Saturday, July 21, 2012

நடிகர் கார்த்திக்கு ஒரு கடிதம்....


அண்ணே,

வணக்கம். வீட்ல அம்மணி, அப்பா-அம்மா, அண்ணன் - ஜோ அண்ணி நலமுங்களா? ஹன்சிகாவுக்கு கடிதம் எழுதணும்னு கூட எனக்குத் தோணுனது இல்லீங்கண்ணே..ஆனால் என்னமோ தெரியலை, உங்களுக்கு எழுதியே தீரணும்னு மனசு அரிச்சுச்சு..அதான் இந்தக் கடிதம்.
அண்ணே, நான் முத முதல்ல உங்களைப் பார்த்தது சூர்யா கல்யாணத்துல. (அட, ஃபோட்டோல தான்!). பருத்தி வீரன் கெட்டப்புல தாடி, மீசையோட பார்த்தப்போ பெருசா உங்க மேல நம்பிக்கை வரலை. ‘என்னய்யா இது..சிவகுமார் எம்புட்டு அழகு..இவரு இப்படி இருக்காரு’ என்று தான் தோன்றியது. ஆனால் அது பருத்தி வீரனாக நீங்கள் வாழ்ந்த காலம்னு நமக்கு அப்போத் தெரியலை.

அப்புறம் தான் ரிலீஸ் ஆச்சு பருத்திவீரன்..ஏகப்பட்ட பாராட்டுகளைக் கேட்டு, உங்களுக்கே புளிச்சுப்போயிருக்கும். ஆனாலும் ‘அசத்திப்புட்டீங்க’ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

அடுத்தடுத்து நீங்க சூஸ் பண்ண கதைகள் தான், நம்மளை ரொம்ப அசத்துச்சு. ஆயிரத்தில் ஒருவன் நல்ல ஃபேண்டசி படமா வந்திருக்க வேண்டியது. சோழனை வம்புக்கு இழுத்து, நம்மை நாமே கேவலப்ப்டுத்திக்கிட்டதாலயும், செல்வாவோட வ்ழக்கமான வக்கிரத்தாலயும் படம் ஊத்திக்கிச்சு. உங்களைக் குறை சொல்ல ஒன்னுமில்லை. ஆனாலும் பருத்தி வீரன் மாதிரியே அதிலயும் நடிச்சிருக்கீங்களோன்னு தோணுச்சு.

என்னை அதிகம் ஆச்சரியப்படுத்திய படம் ’நான் மகான் அல்ல’ தான். ஏனென்றால் அதில் திரைக்கதை தான் ஹீரோ. கதாநாயகன் படத்தை முடித்து வைப்பவன் மட்டும் தான். அந்தப் படத்திற்குப் பிறகு தான், நீங்க நல்ல ஸ்டோரி சென்ஸ் உள்ள ஆளுன்னு எனக்குப் புரிஞ்சது.

பையா படத்துல ஓரளவு பருத்தி வீரன் சாயல் இல்லை. அடுத்து வந்த சிறுத்தைல தான் ‘நான் பருத்தி வீரன் மட்டும் இல்லைடா..பாயும் சிறுத்தை’-ன்னு அடிச்சுச் சொன்னீங்க. சரி, அதுக்கென்ன இப்போ?-ன்னு கேட்கிறீங்களா? சொல்றேன்..
இதை விட்டுட்டமே..பதிவுல!
நம்ம இளம்(?) ஹீரோக்கள்கிட்ட இருக்கிற பிரச்சினை என்னன்னா, எல்லாருமே ரஜினி ஆகணும்னு ட்ரை பண்றது தான். ஆனால் போன ஜெனரேசன்ல பார்த்தீங்கன்னா ரஜினி-கமல்-விஜயகாந்த்-சத்யராஜ்-கார்த்திக்-பிரபு-பாக்யராஜ்னு பல வெரைட்டில நடிகர்கள் இருந்தாங்க. எங்களுக்கும் அந்த மாதிரி வெரைட்டி தேவைப்பட்டுச்சு. ஆனால் இப்போப் பாருங்க..பெரும்பாலும் ரஜினி ஸ்டைல், கொஞ்சம் பேரு கமல். அதைத் தாண்டி மத்த ஸ்டைல்ல நடிக்க யாருமே தயாரா இல்லை.

ஆனால் உங்க நடிப்பு எதனாலேயோ எனக்கு நவரச நாயகன் கார்த்திக்கை ஞாபகப்படுத்துச்சுண்ணே..அந்த கார்த்திக்கிட்ட இருந்த சுறுசுறுப்பும், இளமைத் துள்ளலும் உங்ககிட்ட ரொம்ப யதார்த்தமா இருக்கு. ரொம்ப கேஷுவலா அவர் மாதிரியே நடிச்சுட்டுப் போயிடறீங்க. அதனால உங்க படம் பார்க்கிறதுக்கு, ரொம்ப ஜாலியா இருக்கு.

அதனால என்ன ஆச்சு, தெரியுங்களா? உங்க சகுனி படம் ரிலீஸ் ஆகுற அதே டேட்ல இன்னொரு பெரிய ஹீரோ படமும் ரிலீஸ் ஆகுறதா இருந்துச்சு. இங்கே, நாங்க பொதுவா ரெண்டு, மூணு ஃபேமிலீஸ் சேர்ந்து போறது வழக்கம். அப்போ அவர் படமா? உங்க படமான்னு ஆம்பிளைங்க நாங்க யோசிச்சப்போ, பெண்களும், குழந்தைகளும் கார்த்தி படம் தான் போகணும்னு முடிவாச் சொல்லிட்டாங்க.

என்ன தான் சினிமாவை கலை-ஒலக சினிமான்னு சினிமாக்காரங்க ஜல்லியடிச்சாலும், எங்களை மாதிரி சாமானியங்களுக்கு சினிமாங்கிறது பொழுதுபோக்குச் சாதனம் தான். ஒரு சினிமாங்கிறது முதல்ல எண்டர்டெய்ன் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் மேக்கிங்-குறியீடு போன்ற கண்றாவிகளையெல்லாம் நாங்க கவனிப்போம்.

அந்த மாதிரி நல்ல பொழுதுபோக்குப் படமா பண்றதால தான், இந்த குறுகிய காலத்துல பெரிய்ய ஹீரோவா வளர்ந்து நிக்கிறீங்க. ஆனா, இது நீங்க ரொம்ப ஜாக்ரதையா இருக்க வேண்டிய நேரம்ணே! அன்னிக்கு சகுனி மேடையில ஒருத்தர் உங்களை ‘வருங்கால முதல்வர்’னு சொன்னாராமே..அண்ணே, ஆரம்பிச்சுட்டாங்க பார்த்தீங்களா? இதான் தமிழன்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்.ஒருத்தன் நல்லா இருந்திடக்கூடாது. உடனே கெடுக்கிறதுக்கான வேலையில இறங்கிடுறாங்க.

எங்களுக்கு ஏற்கனவே இருக்கிற ‘வருங்கால முதல்வர்கள்’ போதும்ணே..நீங்க வேற அந்த லிஸ்ட்ல சேர்ந்து இம்சை பண்ணிடாதீங்க. இப்பவும் போல, எப்பவும் நல்ல பொழுதுபோக்குப் படங்களைக் கொடுத்தாக்கூடப் போதும்.

இன்னொரு முக்கியமான விஷயம், சகுனி படத்துல அனுஷ்கால ஆரம்பிச்சு எல்லாப் பொண்ணுகளும் ‘ஹே..இவரு அழகன்டி.... ஆளு சூப்பர்டி’ன்னு டயலாக் விட்டுக்கிட்டு இருந்தாங்க. வேண்டாம்ணே, இந்த வேலை. பிரபுதேவா-சிம்பு-எஸ்.ஜே.சூர்யா-விஷால்னு பலபேரு இதனாலேயே பேரு கெட்டு, சொம்பு நசுங்கி உட்கார்ந்திருக்காங்க. நீங்களும் இந்த மன்மதன் வேலையில இறங்கி, இருக்கிற பேரைக் கெடுத்துக்காதீங்கண்ணே.

எங்களுக்குத் தேவை நல்ல பொழுதுபோக்குச் சினிமா. முடிஞ்சா, அதை நல்ல சினிமாவாத் தாங்க போதும். சகுனி படத்துக்கு வந்த விமர்சனம் எல்லாம், உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன். அதனால, அடுத்த படத்தையாவது கொஞ்சம் கவனமாச் செய்யுங்கண்ணே. சீக்கிரமா ஒரு நல்ல படத்துல உங்களைச் சந்திக்கிறேன்.

வணக்கம்.

அன்புடன்
செங்கோவி.

டிஸ்கி : அண்ணன் அட்ரஸ் தெரியாததால இங்கே போட்டுட்டேன். அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரங்க யாராவது இந்தப் பதிவை அவர்கிகிட்ட சேர்த்திடுங்க..ஹி..ஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

  1. சின்ன திருத்தம்...பையா படத்திலயும் கார்த்தி திரும்பிப் பார்த்து சிரிக்கும்போது அந்தக் கண்களும் கோணல் சிரிப்பும் அப்படியே பருத்திவீரனைத்தான் நினைவு படுத்திச்சு! எப்பவுமே அப்படித்தான்! சூர்யா போல வெரைட்டியான கதா பாத்திரத்துக்கு செட் ஆகமாட்டார்னு தோணுது! ஒரு சஞ்சய் ராமசாமி மாதிரி ரோலுக்கு கார்த்திய யோசிக்க முடியுமா? என்னதான் கோர்ட் போட்டு வந்தாலும் 'நீ கலக்கு சித்தப்பூ'ன்னு பருத்திவீரன் ஞாபகம்தான் வரும்!
    :-)

    ReplyDelete
  2. உசுப்பேத்தி விடுறான்க ஒரே வீட்ல இருந்து ரஜினி, கமல்னு!

    இதில ஒரு டீ.வி. நிகழ்ச்சில சிவகுமார் வேற கமல் தன்னோட இடத்தை சூர்யாவுக்கு கொடுத்துட்டார்னு ஓவர் பீலிங்க்ஸ் கட்டி அழுதார்!

    இந்த சிவகுமார் குடும்பம் பொது இடத்தில் நடிக்கிற நடிப்பு தாங்கமுடியல சாமியோவ்! :-)

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை.
    அவசியம் சிவக்குமார் மகனுக்கு தெரிய வேண்டிய பதிவு,

    ReplyDelete
  4. அண்ணன் நசுங்கிப் போன சொம்ப பெண்டெடுத்திருக்காரு போல...?

    ReplyDelete
  5. பருத்தி வீரரு ஒரே மாதிரியா நடிச்சிட்டு வர்ராராமே, அத ஒரு வார்த்த கேட்டிருக்கப்படாதாண்ணே? (ஒருவேள ஒரே மாதிரி பண்ணுனா டாகுடர் பட்டம் கெடைக்கும்னு எவனும் சொல்லிட்டானோ?)

    ReplyDelete
  6. /////ஜீ... said...
    உசுப்பேத்தி விடுறான்க ஒரே வீட்ல இருந்து ரஜினி, கமல்னு!

    இதில ஒரு டீ.வி. நிகழ்ச்சில சிவகுமார் வேற கமல் தன்னோட இடத்தை சூர்யாவுக்கு கொடுத்துட்டார்னு ஓவர் பீலிங்க்ஸ் கட்டி அழுதார்!

    இந்த சிவகுமார் குடும்பம் பொது இடத்தில் நடிக்கிற நடிப்பு தாங்கமுடியல சாமியோவ்! :-)///////

    என்ன பண்றது, கேமராவ ஆன் பண்ணிட்டா எல்லாம் ஆட்டோமேட்டிக்கா வந்துடுதாம்.......!

    ReplyDelete
  7. இதே அண்ணன் ரெண்டு வருசம் கழிச்சி, தமன்னாவின் எழுச்சியும் கார்த்தியின் வீழ்ச்சியும்னு பதிவு போட்டாலும் போடுவாரு......!

    ReplyDelete
  8. பாவம் நம்ம தமன்னா! அந்தப் புள்ளைய வேற தமிழ்நாட்ட விட்டே துரத்திட்டானுங்க!

    ReplyDelete
  9. அய்யோ அய்யோ அய்யயய்யய்யோ... எதாவது சொல்லனும்னு/எழுதனும்னு தோனி அத டிராப்ட்ல பாதி எழுதி வச்சிட்டு கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தா அத மாதிரி ஒன்னையே எழுதி பப்ளிஷ் பண்றதே உங்க வேலையா போச்சி அண்ணே...

    ReplyDelete
  10. ம்ம்ம், ஜீ...சொன்னது மாதிரி அந்த கோணல் சிரிப்பு ரொம்பவே கடுப்ப கெளப்புது.. எல்லா படத்துலயும் அந்த இடது பக்க கன்னத்தை கோணி சிரிச்சிகிட்டே இருக்காரு, அதுலயும் சகுனில சகுனித்தனம் பண்ணுறதா நெனச்கிட்டு அந்த கோணல் சிரிப்பு சிரிப்பாரு பாருங்க, அதுக்கு நம்ம டாக்டர் சிரிப்பு எவ்வளவோ மேல்!!!

    ReplyDelete
  11. //அதனால, அடுத்த படத்தையாவது கொஞ்சம் கவனமாச் செய்யுங்கண்ணே. சீக்கிரமா ஒரு நல்ல படத்துல உங்களைச் சந்திக்கிறேன்.///

    இது கஷ்டம்... ஏற்கனவே கமிட் ஆகி அடுத்து வர போறது மாப்பிள்ளை ரீமேக் புகழ் சுராஜ் படம், அந்த அலெக்ஸ் பாண்டியனும் இந்த சகுனி மாதிரிதான் இருக்கும்.. அதுக்கப்புறம் வர போற பிரியாணி, அழகுராஜா டைரக்டர்ஸ் மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு..
    அதுனால அடுத்த மூணு படம் முடிஞ்சிதான் உங்க லெட்டர்க்கு அவரு படம் நடிப்பாரு!!

    ReplyDelete
  12. அவரு பீல்டுல நிலைச்சு நிக்க முயற்சி பண்றாராம்.பாப்போம்,பாப்போம் நீங்க எப்போ அவர சந்திக்க போறீங்கன்னு.,

    ReplyDelete
  13. அண்ணே...!பில்லாவுக்கு..ஒரு கடுதாசி போட்டா நல்லாயிருக்கும்!அவ்வ்வ்!

    ReplyDelete
  14. சராசரி சினிமா ரசிகனின் ஏக்கம் என் கருத்தும் இதுதான் பாஸ். கார்த்தி கவனிக்க

    ReplyDelete
  15. தமன்னா பாவம் அந்த புள்ள அது பத்தியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்ணே

    ReplyDelete
  16. ஒரு தமிழ் சினிமா ரசிகனின் பார்வையில் அந்த ஏக்கத்தை நீங்கள் தந்திருக்கும் இப் பதிவு நல்லாருக்கு

    ReplyDelete
  17. வார்த்தைக்கு வார்த்தை அண்ணே அண்ணே.! நு சொல்லி வுங்க வசய குறைச்சி புட்டிகளே..செங்கோவி அண்ணே

    ReplyDelete
  18. ///எங்களை மாதிரி சாமானியங்களுக்கு சினிமாங்கிறது பொழுதுபோக்குச் சாதனம் தான்.////

    ஆனால் உங்கள் ரசனை அப்படி சொல்லலியே அண்ணே...

    ReplyDelete
  19. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு புளொக்கரா இருந்தால் கட்டாயம் கொடுக்கமாட்டான்

    ReplyDelete
  20. நானும் முத்துராமன் மகன் கார்த்திக்கு என்று நினைச்சு ஓடிவந்தால் நீங்கள் சிவகுமார் மகன் கார்த்திக்கா ??? ம்ம் நான் இன்னும் உசுப்பேத்தும் எதிர்கால முதல்வர்களை சரியாக பார்க்கும் நேரம் கிடைக்குது இல்லை! இப்ப எண்டர்டெயிமனுக்கு நேரம் இல்லை பாஸ்!

    ReplyDelete
  21. ரொம்பவே அவசியமான பதிவு!

    ReplyDelete
  22. நல்லா சொன்னிக செங்காவி. கார்த்தி கவனிக்கணும். நன்றி

    ReplyDelete
  23. மசாலா படங்களில்தான் நடிப்பேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் கார்த்தி.

    ReplyDelete
  24. //எங்களுக்கு ஏற்கனவே இருக்கிற ‘வருங்கால முதல்வர்கள்’ போதும்ணே..நீங்க வேற அந்த லிஸ்ட்ல சேர்ந்து இம்சை பண்ணிடாதீங்க.

    கரெக்டா சொன்னீங்க. இந்த அருமையான வாய்பு வேறு யாருக்கும் அமையாது. சரியாக பயன்படுத்திக் கொண்டால் எவர்கிரீன் ஹீரோவாக ஜொலிக்கலாம். ஆனால் விதி?.....

    ReplyDelete
  25. அப்பிடியே இத அவருக்கு கொரியர் லையும் அனுப்பி வையுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும்நன்றி,http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  26. உங்களுக்கு டிபிபிறேன்ட் வரைட்டி கு செட் ஆக மாடிகனு உள்ள situvation na chaange பனி காட்டுக

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.