அமெரிக்கக் கனவான்கள் மீண்டும் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு முந்தைய இரு ரிசசன்களிலும் (2001. 2008) ஆப்பு வாங்கி, வேலையை இழந்தவன் என்பதால், இப்போதைய நடப்புகளை உற்று கவனித்து வருகிறேன்.
2007ல் பங்குச்சந்தை பல புதிய உச்சங்களைப் பெற்று மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருந்தது. அப்போது மெதுவாக நிதி நிறுவனங்களில் பண நெருக்கடி, கொடுத்த கடன் திரும்பவில்லை என்று முணுமுணுத்தார்கள். தொடர்ந்து வேலையிழப்பு விகிதம் அதிகரிக்கிறதே என்று சில பொருளாதார பத்தி எழுத்தாளர்கள் புருவம் சுருக்கினர். ’நாம் ஒருவேளை ரிசசனை நெருங்கிக்கொண்டிருக்கிறோமோ..ச்சே..ச்சே..இருக்காது. நாம் இருப்பது வலிமையான அமெரிக்கா ஆச்சே’ என்று மெதுவாக விஷயத்தை ஓப்பன் செய்தனர். அடுத்து 2008 ஜனவரியில் ஸ்டாக் மார்க்கெட்டில் அடி விழுந்ததும் ‘வந்தாச்சு..வந்தாச்சு..ரிசசன் வந்தாச்சு..இப்போ என்ன செய்யணும்னா..’ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
இப்போது நம் கவலையெல்லாம், அதே வரிசையில் விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருப்பது தான். பேங்குகள் மூடப்படும் விகிதம் 9% அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது. வேலையிழப்பு விகிதம் சென்ற மாதத்தை விட 66% அதிகரித்திருப்பதாக மற்றொரு செய்தி சொல்கிறது. அமெரிக்க பொருளாதாரத்தின் மிக நெருக்கடியான காலகட்டம் என்று பொருளாதார வல்லுநர்கள் அலறுகிறார்கள்.
இந்த பொருளாதார மேதைகளும், கம்பெனிகளும் வெளியில் சொல்லாத விஷயம் ஒன்று உண்டு. 2008ல் ஆரம்பித்த ரிசசன் 2010ல் முடிந்ததாக வெளியில் சொல்லப்பட்டாலும் அது உண்மை அல்ல. அதன் தொடர்ச்சியே இப்போது நாம் காண்பது. (அதற்கு உதாரணமாக சிங்கப்பூரில் இன்றும் சூடு பிடிக்காத, வங்கி நிதி பெருமளவில் தேவைப்படும் ஷிப் பில்டிங் பிசினஸ்) அப்போது ரிசசன் பிரச்சினையை அணைக்க கரன்சியை பிரிண்ட் செய்து அப்போதைக்கு விஷயத்தை மூடியது அமெரிக்கா. அப்போதே பலரும் ‘இது சரியான வழி அல்ல’ என்று சொன்னார்கள். ஆனாலும் அப்போது அமெரிக்காவிற்கு வேறு வழியில்லை. அதன்பிறகு அதை மறந்து போனார்கள். அவர்களுக்கு என்ன தான் பிரச்சினை?
அதற்கு அண்ணன் ரிச்சர்ட் நிக்சன் காட்டிய வழியே அடிப்படைக் காரணம். ’ஒரு நாடு எவ்வளவு கரன்சியை அச்சிடுகிறதோ, அதற்கு இணையான தங்கத்தை தன் ரிசர்வ் பேங்கில் ஈடாக வைத்திருக்க வேண்டும்’ என்ற கரன்சி மதிப்பை நிர்ணயிக்கும் பொதுவிதியை நிக்சன் தூக்கிக்கடாசினார். தேவைப்படும்போது செனட் ஒப்புதலுடன் பிரிண்ட் செய்துகொள்ளலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். . இதன் மூலம் ஏராளமான ’பேப்பர்’ கரன்சி பல வருடங்களாக பிரிண்ட் செய்யப்பட்டது.
தன் நாட்டாமைத்தனத்தால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பொது கரன்சியாக டாலரை முன்னிறுத்தியது அமெரிக்கா. அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. இப்போது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த பேப்பரை கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை அமெரிக்காவிடம் திரும்பக் கொடுத்து, அதற்கு ஈடான தங்கள் கரன்சியை கேட்டாலே போதும், நம் நிதிநிறுவன அதிபர்கள் போல் அமெரிக்கா ஓட வேண்டியிருக்கும்.
தன் நாட்டாமைத்தனத்தால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பொது கரன்சியாக டாலரை முன்னிறுத்தியது அமெரிக்கா. அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. இப்போது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த பேப்பரை கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை அமெரிக்காவிடம் திரும்பக் கொடுத்து, அதற்கு ஈடான தங்கள் கரன்சியை கேட்டாலே போதும், நம் நிதிநிறுவன அதிபர்கள் போல் அமெரிக்கா ஓட வேண்டியிருக்கும்.
உற்பத்தித்துறை சுத்தமாக வீழ்ந்து போன நிலையில், ;நாடு முன்னேற செலவளி’ என்ற மந்திரத்துடன் அமெரிக்கப் பொருஆதாரம் தள்ளாடி நடைபோடுகிறது. கொஞ்ச வருடங்களுக்கு ஒருமுறை பணத்தட்டுப்பாடு வருவதும், அச்சடித்து அதை சமாளிப்பதுமாக ஓட்டிய அமெரிக்கா, இப்போது நெருக்கடியின் உச்சத்தை எட்டியிருப்பதாகவே தெரிகின்றது. மீண்டும் அச்சடிக்க செனட் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. ’ஆனால் இப்படியே எத்தனை நாள்?’ என்ற பயமே இப்போது அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது.
தற்போதைய நிலையில் தொழில் துறையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நாம் அறிந்ததே..நம் கம்பெனியை தூக்கி நிறுத்துவதற்கென்றே இருக்கும் மேனேஜ்மெண்ட் புண்ணியவான்கள் எப்படியெல்லாம் இதை உபயோகித்து லாபத்தை கூட்டலாம் என்று பார்ப்பார்கள். போனஸ், இன்க்ரிமெண்ட் பற்றி பேசவே மாட்டார்கள். ஒருத்தன் தலையில் மூன்று ஆள் வேலையை ஏற்றி, புதிதாக ஆள் எடுப்பதை தவிர்ப்பார்கள். இதுவரை கம்பெனி லாபத்தில் இயங்குவதையும், அதனால் சேர்ந்துள்ள உபரிநிதி பற்றியும் பேசுவதை விடுத்து, ‘கம்பெனியைக் காப்பாற்ற நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி மேலும் கசக்கிப் பிழிய எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பதை இறுக்கினால், அவற்றைச் சார்ந்த புராஜக்ட்கள் நிறுத்தப்படும். தொடர்ந்து ஐடி போன்ற சேவைத் துறைகளும் அடி வாங்கும்.
பொதுவாக எங்கள் துறையில் 3டி மாடல் செய்ய ஒருவர், அதில் இருந்து 2டி டிராயிங்(ஐஸோ) எடுக்க இன்னொருவர். அதில் ஸ்ட்ரெஸ் அனலிஸ் செய்ய இன்னொருவர். எல்லாவற்றையும் செக் பண்ண குவாலிட்டி ஆள்/எஞ்சினியர் ஒருவர் என்றே இருப்பர். ஆனால் சென்ற 2008 ரிசசனை அடுத்து வேலை தேடியபோது, அனைத்துக் கம்பெனிகளும் சொல்லி வைத்தாற்போல் மேற்சொன்ன நான்கு வேலையும் தெரியுமா என்று கேட்டு விரட்டி அடித்தார்கள்.
இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது நம் வேலையை மட்டுமல்லாது பிறரது வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதும் நம் தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வதுமே. அதுவே நம்மை இனிவரும் காலங்களில் காப்பாற்றும். ‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!
மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!
ok raittu
ReplyDeleteவந்துட்டேன்!!!!
ReplyDelete3
ReplyDeleteபடிச்சுட்டு வரேன்!!!
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteok raittu//
என்னய்யா ரைட்டு?
//Yoga.s.FR said...
ReplyDeleteபடிச்சுட்டு வரேன்!!!//
வாங்க..வாங்க!
america finance problem ivarukkum problem pola. velai poyiruthaame.
ReplyDeleteஎன்னது,ரெய்ட்டா????
ReplyDelete//Reverie said...
ReplyDelete3
//
இப்படி ஒரு கமெண்ட்டா?
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteamerica finance problem ivarukkum problem pola. velai poyiruthaame.//
தமிழ்வாசியைத் தவிர எல்லாருக்கும் பிரச்சினை தான்!
பயப்படாதீங்க செங்கோவி...இந்த முறை அத்தனை நிறுவனங்களும்...எக்கச்சக்க பணம் கையிலே வச்சிருக்காங்க...
ReplyDeleteஅது இல்லாதனால தான் முன்னே மாட்டினாங்க...
பட்டவங்க சொன்னா அப்பீல் இல்லாம ஏத்துக்கணும்!பொதுவா எல்லா துறையிலயும் இது நடக்குது தான்!
ReplyDeleteஎவனும் கடன் குடுக்காதனால வாலை சுருட்டி வச்சிருந்தாங்க...
ReplyDeleteஆனாலும் ஒபாமா இன்னும் ஒரு தடவை வந்தா கஷ்டம்தான்...
அவரை வாழவும் விடாம சாகவும் விடாம ஆக்குறாங்க...
//Reverie said...
ReplyDeleteபயப்படாதீங்க செங்கோவி...இந்த முறை அத்தனை நிறுவனங்களும்...எக்கச்சக்க பணம் கையிலே வச்சிருக்காங்க...
அது இல்லாதனால தான் முன்னே மாட்டினாங்க..//
வச்சிருப்பாங்க..ஆனாலும் நம்மகிட்ட பஞ்சப்பட்டும் ரிசசன் மிரட்டலும் தானே செய்வாங்க..
முக்கியமாக பங்கில் முதலீடு செய்தவர்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கண் காணிக்க வேண்டும்... பயனுள்ள பகிர்வு நன்றிகள்
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteபட்டவங்க சொன்னா அப்பீல் இல்லாம ஏத்துக்கணும்!பொதுவா எல்லா துறையிலயும் இது நடக்குது தான்!//
அண்ணாச்சிக்கு இன்னைக்கு சுதி இறங்கிட்ட மாதிரி தெரியுதே..நேத்து பதிவை ஒரு தடவை பார்த்துட்டு வாங்க பாஸ்.
நான் நெனைக்கிறேன்,ஒரு செகண்டு ஒரேயோரு செகன்ட்டுல தமிழ் வாசி முந்திக்கிட்டாரு போல?
ReplyDelete//Reverie said...
ReplyDeleteஎவனும் கடன் குடுக்காதனால வாலை சுருட்டி வச்சிருந்தாங்க...
ஆனாலும் ஒபாமா இன்னும் ஒரு தடவை வந்தா கஷ்டம்தான்...
அவரை வாழவும் விடாம சாகவும் விடாம ஆக்குறாங்க..//
புஷ் செய்த வேலை...பாவம் ஒபாமா வந்து வாங்கிக்கட்டிக் கொள்கிறார்..
‘வந்தாச்சு..வந்தாச்சு..ரிசசன் வந்தாச்சு..இப்போ என்ன செய்யணும்னா..’ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
ReplyDelete//
ஆணியே புடுங்க வேண்டாம்!
ஒரு வரில மெயில்..பாருங்க செங்கோவி....
ReplyDeleteஉத்தரவு வாங்கிக்கிறேன்...3 மணிக்கு மீட்டிங்...
இங்கே பிரான்சில் நடப்பது அறிந்திருப்பீர்கள்.தங்கத்தின் இருப்பை சரி பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்!கடந்த தடவை சரிவின் போது ஒரு குறிப்பிட்ட வங்கி ஒழித்து விளையாடியது!இப்போது அந்த வங்கி கண்காணிப்பில்!!!!!!!!!!!
ReplyDelete//மாய உலகம் said...
ReplyDeleteமுக்கியமாக பங்கில் முதலீடு செய்தவர்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கண் காணிக்க வேண்டும்... //
ஆமாம் மாயா..இப்போ ரொம்ப கவனமா இருக்கணும்..அடுத்த ஒரு வாரத்துல சந்தை இன்னும் பயங்கரமா சரியும்னு சொல்றாங்க.
//Reverie said...
ReplyDeleteஒரு வரில மெயில்..பாருங்க செங்கோவி....
உத்தரவு வாங்கிக்கிறேன்...3 மணிக்கு மீட்டிங்..//
பதிவுல நிறைய கேப் இருக்குன்னு சொல்லி இருக்கீங்க..எனக்கு பார்த்தா அப்படித் தெரியலியே..இங்க நல்லாத்தான் இருக்கு..
sengovi ethukkum comment'il oru good morning pottu vainga. unga vaasagar yaaraachum naalaikku ungalukku periya officer'a varalaam.
ReplyDelete//
ReplyDeleteகோகுல் said...
‘வந்தாச்சு..வந்தாச்சு..ரிசசன் வந்தாச்சு..இப்போ என்ன செய்யணும்னா..’ என்று அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.
//
ஆணியே புடுங்க வேண்டாம்!//
டென்சன் ஆகாதீங்க பாஸ்!
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeletesengovi ethukkum comment'il oru good morning pottu vainga. unga vaasagar yaaraachum naalaikku ungalukku periya officer'a varalaam.//
என் ப்ளாக்கை படிச்ச யாரும் என்னை வேலையில வச்சுப் பார்ப்பாங்கன்னு தோணலைய்யா..
செங்கோவி said..அண்ணாச்சிக்கு இன்னைக்கு சுதி இறங்கிட்ட மாதிரி தெரியுதே..நேத்து பதிவை ஒரு தடவை பார்த்துட்டு வாங்க பாஸ்.////அப்புடியில்லங்க!பதிவுக்கு ஏத்தாப்புல ரியாக்க்ஷன் குடுக்கணும்!அது நேத்து.............................;வயசுப் பசங்களுக்கு பதிவு போட்டீங்க!கும்மினோம்!இது அப்புடியில்லீங்களே?ஒலகமே நடுங்கிக்கிட்டுல்ல இருக்குது?இதுல போயி கும்மினா,சாவு வூட்டுல "லவ்வு" பண்ணினாப்புல இருக்கும்ல?
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteஇங்கே பிரான்சில் நடப்பது அறிந்திருப்பீர்கள்.தங்கத்தின் இருப்பை சரி பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்!கடந்த தடவை சரிவின் போது ஒரு குறிப்பிட்ட வங்கி ஒழித்து விளையாடியது!இப்போது அந்த வங்கி கண்காணிப்பில்!!!//
ஓ..இப்போ பிரச்சினையின் மையமே ஐரோப்பிய பேங்குகளின் கவலைக்கிடமான நிலைமைன்னுல்ல சொல்றாங்க.
‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!//
ReplyDeleteகம்பனிய லவ் பண்ணாம வேலைய மட்டும் லவ் பன்னுங்கறீங்க!ரைட்டு!
//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said..அண்ணாச்சிக்கு இன்னைக்கு சுதி இறங்கிட்ட மாதிரி தெரியுதே..நேத்து பதிவை ஒரு தடவை பார்த்துட்டு வாங்க பாஸ்.////அப்புடியில்லங்க!பதிவுக்கு ஏத்தாப்புல ரியாக்க்ஷன் குடுக்கணும்!அது நேத்து.............................;வயசுப் பசங்களுக்கு பதிவு போட்டீங்க!கும்மினோம்!இது அப்புடியில்லீங்களே?ஒலகமே நடுங்கிக்கிட்டுல்ல இருக்குது?இதுல போயி கும்மினா,சாவு வூட்டுல "லவ்வு" பண்ணினாப்புல இருக்கும்ல?//
கரெக்ட்டு பாஸ்..உங்க சமூகப் பொறுப்புணர்வை நான் பாராட்டுறேன். நன்றி!
//கோகுல் said...
ReplyDelete‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!//
கம்பனிய லவ் பண்ணாம வேலைய மட்டும் லவ் பன்னுங்கறீங்க!ரைட்டு!//
என்னா ஒரு தத்துவம்..என்னா ஒரு தெளிவு..கோகுல், உங்களுக்கு ரொம்ப பிரகாசமான எதிர்காலம் இருக்கு!
kadaisiyila america, perikka aachcha? illaiyaa?
ReplyDeleteபாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!/////"குத்து" மோர்னிங்கை "குத்தாம" சொல்லணும்!(கும்மிட்டேன்)
ReplyDeleteநாளை காலை 7.40 தானே வெற்றி எப்.எம் அறிமுகம்?
ReplyDeleteமேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!//
ReplyDeleteஎல்லாருக்கும் குட்டு மார்னிங் ஆப்பீசர்!!
(எதுக்கும் போட்டு வைப்போம் காசா! பணமா!)
//கோகுல் said...
ReplyDeleteநாளை காலை 7.40 தானே வெற்றி எப்.எம் அறிமுகம்?//
ஆமா கோகுல்..!
//Yoga.s.FR said...
ReplyDeleteபாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!/////"குத்து" மோர்னிங்கை "குத்தாம" சொல்லணும்!(கும்மிட்டேன்)//
அப்பாடி..இப்ப தான் பாஸ் திருப்தியா இருக்கு..இனி நிம்மதியா தூங்குவேன்!
ரைட்டு அலாரம் வைக்கணும்!(மறக்காம எழுந்திருக்கணும்)
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeletekadaisiyila america, perikka aachcha? illaiyaa? //
இவரு பெரிய மல்ட்டி மில்லியனரா இருப்பாரோ...என்ன சொன்னாலும் அசர மாட்டேங்கிறாரே!
//கோகுல் said...
ReplyDeleteரைட்டு அலாரம் வைக்கணும்!(மறக்காம எழுந்திருக்கணும்)//
இங்க அது ’நடு ராத்திரி’ அஞ்சு மணி..அவ்வ்!
7.40 கூட நள்ளிரவுதான்.அட்ஜஸ்ட் பண்ணுவோம்!
ReplyDeleteஅடக்கடவுளே இது வேறய
ReplyDeleteநாசமா போச்சு
நான் பிச்சதான் எடுக்கபோறேன்
ம்ம் அமெரிக்க சரியான பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்றுகொண்டுள்ளது...எவ்வாறு சமாளிக்க போறார்கள் என்பது தான்............. பார்ப்போம்..
ReplyDelete//Speed Master said...
ReplyDeleteஅடக்கடவுளே இது வேறய
நாசமா போச்சு
நான் பிச்சதான் எடுக்கபோறேன்//
இதுக்கெல்லாம் அசந்தா எப்படி மாஸ்டர்..நமக்குன்னு உள்ளது கண்டிப்பா கிடைக்கும்..யாராலயும் தடுக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாததா..
ஹா ஹா ஏற்கனவே இதே பிரச்சனையாலதான் எல்லாம் நாசமா போச்சு
ReplyDeleteஇப்பதான் ஏதோ தூரத்துல ஒரு ஒளி தெரிஞ்சது
இந்த செய்தி மேலும் சிங்கப்பூரில் போட்ட புது சட்டம் இரண்டையும் கேட்டு
எனக்கு தூக்கம் வரவில்ல
Speed Master,இளைஞர்கள் மனதை தளர விடலாமா?நமக்கென்று ஒதுக்கப்பட்டிருப்பது கண்டிப்பாக நமக்கே கிடைக்கும்!முயற்சி திருவினையாக்கும்!கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொடுக்கும் என்பார்கள்!அதற்காக முயற்சியை கை விடலாமா?
ReplyDeleteஇப்போது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அந்த பேப்பரை கோடிக்கணக்கில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றன. அதை அமெரிக்காவிடம் திரும்பக் கொடுத்து, அதற்கு ஈடான தங்கள் கரன்சியை கேட்டாலே போதும், நம் நிதிநிறுவன அதிபர்கள் போல் அமெரிக்கா ஓட வேண்டியிருக்கும்.////அதுக்கு "தில்லு" வேணும்! (ஜனநாயக உரிமையை கேக்குற ஈழமக்களிட்ட மட்டும் தான் காட்டுவாங்க!)
ReplyDeleteதன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்னு,சோவியத் கூட்டக் கலச்சதுக்கு,பலனை அனுபவிக்கணுமில்லியா?எங்க கலைக்கணுமோ,அங்க கலைக்கல!அமெரிக்கக் கூடு தானாவே கலைஞ்சிடும் போலயிருக்கே?
ReplyDeleteசெங்கோவி said...என் ப்ளாக்கை படிச்ச யாரும் என்னை வேலையில வச்சுப் பார்ப்பாங்கன்னு தோணலைய்யா..////ஏன் அப்புடி ஒங்கள சிறுமைப்படுத்துறீங்க?வேலயில வச்சுப் பாக்காட்டி என்ன?ஒரு நல்ல வேலக்காரனை அவுக இழக்கிறாங்க!அம்புட்டுத்தேன்!
ReplyDelete50!!!!!ஐம்பதாவதுடன் நிறைவு செய்து படுக்கைக்கு செல்கிறேன்!இரவு வணக்கம்!
ReplyDeleteதென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெரி கட்டியே ஆகும்!!
ReplyDeleteநான் பார்த்தவரை இந்தியா இப்பிடியான காலகட்டங்களில் இருந்து மீண்டிருப்பதாகவே தெரிகிறது..!!??
ReplyDeleteநேற்று பிரன்ஸ் அதிபரும் ஜேர்மன் அதிபரும் ஏதோ திட்டம் போடுறன்னு ரீல் விட்டாங்க..
இன்று பிரான்சின் முக்கிய நாளிதல் ஒன்னு ஒரு கருத்துப்படம் போட்டிருந்தார்கள்... பிரன்சு அதிபரும் ஜேர்மன் அதிபரும் ஓட்டல் ஒன்றி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. ஜேர்மன் அதிபர் கவலை தோய்ந்த முகத்துடன் சொல்கிறார்... இந்த முறையும் நானோ பில் பேய்பண்ணுறதெண்டு..!!!!!????
அதிகப்படியான நிதி உதவியை ஜேர்மன் மற்ற நாடுகளுக்கு செய்வதால் அங்கு அம்மையாருக்கும் மக்களிடையே அதிர்ப்தியே....
இங்கு கேட்கும் செய்திகளும் பிரான் பாதுகாப்பான இடத்தில் இல்லைன்னு சொல்லுறாங்க.. இன்று பிரான்சின் பங்கு மார்க்கட்5.54% வீதத்தால் மீண்டும் வீழ்ந்துவிட்டது.. நீங்க சொன்னதுபோல் இனி எல்லோருக்கும் சலாம் வைப்போம்...!!??
//
ReplyDeleteYoga.s.FR said...
50!!!!!ஐம்பதாவதுடன் நிறைவு செய்து படுக்கைக்கு செல்கிறேன்!இரவு வணக்கம்!//
நன்றி..நன்றி!
//
ReplyDelete! சிவகுமார் ! said...
தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெரி கட்டியே ஆகும்!!//
அப்படித் தான் ஆகிப்போச்சு நம்ம பொழப்பு!
//காட்டான் said...
ReplyDelete//நான் பார்த்தவரை இந்தியா இப்பிடியான காலகட்டங்களில் இருந்து மீண்டிருப்பதாகவே தெரிகிறது..!!??//
ஆமாம் பாஸ்..இந்தியா மூழ்கும் அளவிற்கு இது பெரிய பிரச்சினை அல்ல தான்!
// இன்று பிரான்சின் முக்கிய நாளிதல் ஒன்னு ஒரு கருத்துப்படம் போட்டிருந்தார்கள்... பிரன்சு அதிபரும் ஜேர்மன் அதிபரும் ஓட்டல் ஒன்றி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. ஜேர்மன் அதிபர் கவலை தோய்ந்த முகத்துடன் சொல்கிறார்... இந்த முறையும் நானோ பில் பேய்பண்ணுறதெண்டு..!!!!!???? //
ஹா..ஹா..செம ஜோக்!
// நீங்க சொன்னதுபோல் இனி எல்லோருக்கும் சலாம் வைப்போம்...!!? //
காட்டானுக்கும் ஒரு சலாம்!
ம் கொஞ்சம் உசாராத்தான் இருக்கணும் போல
ReplyDeleteதெளிவான விளக்கம் எதுவரை புரியாத பல விசியங்கள் உங்கள் பதிவில் கற்றுக்கொண்டேன் நன்றி செங்கோவி அண்ணா
ReplyDelete//siva said...
ReplyDeleteம் கொஞ்சம் உசாராத்தான் இருக்கணும் போல//
ஆமாம் சிவா...உஷாரய்யா உஷாரு..ஓரம் சாரம் உஷாரு!
கண்டிப்பா பாதிப்பு உண்டு
ReplyDeleteநான் பாசுக்கு குட் மார்னிங் சொல்ல ஆரம்பிச்சிட்டேன், இப்போதைய நெருக்கடி இன்னும் இரண்டு வருடம் வரை இருக்க வாய்ப்பு இருக்கு. எல்லோரும் மனதளவில் தயாராக வேண்டும்.
ReplyDeleteஇப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது நம் வேலையை மட்டுமல்லாது பிறரது வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதும் நம் தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வதுமே. அதுவே நம்மை இனிவரும் காலங்களில் காப்பாற்றும். ‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!
ReplyDeleteநல்லா சொன்னீர்கள் நண்பரே .
கண்டிப்பாக இதை கடைப் பிடிக்க வேண்டும் .
golden lines very nice
thanks for this
தமிழ் மணம் 6
ReplyDeleteசரியான நேரத்தில் தேவையான அறிவுரை மாம்ஸ்...... கடைய மாத்தலாம்னு இருந்தா நேரத்துல இப்படி பண்ணிடாணுக பாவி பசங்க....
ReplyDeleteம்ம்ம்...கடந்த ரிசசன் காரணமா ஆப்பு வாங்கி ஒருவருஷம் வெட்டியா இருந்த ஞாபகம் வருது!
ReplyDeleteஆனா நம்மாளுகளுக்கு ஒரே ஆச்சரியம்! அமெரிக்காலதான ரிசசன்..இவனுக்கு கொழும்பில என்ன பிரச்சினை? கதை விடுறானான்னு? பலருக்கு பி.பி.ஓ. என்றால் என்னவென்று புரியாததும் ஒரு காரணம்!
இதுதான் சான்ஸ்னு அட்வைஸ் வேற - இதுக்குத்தான் கவர்ன்மென்ட் ஜாப் இல இருக்கணும்னு சொல்றது! ஸ்ஸ்ஸ்ஸப்பா என்னா அனுபவம்!
//அதற்கு அண்ணன் ரொனால்டு ரீகன் காட்டிய வழியே அடிப்படைக் காரணம்//
ReplyDeleteஒரு நடிகனை நாட்டின் தலைவனாக்கியதற்கு பலனை அமெரிக்கா இன்னும் அனுபவிக்கிறது!
நோட் பண்ணிக்குங்க மக்களே!
//‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!//
ReplyDeleteஆமாண்ணே போறபோக்கைப் பாத்தா ஐந்தாறு வேலை தெரிஞ்சு இருக்கணும் போல இருக்கே!
வணக்கம் பாஸ்,
ReplyDeleteஅமெரிக்காவின் பொருளாதார நிலமை பற்றிக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,
அமெரிக்காவில் அடி என்றால்,
நமக்கெல்லாம் ஆப்பு கன்போர்ம் என்பதில் ஐயமில்லை,
வேலையிடத்தில் நீங்கள் சொல்லும் ஐடியாக்களைத் தான் இனிமேல் பாலோ பண்ணனும் போல இருக்கே.
நம் வேலையை மட்டுமல்லாது பிறரது வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வதும் நம் தகுதியை மேலும் வளர்த்துக் கொள்வதுமே.//
ReplyDeleteபல விபரீதங்களும் நடக்கும் ஹிஹி
அமெரிக்கா சீக்கிரமே இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு
ReplyDeleteநல்லா சொன்னீர்கள் நண்பரே .
ReplyDelete// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகண்டிப்பா பாதிப்பு உண்டு //
ஓகே பாஸ்!
// அன்பரசு said...
ReplyDeleteநான் பாசுக்கு குட் மார்னிங் சொல்ல ஆரம்பிச்சிட்டேன், இப்போதைய நெருக்கடி இன்னும் இரண்டு வருடம் வரை இருக்க வாய்ப்பு இருக்கு. எல்லோரும் மனதளவில் தயாராக வேண்டும்.//
ஆம், அமெரிக்கத் தேர்தல் முடியும்வரையாவது இது தொடர வாய்ப்பு அதிகம். ஒபாமாவை ஒழித்துக்கட்ட இதை நல்ல வாய்ப்பாக எதிர்தரப்பு பயன்படுத்த் நினைக்கின்றது.
// M.R said...
ReplyDeleteநல்லா சொன்னீர்கள் நண்பரே .
கண்டிப்பாக இதை கடைப் பிடிக்க வேண்டும் .//
நன்றி ரமேஷ்!
// Carfire said...
ReplyDeleteசரியான நேரத்தில் தேவையான அறிவுரை மாம்ஸ்...... கடைய மாத்தலாம்னு இருந்தா நேரத்துல இப்படி பண்ணிடாணுக பாவி பசங்க....//
ஹா..ஹா..கொஞ்ச நாள் பொருங்கள்.
ஜீ... said...
ReplyDelete//ம்ம்ம்...கடந்த ரிசசன் காரணமா ஆப்பு வாங்கி ஒருவருஷம் வெட்டியா இருந்த ஞாபகம் வருது! //
அடப்பாவிகளா..ஆப்பு வாங்குறதுலயும் நமக்குள்ள ஒத்துமையா..
//ஆமாண்ணே போறபோக்கைப் பாத்தா ஐந்தாறு வேலை தெரிஞ்சு இருக்கணும் போல இருக்கே! //
ஆமாம் தம்பி, நான்கூட மல்யுத்தம் பழகலாமான்னு யோசிக்கிறேன்!
// நிரூபன் said...
ReplyDeleteவேலையிடத்தில் நீங்கள் சொல்லும் ஐடியாக்களைத் தான் இனிமேல் பாலோ பண்ணனும் போல இருக்கே. //
அதை முதல்ல செய்யுங்கள்!
// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteஅமெரிக்கா சீக்கிரமே இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு //
அமெரிக்காவிற்கு நல்ல நேரம் தான்னு சொல்றீங்களா..நீங்க சொன்னா சரி!
குத்து-afternoon...
ReplyDeleteஎனக்கு சீனப்பொருட்கள் மாதிரி சந்தையில் அமெரிக்க பொருட்களும் கிடைக்கும் வரை அமெரிக்காவுக்கு ததிங்கினத்தோம்:)
ReplyDelete//Amutha Krishna said... [Reply]
ReplyDeleteகுத்து-afternoon...//
அவ்வ்!
தமிழ்மணம் 13
ReplyDeleteஹா ஹா
என்ன இன்னைக்கு கமென்ட் என்பதுதான் இருக்கு..
ReplyDeleteஎல்லாரும் தூங்கிட்டாங்களோ?
pl read this also
ReplyDeletehttp://koothadiveddai.blogspot.com/2011/07/blog-post.html
seshoo/dubai
யார்,யாருக்கெல்லாமோ ஆப்படித்து கடைசியில் தனக்கே ஆப்பு வருகிறது என்னும் போது...................................?!சதீஷ்குமாருக்கு ஒரு வேளை "நல்லநேரம்"கைகொடுக்கலாம்,அமெரிக்காவுக்கு????????????
ReplyDelete// ராஜ நடராஜன் said...
ReplyDeleteஎனக்கு சீனப்பொருட்கள் மாதிரி சந்தையில் அமெரிக்க பொருட்களும் கிடைக்கும் வரை அமெரிக்காவுக்கு ததிங்கினத்தோம்:) //
அதுக்கு எந்த முயற்சியும் அவங்க எடுக்கிற மாதிரி தெரியலியே..
// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ReplyDeleteதமிழ்மணம் 13
ஹா ஹா //
ரைட்டு!
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஎன்ன இன்னைக்கு கமென்ட் என்பதுதான் இருக்கு..
எல்லாரும் தூங்கிட்டாங்களோ? //
போதும்..போதும்.
// FOOD said...
ReplyDeleteஉலகப் பொருளாதாரமும் சொல்லி,நல்லா வேலை செய்ய உபாயங்களும் சொலியிருக்கீங்க. நன்றி செங்கோவி.//
ம்..ஆஃபீசருக்கு கவலை இல்லை!
எளிதில் புரியும்படியான விளக்கம்!
ReplyDeleteஅமெரிக்கா நிஜமான பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செலுத்தாத வரை இப்படித்தான் போல!
ReplyDeleteஅமெரிக்காவின் தவறுகளால் மற்ற நாடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்,அதற்கு ஒரே வழி எல்லோரும் டாலரை கைவிடுவதே...!
ReplyDeleteஎல்லா செய்திகளைப் போலவே பொருளாதாரத்தையும் எளிமையாக்கி அழகாகச் சொல்லி உள்ளீர்கள். நல்லதொரு பத்திரிகயாளர்தான் ஐயமில்லை.
ReplyDelete///////////////////////ரீகன் தூக்கிக்கடாசினார்.//////////////செங்கோவி, r you talking about Gold standard. அது ரிச்சர்ட் நிக்சன் 1971, ஆக 15 ல் செய்த வினை.BTW for more reading Gold standard Nixon shock. இன்னும் அமேரிக்கா வண்டி ஓடுவதற்கு காரணம் 1971 and 1973 OPEC agreement. see Petrocurrency இதை காப்பாற்ற பெரியண்ணன் லீலைகள்Petrodollar warfare
ReplyDeleteஒரு சதத்திற்கும் கீழக உள்ள இந்த ஐ.டி. துறையில் வேலை செய்பவர்களால்தான் வீட்டு மனை விலையிலிருந்து காய்கறி விலை வரைக்கும் அத்தனையும் தாறுமாறாக ஏறுகிறது. இவர்கள் கேட்கும் காசை வீசியெறிந்து விட்டு வாங்கிக் கொண்டு போகிறார்கள். இதனால் மற்ற எல்லோருக்கும் அவதி. இன்னொன்று கல்யாணம் பண்ணாமலேயே எல்லாத்தையும் பண்ணுவது. இவங்க பண்ணும் அட்டூழியத்தைப் பார்க்கும் போது, இதுங்க கொட்டம் அடங்காதா என்று தோன்றும். ஆனா வேலையில்லா திண்டாட்ட்டம் வந்து மொத்த சனமும் அவதிப் படுமே என்ற கவலையும் இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. [அது சரி, அமேரிக்காவின் பங்குகளைத்தானே மற்ற நாடுகள் வாங்கியுள்ளன, நீர் என்ன \\அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. \\ என்று கூறுகிறீர்?]
ReplyDelete@Stock /////////////////////////ரீகன் தூக்கிக்கடாசினார்.//////////////செங்கோவி, r you talking about Gold standard. அது ரிச்சர்ட் நிக்சன் 1971, ஆக 15 ல் செய்த வினை.//
ReplyDeleteஅந்த இரண்டு பெயர்களுக்கிடையே எப்போதும் எனக்கு குழப்பம் உண்டு. திருத்தி விடுகிறேன். சரி பாராமைக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி!
//‘இது என் வேலையல்ல’ என்று எதையும் ஒதுக்காமல் அதையும் தெரிந்து கொள்வோம்!//
ReplyDeleteஇப்போது மட்டுமல்ல;எப்போதுமே இது நல்லதுதான்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//அமெரிக்கா நிஜமான பொருளாதார வளர்ச்சியில் அக்கறை செலுத்தாத வரை இப்படித்தான் போல! //
உண்மை தான் பாஸ்..அடுத்தவன் சம்பாத்தியத்திலேயே எத்தனை நாளைக்கு வண்டி ஓட்டுவது.
//அமெரிக்காவின் தவறுகளால் மற்ற நாடுகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்,அதற்கு ஒரே வழி எல்லோரும் டாலரை கைவிடுவதே...!//
அது அத்தனை எளிதல்ல பாஸ்..அது நினைத்துப் பார்க்கமுடியாத குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும். அமெரிக்கா திருப்பிச் செலுத்த ‘காசில்லை’ என கையை விரித்து விடும். அப்புறம் நம்மிடம் உள்ள அந்நியச் செலாவணி ஒரு நிமிடத்தில் பேப்பர் குப்பையாகி விடும்.
‘இனிமேல் தங்கத்துக்கு மதிப்பில்லை..இரும்பு மாதிரியே தங்கமும் ஒரு உலோகம் மட்டுமே’ என்று வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/நாடுகள் அறிவித்துவிட்டால் என்ன ஆகுமோ, அதுவே இங்கும் நிகழும். இது புலி வால் பிடித்த கதை..முடிந்தவரை பின்னாலேயே போக வேண்டியது தான்.
//kmr.krishnan said...
ReplyDeleteஎல்லா செய்திகளைப் போலவே பொருளாதாரத்தையும் எளிமையாக்கி அழகாகச் சொல்லி உள்ளீர்கள். நல்லதொரு பத்திரிகயாளர்தான் ஐயமில்லை.//
பாராட்டுக்கு நன்றி ஐயா..இங்கு கொஞ்சம் அதிகமாகவே எளிமைப்படுத்தி உள்ளேன்!
\\‘இனிமேல் தங்கத்துக்கு மதிப்பில்லை..இரும்பு மாதிரியே தங்கமும் ஒரு உலோகம் மட்டுமே’ என்று வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/நாடுகள் அறிவித்துவிட்டால் என்ன ஆகுமோ, அதுவே இங்கும் நிகழும்.\\ தங்கத்தின் மதிப்பை எந்த வங்கியும்/நிறுவனமோ நிர்ணயிக்க முடியாது. ஏன்னா மக்கள் மத்தியில் [இந்தியப் பெண்கள் குறிப்பாக...ஹி..ஹி..ஹி...] அதற்க்கு மதிப்பு இருக்கிறது. பங்கு சந்தை இறங்கும் போதும் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் போகுதே!
ReplyDeleteJayadev Das said...
ReplyDelete//ஒரு சதத்திற்கும் கீழக உள்ள இந்த ஐ.டி. துறையில் வேலை செய்பவர்களால்தான் வீட்டு மனை விலையிலிருந்து காய்கறி விலை வரைக்கும் அத்தனையும் தாறுமாறாக ஏறுகிறது. இவர்கள் கேட்கும் காசை வீசியெறிந்து விட்டு வாங்கிக் கொண்டு போகிறார்கள். இதனால் மற்ற எல்லோருக்கும் அவதி. //
இது பற்றி எனக்கு மாற்றுக்கருத்து உண்டு..ஒருநாள் தனிப்பதிவாகவே போடுகிறேன்..அப்போது விரிவாக விவாதிப்போம்.
//[அது சரி, அமேரிக்காவின் பங்குகளைத்தானே மற்ற நாடுகள் வாங்கியுள்ளன, நீர் என்ன \\அந்த வகையில் வெறும் பேப்பரை எல்லா நாடுகளுக்கும் கரன்சி என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது. \\ என்று கூறுகிறீர்?]//
அந்த பங்குகளை வாங்கவும் டாலரைத் தானே கொடுத்திருப்போம்..நான் சொல்வது அதற்கும் முன்பு! பெட்ரோலை ரூபாய் கொடுத்து வாங்க முடியாது. அமெரிக்க டாலரை கொடுத்தே வாங்க முடியும். எனவே நாம் ரூபாயை(கரன்சியை) கொடுத்து டாலரை(வெற்று பேப்பர்!!!) வாங்குகிறோம். அந்நியச்ச் செலாவணியாக சேர்த்து வைக்கின்றோம். அதைக் கொண்டு கச்சா எண்ணெய் வாங்குகிறோம். ஒபெக் இனி எந்தக் கரன்சிக்கும் கச்சா எண்ணென் தருவோம் என்று அறிவித்தால், டாலருக்கு உலகில் எந்த மதிப்பும் இருக்காது!
//Jayadev Das said...
ReplyDelete\\‘இனிமேல் தங்கத்துக்கு மதிப்பில்லை..இரும்பு மாதிரியே தங்கமும் ஒரு உலோகம் மட்டுமே’ என்று வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/நாடுகள் அறிவித்துவிட்டால் என்ன ஆகுமோ, அதுவே இங்கும் நிகழும்.\\ தங்கத்தின் மதிப்பை எந்த வங்கியும்/நிறுவனமோ நிர்ணயிக்க முடியாது. ஏன்னா மக்கள் மத்தியில் [இந்தியப் பெண்கள் குறிப்பாக...ஹி..ஹி..ஹி...] அதற்க்கு மதிப்பு இருக்கிறது. பங்கு சந்தை இறங்கும் போதும் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் போகுதே!//
பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள நிதி நிறுவனங்கள் தங்கள் பணத்தை ஆபத்து நேரத்தில் அதில் இருந்து எடுத்தாலும், சும்மா வைத்திருக்க முடியாது. வட்டியை அது சம்பாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். டாலரும் மதிப்பு குறைந்துகொண்டே போகும்போது, தங்கள் ஆவரேஜ் லாபத்தை மெயிண்டென் செய்ய தங்கத்தில் ஹெட்ஜ் செய்கிறார்கள்..
அமெரிக்கா டர்ர்ர்..தங்கம் விர்ர் - என்று ஒரு பதிவு எழுத எண்ணம்..பார்ப்பொம்!
உங்களை வச்சே 5 பதிவு தேத்தலாம் போலிருக்கே!
\\ஒபெக் இனி எந்தக் கரன்சிக்கும் கச்சா எண்ணென் தருவோம் என்று அறிவித்தால், டாலருக்கு உலகில் எந்த மதிப்பும் இருக்காது! \\கவுண்டமணி நிற்கவே முடியாத நிலையிலும் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டு கார்த்திக்
ReplyDeleteசண்டை போடுவதைப் போல அண்ணன் அமெரிக்காவை எவ்வளவு கீழ் நிலைக்குப் போனாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே!
http://www.youtube.com/watch?v=R7boIBWqLtg
மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!//
ReplyDeleteநன்றி
//Jayadev Das said...
ReplyDeleteகவுண்டமணி நிற்கவே முடியாத நிலையிலும் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டு கார்த்திக்
சண்டை போடுவதைப் போல அண்ணன் அமெரிக்காவை எவ்வளவு கீழ் நிலைக்குப் போனாலும் மற்றவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே! //
ஹா..ஹா..சூப்பர் உவமை சார்.
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteமேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!//
நன்றி//
மிக்க நன்றி.
//
ReplyDeleteRathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html//
வாழ்த்துக்கு நன்றி சார்.
"மேலும், பாஸ்-ஐ கொஞ்சநாளைக்கு முறைக்காமல் குத்து மார்னிங் சொல்வதும் நலம் பயக்கும்!" ரொம்ப உண்மை.
ReplyDelete