச் சேர்க்காமல் நடத்தினால், அதுவொரு பொய்யான சர்வே என்பதற்கு இதுவே ஆதாரமாக ஆகும்..ஜாக்ரதை.
‪#‎நானாயோசிச்சேன்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.