Saturday, February 26, 2011

என்ன வேலையில் சேரலாம்? (மெக்கானிகல் என்ஜினியர்களுக்கு)_4

டிஸ்கி: இந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால்அவர்களைப் படிக்கச் சொல்லவும். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை..அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.


இன்னைக்கு டிசைன் (Design) டிபார்ட்ம்ண்ட்ல வேலைக்குச் சேரணும்னா என்னல்லாம் நீங்க படிக்கனும்னு பார்க்கலாம்.

AUTO CAD:
ஒரு மெக்கானிகல் எஞ்ஜினியரா வேலைக்குப் போறவங்களுக்கு, பேண்ட், சட்டையை விடவும் அடிப்படைத் தேவை ஆட்டோ கேட் பற்றிய அறிவு தான். இப்போல்லாம் காலேஜ்லயே ஆட்டோகேட் சொல்லித்தர்றாங்க.அப்படி இல்லைன்னா, நீங்க வெளில ஏதாவ்து கம்ப்யூட்டர் செண்டர்ல போய்க் கத்துக்கோங்க. 
முன்னாடில்லாம், பெரிய A1 சைஸ் சீட்ல, மினி ட்ராஃப்டெர் போன்ற கருவிகளின் உதவியோடதான் கம்பெனிகள்ல டிராயிங் வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.ஒரு டிராயிங் போட எப்படியும் ஒரு வாரம் ஆயிடும். இப்பவும் அந்த நிலைமை இருந்திருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்தான். ஆனால், நல்லவேளையா இந்த சாஃப்ட்வேர் வந்தது. ஒரு கோடு (Line) பொடணும்லா ல்-ன்னு தட்டுனாப் போதும். எவ்வளவு ஈஸி பாருங்க..உண்மையில் இப்போ டிசைன்ல இருக்குற சில பேர்கிட்ட ஒரு லைனை கையால நேராப் போடச்சொன்னா,அவங்க அந்தக் கோடை, காஷ்மீர்ல ஆரம்பிச்சு காசி போய் ராமேஸ்வரம் தாண்டி, கன்னியாகுமரில முடிப்பாங்க.

ஆட்டோகேட் பெரும்பாலும் 2D டிராயிங் வரையத்தான் யூஸ் பண்றாங்க. இதில் 3D வரையறதும் ரொம்பக் கஷ்டம்.


கம்பெனிகள்ல ஒரு பேப்பர்ல கையால ரஃபா வரிஞ்ச டிராயிங்கயோ, PDF ஃபார்மேட்ல இருக்கிற டிராயிங்கையோ உங்ககிட்ட எஞ்சினியர் கொடுப்பார். நீங்க அதை அப்படியே சரியான டைமன்சனோட ஆட்டோகேட்ல வரையணும். இது தான் உங்க வேலை. அதை க்ளையண்டுக்கு அனுப்புவாங்க. அவங்க ஏதாவது கரெக்சன் சொன்னா, அதையும் செய்யணும்.

இதுல சக்ஸஸ் ஆதத் தேவை நல்ல ஆட்டோகேட் நாலேட்ஜும், நல்ல ஸ்பீடா வரையற திறமையும் தான்்


PRO-E/SOLID WORKS/CATIA/IDEA/UNI GRAPHICS/Auto Desk:
ஆட்டோகேட் 2D ல சக்ஸஸ் ஆன அளவுக்கு 3 Dல ஆகலை. 2D ல உள்ள பிரச்சினை, நாம தான் அது 3 ல எப்படி இருக்கும்னு ஃப்ரண்ட், டாப், சைடு வியூவை வச்சு முடிவு செய்யணும். அதனால 3Dக்காகவே ஸ்பெஷலாத் தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர்கள் தான் மேலே சொன்னவை. இதுல உள்ள டூல்ஸை யூஸ் பண்ணி,நாம நேர்ல பார்க்குற மாதிரியே மாடலை உருவாக்கலாம். அதிலிருந்து 2D டிராயிங்-ம் எடுத்துக்க முடியும்.

CNC Machining பத்தி படிச்சிருப்பீங்க. அதுக்கு இந்த 3D மாடல் ரொம்ப உதவியா இருக்கும்.இதிலிருந்தே நேரா சிஎன்சி கோடை உருவாக்கி மெசினிங் பண்ண முடியும். அதனால நிறைய நேரமும் செலவும் மிச்சமாகும்.

ஒரு 2D டிராயிங் கொடுத்தா, அதை ஸ்டடி பண்ணி, 3D-ல வரையணும் நீங்க..என்ன தான் 3டி-ல போட்டாலும், மெசின் ஷாப்/புரடக்சன் சாப்-க்கு 2டி-ல தான் டிராயிங் கொடுக்க வேண்டியிருக்கும். 2டி-ல தான் டைமென்சன் டீடெய்ல் நல்லாக் கொடுக்க முடியும். எப்படியானாலும், ஆட்டோகேட் கத்துக்காம 3டி சாஃப்ட்வேர் படிக்கிறது நல்லதில்லை. ஆட்டோகேட் தான் எல்லாத்துக்குமே அடிப்படை.

மேலே சொன்ன சாஃப்ட்வேர் தவிர வேறு சிலவும் உண்டு. இது தான் அதிகமா யூஸ் பண்றாங்க. குறிப்பா SolidWroks & Pro-E தான் டாப்ல இருக்கு.

ANSYS:

இது ஸ்ட்ரெஸ் அனலிஸ் பண்ண உதவுற சாஃப்ட்வேர். நீங்க படிச்ச Strength of Materials, Finite Element Method போன்ற பாடங்கள் இங்க யூஸ் ஆகும். ஒரு புராடக்ட் எவ்வளாவு ஸ்ட்ரெஸ் தாங்கும், எவ்வளவு Elongate ஆகும் போன்ற விஷயங்களை, அதைத் தயாரிக்கறதுக்கு முன்னாலேயே, செக் பண்ணிக்க இது உதவுது. இதனால கம்பெனிகளுக்கு நிறைய புரடக்சன் செலவும் நேரமும் மிச்சமாகும். இது ஒரு ப்யூர் டெக்னிகல் ஒர்க்கா இருக்கும்.

PDS/PDMS/CADWorx:
மேலே உள்ள படத்தைப் பாருங்க. இது ஒரு Piping System-ன் 3டி படம். இதை SolidWorks மாதிரி சாஃப்ட்வேர்ல பண்ணா, தாவு தீர்ந்திடும். அதனால தான் PDS, PDMS, CADWorx போன்ற சாஃப்ட்வேர்ஸ் இதுக்குன்னே ஸ்பெஷலாக் கண்டுபிடிச்சிருக்காங்க. இதை சில குறிப்பிட்ட கம்ப்யூட்டர் செண்டர்ல தான் சொல்லித் தருவாங்க. இதைப் பத்தி நிறையப் பேருக்குத் தெரியறதில்லை. ஆட்டோகேட் மட்டும் தெரிஞ்சவங்க, டைரக்டா இதைக் கத்துக்கலாம். சென்னைல MechciCADD, SivaPDS center, CADDCenter ஆகிய இடங்களில் சொல்லித் தர்றாங்க. இதைப் படிச்சா, ஆயில் ரிஃபைனரி ப்ளாண்ட் டிசைன், கப்பல்/ரிக் பைப்பிங் டிசைன், பில்டிங் பைப்பிங் டிசைன் போன்றவற்றைப் பண்ணலாம். 

மெக்கானிகல்-ல டிசைன் -ல நல்ல துறை. டிசைன் -ல பைப்பிங் டிசைன் நல்ல துறை..நல்ல காசு!

CAESAR:
இதுவும் பைப்பிங்-ல யூஸ் ஆகுற சாஃப்ட்வேர் தான். ANSYS மாதிரி, Stress Analys பண்ண, இது யூஸ் ஆகுது. பைப்பிங் பத்தி, கொஞ்சம் பேசிக் தெரிஞ்சப்புறம் இது படிக்கலாம்.

மேலே சொன்ன எதைப் படிச்சுட்டு, இண்டெர்வியூ போனாலும், ஏதோ ஒரு டிராயிங்-கைக் கொடுத்து அரை மணி நேரத்திலேயோ, ஒரு மணி நேரத்திலேயோ முடிக்கச் சொல்வாங்க. அதைக் கரெக்டாப் பண்ணீட்டீங்கன்னா, வேலை உறுதி. அதனால, ஸ்பீடா வரைய கத்துக்கிட்டாப் போதும். வேலை கிடைச்சப்புறம் அதே டிராயிங்கை ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து போடுவோம்..அதனால இண்டெர்வியூவைப் பார்த்து பயந்துடாதீங்க. ஆல் தி பெஸ்ட்.

அடுத்த வாரம்...உற்பத்தி, அசெம்ப்ளி, எரக்சன் ( Production ,Assembly & Erection)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

 1. வஞ்சினியர்கள்னு நினைச்சுட்டேன்.. பை பை

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்: //வஞ்சினியர்கள்னு நினைச்சுட்டேன்..// எப்பவும் வஞ்சி ஞாபகம் தானா..போய்ட்டு நாளைக்கு வாங்க பாஸ்!

  ReplyDelete
 3. என்னை மாதிரி மக்குக்கெல்லாம் என்ன மாதிரி வேலைக்கு போலாம்னு கொஞ்சம் யோசிச்சி ஒரு பதிவு போடுங்க நண்பா!

  ReplyDelete
 4. @விக்கி உலகம்: ஜனாதிபதி, பிரதமர், அட்லீஸ்ட் ஒரு முதலமைச்சர் பதவி..ஓ.கே-வா?

  ReplyDelete
 5. AutoCAD 2010 கொஞ்சம் 3Dக்கு சப்போர்ட் பண்ணும்னு நினைக்கிறேன் (ஒப்பீட்டளவில் அதுவும் Architectural பயன்பாட்டில்) நான் முயற்சி பண்ணல! அதைவிட 3D max சுலபம் என்பதால்!முதன்முதலில் AutoCAD ல Mechanical 3D drawings செய்தபோது அட அட என்ன ஒரு அனுபவம்! :-)

  ReplyDelete
 6. @ஜீ...: க்ளையண்ட் யாரும் எனக்குத் தெரிஞ்சு ஆட்டோகேட் பரிந்துரைக்கறதில்லையே ஜீ..2010-ல நானும் பண்ணதில்லை..

  ReplyDelete
 7. நண்பரே! CNC COMPANY - இல் வேலை வாங்கி தாங்க..

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  ReplyDelete
 8. @தமிழ்வாசி - Prakash: ஏன் பாஸ் நீங்க வேற நக்கல் வுடுதீங்க..எனக்கு வேலை வாங்க முன்னயே நாக்குத் தள்ளிப் போச்சு...சீனா ஐயாகிட்ட கேள்வியா..ச்சே..ச்சே..நான் பெரியவங்க கிட்ட கேள்வியெல்லாம் கேட்கறதில்லீங்களே..நடத்துங்க..வெளில இருந்து ஆதரவு தர்றேன்.

  ReplyDelete
 9. நல்லது செய்கிறீர்கள் செங்கோவி, எனக்கும் மெக்கானிக்கல் என்ஜினியரிகளுக்கு சரியான கைடு இணையத்தில் இல்லை என்பது ஒரு வருத்தமாக இருந்தது உங்களால் வருத்தம் குறையும் என்று நினைக்கிறேன்.

  autoCAD ல் 3டி செய்யமுடியும் ஆனால் அது கதைக்கு ஆகாது. ஆட்டோ கேட் சாகும் வரை 2டி க்கு மட்டுமே. இனிமேலும் அதில் 3 டியை மேம்படுத்துத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

  மேலும் Uni graphics பற்றி எதும் நீங்கள் எழுதவில்லை அதையும் எதிர் பார்க்கிறேன்..

  ReplyDelete
 10. நான் பொறியியல் கற்காதவன் என்றாலும் தொடர்ந்து பதிவை படித்து வருகிறேன்.நல்லதொரு சேவையை வழங்கி வருவதற்கு பாராட்டுக்கள் செங்கோவி.

  ReplyDelete
 11. @மதன்செந்தில்: //மேலும் Uni graphics பற்றி எதும் நீங்கள் எழுதவில்லை// சாரி பாஸ்..அது விட்டுப் போச்சு..Pro-E, Solidworks-க்குச் சொன்ன எல்லாமே அதுக்கும் பொருந்தும்.தலைப்புல சேர்த்துடுறேன்..உங்கள் பாராட்டுக்கு நன்றி..தொடர்ந்து ரெசுயூம், இண்டெர்வியூ பற்றி எழுதவும் எண்ணம் உண்டு..

  ReplyDelete
 12. @சேக்காளி: தங்கள் ஆதரவுக்கு நன்றி சேக்காளி!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.