Tuesday, August 9, 2011

தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடமா?


தாயி விருமாயி
மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும்
உன் முகமே தெரியுதம்மா

தங்கம்போல் நான் வளர்த்த
தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே
காளைகளும் கதறுதம்மா....

நல்ல இலக்கியம் என்பது நம் சிந்தனையைக் கிளறி நம் அனுபவத்துடன் உரையாடும் தன்மை கொண்டது. அந்த வகையில் வைரமுத்து கிழக்குச்சீமையில் எழுதிய ‘தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடந்தானே’ என்ற வரியைக் கேட்டதும் அதைப் பற்றிய சிந்தனை படர்ந்தது.

தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா? 
எனக்குத் திருமணமான நாளில் என் மனைவியின் வீட்டிற்கு மறுவீடு சென்று விட்டு, என் வீட்டிற்கு கிளம்பினோம்.  என் மனைவி , மாமியார், மச்சினன் அனைவரும் அழுதார்கள். அதற்கு அடுத்த நாளே திரும்ப விருந்துக்கு அங்கே வருவதாக பிளான். ‘எப்படியும் 24 மணி நேரத்தில் திரும்ப இங்கே வந்திடப்போறோம்.அப்புறம் ஏன் இப்படி அழுவுறாங்க? பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம். 

அந்த தருணம் தான் ஒரு பெண் முழுக்கக் தன் பிறந்த வீட்டை விட்டு, புகுந்த வீட்டிற்கு பெட்டி, பாத்திரங்களுடன் கிளம்பும் நேரம்.அதன் பிறகு பிறந்த வீடு என்பது பழைய மாதிரி இல்லை என்பதை கொஞ்ச நாளில் உணர்ந்தேன். 

கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால், என் மனைவியை ஏதேனும் சொல்லக்கூடப் பயந்தார்கள். அந்த வீட்டிற்கும் மனைவிக்குமான பந்தம் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியமானது.

இடையில் நான் விசா எடுத்து இங்கே அழைத்துக்கொள்ளும்வரை அம்மா வீட்டிலேயே அவர் தங்க வேண்டிய நிலை.

வேலை செய்யாமல் தூங்கினால் திட்டும் அம்மா, இப்போது திட்டுவதில்லை. தானே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, சாப்பிட அழைக்கிறார். எதற்கெடுத்தாலும் தன்னுடன் போட்டி போடும் தம்பி, இப்போதெல்லாம் எதுவாக இருந்தாலும் அக்காவின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறான். அப்பாவோ மிகவும் ஜாக்ரதையாக தன்னுடைய பேச்சு, நடவடிக்கை எதுவும் மகளின் புகுந்த வீட்டில் பிரச்சினை ஏற்படுத்தக்கூடாது என்று யோசித்துச் செய்கிறார்/பேசுகிறார்.

இதுவல்ல தன் வீடு.திட்டாத அம்மாவும் சண்டை போடாத தம்பியும் நடமாடும் வீடு தன் வீடல்ல என்று புரிந்தது. வீட்டில் உள்ளோர் இப்படி என்றால் அக்கம்பக்கத்தார், சொந்தபந்தங்கள் பற்றிச் சொல்ல வேண்டாம். ‘அவளுக்கென்ன குவைத்காரி’ என்பதில் தொடங்கி ‘இன்னுமா தாயி கிளம்பலை..ஏதாவது பிரச்சினையா’ என்பது வரை பலதரப்பட்ட பேச்சுகள்.  தான் பல்லாங்குழியும் நொண்டியும் விளையாடிய தெருவுக்கே, தான் அந்நியமாகி விட்டது தெரிந்தது. ஓடியாடி விளையாண்ட வீடும், தெருவும் இனி தனக்குச் சொந்தமல்ல என்றானது.
இங்கு எல்லாமும் மாறிவிட்டது. இனி யாரும் தன்னை பழைய பெண்ணாக நடத்தப்போவதில்லை என்று புரிந்தது. என் மனைவி என்னிடம் ’சீக்கிரம் விசா எடுங்க, சீக்கிரம் அழைத்துக்கொள்ளுங்கள்’ என்று நச்சரித்து இங்கு வந்து சேர்ந்தார்.

வா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.

’இது தான் பெண்ணின் வாழ்க்கை முறை, இது ஒருநாள் நடந்தே தீரும் ‘என்று ஏற்கனவே தெரிந்திருந்ததால், என் மனைவி சீக்கிரமே அந்தக் கவலையில் இருந்து மீண்டார்.

போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.


அவர்கள் அந்த இழப்பை சகித்துக்கொண்டே, தன் புகுந்த வீட்டில் புதிய வாழ்வை துவக்குகிறார்கள். அவ்வாறு புதிய இடத்தில் புதிய வாழ்வைத் துவங்கும் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. சரியான கணவன் அமையாத நிலையில் பிறந்த வீட்டு உரிமையும் போய், புகுந்த வீட்டிலும் நிலைகொள்ள முடியாமல் தவிப்போர் ஏராளம். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேரோடு பிடிங்கி நடப்படும் வேதனையை எதனால் ஈடுகட்ட முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம். 

அண்ணே போய் வரவா
அழுதே போய் வரவா
மண்ணே போய் வரவா
மாமரமே போய் வரவா


அணில்வால் மீசை கொண்ட
அண்ணன் உன்னை விட்டு
புலிவால் மீசை கொண்ட 
புருசனோடு போய் வரவா?


சட்டப்படி ஆம்பிளைக்கு
ஒத்த இடந்தானே!
தவளைக்கும் பொம்பளைக்கும்
ரெட்டை இடந்தானே!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

128 comments:

 1. தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம். //

  சரிதான்.

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி கோகுல்.

  ReplyDelete
 3. புலிவால் மீசை கொண்ட
  புருசனோடு போய் வரவா?

  அப்படியா?

  ReplyDelete
 4. //
  கோகுல் said...
  புலிவால் மீசை கொண்ட
  புருசனோடு போய் வரவா?

  அப்படியா? //

  சிங்கம்ல!

  ReplyDelete
 5. கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//

  ரஃப் & டஃப் ஜீன்ஸ் போட்டிறுந்தீங்களா?

  ReplyDelete
 6. // கோகுல் said...
  கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//

  ரஃப் & டஃப் ஜீன்ஸ் போட்டிறுந்தீங்களா?//

  பொண்ணு பார்க்கப்போகும்போது ஜீன்ஸ் தான் போட்டிருந்தேன்..காத்தோட்டம் இல்லாம எனக்கு அது ரஃபாவும் டஃபாவும் ட தான் இருந்துச்சு..

  ReplyDelete
 7. //நிரூபன் said...
  வணக்கம் மச்சி,//

  வணக்கம் நிரூ..

  ReplyDelete
 8. தாயி விருமாயி
  மனசு மருகுதம்மா
  உழுத புழுதியிலும்
  உன் முகமே தெரியுதம்மா//

  அண்ணனுக்கு தங்கச்சிகளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமெனும் பீலிங்ஸ் வந்து விட்டதோ.

  ReplyDelete
 9. அந்த தருணம் தான் ஒரு பெண் முழுக்கக் தன் பிறந்த வீட்டை விட்டு, புகுந்த வீட்டிற்கு பெட்டி, பாத்திரங்களுடன் கிளம்பும் நேரம்.அதன் பிறகு பிறந்த வீடு என்பது பழைய மாதிரி இல்லை என்பதை கொஞ்ச நாளில் உணர்ந்தேன். //

  தமிழ்ச் சமூதாயத்தில் திருமணமான பின்னர்,தாம் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், இன்னொருவன் கையில் கொடுத்து விட்டோமே, இனிமேல் இவளினைத் தம் பிள்ளைகளோடு சரி சமமாக நடாத்தக் கூடாது, ஊரான் பிள்ளை போன்று தான் வளர்க்க வேண்டும்- நடத்த வேண்டும் எனும் பாரம்பரியம் காலாதி காலமாக இருந்தே வருகிறது.

  ReplyDelete
 10. கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால், என் மனைவியை ஏதேனும் சொல்லக்கூடப் பயந்தார்கள்//

  அண்ணன், மாமா மாமியை மிரட்டியதைப் பெரிய வீரம் என்று சொல்லுறாரு;-)))

  ReplyDelete
 11. தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா? //

  பெண்களின் மனம் மென்மை என்பதால் எப்போதுமே வளைந்து கொடுத்து வாழ முடியும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 12. //நிரூபன் said...

  அண்ணன், மாமா மாமியை மிரட்டியதைப் பெரிய வீரம் என்று சொல்லுறாரு;-)//

  அதுக்குப்பேரு வீரம் இல்லையா..மாப்பிள்ளை முறுக்கு!.....ஹும், அது ஒரு காலம்!

  ReplyDelete
 13. //நிரூபன் said...
  பெண்களின் மனம் மென்மை என்பதால் எப்போதுமே வளைந்து கொடுத்து வாழ முடியும் என்பது என் கருத்து. //

  உண்மை தான் நிரூ..ஆனால் அப்படியும் நிம்மதியாக வாழ விடுகிறார்களா என்றால்........

  ReplyDelete
 14. தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்.//

  அவ்...அப்படீன்னா பெண்களிற்கு எல்லாப் பக்கத்தாலும் பிரச்சினை தானே?

  ReplyDelete
 15. கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு!நன்றி செங்கோவி!நிரூபனுக்கு இதுவெல்லாம் புரியாது!

  ReplyDelete
 16. நல்லதோர் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. அனுபவப்பட்டவர்கள் மூலமாக கருத்துக்கள் நிறைய வரும் எனும் ஆவலில் தற்போது விடை பெறுகின்றேன்.

  ReplyDelete
 17. @ Yoga.s.FR said...
  கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு!நன்றி செங்கோவி!நிரூபனுக்கு இதுவெல்லாம் புரியாது!//

  நான் இன்னும் பக்குவப்படவில்லை, கலியாணம் கட்டவில்லை என்பதை இப்படிப் பப்ளிகுட்டி பண்ணுதல் தகுமா?

  ReplyDelete
 18. //நிரூபன் said...
  நல்லதோர் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க. அனுபவப்பட்டவர்கள் மூலமாக கருத்துக்கள் நிறைய வரும் எனும் ஆவலில் தற்போது விடை பெறுகின்றேன்.//

  நன்றி நிரூ..நீங்க சொன்னமாதிரியே யோகா வந்துட்டார்.

  ReplyDelete
 19. செங்கோவி...ட்ராக் மாத்தீட்டிங்களே...ஆனாலும் தொட்டுட்டீங்க...I mean touch பண்ணீட்டீங்க...

  ReplyDelete
 20. வா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.////எத்தனை உறவுகள்?உயிருடன் இருக்கிறார்களா,இல்லையா?இன்று வரை தெரியாத நிலையில்......................................

  ReplyDelete
 21. //Reverie said...
  செங்கோவி...ட்ராக் மாத்தீட்டிங்களே...//

  அப்பப்போ அதிசயமா நான் நல்ல பதிவும் எழுதுவேன் ரெவரி.

  ReplyDelete
 22. //Reverie said...
  செங்கோவி...ட்ராக் மாத்தீட்டிங்களே...//

  அப்பப்போ அதிசயமா நான் நல்ல பதிவும் எழுதுவேன் ரெவரி.

  ReplyDelete
 23. //
  Yoga.s.FR said...
  வா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.////எத்தனை உறவுகள்?உயிருடன் இருக்கிறார்களா,இல்லையா?இன்று வரை தெரியாத நிலையில்.....................//

  புரிகிறது சார்..சாரி.

  ReplyDelete
 24. ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்கண்ணே, அத்தனையும் உண்மை...!

  ReplyDelete
 25. செங்கோவி said...
  //Yoga.s.FR said...
  கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு!நன்றி செங்கோவி!//

  நன்றி பாஸ்..அனுபவம் நமக்குத் தொடந்து பல பாடங்களைச் சொல்லிகொண்டே இருக்கிறது. அது எளிமையாக கண்முன்னே நிகழ்வதால் தெரிவதில்லை.

  ReplyDelete
 26. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ரொம்ப அனுபவிச்சு எழுதி இருக்கீங்கண்ணே, அத்தனையும் உண்மை...!//

  ஆமாம்ணே..உண்மை தான்.

  ReplyDelete
 27. //////கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால், என் மனைவியை ஏதேனும் சொல்லக்கூடப் பயந்தார்கள்.////////

  அண்ணே பெரிய சண்டியருதேன்....

  ReplyDelete
 28. /////ஓடியாடி விளையாண்ட வீடும், தெருவும் இனி தனக்குச் சொந்தமல்ல சொந்தம் என்றானது.//////

  புதிய கோணத்துல சிந்திச்சு இருக்கீங்க....!

  ReplyDelete
 29. செங்கோவி said...

  //
  Yoga.s.FR said...
  வா என்று அழைக்க உறவற்ற நிலையில் சில வருடங்களுக்கு முன் என் சொந்தமண்ணில் இருந்து என் பிரிவு நிகழ்ந்தது. அதனாலேயே என்னால் என் மனைவியின் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.////எத்தனை உறவுகள்?உயிருடன் இருக்கிறார்களா,இல்லையா?இன்று வரை தெரியாத நிலையில்.....................//

  புரிகிறது சார்..சாரி.§§§§§அதனாலொன்றுமில்லை.விதி வலியதில்லையா?சில வேளைகளில் நினைத்தால் பற்றிக் கொண்டு வரும்!

  ReplyDelete
 30. போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.


  ...... புல்லரிக்க வைத்து விட்ட இடம்..... very touching....

  ReplyDelete
 31. பெண்ணிற்கே உள்ள தவிர்க்கமுடியாத கவலைகளை தவளையோடு ஒப்பிட்டு மலையாக மனதில் ஏற்றிவிட்டீர்கள்... வாழ வரும் பெண்ணை அன்பு மட்டும் செலுத்தி காலத்திற்கும் கவலைகளை மறக்கச்செய்யுங்கள்... அன்பு ஒன்றே இதற்கு மருந்து...

  ReplyDelete
 32. என்ன ஆச்சு? திடீர் என்று இப்படி ஒரு பதிவு.... உங்கள் மனைவி, மைத்துனர், மாமானார், மாமியார் எல்லோரும் உங்கள் பதிவுகள் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களா? ஹி,ஹி,ஹி,ஹி....

  ReplyDelete
 33. பெண்களுக்கு மட்டும் அல்ல

  சம்பாதித்தே ஆகவேண்டும் என்றிருக்கும் நடுத்தர வர்க ஆண்களுக்கும் அதைவிட நிலமை மோசம்

  ReplyDelete
 34. பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம்./////நியாயமான குழப்பம் தான்!எனக்கென்றால் உங்களை நினைத்துத் தான் அழுதிருப்பார்கள் என்றே தோன்றுகிறது!

  ReplyDelete
 35. //Chitra said...
  என்ன ஆச்சு? திடீர் என்று இப்படி ஒரு பதிவு.... உங்கள் மனைவி, மைத்துனர், மாமானார், மாமியார் எல்லோரும் உங்கள் பதிவுகள் வாசிக்க ஆரம்பிச்சிட்டாங்களா? ஹி,ஹி,ஹி,ஹி..//

  அக்கா, பழசை நினைச்சுப்பாருங்க..முன்னொரு காலத்துல வந்த புதுசுல நான் எப்படி அப்பாவியா இருந்தேன்னு ஞாபகம் இல்லையா..

  அப்பப்போ நல்ல பதிவு போட்டு ‘பாவப்பிராயச்சித்தம்’ பண்ணிக்கணும்னு பிராபலப்பதிவர் சங்கத்துல முடிவு பண்ணியிருக்கோம்க்கா.

  ReplyDelete
 36. //மாய உலகம் said...
  பெண்ணிற்கே உள்ள தவிர்க்கமுடியாத கவலைகளை தவளையோடு ஒப்பிட்டு மலையாக மனதில் ஏற்றிவிட்டீர்கள்... வாழ வரும் பெண்ணை அன்பு மட்டும் செலுத்தி காலத்திற்கும் கவலைகளை மறக்கச்செய்யுங்கள்... அன்பு ஒன்றே இதற்கு மருந்து.//

  ஆமாம் மாயா..பதிவின் மறைபொருள் அதுவே.

  ReplyDelete
 37. //Speed Master said...
  பெண்களுக்கு மட்டும் அல்ல

  சம்பாதித்தே ஆகவேண்டும் என்றிருக்கும் நடுத்தர வர்க ஆண்களுக்கும் அதைவிட நிலமை மோசம்//

  மாஸ்டரே இன்னைக்கு வாயைத் திறந்துட்டாரே..

  ReplyDelete
 38. //Yoga.s.FR said...
  பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம்./////நியாயமான குழப்பம் தான்!எனக்கென்றால் உங்களை நினைத்துத் தான் அழுதிருப்பார்கள் என்றே தோன்றுகிறது!//

  மேலோட்டமாக கிண்டல் என்று தோன்றினாலும் அதற்கான கா’ரணங்கள்’ உண்டு..இந்தச் சிறு பெண்ணால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியுமா என்ற கவலையும் இருந்திருக்கலாம்..

  ReplyDelete
 39. ////போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.///////

  ரொம்பச் சரியான வார்த்தைகள், திருமணமான ஆண்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.

  ReplyDelete
 40. //Chitra said...
  .. புல்லரிக்க வைத்து விட்ட இடம்..... very touching.//

  நன்றிக்கா..

  ReplyDelete
 41. ////தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம். ///

  ஆமாண்ணே, நாமாவது குறைந்தபட்சம் நம் வாழ்க்கையில் அந்தக் குறையை போக்க முயல்வோம்....!

  ReplyDelete
 42. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ரொம்பச் சரியான வார்த்தைகள், திருமணமான ஆண்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.//

  நம்மாட்களுக்குத் தெரியும்..ஆனாலும் பெருசா உறைக்கறதில்லை.

  ReplyDelete
 43. தமிழ்மணத்தோட என்னய்யா வம்பு பண்ணினீரு, இப்பிடி கொலையா கொல்லுதே?

  ReplyDelete
 44. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நாமாவது குறைந்தபட்சம் நம் வாழ்க்கையில் அந்தக் குறையை போக்க முயல்வோம்....! //

  கரெக்டாச் சொன்னீங்கண்ணே.

  ReplyDelete
 45. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ரொம்பச் சரியான வார்த்தைகள், திருமணமான ஆண்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.//

  நம்மாட்களுக்குத் தெரியும்..ஆனாலும் பெருசா உறைக்கறதில்லை./////

  நாமதான் நம்ம ஈகோவை பாதிக்கும் எதையும் சீண்ட மாட்டோமே?

  ReplyDelete
 46. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தமிழ்மணத்தோட என்னய்யா வம்பு பண்ணினீரு, இப்பிடி கொலையா கொல்லுதே? //

  ஆமா பாஸ்..அதுவா திடீர்னு திரட்டிக்குது..என்ன நடக்குன்னே புரியலை..ஸ்டில்லு ஒன்னும் சரியில்லாததால ஏத்துக்க மாட்டேங்குதோ?

  ReplyDelete
 47. செங்கோவி,.. க‌ல‌க்க‌ல் ப‌திவு,.. ச‌ல்யூட்

  ReplyDelete
 48. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நாமதான் நம்ம ஈகோவை பாதிக்கும் எதையும் சீண்ட மாட்டோமே? //

  நச்!

  ReplyDelete
 49. ///////செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  தமிழ்மணத்தோட என்னய்யா வம்பு பண்ணினீரு, இப்பிடி கொலையா கொல்லுதே? //

  ஆமா பாஸ்..அதுவா திடீர்னு திரட்டிக்குது..என்ன நடக்குன்னே புரியலை..ஸ்டில்லு ஒன்னும் சரியில்லாததால ஏத்துக்க மாட்டேங்குதோ?
  //////

  எதுக்கும் பதிவுக்கு இடைல நமீதான்னு சேத்துப் பாருங்கண்ணே.....

  ReplyDelete
 50. //jothi said...
  செங்கோவி,.. க‌ல‌க்க‌ல் ப‌திவு,.. ச‌ல்யூட் //

  சல்யூட்டிற்கு நன்றி ஜோ.

  ReplyDelete
 51. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சப்மிட் பண்ணிட்டேன்...//

  ரொம்ப நன்னிண்ணே..என் கண்ணுல தண்ணிண்ணே..

  ReplyDelete
 52. இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, அண்ணன் இப்படி செண்டிமெண்ட்டா பொலம்ப விட்டுட்டாரே?

  ReplyDelete
 53. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, அண்ணன் இப்படி செண்டிமெண்ட்டா பொலம்ப விட்டுட்டாரே?//

  கருங்காலி இங்க ரிலீஸ் ஆகலைண்ணே..சிடில பார்க்கிற படங்களுக்கு(!) விமர்சனம் எழுதறதில்லை..கொள்கை.கொள்கை.

  ReplyDelete
 54. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சப்மிட் பண்ணிட்டேன்...//

  ரொம்ப நன்னிண்ணே..என் கண்ணுல தண்ணிண்ணே..

  ////////

  இதுக்குப் போயி... சரி சரி கண்ண தொடைங்க, சிரிங்க.... ம்ம் இப்ப எப்படி இருக்கு....? (ஆமா தமிழ்வாசி இன்னிக்கு நைசா எஸ்கேப் ஆகிட்டாரே, கருங்காலி படத்துக்கு நைட் ஷோ போயிட்டாரா?)

  ReplyDelete
 55. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா,//

  கருங்காலியை விடுங்க..பஸ்ல அந்த கருங்கல் மோதுச்சா என்னன்னு அடுத்த பார்ட் போடுங்க.

  ReplyDelete
 56. //// செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா, அண்ணன் இப்படி செண்டிமெண்ட்டா பொலம்ப விட்டுட்டாரே?//

  கருங்காலி இங்க ரிலீஸ் ஆகலைண்ணே..சிடில பார்க்கிற படங்களுக்கு(!) விமர்சனம் எழுதறதில்லை..கொள்கை.கொள்கை.
  ////////

  என்னண்ணே இது.... கில்மா படத்துக்கு மட்டும் ரூல்ச கொஞ்சம் லூஸ் பண்ணிக்க கூடாதா? பாவம் தமிழ்வாசி வெயிட் பண்ணி பாத்துட்டு அவரே படத்துக்கு போய்ட்டாரு...!

  ReplyDelete
 57. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //ஆமா தமிழ்வாசி இன்னிக்கு நைசா எஸ்கேப் ஆகிட்டாரே, கருங்காலி படத்துக்கு நைட் ஷோ போயிட்டாரா?//

  சீரியஸ் பதிவுன்னா எஸ் ஆகிடுதாரு..

  ReplyDelete
 58. /////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இன்னிக்கு கருங்காலி படவிமர்சனம் எழுதுவாருன்னு பார்த்தா,//

  கருங்காலியை விடுங்க..பஸ்ல அந்த கருங்கல் மோதுச்சா என்னன்னு அடுத்த பார்ட் போடுங்க.
  ////////

  அடுத்து ப்ளாக்லேயே போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்..... (எழுத கொஞ்சம் மேட்டர் கலக்ட் பண்ண வேண்டி இருக்கு, அதான் லேட்டாவுது, ஹி..ஹி....)

  ReplyDelete
 59. நீங்க வேற தலைவரே நானும் அங்கேதான் வேலை தேடிகிட்டு இருக்கேன்

  கூடியசீக்கிரம் நானும் இதே பதிவ காபி பன்னி போடுவேன்

  ReplyDelete
 60. @Speed Master //நீங்க வேற தலைவரே நானும் அங்கேதான் வேலை தேடிகிட்டு இருக்கேன் //..இன்னும் உட்காரலையா..அடடா.

  //கூடியசீக்கிரம் நானும் இதே பதிவ காபி பன்னி போடுவேன்// யார் யாரோ செய்றாங்க..நீங்களும் செஞ்சாத் தப்பில்லை..செய்ங்கய்யா..செய்ங்க.

  ReplyDelete
 61. //இன்னும் உட்காரலையா

  நீங்க வேற இங்க பத்திகிட்டி எறியுது

  ReplyDelete
 62. செங்கோவி said..இந்தச் சிறு பெண்ணால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியுமா என்ற கவலையும் இருந்திருக்கலாம்.///இருக்கலாம்!அப்படியும் இருக்கலாம்!

  ReplyDelete
 63. கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்..........////அப்படி இருந்த செங்கோவியா இப்படி??????

  ReplyDelete
 64. தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா?////நிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி விடலாமா?

  ReplyDelete
 65. ஒரு கிராமிய பாடல் மூலம் ஒரு இலக்கிய சிந்தனையுடன் பதிவு ...ஆகா சபாஷ் ...பாடல் எழுதிய வைரதுக்கும் பதிவு எழுதிய முத்துக்கும் ..வாழ்த்துக்கள் நன்றி

  ReplyDelete
 66. அது சரி நல்ல பதிவுக்கு ஒட்டு போடாம என்ன இப்படி வெட்டி பேச்சு கேக்குறேன் ...நான் போட்டுவிட்டேன் சகோ தமிழ் மனம் 3

  ReplyDelete
 67. புலிவால் மீசையா? அவ்ளோ நீளமான மீசைக்காரரை பாத்தே ஆகணுமே..

  ReplyDelete
 68. //பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’//
  அப்பப்போ உண்மையை சொல்றீங்களே!

  ReplyDelete
 69. உங்கள் பதிவுகளில் மிகவும் கவர்ந்த பதிவு. நன்றி.

  ReplyDelete
 70. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் அதை நீங்கள் எடுத்து சொல்லியுள்ள விதம் பெண்கள் மீதான நம் மதிப்பைக் கூட்டுவதாக அமைந்துள்ளது.

  ReplyDelete
 71. Romba nalla padhivu. Idhu dhaan pengaloda sogamaana unmai. Pugundha veetu kashtathai vida, porandha veetula urimai pogira sogam, romba kodumayanadhu.

  ReplyDelete
 72. இப்ப தான் வந்தேன்... விரிவான அலசல் பின்னூட்டம் பிறகு...

  இப்போ ஓட்டு மட்டும் மாமு...

  ReplyDelete
 73. அழகாய் நச்சினு சில வரிகள்.சூப்பர்

  அன்புடன்
  k.s.s.Rajh
  from
  நண்பர்கள்

  ReplyDelete
 74. கண்கலங்க வச்சிட்டியே மக்கா.....!!!

  ReplyDelete
 75. நண்பரே!
  உங்களை மாதிரி நானும் முறுக்கோடு நடக்க எண்ணி எல்லை மீறி விட்டேன்.
  என் தவறை பின்னால் திருத்தி நல்ல மருமகனாக நடந்து கொண்டேன்.

  ReplyDelete
 76. இந்த பதிவுக்கு ஆயிரம் ஓட்டு....!!!

  ReplyDelete
 77. அட. அட,, என்னமா யோசிக்கிறீங்க..

  ஒரு பதிவு மூலம் கண்கலங்க வேக்கமுடியும்ன்னு உங்க எழுத்து நிருபிக்குது..

  பாராட்டுகள்..

  ReplyDelete
 78. உங்க நல்லா மனசு புரியாதவங்க இந்த பதிவ படிச்சாவது புரிஞ்சுக்கட்டும் அண்ணன் எவ்ளோ நல்லவர்னு......

  ReplyDelete
 79. @Yoga.s.FR //நிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி விடலாமா?//
  நிரூ மாதிரி என்னையும் கும்மலாம்னு ஐடியாவா..ஆளை விடுங்க சாமி.

  ReplyDelete
 80. @ரியாஸ் அஹமது //பாடல் எழுதிய வைரதுக்கும் பதிவு எழுதிய முத்துக்கும் ..வாழ்த்துக்கள் நன்றி//

  எப்படிய்யா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..

  ReplyDelete
 81. @! சிவகுமார் ! //புலிவால் மீசையா? அவ்ளோ நீளமான மீசைக்காரரை பாத்தே ஆகணுமே..// அது சும்மா உல்லுல்லாயி.

  ReplyDelete
 82. @FOOD//உங்கள் பதிவுகளில் மிகவும் கவர்ந்த பதிவு. நன்றி.// நன்றி சார்.

  ReplyDelete
 83. @Maya//Pugundha veetu kashtathai vida, porandha veetula urimai pogira sogam, romba kodumayanadhu.// உண்மை தான் சகோதரி..கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 84. @தமிழ்வாசி - Prakash //இப்ப தான் வந்தேன்... விரிவான அலசல் பின்னூட்டம் பிறகு... // ரைட்டு.

  ReplyDelete
 85. @Kss.Rajh
  //அழகாய் நச்சினு சில வரிகள்.சூப்பர்// நன்றி பாஸ்..

  //from
  நண்பர்கள்// - அப்படீன்னா என்ன அர்த்தம்?

  ReplyDelete
 86. @சி.பி.செந்தில்குமார் சீரியஸ்னா அண்ணனுக்கு பிடிக்காதே.

  ReplyDelete
 87. @MANO நாஞ்சில் மனோ //இந்த பதிவுக்கு ஆயிரம் ஓட்டு....!!!// கள்ள ஓட்டு போடப் போறீங்களா? அதெல்லாம் தப்புண்ணே.

  ReplyDelete
 88. @உலக சினிமா ரசிகன் //என் தவறை பின்னால் திருத்தி நல்ல மருமகனாக நடந்து கொண்டேன்.// அவங்க அருமை உணர்ந்தாலே எல்லாம் மாறிடும்..

  ReplyDelete
 89. @!* வேடந்தாங்கல் - கருன் *! //ஒரு பதிவு மூலம் கண்கலங்க வேக்கமுடியும்ன்னு உங்க எழுத்து நிருபிக்குது..

  பாராட்டுகள்..//

  நீங்க சொல்றதைப் பார்த்தா இன்னைக்குப் பதிவை படிச்சிட்டீங்க போலிருக்கே.

  ReplyDelete
 90. @Carfire //உங்க நல்லா மனசு புரியாதவங்க இந்த பதிவ படிச்சாவது புரிஞ்சுக்கட்டும் அண்ணன் எவ்ளோ நல்லவர்னு......// உஷ்..அந்த ரகசியம் யாருக்கும் தெரிய வேணாம் ஃபயரு..அப்புறம் ‘நீல்லாம் இப்படி எழுதலாமா’ன்னு பாட்டுப்பாடி ஸ்டில்லே போட விட மாட்டாங்க..அது தேவையா?

  ReplyDelete
 91. "தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்".
  உண்மையான கருத்து..
  நன்றி,
  பிரியா
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 92. எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய நல்ல பதிவு

  ReplyDelete
 93. //போரினாலும், பொருளாதாரக் காரணங்களாலும் தன் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் மக்களின் துயரங்கள் நம் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நிகழ்வு நம் வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் காலங்காலமாய் நடந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றியே நாம் அவர்களுடன் வாழ்கிறோம்.//

  செம்ம டச்சிங் அண்ணே!

  //கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//
  அப்பிடியா அண்ணே! அப்புறம் அத நினச்சா அண்ணிக்கு ஒரே சிரிப்பா இருக்கும்ல! :-)

  ReplyDelete
 94. கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு.

  ReplyDelete
 95. பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம். //
  சேம் ப்ளட்

  ReplyDelete
 96. //Priya said...
  உண்மையான கருத்து..நன்றி,
  பிரியா //

  நன்றி சகோதரி.

  ReplyDelete
 97. ஜீ... said...

  //செம்ம டச்சிங் அண்ணே! // நன்றி தம்பி.

  //கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்//
  அப்பிடியா அண்ணே! அப்புறம் அத நினச்சா அண்ணிக்கு ஒரே சிரிப்பா இருக்கும்ல! :-) //

  அவ்வ்..பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி அண்ணனை கேவலப்படுத்தலாமா..

  ReplyDelete
 98. // 'பரிவை' சே.குமார் said...
  கண்களைக் குளமாக்கிய மற்றுமோர் பகிர்வு.// நன்றி குமார்.

  ReplyDelete
 99. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
  பொண்ணை நினைச்சு அழறாங்களா இல்லே பாவம்னு என்னை நினைச்சு அழறாங்களா’ன்னு அப்போது எனக்கு ஒரே குழப்பம். //
  சேம் ப்ளட் //

  ஆமாண்ணே..ஆமாம்.

  ReplyDelete
 100. >>செங்கோவி said...

  @FOOD//உங்கள் பதிவுகளில் மிகவும் கவர்ந்த பதிவு. நன்றி.// நன்றி சார்.

  ஆஃபீசர் ஆஃபீசர். இப்படி உசுப்பேத்தி அவரை ரூட் மாத்திடாதீங்க

  ReplyDelete
 101. மனசை கனக்க வைத்த பதிவு
  கடைசி பாடல் வரிகள்
  அந்த படத்தை மீண்ட்டும் பாக்க ஆசையை கொடுத்து விட்டது

  ReplyDelete
 102. என்னய்யா ஆச்சி உனக்கு மாப்ள...இப்படி பாச வலையா இருக்கு...இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு!

  ReplyDelete
 103. செங்கோவி said...

  @Yoga.s.FR //நிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி விடலாமா?//
  நிரூ மாதிரி என்னையும் கும்மலாம்னு ஐடியாவா..ஆளை விடுங்க சாமி.§§§§§இதுல என்னங்க இருக்குது?"கும்மாச்சி"ன்னு ஒருத்தர் பதிவு எழுதுறாரு!அவர கும்முறமா,இல்லியே?அவரையே கும்மாதப்போ,செங்கோவி நீங்க,உங்கள கும்முவமா?நிரூபன் கிட்ட பேசிப் பாக்கட்டுமா?

  ReplyDelete
 104. //Yoga.s.FR said...
  நிரூபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்:கண்ணீர் பற்றியது.அது இப்போது
  ஒரு விவாதப் பொருளாகி விட்டது!இதையும் ஒரு தலைப்பாக்கி விவாதப் பொருளாக்கி
  விடலாமா?... நிரூபன் கிட்ட பேசிப் பாக்கட்டுமா? //

  பாஸ்..விவாதப் பொருள்னா என்ன? என்ன செய்வீங்க? அங்க நான் என்ன செய்யணும்?.....நானும் எவ்வளவு நேரம் தான் தெரிஞ்ச மாதிரியே சமாளிக்கிறது..அவ்வ்!

  ReplyDelete
 105. // விக்கியுலகம் said...
  என்னய்யா ஆச்சி உனக்கு மாப்ள...இப்படி பாச வலையா இருக்கு...//

  தெரியலை..திடீர்னு பாசம் பொங்கிடுச்சு மாப்ள..

  ReplyDelete
 106. // "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  மனசை கனக்க வைத்த பதிவு
  கடைசி பாடல் வரிகள்
  அந்த படத்தை மீண்ட்டும் பாக்க ஆசையை கொடுத்து விட்டது //

  நல்ல படம் தான்..மீண்டும் பார்க்கலாம் துஷ்யந்தன்!

  ReplyDelete
 107. செங்கோவி said.....பாஸ்..விவாதப் பொருள்னா என்ன? என்ன செய்வீங்க? அங்க நான் என்ன செய்யணும்?.....நானும் எவ்வளவு நேரம் தான் தெரிஞ்ச மாதிரியே சமாளிக்கிறது..அவ்.....////விவாதப் பொருள்அப்பிடீன்னா.......................அது வந்து.............வீட்டில இருக்கிற "மேசை"அப்பிடீன்னு வச்சுக்குங்களேன்!நாங்க அத,அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேய்வோம்!எப்புடீன்னா,அதை செஞ்ச மரம் எப்புடி வந்திச்சு?அத யாரு வெட்டினா?(மரம் வெட்டி டாக்குட்டர் ராமதாஸ் கிடையாது!)அப்பிடீன்னு விவாதிப்போம்?!நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல!அப்புடியா?கரெக்டு!அப்புடிப் போடு அருவாள!ங்கிறமாதிரி ரிப்ளை குடுத்துகிட்டே இருக்கணும்(வேலை,வெட்டிக்கு போவலாமான்னெல்லாம் கேக்கப்பிடாது!)அம்புட்டுத்தேன்!

  ReplyDelete
 108. இன்னிக்கு சன் டிவி ல 2 .30 க்கு இந்த படம் தான் போட்டாங்க ..உங்க பதிவும் என்னை பாதித்து விட்டது..

  ReplyDelete
 109. கொஞ்சம் ரஃப் & டஃப் மாப்பிள்ளையாக நான் இமேஜை மெயிண்டய்ன் பண்ணியதால்,>>>>

  இந்த தகவலை நாங்க நம்பனுமாக்கும்?

  ReplyDelete
 110. தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம். >>>>

  உண்மை தான் மாமு... செம டச்சிங் வரிகள்

  ReplyDelete
 111. @Yoga.s.FR //நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல!அப்புடியா?கரெக்டு!அப்புடிப் போடு அருவாள!ங்கிறமாதிரி ரிப்ளை குடுத்துகிட்டே இருக்கணும்//

  பாஸ்..இதைத் தானே நான் ஆஃபீஸ்ல டெய்லி பண்ணுதேன்..அப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை!

  ReplyDelete
 112. @கோவை நேரம் //இன்னிக்கு சன் டிவி ல 2 .30 க்கு இந்த படம் தான் போட்டாங்க/

  நல்ல டைமிங்ல தான் நானும் ஃபீல் பண்ணியிருக்கேன் போல..நன்றி!

  ReplyDelete
 113. //தமிழ்வாசி - Prakash said... [Reply]
  உண்மை தான் மாமு... செம டச்சிங் வரிகள்//

  இதுவரை முதல் வடை வாங்கியே பழக்கப்பட்ட தமிழ்வாசி இன்று கடைசி வடை வாங்கும் மர்மம் தான் என்ன....

  ReplyDelete
 114. தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா? ///ஒரு பதிவு மூலம் கண்கலங்க வைக்க முடியும்னு உங்க எழுத்து நிருபிக்குது.வாத்தியாரோட(எம்.ஜி.ஆர்)படகோட்டி படப் பாட்டுக்கே(தரை மேல் பிறக்க வைத்தான்)கண் கலங்கும்!இது வேறு!

  ReplyDelete
 115. இன்னிக்கு செவ்வாக்கிழமை.ஒருத்தரையும் காணம்.வேல அதிகம் போல????????

  ReplyDelete
 116. //Yoga.s.FR said...
  தவளையால் எப்போதும் நீரிலும் நிலத்திலும் வாழ முடியும். பெண்களின் நிலையும் அப்படித்தானா? ///ஒரு பதிவு மூலம் கண்கலங்க வைக்க முடியும்னு உங்க எழுத்து நிருபிக்குது.// நன்றி பாஸ்..

  நேத்து நைட் ஃபீல் பண்ண ஆரம்பிச்சது, நானே மீண்டுட்டேன்..இன்னும் நீங்க மீளலையா..

  //ஒருத்தரையும் காணம்.வேல அதிகம் போல??????//
  எல்லாரும் தூங்கியிருப்பாங்க பாஸ்.

  ReplyDelete
 117. தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்

  ஆண் ஆதிக்கத்திற்கு சவுக்கடி ...

  ReplyDelete
 118. செங்கோவி said...

  @Yoga.s.FR //நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டியதில்ல!அப்புடியா?கரெக்டு!அப்புடிப் போடு அருவாள!ங்கிறமாதிரி ரிப்ளை குடுத்துகிட்டே இருக்கணும்//

  பாஸ்..இதைத் தானே நான் ஆஃபீஸ்ல டெய்லி பண்ணுதேன்..அப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை!§§§§§அப்போ ஆட்டத்த ஆரம்பிச்சுடுங்க!

  ReplyDelete
 119. என்ன ஒரே செண்டிமெண்ட்...

  ReplyDelete
 120. //ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேரோடு பிடிங்கி நடப்படும் வேதனையை எதனால் ஈடுகட்ட முடியும் //
  புதிய உறவுகள் அதை உணர்ந்து நடந்தால் வேதனை குறையும் அல்லவா?

  ReplyDelete
 121. செங்கோவி, இந்த சென்டிமென்டான விஷயமெல்லாம் பழைய காலத்துக்குத்தான் பொருந்தும். இந்த காலத்துக்கல்ல. முன்பு, பெண் பிறந்த வீட்டை விட்டு கணவன் வீட்டிற்குப் போவாள், ஒரு பக்கம் பிரிவுத் துயர், இன்னொருபக்கம் புகுந்த இடத்தில் மாமனார், மாமியார், கொளுந்தனுங்க, கணவனின் சகோதரிகள் என்று [முற்றிலும்] புது உறவுகள் . அந்தக் குடும்பத்தில் நல்லது கேட்டது என்று ஒன்றிப் போக வேண்டும், பிறந்த வீடு இன்னொரு உறவு வீடு மாதிரி, நினைக்க கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா இப்போ ஆண், பெண் இருவருமே படிக்கிறார்கள், வெளியூரில் வேலைக்குச் செல்கிறார்கள், இங்கேயே பெற்றோர்களைப் பிரிய வேண்டி வருகிறது. அப்படியே யாரவது பிடித்த பெண்/ஆணுடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுகிறார்கள். மேலும், தற்போது பையன்களும் திருமனதுக்கப்புரம் தனிக் குடித்தனம் போய் விடுகிறார்கள். பெற்றோர்களுடன் இருப்பதையும் காண்பதே அரிதாகி வருகிறது. ஆக ஆணோ பெண்ணோ [பறவைகள், பசுக்கள் போல] இறைக்கை முளைத்ததும் பறந்து போய் விடுகின்றன. [இது, அந்தப் பெண்ணின் குடும்பப் பிரிவை விட நெஞ்சுக்கு அதிகம் பாரமான விஷயமாகப் படுகிறதே!!]

  ReplyDelete
 122. // FARHAN said...
  தவளைக்குக்கூட நினைத்தால் நீரிலும் நிலத்திலும் வாழும் உரிமை உண்டு. நம் பெண்களுக்கு அந்த உரிமையும் இல்லை என்பதே நிதர்சனம்

  ஆண் ஆதிக்கத்திற்கு சவுக்கடி ..//

  இதுல எங்கய்யா ஆணாதிக்கம் வந்துச்சு?

  ReplyDelete
 123. //Amutha Krishna said...
  என்ன ஒரே செண்டிமெண்ட்...//

  திடீரென்று ஃபீல் ஆகிவிட்டேன்..

  ReplyDelete
 124. //
  சென்னை பித்தன் said...
  //ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேரோடு பிடிங்கி நடப்படும் வேதனையை எதனால் ஈடுகட்ட முடியும் //
  புதிய உறவுகள் அதை உணர்ந்து நடந்தால் வேதனை குறையும் அல்லவா?//

  ஆமாம் ஐயா..ஆமாம்!

  ReplyDelete
 125. //Jayadev Das said...
  செங்கோவி, இந்த சென்டிமென்டான விஷயமெல்லாம் பழைய காலத்துக்குத்தான் பொருந்தும்.//

  இனி வரும் தலைமுறை அதை எளிதாக எடுத்துக்கொள்ளலாம்..நாங்கள் அப்படி எடுத்துக்கொள்ளவில்லை..

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.