டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.
“ எஞ்சினியர் ஆகப்போறேன்.”
“ஆகி என்ன செய்வே?”
“ எஞ்சினியர் வேலை பார்ப்பேன்.”
“அதைத்தான் கேட்கேன். என்ன வேலை செய்வே?”
“ ம்…ம்..எனக்கு கீழே ஒர்க்கர்ஸைக் கொடுத்திடுவாங்க.அவங்க வேலை செய்வாங்க..நான் சூப்பர்வைஸ் பண்ணனும் அவ்வளவு தான்.”
இது நான் ஆறாவது படிக்கும்போது, எனக்கும் என் வாத்திக்கும் நடந்த உரையாடல் அல்ல… நான் காலேஜில் 3ம் வருடம் படிக்கும்போது, எனக்கும் என் காலேஜ் சீனியருக்கும் இடையில் நடந்த உரையாடல் அது.
உண்மையைச் சொல்வதென்றால், ஒரு எஞ்சினியரின் வேலை என்ன, ஒரு கம்பெனியில் என்னென்ன டிபார்ட்மெண்ட் எல்லாம் உள்ளன என்பது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. காலேஜில் விழுந்து விழுந்து படிப்பதும், மார்க் வாங்குவதுமே எனக்குத் தெரிந்தது.
சமீபத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு (ஐ.டி.) படிக்கும் என் உறவுக்காரப் பையனிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகளைக் கேட்டேன். அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை. எஞ்சினியரா வேலை பார்ப்பேன் என்பதைத் தாண்டி வேறு எதுவும் தெரியவில்லை.
பொதுவாக முதல் தலைமுறைப் பட்ட்தாரிகளுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் அதைத் தாண்டி எதுவும் தெரிவதில்லை. கல்லூரிகளிலும் ஒரு கம்பெனியில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றி எதுவும் சொல்லித்தருவதும் இல்லை. பெரும்பாலான கல்லூரி ஆசிரியர்களுக்கு கம்பெனிகளில் வேலை பார்த்த அனுபவம் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம்.
எனவே Corporate Environment பற்றியும், ஒரு என்ஜினியரின் தினசரி அலுவல்களைப் பற்றியும் சில அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவுத் தொடர்.
சிறிய நட்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஆனாலும் சரி, பெரிய கப்பலையே கட்டும் கம்பெனி ஆனாலும் சரி, அடிப்படையில் பொதுவாக கீழே உள்ள துறைகளே (டிபார்ட்மெண்ட்களே) இருக்கும். நீங்கள் எந்தவொரு கம்பெனியில் சேர்ந்தாலும் சரி, கீழே கொடுக்கப்படிருக்கும் ஏதேனும் ஒரு டிபார்ட்மெண்டில் தான் உங்களைப் போடுவார்கள்:
1. R&D
2. DESIGN
3. DEVELOPMENT
4. PRODUCTION
5. ASSEMBLY / ERECTION
. QUALITY CONTROL
7. MAINTANENCE
8. OTHERS (PAINTING..)
நட்டு, பம்பு போன்ற சிறிய பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனியென்றால், மேலே சொன்ன டிபார்ட்மெண்ட்கள் ஒரே இடத்தில் இருக்கும். ‘கப்பல், தொழிற்சாலை’ போன்றவைகளைக் கட்டும் கம்பெனியென்றால் ஒவ்வொன்றும் ஒரே ஊரிலோ, பல ஊர்களிலோ அல்லது பல நாடுகளிலோ இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு கப்பலின் டிசைன் அமெரிக்காவில் செய்யப்படலாம். கப்பல் கட்டத் தேவையான மெட்டீரியல் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படலாம். கப்பலுக்குத் தேவையான பம்பு போன்ற உபகரணங்கள் கோயம்பத்தூரில் செய்யப்படலாம். எல்லாமும் சேர்ந்து, குஜராத்தில் கட்டப்பட்டு, சிங்கப்பூரில் அந்தக் கப்பல் ஓடலாம்.
நீங்கள் இருக்கும் துறையைப் பொறுத்து, உங்கள் வசிப்பிடம், வேலை, சம்பளம் எல்லாம் மாறும். சம்பளமா..விளக்கமாச் சொல்லுங்க-ன்னு கேட்குறீங்களா?..சொல்றேன். ஒவ்வொரு துறையாக விளக்கிச் சொல்றேன்.
தொடர்ந்து வாருங்கள். தொடரின் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
டிஸ்கி: ஆளே இல்லாத கடையில சின்ஸியரா டீ ஆத்துற அண்ணன் செங்கோவிக்கு ஒரு டீ சொல்லுங்கப்பா!
நிச்சயம் சிலருக்காவது பயன்படும் பதிவு, இடை இடையே இதுப்போல் எழுதுங்க
ReplyDelete@THOPPITHOPPI:நன்றி தொப்பிதொப்பி...எப்போதாவது யாருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில்தான் இதைப் பதிந்து வைக்கிறேன். வருங்காலத்தில் இணையத்தின் வீச்சு மாணவர் மத்தியில் அதிகமாகும்போது, இது அவர்களைச் சென்றடையும் என நம்புகிறேன்.
ReplyDeleteநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
ReplyDelete@தங்கராசு நாகேந்திரன்:ஆஹா...ஒரு இஞ்சினியரே வந்து பாராட்டிட்டாரே..நன்றி செல்வனூரான்.
ReplyDeleteநல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete@மதுரை சரவணன்:வருகைக்கு நன்றி பாஸ்.
ReplyDeleteயனுள்ள தகவல்கள்..... பகிர்வுக்கு நன்றிங்க
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteபயன்படும் பதிவு.
ReplyDeleteஉபயோகமான பதிவு. நன்றி
ReplyDeleteஉபயோகமான பதிவு. நன்றி
ReplyDelete@Chitra: தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றிக்கா!
ReplyDelete@Speed Master: வருகைக்கு நன்றி மாஸ்டர்.
ReplyDelete@சே.குமார்: ஆமா குமர், யாருக்காவது பயன்படும்.
ReplyDelete@middleclassmadhavi:இரண்டு பின்னூட்டத்திற்கும் நன்றிக்கா.
ReplyDelete//ஆளே இல்லாத கடையில சின்ஸியரா டீ ஆத்துற அண்ணன் செங்கோவிக்கு ஒரு டீ சொல்லுங்கப்பா//
ReplyDeleteஎனக்கும் ஒண்ணு சே[ர்]த்து சொல்லுங்க.நிச்சயம் பயனுள்ள பதிவுதான்.
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்....
ReplyDelete>>> கல்வி சம்மந்தப்பட்ட பதிவுகள் தொடரட்டும்.
ReplyDelete@சேக்காளி://எனக்கும் ஒண்ணு சே[ர்]த்து சொல்லுங்க// துணைக்கு வந்ததற்கு நன்றி சேக்காளி.
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ:வாழ்த்துக்கு நன்றி சார்.
ReplyDelete@!//சிவகுமார் !: // கல்வி சம்மந்தப்பட்ட பதிவுகள் தொடரட்டும்.// இதுக்கும் உங்க புரஃபைல் போட்டாவுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லையே?
ReplyDeleteஓ! ஆரம்பிச்சுட்டீங்களா பாஸ்! கலக்குங்க! :-)
ReplyDelete@ஜீ...: ஆமா ஜீ, மினியை ஆரம்பிச்சுட்டேன்..மெகா பின்னால வரும்.
ReplyDelete