உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்?
‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த அதே மதிப்புடன் தான் இப்போது இருக்கிறதா? அப்போது எங்கள் ஊர் தியேட்டரில் டிக்கெட் விலை 3 ரூபாய். 333 ஷோ இந்த ஆயிரம் ரூபாயை வைத்துப் பார்க்க முடியும். இப்போது டிக்கெட் விலை 60 ரூபாய். (முதல் நாள் என்றால் >150 தான்). உங்களால் 16 ஷோ தான் பார்க்க முடியும். என்ன ஆயிற்று அந்தப் பணத்தின் மதிப்பு?
இதுக்குப் பேர் விலைவாசி ஏற்றம் என்று நாம் சொல்கிறோம். பொருட்களின் விலை ஏற்றத்தை வைத்தே இதை நாம் குறிப்பிடுகிறோம். பொருளாதார வல்லுநர் இதையே பணத்தின் மதிப்புக்கு நேரும் பாதிப்பை வைத்து பணவீக்கம்(Inflation) என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எத்தனை சதவீதம் பொருட்களின் விலையானது கூடி உள்ளது / அதாவது பணத்தின் மதிப்பானது குறைந்து உள்ளது என்று கணக்கிடப்படுவதே பணவீக்க விகிதம்.
மீண்டும் ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவோம். நீங்கள் அதே 1991ம் வருடம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கிராம் தங்கம் வாங்கி வைக்கின்றீர்கள். அதை அதே பீரோவில் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து, இப்போது திறந்து பார்த்தால்.........அதே 2 கிராம் தங்கம் தான் இருக்கும், ஆனால் 5600 ரூபாய் மதிப்புடன்.
பணத்தை பணமாக வைத்திருப்பதன் ஆபத்து புரிகின்றதா? அது ஒவ்வொரு வருடமும், இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஒவ்வொரு நாளும் தன் மதிப்பை இழந்து கொண்டே உள்ளது. சராசரியாக 7.5% என்ற அளவில் பணவீக்க விகிதம் உள்ளது. அதாவது சென்ற ஆகஸ்ட்டில் நீங்கள் நூறு ரூபாய் வைத்திருந்தால், அது தன் மதிப்பில் 7.5 ரூபாயை இழந்து இன்று வெறும் 92.5 ரூபாயாகவே உங்கள் கையில் உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலகப் பங்குச் சந்தைகளில் பல லட்சம் கோடிகளில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தினமும் பல லட்சம் கோடியில் வர்த்தகம் நடந்துகொண்டே உள்ளது. அவர்களுக்கு ஒரு நாள் பணத்தை சும்மா வைத்திருந்தாலும், அது பணவீக்கத்தால் பெரிய அளவில் மதிப்பை இழக்கும்.
தற்பொழுது அமெரிக்காவில் கிளம்பியுள்ள கடன் தர வரிசைப் பிரச்சினை, பங்குச்சந்தைகளை கடும் வீழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஐரோப்பிய வங்கிகளும் கடும் நிதிச்சிக்கலில் இருப்பதாக வரும் தகவல் வேறு ;எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று முதலீட்டு நிறுவனங்களை பதற வைக்கிறது. எனவே தங்களிடம் உள்ள பங்குகளை பயத்தில் விற்றுத் தள்ளுகிறார்கள். அப்படி விற்ற பின் கிடைக்கும் பணத்தை கையில் வைத்திருந்தால், பணவீக்கம் அதைச் சாப்பிட்டு விடும். கொதிக்கும் எண்ணெய்க்குப் பயந்து, நெருப்பில் விழுந்த கதையாகி விடும். அப்போ என்ன தான் செய்வது?
மேலே உள்ள உதாரணத்தைப் படித்த உங்களுக்குப் புரிந்திருக்கும், அதை தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று. அதையே அவர்களும் செய்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் திடீரென்று தங்க மார்க்கெட்டில் நுழைந்தால் என்ன ஆகும்?
ஒரு பொருளுக்கு தேவை அதிகமானால், அதன் விலை உயரும் என்று பொருளாதார விதி சொல்கிறது. நம் விதியும் அதையே சொல்வதால், வேறு வழியின்றி தங்கம் விலை ஏறுகின்றது. நம் மாதிரி குடும்பஸ்தர்களுக்கு அதுவே ஆப்பு வைக்கின்றது.
எனவே தங்க விஷயத்தில் பணவீக்கம் மற்றும் பங்குச்சந்தை செலுத்தும் ஆதிக்கத்தை கவனத்தில் வைப்போம். உபரியாக(!) பணம் இருந்தாலோ, அல்லது திருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம்.
5 வயது குழந்தைக்கு 1991ல் தங்கம் வாங்கி வைத்திருந்தால், இப்போது அவர்களின் மனநிலை எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தங்க முதலீட்டை தள்ளிப்போடாமல் இருப்பதன் அருமை புரியும்.
இன்னும் இது பற்றிப் பேசினால், டெக்னிகல் விஷயங்களுக்குள் நுழைந்து தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதால்............விடு ஜூட்!
கமென்ட் சுர்ர்ர்ர்
ReplyDeleteஅமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்)>>>
ReplyDeleteஎன்ன தலைப்பு இது...?
"உன் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குதே" பாட்டு மாதிரில இருக்கு?
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteகமென்ட் சுர்ர்ர்ர்//
தமிழ்வாசி சர்ர்-ன்னு வந்துட்டாரே!
உங்களால் 16 ஷோ தான் பார்க்க முடியும். என்ன ஆயிற்று அந்தப் பணத்தின் மதிப்பு?>>>
ReplyDeleteமதிப்பு கொறஞ்சு போச்சு...
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்)>>>
என்ன தலைப்பு இது...?
"உன் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குதே" பாட்டு மாதிரில இருக்கு?//
இதுலயும் டாகுடரை இழுக்கணுமா..சும்மா இரும்யா..
ஏதாவது பொருளாதார ரீதியா பின்னூட்டம் போடவும்!
திருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம். >>
ReplyDeleteஇந்த காலத்துல எப்பவுமே வாங்க முடியாதே...
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதிருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம். >>
இந்த காலத்துல எப்பவுமே வாங்க முடியாதே..//
இப்போ உள்ள பிரச்சினை கொஞ்சம் ஓயவும் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க..அப்போ வாங்கலாம்!
செங்கோவி said...
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்)>>>
என்ன தலைப்பு இது...?
"உன் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குதே" பாட்டு மாதிரில இருக்கு?//
இதுலயும் டாகுடரை இழுக்கணுமா..சும்மா இரும்யா..
ஏதாவது பொருளாதார ரீதியா பின்னூட்டம் போடவும்!>>>>
நான் ரொம்ப ஆசைப்படல, அதிகமாவும் வேணாம்... ஒரு கிலோ தங்கம் கொடுங்க.... அது போதும்.
5 வயது குழந்தைக்கு 1991ல் தங்கம் வாங்கி வைத்திருந்தால், இப்போது அவர்களின் மனநிலை எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தங்க முதலீட்டை தள்ளிப்போடாமல் இருப்பதன் அருமை புரியும்.>>>>
ReplyDeleteஎன்ன சொல்றிங்க செங்கோவி, ஐந்து வயது குழந்தை இன்னைக்கு வளர்ந்து பெரிய ஆளா ஆகிற மாதிரி தங்கத்தின் மதிப்பும் அதிகமாயிருச்சு?
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநான் ரொம்ப ஆசைப்படல, அதிகமாவும் வேணாம்... ஒரு கிலோ தங்கம் கொடுங்க.... அது போதும்.//
எங்கிட்ட ஒரு கிலோ கிழிஞ்ச துணிகூட கிடையாதே...தங்கத்துக்கு எங்க போறது..
ஹூம்..இவங்களுக்கு பொருளாதாரப் பாடம் எடுக்கலாம்னு பார்த்தா, இருக்குற 1991 பிராண்ட் அண்டர்வேரையும் உருவிடுவாங்க போலிருக்கே..
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஎன்ன சொல்றிங்க செங்கோவி, ஐந்து வயது குழந்தை இன்னைக்கு வளர்ந்து பெரிய ஆளா ஆகிற மாதிரி தங்கத்தின் மதிப்பும் அதிகமாயிருச்சு? //
யோவ், இவ்ளோ பெரிய வாக்கியம்லாம் எழுதத் தெரியுமாய்யா உமக்கு?
பதில் : ஆமாய்யா..ஆமாம்.
இன்னும் இது பற்றிப் பேசினால், டெக்னிகல் விஷயங்களுக்குள் நுழைந்து தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதால்............விடு ஜூட்!>>
ReplyDeleteயப்பா! எஸ்கேப்பு ஆயிட்டாரா? இல்லையினா இந்நேரத்துல ஹன்சிகாவை பத்தி பேசாம அவங்க போட்டிருக்கிற ஆடம்பர ஆபரணங்களை பத்தி ஒரு பாடமே எடுத்திருப்பார்.
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteயப்பா! எஸ்கேப்பு ஆயிட்டாரா? இல்லையினா இந்நேரத்துல ஹன்சிகாவை பத்தி பேசாம அவங்க போட்டிருக்கிற ஆடம்பர ஆபரணங்களை பத்தி ஒரு பாடமே எடுத்திருப்பார்.//
நானே ரொம்ப நேரமா ‘தங்கம் -ரம்யாகிருஷ்ணன் ஸ்டில்லு’ போடலாமான்னு யோசிச்சு வேணாம்னு விட்ருக்கேன்..சும்மா கிளப்பி விடாதீரும்.
யோவ் செங்கோவி...கல்யாணத்திற்கு தங்கமே வாங்கதீங்கன்னு எழுதுங்கய்யா...
ReplyDeleteசெங்கோவி said... [Reply]
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
நான் ரொம்ப ஆசைப்படல, அதிகமாவும் வேணாம்... ஒரு கிலோ தங்கம் கொடுங்க.... அது போதும்.//
எங்கிட்ட ஒரு கிலோ கிழிஞ்ச துணிகூட கிடையாதே...தங்கத்துக்கு எங்க போறது..
ஹூம்..இவங்களுக்கு பொருளாதாரப் பாடம் எடுக்கலாம்னு பார்த்தா, இருக்குற 1991 பிராண்ட் அண்டர்வேரையும் உருவிடுவாங்க போலிருக்கே..>>>>
ஓ... கிழிஞ்ச துணியை எடைக்கு போட்டு அதுல வர்ற காசை வச்சி தங்கம் வாங்கிருவிங்களா???
தலைப்ப மாத்துங்கய்யா...அமெரிக்கா டர்ர்ர்....பதிவ போட்டவுடனே பூகம்பம்...லெக் தாதா...
ReplyDelete//
ReplyDeleteரெவெரி said...
யோவ் செங்கோவி...கல்யாணத்திற்கு தங்கமே வாங்கதீங்கன்னு எழுதுங்கய்யா..//
அது சரி தான்...அது சமூக சீர்திருத்தம்..இது பொருளாதாரம்!
//ரெவெரி said...
ReplyDeleteதலைப்ப மாத்துங்கய்யா...அமெரிக்கா டர்ர்ர்....பதிவ போட்டவுடனே பூகம்பம்...லெக் தாதா...//
பூகம்பமா...அய்யய்யோ!
ஆட்டம் காணுறது...நிக்கவே நிக்காது போல..
ReplyDelete"A 5.9 magnitude earthquake centered northwest of Richmond, Va., shook much of Washington, DC, and was felt as far north as Rhode Island and New York City."
ReplyDelete//
ReplyDeleteரெவெரி said...
"A 5.9 magnitude earthquake centered northwest of Richmond, Va., shook much of Washington, DC, and was felt as far north as Rhode Island and New York City."//
பூகம்பம் வந்த அப்புறம் தான் பதிவு போட்டிருக்கேன்..பதிவு போட்டதால பூகம்பம் வந்ததுன்னு கிளப்பிறாதீங்க.
செங்கோவி said... [Reply]
ReplyDelete//ரெவெரி said...
தலைப்ப மாத்துங்கய்யா...அமெரிக்கா டர்ர்ர்....பதிவ போட்டவுடனே பூகம்பம்...லெக் தாதா...//
பூகம்பமா...அய்யய்யோ!>>>
ஐயோ... இவரு பதிவை பார்த்து அமெரிக்காவே நடுங்குதா?????
எத்தனை மணிக்குயா தலைப்பை வச்சீங்க..?
ReplyDelete//ரெவெரி said...
ReplyDeleteஎத்தனை மணிக்குயா தலைப்பை வச்சீங்க..?//
ஹி..ஹி..ரெண்டு நாளாச்சு அதை வச்சு!
பாய்ண்ட புடிப்போம்ல...
ReplyDeleteஇருந்தாலும் உங்க நேர்மைக்காக இன்னொரு பூகம்பம் கூட தாங்கிக்கலாம்...
//ரெவெரி said...
ReplyDeleteபாய்ண்ட புடிப்போம்ல...
இருந்தாலும் உங்க நேர்மைக்காக இன்னொரு பூகம்பம் கூட தாங்கிக்கலாம்..//
நான் வேணா இந்தியா வாழ்க-ன்னு ஒரு பதிவு போடுறேன் பாஸ்!
உள்குத்து இல்லாம போடுங்க...
ReplyDeleteநமீதா...ஷகீலா கொடி பிடிக்கிற மாதிரி எங்கய்யா படம் தேடுவீங்க...?
ReplyDeleteமீண்டும் ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவோம். நீங்கள் அதே 1991ம் வருடம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கிராம் தங்கம் வாங்கி வைக்கின்றீர்கள். அதை அதே பீரோவில் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து, இப்போது திறந்து பார்த்தால்.........அதே 2 கிராம் தங்கம் தான் இருக்கும், ஆனால் 5600 ரூபாய் மதிப்புடன்.
ReplyDelete...... அதான்..... Fort Knox ல தங்கத்தை store பண்ணி வச்சுருக்காங்களே..... இப்போ காரணம் புரிஞ்சுடுச்சே.... ஹா,ஹா,ஹா,ஹா....
//Chitra said...
ReplyDelete...... அதான்..... Fort Knox ல தங்கத்தை store பண்ணி வச்சுருக்காங்களே..... இப்போ காரணம் புரிஞ்சுடுச்சே.... ஹா,ஹா,ஹா,ஹா..//
அய்யோ...அங்க ஏற்கனவே பூகம்பம்னு சொல்றாங்க....அக்கா வேற இப்படி சிரிக்குது..என்ன ஆகப்போகுதோ..
//ரெவெரி said...
ReplyDeleteநமீதா...ஷகீலா கொடி பிடிக்கிற மாதிரி எங்கய்யா படம் தேடுவீங்க...?//
நான் நல்ல பதிவும் போடுவேன்யா..நம்புங்கய்யா.
உங்க பதிவுலாம்...பத்தரை மாற்று தங்கங்க....
ReplyDelete// ரெவெரி said...
ReplyDeleteஉங்க பதிவுலாம்...பத்தரை மாற்று தங்கங்க..//
நம்ம ஊர்ப்பக்கம் வரும்போது, ரெவரியை நல்லா கவனிக்கணும்.
அதுக்குள்ள உலக மகா பதிவராய் ஆகி நம்மள மறந்துருவீங்க...
ReplyDeleteஉத்தரவு வாங்கிக்கேறேன் சாமி...
வித்தியாசமான பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்.. வேற என்னத்த சொல்ல... ஏமாத்திபூட்டிங்களே அய்யா... ஓட்டு போட்டுட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன்யா...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்....
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
அப்பாடா
ReplyDeleteஇன்னைக்கு நம்ம வாத்தியார்
அருமையான பாடம்
எடுத்து இருக்கிறார்
நிஜமாவே இன்று தான்
பணவீக்கம்
என்பதை புரிந்து கொண்டேன்
மிக்க நன்றி
வாத்தியாரே
நாமளும் எதோ எக்கொனொமிக்ஸ் படிச்சதால எதோ புரியுது!
ReplyDelete///உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்.
ReplyDelete‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த அதே மதிப்புடன் தான் இப்போது இருக்கிறதா? அப்போது எங்கள் ஊர் தியேட்டரில் டிக்கெட் விலை 3 ரூபாய். 333 ஷோ இந்த ஆயிரம் ரூபாயை வைத்துப் பார்க்க முடியும். இப்போது டிக்கெட் விலை 60 ரூபாய். (முதல் நாள் என்றால் >150 தான்). உங்களால் 16 ஷோ தான் பார்க்க முடியும். என்ன ஆயிற்று அந்தப் பணத்தின் மதிப்பு?
இதுக்குப் பேர் விலைவாசி ஏற்றம் என்று நாம் சொல்கிறோம். பொருட்களின் விலை ஏற்றத்தை வைத்தே இதை நாம் குறிப்பிடுகிறோம். பொருளாதார வல்லுநர் இதையே பணத்தின் மதிப்புக்கு நேரும் பாதிப்பை வைத்து பணவீக்கம்(Inflation) என்று சொல்கிறார்கள். ...////
பணவீக்கத்தை அருமையாய் விளங்கப்படுத்தி இருக்கிறீங்க.பாஸ் அருமை..
இன்னும் இது பற்றிப் பேசினால், டெக்னிகல் விஷயங்களுக்குள் நுழைந்து தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதால்............விடு ஜூட்!//
ReplyDeleteஇப்ப சொன்னிங்க பாருங்க நூத்துல ஒரு வார்த்த!
செங்கோவி பதிவு-அமெரிக்காவில் பூகம்பம்!!
ReplyDeleteகுற்றம்-நடந்தது என்ன?
தங்கமோ தங்கத்துக்கு நன்றிகள்!
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeletesema செம டைட்டில்
ReplyDeleteஅருமையானதொரு அலசல் பாராட்டுக்கள் .தமிழ மணம் 15
ReplyDeleteமிக மிக பயனுள்ள தகவல்கள் நண்பரே..!!
ReplyDeleteசெங்கோவி….!
ReplyDeleteபணவீக்கம், நாணய மதிப்பிழப்பு பற்றி மிக இலகுவான முறையில் விளக்கியிருக்கிறீர்கள். இது, பலருக்கும் பணவீக்கம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவை கொடுத்திருக்கும்.
தொடர்ந்தும் நல்ல பதிவுகளை வழங்குவதற்கு வாழ்த்துக்கள் பாஸ்.
மிக மிக பயனுள்ள தகவல்கள் நண்பரே..!!
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteபணத்தை பணமாகவே வைத்துக்கொள்ளகூடாது ஏன் என்பதை நல்லா சொல்லி இருக்கீங்க நானும் புரிஞ்சுகிட்டேன்
ஆயிரம் ரூபாய் பொருளாதார அடிப்படை செம!இன்னும் படிச்சிட்டு ஏதாவது தோணினா சொல்றேன்:)
ReplyDeleteஉபரியாக பணமா? நம்ம கிட்ட இல்ல சார்.
ReplyDeleteதங்கள் விலை கிடு கிடுன்னு ஏறுவதற்கு எத்தனை அதிகரித்தாலும் வாங்குவோம்ல என்ற இந்திய தங்க மனப்பான்மையும் காரணம் என நினைக்கிறேன்.
ReplyDeleteபணத்தின் மதிப்பு தங்கத்தின் ஒப்பீடு போலவே ரியல் எஸ்டேட்டுக்கும் இது பொருந்தும்.
இப்ப பம்பாயின் விலை எவ்வளவு என்று தெரியவில்லை.ஆனால் முன்பு நியுயார்க்கை விட பம்பாய் விலை ஒப்பீடு அதிகம்ன்னா நம்ப முடியுமா:)
டிஸ்கி:(பின்னூட்டத்துக்கு கூட டிஸ்கியான்னு யாரும் கத்த வேண்டாம்:))
இனி ஒரு பயலையும் மும்பாய்,கொல்கத்தான்னு அழைக்கப்போவதில்லை.பழைய பம்பாய்,கல்கத்தா மட்டுமே.காரணம் நாளுக்கு ஒரு பெயர் மாற்றம். இப்ப கல்கத்தாவின் பெயர் மாற்றம் வாயில நுழையாத அல்லது நம்மாளுக திரிபு படுத்தி என்னய்யா கெட்டவார்த்தை மாதிரி இருக்குதேங்கிற மாதிரியான லட்சணத்துல ஏதோ?பங்கான்னு மம்தா பேனர்ஜி தான் பதவிக்கு வந்த அடையாளத்தைக் காட்டி கொல்கத்தா பெயர் மாற்றம் செய்து விட்டார்.
சென்னையா?மெட்ராஸான்னு யோசிச்சுட்டு சொல்றேன்:)
\\உபரியாக(!) பணம் இருந்தாலோ, அல்லது திருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம். \\ தங்கம் விலை என்னைக்கு குறையுறது, மனுஷன் எப்போ வாங்குறது? நான் பாத்தா வரைக்கும், எட்டு கிராமுக்கு 850 ரூபாய் விலை ஏறினா அப்புறம் 150 ரூபாய் குறையும், மத்தபடி காத்துகிட்டு இருந்து வாங்குமளவுக்கு ஒரு போதும் விலை குறையாது. இந்த கடல் எப்ப வைத்தும், கருவாடு தின்னலாம் என்ற ஆசையை விட்டுத் தள்ளும்.
ReplyDelete\\நீங்கள் அதே 1991ம் வருடம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கிராம் தங்கம் வாங்கி வைக்கின்றீர்கள். அதை அதே பீரோவில் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து, இப்போது திறந்து பார்த்தால்.........அதே 2 கிராம் தங்கம் தான் இருக்கும், ஆனால் 5600 ரூபாய் மதிப்புடன்.\\ 2007 ல் ஏங்க ஊர்ல ஏக்கர் நான்கு லட்சம் ரூபாய், இப்போ ஏக்கர் ஒரு கோடி. என்னத்த சொல்ல?
ReplyDelete\\தற்பொழுது அமெரிக்காவில் கிளம்பியுள்ள கடன் தர வரிசைப் பிரச்சினை, பங்குச்சந்தைகளை கடும் வீழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஐரோப்பிய வங்கிகளும் கடும் நிதிச்சிக்கலில் இருப்பதாக வரும் தகவல் வேறு ;\\ அந்தந்த நாட்டிலும் உள்ள நிலங்களை சரியான முறையில் விவசாயம் செய்து மக்கள் பசிப் பிணியை போக்கினால் போதும், இவனுங்க எதைஎதையோ பண்ணி மொத்தத்தில எல்லாத்தையும் நாசம் பண்ணி விட்டுட்டானுங்க.
ReplyDelete// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ReplyDeleteவித்தியாசமான பதிவு
Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
Kanchana Radhakrishnan said...
நல்ல பதிவு.
K.s.s.Rajh said...
பணவீக்கத்தை அருமையாய் விளங்கப்படுத்தி இருக்கிறீங்க.பாஸ் அருமை...
M.R said...
அருமையானதொரு அலசல் பாராட்டுக்கள் .தமிழ மணம் 15
அரவிந்த் குமார்.பா said...
மிக மிக பயனுள்ள தகவல்கள் நண்பரே..!!
மருதமூரான். said...
தொடர்ந்தும் நல்ல பதிவுகளை வழங்குவதற்கு வாழ்த்துக்கள் பாஸ்.
அரவிந்த் குமார்.பா said...
மிக மிக பயனுள்ள தகவல்கள் நண்பரே..!!
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல பதிவு
பணத்தை பணமாகவே வைத்துக்கொள்ளகூடாது ஏன் என்பதை நல்லா சொல்லி இருக்கீங்க நானும் புரிஞ்சுகிட்டேன்
சி.பி.செந்தில்குமார் said...
sema செம டைட்டில் //
அருமை நண்பர்கள் அனைவருக்கும் மொத்தமாக பெரிய நன்றி.
// காட்டான் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.. வேற என்னத்த சொல்ல... ஏமாத்திபூட்டிங்களே அய்யா... ஓட்டு போட்டுட்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன்யா...//
எப்பவும் அந்த மாதிரி பதிவா வேணுமா பாஸ்?
//
ReplyDeletesiva said...
நிஜமாவே இன்று தான்
பணவீக்கம்
என்பதை புரிந்து கொண்டேன்
மிக்க நன்றி
வாத்தியாரே //
இது மாதிரி நிறைய வீக்கம் பத்தி நம்மகிட்ட சரக்கு இருக்கு..ஒன்னொன்னா எடுத்து விடறேன்..தொடர்ந்து வாங்க.
// மைந்தன் சிவா said...
ReplyDeleteநாமளும் எதோ எக்கொனொமிக்ஸ் படிச்சதால எதோ புரியுது! //
இந்த விளம்பரம் இப்போத் தேவையா?
// கோகுல் said...
ReplyDeleteசெங்கோவி பதிவு-அமெரிக்காவில் பூகம்பம்!!
குற்றம்-நடந்தது என்ன? //
என்னை உள்ளே தூக்கி வைக்காம விட மாட்டாங்க போலிருக்கே..
// விக்கியுலகம் said...
ReplyDeleteதங்கமோ தங்கத்துக்கு நன்றிகள்! //
ரைட்டு விக்கி!
// FOOD said...
ReplyDeleteபாமரனுக்கும் புரியும் வகையில் உங்கள் விளக்கம் சூப்பர்.//
நானே பாமரன் தானே சார்.........
// அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteஉபரியாக பணமா? நம்ம கிட்ட இல்ல சார்.//
இங்க மட்டும் என்னவாம்..ஆனாலும் நாங்க கெத்தா எழுதலை?
/ ராஜ நடராஜன் said...
ReplyDeleteஆயிரம் ரூபாய் பொருளாதார அடிப்படை செம! //
நன்றி.
// தங்கள் விலை கிடு கிடுன்னு ஏறுவதற்கு எத்தனை அதிகரித்தாலும் வாங்குவோம்ல என்ற இந்திய தங்க மனப்பான்மையும் காரணம் என நினைக்கிறேன்.//
ஆம், அதுமட்டும் அல்ல..ஆப்பிரிக்க நாடுகள்கூட தங்களிடம் உள்ள கரன்சியை தங்கமாக மாற்றிக்கொண்டு உள்ளன.
// பணத்தின் மதிப்பு தங்கத்தின் ஒப்பீடு போலவே ரியல் எஸ்டேட்டுக்கும் இது பொருந்தும்.//
ஆமாம் சார்..இந்தியாவிற்கு/தனி மனிதருக்கு இது சாலப் பொருந்தும்..பெரிய நிதிநிறுவனங்கள் தங்கம் அளவிற்கு நிலத்தில் முதலீடு செய்வதில்லை..லிக்விட்டி பிரச்சினையே முக்கிய காரணம்.
// Jayadev Das said...
ReplyDelete\\உபரியாக(!) பணம் இருந்தாலோ, அல்லது திருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம். \\ தங்கம் விலை என்னைக்கு குறையுறது, மனுஷன் எப்போ வாங்குறது? நான் பாத்தா வரைக்கும், எட்டு கிராமுக்கு 850 ரூபாய் விலை ஏறினா அப்புறம் 150 ரூபாய் குறையும், மத்தபடி காத்துகிட்டு இருந்து வாங்குமளவுக்கு ஒரு போதும் விலை குறையாது. இந்த கடல் எப்ப வைத்தும், கருவாடு தின்னலாம் என்ற ஆசையை விட்டுத் தள்ளும்.//
அனுபவஸ்தர் சொல்றீங்க..கேட்டுக்கறேன்.
// உபரியாக(!) பணம் இருந்தாலோ//
ReplyDeleteஏங்க வெறுப்பை கிளப்பறீங்க. கைல இருக்கறதே உபரில பாதிதான்.
வணக்கம் மச்சி,
ReplyDeleteதமிழ்மணம் 23
உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்?//
ReplyDeleteஓவர் குசும்பைய்யா உமக்கு.
மீண்டும் ஃப்ளாஷ்பேக்கிற்குப் போவோம். நீங்கள் அதே 1991ம் வருடம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கிராம் தங்கம் வாங்கி வைக்கின்றீர்கள். அதை அதே பீரோவில் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து, இப்போது திறந்து பார்த்தால்.........அதே 2 கிராம் தங்கம் தான் இருக்கும், ஆனால் 5600 ரூபாய் மதிப்புடன்//
ReplyDeleteபாஸ்...இது சூப்பர் ஐடியா பாஸ்..
இதெல்லாம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நாம இப்படிக் கஷ்டப்பட வேண்டி வராதில்லே.
பணத்தைப் பாதுகாப்பாக வைப்புச் செய்து வைப்பத விட, தங்கத்தினை வாங்கிப் பாதுகாப்பது என்பது எதிர்காலத்திற்கு உகந்த செயல் என்பதை அருமையாக விளக்கிக் கூறியிருக்கிறீங்க.
ReplyDeleteஉங்ககிட்டேயிருந்து நாம கத்துக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றது.
சூப்பர்ணே! ஆமா இனி எப்பிடி தங்கம் வாங்குறது? அவ்வவ்!
ReplyDeleteஉலகம் எப்போ ஷேமமா இருக்கும்?
ReplyDeleteஎப்போ அமேரிக்கா பழைய நிலைக்குத் திரும்பும்? திரும்புமா?
// goundamanifans said...
ReplyDelete// உபரியாக(!) பணம் இருந்தாலோ//
ஏங்க வெறுப்பை கிளப்பறீங்க. கைல இருக்கறதே உபரில பாதிதான். //
அப்போ பாதித் தங்கம் வாங்குங்க பாஸ்!
நிரூபன் said...
ReplyDelete// வணக்கம் மச்சி, //
ஆஹா...ஆராய்ச்சியாளர் வந்துட்டாரே..
//இதெல்லாம் நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நாம இப்படிக் கஷ்டப்பட வேண்டி வராதில்லே. //
இப்போ வாங்கி வச்சாலும், இன்னும் அஞ்சு வருசம் கழிச்சுப் பார்த்தா சந்தோசமாத் தான் இருக்கும்..
// பணத்தைப் பாதுகாப்பாக வைப்புச் செய்து வைப்பத விட, தங்கத்தினை வாங்கிப் பாதுகாப்பது என்பது எதிர்காலத்திற்கு உகந்த செயல் என்பதை அருமையாக விளக்கிக் கூறியிருக்கிறீங்க. //
ஆமா நிரூ..பண வீக்கம் என்பது உண்மையில் பணத்தேய்வு தான்.(பதிவுல சொல்ல விட்டுப் போச்சு)
// உங்ககிட்டேயிருந்து நாம கத்துக் கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றது.//
அது ஏற்கனவே ஒலகம் அறிஞ்ச உண்மைல்ல...
ஜீ... said...
ReplyDelete// சூப்பர்ணே! ஆமா இனி எப்பிடி தங்கம் வாங்குறது? //
எப்பவும் போல காசு கொடுத்துத் தான்...கொள்ளையா அடிக்க முடியும்?
// எப்போ அமேரிக்கா பழைய நிலைக்குத் திரும்பும்? திரும்புமா? //
அவங்களோட பிரிண்டிங் மெசினை உலகம் நம்புறவரைக்கும் அமெரிக்காக்கு பிரச்சினை இல்லை தான்..
//Jayadev Das said...
ReplyDelete2007 ல் ஏங்க ஊர்ல ஏக்கர் நான்கு லட்சம் ரூபாய், இப்போ ஏக்கர் ஒரு கோடி. என்னத்த சொல்ல?//
உங்ககிட்ட மொத்தம் எத்தனை ஏக்கர் இருக்கு, அதுல எத்தனை ஏக்கரை செங்கோவி ப்லாக்குக்கு எழுதி வைக்கப்போறீங்கன்னு சொல்லுங்க போதும்.
மாப்ள ரைட்டு..
ReplyDeleteதலைப்பு செம//
நிலத்தில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் இப்போது அதிக புத்திசாலிகளாக தெரிகிறார்கள்.
ReplyDeleteதங்கத்தின் விலையேற்றம் இன்னும் இருக்கும் என்பதும் இப்போது கண்கூடாகத் தெரிகிறது.
எளிமையான விளக்கங்களை தந்து இருக்கிறீர்கள். வேறுபட்ட துறைகளை பற்றிய தெளிவான பதிவுகள் எழுத சிலரால் மட்டுமே முடியும். அதற்காக வாழ்த்துக்கள் செங்கோவி..
ReplyDelete\\உங்ககிட்ட மொத்தம் எத்தனை ஏக்கர் இருக்கு,\\ என்னோட வயித்தெரிச்சலை பாத்தாலே தெரியலையா, ஒண்ணுமில்லன்னு!!
ReplyDeleteசூப்பர் செங்கோவி, வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல எளிமையான விளக்கம் குடுத்திருக்கீங்க.ரொம்ப நன்றிங்க! சரி,தங்கம் வாங்க கொஞ்சம் பணம் பேங்கில போட்டு விடுறிங்களா?
ReplyDeleteஇந்த போஸ்ட்டை பஸ்ல ஷேர் பண்ணிட்டேன்............!
ReplyDeleteஉபரியாக(!) பணம் இருந்தாலோ, அல்லது திருமணத் தேவைகளுக்காக வாங்க வேண்டி இருந்தாலோ விலை சற்றுக் குறைவாக இருக்கும் நேரத்தில் (அதாவது உலகம் ஷேமமாக இருக்கும் நேரத்தில்) வாங்கி வைப்போம்.///அப்போ,இப்ப வாங்க முடியாதுன்னு சொல்ல வரிங்க,அப்புடித் தானுங்களே?
ReplyDeleteஉண்மை தான் ஆனா தங்கம் கச்சா எண்ணெய் மாதிரி ஆய்டா ??? அதுக்கு ஷேர் ல தங்கம் வாங்குறது நல்லதுன்னு நினைக்கிறன். வீட்ல பத்திரபடுத்த தேவை இல்லைல :)
ReplyDeleteஅவரு தங்கம் இல்ல வாங்க சொன்னாரு?இவங்க புரியாம பஸ்ல....................?!
ReplyDeleteநல்ல பதிவு. எளிமையாக விளக்கியிருப்பதற்கு நன்றி.
ReplyDeleteபதிவை மட்டும் படித்துவிட்டு போய்விடவேண்டும் போலிருக்கிறது! நல்ல பதிவில் கூடவா கசகசன்னு ஒரு மேட்டரும் இல்லாம இவ்வளவு பின்னூட்டங்கள்..!!? நல்ல விவாதத்திற்குரிய பின்னூட்டங்களைத் தேடிப்படிக்க வேண்டியுள்ளது.
அருமையான பதிவு.
ReplyDeleteவரதட்சணையை ஒழிச்சிட்டா ரொம்ப சந்தோசம், தங்கம் விக்கிற விலைக்கு டிவில தங்கம் சீரியல பாக்குறதோட நிறுத்திக்கணும், எளிமையா சொல்லி இருக்கீங்க செங்கோவி
ReplyDeleteதங்கத்தினுடைய மதிப்பு என்றாவது ஒருநாள் விழுமா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மதிப்பு ?
ReplyDeleteஎளிய குழப்பமில்லாத விளக்கம்!
ReplyDeleteபொருளாதார வல்லுனர்கள்ன்னு சொல்லிட்டு டிவில இந்த பணவீக்கத்தை பத்திப்பேசறப்போ எனக்கு தலைவீக்கம் வநதுரும்.உங்க பதிவுல மிக எளிமையா சொல்லியிருக்கீங்க...
ReplyDeleteநன்றி தலைவா! எளிய மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். சூப்பர். வணக்கம்
ReplyDeleteநல்ல இருக்கு நண்பா வாழ்த்துகள் .....
ReplyDeleteஐயா தெய்வமே, பணவீக்கம்னா என்னன்னு ஒருநாள் ஒரு பொருளாதார பிரிவு நண்பன்கிட்ட தெரியாம கேட்டுப்புட்டேன், அவன் போட்ட பிளேடு இருக்கே, அன்னையோட விட்டது இந்த விஷயத்த, நீங்க ரொம்ப சுலபமா புரிய வச்சிட்டீங்க, தங்கம் விலை ஏன் ஏறுதுன்னும் யோசிச்சிகிட்டு இருந்தேன் அதுவும் புரிஞ்சிடுச்சு, மிக்க நன்றி தெய்வமே...
ReplyDeleteஇதெல்லாம் செங்கோவி அண்ணனாலதான் முடியும், வருங்கால நிதியமைச்சர் செங்கோவி வாழ்க... இந்தியாவின் பொருளாதார மேதை வாழ்க...
5 வயது குழந்தைக்கு 1991ல் தங்கம் வாங்கி வைத்திருந்தால், இப்போது அவர்களின் மனநிலை எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தங்க முதலீட்டை தள்ளிப்போடாமல் இருப்பதன் அருமை புரியும்.
ReplyDeleteஇன்னும் இது பற்றிப் பேசினால், டெக்னிகல் விஷயங்களுக்குள் நுழைந்து தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும் என்பதால்............விடு ஜூட்!//
டெக்னிகல் விஷயம் தான கேண்டில் சார்ட்டும் பார் சார்ட்டும் போட்டு பட்டைய கிளப்புங்க பாஸ்
இனி அங்கத்தை கட்டி தங்கத்தை சேர்ப்போம்...நன்றி நண்பரே
ReplyDeleteபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு?
ReplyDelete"செங்கோவிக்கு சிஸ்டர் மாதிரி நம்ம ஹன்சிஹா"
எனக்கு மட்டும் காதலி ஹி ஹி
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
// தர்ஷினி said...
ReplyDeleteஉண்மை தான் ஆனா தங்கம் கச்சா எண்ணெய் மாதிரி ஆய்டா ??? அதுக்கு ஷேர் ல தங்கம் வாங்குறது நல்லதுன்னு நினைக்கிறன். வீட்ல பத்திரபடுத்த தேவை இல்லைல :) //
ஆமாம் சகோதரி...Gold ETF தான் பெஸ்ட்!
// ரிஷி said...
ReplyDeleteபதிவை மட்டும் படித்துவிட்டு போய்விடவேண்டும் போலிருக்கிறது! நல்ல பதிவில் கூடவா கசகசன்னு ஒரு மேட்டரும் இல்லாம இவ்வளவு பின்னூட்டங்கள்..!!? நல்ல விவாதத்திற்குரிய பின்னூட்டங்களைத் தேடிப்படிக்க வேண்டியுள்ளது.//
நம்ம ப்ளாக் கமெண்ட்ஸ்ல 80% கும்மி தான் பாச்..நீங்க சொன்னமாதிரியே பதிவை மட்டும் படிங்க..
// teabench said...
ReplyDeleteதங்கத்தினுடைய மதிப்பு என்றாவது ஒருநாள் விழுமா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மதிப்பு ? //
பெரிய அளவில் விலை இறங்கி விடாது..அமெரிக்க/பங்குச்சந்தை கலவரம் அடங்கினால் இப்போது இருப்பதைவிட கொஞ்சம் குறையலாம்.
அரிய உலோகம், உலகம் முழுதும் ஏற்றுக்கொண்ட கரன்சிக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்ட உலோகம் என்பதால் இந்த மதிப்பு..மேலதிக விவரங்களை லேடீஸ் தான் சொல்லணும்.
// சேலம் தேவா said...
ReplyDeleteபொருளாதார வல்லுனர்கள்ன்னு சொல்லிட்டு டிவில இந்த பணவீக்கத்தை பத்திப்பேசறப்போ எனக்கு தலைவீக்கம் வநதுரும்.//
நானே அதுக்கு வி|ளக்கம் புரியாம பல வருசம் அலைஞ்சிருக்கேன்..ஒருதடவை குமுதம் அரசு பதில்ல ஒருத்தர் ‘பண வீக்கம்னா என்ன?’ன்னு கேட்டிருந்தாரு. அதுக்கு அரசு கேலியாச் சொன்ன பதில் ‘பணத்தை தண்ணில ஊற வச்சா வீங்கும் அதான்’...
அப்புறம் ஆங்கில பொருளாதார புத்தங்கள் தான் கொஞ்சம் புரிய வச்சுச்சு..அதை இன்னும் எளிமையா சொல்ல பீரோவை யூஸ் பண்ணிட்டேன்!
// Heart Rider said...
ReplyDeleteஐயா தெய்வமே, பணவீக்கம்னா என்னன்னு ஒருநாள் ஒரு பொருளாதார பிரிவு நண்பன்கிட்ட தெரியாம கேட்டுப்புட்டேன், அவன் போட்ட பிளேடு இருக்கே, அன்னையோட விட்டது இந்த விஷயத்த, நீங்க ரொம்ப சுலபமா புரிய வச்சிட்டீங்க, தங்கம் விலை ஏன் ஏறுதுன்னும் யோசிச்சிகிட்டு இருந்தேன் அதுவும் புரிஞ்சிடுச்சு, மிக்க நன்றி தெய்வமே...
இதெல்லாம் செங்கோவி அண்ணனாலதான் முடியும், வருங்கால நிதியமைச்சர் செங்கோவி வாழ்க... இந்தியாவின் பொருளாதார மேதை வாழ்க...//
ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..ஃபினிஷிங் சரியில்லையே தம்பி..அண்ணன் சேவை அமெரிக்காவுக்குத் தான் தேவை..அதனால அமெரிக்க பொருளாதார மேதைன்னு சொல்லுங்க
// மாய உலகம் said...
ReplyDeleteஇனி அங்கத்தை கட்டி தங்கத்தை சேர்ப்போம்...நன்றி நண்பரே //
அங்கம்னா என் அத்தை பொண்ணு அங்கம்மாவா?
// மாதவன் said...
ReplyDeleteபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன தொடர்பு?
"செங்கோவிக்கு சிஸ்டர் மாதிரி நம்ம ஹன்சிஹா" //
இந்த மாதிரி செங்கோவி மனதை புண்படுத்தும் கமெண்ட்களை தவிர்க்கவும்..அவரால் இதைத் தாங்க முடியாது.
அருமையான விளக்கம்! எளிமையாக பாமரனும் புரிந்து கொள்ளும்படி இருந்தது.நன்றி!
ReplyDeleteஎளிய விளக்கம் ஆனால் பெரிய விஷயம்.நன்றி
ReplyDelete