டிஸ்கி : சாரி மக்கா..கொஞ்சம் பிஸி..அதனால ஒரு மீள் பதிவு..வெளில கிளம்புறேன்..யாராவது திரட்டிகள்ல இணைச்சுடுங்கப்பா.
இந்த முறை போட்டி கடுமைதான்.
மூச்சு வாங்கியதால் நீச்சலின் வேகத்தைக் குறைத்தேன். சுற்றிலும் பார்த்தேன்.
இன்னும் சிலர் தான் எனக்கு முன் இருந்தனர். எப்படியும் இந்த முறை ஜெயித்துவிடவேண்டும். இல்லையென்றால், நினைக்கவே கஷ்டமாக இருந்தது. பல கொடுமையான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்தன.
‘டேய் நாயே, ஓரமாகப் போக முடியாதா” என்றொரு குரல் கேட்டது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். ஒரு பெண் நீந்திக்கொண்டிருந்தாள்.
“என்னை ஏற்கனவே தெரியுமா உனக்கு?” என்றேன்.
இல்லையெனத் தலையசைத்தவாறே “ ஏன் கேட்கிறே?” என்றாள்.
“நீ பேசியவிதம் என் அம்மாவை ஞாபகப்படுத்தியது. அதனால்தான்” என்றேன்.
“கண்டார ஓளி..உன்னைக் கொல்லாம விடமாட்டேன்” எனக் கூறியபடியே என் அம்மாவின் வாயில் மிதித்தேன். உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.
“அய்யய்யோ..கொல்றானே” என்று அலறினாள் அம்மா. வழக்கம்போல் பக்கத்துவீட்டு மாமா ஓடி வந்தார்.
“விடுப்பா..குடிச்சாலே உனக்கு புத்தி கெட்டுப் போகுது..எந்திரிம்மா. நீயும் கொஞ்சம் வாயைக் குறைக்கணும் தாயி” என இருபக்கமும் சமாதானப் படுத்துவதில் இறங்கினார்.
இது வழக்கமான நிகழ்வு என்பதால் வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை.
“அப்புறம்?” என நீந்தியவாறே கேட்டாள் அவள். “கொஞ்ச நாளில் அம்மாவை விட்டுவிட்டு, வேறு ஊருக்குப் போய்விட்டேன்”
“அப்படியென்றால், இப்போது நீ உன் அம்மாவை நல்லபடியாக்க் காப்பாற்றவேண்டும்” என்றாள்.
“அப்படி ஒரு எண்ணமே இல்லை” என்றேன்.
“அப்படிச் சொல்லாதே. நீ ஏன் இந்தப் போட்டியில் இறங்கினாய். இது உனக்குச் சரியான இடமல்ல. இதில் நீ ஜெயித்தால் உடனே தாயில்லாப் பிள்ளை ஆவாய். தெரியாதா?” என்றாள்.
“தெரியும்..செத்து ஒழியட்டும். நிம்மதி.. பெண்கள் இல்லாத வாழ்க்கையை நோக்கியே என் பயணம் போகிறது. பெண்கள் இருந்த இடங்களில் மட்டுமே நான் தவறு செய்திருக்கிறேன். பெண்களிடம் எப்போதும் நான் கருணையுடன் நடந்துகொண்டதில்லை, இப்போதும்” என்று சொல்லியவாறே அவளின் இடுப்பில் எட்டி உதைத்தேன்.
‘வீல்’ என அலறியபடியே மூழ்கினாள்.
இந்தப் பெண்களால் எத்தனை தவறுகள்..அதனால் எவ்வளவு வலி..தூங்க விடாமல் துரத்தும் நினைவுகள்..அப்பப்பா..நகக் கணுவில் குத்தியிருக்கும் மரத் துணுக்கு போல பழைய நினைவுகள் என்னைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கின்றன, அதை மறப்பதற்கே இந்தப் போட்டியில் குதித்தேன்.
எல்லையை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். திரும்பிப்பார்த்தேன். வெகுதொலைவில்தான் சிலர் களைப்புடன் வந்துகொண்டிருந்தனர்.
முன்னால் பார்த்தேன். ஒரே ஒரு ஆள். அவன் இடுப்பையும் ஒடித்தால், வெற்றிதான். சர சர வென அந்த ஆளை நெருங்கினேன். அருகில் போனதும் அது ஒரு பெண் எனப் புரிந்தது. கோபத்துடன் நெருங்கினேன்.
எல்லைக்கோட்டின் மிக அருகில் இருந்தோம். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவுடன் இருவரும் ஒருசேர அதிர்ந்தோம்.
“கலைக்கிறதுன்னா சீக்கிரம் சொல்லுங்க..ஏற்கனவே ரெண்டு மாசம் முடியப்போகுது” டாக்டர் அக்கறையுடனும் கடுப்புடனும் சொன்னார்.
“யோசிச்சுச் சொல்றோம்” என்று சொல்லிவிட்டு அவளுடன் வெளியே வந்தேன்.
“இதுல யோசிக்க என்ன இருக்கு..எதுக்குக் கலைக்கணும்.நாம எங்காவது ஓடிப்போயிடலாம். என் வீட்டில் ஏற்கனவே ஒத்துக்க மாட்டாங்க. இப்போ கர்ப்பம்னு வேற சொன்னா..அவ்வளவு தான்.” என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் யோசித்தவாறே நின்றிருந்தேன்.
“இன்னைக்கு நைட் கொஞ்சம் துணிமணியோட வர்றேன். எங்காவது போய்ப் பிழைச்சுக்கலாம்” என்றாள்.
“சரி, ஆனால் நைட் வேண்டாம். நாளைக்குக் காலையில் வெறும் கையோட வா. அப்போதான் உன் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராது. பஸ் ஸ்டாண்டில் இருக்கிற லாலாக் கடை முன்னாடி காலையில் 9 மணிக்கு வந்து நில். நாம் மெட்ராஸ் போயிடலாம்” என்றேன்.
அவளுக்கு முகமெல்லாம் சிரிப்பு பொங்கியது. சந்தோசத்துடன் கிளம்பினாள்.
‘இனியும் இங்கு இருந்தால் சரிப்படாது’ என்பதால் அன்று இரவே நான் மட்டும் ஊரைக் காலி செய்துவிட்டுக் கிளம்பினேன்.
அதன்பின் இப்போதுதான் அவளைப் பார்க்கிறேன். ’இவள் எப்படி இங்கே? அதன்பின் என்ன நடந்தது, அந்தக் குழந்தை என்ன ஆனது? என நான் யோசிக்கும்போதே அவள் திடீரென பின்னோக்கி நீந்த ஆரம்பித்தாள்.
”நில்” எனக் கத்தினேன்.
என்னைப் பார்க்கக்கூட அவள் தயாராக இல்லை. நான் நீந்துவதை நிறுத்தினேன். ஆனாலும் நீரோட்டம் என்னை எல்லைக் கோட்டில் கொண்டு சேர்த்தது.
நான் திரும்பி அவளிடம் போக வேண்டுமென விரும்பினேன்.
ஆனால் வந்த வேகத்தில் அண்ட அணுவின் மீது மோதினேன்.
அது என்னைச் சூழ்ந்துகொண்டு என் பழைய நினைவுகளை அழிக்க ஆரம்பித்தது. “வேண்டாம்...வேண்டாம்...என் குழந்தை..என் குழந்தை.”என நான் கதறக் கதற என்னைச் சித்திரவதை செய்த நினைவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
கருப்பையில் பேரமைதி சூழ்ந்தது. விந்துவாக இருந்த நான் கரு ஆனேன்..
முதல் புத்திசாலி
ReplyDeleteமுதல் மழை....
ReplyDelete(கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)>>>>
ReplyDeleteஅப்படீன்னா எழுதுன செங்கோவியும் படிக்கக் கூடாதா?
உங்கள் தலைப்புக்கு ஏற்ற மாதிர்யே தமிழ்வாசி முந்திட்டார்...இரவு வணக்கம்
ReplyDeleteவாங்க ரசம்... சாரி RSM
ReplyDeleteயாராவது திரட்டிகள்ல இணைச்சுடுங்கப்பா.>>>>
ReplyDeleteஇனச்சுட்டேன்.... நன்பேண்டா.
விந்துவாக இருந்த நான் கரு ஆனேன்..>>>>
ReplyDeleteஅப்போ இது முந்து இல்லை...விந்துவா?...........டைட்டில்கூட டபுள்மீனிங்கா?
மீள்பதிவு போட்டாலும் மனுஷன் ஒரு மார்க்கமா தான் இருக்காப்ல...
ReplyDeleteஅடங்கொன்னியா... எக்குத்தப்பா எழுதுறதுல செங்கோவிய மிஞ்ச முடியாதுய்யா......
ReplyDeleteஅண்ணன் அப்பவே கோக்குமாக்காத்தான் எழுதி இருக்காரு.....
ReplyDeleteஅருமை
ReplyDeleteஆஹா
ReplyDeleteஓஹோ
ReplyDeleteஎன்று தங்களை புகழலாம்
ReplyDeleteஏன் தெரியுமா ?
ReplyDeleteகருவறையிலேயே நீ ஜெயித்தவன் என்று ஒவ்வொரு உயிரையும் பார்த்து சொல்லும் வார்த்தை .
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு
நண்பரே
நண்பா
ReplyDeleteநண்பா
ReplyDeleteஅய்யய்யோ நான் தனியா இருக்கேன்
ReplyDeleteஎனக்கு பயமா இருக்கு .
நான் வரேன் நண்பரே
“அப்படியென்றால், இப்போது நீ உன் அம்மாவை நல்லபடியாக்க் காப்பாற்றவேண்டும்”/////அம்மா என்றால் அன்பு இல்லையா??????
ReplyDeleteஎனக்கு இங்கே என்ன வேலை
ReplyDeleteஅவ்வ் நான் புத்திசாலி இல்லைங்கோ
கருவரைக்குள் செல்லும் உயிரணுக்கு முன் ஜென்மம் ஞாபகம் இருந்தால் ...மன்னிக்கவும் நிகழ்கால ஞாபகத்துடன் குழப்பமாக எதிர்காலத்தை நோக்கி செல்லும் போது பாவத்தையும் சேர்த்து பிறவி எடுக்கிறது....கருவரையில் ஜெயித்தாலும் பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கவே உன்னை இறைவன் ஜெயிக்கவைக்கிறார்... என்பதை உணர வைக்கவே இந்த பதிவு... அற்புதம் நண்பா... கற்பனையிலும் சிந்தித்து யோசிக்க முடியாத ஒன்று சாதாரண நடையில் கலக்கிவிட்டீர்... படிப்பவர் புத்திசாலியோ இல்லையோ...ஆனால் நீர் நிருபித்துவிட்டீர் .... உங்கள் பதிவுகளிலேயே இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை... நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteவெளில கிளம்புறேன்..யாராவது திரட்டிகள்ல இணைச்சுடுங்கப்பா.-----
ReplyDeleteசெங்கோவி...வரும்போது என்னமாவது வாங்கிட்டு வாங்க... எல்லாருக்கும்...:)
(கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)//
ReplyDeleteபுத்திசாலியா எங்கே?எங்கே?
///கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்///
ReplyDeleteசாரி பாஸ்... றாங்கான இடத்தில என்ட்றி ஆகிட்டன்
ஓட்டு போட்டுட்டு கௌம்புறன்
Thanks for sharing..
ReplyDeleteஏற்கனவே வாசித்திருந்தேன்! என்னா ஒரு கோக்குமாக்கு!
ReplyDeleteஅண்ணே இது பின்நவீனத்துவமா?
அண்ணனுக்கு ஜெயமோகன் ரேஞ்சுக்கு லிங்க் இருக்குன்னு மணி சொன்னப்பவே நினச்சேன்! ஏதாவது எசகு பெசகா பேசியிருந்தா மன்னிச்சுக்குங்கண்ணே!
அப்புறம் உங்க கேள்விக்கு (பின்னூட்டங்களில்) பதில் சொல்லி இருக்கேன் எனது தளத்தில்!
இது புத்திசாலிகளுக்கு மட்டும் எனவே....நான் படிக்க இல்லன்னு நேரிடையாவே சொல்லி இருக்கலாம் ஹூம் ஹூம்...ங்கே!
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள்
யோவ் உன் கணக்குப் படி நான் புத்திசாலி இல்லைன்னு ஆகுது.
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDelete//முதல் புத்திசாலி // பார்றா..பார்றா!
//அப்படீன்னா எழுதுன செங்கோவியும் படிக்கக் கூடாதா?// அட..அறிவுக் கொழுந்தே!
// °•ℛŚℳ●•٠·˙ said...
முதல் மழை.... // நனைக்கட்டும் நனைக்கட்டும்.
//வாங்க ரசம்... சாரி RSM // அவரை எப்படிக் கூபிடன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இது நல்லா இருக்கு!
//இனச்சுட்டேன்.... நன்பேண்டா. // நண்பேண்டா
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅப்போ இது முந்து இல்லை...விந்துவா?...........டைட்டில்கூட டபுள்மீனிங்கா? //
ஹி..ஹி..
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅடங்கொன்னியா... எக்குத்தப்பா எழுதுறதுல செங்கோவிய மிஞ்ச முடியாதுய்யா......//
அண்ணே, எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதியிருக்கேன்..இப்படிச் சொல்லிப்புட்டீங்களே!
M.R said...
ReplyDelete//அருமை
சூப்பர்
ஆஹா
ஓஹோ
என்று தங்களை புகழலாம்
ஏன் தெரியுமா ?
கருவறையிலேயே நீ ஜெயித்தவன் என்று ஒவ்வொரு உயிரையும் பார்த்து சொல்லும் வார்த்தை . //
ஏன்யா இப்படி வடையைப் பிச்சுப் பிச்சுத் தர்றீங்க? நன்றி எம்.ஆர் பாராட்டுக்கு!
// M.R said...
ReplyDeleteநண்பரே
நண்பா
நண்பா
அய்யய்யோ நான் தனியா இருக்கேன்
எனக்கு பயமா இருக்கு .
நான் வரேன் நண்பரே //
நட்ட நடு ராத்திரில தனியா திரியாதீங்கய்யா.பேய் ஏதாவது அடிச்சிடப்போகுது..
// Yoga.s.FR said...
ReplyDelete“அப்படியென்றால், இப்போது நீ உன் அம்மாவை நல்லபடியாக்க் காப்பாற்றவேண்டும்”/////அம்மா என்றால் அன்பு இல்லையா?????? //
நீங்க அம்மா கட்சியா?..மன்னிச்சிடுங்க பாஸ்!
// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ReplyDeleteஎனக்கு இங்கே என்ன வேலை
அவ்வ் நான் புத்திசாலி இல்லைங்கோ // நாங்க மட்டும் என்னவாம்..
//மாய உலகம் said...
ReplyDeleteகருவரைக்குள் செல்லும் உயிரணுக்கு முன் ஜென்மம் ஞாபகம் இருந்தால் ...மன்னிக்கவும் நிகழ்கால ஞாபகத்துடன் குழப்பமாக எதிர்காலத்தை நோக்கி செல்லும் போது பாவத்தையும் சேர்த்து பிறவி எடுக்கிறது....கருவரையில் ஜெயித்தாலும் பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கவே உன்னை இறைவன் ஜெயிக்கவைக்கிறார்... என்பதை உணர வைக்கவே இந்த பதிவு... அற்புதம் நண்பா... கற்பனையிலும் சிந்தித்து யோசிக்க முடியாத ஒன்று சாதாரண நடையில் கலக்கிவிட்டீர்... படிப்பவர் புத்திசாலியோ இல்லையோ...ஆனால் நீர் நிருபித்துவிட்டீர் .... உங்கள் பதிவுகளிலேயே இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை... நன்றியுடன் வாழ்த்துக்கள் //
கதையின் மையக்கருவை அழகாக உள்வாங்கி விட்டீர்கள் மாயா..நன்றி மாயா!
// Reverie said...
ReplyDeleteசெங்கோவி...வரும்போது என்னமாவது வாங்கிட்டு வாங்க... எல்லாருக்கும்...:) //
சிடி ஓகேவா?
// கோகுல் said...
ReplyDelete(கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)//
புத்திசாலியா எங்கே?எங்கே? // கண்ணாடில பாரும்யா.
// மதுரன் said...
ReplyDelete///கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்///
சாரி பாஸ்... றாங்கான இடத்தில என்ட்றி ஆகிட்டன்
ஓட்டு போட்டுட்டு கௌம்புறன் //
ராங்கான ப்ளேசில் எண்ட்ரியான ரைட்டான ஆளு மதுரன் வாலுக!
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteThanks for sharing..//
அட ராமா...டெம்ப்ளேட் கமெண்ட் போட வேண்டியது தான்..அதுக்காக இப்படியா..
ஜீ... said...
ReplyDelete//அண்ணே இது பின்நவீனத்துவமா? // எனக்கு தெரிஞ்ச ’பின்’நவீனத்துவம் என்னன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்ல? அப்புறம் ஏன் இப்படிக் கேட்கீங்க?
//அண்ணனுக்கு ஜெயமோகன் ரேஞ்சுக்கு லிங்க் இருக்குன்னு மணி சொன்னப்பவே நினச்சேன்! // யாரோ நம்ம பதிவு லின்க்கை அவருக்கு அனுப்பிட்டாங்கய்யா..நான் என்ன செய்வேன்..
// விக்கியுலகம் said...
ReplyDeleteஇது புத்திசாலிகளுக்கு மட்டும் எனவே....நான் படிக்க இல்லன்னு நேரிடையாவே சொல்லி இருக்கலாம் ஹூம் ஹூம்...ங்கே! //
சும்மா நடிக்காதய்யா!
// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே
வாழ்த்துக்கள் //
நன்றி நண்பரே.
// Jayadev Das said...
ReplyDeleteயோவ் உன் கணக்குப் படி நான் புத்திசாலி இல்லைன்னு ஆகுது.//
ஐயா நீங்களே இப்படிச் சொல்லலாமா?
>>>சாரி மக்கா..கொஞ்சம் பிஸி..அதனால ஒரு மீள் பதிவு..வெளில கிளம்புறேன்..யாராவது திரட்டிகள்ல இணைச்சுடுங்கப்பா.
ReplyDeletemid நைட் 12.30 மணீக்கு அப்படி என்ன பர்சனல் வேலை? ந்னு யாரும் கேட்க்காதீங்க? அண்ணன் ரொம்ப நல்லவரு ஹி ஹி
//செங்கோவி said... [Reply]
ReplyDeleteஜீ... said...
//அண்ணே இது பின்நவீனத்துவமா? // எனக்கு தெரிஞ்ச ’பின்’நவீனத்துவம் என்னன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்ல? அப்புறம் ஏன் இப்படிக் கேட்கீங்க?
//அண்ணனுக்கு ஜெயமோகன் ரேஞ்சுக்கு லிங்க் இருக்குன்னு மணி சொன்னப்பவே நினச்சேன்! // யாரோ நம்ம பதிவு லின்க்கை அவருக்கு அனுப்பிட்டாங்கய்யா..நான் என்ன செய்வேன்..//
எந்தப் பதிவுண்ணே?
@சி.பி.செந்தில்குமார் நீங்க சொல்லாட்டிக்கூட நம்புவாங்க..இப்போ சுத்தம்!
ReplyDelete//
ReplyDeleteஜீ... said...
எந்தப் பதிவுண்ணே? //
இன்றைய காந்தி விமர்சனம்..இங்கே பாருங்க: http://www.jeyamohan.in/?p=17926
செங்கோவி said... [Reply]
ReplyDelete// Yoga.s.FR said...
“அப்படியென்றால், இப்போது நீ உன் அம்மாவை நல்லபடியாக்க் காப்பாற்றவேண்டும்”/////அம்மா என்றால் அன்பு இல்லையா?????? //
நீங்க அம்மா கட்சியா?..மன்னிச்சிடுங்க பாஸ்!§§§§§யோவ்! நான் எங்கம்மாவ சொன்னேன்!கட்சின்னா "சோத்துக்"கட்சி தான்!!!!!(வெளி நாட்டுல இருந்தாலும்!)
அற்புதமான பதிவு..
ReplyDeleteஅற்புதமான பதிவு..
ReplyDeleteசுஜாத்தாவின் விந்து அங்கங்கே எட்டி பார்க்கிறது.. அருமை...
ReplyDelete@Yoga.s.FR அப்போ நம்ம ஆளு தான் நீங்க!
ReplyDelete@வெட்டிப்பேச்சு //அற்புதமான பதிவு..// நன்றி நண்பரே.
ReplyDelete@BorN 2 BooM //சுஜாத்தாவின் விந்து அங்கங்கே எட்டி பார்க்கிறது.. அருமை...//
ReplyDeleteநன்றி நண்பரே..அது சுஜா ஆத்தா அல்ல சுஜாதா-ன்னு நம்புறேன்!
kalakkal
ReplyDeleteநானும் இன்று மீள் பதிவுதான்!எப்படி ஒற்றுமை!
ReplyDeleteநான் புத்திசாலிதான்.பதிவைப் புரிந்துகொண்டேனே!
ReplyDelete//டக்கால்டி said...
ReplyDeletekalakkal//
வாங்க டகால்ட்டி..ரொம்ப நாளாச்சு..
சென்னை பித்தன் said...
ReplyDelete//நானும் இன்று மீள் பதிவுதான்!எப்படி ஒற்றுமை! //
நானும் அங்கே சொல்ல நினைத்தேன்.
//நான் புத்திசாலிதான்.பதிவைப் புரிந்துகொண்டேனே! //
என் நண்பர் ஆச்சே..புரியாமல் போகுமா!
//FOOD said...
ReplyDeleteமீள் பதிவென்றாலும், மிக அருமையா எழுதியிருக்கீங்க.//
நன்றி சார்..மீள் பதிவென்றாலும் ‘நானா யோசிச்சது’!
ok....ok....
ReplyDelete@ரஹீம் கஸாலி ரைட்டு..
ReplyDeleteவாங்க டகால்ட்டி..ரொம்ப நாளாச்சு..//
ReplyDeleteAppadi ellaam illeengov...
padichutu thaan irukken...
commenta thaan mudiyala...
//டக்கால்டி said...
ReplyDeleteவாங்க டகால்ட்டி..ரொம்ப நாளாச்சு..//
Appadi ellaam illeengov...
padichutu thaan irukken...
commenta thaan mudiyala..//
அப்படீன்னாச் சரி!
செங்கோவி said... [Reply]
ReplyDelete@Yoga.s.FR அப்போ நம்ம ஆளு தான் நீங்க!
August 5, 2011 7:29 PM ////அதுல "டவுட்"டே வேணாம்!!!
பாஸ், நானும் கொஞ்சம் பிசி என்பதால். உங்களின் மீள் பதிவிற்கு என் மீள் பின்னூட்டத்தைப் போடலாம் தானே.
ReplyDelete//வித்தியாசமான ஓர் படைப்பு, படிமங்கள்- குறியீடுகள் கொண்டு விரசமின்றி ஓர் உணர்வின் வெளிப்பாட்டினைக் கவி கலந்த உரை நடையாகத் தரலாம் என்பதற்கு இப் பதிவும் ஓர் எடுத்துக்காட்டு.
‘தந்தை தவறு செய்தான்
தாயும் இடங் கொடுத்தான்
வந்து பிறந்து விட்டோம்
வாழ வழியில்லையே....எனும் கவியரசரின் பாடல் வரிகளை உங்களின் இப் படைப்பு எனக்கு ஞாபகமூட்டுகிறது.
கூடவே ஒரு ஜனனத்தினை இலக்கிய ரசனையுடனும் வெளிப்படுத்தி நிற்கிறது.//
daittil டைட்டில் இப்படி வெச்சா நான் எப்படி வர?
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் நீங்களே இப்படிச் சொன்னா எப்படிண்ணே..
ReplyDelete@நிரூபன் எல்லாரும் இப்படியே பண்ணா, என்னாகிறது..
ReplyDelete75!!!!!!!!!
ReplyDelete@Yoga.s.FR இப்படி ஒரு பதிவு போட்டதை நானே மறந்துட்டு, அடுத்த அதற்கடுத்த பதிவுகள்ல பிசியாயிட்டேன்..ஆனாலும் நீங்க விடாம இங்க விளையாடுறீங்களே!
ReplyDeleteசெங்கோவியின் தடகள பதிவு தத்ரூபம்
ReplyDeleteமுதல் வாசிப்பில் இறுதி பாகத்திற்கு வந்த பின்புதான் எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று புரிந்தது.
ReplyDeleteஇரண்டாம் வாசிப்பு மிகச் சிறந்த சிறுகதை அனுபவத்தைக் கொடுத்தது.
பூர்வ ஜென்ம நினைவுகள், எதிர்கால கணிப்புகள் கவலைகள் அழிந்து ஒரு புதிய உயிர் ஜனிப்பதை மிக நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள். விந்தணு தான் ஜனித்தபின் அனுபவிக்கப்போகும் எதிர்கால வாழ்க்கையும் அறிந்திருக்கும் என்பது புதுமையான சிந்தனை. பூர்வ ஜென்ம நினைவுகளிலிருந்து தப்பிக்கத்தான் ஒவ்வொரு விந்தணுவும் கருவாகப் போட்டி போடுகிறது என்பது புதுமையான பார்வை. பல கோடி உயிரணுக்கள் போட்டி போட்டாலும் வெற்றி என்னவோ ஒரு அணுவுக்குத்தான். இதைத்தான் ஔவையார் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றாரோ.
விந்தணுவில் ஆண் அணு, பெண் அணு உண்டு என்பதும் வித்தியாசமான சிந்தனை. அறிவியலில் இதை X,Y குரோமோசோம்களை வைத்து விளக்குவார்கள்.
//Krishnan R said...
ReplyDeleteசெங்கோவியின் தடகள பதிவு தத்ரூபம் //
நன்றி நண்பரே!
Jagannath said...
ReplyDelete//இரண்டாம் வாசிப்பு மிகச் சிறந்த சிறுகதை அனுபவத்தைக் கொடுத்தது.//
நன்றி ஜகன்.
//பூர்வ ஜென்ம நினைவுகள், எதிர்கால கணிப்புகள் கவலைகள் அழிந்து ஒரு புதிய உயிர் ஜனிப்பதை மிக நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள். விந்தணு தான் ஜனித்தபின் அனுபவிக்கப்போகும் எதிர்கால வாழ்க்கையும் அறிந்திருக்கும் என்பது புதுமையான சிந்தனை. பூர்வ ஜென்ம நினைவுகளிலிருந்து தப்பிக்கத்தான் ஒவ்வொரு விந்தணுவும் கருவாகப் போட்டி போடுகிறது என்பது புதுமையான பார்வை.//
கதையின் ‘கரு’வை அழகாக உள்வாங்கியுள்ளீர்கள்.
//விந்தணுவில் ஆண் அணு, பெண் அணு உண்டு என்பதும் வித்தியாசமான சிந்தனை. அறிவியலில் இதை X,Y குரோமோசோம்களை வைத்து விளக்குவார்கள். // ஆம் ஜகன், அதை அடிப்படையாக வைத்துத் தான் எழுதினேன்..சில சொந்த ரணங்களும் காரணம்!