நம்ம தமிழ்வாசி பிரகாஷ் மூணு..மூணுன்னு ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருந்தார். இப்படி பாசமா கூப்பிடுதாரேன்னு ஆசையா என்னன்னு பார்த்தா 3 விஷயங்கள்னு 15 கேள்வி..அந்தப் பதிவைப் படிக்க ஆரம்பிச்சா, பாதியிலேயே தூக்கம் வந்திருச்சு. அப்போ தான் புரிஞ்சது இந்தாளு நம்ம கடைக்கு வர்ற கூட்டத்தை கலைக்க சதி பண்றாருன்னு. அப்போ எழுதாம விட்டுடலாம்னு பார்த்தா...ஒரு காலத்துல பதிவர் கொட்டைப்புளியைத் தவிர வேற யாருமே நம்மை மனுசனா மதிச்சு தொடர்பதிவுக்குக் கூப்பிடாத கேவலமான நிலைமை ஞாபகத்துக்கு வந்துச்சு. அவருக்குத் தேவை ’மூணு’ தானே-ன்னு துணிஞ்சுட்டேன்:
எனக்குப் பிடிச்ச மூன்று நடிகைகள்:
கோவை சரளா:
நகைச்சுவங்கிறது எல்லோருக்கும் வர்றதில்லை..அதுவும் லேடீஸ் நகைச்சுவை பண்றது ரொம்பக் கஷ்டம்..ஏன்னா நம்மாளுக பாட்டி கேரக்டரா இருந்தாலும் ஏதாவது தேறுதான்னு பார்க்குற பார்ட்டிங்க..அதனால ஒரு பொம்பளை ரசிகர்களோட கண்ணை தன் உடம்பில இருந்து மீட்டு, நகைச்சுவையைக் கவனிக்க வைக்கிறது ரொம்பக் கஷ்டமான காரியம். போதாக்குறைக்கு ஷர்மிலி போன்ற அணுகுண்டு நடிகைகள்லாம் காமெடி கேரக்டர் பண்ணிப் பண்ணி, நகைச்சுவை நடிகை ‘கேரக்டரை’ டேமேஜ் பண்ணி வச்சிருக்காங்க. அந்த வகையிலதான் நமக்கு கோவை சரளாவை ரொம்பப் பிடிச்சுப்போச்சுண்ணே..கமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்த்துக்கோங்களேன்..
தப்பா நினைக்க முடியாத அப்பாவி முகம் தான் கோவை சரளாவோட ப்ளஸ் பாயிண்ட். மனோரமா ஆச்சிக்கு அப்புறம் அந்த லுக்கு சரளாவுக்குத் தான் வந்துச்சு. அதனாலேயே கணவனை அடிக்கிற கேரக்டர் பண்ணாலும் அடி வாங்குகிற கேரக்டர் பண்ணாலும் நம்மால ரசிக்க முடியுது. ஏறக்குறைய 20 வருஷத்துக்கு மேல ஆகியும் இன்னும் அவரை ரீப்ளேஸ் பண்ண ஆளில்லைங்கிறதே அவரோட திறமைக்கு சாட்சி.
அவர் நடிச்சதுல ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’..’என்ன இங்க சத்தம்’..’ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்..தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற காட்சிகளை இப்போ பார்த்தாலும் நமக்கு கெக்கேபிக்கேன்னு சிரிப்பு வந்திடும். ஒரு படத்துல வடிவேலுகிட்ட ‘நானா சிந்திச்சேன்’ன்னு சொல்லும்..அப்போ அதோட டயலாக் டெலிவரியும் எக்ஸ்பிரசன்ஸும் அமர்க்களமா இருக்கும்.’நீயால்லாம் யோசிக்கக்கூடாது’ன்னு சொல்லி வடிவேலு கும்முவாரு..அந்த சீனோட தாக்கத்துல தான் நம்ம ‘நானா யோசிச்சேன்’ பொறந்துச்சு.. அது என்ன படம், யூடுயூப் லின்க் இருக்கான்னு நண்பர்கள் யாராவது சொல்லுங்கப்பா..
குஷ்பூ :
’நீ எங்கே என் அன்பே’ன்னு அது அழுதுக்கிட்டே கண்ணாடில நடந்தப்போ ‘ இங்க இருக்கேன்’ன்னு நானு தரை டிக்கெட்ல உட்கார்ந்துக்கிட்டு கத்துனதோட, குஷ்பூவுக்கும் எனக்குமான ‘தொடர்பு’ தொடங்குச்சு..அதுக்கு அப்புறம் தான் வருஷம் 16 பார்த்தேன். அதுவும் கார்த்திக் அதைத் தொரத்திக்கிட்டு வரும்போது தடுக்கி விழுமே..அந்த சீன்ல விழுந்தவன் தான் இன்னும் எந்திரிக்கலை.
இதுவும் குழந்தைத் தனமான முகம் தான். ஆனா அந்த முகத்துக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாதது தான் குஷ்பூவோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். கவர்ச்சிக் காட்சிகள்ல உடம்பும், மற்ற காட்சிகள்ல முகமும் குஷ்பூக்கு நல்லா கை கொடுத்துச்சு. தமிழ்நாட்டை குஷ்பூ அளவுக்கு ‘ஆக்ரமிச்ச’ நடிகை வேற யாரும் இருக்கிற மாதிரி தெரியலை..குஷ்பூவை ரீப்ளேஸ் பண்ண வந்த சிம்ரனோட இப்போதைய நிலைமையை கம்பேர் பண்ணும்போது தான் அம்மணியோட திறமை நமக்குப் புரியுது..
சூப்பர் ஸ்டார் படத்துல ஒரு நடிகையோட பேரைச் சொல்லி ஒரு பாட்டு வந்துச்சுன்னா அது குஷ்பூவுக்கு மட்டும் தான்னு நினைக்கேன்..அண்ணாமலை, சிங்கார வேலன்ல வர்ற குஷ்பூவைப் பார்த்துத் தான் ‘கும்முன்னு இருக்கறது’ன்னா என்னன்னு தமிழன் தெரிஞ்சுக்கிட்டான்.
குஷ்பூவைப் பத்தின பல கிசுகிசுக்களை நீங்க தெரிஞ்சிருப்பீங்க..நானும் ஒரு கிசுகிசு சொல்றேன்..அந்தப் பொண்ணு பீக் பீரியட்ல ரஜினி, கமல்னு பெரிய ஸ்டார்களோட நடிச்சு ஏகப்பட்ட காசு சம்பாதிச்சது. அதோட அப்பன் ஒருநாளு அத்தனை சொத்தோட ஓடிப்போயிட்டான். அப்புறம்தான் அது ராஜ்கிரன், பாண்டியராஜன்னு எவன் கூப்பிட்டாலும் ஓடிப்போய் நடிச்சு, திரும்ப மீண்டு வந்துச்சு.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு அதோட செகண்ட் இன்னிங்ஸ் ஹீரோக்களைப் பார்த்தாலே அதோட அப்போதைய நிலைமை புரியும்.
ஷகீலா:
அடுத்ததாக நம்ம தங்கத் தலைவி ஷகீலா..முதல்ல ஸ்டில்லைப் போட்டுக்கறேன்..இதோட நல்ல ஸ்டில்லு கிடைக்காம நான் பட்டபாடு அந்த கூகுள் ஆண்டவருக்குத் தான் தெரியும்..ஏழு கடல், ஏழு மலை தாண்டுனா இளவரசி கிடைப்பான்னு கதைல வருமே..அது மாதிரி தடை பல தாண்டி இந்த நீட்டான ஸ்டில்லை கொண்டு வந்திருக்கேன்..அதுல இருந்தே அம்மணியோட மகத்துவத்தை நாம புரிஞ்சிக்கலாம்..
முத ரெண்டு நடிகைகளும் குழந்தை முகம்னா இது ஆப்போசிட் குரூப்பு..’எங்க என்னை ஒழுங்கா பார்த்திரு பார்ப்போம்’னு சவால் விடுற உருவம் இது..எல்லா பிட் நடிகைகளும் ஏதாவது எஃப்ஃபோர்ட் எடுத்தாத் தான் விசில் கிடைக்கும்..அம்மணி சும்மா வந்து நின்னாலே போதும்..கேரளால மம்முட்டி, மோகன்லால்னு பெரிய பெரிய ஸ்டார்களையே கண்ணுல விரல்விட்டு ஆட்டுன நடிகை..சாதாரண விரலா அது..உரலு-ல்ல..அதான் கடுப்பாகி கேரளாவை விட்டே விரட்டி அடிச்சாங்க அம்மணியை..
ஆரம்ப காலப்படங்கள்ல ரசிகனுக்கு முழு திருப்தி தந்து பெரிய ஆளான அம்மணி, ஃபேமஸ் ஆனதும் ஆஃப் பாயிலோட நிறுத்திக்கிச்சு..ஆனாலும் நம்மாளுக ‘இந்தப் படத்துலயாவ்து இருக்கும்..இருக்கும்’னு நம்பியே அதோட எல்லாப் படங்களையும் ஹிட் ஆக்குனாங்க. ஆனா ஒரு கட்டத்துல அம்மணியோட சீனை விட பிண்ணனி இசை பிரமாதம்-ங்கிற நிலைமை வந்துடுச்சு..அதனால சில விவரமான ரசிகர்கள் படத்தைப் பார்க்காம சங்கீதத்தை மட்டும் ரசிக்கிறதுலயே அதிக சந்தோசம் கிடைக்குன்னு கண்டுபிடிச்சாங்க..அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்சு.
அய்யய்யோ மறுபடியும் வீழ்ச்சி..எழுச்சியா..வேணாம்யா...பதிவை இத்தோட முடிச்சுக்கிறேன்..
நம்ம தமிழ்வாசி பிரகாஷ் மூணு..மூணுன்னு ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருந்தார். >>>>>>
ReplyDeleteஇந்த மாதிரி பதிவு எழுத நான் கூப்பிடலையே... உம்ம பாணியிலேயே எல்லா பதிவும் எழுதிறீரே
போச்சு
ReplyDeleteஜஸ்ட் மிஸ்
ReplyDeleteஇந்தாளு நம்ம கடைக்கு வர்ற கூட்டத்தை கலைக்க சதி பண்றாருன்னு. >>>
ReplyDeleteஉமா சாரி உம்ம மதிச்சு கூப்பிட்டேன் பாரு...ச்சே... ச்சே...ச்சே...
இன்று மழை இல்லைன்னு வானிலை அறிக்கையில் சொல்லிட்டாங்க..அதான் லேட்...
ReplyDeleteகோவை சரளா ஓகே.... குஷ்பு ஏதோ பரவாயில்லை... அதென்ன சகிலா... உம்ம டேஸ்ட்டு நேந்திரம் பழம் தானா?
ReplyDelete@தமிழ்வாசி - Prakash //இந்த மாதிரி பதிவு எழுத நான் கூப்பிடலையே... உம்ம பாணியிலேயே எல்லா பதிவும் எழுதிறீரே// அப்போ அது என்ன பதிவு..ஏதோ 3*3-ன்னு போட்டிருந்தீரே..இரும்..லின்க் கொடுக்குறேன்..
ReplyDelete@M.R //போச்சு//
ReplyDeleteஹா..ஹா..போச்சு..போச்சு.
நடுராத்திரியில் பதிவு எழுதுனா இப்படித்தான் தோணும்.....ஆனாலும் இப்படி ஸ்டில்ஸ் காட்டி ராத்திரியில் பயப்படுத்தகூடாது....
ReplyDelete@தமிழ்வாசி - Prakash //உமா சாரி உம்ம மதிச்சு கூப்பிட்டேன் பாரு...ச்சே... ச்சே...ச்சே...//
ReplyDeleteஹா..ஹா..நம்ம ரேஞ்சுக்கு இல்லையே பிரகாஷ்..
@°•ℛŚℳ●•٠·˙ //இன்று மழை இல்லைன்னு வானிலை அறிக்கையில் சொல்லிட்டாங்க..அதான் லேட்...//
ReplyDeleteஅடடா..நாளைக்காவது மழை வருதான்னு பார்ப்போம்.
ஒரு பொம்பளை ரசிகர்களோட கண்ணை தன் உடம்பில இருந்து மீட்டு, நகைச்சுவையைக் கவனிக்க வைக்கிறது ரொம்பக் கஷ்டமான காரியம்.
ReplyDeleteவார்த்தைகளை தேடி எடுப்பீங்களோ ?
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteகோவை சரளா ஓகே.... குஷ்பு ஏதோ பரவாயில்லை... அதென்ன சகிலா... உம்ம டேஸ்ட்டு நேந்திரம் பழம் தானா?//
அந்த வரிசைல ஒரு பரிணாம வளர்ச்சி ஒளிஞ்சுருக்கிறது தெரியலையா?
கமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்த்துக்கோங்களேன்..>>>>
ReplyDeleteகமல் என்ன ட்ரை பண்ணினார்? என்ன தேறல?
//M.R said...
ReplyDeleteவார்த்தைகளை தேடி எடுப்பீங்களோ ? //
அதுவா வருது பாஸ்..
//
ReplyDeleteகமல் என்ன ட்ரை பண்ணினார்? என்ன தேறல?//
நீங்க நினைக்கற மாதிரி இல்லைய்யா..சரசை கவர்ச்சியா காட்ட ட்ரை பண்ணார் சதிலீலாவதில..அம்புட்டுதேன்.
//
ReplyDelete°•ℛŚℳ●•٠·˙ said...
நடுராத்திரியில் பதிவு எழுதுனா இப்படித்தான் தோணும்.....ஆனாலும் இப்படி ஸ்டில்ஸ் காட்டி ராத்திரியில் பயப்படுத்தகூடாது...//
உங்க பாஷைல பயத்துக்கு வேற அர்த்தமா?
////......அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்சு./////ம்ம்ம் .....ஷகிலாவை வச்சு இப்படியொரு நீண்ட ஆராய்ச்சி பண்ணினதுக்குக்காக பல்கலைகழக விழா நடத்தி பட்டம் விடுரவுங்கோ ஒரு டாகுடறு பட்டம் கொடுங்கப்பா!!!!
ReplyDelete//•ℛŚℳ●•٠·˙ said...
ReplyDelete////......அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்சு./////ம்ம்ம் .....ஷகிலாவை வச்சு இப்படியொரு நீண்ட ஆராய்ச்சி பண்ணினதுக்குக்காக பல்கலைகழக விழா நடத்தி பட்டம் விடுரவுங்கோ ஒரு டாகுடறு பட்டம் கொடுங்கப்பா!!//
மிஸ்டர்.பெர்ஃபெக்ட்டா இருப்பீங்க போலிருக்கே...
ஒரு படத்துல வடிவேலுகிட்ட ‘நானா யோசிச்சேன்’ன்னு சொல்லும்.>>>
ReplyDeleteஅண்ணே... என்ன படம்ணே...
அண்ணே... என்ன படம்ணே...
அண்ணே... என்ன படம்ணே...
அண்ணே... என்ன படம்ணே...
குஷ்பூவுக்கும் எனக்குமான ‘தொடர்பு’ தொடங்குச்சு.>>>>
ReplyDeleteஅடப்பாவமே.... அவ்வளவு தானா? தொடர்பு?
அதோட செகண்ட் இன்னிங்ஸ் ஹீரோக்களைப் பார்த்தாலே அதோட அப்போதைய நிலைமை புரியும்.>>>>
ReplyDeleteகுஸ்பு பத்தி புட்டு புட்டு வச்சிருக்கிங்களே??? டவுட்டு?????
இந்த மூணு நடிகைகள் பத்தி சொல்ல இவருக்கு இப்ப தான் சான்ஸ் கிடைச்சிருக்கு.... சும்மா புகுந்து விளையாடியிருக்காரு
ReplyDeleteவரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteகுஸ்பு பத்தி புட்டு புட்டு வச்சிருக்கிங்களே??? டவுட்டு??//
அந்தளவுக்கு தலைவியை க்ளோஸா வாட்ச் பண்ணியிருக்கேன்..
//இந்த மூணு நடிகைகள் பத்தி சொல்ல இவருக்கு இப்ப தான் சான்ஸ் கிடைச்சிருக்கு.... சும்மா புகுந்து விளையாடியிருக்காரு//
மூணு இல்லை..நீங்க ஏழுன்னு சொல்லி இருந்தாலும் இதே கதை தான்..
//
ReplyDelete°•ℛŚℳ●•٠·˙ said...
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...//
அப்போ பயாலஜி முக்கியம் இல்லையா?
@செங்கோவி
ReplyDeleteஅது நமக்கு அலர்ஜின்ண்ணே....!!!!!படம் வரைந்து பாகம் குறி அப்படி இப்படின்னு...உவ்வே...
//°•ℛŚℳ●•٠·˙ said...
ReplyDelete@செங்கோவி
அது நமக்கு அலர்ஜின்ண்ணே....!!!!!படம் வரைந்து பாகம் குறி அப்படி இப்படின்னு.//
எனக்கும் அப்போ(!) அலர்ஜி தான் தம்பி!
அது நமக்கு அலர்ஜின்ண்ணே....!!!!!படம் வரைந்து பாகம் குறி அப்படி இப்படின்னு.//
ReplyDeleteஎனக்கும் அப்போ(!) அலர்ஜி தான் தம்பி!>>>>
இப்ப அண்ணன் பைப்பிங் இன்ஜினீயர், அதனால அலர்ஜி கிடையாது
என்னது குஸ்புக்கும் உங்களுக்கும் தொடர்பா
ReplyDeleteஅவ்வவ்
கோவை சரளா , குஸ்பு நமக்கும் புடிக்கும் பாஸ்
ReplyDeleteஅப்புறம்
சகிலா யாரு
இங்கிலுசு படத்தில் நடிப்பவன்களா
ரைட்டு ஓகே
ReplyDelete///இது ஆப்போசிட் குரூப்பு..’எங்க என்னை ஒழுங்கா பார்த்திரு பார்ப்போம்’னு சவால் விடுற உருவம் ///////உண்மைதான் சாமியோவ்!!!!
ReplyDeleteநெசமாலுமே ரசித்தான் பாஸ் பதிவை..எழுத்தில கலக்கி இருக்கீங்க..குஷ்பு மேடம்,சகீலா அம்மா ரெண்டு போரையும் அணு அணுவா ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கீங்க!!ஹிஹி
ReplyDeleteசரளா, ஒரு திறமையான நகைசுவை நடிகைதான் மக்கா.....!!!
ReplyDeleteயோவ் குஷ்புக்கு அப்புறமா, நமீதா டிரண்ட் வந்து அதுவும் காலாவதி ஆகிருசிய்யா ஹி ஹி.....
ReplyDeleteஷகீலா கேரளத்துல ஆட்சிக்கு வந்த பின், அதற்க்கு முன்பே ஷகீலா'ன்னு பேர் வச்சிகிட்டவங்க அனுபவிச்ச அவஸ்தை சொல்லிமாளாதுன்னு, மலையாளி நண்பன் சொல்லி புலம்புனான் பாவம்.....
ReplyDeleteபிரகாஷ் இனி யாரையும் தொடர் பதிவு எழுத கூப்பிடமாட்டான் ஹி ஹி பதிவுலகம் தப்பிச்சிது ஹி ஹி...
ReplyDeleteநம்ம வோட்டு கோவை சரளா வுக்கு தான்...தமிழ் மணம் வேலை செய்யலை...
ReplyDeleteNice.,
ReplyDeleteMobilil comment poduvathaal template comment thaan. sorry.
கோவை சரளா - எனக்கும் பிடிக்கும்
ReplyDeleteகுஷ்பூ - என்னவோ போங்கண்ணே!
ஷகீலா - என்ன கொடுமைண்ணே இது??
//‘ இங்க இருக்கேன்’ன்னு நானு தரை டிக்கெட்ல உட்கார்ந்துக்கிட்டு கத்துனதோட, குஷ்பூவுக்கும் எனக்குமான ‘தொடர்பு’ தொடங்குச்சு..//
ReplyDeleteசூப்பர்ணே!
இப்படியே எல்லா நடிகைகளோடையும் உங்களுக்கு 'தொடர்பு' எப்படி ஏற்பட்டிச்சுன்னு ஒரு சூப்பர் பதிவு போடுங்கண்ணே!
//அண்ணாமலை, சிங்கார வேலன்ல வர்ற குஷ்பூவைப் பார்த்துத் தான் ‘கும்முன்னு இருக்கறது’ன்னா என்னன்னு தமிழன் தெரிஞ்சுக்கிட்டான்//
ReplyDeleteஆமாண்ணே! ஆமாண்ணே தமன்னாவ பாத்து சிக்குன்னு இருக்கிறத தெரிஞ்சுக்கிட்ட மாதிரி! ஹி ஹி..!
தமிழன் நிறையத் தெரிஞ்சுக்கிடனும்னுதான் ஒரு சமூகசேவையா ந்டிகைங்களை இருக்குமதி செய்றாங்க இல்ல!
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன் //சகிலா யாரு
ReplyDeleteஇங்கிலுசு படத்தில் நடிப்பவன்களா// இல்லைய்யா..அவங்க ஒரு சமூக சேவகி!
@ரியாஸ் அஹமது //ரைட்டு ஓகே// அவ்ளோ தானா?
ReplyDelete@SP.VR. SUBBAIYA /////இது ஆப்போசிட் குரூப்பு..’எங்க என்னை ஒழுங்கா பார்த்திரு பார்ப்போம்’னு சவால் விடுற உருவம் ///////உண்மைதான் சாமியோவ்!!!!//
ReplyDeleteஐயா நீங்களுமா?
@மைந்தன் சிவா //குஷ்பு மேடம்,சகீலா அம்மா ரெண்டு போரையும் அணு அணுவா ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கீங்க!!//
ReplyDeleteரசிச்சு...சரி! அதென்ன ருசிச்சு? எதுகை மோனைன்னு என்னை வம்புல மாட்டி விட்றாதீங்கய்யா.
@MANO நாஞ்சில் மனோ //யோவ் குஷ்புக்கு அப்புறமா, நமீதா டிரண்ட் வந்து அதுவும் காலாவதி ஆகிருசிய்யா //
ReplyDeleteஎன்ன இருந்தாலும் பழசை மறக்கக்கூடாதுல்லண்ணே..
@Reverie //நம்ம வோட்டு கோவை சரளா வுக்கு தான்..// ஆமாம், அவரு பெஸ்ட் தான்!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! //Mobilil comment poduvathaal template comment thaan. // இல்லேன்னா அண்ணன் பாய்ஞ்சிடுவாரு..ஏன்யா இப்படி அநியாயமா பேசுறீங்க?
ReplyDelete@ஜீ... //ஷகீலா - என்ன கொடுமைண்ணே இது??// திங் பிக்-னு சொல்வாங்கள்ல..அப்படி யோசிச்சு பிடிச்சது அது!
ReplyDelete@ஜீ... //இப்படியே எல்லா நடிகைகளோடையும் உங்களுக்கு 'தொடர்பு' எப்படி ஏற்பட்டிச்சுன்னு ஒரு சூப்பர் பதிவு போடுங்கண்ணே!// தம்பி, ‘செங்கோவி லீலைகள்’னு எழுதலாம்...அப்புறம் நானே சமைச்சு சாப்பிட வேண்டி வருமென்னு யோசிக்கேன்..
ReplyDeleteFOOD said...
ReplyDelete//எந்த மூணு?// அவ்ருக்குத் தேவை ஏதோவொரு மூணு..அம்புட்டு தேன்.
//ஆனாலும், உங்க ரசனையின் மூலம், உங்க வயசச் சொல்லீட்டீங்களே!//
நானே பத்மினி விட்டுப்போச்சே-ன்னு கவலையில இருக்கேன்!!
\\‘இந்தப் படத்துலயாவ்து இருக்கும்..இருக்கும்’னு நம்பியே அதோட எல்லாப் படங்களையும் ஹிட் ஆக்குனாங்க.\\ ஹா...ஹா..ஹா....
ReplyDeleteஎழுத்தில கலக்கி இருக்கீங்க...
ReplyDeleteஅணு அணுவா ரசிச்சுஎழுதி இருக்கீங்க...
அண்ணன் ஹிட் பதிவா போடறாரா? அல்லது போடற பதிவெல்லாம் ஹிட் ஆகிடுதா? டவுட்டு
ReplyDeleteகோவை சரளா...குஷ்பூ..ஷகீலா - ஒரு பார்வை//
ReplyDeleteவணக்கம் மன்மதன், லீலைகளின் மந்திரன்,
தலைப்பே கொஞ்சம் கணகணப்பாக இருக்கே.
அப்போ தான் புரிஞ்சது இந்தாளு நம்ம கடைக்கு வர்ற கூட்டத்தை கலைக்க சதி பண்றாருன்னு. அப்போ எழுதாம விட்டுடலாம்னு பார்த்தா...ஒரு காலத்துல பதிவர் கொட்டைப்புளியைத் தவிர வேற யாருமே நம்மை மனுசனா மதிச்சு தொடர்பதிவுக்குக் கூப்பிடாத கேவலமான நிலைமை ஞாபகத்துக்கு வந்துச்சு. அவருக்குத் தேவை ’மூணு’ தானே-ன்னு துணிஞ்சுட்டேன்://
ReplyDeleteஅவ்....அதுக்காக, இப்புடியெல்லாம் யோசிப்பீங்களா மாப்பு.
.கமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்த்துக்கோங்களேன்.//
ReplyDeleteசதிலீலாவதியில் தேறினதா சொல்லுறாங்களே,
அப்போ அது நெசமில்லையா மாப்பு.
மச்சி, நீங்க சரளா, குஷ்ப்பூவை விட,
ReplyDeleteநம்ம ஷகீயைத் தான் நன்றாக ரசித்து எழுதியிருக்கிறீங்க.
காஞ்சனா சினிமாவுல கோவை சரளா அட்டகாசம் செய்திருக்கிறார்.அவர் பாடி லாங்க்வேஜ்,டயலாக் டெலிவரி செமயாக இருக்கிறது..குஷ்பூ கொஞ்சுவதில் கோல்டு மெடல்..பார்க்கவும் பாண்டிதுரை குஷ்பூ,பிரபு;சகீலா மலையளவு உடம்புல நம்மாளுங்க ஏன் கிறங்கி போறாங்கன்னு தெரியாத ரகசியம்..முகம்தான் காரணமோ
ReplyDeleteநண்பா சின்னவீடு படத்தில் நடித்த பிறகுதான் கோவை சரளாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை அமைந்தது. அந்த படத்தில் இருபது வயது பெண் ஐம்பது வய்துள்ள அம்மாவாக நடித்திருப்பார்.
ReplyDeleteகுஷ்பு மாதிரி தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைத்த நடிகை வேறு யாரும் இல்லை.
இன்றும் ஊருக்கு ஒதுக்குப்புறமான தியேட்டெர்களின் பொழப்பு ஓடுவதற்கு முக்கிய காரணம் ஷகீலாதான்.
//சே.குமார் said...
ReplyDeleteஎழுத்தில கலக்கி இருக்கீங்க...
அணு அணுவா ரசிச்சுஎழுதி இருக்கீங்க...//
அணு அணுவா ரசிச்சுப் படிச்ச குமாருக்கு நன்றி.
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅண்ணன் ஹிட் பதிவா போடறாரா? அல்லது போடற பதிவெல்லாம் ஹிட் ஆகிடுதா? டவுட்டு//
எனக்கும் அதே டவுட்டு தாண்ணே..‘குழந்தைத் தொழிலாளர் கொடுமைகள்’னு ஒரு பதிவு போட்டு உண்மை என்னன்னு கண்டுபிடிச்சிடுவோமா?
நிரூபன் said...
ReplyDelete//தலைப்பே கொஞ்சம் கணகணப்பாக இருக்கே.// தலைப்புக்கே இப்படின்னா.....
//சதிலீலாவதியில் தேறினதா சொல்லுறாங்களே, // அது நம்ம ரேஞ்சுக்கு இல்லை நிரூ..நம்பி ஏமாந்துடாதீங்க.
//மச்சி, நீங்க சரளா, குஷ்ப்பூவை விட, நம்ம ஷகீயைத் தான் நன்றாக ரசித்து எழுதியிருக்கிறீங்க.// அங்க ரசிக்க நிறைய ஸ்பேஸ் இருந்துச்சு மாப்ள.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDelete//காஞ்சனா சினிமாவுல கோவை சரளா அட்டகாசம் செய்திருக்கிறார்.அவர் பாடி லாங்க்வேஜ்,டயலாக் டெலிவரி செமயாக இருக்கிறது.//
ஆமாண்ணே..முனியிலும் கலக்கி இருந்தார்.
//குஷ்பூ கொஞ்சுவதில் கோல்டு மெடல்..பார்க்கவும் பாண்டிதுரை குஷ்பூ,பிரபு // மல்லி-ன்னு எதோ ஒரு பாட்டு வருமே, அதுக்கு முந்தின சீனா?
//சகீலா மலையளவு உடம்புல நம்மாளுங்க ஏன் கிறங்கி போறாங்கன்னு தெரியாத ரகசியம்..முகம்தான் காரணமோ // அப்பாவியா நடிக்க வேண்டியது தான்..ஆனாலும் இது டூ மச்சுண்ணே.
பாலா said...
ReplyDelete//நண்பா சின்னவீடு படத்தில் நடித்த பிறகுதான் கோவை சரளாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை அமைந்தது.//
தகவலுக்கு நன்றி பாலா..எனக்கு சின்னவீடு பற்றி அதிகம் தெரியாது!
//இன்றும் ஊருக்கு ஒதுக்குப்புறமான தியேட்டெர்களின் பொழப்பு ஓடுவதற்கு முக்கிய காரணம் ஷகீலாதான்.// உண்மை பாஸ்..ஒரே படத்தை பேரை மாத்தி மாத்தி ஓட்டுறது தான் பெரிய அநியாயம்..
"நானா யோசிச்சேன் " ....அந்த படம் என்னோட favorite movie..."விரலுக்கேத்த வீக்கம் ".. நான் ஒரு 20 தடவ பாத்திருப்பேன் .. நல்ல family movie...செமையான சீன் நீங்க சொன்னது ...
ReplyDeleteசூப்பருங்கோ..
ReplyDelete//Priya said...
ReplyDelete"நானா யோசிச்சேன் " ....அந்த படம் என்னோட favorite movie..."விரலுக்கேத்த வீக்கம் ".. நான் ஒரு 20 தடவ பாத்திருப்பேன் .. நல்ல family movie...செமையான சீன் நீங்க சொன்னது ...//
மிக்க நன்றி சகோதரி..ரொம்ப நாளா நிறையப்பேர்கிட்ட கேட்டும் கிடைக்கல..நல்ல படம் அது!
// Raazi said...
ReplyDeleteசூப்பருங்கோ...//
நன்றிங்கோ.
here is the youtube link to the kovai sarala comedy
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Nu3U7dnjKFU
ஒரு மூணுதானா?இன்னும் இது போலப் பல மூணு எழுதுங்கள்!
ReplyDelete@தமிழன் //here is the youtube link to the kovai sarala comedy//
ReplyDeleteஹா..ஹா..சூப்பர் பாஸ்..ரொம்ப நன்றி தமிழன்! நானா சிந்திச்சேனா அது...
//சென்னை பித்தன் said...
ReplyDeleteஒரு மூணுதானா?இன்னும் இது போலப் பல மூணு எழுதுங்கள்!//
எல்லாம் உங்க ஆசிர்வாதம் ஐயா.
ஒரு மூணுக்கே ஒரு பதிவா? அப்போ இன்னும் 14 மூணுகள் வர வேண்டி இருக்கே? இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா.........
ReplyDeleteதமிழ்வாசி இனி தொடர்பதிவுக்கு யாரையும் கூப்பிடவே மாட்டாரு, ஏன் இனி தொடர்பதிவே எழுதமாட்டாரு....!
ReplyDelete/////ஏன்னா நம்மாளுக பாட்டி கேரக்டரா இருந்தாலும் ஏதாவது தேறுதான்னு பார்க்குற பார்ட்டிங்க..அதனால ஒரு பொம்பளை ரசிகர்களோட கண்ணை தன் உடம்பில இருந்து மீட்டு, நகைச்சுவையைக் கவனிக்க வைக்கிறது ரொம்பக் கஷ்டமான காரியம். /////
ReplyDeleteஎன்ன ஒரு ஆழமான ஆராய்ச்சி....நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவருண்ணே....!
///////.கமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்த்துக்கோங்களேன்../////
ReplyDeleteஎன்னா டீடெயிலுய்யா......?
///தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteகமலே ட்ரை பண்ணியும் ஒன்னும் தேறலைன்னா பார்த்துக்கோங்களேன்..>>>>
கமல் என்ன ட்ரை பண்ணினார்? என்ன தேறல?
////////
ஆனாலும் தமிழ்வாசி இப்படி அம்மாஞ்சியா இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல......
///////அதுவும் கார்த்திக் அதைத் தொரத்திக்கிட்டு வரும்போது தடுக்கி விழுமே..அந்த சீன்ல விழுந்தவன் தான் இன்னும் எந்திரிக்கலை.//////
ReplyDeleteதியேட்டர்ல எவனாவது ஜொள்ளு பார்ட்டி பக்கத்துல உக்காந்து இருந்தீங்களாண்ணே?
//////ஆனா அந்த முகத்துக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாதது தான் குஷ்பூவோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். கவர்ச்சிக் காட்சிகள்ல உடம்பும், மற்ற காட்சிகள்ல முகமும் குஷ்பூக்கு நல்லா கை கொடுத்துச்சு. ///////
ReplyDeleteஅடடா என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு, எனக்கு மட்டும் பவர் இருந்துச்சு, இப்பவே உங்களை அமேரிக்க ஜனாதிபதியாக்கிட்டுத்தான் மறுவேல பார்ப்பேன்......
///////தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநம்ம தமிழ்வாசி பிரகாஷ் மூணு..மூணுன்னு ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருந்தார். >>>>>>
இந்த மாதிரி பதிவு எழுத நான் கூப்பிடலையே... உம்ம பாணியிலேயே எல்லா பதிவும் எழுதிறீரே
////////
யோவ் தமிழ்வாசி, உம்ம பாணில எழுதத்தான் நீங்க இருக்கீங்களே? அவரு அவர் பாணிலதானே எழுதனும்?
/////அண்ணாமலை, சிங்கார வேலன்ல வர்ற குஷ்பூவைப் பார்த்துத் தான் ‘கும்முன்னு இருக்கறது’ன்னா என்னன்னு தமிழன் தெரிஞ்சுக்கிட்டான். //////
ReplyDeleteஅப்பத்தான் குஷ்பூ இட்லியும் வந்துச்சு.....!
பாத்தீங்களா அமைச்சரே, இவ்வளவு ஆராய்ச்சி செய்தும் குஷ்பூ இட்டலியை விட்டு விட்டீரே..... நாளை வரலாறு தவறாக பேச கூடாது அமைச்சரே...!
////இதோட நல்ல ஸ்டில்லு கிடைக்காம நான் பட்டபாடு அந்த கூகுள் ஆண்டவருக்குத் தான் தெரியும்../////
ReplyDeleteஇப்ப இப்ப நல்ல நடிகைகளுக்கே நல்ல ஸ்டில்லு கெடைக்க மாட்டேங்கிது.... என்னத்த சொல்றது?
//////ஃபேமஸ் ஆனதும் ஆஃப் பாயிலோட நிறுத்திக்கிச்சு..//////
ReplyDeleteஇதுதான் அந்த கோட்வெர்டா..... முடில சாமி.....!
//////ஃபேமஸ் ஆனதும் ஆஃப் பாயிலோட நிறுத்திக்கிச்சு..//////
ReplyDeleteஇதுதான் அந்த கோட்வெர்டா..... முடில சாமி.....!
/////அதனால சில விவரமான ரசிகர்கள் படத்தைப் பார்க்காம சங்கீதத்தை மட்டும் ரசிக்கிறதுலயே அதிக சந்தோசம் கிடைக்குன்னு கண்டுபிடிச்சாங்க..//////
ReplyDeleteஅது நீங்கதானே.... இவ்வளவுதூரம் வந்தாச்சு, இதுக்கு மேல இப்படி கூச்சப்பட்டா எப்படி?
/////அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்சு.//////
ReplyDeleteஷகீலாவின் வீழ்ச்சி.... தமிழனின் எழுச்சி.... போதுமா....?
/////அதுல இருந்து தான் ஷகீலாவோட வீழ்ச்சி தொடங்குச்சு.//////
ReplyDeleteஷகீலாவின் வீழ்ச்சி.... தமிழனின் எழுச்சி.... போதுமா....?
//பாத்தீங்களா அமைச்சரே, இவ்வளவு ஆராய்ச்சி செய்தும் குஷ்பூ இட்டலியை விட்டு விட்டீரே...//
ReplyDeleteஎனக்கு இட்லி பிடிக்காது பாஸ்..
குஷ்பூ அளவுக்கு கிராமம், நகரம் என இரு முனைகளிலும் பெயர் பெற்ற நடிகை சமீப காலத்தில் வேறு யாரும் இல்லை. குஷ்பூவுக்கு பின் வந்த நடிகைகள் நகரங்களைத் தாண்டி பிரபலமாகவில்லை.
ReplyDeleteஅந்த நானா சிந்திச்சேன் வசனம் வர படம் "விரலுக்கேத்த வீக்கம்" , பாருங்க நல்ல படம் தான்
ReplyDelete