தற்செயலா ஒரு நாள் டிவில இந்தப் படத்தோட ட்ரெய்லர் பார்த்தேன். ஏதோ வித்தியாசமாத் தெரிஞ்சது. அப்புறம் டவுன்லோட் பன்ணிப் பார்த்தா, புத்திசாலித்தனமான ஆக்சன் பிலிம்! இங்கிலிபீஸ் படமாப் பார்த்துட்டு பீட்டர் விடற சில லோக்கல் நண்பர்கள்கிட்ட இந்தப் படத்தைப் பத்தி கேட்டப்போ, யாருக்கும் இப்படி ஒரு படம் வந்ததே தெரியலை..’அட அப்ரெண்டிஸ்களா, இன்னும் நீங்க ஜுராஸிக் பார்க்கத் தாண்டி வரலையா’ன்னு நினைச்சுக்கிட்டேன்..அதனால இங்க இப்போ Paycheck.
பென் அஃப்லெக் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினீயர். சாஃப்ட்வேர்னா நம்மூர்ல காப்பி-பேஸ்ட் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்களே, அவங்களை மாதிரி நினைச்சுடாதீங்க. இவர் பெரிய மண்டைக்காரர். பெரிய கம்பெனிகளுக்கு சில சீக்ரெட் ப்ராஜெக்ட் செஞ்சு கொடுத்துட்டு பல்க்கா ஒரு பே செக் வாங்குறவரு. ப்ராஜெக்ட் முடியவும் அவரோட மெமரியை அழிச்சுடுவாங்க. வேற யாருக்கும் அந்த ஐடியாவை அவர் வித்துடக்கூடாது இல்லையா..
பொதுவா 2/3 மாசம் ஒரு ப்ராஜெக்ட் பண்ணீட்டு 'மறந்துடறது' அவர் வழக்கம். ஒரு புதிய பெரிய ப்ராஜெக்ட்டுக்கு அவரைக் கூப்பிடுறாங்க. 2/3 அருசம் ஆகும்னு சொல்றாங்க. ஆனால் 90 மில்லியன் சம்பளம் தர்றோம்கிறாங்க. இவ்வளவு கிடைக்குன்னா அப்பன் ஆத்தாவைக் கூட மறக்கலாமே..அதனால தல அதுக்கு ஒத்துக்கிடுதாரு.
ஃப்ளாஷ்..அவ்வளவுதான். மூணு வருசம் முடிஞ்சது. போயிட்டு வா ராசான்னு சம்பளத்தை அவர் அக்கவுண்ட்ல போட்டு அனுப்பி வைக்கிறாங்க.
மறுநாள் பேங்குக்குப் போய் கொஞ்சம் கைச்செலவுக்கு பணம் எடுப்போம்னு பார்த்தால், அய்ய்ய்யோ..அங்க ஒன்னுமே இல்லை. என்னடான்னு கேட்டா நீங்க தான் சார் ‘பாபா’ மாதிரி கிடைச்சதெல்லாம் தானமா வாரிக்கொடுத்துட்டீங்க.ஆட்டோ ட்ரன்ஸ்ஃபெர்ல ஆப்பு இறங்கிடுச்சுன்னு சொல்றாங்க. நீங்க அனுப்புன பார்சல்தான் இருக்குன்னு சோப்பு சீப்பு கண்ணாடி ரேஞ்சுக்கு 20 அயிட்டத்தை (அது இல்லீங்க) கொடுக்கிறாங்க.
ஆ.ராசா கூட தானம் குடுக்கலையே, நான் ஏன்யா கொடுக்கணும்னு தல, தலையைப் பிச்சுக்கிட்டு வெளில வந்தா..ஒரு பக்கம் எஃப்.பி.ஐ துரத்துது. இன்னொரு பக்கம் யாருக்கு வேலை செஞ்சாரோ அவங்க துரத்துறாங்க. ஏன் துரத்துறங்க, பணம் என்னாச்சு, அப்படி என்னதான் புராஜெக்ட் பண்ணாருன்னு அதிரடி ஆக்சனோட சொல்லியிருக்காங்க.
இந்தப் படத்தோட டைரக்டர் ஜான் வூ ஹாலிவுட்ல ஃபேமஸான ஆக்சன் பட டைரக்டர். அவரை நம்பிப் போனா, (உண்மையான) அதிரடி ஆக்சன் கண்டிப்பா இருக்கும். ஷகிலா மாதிரி ஏமாத்தற வேலைல்லாம் அவர்கிட்ட கிடையாது. (ஸ்டில் எங்கப்பா..)
ஹீரோயினா ’கில் பில்’ உமா துர்மன் நடிச்சிருக்காங்க. இதிலயும் கொஞ்சம் ஆக்சன் சீன்ஸ் அவருக்கு உண்டு. ஃப்ரெண்டா வர்ற பால் கியாமட்டி (?) கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
ஜான் பாவெல் ம்யூசிக்கும், ஜெஃப்ரி கிம்பால் ஒளிப்பதிவும் படத்தோட ஆக்சன் எஃபக்டைக் கூட்டுது. அதுவும் அந்த சேஸிங் காட்சியில் கலக்கியிருப்பாங்க.
ஒரு நல்ல விறுவிறுப்பான ஆக்சன் மூவி பார்க்க ஆசைப்படறவங்க தாராளமா இதைப் பார்க்கலாம்.
//ஆ.ராசா கூட தானம் குடுக்கலையே, நான் ஏன்யா கொடுக்கணும்னு தல//
ReplyDeleteஅதானே?
ஜான்வூ படமா! நம்மளுக்கு ஹாலிவுட் அவ்வளவா சேராது...அதுவும் ஆக்க்ஷன்...இருந்தாலும் நீங்க சொல்றீங்க...சரி பார்க்கலாம்! :-)
@ஜீ...: நல்ல டைம் பாஸ் மூவி ஜீ..
ReplyDeleteIt is a good entertainer.
ReplyDeleteஉங்கள் விமர்சன ஸ்டைல் - காமெடி டச்சுடன் ரொம்ப நல்லா இருக்குது.
நன்றி..ஆனாலும் காமெடி டச்ல உங்களை மிஞ்ச ஆளில்லைக்கா!
ReplyDeletethank u for introduce me a good film..
ReplyDelete@மதுரை சரவணன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
ReplyDelete//ஹீரோயினா ’கில் பில்’ உமா துர்மன் நடிச்சிருக்காங்க//
ReplyDelete>>> >>> நம்ம மெகா சீரியல் 'உமா' ஹாலிவுட் வரைக்கும் போயிருச்சா..கள்ளி!
படத்தை பார்த்துடிவோம்
ReplyDeleteஅருமை அருமை...........
ReplyDelete@! சிவகுமார் !: சீரியல்ல ’கில்’ பண்ற உமா வேற பாஸ்..இது ஹாலிவுட் கள்ளி.
ReplyDelete@Speed Master:பார்த்துடிங்க..பார்த்துடிங்க.
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ:நன்றி ஸார்.
ReplyDeleteகடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்
ReplyDelete//சாஃப்ட்வேர்னா நம்மூர்ல காப்பி-பேஸ்ட் பண்ணியே காலத்தை ஓட்டுவாங்களே, அவங்களை மாதிரி நினைச்சுடாதீங்க.// இந்த வாசகங்களுக்காகவே ஒரு எதிர் ஓட்டு !!! எல்லோரையும் உங்களைப்போலவே நினைத்தால் எப்படி நண்பரே!!!
ReplyDelete@ரஹீம் கஸாலி: பரவாயில்லை கஸாலி..ஃப்ரீயா இருந்தா வந்திடுவீங்கன்னு தெரியாதா...
ReplyDelete@குறை ஒன்றும் இல்லை !!!: அண்ணா, ஓட்டுப் போட்டதுக்கு நன்றிங்ணா..இந்தக் காலத்துல நேரம் செலவழிச்சு, என்னையும் ஒரு பொருட்டா மதிச்சு ஓட்டுப் போடறது எவ்வளவு பெரிய விசயம்..அது ஆதரவா இருந்தா என்ன..எதிரா இருந்தா என்ன..இதை வச்சு நாம என்ன 1 லட்சம் கோடியா அடிக்க முடியும்..சொல்லுங்க..அப்புறம், அந்த காப்பி-பேஸ்ட் மேட்டர்..நீங்க சொல்றது நிஜம்தாண்ணா..அந்த நக்கல் என்னையும் சேர்த்துத் தான்..நம்மளை நம்மளே நக்கல் பண்ணாட்டி, வேற யாரு பண்ணுவா..தொடர்ந்து வரவும். முடிந்தால் தொடர்ந்து ஏதோ ஒரு ஓட்டு போடவும்...
ReplyDeleteநன்றியுடன்
செங்கோவி
நண்பரே !!! தொடர்ந்து இல்லாவிட்டாலும் நான் அடிக்கடி உங்கள் பக்கங்களுக்கு வருவேன்!!! நான் தகவல் தொடர்பு துறையில் பணிபுரிகிறேன் .. எங்கள் கஷ்டம் எங்களுக்கு !!!!! மற்றபடி காயப்படுத்த அல்ல அந்த எதிர் ஓட்டு என் ஆதங்கதினாலேயே!!!
ReplyDelete@குறை ஒன்றும் இல்லை !!!: இதெல்லாம் பெரிய விஷயமா தல, பதிவுலகில் சும்மா தானே எழுதிக் கொண்டிருக்கிறோம்.//எங்கள் கஷ்டம் எங்களுக்கு// நம்ம கஷ்டம் நமக்குன்னு சொல்லுங்க..இங்கயும் கும்மத்தான் செய்றாங்க..அதெல்லாம் வெளில சொல்லலாமா..வின்னர் படமெல்லாம் நீங்க பார்த்ததில்லையா..லூஸ்ல விடுங்க பாஸூ..உங்கள் பதில் பின்னூட்டத்திற்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்.
ReplyDelete