டிஸ்கி-1: இன்னைக்குமா-ன்னு கேட்கக்கூடாது. சனி, ஞாயிறு கூட்டம் குறைவா இருக்கும்போதே இதைப் போட்டுட்டா, மற்ற ரெகுலர் கஷ்டமர்களுக்கு இடைஞ்சல் இருக்காதேன்னு தான்..வழக்கமான பதிவு நாளை...
டிஸ்கி-2: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.
இன்று நாம் பார்க்கப் போவது வரைகலை(DESIGN) டிபார்ட்மெண்ட் பற்றி...
பொதுவா மெக்கானிகல் எஞ்ஜினியரிங் படிக்கிற மாணவர்களுக்கு ஒரு மனக்குறை உண்டு.
என்னன்னா, ஐ.டி./கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சாத்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும், மெக்கானிகல்/சிவில்னா சம்பளம் கம்மின்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டிருக்காங்க. அது உண்மைதான், ஆனாலும் அது உண்மை இல்லை. எப்படீன்னா, வெறும்(!) மெக்கானிகல் எஞ்சினியரிங் படிச்சுட்டு, ஐ.டி.பசங்களுக்கு இணையா சம்பளம் வாங்கணும்னா, நீங்க டிசைன் என்ஜினியரா ஆனாப் போதும். அதைப் பற்றி இப்போ பார்ப்போம்.
எதுக்கு இது?
ஒரு பொருளைத் தயாரிக்க அடிப்படைத் தேவை ரா மெட்டீரியலும் ட்ராயிங்கும் தான். உதாரணமா ஒரு பம்ப் அசெம்பிள் பண்ணனும்னா உதிரிப் பாகங்களை மட்டும் கொடுத்தால் போதுமா? அதற்கான ட்ராயிங்கையும் சேர்த்துக் கொடுக்கணும். (உதிரிப் பாகங்கள் தயாரிக்கவும் டிராயிங் வேணும்) ஒரு பம்போட டிராயிங் இந்த மாதிரி இருக்கும்:
அந்த வரைபடத்தை தயாரிக்கிற டிபார்ட்மெண்ட்தான் டிசைன் டிபார்ட்மெண்ட்.
என்ன செய்வாங்க?
R&D இல்லாத கம்பெனிகள்ல டிசைன்ல இருக்குற எஞ்சினியர் குழுவே வரைபடத்துக்கான சைஸை, சில ஸ்டேண்டர்ட்(Standards) புத்தகத்தை ரெஃபர் பண்ணி முடிவு செய்வாரு. அவருக்குக் கீழே வேலை செய்ற ஜூனியர் எஞ்சினியர்கள் அல்லது ட்ராஃப்ட்ஸ்மேன் இந்தப் படத்தை வரைவார்.
அந்த வேலைக்குத் தான் உங்களை மாதிரி ஃப்ரெஷ் எஞ்சினியர்ஸை எடுப்பாங்க. வரையணும்னா காலேஜ்ல மெசின் ட்ராயிங் கையால வரைஞ்ச மாதிரின்னு நினைச்சுக்காதீங்க. அதுக்கு ஆட்டோகேட்(AUTO CAD) போன்ற சாஃப்ட்வேர்கள் பயன்படும்.
உங்க வேலை, தினமும் உங்க பாஸ் கொடுக்கிற டிராயிங்கை அவங்க சொல்ற நேரத்துக்குள்ள முடிச்சுத் தர்றதுதான்.
இங்கே சேரணும்னா..
AUTO CAD, PRO-E, Solidworks போன்ற சாஃப்ட்வேர்களைப் படிச்சவங்கதான் இங்கே சேர முடியும். இவற்றைப் பற்றி இங்க எழுதுனா பதிவு பெருசாப் போயிடும். இதைப் பற்றி விரிவா அடுத்த பதிவில் சொல்றேன்.
டப்பு தேறுமா?
மெக்கானிகல் என்ஜினியரிங்கில் அதிக சம்பளம் கொடுக்கும் துறை இது மட்டுமே! அதான் மேலே முதல் பத்தியிலேயே சொல்லிட்டனே, இன்னும் என்ன சந்தேகம்!
எங்கெல்லாம் இருக்கும்?
இந்த டிபார்ட்மெண்ட் ஏதோவொரு கம்பெனியில் ஒரு பகுதியா மட்டும் இருக்கிறதில்லை. இதுக்குன்னே தனிக் கம்பெனிகளே இருக்கு. டிசிஎஸ், விப்ரோ போன்ற சாஃப்ட்வேர் கம்பெனிகள்கூட மெக்கானிகல் டிசைனுக்காக தனி டிவிசனே வச்சிருக்காங்க. பெரும்பாலும் இந்த மாதிரிக் கம்பெனிகளோட க்ளையண்ட்ஸ் வெளிநாட்டுக் கம்பெனிகளா இருக்கும். அதாவது நீங்க போடற டிராயிங்கை வெளிநாட்டுல இருக்குற யாரோ ஒருத்தர் யூஸ் பண்ணி உற்பத்தியோ அசெம்ப்ளியோ பண்ணுவார்.
ரொம்ப நல்ல விஷயம் என்னன்னா, இது ஒரு ப்யூர் ஒயிட் காலர் ஜாப்! ஒரு மெக்கானிகல் என்ஜினியருக்கு இப்படி அமைவது ஆச்சரியம்தான் இல்லையா!
அடுத்த வாரம் நீங்க படிக்க வேண்டிய சாஃப்ட்வேர்ஸ் பத்தி பார்ப்போம்!
அவ்வப்போது ஒரு புது செய்தியை என்னைப்போன்றவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கு நன்றி நண்பரே!
ReplyDelete@! சிவகுமார் !: இதையும் பொறுமையாகப் படிப்பதற்கு நன்றி சிவா.
ReplyDeleteஅடடே நீங்க நம்மாளா? நான் AuroCAD , RebarCAD லதான் ஒரு BPOல ஆணி புடுங்கினேன்! ஆனா அது Structural Engineering Field! Clients - Americans
ReplyDeleteபடிச்சது British Standard, வேலை American Standard. Mechanical Drawing தெரிஞ்சால் Middle east இல் நல்ல டப்பு!
PRO-E எனக்குத் தெரியாது! 3D க்கு AutoCAD ஐ விட 3D Studio Max ஈசின்னு நினைக்கிறேன்!
சொல்லுங்க பாஸ்! காத்திருக்கிறேன்! :-)
@ஜீ...: நாசமாப் போச்சு..மூணு பதிவு போட்டப்புறம் தான் நான்' உங்க ஆளு'ன்னு தெரியுதா...இன்னும் மூணு பதிவு போட்டா ‘நான் ஆஃபீஸ்ல உங்க பக்கத்து சீட் தான்’னு கெமெண்ட் போடுவீங்க போலிருக்கே..நீங்க என்னய்யா படிச்சிருக்கீங்க? மெக்கானிகலா?
ReplyDelete@ஜீ...: //சொல்லுங்க பாஸ்! காத்திருக்கிறேன்!// இப்போதான் The prestige-ஐ ஒரு வழி ஆக்கியிருக்கோம்..அடுத்து இதுவா..எப்படியோ இந்த தொடரைப் படிக்க ஒரு ஆளு சிக்கிட்டாரு டோய்!
ReplyDeleteஇல்ல பாஸ்! அத சொல்லல! உங்களைப்பற்றித் தெரியும். ஆனா AutoCAD பற்றிஎல்லாம் எழுதுவிங்கன்னு எதிர்பார்க்கல! அதான் சந்தோஷத்தில அப்பிடிக்கேட்டேன்!
ReplyDeleteநான் சிவில் பாஸ்! :-)
Nalla pathivu... kandippaga payanulla pakirvu.. GEE sonnathu pola middle eastla ACAD therinthal nalla sampathikkalaam...
ReplyDelete@சே.குமார்: ஆமாம் குமார், ஆட்டோகேட் மட்டுமே படித்து செட்டில் ஆனவர்கள் நிறையப் பேர்..
ReplyDelete@jothi: பாராட்டுக்கு நன்றி ஜோ!
ReplyDeleteவழிகாட்டல் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். இந்த மாதிரியான பதிவுகளும் சுவாரஸியம் குறையாமல் எழுதுகிறீர்கள்.
ReplyDelete@பாரத்... பாரதி...:சுவாரஸ்யம் குறைந்தால் பாடப்புத்தகம் மாதிரி ஆயிடுமே.
ReplyDeleteதங்களுடைய பதிவை எதிர் நோக்குக்றேன்....தொடர் பதிவிடுக மாணவர்களுன் நலனுக்காக...உதவிக்கு அணுகவும்...WhatsApp no - 8122282429
ReplyDeleteDear all if you are interested in cad line please go and study Diagonal CAD. Placement is available
ReplyDelete