Friday, April 22, 2011

கோ - திரை விமர்சனம்

கனாக் கண்டேன், அயன் என வித்தியாசமான கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும் கே.வி.ஆனந்த், இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்து இருப்பது பத்திரிக்கைத் துறையை. ஆனந்த்-சுபாவின் சொந்தப் பத்திரிக்கை அனுபவங்களை வைத்தே, இந்தக் கதையை உருவாக்கி உள்ளார்கள். நான் பத்திரிக்கைத் துறையுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் இந்தப் படத்தினை ரொம்பவே எதிர்பார்த்திருந்தேன். (என்ன தொடர்பா?..சின்ன வயசுல இருந்தே குமுதம், விகடன் படிக்கிறேங்க..அது போதாதா?) கதை என்னன்னா.......
மலைமுழுங்கி மகாதேவனாக ஒரு முதல்வர்(பிரகாஷ் ராஜ்), மலையோடு அந்த மலைமுழுங்கியையும் விழுங்கக் காத்திருக்கும் ஒரு எதிர்க்க்கட்சித் தலைவர்(கோட்டா சீனிவாச ராவ்), மாற்று சக்தியாக படித்த இளைஞர்களின் சிறகுகள் அமைப்பு(அஜ்மல்) என மும்முனைப் போட்டியுடன் தேர்தல் வருகிறது. நம்மைப் போன்றே இருதரப்பின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தின அஞ்சல் நிருபர்களான கார்த்திகா-பியாவும், ஃபோட்டோகிராஃபரான ஜீவாவும் சிறகுகள் அமைப்பின் சேவையால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பற்றிய செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் சிறகுகள் அமைப்புக்கு ஆதரவு பெருகிறது. 

அஜ்மலில் வளர்ச்சி ஆளும் & எதிர்க்கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது. அடுத்து நடக்கும் அஜ்மலின் பிரச்சாரக் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. பியாவும், சிறகுகள் அமைப்பின் சில உறுப்பினர்களும் அந்த வெடிவிபத்தில் உயிர் இழக்கின்றனர். ஜீவாவும் அஜ்மலும் கல்லூரி நண்பர்கள் என்பதும் திட்டமிட்டே இந்த இயக்கத்தைக் கட்டமைத்ததும் தெரிய வருகிறது. வெடிவிபத்திற்குப் பின் ஜீவாவும், அஜ்மலும் என்ன செய்தனர், வெடிவிபத்திற்குக் காரணம் யார், எதனால் அது நிகழ்ந்தது என்பதை பரபரவென ஸ்பீடான திரைக்கதையுடன் சொல்லி இருக்கின்றனர்.
ஜீவாவுக்கு இந்தப் படம் கமர்சியலாக முக்கியமான படம் தான். விளையாட்டுத் தனமான இளைஞனாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். முதல் காட்சியிலேயே பைக்கில் காட்டும் சாகசம் கலக்கல். டைரக்டர்’ஸ் ஆக்டராக ஜீவா தன்னை நிரூபிக்கிறார். காதல், ஜாலி, ஆக்சன் என எல்லாவித நடிப்பையும் அனாயசமாக வெளிப்படுத்துகிறார். கே.வி.ஆனந்த் ஜீவாவை அழகாகக் காட்டி இருக்கிறார். கார்த்திகா சின்சியர் சிகாமணியாக வருகிறார். வில் போன்ற புருவமும், காந்தக் கண்களும் மட்டுமே தேறுகிறது. நடிப்பும் வருகிறது.மற்றபடி, பொண்ணு சுமார் தான். என்ன இருந்தாலும் அவங்கம்மா மாதிரி வருமா...

படத்தில் கலக்கியிருப்பது பியா தான். செம ஜாலியான கேரக்டரைசேசன், நம்ம நானா யோசிச்சேன் பகுதி மாதிரி! கேஷூவலாக ‘நான் அயிட்டம் ஆனா, எனக்கு என்ன ரேட்?’ என்பதும், ஜீவாவுடன் காட்டும் அன்னியோன்யமும், சேலை கட்டிவிட்டு நடந்து வரும் ஸ்டைலும் அட..அட.! ஒரு ஃப்ரெண்ட்லி நேச்சர் கேரக்டர் என்பதை அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.எல்லாப் படத்திலும்/ஸ்டில்லிலும் பியாவுக்கு ஒரு டைட் டவுசரையே மாட்டி விடுவார்கள். நல்லவேளையாக இதில் வேறு நல்ல காஸ்ட்யூம்களைத் தந்திருக்கிறார்கள். ஜீவா கார்த்திகாவைக் காதலிப்பதை அறியும் ஹோட்டல் சீனில் கலக்கி விடுகிறார். படத்தில் காமெடி இல்லாத குறையைத் தீர்ப்பது பியா தான். செம ஜாலிப் பட்டாசு!
அஜ்மலும் கனமான பாத்திரத்தை ஏற்று, செவ்வனே செய்திருக்கிறார்.கோட்டா சீனிவாசராவ், பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் என சரியான பாத்திரத் தேர்வுகள். 
படத்திற்குப் பிளஸ் பாயிண்ட் திரைக்கதையும், ஒளிப்பதிவும் தான். சுபாவும் .ரிச்சர்ட்.எம்.நாதனும் படத்தைத் தூண்போல் தாங்கி உள்ளனர். பீட்ட ஹெயின் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் தூள்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசை பற்றி என்ன சொல்ல..வரவர மாமியார் கழுதைபோல ஆனாளாம்ங்கிற மாதிரி, இந்தாளு இப்படி ஆகிட்டாரே. ’என்னமோ ஏதோ’ மட்டுமே தேறுகிறது. மற்றபடி, எல்லாப் பாட்டுமே எங்கேயோ கேட்ட ஃபீலிங் தான். ஒரு இடத்தில் பிண்ணனி இசையில் டைட்டானிக் ஃபேமஸ் க்ளிப்பையே ஸ்லோவா இழுத்துப் போட்டிருக்கார். அவ்வளவு தானா..சரக்கு காலியான்னு தெரியலை! 

முதல் பாதியில் ஜாலியாகச் செல்லும் படம், இரண்டாம் பாதியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. எடுத்துக்கொண்டிருக்கும் கதைக்களனும், இடங்களும் தமிழ்சினிமாவில் இவ்வளவு இயல்பாகக் காட்டியதே இல்லை. ஒரே ஒரு பாடல் தேவையில்லாத, பொருந்தாத இடத்தில் ’பணத்துக்காக எதுவும் செய்வாங்களா?’ என அரசியல்வாதிகளைப் பற்றி கார்த்திகா பேசும்போது வருகிறது. அதை நீக்கிவிட்டாலும் நல்லதே!
டைட்டில் சீன், வெடிகுண்டு வெடிக்கும் சீன், கிளைமாக்ஸ் ஃபைட் சீன் போன்றவற்றில் கே.வி.ஆனந்தின் டச் தெரிகிறது. சிறுசிறு குறைகள் இருப்பினும், தரமான ஜாலியான, அதே நேரத்தில் விறுவிறுப்பான கமர்சியல் படம் கொடுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். மொத்த டீமிற்கும் பாராட்டுகள்.

கோ - விறுவிறுப்பான சுபா நாவல்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

56 comments:

  1. இன்னைக்கு விமர்சனம் போடுவிங்கன்னு நெனச்சேன்..... அது நடந்திருச்சு...

    ReplyDelete
  2. அடடா... கார்த்திகா எம்புட்டு அழகா இருக்காங்க....ம்ஹும்....

    ReplyDelete
  3. @தமிழ்வாசி - Prakash வடையை எடுத்துக்கோங்க பிரகாஷ்!

    ReplyDelete
  4. ///நம்ம நானா யோசிச்சேன் பகுதி மாதிரி///

    சைடு கேப்புல உங்க விளம்பரத்தை ஒட்டியிருக்கிங்க. ஹி....ஹி...ஹி...

    ReplyDelete
  5. @தமிழ்வாசி - Prakash படம் நல்லாயிருக்கு..அதுவும் போனவாரம் மாப்பிள்ளை பார்த்து நொந்த உள்ளங்களுக்குப் பெரிய ஆறுதல் இந்தப் படம்!

    ReplyDelete
  6. @தமிழ்வாசி - Prakash//சைடு கேப்புல உங்க விளம்பரத்தை ஒட்டியிருக்கிங்க. ஹி....ஹி...ஹி...// ஆரியக் கூத்தாடுனாலும் காரியத்துல கண்ணா இருக்கணும்ல!

    ReplyDelete
  7. ///’பணத்துக்காக எதுவும் செய்வாங்களா?’ என அரசியல்வாதிகளைப் பற்றி கார்த்திகா பேசும்போது வருகிறது.///

    தமிழ் படத்துல பன்ச் டயலாக் கதாநாயகி பேசுராங்களா?

    ReplyDelete
  8. ஆனந்த்-சுபாவின் சொந்தப் பத்திரிக்கை அனுபவங்களை வைத்தே, இந்தக் கதையை உருவாக்கி உள்ளார்கள். //

    அப்போ, யதார்த்தமான கதை என்று சொல்ல வாறீங்க...இல்லே..

    ReplyDelete
  9. ஆனந்த்-சுபாவின் சொந்தப் பத்திரிக்கை அனுபவங்களை வைத்தே, இந்தக் கதையை உருவாக்கி உள்ளார்கள்//

    ஐய்யோ...ஐய்யோ...

    ReplyDelete
  10. நம்ம நானா யோசிச்சேன் பகுதி மாதிரி!//

    தியேட்டரில படத்துக்கு நடுவ, இந்த விளம்பரமா போட்டாங்க...

    ReplyDelete
  11. கோ - விறுவிறுப்பான சுபா நாவல்!//

    விமர்சனத்தை, படத்தின் கதையோடு தொடர்புபடுத்தி சுவையாகவும், உங்கள் சொந்த காமெடிக் கடி வசனங்களைப் போட்டு சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

    ஹரிஸ்ஜெயராஜ்... இசை...பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது போலத் தான்.

    ReplyDelete
  12. முதன் முதலாக உங்களின் விமர்சனம் ஒன்றை இன்று தான் படித்தேன், படத்தின் மையக் கருப் பொருளையும், இசையினையும் மட்டும் அலசியிருக்கிறீர்கள். அருமையாக இருக்கிறது என்று சொல்வதிலும் பார்க்க, தொழில் நுட்பத்திறனையும், இயக்குனர், திரைக்கதை வடிவமைப்பளாரின் கதை சொல்லும் பாங்கினையும் ஆராய்ந்து எழுதியிருந்தால்...இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  13. @நிரூபன்//யதார்த்தமான கதை என்று சொல்ல வாறீங்க...இல்லே..// மசாலா தூவி இருக்காங்க சகோ!

    ReplyDelete
  14. @நிரூபன்//தியேட்டரில படத்துக்கு நடுவ, இந்த விளம்பரமா போட்டாங்க...// அது நம்ம தியேட்டர்ல போட்ட விளம்பரம்!

    ReplyDelete
  15. @நிரூபன்//ஹரிஸ்ஜெயராஜ்... இசை...பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது போலத் தான்.// போட்ட டியூனையே போட்டா கடுப்பா இருக்கு பாஸ்!

    ReplyDelete
  16. @நிரூபன்//அருமையாக இருக்கிறது என்று சொல்வதிலும் பார்க்க, தொழில் நுட்பத்திறனையும், இயக்குனர், திரைக்கதை வடிவமைப்பளாரின் கதை சொல்லும் பாங்கினையும் ஆராய்ந்து எழுதியிருந்தால்...இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.// அடுத்த முறை முயற்சிக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  17. Fast review... Good one too. :-)

    ReplyDelete
  18. யோவ் மாப்ள நல்லாத்தான்யா சொல்லி இருக்க அது சரி.........ரெண்டு பத்திரிக தொடர்ந்து படிச்சி வந்தா அவங்களோட நெருங்கிய தொடர்புள்ள இருக்கோம்னு சொல்லிக்கலாமா டவுட்டு!

    ReplyDelete
  19. இன்னைக்கு அண்ணன் காட்டுல மழை

    ReplyDelete
  20. முந்தி முந்தி விநாயகரே... ஹி ஹி

    ReplyDelete
  21. நேற்று இதே விமர்சனத்தை நான் போட்டதற்கு மட்டும் ஊரே அடிக்க வருகிறது. என்ன அராஜகம் இது..

    ReplyDelete
  22. சி.பியை முந்திட்டீங்க.. படம் பாக்கலாம்னு சொல்றீங்க.. நம்பி போறேன்..

    ReplyDelete
  23. @விக்கி உலகம்//ரெண்டு பத்திரிக தொடர்ந்து படிச்சி வந்தா அவங்களோட நெருங்கிய தொடர்புள்ள இருக்கோம்னு சொல்லிக்கலாமா // இதுக்கே இப்படியா...குஷ்பூ படத்தைத் தொடர்ந்து பார்த்தவங்கிற முறையில், எனக்கு குஷ்பூவோடயும் நெருங்கிய தொடர்பு இருக்கு, தெரியுமா?

    ReplyDelete
  24. @சி.பி.செந்தில்குமார்//இன்னைக்கு அண்ணன் காட்டுல மழை//முதல்ல நம்ம ப்ளாக்குக்கு திருஷ்டி சுத்திப் போடணும்!

    ReplyDelete
  25. @! சிவகுமார் !//நேற்று இதே விமர்சனத்தை நான் போட்டதற்கு மட்டும் ஊரே அடிக்க வருகிறது.// படம் பார்க்காம விமர்சனம் போட்டா, அடிக்காம கொஞ்சவா செய்வாங்க?

    ReplyDelete
  26. @தம்பி கூர்மதியன்//சி.பியை முந்திட்டீங்க.// தம்பி, அநியாயமாப் பேசாதீங்க..தலைவர் தலைவர் தான்!

    ReplyDelete
  27. பாரின் பதிவருங்கறத நிரூபிச்சிட்டீங்க தலைவா, இங்க எல்லாம் இன்னைக்குதான் ரிலீசாகி இருக்குது, சாயங்காலத்துல இருந்து எல்லா திரட்டியும் கோ கோன்னு இருக்கும் பாருங்க, உங்களுக்குதான் முதலிடம்

    ReplyDelete
  28. @இரவு வானம் கோ..கோ..-ன்னா திரட்டி கத்துது?

    ReplyDelete
  29. ஸாரி பாஸ்! லேட்டாகிடுச்சு!

    ReplyDelete
  30. அண்ணன் நல்லா சொல்லிட்டீங்கல்ல! பாத்துட வேண்டியதுதான்!

    ReplyDelete
  31. @ஜீ...//ஸாரி பாஸ்! லேட்டாகிடுச்சு!// பெரிய ஐ.நா சபை மீட்டிங்கு..லேட்டா வந்துட்டாராம்..ஏன் ஜீ>...விடுங்க..விடுங்க!

    ReplyDelete
  32. அண்ணன் சொல்லிட்டாரு எல்லோரும் தைரியமா கோ(go)

    ReplyDelete
  33. @ரஹீம் கஸாலி தைரியமா ’கோ’றது சரி..அதென்ன அண்ணன்?

    ReplyDelete
  34. மூணு ஓட்டும் போட்டுட்டேன் நண்பரே அருமையான விமர்சனம்

    ReplyDelete
  35. அருமையான எழுத்து நடை

    ReplyDelete
  36. அடிக்கடி விமர்சனம் போடுங்க சூப்பரா விவரிக்கிறீங்க

    ReplyDelete
  37. தங்களின் விமர்சன நடை அருமையாக உள்ளது. நன்றி நண்பரே.

    ReplyDelete
  38. @ஆர்.கே.சதீஷ்குமார்//அடிக்கடி விமர்சனம் போடுங்க சூப்பரா விவரிக்கிறீங்க// நன்றி சதீஷ்..அடிக்கடி படம் வந்தாத் தானே அடிக்கடி போட முடியும்?

    ReplyDelete
  39. @karthickeyan//தங்களின் விமர்சன நடை அருமையாக உள்ளது.// பாராட்டுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. எல்லாப் பெருமையும் சுபாவுக்கே போய்ச்சேரும்....

    ReplyDelete
  41. படம் பாக்கலாமுன்னு சொல்லிட்டீங்க, சரி உங்கள நம்பி பார்க்கறேன்... \\கார்த்திகா சின்சியர் சிகாமணியாக வருகிறார். வில் போன்ற புருவமும், காந்தக் கண்களும் மட்டுமே தேறுகிறது. நடிப்பும் வருகிறது.மற்றபடி, பொண்ணு சுமார் தான். என்ன இருந்தாலும் அவங்கம்மா மாதிரி வருமா...\\அக்காளும் தங்கச்சியும் சேர்ந்துகிட்டு பத்து வருஷம் ஜோரா "தொழில்" பண்ணி நம்மை ரவுன்டு கட்டி அடிச்சாளுங்க, அக்கா காரி வடிவேலு கூட "நடிக்கிறாளாம்" ன்னு சொல்லிக்கிறாங்க, இப்ப இவ தன்னோட மகளையும் "தொழிலுக்கு" கொண்டாந்து விட்டுட்டாளா...ம்ம்... இவ மூஞ்சி பாக்க நல்லாயில்ல பாஸ்..

    ReplyDelete
  42. @yeskha உண்மை தான்..சுபாவின் உழைப்பு, டீடெய்லான காட்சி அமைப்பிலும், திரைக்கதையிலும் தெரிகிறது..இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட்கள் அபாரம்!

    ReplyDelete
  43. @Jayadev Das//இவ மூஞ்சி பாக்க நல்லாயில்ல பாஸ்..// ஆமா சார், மூக்கு ஒரு மாதிரி தூக்கிக்கிட்டு நிக்குது..நம்ம ஹன்ஸி மாதிரி வருமா!

    ReplyDelete
  44. Innum Pakkala boss..Kandippa Pakkanum...Jeeva-K.V combination vera...

    ReplyDelete
  45. @அருள்//வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.// இந்தப் படத்துல அப்படி ஒரு சீனே வரலியே சார்...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.