நான் டவுசர் போட்ட காலத்தில் அடிக்கடி பத்திரிக்கைகளில் வரும் பரபரப்புச் செய்தி ‘ரஜினி அரசியலுக்கு வரபோகிறார், கிளம்பிட்டார், இதோ முக்குத் திரும்பிட்டார்’ என்பது தான். இப்போது என் பையனே டவுசர் போட ஆரம்பிச்சுட்டான். இப்பவும் மீடியாவுக்குப் போரடிச்சா ‘வாராரு, வாராரு’ என அதே செய்தியைப் போட்டுடறாங்க.இப்போ உங்களுக்கும் போரடிச்சா, தொடர்ந்து படிங்க..
மன்னன் படத்து சூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு உண்டாக்கப்பட்ட சம்பளப் பிரச்சினையில் இருந்துதான், மீடியாக்கள் ரஜினி அரசியலுக்கு வருவார் என முழு வீச்சில் சொல்ல ஆரம்பித்தன. அண்ணாமலை முடிந்து பாட்ஷா வந்தபோது, அது உச்சத்தில் நின்றது.
அப்போதுதான் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் வாரிசாக முதல் ஆட்சியை நட்த்திக் கொண்டிருந்தார். ஆனால் எம்.ஜி.ஆருக்கும் ஜெ.வுக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர்ந்துகொண்ட தமிழர்கள், எம்.ஜி.ஆரின் இடம் நிரப்ப வேறொரு நபரைத் தேடவேண்டிய சூழ்நிலை!
சினிமாவில் எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடித்த ரஜினியே அனைவரின் கண்ணுக்குத் தெரிந்த்து அச்சரியமில்லை. மீடியாவின் ஹைக்கும் சேர்ந்துகொள்ள, இயல்பாகவே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான சூழ்நிலை 1996ல் அமைந்தது.அப்போது ரஜினி வந்திருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கவும் முடியும். ஆனால் அவர் வரவில்லை. ஏனென்றால் சினிமாவில் மட்டுமே எம்.ஜி.ஆராகவும் நிஜவாழ்வில் சிவாஜி கணேசனாகவும் ரஜினி இருந்ததுதான்.
எம்.ஜி.ஆருக்கென அரசியல் சார்ந்த கொள்கையும் திட்டமும் ஆரம்ப காலத்திலேயே இருந்தது. அது அவரது இளமைப் பருவத்திலேயே தானாக உருவாகி வந்தது. பிறகு சினிமா மூலம் சேர்ந்த ரசிகர் கூட்ட்த்தை தன் அரசியல் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
ஆனால் சிவாஜிக்கும், சிவாஜி ராவுக்கும் (என்னே ஒற்றுமை!) அம்மாதிரித் திட்டங்கள் ஏதும் இல்லை. ’ரசிகர் கூட்டம் சேர்ந்துவிட்டது. எல்லாரும் சொல்றாங்க, எனவே ஏதாவது செய்வோம்’ என முடிவு செய்து பிறகு கொள்கை, திட்டங்களைத் தேடத் துவங்கினர். துட்டு விஷயத்தில் இருவரும் கெட்டி என்பதும் மற்றொரு ஒற்றுமை!
கண்டக்டர் வேலையை விட்டு சென்னை ஃப்ளாட்ஃபார்முக்கு வர ரஜினி யோசிக்கவில்லை. யோசிக்காமல் வந்து ஜெயித்தார். ஆனால் அரசியலுக்கு வர யோசிக்கிறார், யோசிக்கிறார், இன்னும் யோசிக்கிறார். அரசியல் போன்ற தீவிர விஷயங்களில் ஈடுபட, சினிமா மீது இருந்த அதே வெறி தேவை. அப்படி எதுவும் அவரிடம் இல்லை என்பதே உண்மை.
ரஜினி போன்ற ஆன்மீக நாட்டம் கொண்டோரிடம் ’இருப்பதை ஏற்றுக்கொண்டு’ தனக்குள் மூழ்கும் தீவிரம் தான் இருக்குமேயொழிய, அரசியலுக்குத் தேவையான எதையும் மாற்றும் /எதிர்க்கும் தீவிரம் இருப்பதில்லை. அவ்வாறு இருப்பது சிவாஜி ராவ் என்ற தனிமனிதருக்கு நன்மையே. அதில் தவறேதும் இல்லை. ஆனால் தொடர்ந்து சில மீடியாக்களாலும் அறிவுஜீவிகளாலும் ரஜினி முன்னிறுத்தப் படுவதால் நாம் அவரது ‘அரசியல் தலைமைப் பண்பு’ பற்றி மதிப்பீடு செய்யத்தான் வேண்டியிருக்கிறது.
அரசியலில் நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வெண்டும். வல்லவனாக இருக்க கொஞ்சம் சூது வாது தெரியவேண்டும். அது இவருக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.வாக்குவன்மையும் செயல்திறனும் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் விஷயங்கள்.
ஜக்குபாய் படத்தை திருட்டுத் தனமாய் இணையத்தில் வெளியிட்டவர்களைக் கண்டிக்க நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ‘இந்தப் படமே ஒரு ஃப்ரெஞ் பட்த்திலிருந்து சுட்ட்துதான்’ என உண்மையைப் போட்டுடைத்தார் ரஜினி.
அழகிரி மகன் திருமண விழாவில் ‘எனக்கு அழகிரியைத் தெரியாது, ஸ்டாலினைத் தான் ரொம்ப நாளாப் பழக்கம்’ என்று பேசி, அழகிரி பொதுவாழ்வுக்கு நேற்று வந்தவர் என எடுத்துக்காட்டி, திமுகவின் தலையாய பிரச்சினைக்கே தீர்ப்பு சொல்லிவிட்டு வந்தார்.
வெளியில் கொட்டும் மழையால் சென்னை மிதக்க, மாண்புமிகு முதல் அமைச்சர் இளஞன் பாடல் வெளியீட்டு விழா அரங்கில் ரஜினியுடன் அமர்ந்திருந்தார். அங்கு பேசிய ரஜினி ‘மக்கள்லாம் கடும் மழையால கஷ்டப்படுறாங்க.அதனால ரொம்ப நேரம் பேசி முதல்வரின் நேரத்தை வீணாக்கவில்லை’ என அக்கறையோடு பேசினார்.
நிறைய நேரங்களில் இவர் தெரிந்துதான் குத்துகிறாரா இல்லை சும்மா பேசுகிறாரா என்பதே யாருக்கும் புரிவதில்லை. அப்போது இவரையும் இழுத்துக்கட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கேன்னு கலைஞரே நொந்து போயிருப்பார்.
இப்படித் தொடர்ந்து அப்பாவித் தனமாகப் பேசுபவர் அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும்?
ஜெ.மாதிரி விஜயகாந்த்துடன் கூட்டணிப் பேசுவார்த்தை நட்த்தினால் ஓப்பனாக மீடியாவிடம், ‘என்னங்க இது, 50 தொகுதி கேட்காரு. அதுகூடப் பரவாயில்ல, செலவுக்கு 100 கோடி கேட்காரு. திஸ் இஸ் டூ மச்’னு சொல்லியிருப்பாரு. ஜெ. மாதிரி பல்லைக் கடிச்சுக்கிட்டு ‘இருடி, உன்னை பின்னாடி கவனிச்சுக்கிறேன்’என நினைக்கத் தெரியாது.
’ரஜினியின் ஜாதகத்தில் 2ல் சனி..அதாவது நாக்கில் சனி’ எனப் படித்திருக்கிறேன். அது உண்மைதானோன்னு நினைக்கும்படியாத்தான் நிறைய நேரங்களில் அவரது பேச்சு அமைந்துவிடுகிறது. சரி, அதை விட்டு விட்டுவோம். அரசியல் செயல் திறமை?
உண்மையில் (எனக்கே இதை எழுத ஒரு மாதிரியாத்தான் இருக்கு)...உண்மையில் விஜய்கூட அப்படி ஒன்று நடந்திருந்தால், களத்தில் இறங்கி, அங்கே ஒரு ரசிகர் மாநாடை நடத்தி பாமகவையே(!) மிரள வைத்திருப்பார். ஆனால் வெறும் காகிதப் புலியாக மட்டுமே மிஞ்சினார் ரஜினி.
அந்தச் சம்பவத்தில் இருந்துதான் நாம் ரஜினியின் அரசியல் தகுதியை எடைபோட வேண்டும்..
ஜனநாயகத்தில் தனக்காகவும் தன்னைச் சார்ந்தோர்க்காகவும் தெருவில் இறங்கிப் போராடத் துணியாதவர் யாராக இருந்தாலும், அரசியலில் நுழைவதற்கான அடிப்படைத் தகுதியை இழந்தவர் ஆகிறார்.
1996-துக்ளக் சோ - ஜெ-தற்போதைய ரஜினியின் போக்கு-பற்றி...நாளை!
நல்லது நடந்தா சரி
ReplyDelete@THOPPITHOPPI://நல்லது நடந்தா சரி// இதுக்கு என்ன பாஸ் அர்த்தம்?
ReplyDeleteநான் ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தத சொன்னேன், நீங்க வேற ஏதாவது தப்பா நினைச்சிட போறீங்க
ReplyDelete@THOPPITHOPPI:உங்களைத் தப்பால்லாம் நினைக்க மாட்டேன் பாஸ்..//நான் ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்தத சொன்னேன்// அதைப் பத்தி நானும் நாளைக்குச் சொல்வேன்!
ReplyDeleteநீங்க சொல்றதும் சரியாதானிருக்குதொடருங்க..நட்புடன்
ReplyDeleteசெங்கோவி.. நீங்க எப்ப வருவீங்க எப்படி வருவீங்கன்னு தெரியாது. ஆனா (எலெக்சன்) வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டீங்க. தூள்!
ReplyDeleteகுட்
ReplyDeleteசரியாத்தான் சொல்லி இருக்கீங்க
ReplyDeleteரஜினி எனும் மனிதரை ரசிப்பவர்களே அதிகம்.........அரசியல் தலைவரை அல்ல என்பது என் கருத்து...........
எல்லோருக்கும் நல்லவனா இருக்கவும் நடந்துக்கவும் எந்நேரமும் முடியாது. அதே நேரத்துல அரசியலுக்கு ஒரு குணம் இருக்கு அந்த நரிக்குணம் என்பது இவருக்கு வர வாய்ப்பில்லை அதுவே ரஜினி எனும் மனிதன் அரசியல் தலைவனாக வர இயலாதற்க்கான காரணம்.
@Karikal@ன் - கரிகாலன்: சரியாச் சொல்லலேன்னா, கும்மிட மாட்டீங்க...
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):வாங்க போலீஸ்கார்..
ReplyDelete@விக்கி உலகம்://அந்த நரிக்குணம் என்பது இவருக்கு வர வாய்ப்பில்லை// தெளிவாச் சொல்லிப்புட்டீங்க!
ReplyDelete@! சிவகுமார் !://ஆனா (எலெக்சன்) வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டீங்க.// சிவா, ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது..என்னை விட்டுடுங்க சாமி!
ReplyDeleteசத்தியமா தலைவர் அரசியலுக்கு வருவதை ஒரு ரசிகனாக நான் என்றுமே விரும்பவில்லை, சரியாகத்தான் எழுதி உள்ளீர்கள்
ReplyDeleteநண்பருக்கு வணக்கம்,இதை நான் ஒரு ரஜினி வெறியனாக
ReplyDeleteஉங்களிடத்தில் சொல்வில்லை,
உங்கள் பார்வை போன்றே ஒரு பொது வாதியாக சொல்ல்கின்றேன்.
ப.மா.க பிரச்சனையின் போது
அவர் அமைதியாக இருந்த காரணம் தன்னால் மீண்டும் ரசிகனுக்கு
பிரச்சனை வர கூடாது என்று தான்(இதை மறைமுகமாக நாங்கள் அவரிடமே கேட்டு இருகின்றோம் நான் நெல்லை மாவட்ட தலைமை மன்ற பொறுப்பில் உள்ளவன்).
//அரசியலில் நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வெண்டும்.வல்லவனாக இருக்க கொஞ்சம் சூது வாது தெரியவேண்டும். அது இவருக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.//
இதை அப்படியே வழி மொழிகிறேன்.
//துட்டு விஷயத்தில் இருவரும் கெட்டி என்பதும் மற்றொரு ஒற்றுமை!//
இதை நான் அப்படியே மறுகின்றேன் நண்பா,வெறும் பணம் தான் அவரது குறிக்கோள் என்றால் அவர் யாருக்கும் தெரியாமல் பல நல்ல காரியங்கள் செய்ய மாட்டார் இந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே நான் உங்கள் பதிவில் எதிர்கின்றேன்,மற்ற படி நடு நிலையோடு நீங்கள் எழுதிய இந்த பதிவுக்கு ஒரு ராயல் சல்யூட்
பொதுவாகவே அரசியல் சம்பந்தப்பட்ட பதிவுகளை விரும்பி படிப்பேன். அதிலும் உங்களின் பதிவென்றால் இன்னும் விருப்பம். கலக்கலான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
ReplyDelete@இரவு வானம்://சத்தியமா தலைவர் அரசியலுக்கு வருவதை ஒரு ரசிகனாக நான் என்றுமே விரும்பவில்லை// நானும்!
ReplyDelete@S Maharajan: //துட்டு விஷயத்தில் இருவரும் கெட்டி// என்று நான் சொன்னது எம்ஜிஆருடன் ஒப்பிட்டு!..அவரிடன் ஒப்பிடும்போது இவர் செய்வது மிகவும் குறைவே!...மேலும், எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது,அப்போதைய திமுக அரசால் கடும் அடக்குமுறை ரசிகர்கள் மேல் ஏவப்பட்டது. அதைப்பற்றி எம்ஜிஆர் கவலைப்படவில்லை..எல்லா மக்கள் இயக்கங்களுமே அடிமட்டத் தொண்டனின் கஷ்டத்தால் வளர்க்கப்பட்டவையே..அதற்கு கொஞ்சம் ‘கெட்டிப்பட்ட’ மனசு தேவை..அது இங்கு இல்லை..மற்றபடி எனது பதிவின் பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப்போனதற்கு நன்றி மக்கா!
ReplyDelete@ரஹீம் கஸாலி:உங்க ஆதரவு இருக்கும்வரை, இது தொடரும் கஸாலி!!
ReplyDeleteதலைவருக்கு எதுக்குங்க அரசியல்? அவரு ஆணியே புடுங்கவேணாம்.
ReplyDelete//ஏனென்றால் சினிமாவில் மட்டுமே எம்.ஜி.ஆராகவும் நிஜவாழ்வில் சிவாஜி கணேசனாகவும் ரஜினி இருந்ததுதான்//
ReplyDeleteஉண்மை!
நிறைய விசயங்களை ரொம்ப அலசிருக்கிங்க ./
ReplyDeleteஅவர் வராமல் இருப்பதே நல்லது
//‘இந்தப் படமே ஒரு ஃப்ரெஞ் பட்த்திலிருந்து சுட்ட்துதான்’ என உண்மையைப் போட்டுடைத்தார் ரஜினி//
ReplyDeleteஅது செம்ம காமெடி பாஸ்! அவிய்ங்க ஒரு படத்த 'சுட்டு' (சுடல தீய்ச்சுட்டாய்ங்க ) படம் எடுத்தா, அத யாரோ 'சுட்டு' நெட்ல விட, ராதிகா குடும்பம் அழுது, புலம்பி, மீட்டிங் போட்டா, தலைவரு ஆறுதல் சொல்வாருன்னு நம்மம்ம்பி கூப்டா, வந்து வச்சார் பாருங்க ஆப்பு!
அவரு யாருக்கு ஆறுதல் சொன்னார்?
இது ஏற்கனவே 'சுட்ட' படம்தான்! அதனால சுட்டவங்க பீல் பண்ணாதீங்கப்பா! :-)
@N.H.பிரசாத்: உங்களை மாதிரிதான் நிறையப் பேர் நினக்கிறாங்க..க்ருத்துக்கு நன்றி பிரசாத்.
ReplyDelete@அரசன்:ஆமாம் சார்..
ReplyDelete@ஜீ...: //அது செம்ம காமெடி பாஸ்// ஹா..ஹா..அப்போ சரத் முகத்தைப் பார்க்கணுமே!!
ReplyDeleteநாட்டுல எத்தனையோ தொழில்கள் இருக்கு. எல்லாத்துக்குமே திறமை வேணும்தான். பரோட்டா சுடுரவருக்கும் திறமை வேணும். குய்க்கா, டேஸ்டா ஐம்பது பரோட்டா பத்து நிமிஷத்துல பரோட்டா மாஸ்டர் சுடணும்னா அவருக்கு திறமை இருந்தால் தான் முடியும். ஆனா பரோட்டவைத் தின்றுவிட்டு ரொம்ப சுவையா இருக்கேன்னு சொல்லி பரோட்டா மாஸ்டரை அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் வற்ப்புருத்துவதில்லை. ஏனெனில் பரோட்டா சுடுவது வேறு, அரசியல் வேறு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், சினிமாவில் டப்பங் குத்து ஆட்டம் ஆடத் தெரிந்திருந்து படம் ஓடிவிட்டால் குத்தாட்டம் போட்ட நடிகருக்கு அரசியலுக்கு வரத் தகுதி இருப்பதாகவும், முதலமைச்சராக அவர்தான் வர வேண்டும் என்றும் நினைக்கிறோம். அடுத்த முதல்வருக்கு தகுதிப் பட்டியலில் ஆப்பு கலண்ட நடிகர்கள் பெயர்தான் இருக்கிறதே தவிர பெயரளவுக்கும் ஒரு கல்வியாளரோ, சமூக சேவகரோ மற்ற துறையினரோ இல்லை. இது என்ன லாஜிக் என்று புரியவில்லை. தமிழனுக்கு இப்படி ஒரு சிந்தனை எங்கிருந்து வந்தது என்றும் தெரியவில்லை.
ReplyDelete//எல்லா மக்கள் இயக்கங்களுமே அடிமட்டத் தொண்டனின் கஷ்டத்தால் வளர்க்கப்பட்டவையே..// எல்லா காட்சியிலுமே இதே நிலைதான். அடிமட்டத் தொண்டன், கட்சியிலிருந்து எந்த ஆதாயமும் இருக்காது, எதிர்பார்க்கவும் மாட்டான், ஆனா கட்சிக்காக உயிரையும் கொடுக்க தயாராய் இருப்பான். இவனை வைத்துதான் கட்சியே இருக்கும், ஆனால் வட்டம், மாவட்டம் என்று இருப்பவர்கள் கொள்ளையடிப்பார்கள் எல்லா சவுகரியத்தொடும் இருப்பார்கள், அடிமட்டத் தொண்டர்களைப் பற்றி மனதளவில் கூட இறக்கப் பட மாட்டார்கள். அப்படி மாட்டாய் உழைத்து சாக கட்சி அவனுக்கு என்ன கொடுத்தது, அல்லது அவன் என்ன ஈர வெங்காய கொள்கையை புரிந்து கொண்டான் என்று பலமுறை யோசித்ததுண்டு. இதுவும் புரியாத புதிர்.
ReplyDelete//துட்டு விஷயத்தில் இருவரும் கெட்டி என்பதும் மற்றொரு ஒற்றுமை!// ரஜினி படங்கள் சில ஊத்திகொண்டபோது, விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பக் கொடுத்துள்ளார், சிவாஜி அப்படி எதுவும் செய்தாரா என்று தெரியவில்லை. சிவாஜி பணத்தில் கெட்டி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எம்.ஜி.ஆர். தாராளம் என்றாலும், ஒன்றை போட்டு பத்தை திரும்ப எடுக்கும் வேலையைத் தான் அவர் செய்தார் என்பதும் உண்மை.
ReplyDeleteரஜினியிடம், நீங்கள் சொன்ன மாதிரி ரசிகர்களைத் திரட்டி போராடும் திறன் இல்லை. இன்னொரு பக்கம் ஒரு வேலை அரசியல் முயற்சி ஊத்திக் கொண்டால் என்ன செய்வது என்று பயப் படுவது போலவும் தெரிகிறது. [ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக இருந்தும் சிரஞ்சீவியால் ஜொலிக்க முடியவில்லையே?] இருந்த போதும், அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கும் போதெல்லாம், "அது ஆண்டவன் கையில் இருக்கிறது" என்று சொல்வதன் மூலம் அந்த எண்ணம் அவரை விட்டுப் போகவில்லை என்றும் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன செய்கிறார் என்று!!
ReplyDelete@Jayadev Das: முதலில் உங்கள் ஆழ்ந்த கருத்துக்களுக்கு நன்றி சார்..ரஜினி பட பிசினஸ்க்கும் சிவாஜி பட பிசினஸ்க்கும் உள்ள வித்தியாசம் பிரம்மாண்டமானது இல்லையா..ரஜினியின் ஒரு படத்து நஷ்டமே ஒரு விநியோகஸ்தரை தெருவிற்குக் கொண்டுவந்துவிடும்..சிவாஜி காலத்தில் அப்படி இல்லையே..ஒரு வருடத்தில் 2 படங்கள் ஊத்தினாலும் அடுத்து வரும் படம் காப்பாற்றி விடும்..ரஜினியின் மாவீரன் காலப் படங்களும் அப்படியே..ஆனால் இப்பொது 3 வருடத்திற்கு ஒரு படம் எனும்போது லாபமும் நஷ்டமும் அத்ற்கேற்றால்போல அமைந்து விடுகிறது.
ReplyDelete@Jayadev Das: எம்ஜிஆர் முன்னப்பின்ன தெரியாதவங்களுக்குக் கூட அள்ளிவிட்டவர். திடீரென வயலில் வேலை செய்யும் பெண்களைப் பார்த்தால் காரை நிறுத்தி, அவர்களின் சாப்பாட்டை ருசி பார்த்துவிட்டு, கை நிறையப் பணத்தை அள்ளி அப்படியே கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்..அந்த வித்தியாசமே நான் இங்கு சொல்வது!
ReplyDeleteசெமையான அலசல் போங்க...
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ: தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி சார்.
ReplyDelete