’ஒரு தலைவர் பெரும்பான்மையான மக்களால் புகழப்படுகிறார் என்றால், அவர் ஒரு அயோக்கியனாகத் தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணும் மனநிலைக்கு நம்மை தற்காலத் தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிலை, உலகில் வேறெங்கும் நிலவுகிறதா எனத் தெரியவில்லை.'
- எனது இன்றைய காந்தி விமர்சனப் பதிவில் காந்திக்காக எழுதிய வரிகளை திரும்பவும் ஒரு காந்தியவாதிக்காகச் சொல்ல வேண்டிய நிலை. அண்ணா ஹசாரே தனது ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியபின் அவர் மீது தான் எத்தனை வசைகள்.
அவரையே ஊழல்வாதி என்றார்கள்.
ஜாதி வெறியர் என்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற காவி அமைப்புகளின் கைக்கூலி என்றார்கள்.
அன்னிய சதி என்றார்கள்.
அவரது வாழ்க்கையில் இருந்து என்னென்ன குறைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க முடியுமோ, அத்தனையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொன்னார்கள். இப்படி கடுமையாக எதிர்க்கும் அளவிற்கு அவர் அப்படி என்ன கேட்டுவிட்டார்?
தேர்தல் கமிசன் போல, மனித உரிமைக் கமிசன் போல ஊழலுக்கு எதிரான ஒரு சுதந்திர அமைப்பு தேவை என்றார். ஊழல்வாதிகளிடமே ஊழலை விசாரிக்கும் அதிகாரம் இருப்பது கேலிக்கூத்து என்றார். இதில் அவருக்கு தனிப்பட்ட முறையில் பயனளிக்கக்கூடிய விஷயம் ஏதாவது உண்டா?
அவர் ஜாதி வெறியர் என்று கொண்டால், லோக்பால் மூலமாக அவரது ஜாதி வெறி அடையும் நன்மை என்ன?
பாஜகவின் கைக்கூலி என்றால், நாளை பாஜகவுக்கே ஆப்பு வைக்க வாய்ப்புள்ள லோக்பாலுக்கு அவர் ஏன் போராட வேண்டும்?
அன்னிய சதியா இது? இந்தியாவில் ஊழலை ஒழிக்க எந்த அன்னிய நாடு ஐயா சதி செய்வது? பெயரைச் சொல்லுங்கள்.. அந்த திசைக்கு ஒரு கும்பிடு போட்டுக்கொள்கிறோம்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது காங்கிரசுக்கு எதிரான போராட்டம் என்று காங்கிரசே வெளிப்படையாக ஒத்துகொண்டது தான் கேலிக்கூத்து.
காந்தியின் காலத்தில், காந்தி மீது என்னென்ன வசைகள் பொழியப்பட்டனவோ, அவற்றையே திரும்ப இப்போதும் அட்சுரம் பிசகாமல் சொல்கிறார்கள். ஆனால் இந்த அறிவுஜீவிக்கூட்டத்தை எளிய மக்கள் எப்போதும் ஒதுக்கியே வந்துள்ளார்கள். இவர்கள் என்ன தான் கூக்குரலிட்டாலும் உண்மை காலம் தாழ்ந்தாவது வெளியே வந்துவிடுகின்றது.
பகத்சிங்கை தூக்கிலிட காந்தியே காரணம் என்றும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தூக்கிலிடுங்கள் என்று அவர் சொன்னதாகவும், பகத்சிங் விடுதலைக்கு அவர் எதுவுமே செய்யவில்லை என்றும் உச்சபட்ச அவதூறு காந்தியின் காலத்தில் அவரைப் பற்றிப் பரப்பப்பட்டது, இப்போது காந்தி பகத்சிங் விடுதலைக்காக எழுதிய கடிதம் வெளியில் வந்துள்ளது.
இந்த அவதூறுகளுக்கு அவர் தன் வாழ்நாளில் பதில் சொல்லவே இல்லை. காரணம், ’இவர்களுக்கு அவதூறு செய்வதைத் தவிர வேறு வேலையில்லை. அதையே தொழிலாக, கொள்கையாக வைத்திருக்கிறார்கள். நமக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் நிறைய உள்ளது ‘ என்று அவர் புரிந்து வைத்திருந்தார்.
அண்ணா ஹசாரேவும் இவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. எந்தவொரு காந்தியவாதியும் பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவர்கள் செயல்வீரர்கள். அவர்களது கவனம் எல்லாம் செயலின் மீதே, பேச்சின் மீது அல்ல.
நமக்குப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்து, உன் வீட்டில் தீ எரிகிறது..வா அணைப்போம் என்று கூப்பிட்டால் ‘நீ யோக்கியனா?..அன்னைக்கு என்ன சொன்னே..போன மாசம் பெரியசாமிகிட்ட வாங்குன கடனை திருப்பிக் கொடுக்காதவன் தானே நீ..போன தேர்தல்ல அந்தக்கட்சிக்கு ஓட்டுப் போட்டவன் தானே நீ..அயோக்கியப் பயலே..நீ வந்து என் வீட்டுத் தீயை அணைக்க கூப்பிடுவே..நான் வரணுமா..என்னை என்ன முட்டாள்னு நினைச்சியா..நான் அறிவுஜீவி தெரியுமா?” என்று நாம் எப்போதாவது சொல்வோமா? பதறி எழுந்து அழைத்தவர் பற்றிக் கவலையின்றி ஓடுவோம் அல்லவா?
ஆனால் அதுவே நம் நாட்டில் பற்றி எரியும் பிரச்சினை என்றால் எல்லா நியாயமும் பேசுகின்றோம். எல்லாக் கேள்விகளையும் கேட்டு, அழைத்தவரின் ஜாதகத்தை ஆராய்கிறோம். விசித்திரமான மனிதர்கள் தான் நாம்.
ஆனால் காந்தியத்திற்கு இது புதிய விஷயம் அல்ல என்பதால், அண்ணா அது பற்றிய கவலையின்றி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். அந்த உறுதியே பாஜக-கம்யூனிஸ்ட்கள் என்ற இரு துருவங்களின் ஆதரவையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
காந்தியம் எப்போதும் சமரசத்தை நாடுவது, எல்லோருடனும் நட்புக்கரம் நீட்டி அவரது ஆதரவையும் பெறவே அது முயலும். இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, அவர் மதவாதிகளின் கைக்கூலி என்றார்கள். இதே வழிமுறை மூலம் சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும், நமக்கு காந்தியம் பற்றிப் புரியவே இல்லை. காந்தியை அறிந்து கொள்ள நாம் முயலவேயில்லை என்பதையே இது காட்டுகிறது.
’லோக்பால் வந்துவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா ‘ என்ற கேலிப்பேச்சு இன்னொரு பக்கம். சினிமாவில் நடப்பது போல், மெசின் கன்னை எடுத்து படபடவென ஊழல்வாதிகளைச் சுட்டு ஒரே நாளில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இங்கு பிரச்சினை நம் ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டை தானேயொழிய, இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் போனால், வேறொருவர் வந்தும் இதையே செய்வார். எத்தனை பேரைச் சுடுவது?
ஜனநாயக முறையிலான மாற்றம் என்பது எருமை மாட்டில் மழை பெய்வது போல. எந்தவித பரபரப்பும் இன்றி, மெதுவாகவே மிக மெதுவாகவே நிகழும். தீவிரமான சுதந்திரப் போராட்டமே 20 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. இந்த லோக்பாலும் பத்து வருடங்களுக்கு மேலாக பேசப்பட்டு வரும் விஷயம். ஒரு பெரிய முயற்சியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமே இப்போது மத்திய அரசுக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்டுள்ள உடன்பாடு.
மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிராக உள்ள மனப்பான்மையையும், ஒரு வயதான கிழவர் நினைத்தால்கூட அந்த மக்களை ஒன்றுதிரட்டிவிடும் ஆபத்தையும் நம் ஊழல்வாதிகளுக்கு உறைக்க வைத்ததே இந்தப் போராட்டத்தின் ஆகப் பெரிய வெற்றி!
ஜெய் ஹிந்த்!
ஆஜர்!
ReplyDeleteவருக!
ReplyDeleteஇது பாதி வெற்றி தான், இதனை அன்னாவின் குழுவினரே தெரிவித்துள்ளார்கள்.
ReplyDeleteஅரசியல்வியாதிகள் முன்பு அன்னா உண்ணாவிரதம் இருந்த போதும், இதே போன்று வாக்கு கொடுத்து விட்டு, பின்னர் அல்வா கொடுத்து விட்டு, வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டனர் என்பதையும் மறக்க இயலாது.
//பாரத்... பாரதி... said...
ReplyDeleteஇது பாதி வெற்றி தான், இதனை அன்னாவின் குழுவினரே தெரிவித்துள்ளார்கள். //
ஆமாம் பாஸ்..சென்ற முறையை விட இம்முறை மக்கள் ஆதரவு அதிகம்..மெதுவாகவேனும் நல்லது நடந்தே தீரும் என்று நம்புகிறேன்.
அன்னாவின் போராட்ட எழுச்சியில், 3 தமிழர்களை மரண தண்டனையிலிருந்து மீட்கும் போராட்டம் கவனிக்கப்படமல் போய்விட்டதோ என்ற கவலை எனக்கு இருக்கிறது.
ReplyDeleteஜெய் ஹிந்த்!இதனால் ஒன்றும் பெரிதாக விளைந்து விடப் போவதில்லை என்று அருள் அவர்கள் "பசுமைப் பக்கங்கள்"பதிவில் கூறியிருக்கிறாரே?வெறும் பரிந்துரை தான்,உத்தரவு அல்ல என்கிறாரே?
ReplyDelete//
ReplyDeleteபாரத்... பாரதி... said...
அன்னாவின் போராட்ட எழுச்சியில், 3 தமிழர்களை மரண தண்டனையிலிருந்து மீட்கும் போராட்டம் கவனிக்கப்படமல் போய்விட்டதோ என்ற கவலை எனக்கு இருக்கிறது.//
இனி கண்டுகொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
உங்கள் பதிவு பார்த்தேன்..மிகவும் வருத்தமாக உள்ளது. நம் மக்கள் உணர்ச்சிவசப்படுதலை நிறுத்தவேண்டும்.
//Yoga.s.FR said...
ReplyDeleteஜெய் ஹிந்த்!இதனால் ஒன்றும் பெரிதாக விளைந்து விடப் போவதில்லை என்று அருள் அவர்கள் "பசுமைப் பக்கங்கள்"பதிவில் கூறியிருக்கிறாரே?வெறும் பரிந்துரை தான்,உத்தரவு அல்ல என்கிறாரே?//
இனி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்..அதுவே முழுமையான வெற்றி..அதற்கான பரிந்துரையே இப்போது செய்யப்பட்டுள்ளது.
மக்களை திரட்டமுடியும் என்று காட்டியதே மசோதாவை விடவும் பெரிய வெற்றி.
ஒன்றும் விளைந்துவிடப் போவதில்லையா.....விளைந்துவிடக்கூடாதா?
ReplyDelete100% சரி. இதேதான் எனது கருத்தும். கேள்விகேட்க ஆள் இல்லாமல் இருந்ததால்தான் மிகப்பெரிய ஊழலை செய்தாலும் தெனாவட்டாக நடந்துகொள்ளும் அயோக்யர்களுக்கு குறைந்தபட்ச பயத்தை உண்டாக்கியதே இப்போராட்டத்தின் வெற்றி!!
ReplyDelete// ! சிவகுமார் ! said...
ReplyDelete100% சரி. இதேதான் எனது கருத்தும். //
நன்றி சிவா.
ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது காங்கிரசுக்கு எதிரான போராட்டம் என்று காங்கிரசே வெளிப்படையாக ஒத்துகொண்டது தான் கேலிக்கூத்து./////இந்தக் காலத்தில் யார் தான் இப்படி வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள், நாம் ஊழல் செய்கிறோமென்று?இந்த விடயத்தில் "அவர்கள்" நேர்மையானவர்கள் தான்!!!!!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDeleteஒன்றும் விளைந்துவிடப் போவதில்லையா.....விளைந்துவிடக்கூடாதா?////அண்ணா அசாரே கும்பல் கோரியுள்ளவை நடந்துவிடும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. ஏனெனில், நாடாளுமன்ற தீர்மானம் உத்தரவு அல்ல. வெறும் பரிந்துரைதான்!////அது என்னுடைய கருத்தல்ல!
//Yoga.s.FR said...
ReplyDeleteஇந்தக் காலத்தில் யார் தான் இப்படி வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள், நாம் ஊழல் செய்கிறோமென்று?இந்த விடயத்தில் "அவர்கள்" நேர்மையானவர்கள் தான்!!!!!//
அது சரி!
இதில் மெயின் மேட்டர் என்னவெனில் இளைய தளபதி சொன்ன பிறகுதான் அன்னா உண்ணாவிரதத்தை கைவிட்டார் என்றும், ஊழலுக்கு எதிராக கேப்டன் செய்யாததையா அன்னா செய்துவிட்டார் என்றும் சிலர் கேள்வி கேட்கின்றனர். (குறிப்பாக பன்னிக்குட்டி ராமசாமி)
ReplyDeleteசெங்கோவி said... மக்களை திரட்டமுடியும் என்று காட்டியதே மசோதாவை விடவும் பெரிய வெற்றி.////ஆம்,மக்கள் எழுச்சிக்கு இப்போது ஆட்சியாளர்கள் கொஞ்சம் பயப்படவே செய்கிறார்கள்!
ReplyDeleteஇன்னமும் "அவரைக்" காணமே?பிஸியா இருக்காரோ?லீவும் சொல்லல?
ReplyDelete//
ReplyDelete! சிவகுமார் ! said...
இதில் மெயின் மேட்டர் என்னவெனில் இளைய தளபதி சொன்ன பிறகுதான் அன்னா உண்ணாவிரதத்தை கைவிட்டார் என்றும், ஊழலுக்கு எதிராக கேப்டன் செய்யாததையா அன்னா செய்துவிட்டார் என்றும் சிலர் கேள்வி கேட்கின்றனர். (குறிப்பாக பன்னிக்குட்டி ராமசாமி)//
ஹா..ஹா..இளைய தளபதியும் அரசியல்வியாதி ஆவதற்கான அறிகுறி தெரிந்ததால் ,இந்த நாடு இனிமே உருப்படாது என்ற விரக்தியை அவர் அடைந்திருக்கலாம்..
//Yoga.s.FR said...
ReplyDeleteஇன்னமும் "அவரைக்" காணமே?பிஸியா இருக்காரோ?லீவும் சொல்லல?//
யாரு? தமிழ்வாசியா? அவரு லீவு தான்.
அன்னாவின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அன்னாவின் போராட்ட முறையான காந்தியத்தையோ, இல்லை அவரது போராட்டத்தின் நோக்கத்தையோ குறை கூறவில்லை. அந்த விஷயத்தில் அவருடன் 100% ஒத்துப் போகிறேன். ஆனால் அதற்கு அவர் வைத்த கோரிக்கைதான் யோசிக்க வைக்கிறது. தானே ஒரு குழுவைத்து சட்டவரைவு தயாரித்து, அதை பாராளுமன்றம், எந்தக் கேள்வியும் கேட்காமலும், மாற்றாமலும் கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம்? அது ஜனநாயகத்தையே கேவலப்படுத்துவது அல்லவா?
ReplyDeleteஇன்றைக்கும் ஜனநாயகத்தின் அடிச்சுவடு கூட இல்லாத நாடுகள் எத்தனையோ உள்ள நிலையில், நாம் குறுகிய காலத்திற்குள் மிக முதிர்ச்சியடைந்த ஒரு ஜனநாயகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அன்னா செய்வது அதன் ஆணிவேரையே அசைப்பது போல அல்லவா உள்ளது.
என்னைப் பொருத்த வரை ஊழல் ஒழிப்பை விட ஜனநாயகமே பெரிதாகும். அன்னா செய்து கொண்டிருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுமே என்று அஞ்சுகிறேன்.
அதற்கேற்றார்போல் அன்னா ஏற்கனவே தனது அடுத்த கோரிக்கை தேர்தல் சீரமைப்பு என்று அறிவித்திருக்கிறார். அதற்கும் இப்படி பாராளுமன்றத்தை மிரட்டுவாரா? அன்னா போல் மற்றவர்களும் ஆளுக்கொரு கோரிகையை வைத்து களத்தில் இறங்கினால் என்ன செய்வது?
செங்கோவி said...
ReplyDelete//Yoga.s.FR said...
இன்னமும் "அவரைக்" காணமே?பிஸியா இருக்காரோ?லீவும் சொல்லல?//
யாரு? தமிழ்வாசியா? அவரு லீவு தான்.///Right!
ஒரு வேளை இன்னிக்குத் தான் வேலாயுதம் பாட்டு ரிலீசோ?! !♥தமிழ்வாசி♥! !விஜயை தின்னும் ஆடுகள்! பிரியாணியை திங்க இருக்கும் ரசிகர்கள்!!
ReplyDelete///// ! சிவகுமார் ! said...
ReplyDeleteஇதில் மெயின் மேட்டர் என்னவெனில் இளைய தளபதி சொன்ன பிறகுதான் அன்னா உண்ணாவிரதத்தை கைவிட்டார் என்றும், ஊழலுக்கு எதிராக கேப்டன் செய்யாததையா அன்னா செய்துவிட்டார் என்றும் சிலர் கேள்வி கேட்கின்றனர். (குறிப்பாக பன்னிக்குட்டி ராமசாமி)
//////
யோவ் ரெண்டு டாகுடர பத்தியும் தப்பா பேசுறதே உங்க வேலையா போச்சுய்யா.........
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅன்னாவின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அன்னாவின் போராட்ட முறையான காந்தியத்தையோ, இல்லை அவரது போராட்டத்தின் நோக்கத்தையோ குறை கூறவில்லை. அந்த விஷயத்தில் அவருடன் 100% ஒத்துப் போகிறேன். ஆனால் அதற்கு அவர் வைத்த கோரிக்கைதான் யோசிக்க வைக்கிறது. தானே ஒரு குழுவைத்து சட்டவரைவு தயாரித்து, அதை பாராளுமன்றம், எந்தக் கேள்வியும் கேட்காமலும், மாற்றாமலும் கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம்? அது ஜனநாயகத்தையே கேவலப்படுத்துவது அல்லவா? //
ஜனநாயகம் என்பது நாடாளுமன்றத்துக்குள்ளும், சட்டமன்றத்துக்குள்ளும் மட்டுமே இயங்குவது அல்ல.
அந்த பிரதிநிதிகளின் பணி, மக்கள் கருத்தை மன்றத்தில் ஒலிப்பதே..அது நிகழாத பட்சத்தில் வெளியே மக்கள் கூடுவதைத் தவிர வேறுவழி இல்லை..இதுவும் ஜனநாயக வழிமுறையே..
என் வீட்டுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு கிலோ ரேசன் அரிசி வேண்டும் என்றா அவர் கேட்டார்? அவர் பிரதிபலிப்பது மக்களின் விருப்பத்தைத் தானே..
இதை நம் மக்கள் பிரதிநிதிகள் செய்திருக்க வேண்டும்..(இந்த கருத்தை பரப்பும் புரட்சிவாதிகள், ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை அற்றவர்கள் என்பதையும் அவர்கள் ஜனநாயகத்துக்காக அழுவது ஏன் என்றும் யோசிப்போமாக!)
அன்னாவை உண்மையில் பெருமையுடன் பார்க்குறேன்.
ReplyDelete//துஷ்யந்தன் said...
ReplyDeleteஅன்னாவை உண்மையில் பெருமையுடன் பார்க்குறேன்.//
ஆம் தம்பி!
////செங்கோவி said...
ReplyDeleteஅவர் பிரதிபலிப்பது மக்களின் விருப்பத்தைத் தானே..//////
அரசும் அப்படி எண்ணியதால்தான் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
இது இப்போதைக்கு சரியானதாக தோன்றினாலும், இதை முன்னுதாரணமாக வைத்து இன்னும் என்னென்ன நடக்க போகிறாதோ என்பதே எனது கவலை.அதுவும் இந்தியா போன்ற சாதி, மத, சுயநலவாத அரசியல்வாதிகள் நிறைந்த நாட்டில் கூட்டம் சேர்த்து உண்ணாவிரதம் இருப்பது என்பது எல்லா அரசியல் கட்சிகளாலும் செய்ய முடிந்த ஒன்றே. நாம் மேலும் மேலும் அரசையும் ஜனநாயகத்தையும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////செங்கோவி said...
அவர் பிரதிபலிப்பது மக்களின் விருப்பத்தைத் தானே..//////
அரசும் அப்படி எண்ணியதால்தான் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியது. //
அண்ணே,
லோக்பால் மசோதாங்கிறது 1968லேயே கேட்கப்பட்ட ஒரு விஷயம்..ஆனால் நம் ஊழல்வாதிகள் ஒரு மொன்னைத்தனமான சட்ட வரைவை அப்போ ரெடி பண்ணி கொண்டுவந்தாங்க..ஆனாலும் அதுக்குக்கூட நம் ‘மக்கள் பிரதிநிதிகள்; ஆதரசு தராததால அது சட்டம் ஆகலை..
தொடர்ந்து பல சமூக ஆர்வலர்களால் அது கேட்கப்பட்டுக்கொண்டே வந்தது. யாருமே அதைக் கண்டுக்கலை (நாமளும்!)
அதன்பிறகு வெறும் லோக்பால்லை ஜன்லோக்பால் ஆக்கி, அந்த சட்ட வரைவு ரெடி பண்றதுல மக்களோட நேரடிப் பங்கும் வேணும்னு அன்னா கேட்டார்..
அந்த பழைய டப்பா லோக்பாலை பட்டி பார்த்து சரி பண்ணி, பலதரப்பு மக்களுடன் விவாதித்து இந்த புது லோக்பால் உருவாச்சு..
//ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவின் வரைவுப் பணியில் சாமானியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரி, பழம்பெரும் சமூகப் போராளியும், காந்தியவாதியுமான் அண்ணா ஹசாரே டெல்லியில் இரண்டாவது நாளாக புதன்கிழமை தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.//
இது பழைய செய்தி!
திருடன்கிட்டயே திருட்டை ஒழிக்க சட்டம் ரெடி பண்ணுன்னா எப்படி ரெடி பண்ணுவான்..இந்த சட்ட்த்தின் நோக்கமே ஜனநாயகம் சரியான வழியில் நடக்கணும்னு இருக்கும்போது, இந்த சட்டம் எப்படி ஜனநாயகத்துக்கு எதிரானதாக ஆகமுடியும்?
ReplyDeleteதகவல் உரிமைச்சட்டமும் இப்படி பல போராட்டங்க்ளோட நிறைவேறுனதையும், அன்னாவின் பங்களிப்பு அதுலயும் உண்டுங்கறடதையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.
பொதுமக்களால் தயாரிக்கப்படும் ஒரு சட்ட வரைவு, நமது அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானதாக இல்லாதவரை, அது தவறே இல்லை..
ReplyDeleteஇந்த சட்டம் பெருவாரியான விருப்பம் தானே...உங்களின் விருப்பமும் தானே?
சட்டத்திற்குப் புறம்பான, நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை, யாராலும் மிரட்டி ஜனநாயகத்தில் சட்டமாக்க முடியாது.
//////செங்கோவி said...
ReplyDeleteதிருடன்கிட்டயே திருட்டை ஒழிக்க சட்டம் ரெடி பண்ணுன்னா எப்படி ரெடி பண்ணுவான்..இந்த சட்ட்த்தின் நோக்கமே ஜனநாயகம் சரியான வழியில் நடக்கணும்னு இருக்கும்போது, இந்த சட்டம் எப்படி ஜனநாயகத்துக்கு எதிரானதாக ஆகமுடியும்?
தகவல் உரிமைச்சட்டமும் இப்படி பல போராட்டங்க்ளோட நிறைவேறுனதையும், அன்னாவின் பங்களிப்பு அதுலயும் உண்டுங்கறடதையும் நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.
////////
கண்டிப்பா, RTI சட்டம் வந்ததுல அன்னாவுடைய பங்கை குறிப்பிட்டே ஆகனும்......
//அதுவும் இந்தியா போன்ற சாதி, மத, சுயநலவாத அரசியல்வாதிகள் நிறைந்த நாட்டில் கூட்டம் சேர்த்து உண்ணாவிரதம் இருப்பது என்பது எல்லா அரசியல் கட்சிகளாலும் செய்ய முடிந்த ஒன்றே.//
ReplyDeleteசாதி, மத பிரிவினைகள் நிறைந்த இந்தியாவில், பல பிரிவினை சக்திகளும் துப்பாக்கி ஏந்தி போராடிய பல விஷயங்களை நம் அரசு கண்டுகொண்டதே இல்லை..அவர்களை கடுமையாக ஒடுக்கியே வந்துள்ளது.இப்போதும் ஒடுக்கிக்கொண்டே உள்ளது..
அப்படிப்பட்ட அரசு, இந்தக் கிழவருக்கு ஏன் பயப்படுகிறது? பல உயிர்களை இரக்கமின்றிக் கொல்ல உதவிய நம் அரசு ஏன் இப்போது இந்தக் கிழவருக்கு பயப்படுகிறது?
அரசின் பயம் அன்னாவின் மிரட்டலைக் கண்டு அல்ல..அன்னா ஒருங்கிணைத்துவிட்ட மக்களின் ஊழலுக்கு எதிரான கொந்தளிப்பை!
ReplyDeleteடீக்கடையிலும், இணையத்திலும் புலம்பித் திரிந்த இந்தியன் போராட ஒரு களம் அமைத்துக் கொடுத்துவிட்டார்..அதுவே இங்கு பிரச்சினை..
அன்னா தனி மனிதர் அல்ல..அவரது விருப்பம் தனி மனிதனின் மிரட்டலும் அல்ல..என்று அரசியல்வாதிகள் உணர்ந்ததாலேயே ‘சும்மாவேனும்’ நாடாளுமன்றத்தில் பேசி, பரிந்துரைக்கிறார்கள்..அந்த பயமே அன்னாவின் வெற்றி.
//////செங்கோவி said...
ReplyDeleteபொதுமக்களால் தயாரிக்கப்படும் ஒரு சட்ட வரைவு, நமது அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானதாக இல்லாதவரை, அது தவறே இல்லை..
இந்த சட்டம் பெருவாரியான விருப்பம் தானே...உங்களின் விருப்பமும் தானே?
சட்டத்திற்குப் புறம்பான, நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை, யாராலும் மிரட்டி ஜனநாயகத்தில் சட்டமாக்க முடியாது.
///////
சரிதான், அரசியலமைப்பு எதிரா எந்த சட்டம் வந்தாலும் அதை சுப்ரீம் கோர்ட் நிராகரிக்கலாம்....., ஆனா பொதுமக்களால் தயாரிக்கப்படும் சட்டவரைவுன்னு சொல்லி இருக்கீங்களே, இங்கே யார் பொதுமக்கள்? அதை எப்படி நிர்ணயிப்பது? அதைவைத்து அரசியல் கட்சிகள் விளையாடலாமே? மேலும் இது ஒரு விதிவிலக்காக இருக்கலாமே தவிர இதுவே வழமையாகிட கூடாது.....
அன்னா மீது வெறுப்பு பொழியப்படுவதன் முக்கியக் காரணம் அவர் ‘காந்தியத்தை’ முன்னிறுத்தியதே..
ReplyDeleteநம் நாட்டில் அதிகளவு மக்களால், அதிகளவு வெறுப்படுபவராக ஆக்கப்பட்டுள்ளவர் காந்தி..அவர் பெயரில் ஒரு விஷயம் முன்னெடுக்கப்படுவதை, அவர் பெயரை ரிப்பேர் ஆக்குவதில் பெருத்த ஆர்வம் உள்ள பல குழுக்கள் விரும்பாததே அன்னாவின் மீதான வசையின் அடிப்படை.
நான் பொதுவில் சொல்கின்றேன்..அன்னாவை திட்டுவோரில் 90% பேர், காந்தி மீது வெறுப்பு கொண்டோரே!
சந்தேகம் இருந்தால், போய் கேட்டுப்பாருங்கள்..நன்றி!
/////செங்கோவி said...
ReplyDeleteஅன்னா மீது வெறுப்பு பொழியப்படுவதன் முக்கியக் காரணம் அவர் ‘காந்தியத்தை’ முன்னிறுத்தியதே..///////
இது எனக்கு புதிய கோணம்...... காந்தியத்தின் மீது அவ்வளவு வெறுப்பா? நான் காந்தியத்தை ஆதரிப்பவன், காந்தியம் கிராமியம் சார்ந்த பொருளாதாரம், நேருயிசமோ நகரமயமாக்கப்பட்ட வளர்ச்சி..... இங்குதான் தவறு நிகழ்ந்ததுன்னு நினைக்கிறேன்......
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசரிதான், அரசியலமைப்பு எதிரா எந்த சட்டம் வந்தாலும் அதை சுப்ரீம் கோர்ட் நிராகரிக்கலாம்....., ஆனா பொதுமக்களால் தயாரிக்கப்படும் சட்டவரைவுன்னு சொல்லி இருக்கீங்களே, இங்கே யார் பொதுமக்கள்? அதை எப்படி நிர்ணயிப்பது? அதைவைத்து அரசியல் கட்சிகள் விளையாடலாமே? மேலும் இது ஒரு விதிவிலக்காக இருக்கலாமே தவிர இதுவே வழமையாகிட கூடாது.....//
நமது எந்தவொரு நல்ல சட்டமும் ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் உருவாக்கப்பட்டதே இல்லை..முதலில் பொதுமக்கள் மத்தியில் அது பற்றிய கருத்து திரண்டு வரும்..பலநாள் முணுமுணுப்பாகவே அது தொடரும்..மெதுவாக ஏதாவது ஒரு அரசியல்கட்சி/தலைவர் அதை ஏதாவ்து சுயலாபத்திற்கு கையில் எடுக்கும்..பின் இதே விவாதம் கிளம்பும்.
அப்படி கிளம்பி வந்த அன்னாவின் தொல்லை தாங்காமல், அரசுத் தரப்பில் 5 பேர், மக்கள் தரப்பில் 5 பேர் என்று ஒரு குழு 20110ல் அமைக்கப்பட்டது. அது அரசே ஒத்துக்கொண்ட ‘மக்கள் தரப்பு’!
அந்த குழுவின் பரிந்துரைகளே இவை..இப்போது யார் இவர்கள்..இவர்கள் யார் எங்களை மிரட்ட என்று அலறுகிறார்கள்..
எல்லா நல்ல விஷயங்களையும் இங்கே போராடியே அடைய முடியும்..அந்த போராட்டம் மிரட்டலாகவே அரசால் பார்க்கப்படும்..
இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டங்களைக் கூட அரசை குறிப்பிட்ட ஜாதி மிரட்டும் செயலாகவே இந்த சிந்தனையாளர்கள் சொன்னார்கள்..அதன்பின் என்ன ஆயிற்று? இன்று நாம் சொல்வோமா?
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஇது எனக்கு புதிய கோணம்...... காந்தியத்தின் மீது அவ்வளவு வெறுப்பா? நான் காந்தியத்தை ஆதரிப்பவன், காந்தியம் கிராமியம் சார்ந்த பொருளாதாரம், நேருயிசமோ நகரமயமாக்கப்பட்ட வளர்ச்சி..... இங்குதான் தவறு நிகழ்ந்ததுன்னு நினைக்கிறேன்......//
ஆம்..கிராமங்களே இந்தியாவின் ஆன்மா என்று அவர் உணர்ந்திருந்தார்..பொருளாதாரத் தன்னிறைவை கிராமங்களில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினார்..காந்தியம் போன்றே அதுவும் ரொம்ப மெதுவாக நடக்கும்..அதை நேரு விரும்பவில்லை..உடனடி வளர்ச்சியே நம் நாட்டை ஸ்திரப்படுத்தும் என்று நம்பினார்..அதுவே இன்றைய இந்தியா..
கிராமங்கள் தேய்வதும், நகரங்கள் வளர்வதும் அதனால் விளைந்தவையே..
this is the first post where I saw two people debated very constructivly about a subject with opposing views...
ReplyDeleteotherwise always slinging mud on debating people...
இன்றைய குறளும் பதிவுக்கு ஒத்து வருகிறது!
ReplyDeleteகாங்கிரஸ் காரன் அண்ணா ஹசாறேவுக்கு போராட்டம் பண்ண இடம் ஒருதுக்கித் தரான், எத்தனை நாள் உண்ணா விரதம் அவரு பண்ணனும் என்றும் அவங்களே சொல்றாங்க, ஹசாறேவை நாங்களும் ஆதரிக்கரோம்னு காங்கிரஸ் காரனும் சொல்றான். எனக்கென்னவோ ....ம்ம்ஹும்.... ஏதோ கோல் மால் நடக்குதுன்னு மட்டும் தோணுது, என்னன்னுதான் தெரியலை.
ReplyDelete1.எட்டு நாள் உண்ணாவிரதம் இருந்ததுமே பதறிப் போய் அண்ணாஹசாரேவுடன் பேச்சு நடத்தும் அரசு ஏன் பத்து வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரம் ஷர்மிளாவுடன் இதே போல பேச்சு நடத்த முன்வருவதே இல்லை? ஷர்மிளாவை மட்டும் தற்கொலை முயற்சி என்று கைது செய்து கட்டாய குளூகோஸ் ஏற்றிக் கொண்டிருப்பது ஏன்? அதை ஏன் அண்ணாவுக்குச் செய்யவில்லை?
ReplyDelete2.கறுப்புப் பணம் ஏராளமாக உருவாக்கப்பட்டு, புழங்கிக் கொண்டிருக்கும் சினிமா துறையினருக்கு ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் தார்மிகத் தகுதி உண்டா?
3. இந்தியாவின் மிகப்பெரிய அணு உலைகள் அமைக்கப்படும் கூடன்குளத்தில் அந்தக் கிராம மக்கள் சுதந்திர தினத்தன்று நடத்திய கிராம சபையில் தங்கள் ஊரில் அணு உலை இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறை வேற்றி, ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக அரசு அலுவலகத்துக்குச் சென்று ரேஷன் கார்டுகளைத் திருப்பித் தந்த போராட்டத்தை ஏன் தமிழ், ஆங்கில டி.வி.சேனல்கள் முதல் பெரிய பத்திரிகைகள் வரை தேசியப் பிரச்னையாகக் கருதவில்லை?
நன்றி: http://malaikakitham.blogspot.com/2011/08/blog-post_5409.html
விட்டா செங்கோவியும் பன்னிக்குட்டி ராமசாமியும் பார்லிமென்ட் சண்டைய மிஞ்சிடுவாங்க போல இருக்கே. எப்படியோ நமக்கு பொழுது போனா சரி!!
ReplyDelete//Jayadev Das said...
ReplyDelete2.கறுப்புப் பணம் ஏராளமாக உருவாக்கப்பட்டு, புழங்கிக் கொண்டிருக்கும் சினிமா துறையினருக்கு ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் தார்மிகத் தகுதி உண்டா? //
என்ன ஜெயதேவ் இப்படி பொசுக்குனு சொல்லிட்டீங்க. ரேஷன் கடை ஊழல், கருப்பு பண ஊழல் போன்றவற்றை தட்டிக்கேட்டு திரையில் கலக்கிய நமது ஹீரோக்களை மனம் நோக செய்துவிட்டீர்களே..
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் மாப்பிள என்னை பொறுத்தவரை அன்னாவின் போராட்டம் மிக பெரிய வெற்றிதான்.. அவரிடம் கொடுத்த வாக்குறுதிய அரசியல்வாதிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அவர் மீண்டும் இதே போராட்டத்தை நடத்த தயங்க மாட்டார் அப்போது அதன் விளைவுகள் மோசமாக இ்ருக்கும் இது அந்த அரசியல்வாதிகளுக்கு தெரியும்..
ReplyDeleteஉண்மை தான் இந்த உலகம் நல்ல விசயத்துக்காக போராட வரும் பொழுது எதற்காக என்று பார்க்க வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு அவ தூறு பரப்பும் வேலைகளை கையாலாதவர்கள் செய்துகொன்ன்டு தானிருப்பார்கள்... அவர்களை துட்சமாக தூக்கி எரிந்து விட்டு இந்த கலிகாலத்திலும் வயதான ஒரு மனிதர் சாதித்துக்காட்டிர்க்கிறார் ... ஒவ்வொரு இளைஞரும் உற்றுக்கவனிக்க வேண்டிய விஷயம் கண்டிப்பாக உறுதியாக ஒற்றுமையாக நல்ல விசயத்துக்கு ஒன்று திரண்டால் வெற்றி பெற முடியும் என்பதை நமது அன்ன ஹசாரே நமக்கு வழி காட்டியிருக்கிறார்.... அவரை மனதார கும்ம்பிட்டு விட்டு நாட்டை நேசிப்போம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே...வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
ReplyDeleteதமிழ் மணம் 7
ReplyDeleteமாப்ள நச்!ஜெய் ஹிந்த்!
ReplyDelete//மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிராக உள்ள மனப்பான்மையையும், ஒரு வயதான கிழவர் நினைத்தால்கூட அந்த மக்களை ஒன்றுதிரட்டிவிடும் ஆபத்தையும் நம் ஊழல்வாதிகளுக்கு உறைக்க வைத்ததே இந்தப் போராட்டத்தின் ஆகப் பெரிய வெற்றி!//
ReplyDeleteஅகிம்சை வழியில் சுகந்திரம் அடைந்த காந்திதேசம்...இப்போது...ஒரு வரின் அகிம்சையை மதித்துள்ளது.ஆனால் இதே காந்திதேசம் தான் அன்று ஒரு நாள் எங்கள் மண்ணின் அகிம்சை வழிப்போராட்டத்தை மிதித்தது.புரிந்து கொள்ள முடியவில்லையே.
அண்ணா ஹசாரேவும் இவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. எந்தவொரு காந்தியவாதியும் பதில் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவர்கள் செயல்வீரர்கள். அவர்களது கவனம் எல்லாம் செயலின் மீதே, பேச்சின் மீது அல்ல.
ReplyDelete//
உண்மையில் செயல் வீரர் தான்!வெற்றிக்கான முதல் விதையை விதைத்து விட்டார்!
அதை வளர விடுவார்களா பார்ப்போம்!
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.
ReplyDelete‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.
http://www.vinavu.com/2011/08/28/team-anna/
வெற்றி போல் ஒரு மாயத்தோற்றம்
ReplyDeleteநல்லவர்கள் அனைவரிடமும் ஏதாவது மைனஸ் பாய்ண்ட் இருக்கத்தான் செய்யும் ...அவர்கள் நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செல்லும்போது அதற்க்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதுதான் சிறந்த செயல் ....இப்போதுள்ள அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது அண்ணா கசாரேவிடம் மைனஸ் பாய்ண்ட்டுகள் மிகக் குறைவுதான் ....
ReplyDelete// வெத்து வேட்டு said...
ReplyDeletethis is the first post where I saw two people debated very constructivly about a subject with opposing views...
otherwise always slinging mud on debating people...//
அவரும் காந்தியம் மேல் நம்பிக்கை உள்ளவர் போல் தெரிகின்றார்.அதுகூட காரணமாய் இருக்கலாம்.
// Jayadev Das said...
ReplyDeleteகாங்கிரஸ் காரன் அண்ணா ஹசாறேவுக்கு போராட்டம் பண்ண இடம் ஒருதுக்கித் தரான், எத்தனை நாள் உண்ணா விரதம் அவரு பண்ணனும் என்றும் அவங்களே சொல்றாங்க, ஹசாறேவை நாங்களும் ஆதரிக்கரோம்னு காங்கிரஸ் காரனும் சொல்றான். எனக்கென்னவோ ....ம்ம்ஹும்.... ஏதோ கோல் மால் நடக்குதுன்னு மட்டும் தோணுது, என்னன்னுதான் தெரியலை. //
ப்ரிட்டிஷ்காரன் காந்தியின் போராட்டத்திற்கு இடம் ஒதுக்கித் தந்தபோதும், அவர் அழைத்தபோதெல்லாம் பேசுவார்த்தைக்கு வந்த போதும், அந்த நேரங்களில் காந்தி தன் கோரிக்கைகளில் இருந்து இறங்கி வந்த போதும்......................இதே குற்றச்சாட்டு அப்படியே சொல்லப்பட்டது, இப்போதும் அவரை பிரிட்டிஷ் கைக்கூலி என்று சொல்வோர் இருக்கிறார்கள் என்று தெரியாதா?
// 1.எட்டு நாள் உண்ணாவிரதம் இருந்ததுமே பதறிப் போய் அண்ணாஹசாரேவுடன் பேச்சு நடத்தும் அரசு ஏன் பத்து வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரம் ஷர்மிளாவுடன் இதே போல பேச்சு நடத்த முன்வருவதே இல்லை? ஷர்மிளாவை மட்டும் தற்கொலை முயற்சி என்று கைது செய்து கட்டாய குளூகோஸ் ஏற்றிக் கொண்டிருப்பது ஏன்? அதை ஏன் அண்ணாவுக்குச் செய்யவில்லை?
2.கறுப்புப் பணம் ஏராளமாக உருவாக்கப்பட்டு, புழங்கிக் கொண்டிருக்கும் சினிமா துறையினருக்கு ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் தார்மிகத் தகுதி உண்டா?
3. இந்தியாவின் மிகப்பெரிய அணு உலைகள் அமைக்கப்படும் கூடன்குளத்தில் அந்தக் கிராம மக்கள் சுதந்திர தினத்தன்று நடத்திய கிராம சபையில் தங்கள் ஊரில் அணு உலை இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறை வேற்றி, ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக அரசு அலுவலகத்துக்குச் சென்று ரேஷன் கார்டுகளைத் திருப்பித் தந்த போராட்டத்தை ஏன் தமிழ், ஆங்கில டி.வி.சேனல்கள் முதல் பெரிய பத்திரிகைகள் வரை தேசியப் பிரச்னையாகக் கருதவில்லை?
நன்றி: http://malaikakitham.blogspot.com/2011/08/blog-post_5409.html //
இந்தியாவில் இன்னும் இது போன்று பலபிரச்சினைகள் உள்ளன..ஐரோம் பிரச்சினையை தீர்த்தால், அப்போதும் மீதிப் பிரச்சினயை லிஸ்ட் போட்டு ஏன் ஐரோமிற்கு மட்டும் இந்தச் சலுகை என்று கேள்வி எழுப்பலாம்..ஒரு உதாரணத்திற்குச் சொன்னேன்..ஒரு போராட்டம் மக்களுக்கு நன்மையை மட்டுமே ஏற்படுத்தும் என்றால், அதற்கு ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு இருக்கிறது என்று தெரிந்தால், அரசு பணியும்..ஐரோம் பிரச்சினை காந்தியத்தில் இருந்து வேறுபட்டது என்பதை மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்..
// ! சிவகுமார் ! said...
ReplyDeleteவிட்டா செங்கோவியும் பன்னிக்குட்டி ராமசாமியும் பார்லிமென்ட் சண்டைய மிஞ்சிடுவாங்க போல இருக்கே. எப்படியோ நமக்கு பொழுது போனா சரி!!//
நண்பேண்டா!
//காட்டான் said...
ReplyDeleteவணக்கம் மாப்பிள என்னை பொறுத்தவரை அன்னாவின் போராட்டம் மிக பெரிய வெற்றிதான்.. அவரிடம் கொடுத்த வாக்குறுதிய அரசியல்வாதிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அவர் மீண்டும் இதே போராட்டத்தை நடத்த தயங்க மாட்டார் அப்போது அதன் விளைவுகள் மோசமாக இ்ருக்கும் இது அந்த அரசியல்வாதிகளுக்கு தெரியும்..//
ஆம் மாம்ஸ்..இது முடிவு அல்ல..நீண்ட போராட்டத்தின் இடைவேளையே!
// மாய உலகம் said...
ReplyDeleteகண்டிப்பாக உறுதியாக ஒற்றுமையாக நல்ல விசயத்துக்கு ஒன்று திரண்டால் வெற்றி பெற முடியும் என்பதை நமது அன்ன ஹசாரே நமக்கு வழி காட்டியிருக்கிறார்.... அவரை மனதார கும்ம்பிட்டு விட்டு நாட்டை நேசிப்போம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே...வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் //
அது தான் அன்னாவின் மாபெரும் வெற்றி.
// விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள நச்!ஜெய் ஹிந்த்! //
ரைட்டு மாப்ள.
// விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள நச்!ஜெய் ஹிந்த்! //
ரைட்டு மாப்ள.
// K.s.s.Rajh said...
ReplyDeleteஅகிம்சை வழியில் சுகந்திரம் அடைந்த காந்திதேசம்...இப்போது...ஒரு வரின் அகிம்சையை மதித்துள்ளது.ஆனால் இதே காந்திதேசம் தான் அன்று ஒரு நாள் எங்கள் மண்ணின் அகிம்சை வழிப்போராட்டத்தை மிதித்தது.புரிந்து கொள்ள முடியவில்லையே.//
ஆம்..அது துரதிர்ஷ்டவசமானது தான்..இதற்கான விரிவான பதிலை ஒருநாள் பதிவாக எழுதுகின்றேன்.
// கோகுல் said...
ReplyDeleteஉண்மையில் செயல் வீரர் தான்!வெற்றிக்கான முதல் விதையை விதைத்து விட்டார்!
அதை வளர விடுவார்களா பார்ப்போம்! //
அவர் தொடர்வார் என்று நம்புகிறேன்..
// karthik said...
ReplyDeleteஅண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.
‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.
http://www.vinavu.com/2011/08/28/team-anna/ //
ஹா..ஹா..நல்ல தகவல் நண்பரே..பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteவெற்றி போல் ஒரு மாயத்தோற்றம் //
அப்படியா..இது எனக்குத் தெரியாமப் போச்சே!
அண்ணே சில விஷயங்கள் இப்பதான் புரியுது!
ReplyDeleteசரியான கோணத்தில் சரியாக எடுத்து வைத்து உள்ளீர்கள். அதுவும் அந்த தீப்பிடித்த வீடு உதாரணம் உங்களுடைய தனி முத்திரை. இப்படிப்பட்ட எளிமையான விளக்கங்களே அவசியதேவை. பராட்டுக்கள்.
ReplyDeleteவகுப்பறையில் என் ஆக்கம் இலண்டன் செய்திகள் பகுதி=2 28 ஆகஸ்டு அன்று வெளியாகியுள்ளது. படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
எது துரோகம்? யார் துரோகிகள்?
ReplyDeleteயாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
தமிழக மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் சோனியா காந்தி,
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி சோனியா காந்தி ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -
துரோகம் என்றால் காந்தி!
அன்னா ஹசாரேயின் இந்தப் போராட்டம் வெற்றியளித்தது என்றால் அதன் காரணம் புரிந்து கொள்ளக் கூடியது!மக்கள் இப்போதெல்லாம் விழிப்பாகவே இருக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்கள் வயிற்றில் புளி கரைக்கிறது!வெளி நாட்டில்(சுவிஸ்)தூங்கும் கறுப்புப் பணத்தையும் வெளிக் கொணர வேண்டும் என்று யாராவது போராட்டம் தொடங்கினால்??????????????????????
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDelete”இந்த அரசை நம்ப முடியாது.நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் “என்று சாந்திபூசன் சொல்லியிருக்கிறார். சரிதானே!
அது ஒண்ணுமில்ல நண்பா. சில குரூப்புகள் போராட்டம்னு நடந்தா அது நாமதான் நடத்தணும். இல்ல நம்ம பெற சொல்லி நடத்தணும். இல்லைனா அதுக்கு சாதி, வர்க்கம் அப்படின்னு ஏதாவது கலர் பூசிடணும் என்று நினைக்கிறார்கள். ஏன்னா இவரு பாட்டுக்கு பெரிய ஆள் ஆகிட்டா, ஏற்கனவே காலி ஆகி இருக்குற நம்ம கூடாரத்துல ஒரு பய இருக்க மாட்டான் அப்படிங்குர பயம்தான் காரணம்.
ReplyDeleteஅன்னா ஹசாரே மாற்றத்திற்கான ஒரு தீப்பொறி
ReplyDelete// ஜீ... said...
ReplyDeleteஅண்ணே சில விஷயங்கள் இப்பதான் புரியுது! //
சரி தம்பி!
// kmr.krishnan said...
ReplyDeleteசரியான கோணத்தில் சரியாக எடுத்து வைத்து உள்ளீர்கள். அதுவும் அந்த தீப்பிடித்த வீடு உதாரணம் உங்களுடைய தனி முத்திரை. இப்படிப்பட்ட எளிமையான விளக்கங்களே அவசியதேவை. பராட்டுக்கள்.
வகுப்பறையில் என் ஆக்கம் இலண்டன் செய்திகள் பகுதி=2 28 ஆகஸ்டு அன்று வெளியாகியுள்ளது. படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.//
பாராட்டுக்கு நன்றி ஐயா..வருகின்றேன்.
// raana said...
ReplyDeleteஎது துரோகம்? யார் துரோகிகள்?
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
தமிழக மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் சோனியா காந்தி,
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி சோனியா காந்தி ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை -
துரோகம் என்றால் காந்தி! //
இதே பதிவிலேயே பகத்சிங் விஷயம் பற்றி ஆதாரத்துடன் எழுதி உள்ளேன்..அதன்பிறகும் அதே அவதூறைச் சொல்வது ஏன்?..உங்கள் நோக்கம் தான் என்ன?
ஓட்டுக்காக, மக்களிடம் தங்களை காந்தியின் அரசியல் வாரிசாக காட்டிக்கொள்ள நேரு பரம்பரை காந்தி ஆன கேவலமான வரலாறு தெரியாதா உங்களுக்கு? காந்திக்கும் அந்தக் குடும்பத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரியாதா?..நல்லது..அப்படியே இருங்கள்!
// Yoga.s.FR said...
ReplyDeleteஅன்னா ஹசாரேயின் இந்தப் போராட்டம் வெற்றியளித்தது என்றால் அதன் காரணம் புரிந்து கொள்ளக் கூடியது!மக்கள் இப்போதெல்லாம் விழிப்பாகவே இருக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்கள் வயிற்றில் புளி கரைக்கிறது!வெளி நாட்டில்(சுவிஸ்)தூங்கும் கறுப்புப் பணத்தையும் வெளிக் கொணர வேண்டும் என்று யாராவது போராட்டம் தொடங்கினால்?????????????????????? //
அதுவும் இப்போது ஆரம்பித்துள்ளது..ஒருநாள் வலுப்பெறும்.
// சென்னை பித்தன் said...
ReplyDeleteஅருமையான பதிவு!
”இந்த அரசை நம்ப முடியாது.நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் “என்று சாந்திபூசன் சொல்லியிருக்கிறார். சரிதானே! //
உண்மை தான்...விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.
// பாலா said...
ReplyDeleteஅது ஒண்ணுமில்ல நண்பா. சில குரூப்புகள் போராட்டம்னு நடந்தா அது நாமதான் நடத்தணும். இல்ல நம்ம பெற சொல்லி நடத்தணும். இல்லைனா அதுக்கு சாதி, வர்க்கம் அப்படின்னு ஏதாவது கலர் பூசிடணும் என்று நினைக்கிறார்கள். ஏன்னா இவரு பாட்டுக்கு பெரிய ஆள் ஆகிட்டா, ஏற்கனவே காலி ஆகி இருக்குற நம்ம கூடாரத்துல ஒரு பய இருக்க மாட்டான் அப்படிங்குர பயம்தான் காரணம்.//
தெளிவான பின்னூட்டம்..நன்றி பாலா!
// FOOD said...
ReplyDeleteநல்ல விஷயமென்பதால் நம் அனைவருக்கும் இதை வெற்றி பெறச் செய்வதில் பங்கிருக்கிறது.//
ஆம்..இது அனைவரின் கடமை..மாற்றி மாற்றி குறை சொல்வதால், ஆகப்போவதில்லை.
//அம்பலத்தார் said...
ReplyDeleteஅன்னா ஹசாரே மாற்றத்திற்கான ஒரு தீப்பொறி //
கரெக்ட் சார்...அதை வளர்த்தெடுக்க வேண்டியது நம் பொறுப்பு..ஆனால் நம் மக்கள்..
வணக்கம் மாப்பிள என்னை பொறுத்தவரை அன்னாவின் போராட்டம் மிக பெரிய வெற்றிதான்.. அவரிடம் கொடுத்த வாக்குறுதிய அரசியல்வாதிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அவர் மீண்டும் இதே போராட்டத்தை நடத்த தயங்க மாட்டார் அப்போது அதன் விளைவுகள் மோசமாக இ்ருக்கும் இது அந்த அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
ReplyDeleteகாட்டான் சொன்னதுதா சரீன்னு தோணுது .எதுக்கும் உங்க அரசியல் விவகாரம் எனக்கு வேண்டாம் நான் நட்போடு தமிழ்மணம் 15 போட்டுட்டன் .காந்தித்தாத்தா அழகா இருக்குறார் .சத்தியமா இது என்னோட சொந்தக் கருத்து .ஹி ...ஹி ...ஹி ..
நன்றி சகோ பகிர்வுக்கு
செங்கோவி உங்கள் பதிவு கருத்துகள் உண்மைதான்...
ReplyDelete// அம்பாளடியாள் said... [Reply]
ReplyDeleteகாந்தித்தாத்தா அழகா இருக்குறார் .சத்தியமா இது என்னோட சொந்தக் கருத்து .//
ஆம் சகோ..இந்தியாவிலேயே அழகானவர் காந்திஜி தான்.
// தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteசெங்கோவி உங்கள் பதிவு கருத்துகள் உண்மைதான்...//
ஓகே தமிழ்வாசி!
அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்.
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/08/blog-post_28.html
அருந்ததி ராயும் தன் பங்குக்கு காரி உமிழ்ந்திருக்கிறார்!
ReplyDelete// K.s.s.Rajh said...
ReplyDeleteஅகிம்சை வழியில் சுகந்திரம் அடைந்த காந்திதேசம்...இப்போது...ஒரு வரின் அகிம்சையை மதித்துள்ளது.ஆனால் இதே காந்திதேசம் தான் அன்று ஒரு நாள் எங்கள் மண்ணின் அகிம்சை வழிப்போராட்டத்தை மிதித்தது.புரிந்து கொள்ள முடியவில்லையே.//
ஆம்..அது துரதிர்ஷ்டவசமானது தான்..இதற்கான விரிவான பதிலை ஒருநாள் பதிவாக எழுதுகின்றேன்
ஆமா மாப்பிள எனக்கும் அந்த வருத்தம் இன்னும் கூடுதலாக இருக்கின்றது.. ஏன்னா அன்றய அந்த போராட்டத்தில இலங்கையில் இருக்கும்போது ஆதரவு தெரிவித்து ஒவ்வொரு நாளும் நல்லூர் வீதியில நின்றது மனக்கண் முன் நிற்கிறது.. எங்களிடம் ஓட்டு இல்லை அதுதான் அப்படி விட்டுவிட்டார்கள்.. இதைப்பற்றிய உங்கட பதிவ ஆவலோடு எதிர்பாக்கிறேன்...
//Yoga.s.FR said...
ReplyDeleteஅருந்ததி ராயும் தன் பங்குக்கு காரி உமிழ்ந்திருக்கிறார்! //
அருந்ததி ராயின் பன்னிரெண்டு பொய்கள் :
http://www.gandhitoday.in/2011/08/blog-post_25.html
//அருள் said...
ReplyDeleteஅண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்.//
என்ன அநியாயம் பாருங்கய்யா..ஆனாலும் பரவாயில்லை..அங்க இருந்த ஒரு மரத்தைகூட வெட்டாம போனாங்களே..அதுவரைக்கும் சந்தோசம் தான் ஐயா!
ஆமா இது வெற்றியா?
ReplyDelete//காந்தியம் எப்போதும் சமரசத்தை நாடுவது, எல்லோருடனும் நட்புக்கரம் நீட்டி அவரது ஆதரவையும் பெறவே அது முயலும். இந்த அடிப்படைப் புரிதல் இன்றி, அவர் மதவாதிகளின் கைக்கூலி என்றார்கள். இதே வழிமுறை மூலம் சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும், நமக்கு காந்தியம் பற்றிப் புரியவே இல்லை. காந்தியை அறிந்து கொள்ள நாம் முயலவேயில்லை என்பதையே இது காட்டுகிறது.
ReplyDelete’லோக்பால் வந்துவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா ‘ என்ற கேலிப்பேச்சு இன்னொரு பக்கம். சினிமாவில் நடப்பது போல், மெசின் கன்னை எடுத்து படபடவென ஊழல்வாதிகளைச் சுட்டு ஒரே நாளில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இங்கு பிரச்சினை நம் ஜனநாயக அமைப்பில் உள்ள ஓட்டை தானேயொழிய, இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் போனால், வேறொருவர் வந்தும் இதையே செய்வார். எத்தனை பேரைச் சுடுவது?
//
அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள்.
//செங்கோவி said... [Reply]
ReplyDeleteமக்களை திரட்டமுடியும் என்று காட்டியதே மசோதாவை விடவும் பெரிய வெற்றி.
//
உண்மை. இதுவே மெய்யான பலம். நாடு நமது என்கின்ற உணர்வே மிக்க பலமும் மேன்மையானதும் கூட..
This comment has been removed by the author.
ReplyDelete//செங்கோவி said... [Reply]
ReplyDeleteஅரசின் பயம் அன்னாவின் மிரட்டலைக் கண்டு அல்ல..அன்னா ஒருங்கிணைத்துவிட்ட மக்களின் ஊழலுக்கு எதிரான கொந்தளிப்பை!
டீக்கடையிலும், இணையத்திலும் புலம்பித் திரிந்த இந்தியன் போராட ஒரு களம் அமைத்துக் கொடுத்துவிட்டார்..அதுவே இங்கு பிரச்சினை..
அன்னா தனி மனிதர் அல்ல..அவரது விருப்பம் தனி மனிதனின் மிரட்டலும் அல்ல..என்று அரசியல்வாதிகள் உணர்ந்ததாலேயே ‘சும்மாவேனும்’ நாடாளுமன்றத்தில் பேசி, பரிந்துரைக்கிறார்கள்..அந்த பயமே அன்னாவின் வெற்றி.
//
இதுதான் இப்போது வெளிப்பட்ட மிகப் பெரியதொரு உண்மை..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//என்னைப் பொருத்த வரை ஊழல் ஒழிப்பை விட ஜனநாயகமே பெரிதாகும். அன்னா செய்து கொண்டிருப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுமே என்று அஞ்சுகிறேன்.
அதற்கேற்றார்போல் அன்னா ஏற்கனவே தனது அடுத்த கோரிக்கை தேர்தல் சீரமைப்பு என்று அறிவித்திருக்கிறார். அதற்கும் இப்படி பாராளுமன்றத்தை மிரட்டுவாரா? அன்னா போல் மற்றவர்களும் ஆளுக்கொரு கோரிகையை வைத்து களத்தில் இறங்கினால் என்ன செய்வது? //
உங்கள் அச்சம் மதிக்கப்படக்கூடியதே..
ஆனால் நாடே எந்தப் பிரிவினையும் இல்லாது பெறக்கூடிய நன்மையான கோரிக்கைகள் மட்டுமே இத்தகைய வரவேற்பைப் பெறும்.
அதிலும் ஊழலுக்கெதிராக நடந்த இந்தப் போராட்டம் பெரும் அரசியல் வாதிகளின் சாயத்தை வெளுத்ததோடல்லாமல் மக்களிடையே மக்களின் சக்தி பற்றிய ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கதே என நினைக்கிறேன்..
அருமையான பதிவுக்கும் உரையாடலுக்கும் நன்றிகள்.
ReplyDeleteGod Bless You.
வீதிக்கு இறங்கி போராட வாருங்கள் என்றாலும் வரமாட்டார்கள் ,அப்படி போராடுபவர்களையும் பழிப்பார்கள் ,காந்திய போராட்டம் என்பது தீர்மானமானது அதன் இலக்கு அடைய பல காலமாகும் ,ஆனால் நிலையானது .இங்கே எல்லாவற்றுக்கும் காந்தி தேவைபடுகிறார் ,ஒரு முறை பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது ,இருவர் தங்கள் மகன்களை பற்றி பேசி கொண்டிருந்தார்கள் ,அவர்கள் தவறான பாதையில் செல்வதாகவும் அது குறித்து வருத்தமாக உரையாடிகொண்டிருந்தார்கள் ,சரி விடுங்க சார் ,'காந்தி மகனே திருட்டு பயதானாம் ,நம்ம மகன்கலாம் எம்மாத்திரம் ',என்றார் , நான் பார்த்தேன் ,எதகொண்டி எதோடையா லிங்க் பண்ற நீ உன் மகன சரியா வளக்கிறத விட்டு புட்டு ,என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன் ,இவர்களிடம் காந்திக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள் என்று கேட்டால் தெரியாது என்று முழிப்பார்கள் .இவர்களின் காந்தியை பற்றிய புரிதல்கள் இவ்வளவே , சமீபத்தில் கூட கூகுல் பஸ்ஸில் ,பகத்சிங் கொலையை காந்தி ஆதரித்தார் என்று எழுதி முடிவில் ஒரு கேவலமான கெட்ட வார்த்தை போட்டு ,அதை தொடர்ந்து வந்த கமெண்ட்டும் மிக கேவலமாக இருந்தது ,என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் ஏன் இவ்வளவு தவறான பரப்புரைகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை
ReplyDeleteலோக்பால் -இதை வெற்றி, தோல்வி, மாயத்தோற்றம் என்று கூறுவதைவிட ,இதை ஏன் ஒரு முயற்சியாக பார்க்ககூடாது ,இதன் மூலம் அதிகாரத்தில் இருப்போருக்கு ஒரு சிறு அச்சம் வந்திருக்குமே ,காங்கரெஸ் என்னும் பாரம்பரியத்தின் அடையாளமாக இன்று ஊழல் தானே உள்ளது ,நேற்றுதான் ஒன்றை தெரிந்து கொண்டேன் ,இதை இவ்வளவு காலம் கழித்து தெரிந்து கொண்டதற்கு வருத்தபடுகிறேன் ,நம் பிரதமர் மக்களால் தேர்ந்தெடுக்க படாத ஒரு மேல் சபை உறுப்பினர் என்றும் ,இந்திய பிரதமர் வரலாற்றில் இதுதான் முதல் முறையாம் இப்படி ஒரு பிரதமர் நமக்கு கிடைத்தற்கு நாம் உண்மைலே பெருமைப்பட்டு கொள்ளவேண்டும் ,நம்மால் தேர்ந்தடுக்கபடாத ஒருவர் நம்மை ஆள்கிறார் ,அதுவும் செயல் பட தெரியாமல் அல்லது முடியாமல் , பிரதமரின் பணி என்னவென்று கேட்டால் கூட ,அதை பற்றி எனக்கொன்றும் தெரியாது என்று கூறினாலும் கூறுவார் இந்த பொருளாதார மேதை ,
காங்கரசின் இத்தனை வருட ஆட்சியில் ஊழல் மட்டுதானே வளர்ச்சி கண்டிருக்கிறது ,நாளை வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் எதிராகத்தானே இந்த லோக்பால் செயல்படும்
// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஆமா இது வெற்றியா? //
நீங்க ஏன் இன்னைக்காவது என் பதிவைப் படிக்கக்கூடாது?
//N.Manivannan said...
ReplyDeleteவீதிக்கு இறங்கி போராட வாருங்கள் என்றாலும் வரமாட்டார்கள் ,அப்படி போராடுபவர்களையும் பழிப்பார்கள் ,காந்திய போராட்டம் என்பது தீர்மானமானது அதன் இலக்கு அடைய பல காலமாகும் //
உண்மை மணி...(ஆம், இது ஸ்பேமில் தான் இருந்தது!!)
இப்ப எல்லாரும் பயப்படுகிறார்கள் அந்த கிழவர் இப்பிடியே எல்லாத்துக்கும் அரசை மிரட்டுவாரென்னு.. அட நல்ல விசயத்துக்குதானே இப்பிடி செய்கிறார் அத விட அடுத்த அவரின் தேர்தல் சீர்திருத்த போராட்டம் சில வேளையில் வெற்றி பெறாமல் போகும் சாத்தியமே அதிகம்.. ஏனெனில் இப்பொது இருக்கும் தேர்தல் முறை சரியானது என்றே மக்கள் நினைக்கிறார்கள்.. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. ஊழலுக்கெதிரான போராட்டமும் இதுவும் வெவ்வேறானவை.. மாப்பிள நான் நினைப்பதை சொல்கிறேன் சத்தியமா நானா யோசித்தேன்..
ReplyDelete@வெட்டிப்பேச்சு
ReplyDeleteஹா..ஹா..சாரி பாஸ்..அதை தூக்கிடறேன்.
காட்டான் said...
ReplyDelete// ஊழலுக்கெதிரான போராட்டமும் இதுவும் வெவ்வேறானவை.. //
ஆம்..உண்மை தான் மாம்ஸ்!
//மாப்பிள நான் நினைப்பதை சொல்கிறேன் சத்தியமா நானா யோசித்தேன் //
இவ்வளவு டீசண்டாவும் ’நானா’ யோசிக்கலாமா?..அவ்வ்!
வணக்கம் பாஸ்,
ReplyDeleteநான் மிட் நைட்டிலை வரலை என்றதும், இங்கே பெரிய ரணகளமே நடக்கிறது போல இருக்கே?
ஊழலற்ற இந்தியா உருவாக வேண்டும் எனும் எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்தவர்.......என் பார்வையில் ஹசாரே ஆகத் தான் இருப்பார்.
ReplyDeleteஊழலில்லாத பாரதம் உருவாக வேண்டும் எனும் எண்ணத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்வதற்கான பிரச்சாரப் பீரங்கியாகவும் ஹசாரே அவர்களே செயற்பட்டுள்ளார். லோக்பாலின் வெற்றியும் இதன் மூலமே கிடைத்துள்ளது எனலாம். ஆக எவ்வளவு தான் ஹசாரேயைப் பற்றிப் பிறர் வசைபாடினாலும், ஹசாரேயின் பணியின் மூலம் பெரும்பான்மையான மக்களுக்கு ஊழலற்ற சமூகம் உருவாக வேண்டும் எனும் எண்ணம் உருவாகியுள்ள்ளது என்பது நிஜம்.
ReplyDeleteநான் 2 லேட்...சாரி லேடாயிட்டு...ஹி ஹி..
ReplyDeleteஎன் வோட்டு அண்ணாவுக்கே...நம்ம செங்கோவி அண்ணாவுக்கும்...
அன்னா ஹசாரே என்ற பெரியவரின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து வணங்குகிறேன்..
ReplyDeleteஅதேவேளையில் ஊழல், லஞ்சலாவண்யம்,வன்முறை வெறியாட்டக் கும்பலைக் கையில்கொண்டு செயல்படும் ஆதிக்கசக்திகள் என்று முற்றிலும் புரையோடிக்கிடக்கும்
இந்தியாவைக்கண்டு வருத்தம் அடைவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியுமா என்றகேள்விதான் எழுகிறது..
ராகுல்காந்தி சொல்லியிருக்கும் விஷயம் போல இந்த சட்டமசோதா தாக்கலினால் மட்டுமே ஊழலை ஒழித்துவிடமுடியுமா என்ற கேள்வி சிந்திக்கவேண்டிய கேள்வி..
ஊழலை இன்றுவரை வேடிக்கைபார்த்து வளர்த்துவிட்ட மக்களும் இந்த அரசியல்கட்சிகளின் பின்னே இன்றுவரையிலும் மவுனசாட்சியாகப் பயணித்திருக்கின்றனர்
என்பதுதானே உண்மை..
'ஊழல் ரேசைத் துவங்கி அதிலே ஆழமாக கருத்தூன்றி ஜெயிப்பவருக்குத்தான் வெற்றிமாலை' என்ற கொள்கையை அடிப்படையாய்க் கொண்டு செயல்பட்ட கட்சிகள்
ஆதிக்கத்தில் மதிமயங்கிக்கிடக்கும் மக்கள் இன்று ஊழல் ரேசில் வெற்றிபெற்றவரை குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது..
எதிராளிகள் என்னமோ உத்தமர்கள் போலே..கணக்கிட்டுப்பார்த்தால் இந்தியாவிலே ஊழலற்ற தலைவர்கள் என்று தேடினால் விரல்விட்டுத்தான் எண்ணமுடியும்..
இப்படி ஒன்றிரண்டு தலைகளை வைத்து இந்தியா போன்ற பெரிய நாட்டை நிர்வகிக்கத்தான் முடியுமா?
வீண் ஜம்பம்தான்..இந்த ஜாம்பவான்கள் லிஸ்டிலே இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திப்பிடிக்கும் கம்பெனி முதலாளிவர்க்கம் முழுமுதலாக நிற்கிறதே?
இவர்களை ஊழல்குற்றத்திலே கைதுசெய்துவிட்டு இந்தியா எங்கே போகும்?
ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து யார்யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால்
இந்தியப் பொருளாதாரமும் அரசியல் ஸ்திரத்தன்மையும் ஆட்டங்கண்டுவிடாதா?
பெயர்களை வெளியிடாவிட்டாலும் குறைந்தபட்சம் ஸ்விஸ்வங்கிப்பணத்தை வெளியில்கொண்டுவந்து இந்திய சேமிப்பில் சேர்க்குமா இந்திய அரசாங்கம்?
உதாரணத்துக்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக்கொள்வோம்..
ஊழலை முன்னின்று நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் ராசா கைதுசெய்யப்பட்டதுடன் பின்புலமாக இருந்து செயல்படத்தூண்டிய நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டதா?
நிறுவன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்களே ஒழிய அதனால் லாபமடைந்த முதலாளிகளைத் தண்டிக்க முடியுமா?
நிறுவனங்கள் அடைந்த லாபங்களை இந்திய அரசாங்கம் மீட்டுக்கொடுக்குமா?
The Comptroller and Auditor-General of India (CAG) சொன்னபடி கிட்டத்தட்ட ஒன்னேமுக்கால் லட்சம்கோடி இந்திய ரூபாயை மீட்டுத்தருமா?நடைமுறையில் முடியுமா?
எல்லாம் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரம் படைத்த பிரதமர் கடைசியில் துறைமந்திரியை கைதுசெய்துவிட்டு
விஷயத்தைக் கிடப்பில்போட்டிடுக்கும் அவலநிலையை என்னவென்று சொல்வது?
சீனாவோ,பாகிஸ்தானோ இந்தியாவின் பகுதிக்குள் இன்னும் ஊடுருவி இடங்களைப் பிடித்தபின்
பாதுகாப்புமந்திரியை காரணம் சொல்லி அவரைக் கைது செய்து விட்டால் இழந்த பகுதிகள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடுமா?
அதுபோலத்தான் இது..
முதுகெலும்பில்லாத தலைவர்களைக் கொண்ட இந்தியாவைப் பற்றிய அவநம்பிக்கைதான் மென்மேலும் வளர்கிறது..
பாவம் இந்தியா..பாவம் தமிழன்..பாவம் காந்தி..பாவம் அன்னா ஹசாரே..
மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்ததில் ஹசாரேவுக்கு வெற்றிதான்!
ReplyDelete