சுதந்திர இந்தியா தனது 65வது பிறந்த நாளைக் கொண்டாடும் நேரம் இது.
இந்த சுதந்திரத்தை அடைய எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்கள் வீடு, தொழில்களை இழந்தனர், பலர் தங்கள் உயிரையும் நாட்டுக்காக அர்ப்பணித்தனர். அந்த புண்ணிய ஆத்மாக்களை நாம் நினைவுகூற வேண்டிய நேரம் இது. அவர்களின் தியாகத்திற்கான அடிப்படை இந்தியா பற்றி அவர்கள் கண்ட கனவே.
அந்தக் கனவை நாம் நிறைவேற்றி விட்டோமா என்று பார்த்தால், உண்மையில் இல்லையென்றே சொல்ல வேண்டும். தனித்தன்மை வாய்ந்த யாரிடமும் அடிபணியாத உறுதியான இந்தியாவே அவர்களின் கனவு. அந்தக் கனவை நாம் இன்னும் எட்டிப் பிடிக்காவிடினும், பல சறுக்கல்களை இந்தியா சந்தித்துக்கொண்டிருந்த போதிலும் நாம் முன்னேற்றப் பாதையில் உள்ளோம் என்பதை மறுக்கலாகாது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் காலத்தில் பஞ்சம் தாங்காமல் உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையிலேயே நாம் இருந்தோம். அதிலிருந்து இப்போது நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியை உற்றுநோக்க, சீரான பாதையில் நாம் நடைபெற்றுக் கொண்டிருப்பது விளங்கும். உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க நம்மையும் சீனாவையும் அடுத்த பொருளாதார சக்திகளாக வளர்ந்த நாடுகளே சுட்டும் இடத்தில் தான் இப்போது நாம் உள்ளோம்.
இந்தியாவின் தனித்தன்மைகள் என்றால் காந்தியமும் ஜனநாயகமுமே. அன்பை மட்டுமே ஆயுதமாக ஏந்தி, எதிரிகளை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்கள் நாம். இப்போது நம் சக நாடுகளின் மேல், நம் சொந்தங்களின் மேல் கொடூரமான வன்முறையை ஏவி அவர்களின் ரத்தம் குடித்த பாவிகளுள் ஒருவராக நிற்கின்றது இந்தியா.
ஆட்சியாளர்களின் தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக்கொள்ள, ஒட்டுமொத்த இந்திய அதிகாரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதன் பலனாய் பல்லாயிரக் கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க நம் ஜனநாயகத்தில் வழியிருந்தது. அத்துனை எம்.பிக்களின் ராஜினாமாவும், ஒட்டுமொத்த சட்டமன்றக் கலைப்பும் இந்திய ஆட்சியாளர்களை அடிபணிய வைத்திருக்கும். குடும்பப் பாசத்தாலும், அதிகாரப் போட்டியாலும் நாம் அந்த வாய்ப்பை மறுதலித்தோம். அதன்பலனாய் தீராப் பழியை சுமந்துகொண்டு நிற்கின்றோம்.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களாக பட்டாசு வெடிப்பையும் இனிப்புப் பரிமாறலையும் நாம் செய்துகொண்டிருந்தாலும், நெஞ்சில் குத்திய முள்ளாய் அந்த அவலம் வலியைத் தந்துகொண்டே உள்ளது. கொடூரமான இனப்படுகொலையில் மாண்ட உயிர்களின் சாபமும், உறவினர்களின் வேதனையும் இந்த நாட்டின் மீது விழத்தானே செய்யும்? நாடு என்பது என்ன? வெறும் ஆட்சியாளர்கள் மட்டுமா? உண்மையில் மக்கள் தானே நாடு. நாம் தானே இந்தியா.
அந்த வகையில் இந்த சுதந்திர நாளில் அந்த ஆத்மாக்களிடமும், அவர்களின் உறவுகளிடமும் மானசீக மன்னிப்புக் கேட்போம். எங்களை, எங்கள் பிள்ளைகளை எங்கள் வம்சத்தை சபித்து விடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வோம். வாயிருந்தும் ஊமைகளாய், சுதந்திரம் இருந்தும் பயன்படுத்தாத அடிமைகளாய் ஆனதற்காக அந்த எளிய ஆத்மாக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம்.
ஈழப் படுகொலை மறந்து, சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதை மனசாட்சியற்ற செயலாகவே நாம் உணர்கிறோம். தன் தாய்நாட்டின் சுதந்திர தினத்தைக்கூட துக்கத்துடன் நம்மைக் கொண்டாட வைத்த நமது பேய் மனம் கொண்ட ஆட்சியாளர்களைச் சபிப்போம். புற்று நோய் பரவட்டும்!
நம் தாய் நாட்டை சுதந்திர பூமியாக்கப் போராடிய இரு பெரும் தரப்புகளான காந்தியடிகளையும் சுபாஷ் சந்திரபோஸையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
எத்தனையோ பிரிவினைவாதங்கள் தொடர்ந்து ஓதப்பட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடிப்படைப் பண்பை இழக்காமல் வீறு நடை போடுவோம்.
ஜெய் ஹிந்த்!
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
I first!!!!!!!!!!!
ReplyDeleteபடிச்சிட்டு வரேன்,பதிவ!
ReplyDeleteவருக யோகா!
ReplyDeleteசுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ReplyDelete//M.R said... [Reply]
ReplyDeleteசுதந்திர தின நல்வாழ்த்துக்கள்//
நன்றி எம்.ஆர்!
வலி சுமந்த மக்களுக்குத் தெரியும்,யாரை சபிக்க வேண்டுமென்று!இப்போதே கண்கூடாகப் பார்க்கிறீர்கள் தானே?தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மையே!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteவலி சுமந்த மக்களுக்குத் தெரியும்,யாரை சபிக்க வேண்டுமென்று!இப்போதே கண்கூடாகப் பார்க்கிறீர்கள் தானே?தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மையே!//
நன்றி யோகா..இதை உங்களிடம் இருந்து கேட்டதில் ஏதோவொரு திருப்தி!
அன்புடன் அனைத்துப் பதிவர்களுக்கும்,பின்னூட்டமிட்டு ஆதரவு கொடுக்கும் உறவுகளுக்கும் முகம் தெரியா ஈழ சகோதரர்களுக்கு தார்மீக ஆதரவு தரும் தொப்புழ் கொடி சொந்தக்களுக்கும் சுதந்திர தின நல வாழ்த்துக்கள்!
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஅன்புடன் அனைத்துப் பதிவர்களுக்கும்,பின்னூட்டமிட்டு ஆதரவு கொடுக்கும் உறவுகளுக்கும் முகம் தெரியா ஈழ சகோதரர்களுக்கு தார்மீக ஆதரவு தரும் தொப்புழ் கொடி சொந்தக்களுக்கும் சுதந்திர தின நல வாழ்த்துக்கள்!//
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பாஸ்!
எங்கள் எதிரி இந்திய அரசேயன்றி இந்திய மக்களல்ல!அதிலும் குறிப்பாக,தமிழ் நாட்டு சொந்தங்கள் அல்ல!அவலை நினைத்து உரலை இடிப்பவர்களே எங்கள் வாழ் நாள் எதிரிகள்!என்றோ ஒரு நாள் விடியும்!நம்பிக்கை தான் வாழ்க்கை!
ReplyDeleteஈழப் படுகொலை மறந்து, சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதை மனசாட்சியற்ற செயலாகவே நாம் உணர்கிறோம். தன் தாய்நாட்டின் சுதந்திர தினத்தைக்கூட துக்கத்துடன் நம்மைக் கொண்டாட வைத்த நமது பேய் மனம் கொண்ட ஆட்சியாளர்களைச் சபிப்போம். புற்று நோய் பரவட்டும்!/////விதி வலியதில்லையா,செங்கோவி?இப்படி எத்தனையோ சிறுபான்மை இனங்கள் வலி சுமந்தே,சுதந்திரம் பெற்றன!உங்கள் வேதனை புரிகிறது,என்ன செய்ய?????????
ReplyDeleteஎல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteநம்ம பதிவில்
ReplyDeleteஉங்களையும் இழுத்து விட்டு உள்ளேன்
சாரி அண்ட் தேங்க்ஸ்
//Yoga.s.FR said...
ReplyDeleteஈழப் படுகொலை மறந்து, சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதை மனசாட்சியற்ற செயலாகவே நாம் உணர்கிறோம். தன் தாய்நாட்டின் சுதந்திர தினத்தைக்கூட துக்கத்துடன் நம்மைக் கொண்டாட வைத்த நமது பேய் மனம் கொண்ட ஆட்சியாளர்களைச் சபிப்போம். புற்று நோய் பரவட்டும்!/////விதி வலியதில்லையா,செங்கோவி?இப்படி எத்தனையோ சிறுபான்மை இனங்கள் வலி சுமந்தே,சுதந்திரம் பெற்றன!உங்கள் வேதனை புரிகிறது,என்ன செய்ய????//
கண்டிப்பாக தெய்வம் நின்று கொல்லும் என்று நம்புகிறவன் நான்..நிச்சயம் அது நடக்கும்.
// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ReplyDeleteஎல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்//
யோவ், ஒரு பக்கம் வாழ்த்து சொல்லிட்டு இன்னொரு பக்கம் கோர்த்து விட்டுட்டீங்களே..இது நியாயமா?
நடக்கட்டும்..நடக்கட்டும்!
உங்கள் பதிவினை முழுதுமாக வழிமொழிகிறேன் செங்கோவி....!
ReplyDelete//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
உங்கள் பதிவினை முழுதுமாக வழிமொழிகிறேன் செங்கோவி....!//
அண்ணனே சொல்லிட்டாருன்னா..ஓகே தான்!
செங்கோவி said...
ReplyDelete// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்//
யோவ், ஒரு பக்கம் வாழ்த்து சொல்லிட்டு இன்னொரு பக்கம் கோர்த்து விட்டுட்டீங்களே..இது நியாயமா?§§§§§அப்படியொன்றும் தவறாக அவர் எழுதவில்லையே?(நானும் பார்த்தேன்,கமெண்டும் போட்டேன்.)
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...
// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
எல்லோருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்//
யோவ், ஒரு பக்கம் வாழ்த்து சொல்லிட்டு இன்னொரு பக்கம் கோர்த்து விட்டுட்டீங்களே..இது நியாயமா?§§§§§அப்படியொன்றும் தவறாக அவர் எழுதவில்லையே?(நானும் பார்த்தேன்,கமெண்டும் போட்டேன்.)//
சும்மா, தம்பிகூட விளையாண்டேன் பாஸ்..
செங்கோவி said...சும்மா, தம்பிகூட விளையாண்டேன் பாஸ்..///////அப்புடீன்னா சரி!
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteசுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteகாந்திய வழியில் சுதந்திரம் வாங்கியதால், பசுமாடு போல் ஆகிவிட்டோமோ? சுபாஷ் அவர்களின் வழியில் போராடி (அடிதடி) சுதந்திரம் வாங்கியிருந்தால், அடுத்து வந்த, இந்திய, ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது பயம் இருந்திருக்கும்...
ReplyDeleteமாப்பிள சுதந்திரம் என்றால் என்னவெண்டே தெரியாத எங்களுக்கு மத்தியில சுதந்திரத்தை அனுபவிக்கும்...!!!??? உங்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்... கோவிக்காத மாப்பிள காந்திதாத்தா பெற்றுத்தராமல் சுபாஸ் சந்திர போஸ் சுதந்திரம் பெற்றுத்தந்திருந்தால்!!!???? இந்தியா வல்லரசாகி 30 ஆண்டுகள் ஓடியிருக்கும்.... எவ்வளவு தமிழர்கள் இருந்தார்கள் அவர் படையில்....!!!!!
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்...
என் இந்திய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ReplyDeleteMika arumaiyaana Sudhandhira Dhina Vaazhthuch Cheythi!
ReplyDeleteNam Arasu seytha paavangalaip pokka
Naam parikaaram seyvom!
Anbutan,
KPR
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பரே!!
ReplyDeleteஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், நீங்கள் சொல்வது முழுவதும் உண்மை, தனிப்பட்ட ஒரு குடும்பம் அதன் பழியை தீர்த்துகொள்ள ஒரு இனத்தையே அழித்துவிட்டது, நாமும் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தோமே தவிர பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை என மனம் குத்திகொண்டே இருக்கிறது..
ReplyDeleteHappy Independece day boss.
ReplyDeleteHappy Independence day for Indian friends. இந்திய நண்பர்கள் அனைவருக்கும் சுகந்திரதின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஜெய் ஹிந்த் .
ReplyDelete//அந்த வகையில் இந்த சுதந்திர நாளில் அந்த ஆத்மாக்களிடமும், அவர்களின் உறவுகளிடமும் மானசீக மன்னிப்புக் கேட்போம். எங்களை, எங்கள் பிள்ளைகளை எங்கள் வம்சத்தை சபித்து விடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வோம். வாயிருந்தும் ஊமைகளாய், சுதந்திரம் இருந்தும் பயன்படுத்தாத அடிமைகளாய் ஆனதற்காக அந்த எளிய ஆத்மாக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வோம்.//
ReplyDeleteஈழத்தில் குருதிக்கறை படிந்த மண்ணில் பிறந்த ஒரு ஈழத்தமிழனாக அடிமனத்தில் இருந்து சொல்கின்றேன்.நண்பா உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு ஒரு சலூட்.அனைத்து இந்திய மக்களுக்கும் இனிய சுகந்திரதின நல்வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅண்ணன் செண்ட்டிமெண்ட்டை போட்டு கசக்கி பிழியறாரே?
ReplyDeleteதங்களின் இந்த பதிவை குறிப்பிட்டு நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள்..
ReplyDeletehttp://vigneshms.blogspot.com/2011/08/blog-post_15.html
பாலுக்காக அழும் குழந்தை ,
ReplyDeleteகல்விக்காக ஏங்கும் சிறுவன் .
வேலைக்காக அலையும் இளைஞ்சன் ,
வறுமையில் வாடும் தாய் ,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுந்தந்திர இந்தியா.
-மாவீரன் பகத் சிங்க்
//
ReplyDeleteகோவை நேரம் said...
சுதந்திர தின வாழ்த்துக்கள்//
நன்றி பாஸ்.
//மாய உலகம் said...
ReplyDeleteசுதந்திர தின நல்வாழ்த்துக்கள்//
நன்றி மாயா.
// Sundar said...
ReplyDeleteகாந்திய வழியில் சுதந்திரம் வாங்கியதால், பசுமாடு போல் ஆகிவிட்டோமோ? //
அஹிம்சா வழியில் வாங்கியே இவ்வளவு கொடுமையான போரை நம் சொந்தங்கள்மீது தொடுத்தோம் எனும்போது, தீவிரவாத வழியில் வாங்கியிருந்தால்...
//காட்டான் said...
ReplyDeleteமாப்பிள சுதந்திரம் என்றால் என்னவெண்டே தெரியாத எங்களுக்கு மத்தியில சுதந்திரத்தை அனுபவிக்கும்...!!!??? உங்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றி காட்டான்..காலம் ஒருநாள் மாறும்.
//KANA VARO said...
ReplyDeleteஎன் இந்திய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!//
நன்றி நண்பா!
//
ReplyDeleteKPR said...
Mika arumaiyaana Sudhandhira Dhina Vaazhthuch Cheythi!//
நன்றி பாஸ்.
//
ReplyDeleteKPR said...
Mika arumaiyaana Sudhandhira Dhina Vaazhthuch Cheythi!//
நன்றி பாஸ்.
//மைந்தன் சிவா said...
ReplyDeleteசுதந்திர தின நல் வாழ்த்துக்கள் நண்பரே!!//
வாழ்த்துக்கு நன்றி சிவா!
//நிரூபன் said...
ReplyDeleteHappy Independece day boss.//
நன்றி மாப்ள!
//Kss.Rajh said...
ReplyDeleteHappy Independence day for Indian friends. இந்திய நண்பர்கள் அனைவருக்கும் சுகந்திரதின நல்வாழ்த்துக்கள் //
நன்றி சகோ.
எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் வாசியைக் காணோம்.டெல்லிக்குப் போயிட்டாரோ?
ReplyDelete50!!!!!!மன்னிக்கணும், கவனிக்கல!வயசு போயிடுச்சா?கண்ணு தெரியல!
ReplyDelete// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஜெய் ஹிந்த் .//
ஜெய் ஹிந்த்!
//Kss.Rajh said...
ReplyDeleteஈழத்தில் குருதிக்கறை படிந்த மண்ணில் பிறந்த ஒரு ஈழத்தமிழனாக அடிமனத்தில் இருந்து சொல்கின்றேன்.நண்பா உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு ஒரு சலூட்.அனைத்து இந்திய மக்களுக்கும் இனிய சுகந்திரதின நல்வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி நண்பா!
// ஆகுலன் said...
ReplyDeleteஇனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்....//
நன்றி ஆகுலன்!
// 'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! //
வாழ்த்துக்கு நன்றி குமார்.
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅண்ணன் செண்ட்டிமெண்ட்டை போட்டு கசக்கி பிழியறாரே? //
இன்னைக்காவது நல்ல புள்ளையா இருக்க விடும்யா!
// Heart Rider said...
ReplyDeleteதங்களின் இந்த பதிவை குறிப்பிட்டு நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள்..
http://vigneshms.blogspot.com/2011/08/blog-post_15.html //
நன்றி நண்பா..எது கிடைத்தாலும் இந்தியாவைத் தாக்க ஒரு வாய்ப்பாக எண்ணும் ஒரு தரப்பு இங்கு இருந்துகொண்டே உள்ளது..நாம் நம் தரப்பை சொல்லிக்கொண்டே இருப்போம்!
//
ReplyDeleteThennavan said...
பாலுக்காக அழும் குழந்தை ,
கல்விக்காக ஏங்கும் சிறுவன் .
வேலைக்காக அலையும் இளைஞ்சன் ,
வறுமையில் வாடும் தாய் ,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுந்தந்திர இந்தியா.
-மாவீரன் பகத் சிங்க் //
இது எல்லா தேசங்களிலும் உள்ள பிரச்சினையே..அங்கு உள்ள லட்சியவாதிகளே அதனை மாற்றி அமைக்கப் போராடுகிறார்கள்..அந்த வகையில் பகத் சிங் கண்டது ஒரு லட்சியக் கனவு. அதை நனவாக்குவது நம் கடமை.கை கோர்ப்போம் கனவை நனவாக்க
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஎல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் //
நன்றி தமிழ்வாசி!
Yoga.s.FR said...
ReplyDelete//தமிழ் வாசியைக் காணோம்.டெல்லிக்குப் போயிட்டாரோ? //
இருக்கும்..இருக்கும்.
// 50!!!!!!மன்னிக்கணும், கவனிக்கல!வயசு போயிடுச்சா?கண்ணு தெரியல! //
அப்போ 50 என்பது உங்க வயசா?
அன்னா ஹசாரேவின் அமைதியான போராட்டத்திற்கு கூட அனுமதி தர மறுக்கும் இந்திய அரசாங்கம்..என்றென்றும் வாழ்க!!
ReplyDeleteபதிவின் சாராம்சம் அருமை.மனதில் நெருடல்கள் இருந்தாலும்,நல்ல உள்ளம் கொண்ட இந்தியர் அனைவருக்கும், சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ReplyDeleteசெங்கோவி said..அப்போ 50 என்பது உங்க வயசா?///
ReplyDeleteYoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said..அப்போ 50 என்பது உங்க வயசா?///சேச்சே,அது கமெண்டு நம்பர்!நீங்க கேட்டது(வயது) நல்லது!அதையும் தாண்டி.....................................(புனிதமானது இல்ல!)
// ! சிவகுமார் ! said...
ReplyDeleteஅன்னா ஹசாரேவின் அமைதியான போராட்டத்திற்கு கூட அனுமதி தர மறுக்கும் இந்திய அரசாங்கம்..என்றென்றும் வாழ்க!! //
வாழ்க!
// R.Elan. said...
ReplyDeleteபதிவின் சாராம்சம் அருமை.மனதில் நெருடல்கள் இருந்தாலும், நல்ல உள்ளம் கொண்ட இந்தியர் அனைவருக்கும், சுதந்திரதின வாழ்த்துக்கள். //
தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
// Yoga.s.FR said...
ReplyDeleteசேச்சே,அது கமெண்டு நம்பர்!நீங்க கேட்டது(வயது) நல்லது!அதையும் தாண்டி...........//
ஐயா, நான் உங்க கமெண்ட்ஸைப் பார்த்து யூத்துன்னுல்ல நினைச்சேன்.இப்பவே இப்படின்னா.......
என் மனநிலையை பிரதிபலித்த பதிவு.
ReplyDeleteசுதந்திர இந்திய வாழ்த்துக்கள்.
செங்கோவி said...ஐயா, நான் உங்க கமெண்ட்ஸைப் பார்த்து யூத்துன்னுல்ல நினைச்சேன்.இப்பவே இப்படின்னா......./////புரியுது,அப்போ எப்புடியிருந்திருப்பிங்கன்னு நீங்க கேக்கறது!ஒரே கலாட்டா தான்,போங்க!
ReplyDeleteஉணர்ச்சிபூர்வமான நினைவூட்டல்..ஜெய்ஹிந்த்
ReplyDelete//ராஜ நடராஜன் said...
ReplyDeleteஎன் மனநிலையை பிரதிபலித்த பதிவு.
சுதந்திர இந்திய வாழ்த்துக்கள்.//
நன்றி சார்!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஉணர்ச்சிபூர்வமான நினைவூட்டல்..ஜெய்ஹிந்த்//
ஜெய் ஹிந்த்!
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி,கண்ணன் http://www.tamilcomedyworld.com