அடுப்பில் பால் கொதிப்பதையே பார்த்தபடி நின்றிருந்தாள் சுப்புத்தாய்.
‘தாயீ”
வாசலில் இருந்து சங்கையாவின் குரல் கேட்டது.
“சின்னையா, திண்ணைல ஒக்காருங்க. வாரேன்” என்றாள்.
வயதானதால் வந்துவிட்ட தடுமாற்றத்தை தடுக்க வைத்திருக்கும் கம்பை திண்ணை ஓரமாகச் சாய்த்து வைத்து விட்டு உட்கார்ந்தார் சங்கையா.
‘மணி நாலாயிடுச்சா..மனுசன் கரெக்டா வந்திடுதாரே..பாவம் அவருக்கும் வேற போக்கிடம் ஏது..பிள்ளைக ரெண்டும் வெளிநாடு போறேன்னு போச்சுக. இப்போ என்ன ஆச்சோ தெரியல..இங்க மட்டும் என்ன வாழுதாம்..எம்புருசனும் தான் போனாரு..ஒரு தகவல் இல்லியே..அதை நெனைச்சாலே பதறுது’ என்று யோசித்தபடியே காஃபியை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
அந்த கிராமத்துத் தெருவில் வெயில் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்தது.
“இந்தாரும்..”
“ஏந்தாயி, முருகேசனை எங்க?”
“அவனா..இன்னிக்கு எளவட்டப் பயகல்லாம் குத்தாலம் டூர் போயிருக்காகல்ல..அவனும் அடம்பிடிச்சுப் போயிருக்கான்”
“ அப்படியெல்லாம் அனுப்பாத தாயி..ஒனக்கு இருக்குற ஒரே ஆறுதல் இப்போ அவன் தான்.”
“என்ன சின்னய்யா இப்படிச் சொல்லுதீக..அவுக எங்க இருந்தாலும் என்னை மறக்க மாட்டாக..வந்திடுவாக” சுப்புத்தாயின் கண் கலங்கியது. தப்பான பேச்சை எடுத்துவிட்டோம் என்று சங்கையாவிற்குப் புரிந்தது.
பத்து வருடங்களுக்கு முன் ஒரு ஏஜெண்ட் மூலமாக சுவீசே நாட்டிற்கு சம்பாதிக்கப் போனான் சுப்புத்தாயின் புருசன் கருப்பசாமி. அதன்பிறகு அவனைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
அடுத்த வருடமே சங்கையாவின் இரண்டு மகன்களும், இன்னும் மூன்று பேரும் யார் பேச்சையும் கேளாமல் சுவீசே கிள்மபிப் போனார்கள். அதன்பிறகு அவர்களிடம் இருந்தும் ஒரு தகவலும் இல்லை.
சங்கையா பேச்சை மாற்றினார்.
“இந்த எம்சிஆரு தனியா கட்சி ஆரம்பிக்கப்போறாராம்ல..ரேடியோல செய்தி கேட்டயா?”
“ஆமா..நல்ல மனுசன்..வரட்டும்..வரட்டும்” என்று கண்ணைத் துடைத்துக்கொண்டாள் சுப்புத்தாய்.
”தேவை இல்லாம கலைங்கரு அவரை பெரிய ஆளாக்கிப்புட்டாரு”
“அவரு ஏற்கனவே பெரிய ஆளு தான் சின்னய்யா”
சங்கையா சிரித்துக்கொண்டார். எம்ஜிஆர் பற்றிய பேச்சு எடுத்தாலே சுப்புத்தாயிடம் ஒரு குழந்தைத்தனம் வந்து விடும்.
'நல்ல புள்ள..கருப்பன் தான் என்ன ஆனான்னு தெரியலை..பாவம்’ என்று சங்கையா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, தெருவில் சலசலப்பு கேட்டது. மூலை வீட்டு லட்சுமி அலறியபடி ஊர் எல்லையைப் பார்த்து ஓடினாள்.
”எய்யா..என்ன ஆச்சு?” பதறியபடியே சுப்புத்தாய் ஓடிய ஒருவனைக் கேட்டாள்.
“ஏத்தா..நம்ம பசங்க போன லாரி மேல பஸ் மோதிடுச்சாம் முக்கு ரோட்டுக்கிட்ட..ஓடியா”
“அய்யோ..எம்புள்ள” பெரிய அலறல் சுப்புத்தாயிடம் இருந்து எழுந்தது.
அவளும் எழுந்து ஓட ஆரம்பித்தாள்.
மகனுக்கு காய்ச்சல் அடிக்கிறதா என்று அவள் பலமுறை தொட்டுப் பார்த்ததுண்டு. வயிறு நிறைந்ததா என்றும் தொட்டுப் பார்த்ததுண்டு. சாலையோரம் வீசப்பட்டிருந்த மகனின் நெஞ்சில் கை வைத்து அவனுக்கு துடிப்பு இருக்கிறதா என்று தொட்டுப்பார்க்கும் கொடிய நிலை அவளுக்கு இன்று வந்துசேர்ந்தது.
“அய்யோ...என் வம்சம் போச்சே” என்ற கதறல் அடுத்த நொடியில் அவளிடம் இருந்து எழுந்தது. எல்லாப் பக்கமும் மரண ஓலங்கள். அந்த லாரியின் நடுவில் பஸ் புகுந்திருந்தது. அடி பட்டோர் ரண வேதனையில் துடித்தபடி இருந்தனர். உயிரற்ற உடல்களை உறவினர்கூட்டம் சூழ்ந்து அழுதுகொண்டிருந்தது. சுற்றிலும் உடல் உறுப்புகள் சிதறிக்கிடந்தன.
சுப்புத்தாய் நடை பிணமானாள். உடன் இருந்த ஒரு உறவையும் பலி கொடுத்த துக்கத்தை அவளால் தாங்க முடியவில்லை. அடுத்த வீட்டில் இருந்தோரே கடந்த ஒருவாரமாக அவளுக்குச் சாப்பாடு வலுக்காட்டாயமாக கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சங்கையா திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார்.
திடீரென்று கார் ஒன்று தெருவின் முனையில் தெரிந்தது. ’நம்ம ஊருக்கு பிளசர்ல யாரு வாரா’ என்று சங்கையா பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கார் சுப்புத்தா வீட்டு வாசலில் நின்றது. காரில் இருந்து சுப்புத்தாயின் புருசன் கருப்பசாமி இறங்கினான்.
“தாயீ..யாரு வந்திருக்கா பாரு...ஒம்புருசன் கருப்பன் வந்துட்டான்” என்று கூவினார் சங்கையா.
உள்ளே இருந்து ஓடி வந்தாள் சுப்புத்தாய்.
“சாமீ.. வந்துட்டீகளா?” என்று கேட்டவாறே மயங்கிச் சரிந்தாள்.
மகனின் இழப்பில் இருந்து சீக்கிரமே மீண்டான் கருப்பசாமி. சுப்புத்தாயின் நிலை தான் மோசமாக இருந்தது. அவளுக்கு மகன் வீட்டில் நடமாடியதே எப்பொதும் கண்ணுக்குத் தெரிந்தது.
“வாம்மா..நாம போய் கொல தெய்வத்தை கும்பிட்டுட்டு வரலாம்” என்றான் கருப்பசாமி.
“சாமியா..அப்படி ஒன்னு இருக்கா? இருந்த ஒரு புள்ளயையும் பறிச்சுட்டு நிக்கறதுக்குப் பேரு சாமியா?” விரக்தியும் கோபமுமாகக் கேட்டாள் சுப்புத்தாய்.
“சரி..வீட்லயே இருந்தா உனக்கு கஷ்டமா இருக்கும். நான் சொல்றதைக் கேளு. சும்மா போய்ட்டு வருவோம்”
அரை மனதுடன் கிளம்பினாள் சுப்புத்தாய். அவர்களின் குலதெய்வம் பக்கத்து ஊரில் மலைமேல் பத்திரமாக இருந்தது. சுப்புத்தாய் கோவில் வராண்டாவிலேயே நின்றுகொண்டு, உள்ளே போக மறுத்துவிட்டாள்.
கருப்பசாமி போய் கும்பிட்டுவிட்டு, கையில் திருநீறு, குங்குமத்துடன் திரும்பி வந்து உட்கார்ந்தான். மலைமேல் மாலைநேரக் காற்று இதமாக வீசியது.
“நான் சுவீசே போய்ட்டு திரும்பி வரலேங்கவும் என்ன நினைச்சே?”
“எப்படியும் வந்திருவீகன்னு நம்புனேன். ஆனாலும் பயம்மாத் தான் இருந்துச்சு. ஒவ்வொரு நாளும் பொட்டு வச்சிக்கும்போது...அய்யோ, கோயில்ல வச்சு அதைப் பேச வேண்டாம்..எப்பிடி அங்க கஷ்டப்படுதீகளோ, என்ன ஆச்சோன்னு தினமும் யோசனை தான்”
“லெட்டர் எதுவும் போடாததுக்கு என்னை மன்னிச்சிடு தாயி..ஏன் நான் கஷ்டப்படுவேன்னு நினைச்சே?”
“இதென்ன கேள்வி..போன மனுசன்கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லேன்னா எப்படி இருக்கும். ஒங்களுக்குப் பின்னால கிளம்பின சங்கையா பசங்ககிட்ட இருந்தும் ஒரு தகவலும் இல்லை..மனுசிக்குப் பயமா இருக்காதா?”
“அங்கே நாங்க எப்படி இருந்தோம், தெரியுமா? ஒரு ஹோட்டல்ல தான் வேலை எங்களுக்கு. மூணு வேளையும் நல்ல சாப்பாடு. பசின்னா என்னன்னு அந்த பத்து வருசத்துல தெரியல..நல்ல காசு. உண்மையைச் சொல்லணும்னா குடி, கூத்தின்னு தான் இருந்தோம். ஊரு நினைப்பே கொஞ்சநாள்ல மறந்து போச்சு. அப்பப்போ ஒன் ஞாபகம் வரும். ஆனாலும் அதைவிட்டு வர முடியலை..அந்தப் பசங்க இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு, ரொம்ப ஜாலியா அங்க இருக்காங்க. நாளையை பத்துன கவலையே இல்லை”
சுப்புத்தாய்க்கு கோபம் வந்தது. ஆனாலும் சண்டை போட வலுவின்றி பேசாமல் உட்கார்ந்திருந்தாள். கருப்பசாமி தொடர்ந்தான்.
“முருகேசன் போனது நம்மளுக்கு பெரிய இழப்பு தான். ஆனா அவனுக்கு அதனால கஷ்டம் ஒன்னும் இல்லேன்னு நினைக்கேன்”
“என்ன பேசுதீக..?”
“முருகேசன் இப்போ எங்க இருப்பான்? என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?..சொல்லு.”
“அது எப்படி நமக்குத் தெரியும்?”
“அப்புறம் ஏன் கவலைப் படறோம்?”
“என்னங்க கிறுக்குத்தனமாப் பேசுதீங்க...?”
“நான் சொல்றதை நல்லா யோசிச்சுப்பாரு. நான் சுவீசே போனப்புறம் என் நிலைமை என்னன்னு தெரியாம கஷ்டப்பட்டே. இப்போ நான் அங்க எப்படிச் சந்தோசமா இருந்தேன்னு சொல்லிட்டேன். அதே மாதிரி இப்போ முருகெசன் நிலைமை என்னன்னு தெரியலை இல்லியா..அப்புறம் எதை வச்சு அவனுக்கு கெடுதல் நடந்துட்டதா அழறோம்?”
சுப்புத்தாய் குழப்பத்துடன் பார்த்தாள்.
“சுப்பு, இங்க நாம என்ன செய்றோம்? பசிக்குது..சாப்பிடறோம்..திரும்பப் பசிக்கத் தான் செய்யுது. பிள்ளையே போனாலும் சாப்பிடாம இருக்க முடியுதா? நாம இங்க வாழுறது சுதந்திரமான வாழ்க்கையா? நம்ம கட்டுப்பாட்டுல இங்க என்ன இருக்கு? நாமல்லாம் அடிமைகள்..வயித்துக்கு அடிமைகள்..சுதந்திரம் இல்லாததுக்குப் பேரு வாழ்க்கையா? அப்புறம் எதை வச்சு இது மேலான வாழ்க்கைன்னும், செத்தப்புறம் மோசமான இடத்துக்குப் போயிட்டதாவும் நாம நினைக்கிறோம்?
ஒருவேளை நாம செத்துப் போற இடம் சுவீசே மாதிரியோ, சொர்க்கம்னு சொல்லுதாங்களே அது மாதிரியோ இருக்கலாம் இல்லியா? நாம அங்க போகும்போது நம்ம புள்ள ஓடியாந்து ‘அப்பாடி..வந்துட்டீகளா..உங்களை நினைச்சுத்தான் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். இப்படி அநியாயமா அந்த உலகத்துல தனியா விட்டுட்டு வந்துட்டமேன்னு’ நம்மளைப் பார்த்து கேட்கலாம் இல்லியா..நாம இப்போ அழறதே அப்போ வேடிக்கை ஆகிடும், இல்லியா?”
“நீங்க சொல்றது பாதி புரியல எனக்கு”
“மரணம் மோசமான விஷயம்னு எதை வச்சு நாம முடிவுக்கு வர்றோம்? இதை விட நல்ல வாழ்க்கையா அது ஏன் இருக்கக்கூடாது? பசியில்லாத, பஞ்சம் இல்லாத, சூதுவாது இல்லாத சுத்தமான உலகமா அது ஏன் இருக்கக்கூடாது? நமக்கு விதிக்கப்பட்ட தண்டனையா இது ஏன் இருக்கக்கூடாது? இதிலிருந்து விடுதலை ஆகறவங்களைப் பார்த்து, அடிமைகள் நாம அழறது வேடிக்கை இல்லையா?”
கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் சுப்புத்தாய்.
“சரி..என்னமோ சொல்லுதீக..விடுங்க அந்தப் பேச்சை.” என்றாள் சுப்புத்தாய்.
கோவில்மணி அடித்தது. கன்னத்தில் போட்டுகொண்டாள்!
முதன் முதலாக
ReplyDeleteபடிச்சுட்டு வரேன்!
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said... [Reply]
ReplyDeleteமுதன் முதலாக//
வருக!
//Yoga.s.FR said...
ReplyDeleteபடிச்சுட்டு வரேன்!//
ஓகே பாஸ்.
பேய் வர நேரத்துல பதிவு போடறீங்களே பிரகாஷ் வருவாருன்னு தெரிஞ்சு தானே
ReplyDeleteஎன்னை சிறுகதை எழுதச் சொல்லி மின்னஞ்சலில் உசுப்பேற்றிய அந்த மூன்று பேருக்கு நன்றி!
ReplyDelete//
ReplyDeleteசசிகுமார் said...
பேய் வர நேரத்துல பதிவு போடறீங்களே பிரகாஷ் வருவாருன்னு தெரிஞ்சு தானே//
ஆமாம் சசி..நீங்களும் அவர்கூட சேர்ந்துட்ட மாதிரி தெரியுதே.
அருமையான சிறுகதை
ReplyDeleteவாழ்க்கைன்னா இது தான்னு புரிய வச்சிருக்கீங்க.சுப்பு மாதிரி எத்தன தாய்ங்களோ?
ReplyDelete“நீங்க சொல்றது பாதி புரியல எனக்கு”
ReplyDeleteமகனை இழந்த தாயின் கவலை... சோகம் தவழ்கிறது...
ReplyDelete//மரணம் மோசமான விஷயம்னு எதை வச்சு நாம முடிவுக்கு வர்றோம்? இதை விட நல்ல வாழ்க்கையா அது ஏன் இருக்கக்கூடாது? பசியில்லாத, பஞ்சம் இல்லாத, சூதுவாது இல்லாத சுத்தமான உலகமா அது ஏன் இருக்கக்கூடாது? நமக்கு விதிக்கப்பட்ட தண்டனையா இது ஏன் இருக்கக்கூடாது? இதிலிருந்து விடுதலை ஆகறவங்களைப் பார்த்து, அடிமைகள் நாம அழறது வேடிக்கை இல்லையா?”//
ReplyDeleteஇப்படியும் இருக்குமோ யோசிக்க வேண்டிய விஷயம்....
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅருமையான சிறுகதை//
ஓகே பிரகாஷ்.
அவளின் புருசன் சொல்றது எனக்கும் புரியல... ஆனா புரிஞ்ச மாதிரியும் இருக்கு.
ReplyDelete//
ReplyDeleteYoga.s.FR said...
வாழ்க்கைன்னா இது தான்னு புரிய வச்சிருக்கீங்க.சுப்பு மாதிரி எத்தன தாய்ங்களோ?//
நீங்கள் குறிப்பிடும் ‘அவர்களின்’ வேதனை பற்றிய சிந்தனையே இந்தக் கதை..
சூடான செய்தி:
ReplyDeleteவாழ்க்கையில் நிலையாமை என்பது தான் நிலையானது, என்று தன்னுடைய சிறுகதை மூலம் நிலை நிறுத்திய செங்கோவிக்கு இந்த வருட சாகித்ய அகடமி விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோவி said...
ReplyDeleteஎன்னை சிறுகதை எழுதச் சொல்லி மின்னஞ்சலில் உசுப்பேற்றிய அந்த மூன்று பேருக்கு நன்றி!//// நல்ல வேள,நாலு பேரு இல்ல!
//பாரத்... பாரதி... said...
ReplyDelete“நீங்க சொல்றது பாதி புரியல எனக்கு”//
அதுதானே வாழ்க்கை பாரதி..
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteசூடான செய்தி:
வாழ்க்கையில் நிலையாமை என்பது தான் நிலையானது, என்று தன்னுடைய சிறுகதை மூலம் நிலை நிறுத்திய செங்கோவிக்கு இந்த வருட சாகித்ய அகடமி விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
நடுராத்திரி வரும்போதே நினைச்சேன்..இவரும் தமிழ்வாசி மாதிரி ஆயிடுவாரோன்னு...அப்படியே ஆகிட்டீங்க.
பெண் என்பவள் அன்பு என்னும் உணர்வுபூர்வமாகவும், ஆண்கள் எப்போதும் அறிவுபூர்வமாகவும் சிந்திப்பவர்கள் என்பதையும் காட்டுகிறது.
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...
என்னை சிறுகதை எழுதச் சொல்லி மின்னஞ்சலில் உசுப்பேற்றிய அந்த மூன்று பேருக்கு நன்றி!//// நல்ல வேள,நாலு பேரு இல்ல!
//
நாலு பேரு தான்.நாலாவது நான் தான்!
செங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
வாழ்க்கைன்னா இது தான்னு புரிய வச்சிருக்கீங்க.சுப்பு மாதிரி எத்தன தாய்ங்களோ?//
நீங்கள் குறிப்பிடும் ‘அவர்களின்’ வேதனை பற்றிய சிந்தனையே இந்தக் கதை..§§§எத்தனையோ எழுதிட்டிங்க,எங்களோட துன்பம் தெரிஞ்சு அப்பப்போ ஆசுவாசப்படுத்துறிங்க.ரொம்ப நன்றிங்க ஒங்களுக்கு.
செங்கோவி said...
ReplyDelete//பாரத்... பாரதி... said...
சூடான செய்தி:
//வாழ்க்கையில் நிலையாமை என்பது தான் நிலையானது, என்று தன்னுடைய சிறுகதை மூலம் நிலை நிறுத்திய செங்கோவிக்கு இந்த வருட சாகித்ய அகடமி விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
நடுராத்திரி வரும்போதே நினைச்சேன்..இவரும் தமிழ்வாசி மாதிரி ஆயிடுவாரோன்னு...அப்படியே ஆகிட்டீங்க//
என்ன பண்றது நம்ம இனத்துல இருக்கிரவரு ஒரு பதிவு போட்டா நாம தானே கமென்ட் போடணும்...
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅவளின் புருசன் சொல்றது எனக்கும் புரியல... ஆனா புரிஞ்ச மாதிரியும் இருக்கு.//
முதல்ல நேத்து போட்ட பதிவை அழிங்க..அப்போத் தான் புரியும்.
“மரணம் மோசமான விஷயம்னு எதை வச்சு நாம முடிவுக்கு வர்றோம்? இதை விட நல்ல வாழ்க்கையா அது ஏன் இருக்கக்கூடாது? பசியில்லாத, பஞ்சம் இல்லாத, சூதுவாது இல்லாத சுத்தமான உலகமா அது ஏன் இருக்கக்கூடாது? நமக்கு விதிக்கப்பட்ட தண்டனையா இது ஏன் இருக்கக்கூடாது? இதிலிருந்து விடுதலை ஆகறவங்களைப் பார்த்து, அடிமைகள் நாம அழறது வேடிக்கை இல்லையா?”>>>
ReplyDeleteஎப்படிஎல்லாம் தத்துவம் சொல்றிங்க...
//என்னை சிறுகதை எழுதச் சொல்லி மின்னஞ்சலில் உசுப்பேற்றிய அந்த மூன்று பேருக்கு நன்றி!//
ReplyDeleteஅதுல ஒருத்தர் தமிழ்வாசி..., மற்றொருவர் வந்தே மாதரம் சசி... அப்படித்தானே (என்ன ஒரு வில்லத்தனம் இவங்களுக்கு?)
யாருப்பா அந்த மூணாவது புண்ணியவான்?
செங்கோவி said...நாலு பேரு தான்.நாலாவது நான் தான்!//// நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா.........................................
ReplyDelete//Yoga.s.FR said...
ReplyDeleteசெங்கோவி said...
//Yoga.s.FR said...
§§§எத்தனையோ எழுதிட்டிங்க,எங்களோட துன்பம் தெரிஞ்சு அப்பப்போ ஆசுவாசப்படுத்துறிங்க.ரொம்ப நன்றிங்க ஒங்களுக்கு.//
இதன் மூலம் என்னையே நான் ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன் என்பதே உண்மை..சரி, விடுங்க.
பாரத்... பாரதி... said...
ReplyDelete//என்னை சிறுகதை எழுதச் சொல்லி மின்னஞ்சலில் உசுப்பேற்றிய அந்த மூன்று பேருக்கு நன்றி!//
அதுல ஒருத்தர் தமிழ்வாசி..., மற்றொருவர் வந்தே மாதரம் சசி... அப்படித்தானே (என்ன ஒரு வில்லத்தனம் இவங்களுக்கு?)
யாருப்பா அந்த மூணாவது புண்ணியவான்?>>>
அந்த புண்ணியவான் ரோஜா பூந்தோட்டத்தில் இருக்காராம்
// பாரத்... பாரதி... said...
ReplyDelete//என்னை சிறுகதை எழுதச் சொல்லி மின்னஞ்சலில் உசுப்பேற்றிய அந்த மூன்று பேருக்கு நன்றி!//
அதுல ஒருத்தர் தமிழ்வாசி..., மற்றொருவர் வந்தே மாதரம் சசி... அப்படித்தானே (என்ன ஒரு வில்லத்தனம் இவங்களுக்கு?)//
என்ன ஏம்பா கோத்து விடுற நான் அவன் இல்லை
நாமல்லாம் அடிமைகள்..வயித்துக்கு அடிமைகள்..சுதந்திரம் இல்லாததுக்குப் பேரு வாழ்க்கையா?
ReplyDelete//சாமியா..அப்படி ஒன்னு இருக்கா? இருந்த ஒரு புள்ளயையும் பறிச்சுட்டு நிக்கறதுக்குப் பேரு சாமியா?//
ReplyDeleteநீங்க நாத்திகரா # காரணமில்லாம மாட்டி விடுவோர் சங்கம்
//சசிகுமார் said...
ReplyDelete//சாமியா..அப்படி ஒன்னு இருக்கா? இருந்த ஒரு புள்ளயையும் பறிச்சுட்டு நிக்கறதுக்குப் பேரு சாமியா?//
நீங்க நாத்திகரா # காரணமில்லாம மாட்டி விடுவோர் சங்கம்//
நானே எப்பவாவது தான் நல்ல புள்ளை ஆகுறேன்..அது பிடிக்கலியா சாமி?
தமிழ் மணத்தில் இணைத்து, முதல் வாக்கு...
ReplyDelete//பாரத்... பாரதி... said...
ReplyDeleteதமிழ் மணத்தில் இணைத்து, முதல் வாக்கு...//
நன்றிய்யா..நான் இணைச்சா மட்டும் ஏன் இணைய மாட்டேங்குது?
//செங்கோவி said...
ReplyDelete//பாரத்... பாரதி... said...
தமிழ் மணத்தில் இணைத்து, முதல் வாக்கு...//
நன்றிய்யா..நான் இணைச்சா மட்டும் ஏன் இணைய மாட்டேங்குது//
நீங்க தூரமா இருக்கீங்க அதனால உங்களுக்கு லேட் ஆகுது நாங்க பக்கத்துலயே இருக்கோம் அதனால் உடனே இணையுது
//சசிகுமார் said...
ReplyDelete//செங்கோவி said...
//பாரத்... பாரதி... said...
தமிழ் மணத்தில் இணைத்து, முதல் வாக்கு...//
நன்றிய்யா..நான் இணைச்சா மட்டும் ஏன் இணைய மாட்டேங்குது//
நீங்க தூரமா இருக்கீங்க அதனால உங்களுக்கு லேட் ஆகுது நாங்க பக்கத்துலயே இருக்கோம் அதனால் உடனே இணையுது//
இதுக்குத்தான்யா டெக்னிகல் பெர்சன் வேணும்கிறது..என்ன ஒரு விளக்கம்!!
//இதுக்குத்தான்யா டெக்னிகல் பெர்சன் வேணும்கிறது..என்ன ஒரு விளக்கம்!!//
ReplyDeleteநீங்களாவது ஒத்துக்குரீங்களே நன்றி சார்.
பயபுள்ள எவ்ளோ சொன்னாலும் ஒதுக்க மாட்டேங்குது
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteபெண் என்பவள் அன்பு என்னும் உணர்வுபூர்வமாகவும், ஆண்கள் எப்போதும் அறிவுபூர்வமாகவும் சிந்திப்பவர்கள் என்பதையும் காட்டுகிறது.//
ஆம், ஆணுக்கு கொஞ்சம் கரடுமுரடான உள்ளம் தான்..
தூள்...
ReplyDeleteதொடராக்கி இருக்கலாமோ?
ஐயா செங்கோவி என்னை மாதிரி சின்னஞ்சிறுசுகள் கீதா உபதேசம் கேக்கக் கூடாதாம்.. ஆச்சி சொல்லி இருக்கா..
ReplyDeleteகுழ மட்டும் வைச்சிட்டு போறேன்யா..
///ஒருவேளை நாம செத்துப் போற இடம் சுவீசே மாதிரியோ, சொர்க்கம்னு சொல்லுதாங்களே அது மாதிரியோ இருக்கலாம் இல்லியா? /// அப்பிடின்னா நான் இப்பவே செத்து போகிறேனே அவ்வ்வ்
ReplyDeleteகிராமத்து மனம் தழுவு சொன்ன கதை ஜோசிக்க வைக்கிறது. ஆனால் மரணத்தின் பின் என்ன என்பது இன்று வரை விஞ்ஞானத்தாலும் கண்டுபிடிக்கப்படாதது.
ReplyDeleteநீங்கள் சொல்ல்வது போல "மரணத்தின் பின் நல்லதாயே இருக்கும்" என்று நம்பி இருப்பதே மரண பயத்தை குறைக்கும் ஒரே வழி.
நாராயணனிடம் வரம் வாங்கி நாரதர் மனிதராக வாழ்ந்து திடீர் என்று வந்த வெள்ளத்தில் தன் குடும்பம் அதில் அடித்துக்கொண்டு போனவுடன் நாராயணனை தொழுதபோது, நாராயணன் சொன்னது.. இந்த மனித வாழ்க்கை ஒரு மாயை. அதை உணர்த்தவே இதை உனக்கு செய்தேன் என்பது. அதையே இந்த கதை இன்னொரு கோணத்தில் சொன்னதாக உணர்கிறேன்!
ReplyDeleteஅண்ணன் எதையோ பின்நவீனத்துவத்துல சொல்லி இருக்காரே...?
ReplyDeleteபெரிய பெரிய தத்துவம்லாம் சொல்றீக, எடக்கு மடக்கா யோசிக்கிறீக......
ReplyDeleteசீரியஸ் பதிவுக்கு தமிழ்வாசி வந்திருக்காரே....?
ReplyDeleteஅட சிறுகதை. நான் படிக்கும் உங்களுடைய முதல் சிறுகதை, ( நீங்கள் எழுதிய முதலே இதுதானோ தெரியாது)
ReplyDeleteஅடகாசமாய் இருக்கு பாஸ், தொடர்ந்து எழுதுங்கள்
செங்கோவி said... [Reply]
ReplyDeleteஎன்னை சிறுகதை எழுதச் சொல்லி மின்னஞ்சலில் உசுப்பேற்றிய அந்த மூன்று பேருக்கு நன்றி!//
அவங்க மட்டும் ஏன் கைல கிடைசாங்கன்னா
பாராட்டு விழாதான்!
சும்மாவா உசுப்பெதலேன்னா இப்படி ஒரு முத்தான பதிவு கிடைசிருக்குமா?
அருமை செங்கோவி...
ReplyDeleteஆரம்பத்தில் படிக்கத்தொடங்கும்போது சாதாரண சிறுகதை என்று நினைத்துத்தான் படிக்கத்தொடங்கினேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது இது ஒரு சிறுகதை மாத்திரமல்ல, மனித வாழ்க்கையில் மரணம் ஒரு முற்றுப்புள்ளியல்ல என்பதை அறியத்தரும் தத்துவம் நிறைந்த பெட்டகம்.
வாழ்த்துக்கள். தொடர்ந்தும் இதுபோன்ற சிறுகதைகளை எழுதுங்கள்
அருமையான சிறுகதை.உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி
ReplyDeleteதமிழ் மணம் 13
ReplyDelete“மரணம் மோசமான விஷயம்னு எதை வச்சு நாம முடிவுக்கு வர்றோம்? இதை விட நல்ல வாழ்க்கையா அது ஏன் இருக்கக்கூடாது? பசியில்லாத, பஞ்சம் இல்லாத, சூதுவாது இல்லாத சுத்தமான உலகமா அது ஏன் இருக்கக்கூடாது? நமக்கு விதிக்கப்பட்ட தண்டனையா இது ஏன் இருக்கக்கூடாது? இதிலிருந்து விடுதலை ஆகறவங்களைப் பார்த்து, அடிமைகள் நாம அழறது வேடிக்கை இல்லையா?”//
ReplyDeleteமரணத்திற்கு இப்படி ஒரு விளக்கமா பேசாமல்.. இந்த உலகை விட்டு சென்றுவிடலாம் போலிருக்குதே..அவ்வ்வ்வ் (இது சீரியஸ் அவ்வ்வ்)
நன்றிங்க மாப்ள....எனக்கு ஒரு பழக்கம் புரியலைனா மறுபடியும் நன்றின்னு சொல்லுவேன் நன்றி ஹிஹி!
ReplyDeleteஎலேய் உறக்கம் கிடையாதா பேய் வரும் நேரம் பதிவா ம்ஹும்....
ReplyDeleteதமிழ் மணம் வோட்
ReplyDeleteசிறுகதை அருமை .நிதானமாக கொண்டு சென்று வேகமாக முடித்தது போல் உள்ளது நண்பரே .
இருந்தாலும் வாழ்வின் யாதார்த்தமான உண்மையை கருவாக தந்துள்ளீர்கள் .
எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை .இழப்பிலிருந்து எளிதாக மீள வேண்டும் இல்லையென்றால் அதுவே நம்மை அழித்துவிடும் போன்ற கருத்துகளை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது தங்கள் சிறுகதை .அருமை .நன்றி பகிர்வுக்கு.
தாங்கள் பதிவிட்ட உடனேயே வரும் நான் சூழ்நிலை காரணமாக இரண்டு நாட்களாக தாமதமாக வர நேரிடுகிறது .
அடுத்த வாரம் முதல் ரெகுலர் ஆகி விடும் நண்பரே .
//மரணம் மோசமான விஷயம்னு எதை வச்சு நாம முடிவுக்கு வர்றோம்? இதை விட நல்ல வாழ்க்கையா அது ஏன் இருக்கக்கூடாது? பசியில்லாத, பஞ்சம் இல்லாத, சூதுவாது இல்லாத சுத்தமான உலகமா அது ஏன் இருக்கக்கூடாது? நமக்கு விதிக்கப்பட்ட தண்டனையா இது ஏன் இருக்கக்கூடாது? இதிலிருந்து விடுதலை ஆகறவங்களைப் பார்த்து, அடிமைகள் நாம அழறது வேடிக்கை இல்லையா?”//
ReplyDeleteஉண்மைதானோ??? 20 நாட்களாய் அழுத என் மனம் கொஞ்சம் தெளிவானது போலிருக்கே... நன்றி சகோ
செங்கோவி……….!
ReplyDelete‘விட்டுவிடுதலையாகி’ பரவாயில்லை. எனினும், தங்களின் ‘முந்து’ இதனைவிட பலமடங்கு சிறப்பானது. ‘முந்து’வில் கதை சொல்லும் பாங்கு வித்தியாசமாகவும், இறுதிவரை சஸ்பென்சாகவும் சென்றது.
‘விட்டுவிடுதலையாகி’யில் நீங்கள் பேசிய விடயம் கொஞ்சம் குழப்பகரமாக இருக்கிறது. அதனால், வாசகர்களுக்கு தெளிவான கதையை கொடுக்கவில்லை என்பது என்னுடைய எண்ணம்.
ஆனாலும், புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாஸ். தொடர்ந்து கலக்குங்க.
நல்ல கதை கருத்து அருமை...
ReplyDeleteஅண்ணன் கடைல இப்போவெல்லாம் செம கூட்டமா இருக்கே!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஅலெக்சா ரேங்கிங்க்கில் உங்க முன்னேற்றம் மற்ற பதிவர்களோட ஒப்பிடும்போது 23% அதிக வேகம்.. வாழ்த்துக்கள்
ReplyDeleteGood.
ReplyDeleteசூப்பர்ணே!
ReplyDeleteஆனாலும் செங்கோவி அளவுக்கு யோசிக்கத் தெரிஞ்ச கருப்பசாமி - மனைவிக்கு ஒரு கடிதம் கூட எழுதாதது உறுத்துகிறது!
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteபெண் என்பவள் அன்பு என்னும் உணர்வுபூர்வமாகவும், ஆண்கள் எப்போதும் அறிவுபூர்வமாகவும் சிந்திப்பவர்கள் என்பதையும் காட்டுகிறது//
அப்பிடித்தான் அண்ணன் எழுதினதா தோணுதா உங்களுக்கு?
அப்போ அண்ணனை ஆணாதிக்கவாதின்னு சொல்றீங்களா?
Engappa ANTHA +15 ??;)
ReplyDelete//அங்கே நாங்க எப்படி இருந்தோம், தெரியுமா? ஒரு ஹோட்டல்ல தான் வேலை எங்களுக்கு. மூணு வேளையும் நல்ல சாப்பாடு. பசின்னா என்னன்னு அந்த பத்து வருசத்துல தெரியல//
ReplyDeleteமனைவி கணவன் நினைவாக இங்கே கவலையுடன் இருக்க, அதைப்பற்றிச் சற்றும் சிந்திக்காத கருப்பசாமி கொஞ்சம்கூட உறுத்தலின்றிப் பேசுவது ஆண்களின் பொறுப்பற்றதனத்தைப் பறை சாற்றுவதாக உள்ளது!
//..நல்ல காசு. உண்மையைச் சொல்லணும்னா குடி, கூத்தின்னு தான் இருந்தோம்//
இங்கு கதாசிரியர் கூற விளைவது என்ன?
ஆண் என்பவன் எதையும் செய்துவிட்டு, தைரியமாக யாரிடமும் சொல்லலாம் - முக்கியமாக மனைவியிடம் - ஆனாலும் பெண்/மனைவி அதைப் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்து விட வேண்டும் அதுவே நியதி! - என்று கூறவருகிறாரா எழுத்தாளர்?
இது மிக மோசமான ஆணாதிக்கத்தனம் இல்லையா?
நான் சொல்லல! :-)
இப்புடியெல்லாம் பெண்ணியல்வாதிகள் பொங்கிடுவாங்களோன்னு பயமா இருக்குண்ணே! :-)
thamil manam 22
ReplyDeleteகாலையில் வாக்களிக்க இயலவில்லை
அதனால் இப்பொழுது வந்து வாக்களித்தேன் நண்பரே
சசிகுமார் said...
ReplyDeleteபேய் வர நேரத்துல பதிவு போடறீங்களே பிரகாஷ் வருவாருன்னு தெரிஞ்சு தானே
// டேய் உனக்கு ரொம்பட 'அது'.
// ரெவெரி said...
ReplyDeleteதூள்...
தொடராக்கி இருக்கலாமோ? //
அதை படிப்பவர்கள் செய்யவேண்டும்.
// காட்டான் said...
ReplyDeleteஐயா செங்கோவி என்னை மாதிரி சின்னஞ்சிறுசுகள் கீதா உபதேசம் கேக்கக் கூடாதாம்.. ஆச்சி சொல்லி இருக்கா..
குழ மட்டும் வைச்சிட்டு போறேன்யா..//
குழ போட்டதுக்கு நன்றிய்யா.
// கந்தசாமி. said...
ReplyDeleteகிராமத்து மனம் தழுவு சொன்ன கதை ஜோசிக்க வைக்கிறது. ஆனால் மரணத்தின் பின் என்ன என்பது இன்று வரை விஞ்ஞானத்தாலும் கண்டுபிடிக்கப்படாதது.
நீங்கள் சொல்ல்வது போல "மரணத்தின் பின் நல்லதாயே இருக்கும்" என்று நம்பி இருப்பதே மரண பயத்தை குறைக்கும் ஒரே வழி. //
மரண பயத்தை மட்டுமல்ல இழப்பின் வலியை குறைக்கவும் அதுவே வழி.
// bandhu said...
ReplyDeleteநாராயணனிடம் வரம் வாங்கி நாரதர் மனிதராக வாழ்ந்து திடீர் என்று வந்த வெள்ளத்தில் தன் குடும்பம் அதில் அடித்துக்கொண்டு போனவுடன் நாராயணனை தொழுதபோது, நாராயணன் சொன்னது.. இந்த மனித வாழ்க்கை ஒரு மாயை. அதை உணர்த்தவே இதை உனக்கு செய்தேன் என்பது. அதையே இந்த கதை இன்னொரு கோணத்தில் சொன்னதாக உணர்கிறேன்! //
நன்றி சகோ!
சட்டையை மாற்றுவது போல ஆத்மாக்கள் உடல்களை மாற்றுகின்றன - கிருஷ்ணர்.
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteபெரிய பெரிய தத்துவம்லாம் சொல்றீக, எடக்கு மடக்கா யோசிக்கிறீக......//
உங்களுக்கு எதைப் பார்த்தாலும் இடக்கு மடக்காவே தெரியுதே!
// துஷ்யந்தன் said...
ReplyDeleteஅட சிறுகதை. நான் படிக்கும் உங்களுடைய முதல் சிறுகதை, ( நீங்கள் எழுதிய முதலே இதுதானோ தெரியாது)
அடகாசமாய் இருக்கு பாஸ், தொடர்ந்து எழுதுங்கள்//
இதற்கு முன் நான் எழுதிய முந்து படியுங்கள் துஷ்யந்தன்.
// கோகுல் said...
ReplyDeleteசெங்கோவி said... [Reply]
பாராட்டு விழாதான்!
சும்மாவா உசுப்பெதலேன்னா இப்படி ஒரு முத்தான பதிவு கிடைசிருக்குமா?//
நன்றி..நன்றி.
// FOOD said...
ReplyDeleteஇன்றைக்கு கமெண்ட்ஸ் குறைவதை வைத்து, உங்களின் 18+ பதிவுகளை நியாயபடுத்தப்போறீங்களோ!//
பதிவுலகம் பொழுதுபோக்கிற்கானது. இது மாதிரி விஷயங்களுக்கு கூட்டம் குறையவே செய்யும் சார்..குறைஞ்சாலும் பரவாயில்லைன்னு தான் இதை எழுதி இருக்கேன்.
அய்யோ சார்........எனக்கு நமீயையும் ஹன்சியையும் பிடிக்குது. அதனால போடறேன்..கூட்டம் கூடனும்னு எனக்குப் பிடிக்காத கமலா காமேஷ்(அதாங்க த்ரிஷா) ஸ்டில்லி என்னைக்காவது போட்டிருக்கனா?.........கூட்டமே வராட்டியும் நமீயும் ஹன்சியும் எனக்குப் போதும்!
// மதுரன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள். தொடர்ந்தும் இதுபோன்ற சிறுகதைகளை எழுதுங்கள் //
முயற்சி செய்கிறேன் நண்பரே.
// kobiraj said...
ReplyDeleteஅருமையான சிறுகதை.உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி//
உங்கள் வருகையால் நானும் மகிழ்ந்தேன். நன்றி.
// மாய உலகம் said...
ReplyDeleteமரணத்திற்கு இப்படி ஒரு விளக்கமா பேசாமல்.. இந்த உலகை விட்டு சென்றுவிடலாம் போலிருக்குதே.//
இல்லேன்னா மட்டும் இருந்திடப் போறமா........
// விக்கியுலகம் said...
ReplyDeleteநன்றிங்க மாப்ள....எனக்கு ஒரு பழக்கம் புரியலைனா மறுபடியும் நன்றின்னு சொல்லுவேன் நன்றி ஹிஹி!//
தக்காளி தொல்லை தாங்க முடியலியே..
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஎலேய் உறக்கம் கிடையாதா பேய் வரும் நேரம் பதிவா ம்ஹும்....//
கதை புரியலேன்னா அண்ணன் இப்படித் தான் திட்டுவாரு போல..இதுக்கு விக்கி பரவாயில்லை.
சிறப்பான தத்துவ கதை. இதை வாசித்ததும் தாகூர் சொன்ன இந்த வாசகம் நினைவுக்கு வந்தது:
ReplyDeleteநீ இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காகத் உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும். அதனால் நம்பிக்கையோடிரு.
-----------------------------------
மேலும் இறப்பதனால் இறப்பவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவனைச் சுற்றி இருப்பவர்கள்தான் அதனால் ஏற்படக் கூடிய இழப்புகளை எண்ணி வருந்தி அழுகிறார்கள். சிக்மண்ட் பிராய்ட் கூட இக்கருத்தைக் கூறியுள்ளார்.
இந்திய தத்துவங்களின்படி இறந்த ஆன்மா மறுபடி கர்ம வினைகளுக்கேற்ப பிறவி எடுக்கிறது என்று கூறுகிறார்கள். மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எதிர்பார்க்காத பிரச்சினைகளுக்கும், இன்பங்களுக்கும் கர்ம வினையே காரணம் என்கிறது இந்திய தத்துவங்கள். யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்பவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள் இறைவனோடு கலந்து விடுவார்கள் என்ற தத்துவம் ஏற்றுக் கொள்ளும்படியாகவே
இருக்கிறது.
இதை மேற்கத்திய தத்துவங்களான யூதம், கிருத்துவம், இஸ்லாம் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்க்கையை விளக்குவதில் இந்திய தத்துவங்கள் வெற்றி பெற்று உள்ளதாகவே தோன்றுகிறது. மேற்கத்திய தத்துவங்களின் படி பிரபஞ்சத்தின் கடைசி
நாளில் கடவுள் தோன்றி மனிதன் செய்த நன்மை, தீமைகளுக்கு ஏற்பத் தீர்ப்பளிப்பார் என்பது மனித வாழ்வின் இன்ப துன்பங்களை விளக்கப் போதுமானதாக இல்லை.
சமீபத்தில் மேற்கத்திய தத்துவங்களை விளக்கி Tree of life என்று ஒரு ஆங்கிலத் திரைப்படம் வந்தது. ஆனால் அதைப் பார்க்க மிகுந்த பொறுமை வேண்டும்.
நல்ல ஒரு வித்தியாசமான கருவைக் கையிலெடுத்துக்கொண்டு கதை புனைந்திருக்கீர்கள், நன்றாக வந்திருக்கிறது. கிராமத்துப் பேச்சுவழக்கும் கதையில் இயல்பாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்! (அப்பாடா திரும்ப உசுப்பேத்தியாச்சு).
ReplyDeleteஇதில் உள்ள எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், கணவர் பத்துவருடமாக மனைவிக்கு ஒரு கடிதம் கூடப்போடாததும், இவ்வளவு தத்துவமாகப்பொழிவதும் நெருடலாகவே இருக்கிறது. இருப்பினும் நீங்கள் சொல்லவந்த விஷயத்துக்கு இது தேவைப்படுவது புரிகிறது.
ஆனாலும் சுப்புத்தாய் ரொம்ப அப்பாவியா இருக்காங்க!
இந்துமதத்தில் இறப்பு ஒரு வரம் என்பதாகவே சொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த உலகத்தில் வாழ்பவர்கள்தான் இன்னும் அனுபவங்களுக்கு ஆளாகிறார்கள். இறப்பிற்குப்பின்னான வாழ்வைப்பற்றி உபநிஷதங்களில் சொல்லப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் (இன்னும் படித்ததில்லை).
என்ன பண்றது நம்ம இனத்துல இருக்கிரவரு ஒரு பதிவு போட்டா நாம தானே கமென்ட் போடணும்... //
ReplyDeleteஅப்போ இங்க கமெண்ட் போட்ட எல்லாருமே அந்த இனம்தானா?
பாராட்டு விழாதான்!//
ReplyDeleteபாராட்டு விழாவில் பொற்கிழி எல்லாம் தருவீங்களா?!
// M.R said...
ReplyDeleteதாங்கள் பதிவிட்ட உடனேயே வரும் நான் சூழ்நிலை காரணமாக இரண்டு நாட்களாக தாமதமாக வர நேரிடுகிறது .
அடுத்த வாரம் முதல் ரெகுலர் ஆகி விடும் நண்பரே . //
வேற வேலையே இல்லைன்னா மட்டும் வாங்க..இல்லேன்ன நிதானமா படிச்சிக்கோங்க..ஒன்னும் பிரச்சினை இல்லை..(இப்படிச் சொன்னதாலதான் தமிழ்வாசியே இப்போ ஒழுங்கா வர்றதில்லை போல!)
// கடம்பவன குயில் said...
ReplyDeleteஉண்மைதானோ??? 20 நாட்களாய் அழுத என் மனம் கொஞ்சம் தெளிவானது போலிருக்கே... நன்றி சகோ //
அன்பு சகோ,
எங்கள் வீட்டில் அதிகமாக நடந்த விஷேசம் என்னவென்றால், இறந்த பதினாறாம் நாள் செய்யப்படும் விஷேசமே(காரியம்). நான் தனிமரமாய் ஆகும்வரை இறப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது..சமீபத்திய பேரிழப்பாய் ஈழப்படுகொலை அமைந்தது..
அப்போதெல்லாம் என்னை மீட்டெடுத்தது தத்துவ விசாரமே. பகவத் கீதையும் ஓஷோவின் ‘பகவத் கீதை-இரண்டாம் பாகமும்’ ஒருவேளை உங்களுக்கு உதவலாம்.
யாருக்காவது இந்தக் கதை பயன்படலாம் என்று தோன்றியதாலேயே எழுதினேன்..
----------------------
ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்கனம் பிள்ளைப்பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ, அங்கனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்க மாட்டான் - 13
குந்தியின் மகனே,
குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தெரும் இயற்கையின் தீண்டுதல்கள் என்றும் இருப்பன அல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக்கொள். - 14
பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுதல் தகுதியன்று - 27
(பகவத் கீதை: சாங்கிய யோகத்தில் கிருஷ்ணர்)
// மருதமூரான். said...
ReplyDelete‘விட்டுவிடுதலையாகி’யில் நீங்கள் பேசிய விடயம் கொஞ்சம் குழப்பகரமாக இருக்கிறது. அதனால், வாசகர்களுக்கு தெளிவான கதையை கொடுக்கவில்லை என்பது என்னுடைய எண்ணம். //
முதலில் வெளிப்படையான கமெண்ட் கொடுத்தற்கு நன்றி பாஸ்.
நீங்கள் சொல்வது சரி தான்..முந்து இதைவிடச் சிறப்பான கதை தான்.
கருப்பசாமி போன்ற சாதாரண, தத்துவ அறிவற்ற கேரக்டரால் ஒரு அளவிற்கு மேல் அந்த விஷயத்தை தெளிவாக சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் நாடகத்தன்மை வந்துவிடும்.
சுப்புத்தாயும் முழுதாக உடனே புரிந்து கொள்ள முடியாது. ஒரு பெரிய தத்துவ தரிசனத்தின் தொடக்கமே அந்த உரையாடல். அதன்பின் அவர்களும் வாசகர்களும் அந்த உரையாடலை மேலும் முன்னெடுக்க வேண்டும்.
தெளிவான நீதி சொல்வது என் நோக்கம் அல்ல. குழப்பத்தை உண்டாக்குவது மட்டுமே என் நோக்கம். வாசகர்கள் தங்கள் வாழ்வின் அனுபவத்துடன் அதை இணைத்து, தாங்கள் கற்ற விஷயங்களுடன் ஒப்பிட்டு, அதை இன்னும் விரிவான தளத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல படைப்பு ’முற்றும்’ போடும் இடத்தில் முடிவதில்லை..............
// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteநல்ல கதை கருத்து அருமை...//
நன்றி ரமேஷ்.
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅலெக்சா ரேங்கிங்க்கில் உங்க முன்னேற்றம் மற்ற பதிவர்களோட ஒப்பிடும்போது 23% அதிக வேகம்.. வாழ்த்துக்கள் //
இண்ட்லி, தமிழ்மணமாவது எதுக்குன்னு எனக்குத் தெரியுது,..இந்த அலெக்ஸா எதுக்கு பாஸ் யூஸ் ஆகுது? எல்லாரும் வச்சிருக்காங்களேன்னு முன்னாடி வச்சது...அவ்வ்!
// Chitra said...
ReplyDeleteGood. //
ரொம்ப நன்றிக்கா.
பதிவு நல்லா இருந்தாக்கூட யாரும் நமக்கு ‘அருமை’-ன்னு கமெண்ட் போட மாட்டாங்க போலிருக்கெ..கொஞ்சம் ஓவராத் தான் போய்ட்டமோ?
ஜீ... said...
ReplyDelete// ஆனாலும் செங்கோவி அளவுக்கு யோசிக்கத் தெரிஞ்ச கருப்பசாமி - மனைவிக்கு ஒரு கடிதம் கூட எழுதாதது உறுத்துகிறது! //
கருப்பசாமி என் அளவுக்கு யோசிச்சிருந்தா, இன்னும் தெளிவாச் சொல்லி இருப்பாரே!
// அப்போ அண்ணனை ஆணாதிக்கவாதின்னு சொல்றீங்களா? //
இன்னைக்குமா.......மீ பாவம்!
// மனைவி கணவன் நினைவாக இங்கே கவலையுடன் இருக்க, அதைப்பற்றிச் சற்றும் சிந்திக்காத கருப்பசாமி கொஞ்சம்கூட உறுத்தலின்றிப் பேசுவது ஆண்களின் பொறுப்பற்றதனத்தைப் பறை சாற்றுவதாக உள்ளது! //
இதை விடவும் பெரிய அநியாயங்களைச் செய்த கணவனை மன்னிப்புக் கேட்காமலே ஏற்றுக்கொண்ட பெண்களை நான் அறிவேன்.இங்கு அவர் மன்னிப்புக் கேட்டதே ஆச்சரியம் தான்!
//..நல்ல காசு. உண்மையைச் சொல்லணும்னா குடி, கூத்தின்னு தான் இருந்தோம்//.........இங்கு கதாசிரியர் கூற விளைவது என்ன?
ஆண் என்பவன் எதையும் செய்துவிட்டு, தைரியமாக யாரிடமும் சொல்லலாம் - முக்கியமாக மனைவியிடம் - ஆனாலும் பெண்/மனைவி அதைப் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருந்து விட வேண்டும் அதுவே நியதி! - என்று கூறவருகிறாரா எழுத்தாளர்? //
முதல்ல சுவீசே-ங்கிற நாடு எங்க இருக்குன்னு சொல்லுங்க.......குறியீடுன்னு ஒன்னு உண்டு தெரியுமா?
// இப்புடியெல்லாம் பெண்ணியல்வாதிகள் பொங்கிடுவாங்களோன்னு பயமா இருக்குண்ணே! :-)//
தம்பி, நானும் அவங்க பொங்கிடக்கூடாதுன்னு தான் பதில் சொன்னேன்..ஹி..ஹி!
// NAAI-NAKKS said...
ReplyDeleteEngappa ANTHA +15 ??;) //
தலைப்புல இருக்கே..பாக்கலியா நீங்க?
// Jagannath said...
ReplyDeleteசிறப்பான தத்துவ கதை. இதை வாசித்ததும் தாகூர் சொன்ன இந்த வாசகம் நினைவுக்கு வந்தது:
நீ இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே உனக்காகத் உன் தாயின் இரண்டு தனங்களிலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நீ இறந்த பின்னும் உனக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும். அதனால் நம்பிக்கையோடிரு. //
தாகூர் எவ்வளவு பெரிய விஷயத்தை சிம்பிளா சொல்லிட்டாரு..தொடர்ந்து என் கதைகளை சிறப்பாக கவனிப்பதற்கு நன்றி ஜகன்.
// Uma said...
ReplyDelete// இதில் உள்ள எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், கணவர் பத்துவருடமாக மனைவிக்கு ஒரு கடிதம் கூடப்போடாததும், இவ்வளவு தத்துவமாகப்பொழிவதும் நெருடலாகவே இருக்கிறது. இருப்பினும் நீங்கள் சொல்லவந்த விஷயத்துக்கு இது தேவைப்படுவது புரிகிறது...ஆனாலும் சுப்புத்தாய் ரொம்ப அப்பாவியா இருக்காங்க!//
அக்கா, உங்க ரேஞ்சுக்கே யோசிக்காதீங்க. கதை நிகழ்வது 1980ல்..படிக்காத கிராமத்துப் பெண்ணின் ரியாக்சன் என்னவா இருக்கும்னு யோசிங்க. 1990களிலேயே ரியாக்சன் நத்திங் தான். கணவர் தான் பிஸி ஆகிட்டாரே...அது சரி, சுவீசே நாடு எங்க இருக்கு?
// இந்துமதத்தில் இறப்பு ஒரு வரம் என்பதாகவே சொல்லப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்த உலகத்தில் வாழ்பவர்கள்தான் இன்னும் அனுபவங்களுக்கு ஆளாகிறார்கள். //
அருமையான தகவல்கள்..நன்றி சகோதரி.
// (இன்னும் படித்ததில்லை).//
சுத்தம்.
// பாராட்டு விழாவில் பொற்கிழி எல்லாம் தருவீங்களா?! //
விக்கி, மனோ அண்ணன் கைல மாட்டினீங்கன்னா, கண்டிப்பா தருவாங்க.
கதை நிகழ்வது 1980ல்..படிக்காத கிராமத்துப் பெண்ணின் ரியாக்சன் என்னவா இருக்கும்னு யோசிங்க. //
ReplyDeleteஅட ஆமாம், எம்.ஜி.ஆர். பற்றி கூட எழுதிருந்துதே! நான் என் angle லே இருந்து யோசிச்சேன், இந்த கோணத்துல இதை யோசிக்கவேயில்லை. நீங்க சொல்றது சரிதான்!
அது சரி, சுவீசே நாடு எங்க இருக்கு//
பொது அறிவுப்புலியான என்னைப்பார்த்து இந்த மாதிரி சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சுவீசே நாடு அண்டார்டிகாவிலிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவிலும், ஆஸ்திரேலியாவிலிருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவிலும் (அதாவது இரண்டு கண்டங்களுக்கும் நடுவில்) இருக்கிறது என்பதை உலகவரைபடத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்!
விக்கி, மனோ அண்ணன் கைல மாட்டினீங்கன்னா, கண்டிப்பா தருவாங்க.//
கொலைவெறியில இருக்கிறவங்ககிட்ட போய் நான் ஏன் மாட்டப்போறேன்?
நன்றிண்ணே! பதில்களுக்கு! :-)
ReplyDeleteநூறாவது கமெண்ட் என்னோடது!!!!
ReplyDelete//ஜீ... said... [Reply]
ReplyDeleteநன்றிண்ணே! பதில்களுக்கு! :-)//
நல்லவேளைய்யா கேட்டீங்க!
//Uma said... [Reply]
ReplyDeleteநூறாவது கமெண்ட் என்னோடது!!!!//
நீங்களுமா........விளங்கிரும்!
15+ இது புதுசா இருக்கு பாஸ்
ReplyDeleteசி.பி.செந்தில்குமார்said...
ReplyDeleteஅண்ணன் கடைல இப்போவெல்லாம் செம கூட்டமா இருக்கே!!!!!!!!!!!!!!!!!////அது வந்து..............................அவரோட தலையில(கடையில)"சரக்கு"( நிரூபன் பதிவல்ல)இருக்குன்னு?!கூட்டம் அல மோதுதுன்னு நெனைக்கிறேன்!
அருமையான சிறுகதை!வேறெதெவும் சொல்ல வேண்டியதே இல்லை!
ReplyDeleteஅன்புடன் வணக்கம் நண்பரே.மரணத்தை பற்றி ஒரு வித்தியாசமான சிந்தனை கதை மிக அருமை. இது போல் தொடருங்கள் நன்றி
ReplyDelete//K.s.s.Rajh said...
ReplyDelete15+ இது புதுசா இருக்கு பாஸ்//
மரணத்தைப் பத்தி 15 வயசுக்கு கீழ உள்ளவங்க ஏன் யோசிக்கணும்..
//சென்னை பித்தன் said...
ReplyDeleteஅருமையான சிறுகதை!வேறெதெவும் சொல்ல வேண்டியதே இல்லை!//
நன்றி ஐயா!
//சென்னை பித்தன் said...
ReplyDeleteஅருமையான சிறுகதை!வேறெதெவும் சொல்ல வேண்டியதே இல்லை!//
நீங்க சொன்னா சரி தான் சார்.
// hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வணக்கம் நண்பரே.மரணத்தை பற்றி ஒரு வித்தியாசமான சிந்தனை கதை மிக அருமை. இது போல் தொடருங்கள் நன்றி//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா..!
வணக்கம் பாஸ்,
ReplyDeleteஓட்டுப் போட்டேன், விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்.
மனசிற்கு கொஞ்சம் கஸ்டமா இருக்கு.
மனவட்டதை போகியது உங்கள் சிறுகதை . நன்றிகள் பல
ReplyDelete//Padmanaban said...
ReplyDeleteமனவட்டதை போகியது உங்கள் சிறுகதை . நன்றிகள் பல //
எழுதிய என் மனம் நிறைந்தது..நன்றி நண்பரே.
என்ன தினமணி விமரிசனம் காப்பி பேஸ்ட் ஆ?
ReplyDelete@arun
ReplyDeleteவிமர்சனமா..இது சிறுகதை தானே..நீங்க சொல்றது புரியலை..அந்த தினமணி லின்க் கொடுக்கிறீங்களா?
மீண்டும் வணக்கம் பாஸ்,
ReplyDeleteதொடர்ச்சியான வேலைப் பளு, ஒரே நாளில் பல நண்பர்களின் பதிவுகளைப் படிக்க ஓடுதல், டைம் இல்லாமை முதலிய காரணங்களால் இந்தப் பதிவு பற்றிய என் முழுமையான கருத்துக்களை எழுத முடியவில்லை.
மன்னிக்கவும்,
கதை நிகழ் கால கட்டம் கொஞ்சம் வேறுபட்டதாக இருந்தாலும், கதையின் போக்கானது, இன்றைய கால கட்டத்தில் வாழும் சாதாரண பொருளாதாரச் சூழ் நிலை கொண்ட மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றாற் போல பொருந்திப் போகின்றது.
ReplyDeleteகதைக்கு ஏற்றாற் போல வேண்டிய இடங்களில் ஏற்ற இறக்கங்களும், உணர்ச்சிகளை வேறு பிரித்துக் காட்டும் வண்ணம் வசன நடை அமைப்பும் வந்துள்ளது.
மேலும் தன் ஒரேயொரு செல்ல மகனை இழந்த அன்னையின் உணர்வலைகளை எளிமையான முறையில் வெளிப்படுத்தியிருப்பதோடு, வட்டார மொழி வழக்கினைக் கையாண்டு கதைக்கு வலுச் சேர்த்திருக்கிறார் கதாசிரியர்.
ReplyDelete@நிரூபன்
ReplyDelete//கதைக்கு ஏற்றாற் போல வேண்டிய இடங்களில் ஏற்ற இறக்கங்களும், உணர்ச்சிகளை வேறு பிரித்துக் காட்டும் வண்ணம் வசன நடை அமைப்பும் வந்துள்ளது//
நன்றி நிரூ..நான் இந்தக்கதைக்கு எதிர்பார்த்த, ஒரு சில பின்னூட்டங்களில் உங்களுடையதும் ஒன்று..நன்றி.