இன்று வேறொரு பதிவு போடலாம் என்றுதான் வந்தேன். இணையத்தைப் பார்த்தால், இரு துக்கச் செய்திகள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த பத்து வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அய்யாவின் மறைவைத் தொடர்ந்து இப்போது தாயாரும் மறைந்து விட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது மறைவால் வாடும் தமிழ்ச் சொந்தங்களுடன் என் துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே கருதுவதால். உணர்வுகளை மேலும் விவரிக்க இயலவில்லை..
மற்றொரு இழப்பு மலேசியா வாசுதேவன்...
அவர் பாடிய பாடலான ‘ஒரு கூட்டுக்கிளியாக’ நான் அடிக்கடி கேட்கும் பாடல்..’வேர்வை மழை சிந்தாமல் வெள்ளிப்பணமா’ எனும்போது ஏதோ செய்யும். உடலால் மறைந்தாலும் பாடல்களில் உயிர்வாழ்வார்.
அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்கலுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வருத்தங்களும்,
ReplyDeleteதனித்துவம் வாய்ந்த கலைஞன். ஒரு கூட்டுக்கிளியாக, முதல் மரியாதை, பதினாறு வயதினிலே,எத்தனை அற்புதமான பாடல்கள். ஆன்மா சாந்தி அடையட்டும்.
ReplyDelete@thirumathi bs sridhar: வருகைக்கு நன்றி சகோதரி.
ReplyDelete@! சிவகுமார் !:உண்மைதான் சிவா..
ReplyDeleteபிரபாகரன் தாயார் "பார்வதி அம்மாள் " மரணம் .நெஞ்சம் உறுத்தாதோ நெஞ்சுக்கு நீதி எழுதியவருக்கு???மயக்கும் குரலோன் மலேசியா வாசுதேவன் , RIP.( Rest in Peace )
ReplyDeleteஅருகில் நிற்பவன் எனும் முறையில் பார்வதியம்மாவின் இழப்பு வருந்தத்தக்கது என்றாலும் ஓரளவு மன திருப்தியாய் இருக்கிறது
ReplyDeleteவாசுதேவனுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
//என் குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாகவே கருதுவதால். உணர்வுகளை மேலும் விவரிக்க இயலவில்லை//
ReplyDeleteஇனியாவது அவர் ஆத்மா அமைதியடையட்டும்!
//‘ஒரு கூட்டுக்கிளியாக’//
ReplyDeleteஎனக்கும் மிகவும் பிடிக்கும் பாஸ்!
@Vijay @ இணையத் தமிழன்:அதல்லாம் அவங்களுக்கு உறுத்தாது விஜய்..
ReplyDelete@ம.தி.சுதா: வருகைக்கு நன்றி சுதா.
ReplyDelete@ம.தி.சுதா: வருகைக்கு நன்றி சுதா.
ReplyDelete@ஜீ...: ஆமாம் ஜீ, கடைக் காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்..இனியாவது ஆத்மா நிம்மதி அடையட்டும்.
ReplyDeleteஎனக்கும் நேற்று செய்தி கேள்விப்பட்டு ரொம்ப கஷ்டமா இருந்தது செங்கோவி...என் ஆழ்ந்த வருத்தங்கள்...
ReplyDelete@ஆனந்தி..: ஆமாம் சகோதரி..நேற்று பதிவிடவே மனசில்லை.
ReplyDeleteஇரு நல்ல உள்ளங்களின் ஆத்மா சாந்தியடைய மனமார வேண்டுகிறேன்
ReplyDeleteஇரு ஆன்மாக்களும் சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள் !
ReplyDeleteபார்வதி அம்மாள் ஒரு வீரத் தாய்.. அவரது ஆத்மா சாந்தி அடைவதாக..திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழ் திரை உலகத்தின் மறுமலர்ச்சி காலத்தில் ஏற்ற பங்கேற்பு நினைவூற தகுந்தது..
ReplyDeleteஇறந்த இரண்டு ஆத்மாக்களுக்கும் அஞ்சலிகள்..
ReplyDeleteதுக்கத்தில் பங்கு கொண்டு பின்னூட்டமிட்ட இரவு வானம், விஜயன், ஆகாய மனிதன், ரங்கராஜன், நிலவு & பாரதி ஆகிய நண்பர்களுக்கு நன்றி.
ReplyDelete