சில வருடங்களுக்கு முன் நான் முதன்முதலாக விமானப்பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது. ’என்ன செய்யவேண்டும்/கூடாது‘ எனத் தெரிந்து கொள்ள இணையத்தில் தேடியபோது தமிழில் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இனிமேல் தேடிவோருக்காவது பயன்படுமேயென இங்கே பதிந்து வைக்கிறேன்.
நீங்கள் இதுவரை செய்திருக்கும் பஸ், ரயில் பயணங்களை விட மிகவும் பாதுகாப்பானது விமானப் பயணம். இங்கு மிகவும் நல்ல விஷயம் என்னவென்றால், நீங்களே நினைத்தாலும் ஏர்போர்ட்டுக்குள் உங்களால் காணாமல் போக முடியாது. ஏர்போர்ட் எங்கும் வழிகாட்டும் போர்டுகள் இருக்கும். கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால், உலகின் எந்த மூலையில் உள்ள ஏர்போர்ட்டையும் உங்களால் சந்திக்கமுடியும். இப்போது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1.டாட்டா காட்டுமிடம்:
எங்கள் பகுதியில் யாராவது வெளிநாடு போகிறான் என்றால், ஒரு வேன் (தேவைப்பட்டால் லாரி!) பிடித்து, மாமன் மச்சான் எல்லாம் ஏர்போர்ட் வாசல் வரை வழியனுப்ப வருவார்கள். விடைபெறும்போது ‘மாப்ள, வரும்போது சரக்கு வாங்கிவர மறந்துடாதே’ என அக்கறையோடு சொல்லியனுப்புவார்கள். வாசலிலேயே எல்லோரும் நிறுத்தப்படுவர். (பிறருக்கு விசிட்டர் டிக்கெட் இப்போது தருவதில்லை) அங்கிருந்து உங்கள் வெற்றிப்பயணம் ஆரம்பிக்கிறது.
வாசலில் நிற்கும் போலீஸ்கார் உங்களை நிறுத்துவார். பழக்கதோஷத்தில் மாமூலை நீட்டி, அவர் வேலைக்கு உலை வைத்துவிடாதீர்கள். போகும்போதே பாவம் செய்தால் உருப்பட முடியாதல்லவா..அவர் உங்களிடம் டிக்கெட்டையும், பாஸ்போர்ட்டையும் தேவைப்பட்டால் விசாவையும் கேட்பார். அதை மட்டும் காட்டினால் போதும். இப்போ நீங்க விமான நிலையத்திற்குள் (அதாங்க...ஏர்போர்ட்டுக்குள்!) நுழைகிறீர்கள்.
2.பெட்டிப் பரிசோதனை (Luggage Screening):
ஏர்போர்ட்டில் நுழைந்ததும் நிறைய செவத்தச் செவத்தக் குட்டிகளைப் பார்ப்பீர்கள். அவங்க தான் ஏர் ஹோஸ்டஸ். அவர்களும் உங்களுடன்தான் விமானத்தில் வரப்போகிறார்கள். எனவே அங்கே பார்த்துக்கலாம்.(ஏர் இண்டியாவா நீங்க...அப்போ பாவம்தான்.) இப்போ பொழப்பைப் பார்ப்போமா..
நீங்கள் உங்கள் பெட்டியை இருவகையாகக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஒன்று மற்ற லக்கேஜ்களோடு போடப்படும் பெரிய லக்கேஜ் பெட்டிகள்(Check-In Luggaages). 20 முதல் 30 கிலோவரை அனுமதிப்பர். முதலிலேயே எவ்வளவு என விசாரித்துவிட்டு வரவும். இரண்டாவது உங்கள் கையிலேயே நீங்கள் கொண்டுபோகும் ஹேண்ட் லக்கேஜ்.(இதில் தண்ணீர், உணவுப்பொருட்கள், கத்தி,சேவிங் செட், செண்ட், பாட் ஸ்ப்ரே போன்ற எதையும் வைக்கக்கூடாது.) எனவே வீட்டிலிருந்து கிளம்பும்போதே சேவிங் செய்து, செண்ட் அடித்துக் கிளம்பவும்!
அந்த CheckIn லக்கேஜ் பெட்டியைச் சோதனையிடும் இடங்கள், 2 அல்லது 3 இருக்கும். உங்களுக்கானது எது என அங்கிருக்கும் டி.வி.பொட்டியில் சொல்வார்கள். அங்கு சென்று உங்கள் லக்கேஜைக் கொடுங்கள். அவர்கள் சோதனை செய்து விட்டு, ’ டேக்’ போட்டு உங்களிடமே தருவார்கள். அதை வாங்கிக் கொண்டு, அடுத்து நீங்கள் போகவேண்டியது போர்டிங் பாஸ் கொடுக்கும் கவுண்டருக்கு!
3.கவுண்டர்: (டிஸ்கி: இது ஜாதி அல்ல..நடிகரும் அல்ல!)
இங்கே நீங்கள் உங்களுக்கான போர்டிங் பாஸைப் பெற்றுக் கொள்ளலாம். சோதனையிடப்பட்ட Ckeck-In லக்கேஜை, இங்கே வாங்கிக்கொள்வார்கள். உங்கள் ஹேண்ட் லக்கேஜுக்கு மறக்காமல் டேக் வாங்கிக்கொள்ளுங்கள். அது இருந்தால்தான் விமானத்தில் ஏற அனுமதிப்பர். எனவே பத்திரம். போர்டிங் பாஸ் உடன் இமிக்ரேசன் ஃபார்ம் தருவார்கள். அதில் உங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டிருப்பர். நீங்கள் ’இண்டெலிஜெண்டலி’ என்றால் தயங்காமல் அருகில் இருக்கும் சக பயணியைக் கேளுங்கள். உதவுவார்கள்.
4.இமிக்ரேசன் :
நீங்கள் தாய்நாட்டைத் தவிக்க விட்டுப் போறது இவங்க கையிலதான் இருக்கு. உங்க விசா பக்காவா இருந்தா, ஒரு பிரச்சினையும் இல்லை.....இல்லே, ஆப்புதான்..விமானப் பணிப்பெண்கள் நினைப்புல இங்கே ஓவராப் பேசிடாதீங்க. நிரப்பிய இமிக்ரேசன் ஃபார்மைக் கொடுத்துவிட்டு, ரொம்ப நல்லபிள்ளையா முகத்தை வச்சுக்கிட்டு நின்னீங்கன்னா போதும் பாஸ்போர்ட்ல ஸ்டேம்ப் பண்ணிக் கொடுப்பாங்க. (நீங்கள் வெளிநாட்டில் போய் இறங்கியதும், அங்குள்ள இமிக்ரேசனிலும் இதையே செய்யுங்கள்.)
4.பாதுகாப்புச் சோதனை:
உஷ்...எத்தனை..ப்ளைட்டைக் கண்ணுல காட்டுவாங்களா மாட்டாங்களான்னு நொந்துக்கிறீங்களா..சரிதான்..முதல்ல அப்படித்தான் இருக்கும். இங்கே உங்கள் ஹேண்ட் லக்கேஜும் நீங்களும் சோதிக்கப்படுவீர்கள். கையை விரித்து நிற்கவைத்து,கிச்சு கிச்சு மூட்டுவார்கள். இரண்டு பேண்ட் பாக்கெட்டை மட்டும்(!) நசுக்கிப் பார்ப்பார்கள்..அவ்வளவுதான்.
5.காத்திருக்கும் ஹால்:
விமானம் கிளம்புவற்கு கொஞ்ச நேரம் முன்பு தான் உள்ளே அனுமதிப்பர். அதுவரை, உங்களுக்கு எந்த கேட் என்று போர்டிங் பாஸைப் பார்த்து தெரிந்துகொண்டு, அங்கே காத்திருக்கவும்.இங்கு டி.வி, அழகான பெண்கள்/ஆண்கள்(!), காபி ஷாப், போன் பூத் எல்லாம் இருக்கும். நன்றாக வேடிக்கை பாருங்கள்.
காஃபி ஜஸ்ட் 60 ரூபாய்தான். குடிக்காமலே காஃபி கசக்குதா..குடித்தால் இன்னும் கசக்கும். சர்க்கரை, பால் எதுவும் இல்லாமல் தருவார்கள். நீங்கள்தான் எடுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும். எவ்வளவு சர்க்கரை போட்டாலும் இனிக்காது என்பதுதான் விஷேசமே!
6.போர்டிங்:
இப்போது விமானத்தில் ஏற அழைப்பார்கள். நீங்கள் கைக்குழந்தையுடன் இருந்தாலோ,வயதானவராய் இருந்தாலோ முதலில் அனுமதிக்கப்படுவீர்கள். பிசினஸ் கிளாஸ் மக்களே அதற்கப்புறம்தான்! அடித்துப் பிடித்து ‘இது என் இடம்’ எனக் கத்திக் கொண்டே ஏறுவதைத் தவிர்க்கவும்.
7.விமானம்:
அவ்வளவுதான்..விமானத்தில் ஒருவழியாக ஏறிவிட்டீர்கள். பார்த்தால் பெரிய ஏர் பஸ் போலிருக்கும்.அவ்வளவுதான். ஆனாலும் ஜன்னல் வழியா வெத்தலை போட்டுத் துப்ப முடியாம, கம்பியைப் பிடிக்காம நடுவுல நிக்க முடியாம போறதெல்லாம் ஒரு பயணமா சொல்லுங்க..
அப்புறம் என்ன செய்யணும்னு ஏர் ஹோஸ்டஸ் சொல்லுவாங்க. இனிமே இங்கெ எனக்கென்ன வேலை..’கிளம்புங்க பாஸ்..காத்து வரட்டும்’னு நீங்க சொல்லும்முன் நானே விட்டுக்கிறேன் ஜூட்.
டிஸ்கி: எதுவும் விட்டுப் போயிருந்தா, அதிகமாப் ’பட்டவங்க’ சொல்லி உதவுங்க!
NANTRI
ReplyDelete>>> உபயோகமான தகவல் நண்பரே. ஆமா, போட்டோல இருக்குற அக்கா எல்லாரையும் நீங்க பாத்து இருப்பீங்களே..எதுனா பேசுனீங்களா???????????????
ReplyDelete//அப்புறம் என்ன செய்யணும்னு ஏர் ஹோஸ்டஸ் சொல்லுவாங்க//
ReplyDeleteஅப்புறம் 'பெல்ட்' மாட்டத் தெரியலேன்னா அவங்களே வந்து மாட்டி விடுவாங்க! இத சொல்ல வேணாமா பாஸ்? எவ்வளவு முக்கியமான விஷயம் இது? :-)
@guna:நன்றிக்கு நன்றி!
ReplyDelete@! சிவகுமார் !: நாம என்னங்க பேசப்போறோம்...ப்ளைட்ல ’வாட்டர் ப்ளீஸ்’ கேட்கறதோட சரி.
ReplyDelete@ஜீ...: //'பெல்ட்' மாட்டத் தெரியலேன்னா அவங்களே வந்து மாட்டி விடுவாங்க!// அடடா, எவ்வளவு முக்கியமான விஷயத்தை விட்டுடேன்..நம்மாட்கள் தெரிந்தாலும் தெரியலேன்னு சொல்வாங்களே..
ReplyDeleteதமிழ்மணத்தில்12-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லாத்தான் கொடுத்திருக்கீங்க டீட்டெயிலு.... அப்புறம் ஊத்திக் கொடுப்பாங்களே... பஸ்ல, டிரைன்ல எல்லாம் கிடைக்காதுல்ல... அதை விட்டுப்புட்டீங்க.
ReplyDeleteDuty Free போய் சரக்கு வாங்குறத சொல்ல இல்லையா
ReplyDelete???????????? ????????? ?????? ?? ???? ????? ?? ????????? ?????????? ????????? ????????????????.....
ReplyDeleteபீர் ஒயின் விஸ்கி இதெல்லாம் தர மாட்டாங்களோ...ஹி ஹி ஹி....
ReplyDeleteவாசலில் நிற்கும் போலீஸ்கார் உங்களை நிறுத்துவார். பழக்கதோஷத்தில் மாமூலை நீட்டி, அவர் வேலைக்கு உலை வைத்துவிடாதீர்கள்.//
ReplyDeletehahaசூப்பர் பஞ்ச்
ஏர்ஹோஸ்டஸ் விசயம் தான் ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு ஹிஹி
ReplyDelete@ரஹீம் கஸாலி: அப்படியா..நன்றி நண்பா..நன்றி..பின்னாடி தேடுற யார்க்காவது எழுதுன இந்தப் பதிவுகூட ஹிட் ஆகுது...என்னதான் நடக்குன்னே தெரியலை...எல்லாம் அவன் செயல்.
ReplyDelete@சே.குமார்://அப்புறம் ஊத்திக் கொடுப்பாங்களே.// பழக்கம் இல்லாததால ஞாபகம் வரலீங்க..உங்களுக்கு கரெக்டா ஞாபகம் வருதே..சரி..சரி.
ReplyDelete@FARHAN: ஏங்க, நான் புதுசாப் போறவங்க பத்திரமாப் போகணுமேன்னு எழுதுனா, நீங்க சரக்கடிச்சு கவுர்றதுக்கு வழி சொல்றீங்களா..
ReplyDelete@tshankar89: என்ன பாஸ்..என்ன ப்ராப்ளம்..? இப்படி ???? போட்டா நான் என்ன நினைக்கிறது..
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ: ஏன் சார் நல்லபுள்ளையைக் கெடுக்குறீங்க..
ReplyDelete@ஆர்.கே.சதீஷ்குமார்://ஏர்ஹோஸ்டஸ் விசயம் தான் ரொம்ப எதிர்பார்ப்பா இருக்கு ஹிஹி// ஏர் இண்டியால போங்க..எதிர்பார்ப்பெல்லாம் தீர்ந்து போயிடும்..’நல்ல நேரம்’ என்னைப் பின் தொடருது போல..இனிமேல யோகம்தான்..நன்றி பாஸ்.
ReplyDeleteஏம்பா அந்த புள்ளங்கெல்லாம் எம்புட்டு அழகா இருக்குதுங்க. பார்த்து ஆச தீரதுக்குள்ளேயே இடம் வந்துருமே.
ReplyDeleteதமிழ் மறுமொழிப் பெட்டியைப் பயன்படுத்துவதற்கு நன்றி. விரும்பினால் பெட்டியை அகலப்படுத்திக் கொள்ளுங்கள் பக்கத்திற்கு மிகவும் பொருந்தும்.
ReplyDelete@கே. ஆர்.விஜயன்: அப்போ இறங்க மாட்டேன்னு அடம்புடிங்க சார்..என்ன சார் பேரு மாறிடுச்சு...
ReplyDelete@நீச்சல்காரன்: நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..கமெண்டுக்கு இது போதாதா பாஸ்..இருந்தாலும் ட்ரை பண்றேன்.
ReplyDelete//கையை விரித்து நிற்கவைத்து,கிச்சு கிச்சு மூட்டுவார்கள்.//
ReplyDeleteபுதுசுகளுக்கு தேவையான பதிவு.
அப்புறம் அடைப்பானில் இருக்கும் கிச்சு கிச்சு மூட்டு விசயம் ஏன் இந்தியாவில் மட்டும் செய்கிறார்கள்.சதுரமா இருக்குறதுக்குள்ள பூந்தா தனி மனித செக்கிங் முடியற மாதிரி வளர்ந்த விமான நிலையங்களில் வைத்திருக்கிறார்களே!
நம் ஊரில் செக்கிங் செய்வது போதாது.பெட்டியைப் போட்டு விட்டு கைப்பையை அப்படியே வைத்துக்கொண்டேன்.ஒரு வேளை மூஞ்சியப்பார்த்து கைப்புள்ளன்னு செக்யூரிட்டில விட்டிருக்கலாம் என்னை.அனைத்துப் பொருட்களும் ஸ்கேனிங்கில் போய் வெளியே வருவது நல்லது.irrelevent of who is who.
ஓகே. நல்ல தகவல் அடுத்து train ?
ReplyDelete@ராஜ நடராஜன்: உண்மை தான் சார்..பெண்களின் கைப்பைக்கும் சிலர் சலுகை காட்டுகிறார்கள்..
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): உங்களுக்குப் பிடிச்ச ’ப்ளாக்கைப் பிரபலமாக்குவது எப்படி’ பதிவுலயே ட்ரெயின் பத்தி எழுதியாச்சே!
ReplyDeleteகவுண்டர் டிஸ்கி சத்தமாய் சிரிச்சேன்.பதிவு அருமை.
ReplyDelete@அமுதா கிருஷ்ணா:முதல் கமெண்டிற்கு நன்றி சகோதரி!
ReplyDelete//கையை விரித்து நிற்கவைத்து,கிச்சு கிச்சு மூட்டுவார்கள்//
ReplyDeleteஇலங்கையில் விமான நிலையத்துக்கு சென்று பாருங்கள். பான்ட், shoes கூட உருவிருவாங்க பாதுகாப்பு சோதனையில. பான்ட் இடுப்புல நிக்காம அவுந்துறு விழுற நிலைமைல மட்டுமே பெல்ட் போடுற பழக்கம் உங்களுக்கு இருந்தா உங்க பாடு திண்டாட்டம் தான். உருவிருவாங்க. அப்புறம் நந்தலாலா மிஷ்கின் மாதிரி பான்ட் அ கையில புடிச்சுகிட்டு தான் நிக்கணும்.
//ஏர் இண்டியாவா நீங்க...அப்போ பாவம்தான்.//
இந்தியன் ஏர்லைன்ஸ் விமான பணிப்பெண்கள பார்த்து நொந்துட்டேன். "மம்மி" சைஸ்ல பறவை முனியம்மா வயசுல கூட இருக்குறாங்க. அவங்க அதட்டுர அதட்டல்ல எங்க போக போறோம்னு கூட மறந்துடுது.
@KaattU BoochI //பான்ட் இடுப்புல நிக்காம அவுந்துறு விழுற நிலைமைல மட்டுமே பெல்ட் போடுற பழக்கம் உங்களுக்கு இருந்தா உங்க பாடு திண்டாட்டம் தான். // ஹா..ஹா..இங்க கல்ஃபுலயும் அதே கதை தான் காட்டு பூச்சி.
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி
ReplyDelete