இன்று வந்துள்ள செய்தி அதிகார வர்க்கத்தின் ஆணவத்தைக் காட்டுவதாக உள்ளது. கடந்த தேர்தலில் 49ஓ-விற்கு ஓட்டுப் போட்டவர்களுக்கும் நக்ஸலைட் அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டா என்று கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணை செய்கிறார்களாம். இன்று வக்கீல் சத்தியன்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நலமனு தாக்கல் செய்து, கியூ பிராஞ்சின் விசாரணைக்குத் தடை வாங்கி உள்ளார்.
எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்த விசாரணையை நடத்துகின்றார்கள் என்றே தெரியவில்லை. 49ஓ-வுக்கு ஓட்டுப் போடுவது சட்டப்படி தவறு அல்ல, அது நம் உரிமை. நியாயத்திற்கு 49ஓ-வை வாக்களிக்கும் இயந்திரத்தில் சேர்க்க வேண்டும். அதற்கு வக்கற்ற தேர்தல் கமிசனும் புத்திசாலி அதிகாரிகளும், 49ஓ போட வந்தவர்களை தனிப்படிவம் நிரப்பச் சொல்லி, பூத் ஏஜெண்டுகளுக்குக் காட்டிக் கொடுத்ததே தவறு. அத்தோடு நிறுத்தாமல், இப்போது 49ஓ போட்ட 24,594 பேரின் விவரங்களை கியூ பிராஞ்சுக்குக் கொடுத்துள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
49ஓ என்பது தான் என்ன? ‘எனக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளது. ஆனால் தற்போதைய அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை இல்லை. அவர்களின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவைக்கவும், நல்ல மாற்று சக்திகளை அரசியலுக்கு வரவழைக்க விரும்புகிறேன்’ என்பது தானே. நக்ஸலைட்கள் அடிப்படையில் இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். அவர்களும், அவர்கலோடு தொடர்புடையவர்களும் மெனக்கெட்டு, வாக்குச்சாவடிக்கு வந்து 49ஓ போடுவார்கள் என்று நிஜமாகவே இந்த அரசு நினைக்கிறதா? கொஞ்சம் யோசிக்கும் திறமை உள்ளவனனுக்குக் கூட இதில் உள்ள அபத்தம் புரிந்திருக்குமே!
உண்மையில் இவர்கள் செய்ய விரும்புவது மிரட்டல் தான். அடுத்த முறை 49ஓ போட மக்கள் யோசிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனே இந்த விசாரணையை இவர்கள் செய்வதாகத் தெரிகிறது. 49ஓ-விற்கு ஆதரவாக இணையதளங்களும், பத்திரிக்கைகளும் செய்தி வெளியிடுவதும், 24,000 பேர் துணிந்து ஓட்டுப் போட்டிருப்பதும் இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்று நாமோ, வேறு யாருமோ வெளியில் சொல்வது சட்டப்படி தவறு. அப்படி இருக்கையில், இந்த கியூ பிராஞ் போலீஸார் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டுயது அந்தப் பட்டியலை அவர்களிடம் கொடுத்தோர் மீது தான்!
நீதிமன்றம் தேர்தல் கமிசனிடமும் க்யூ பிராஞ்ச் போலீஸிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் கமிசனும் ‘நாங்கள் கொடுக்கவில்லை, பூத் ஏஜெண்ட்டுகளோ தேர்தல் அதிகாரிகளோ கொடுத்திருக்கலாம்’ என்று பதில் சொல்லி உள்ளது. இவர்களை நம்பித் தான் நமது ஓட்டுப் பெட்டியை ஒரு மாதத்திற்கு ஒப்படைத்துள்ளோம்!
தேர்தல் கமிசன் கொடுக்கவில்லை என்றால், கியூ பிராஞ்சிற்கு அந்தப் பட்டியலைக் கொடுத்தது யார் என்று நீதிமன்றத்தில் அவர்கள் சொல்ல வேண்டும். அதைக் கொடுத்தோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏதோ தா.கிருட்டிணன் வழக்கு, சன் டி.வி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்குகளையெல்லாம் தீர விசாரித்து முடித்துவிட்டதாகவும், வேறு வேலையே இல்லாதது போன்றும் கியூ பிராஞ்ச் போலீஸ் இந்த விசாரணையில் இறங்கி இருப்பதைப் பார்த்தால் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.
வடை...ஹி..ஹி..
ReplyDeleteநல்ல தரமான வடை....ஹி...ஹி.. நம்ம பதிவு எபக்ட்டு
ReplyDeleteநல்ல பதிவு நண்பா....ஆமா,நீங்க இன்னுமா இந்த பாழாப்போன அரசியல விடல/
ReplyDeleteஅடப்பாவிகளா...........
ReplyDeleteகொடுமைய்யா!
நல்ல பதிவு நண்பா....ஆமா,நீங்க இன்னுமா இந்த பாழாப்போன அரசியல விடல/
ReplyDeleteஹி ஹி அண்ணே உங்க பதில் என்ன?
@தமிழ்வாசி - Prakash//நீங்க இன்னுமா இந்த பாழாப்போன அரசியல விடல// நான் அதை விட்டாலும், அது என்னை விட மாட்டாங்குதே..
ReplyDelete@விக்கி உலகம்நாளைக்கு நீங்க வந்தாவது இதை மாத்துங்கய்யா!
ReplyDelete@டக்கால்டி//ஹி ஹி அண்ணே உங்க பதில் என்ன?// இதுல உமக்கு என்னய்யா சந்தோசம்?
ReplyDeleteநானும் கூட அந்த செய்தியினை பார்த்து வியந்து போனேன். தேர்தல் ஆணையத்தின் மேல் உருவான நல்ல எண்ணங்கள் எல்லாம் நாசம். இவர்களின் பட்டியலை கியூ ப்ராஞ்சிடம் கொடுத்து துப்பு துலக்க சொல்வது மகா அடாவடித்தனம். யாருடைய வேலை இது ,இதற்க்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவேண்டும்.
ReplyDeleteவக்கீல் சத்தியன்சந்திரன் அவர்களுக்கு நாம வாழ்த்துகளை தெரிவிப்போம்.
உண்மையில் இவர்கள் செய்ய விரும்புவது மிரட்டல் தான். அடுத்த முறை 49ஓ போட மக்கள் யோசிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனே இந்த விசாரணையை இவர்கள் செய்வதாகத் தெரிகிறது
ReplyDeleteவக்கீல் சத்தியன்சந்திரன் அவர்களுக்கு நாம வாழ்த்துகளை தெரிவிப்போம்.
தீபாவளிக்கு பொம்மை துப்பாக்கி வாங்கவே காசு இல்ல. இதுல நக்சலைட்டுன்னு சந்தேகம் வேறயா.
ReplyDelete//அதற்கு வக்கற்ற தேர்தல் கமிசனும் புத்திசாலி அதிகாரிகளும், 49ஓ போட வந்தவர்களை தனிப்படிவம் நிரப்பச் சொல்லி, பூத் ஏஜெண்டுகளுக்குக் காட்டிக் கொடுத்ததே தவறு.//
ReplyDelete49ஓ என்பதற்கு தனியே படிவம் ஏதும் கிடையாது. ஆனால் சில வாக்குச்சாவடி அலுவலர்கள் வீணாக குழப்பியிருக்கிறார்கள்.
49ஓ என்பதற்கு மின்ணனு இயந்திரத்திலேயே தனி பட்டன் வழங்க யோசிக்கும் தேர்தல் கமிஷன், இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்கு துணை போவதாகவே தோன்றுகிறது.
ReplyDelete//தீபாவளிக்கு பொம்மை துப்பாக்கி வாங்கவே காசு இல்ல. இதுல நக்சலைட்டுன்னு சந்தேகம் வேறயா.//
ReplyDeleteஇது சூப்பரான பின்னூட்டம்..
ச்சே! தேர்தல் முடிஞ்சும் அண்ணன நிம்மதியா இருக்க விடுறானுங்க இல்ல! :-)
ReplyDeleteஇது குறித்து பதிவு போடலாமென்றிருந்தேன்.நீங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete49 O ஜனநாயகத்தில் சட்டபூர்வமாக தேர்தல் கமிசன் கொண்டு வந்த ஒன்று.இது க்யூ பிராஞ்சுக்கு எப்படி போனது?
யார் யார் 49 O போட்டதென்ற தகவல் க்யூ பிராஞ்சுக்குப் போகும் போது வாக்கெண்ணிக்கைக்கு முன்பே எந்தக் கூட்டணி வென்றது என்கின்ற தகவலும் தேர்தல் கமிசனுக்கோ அல்லது க்யூ பிராஞ்சுக்கோ அல்லது புலனாய்வுத் துறைக்கோ போவதற்கும் சாத்தியமிருக்குமல்லவா?
ஜனநாயகத்தில் கொஞ்சம் நம்பிக்கை வந்தா அதுக்கெல்லாம் நாங்க விட்டுடுவோமாக்கும் என்று பணப்பேய்களும் அரசியல்வாதிகளும் நாட்டை தவறான வழிக்கு தள்ளுகிறார்கள்.
ReplyDeleteஉலகத்திலேயே ஸ்விஸ் பேங்க் கணக்கு வைத்திருக்கும் திருடர்கள் இந்தியர்கள்தான் என்று விக்கிலீக்ஸ் அசாங்கே சொல்கிறார்.
கொஞ்சமா பணம் வைத்திருக்கும் ஜெர்மனியே கிடுக்குப் பிடி போட்டு பணம் வைத்திருப்பவர்களைப் பிடிக்கும் போது GPT குறைவாய் இருக்கும் இந்தியா ஏன் இது பற்றிக் கவலை கொள்வதில்லை என்கிறார்.
ஸ்விஸ் வங்கிப்பட்டியல் இன்னுமொரு புயலைக் கிளப்பும்.49 O மீதான வாக்கெண்ணிக்கை இன்னும் எதிர்காலத்தில் அதிகமாகும்.எனவே 49 0 போடறவங்க நக்சலைட்கள்ன்னா இன்னும் அதிக நக்சலைட்கள் இந்தியாவில் உருவாவார்கள்.
அட பாவிகளா. இது வேறயா?
ReplyDelete@கக்கு - மாணிக்கம்தேர்தல் கமிசன் தான் கொடுக்கவில்லை என்று சொல்கிறது..பார்ப்போம் கியூ பிராஞ்ச் என்ன சொல்கிறதென..
ReplyDelete@Reddiyurதங்கள் ஆதரவிற்கு நன்றி பாஸ்!
ReplyDelete@! சிவகுமார் !//தீபாவளிக்கு பொம்மை துப்பாக்கி வாங்கவே காசு இல்ல.// ஹா,,ஹா..நச்சுனு சொன்னீங்க சிவா!
ReplyDelete@பாரத்... பாரதி...//49ஓ என்பதற்கு தனியே படிவம் ஏதும் கிடையாது. ஆனால் சில வாக்குச்சாவடி அலுவலர்கள் வீணாக குழப்பியிருக்கிறார்கள். // அப்படியா..தகவலுக்கு நன்றி பாரதி!
ReplyDelete@ஜீ...//தேர்தல் முடிஞ்சும் அண்ணன நிம்மதியா இருக்க விடுறானுங்க இல்ல// தம்பி, உங்க அக்கறைக்கு நன்றி!
ReplyDelete@ராஜ நடராஜன் //எந்தக் கூட்டணி வென்றது என்கின்ற தகவலும் தேர்தல் கமிசனுக்கோ அல்லது க்யூ பிராஞ்சுக்கோ அல்லது புலனாய்வுத் துறைக்கோ போவதற்கும் சாத்தியமிருக்குமல்லவா? // நிச்சயமா இருக்கு..அப்படிச் செய்ய மாட்டாங்கன்னு நம்பிக்கைல தான் நம்ம ஜனநாயகமே நடக்குது!
ReplyDelete@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)ஆமா போலிஸ்கார், இது வேற தான்!
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே
ReplyDeleteநீட் போஸ்ட்
ReplyDeleteஓட்டு போடுவதற்கு ஜனநாயகம்
ReplyDeleteஓட்டு போடாதற்கு ஜனநாயகம்
லிஸ்டை கேட்பதற்கு ஜனநாயகம்
லிஸ்டை கொடுப்பதற்கு ஜனநாயகம்
என்னே ஸனநாயகம்.
என்னங்க இது அநியாயம்?
ReplyDeleteதேர்தல் ஆணையம் ஏதாவது செய்ய வேண்டும்.இல்லைஎன்றால் -ஓ போட மக்கள் பயப்படும் சூழல் உருவாகி விடும்
ReplyDelete@|கீதப்ப்ரியன்|Geethappriyan|நன்றி நண்பரே!
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்//நீட் போஸ்ட்// புரியுது..அதோட நிறுத்திக்கோரும்!
ReplyDelete@வலிபோக்கன்அது தான் ஜனநாயகம்!
ReplyDelete@சென்னை பித்தன்//என்னங்க இது அநியாயம்?// ஆமாம் ஐயா, நீங்க ஜஸ்ட் மிஸ்!
ReplyDelete@ரஹீம் கஸாலிநீதிமன்றம் தான் ஏதாவது செய்ய வேண்டும்!
ReplyDelete