Tuesday, November 12, 2013

எங்கள் ரஜினி ரசிகர் மன்றம் கலைக்கப்பட்ட கதை...

சிறுவயது முதலே நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன். அது என் அம்மாவிடமிருந்து எனக்கு வந்த ரசனை. நடிகர் திலகம் நடித்த படங்களை விவரம் தெரியாத வயதிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் ஊரே சிவாஜி மன்றம்-எம்.ஜி.ஆர் மன்றம் என்று இரண்டாகப் பிரிந்துதான் இருக்கும். பொங்கல் திருவிழா நேரங்களில் பெரும் போட்டியும் அடிதடியும்கூட நடக்கும். எம்,ஜி,ஆர் அரசியலுக்குப் போக, சிவாஜிக்கும் வயசாக நாங்கள் அடுத்த தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. 

ரஜினி-கமல் அல்லாத ஆவரேஜ் நடிகர்களுக்கு எங்கள் ஊரில் ரசிகர் மன்றங்கள் முளைத்து எழுந்தன. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நானும் இன்னும் இரண்டு சீனியர்களுமாக, சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர் மன்றம் வைப்பது என்று முடிவு செய்தோம்.
மற்ற மன்றங்கள் எல்லாம் நிரந்தரமாக போர்டு மாட்டும் அளவிற்கு முன்னேறிக்கொண்டிருந்தன. எனவே நாங்கள் தற்காலிகமாக ஒரு சுவற்றில் மன்ற விவரங்களை எழுதி ஆரம்பிப்போம் என்று முடிவு செய்தோம். ’பாயும்புலி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்ற பெயரையும் சுவற்றில் எழுதி, கூடவே தலைவர்-சீனியர் 1, செயலாளர்-செங்கோவி, பொருளாளர்-சீனியர் 2 என்றும் எழுதிவிட்டு கெத்தாக வீடு வந்து சேர்ந்தோம்.
நாங்கள் வீடு வரும் முன்னே, மன்றம் திறக்கப்பட்ட(!) செய்தி, வீடு வந்து சேர்ந்துவிட்டது. அம்மா பயங்கர அதிர்ச்சியில் இருந்தார். அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் அழுவது போல் கேட்டார் ‘ ஏம்பா.எங்க ஐயாக்கு (சிவாஜிக்கு) ரசிகரா இருந்துட்டு எப்படிப்பா உன்னால அந்த பரட்டைத்தலையனை ரசிக்க முடியுது?’.
என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வயது வித்தியாசம் அதிகம். அப்பா தியாகராஜபாகவதரின் ரசிகர். ‘இப்போல்லாம் என்ன நடிக்கானுக..எவனோ பாடுறான், எவனோ வாயசைக்கான்..இதா நடிப்பு. எங்க பாவதரு(!) பாட ஆரம்பிச்சா...’ என்று அவர் குத்துவது நடிகர் திலகத்தை! எனவே சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக அவரின் முகத்தைப் பார்க்காமல் இருப்பதே, நம் மனநலனுக்கு நல்லது என்று முடிவு தலை குனிந்து உட்கார்ந்திருந்தேன். அப்போது ‘அய்யோ..அம்மா’ என்று கத்தியபடியே மன்றத் தலைவர், டவுசரைக் கையில் பிடித்தபடி எங்கள் வீட்டைக் கடந்து ஓடினார். பின்னாலேயே தடிமனான அவர் அண்ணன்.
ஊரில் செல்வாக்குப் பெற்றிருந்த இன்னொரு புது மன்றத்தின் தலைவர் அந்த அண்ணன். எனவே அந்த மன்றத்துக்குப் போட்டியாக இன்னொரு மன்றத்தை தம்பியே ஆரம்பிப்பதை அவர் எப்படி ஒத்துக்கொள்வார். எனவே பனைமட்டையால் மட்டுமல்லாது செண்ட்டிமெண்டாலும் தம்பியை அடித்தார். ‘ஏலே, நீயே இப்படிக் கிளம்புனா ஊருல ஒருபய என்னை மதிப்பானாலே? எங்க ஆளு(நடிகர்) நம்ம ஜாதிக்காரன். அவனை நம்மளே ஆதரிக்கலேன்னா எப்படிலே? நீ எவனுக்கு வேணா ரசிகனா இருந்துட்டுப் போ..ஆனா மன்றம் ஆரம்பிக்காத..எம்மன்றத்துல சேந்துடு’ என்று அவர் போட்ட டீலிங்குக்கு தலைவரும் ஒத்துக்கொள்ள, எங்கள் மன்றம் ஆரம்பித்த ஒரேநாளில் கலைக்கப்பட்டது. 
அத்தை பொண்ணை நினைச்சாலே மறக்க மாட்டோம், சூப்பர் ஸ்டாரை எப்படி மறப்போம்? எனவே எங்கள் மன்றத்தை மனசுக்குள்ளேயே வளர்த்துக்கொண்டு வந்தோம். ஆனாலும் மன்றத்தலைவர் முழுக்க கழண்டு கொண்டார். ஏதோ ரகசிய உளவாளிகள் போல நானும் பொருளாளரும் மட்டும் அவ்வப்போது மன்றத்தை முன்னேற்றுவது பற்றி பேசிக்கொள்வோம். காலம் உருண்டோடியது. ஃபேமஸ் நடிகர் எனும் நிலையிலிருந்து சூப்பர் ஸ்டார் எனும் நிலைக்கு ரஜினி உயர்ந்தார். நாங்களும் டவுசர் போடும் வயதிலிருந்து பேண்ட் போடும் வயதிற்கு வந்து, அந்த பேண்ட்டை அவிழ்க்கும் வயதை வந்தடைந்தோம். இனிமேல் யாருக்கும் பயப்பட வேண்டாம், வெளிப்படையாக மன்றத்தை ஆரம்பிப்போம் என்று பொருளாளரும் நானும் முடிவு செய்தோம். ஆனால் அதற்கும் மல்லு-கில்மாப் படங்களின் வடிவில் சோதனை வந்தது.
அப்போதெல்லாம் கேபிள்/டிஷ் டிவி கிடையாது. எனவே மற்ற மன்றத்தினர் பக்கத்து டவுனிலிருந்து 100 ரூபாய் கொடுத்து டிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து வருவார்கள். வீடியோ கேஸட் ஒன்றுக்கு 5 ரூபாய் என்று ஞாபகம். நான்கு கேஸட்களை வாங்கிவருவார்கள். மூன்று கேஸட் (அந்த நடிகரின் படம்) தெருவில் வைத்து போடப்படும். மூன்றுபடம் முடிந்ததும், அதிகாலையில் வேறெங்காவது வைத்து அந்த நாலாவது கேஸட் போடப்படும். அது மன்றக் கண்மணிகளுக்கான மல்லு-கில்மாப் பட ஸ்பெஷல் ஷோ. அதற்காகவே மன்றத்தில் உறுப்பினரான சிங்கங்களும் உண்டு. எனவே அந்த சிங்கங்களை சூப்பர் ஸ்டாரின் பக்கம் திருப்புவது எப்படி என்று யோசித்தோம். (பின்னாளில் ஷகீலா எனும் நடிகை, பல மலையாள சூப்பர் ஸ்டார்களை இதே ஸ்டைலில் அலறவைத்தது ஞாபகம் வருகிறதா?).
நாமும் 3+1 கேசட்களை வாங்கி, மன்றத்தை பெருக்குவோம் என்று முடிவு செய்தோம். இப்போது வறுமை எங்கள் மன்றத்துக்கு குறுக்கே நின்றது. 120 ரூபாய் வேண்டும். மன்றத்துக்கு மேலும் 2 நல்லபிள்ளைகள் வந்து சேர்ந்தார்கள். இந்தமுறை நானே தலைவரானேன். சீனியர்2 பொருளாளர். இன்னொரு அசடை செயலாளராக்கினோம். முதலில் மன்றத்துக்கு நிதி சேர்ப்பது என்று முடிவு செய்தோம். பொருளாளர் கொத்துவேலை, மற்ற எல்லாருமே ஸ்கூலில்தான் படித்துக்கொண்டிருந்தோம். எனவே வாரம் ஐந்து ரூபாய் மன்றத்துக்கு தருவது என்று முடிவு செய்தோம். நிதி மேலாண்மையை பொருளாளர் பார்த்துக்கொண்டார். வாரம் 20 ரூபாய்..120 ரூபாய் தொட்டுவிடும் தூரம்தான் என்று சேமிக்க ஆரம்பித்தோம்.
பாயும்புலி பிராண்டிவிட்டதால், ‘மன்னன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்று பெயரை அப்டேட் செய்துகொண்டோம். முதலில் 4 கேஸட், அப்புறம் தான் மன்றப்பெயரை வெளியில் சொல்வது என்று கொள்கை முடிவெடுத்தோம். தினசரி இரவு சந்தித்து மன்ற நடவடிக்கைகளை(!) கலந்தாலோசிப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் ஸ்கூல் முடிந்து சீக்கிரம் வந்ததால், எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் சீனியர் கொத்துவேலையும் பார்த்துவிட்டு, மன்ற நடவடிக்கையிலும் பங்கெடுப்பது சிரமமாக இருந்தது. இரவு லேட்டாக வேறு வர ஆரம்பித்தார். வேறு ஆளிடம் பொறுப்பை மாற்றலாம் என்றால், சிறுவயது முதலே நம்முடன் மன்றத்தில் இருப்பவராச்சே என்று பொறுத்துக்கொண்டேன். தலைமைக்குப் பொறுமை அழகு!

ஆறாவது வாரத்தில் பொருளாளர் ஆளையே காணோம். இரவு வீட்டுக்கு வருவதே 9 மணிக்கு மேல் தான் என்று தெரிந்தது. அவருடன் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்ததில் கோவில்பட்டி பஜாரில் சுற்றுவதாக அறிந்தோம். ஆனாலும் ஆறாவது வார இறுதியில் ஞாயிறு இரவு ஆளை வீட்டிற்கே சென்று, கூட்டி வந்தோம். ‘அண்ணே, ஆறு வாரம் ஆயிடுச்சு. இந்தாங்க இந்த வார பங்கு. அடுத்த வாரம் ஜெகஜோதியா மன்றத்தை ஓப்பன் பண்ணிடுவோமா?’ என்று கேட்டேன். அவர் நெளிந்தபடியே ‘ஆரம்பிச்சுடலாம் தம்பி..ஆனா இப்போ படம் போட வேண்டாம்’ என்றார். ‘ஏன்..ஏன்..ஏன்’ என்று மூன்றுபேருமே தனித்தனியே கத்தினோம்.
‘அது பார்த்துக்கோடா தம்பி..மன்றக்காசு கொஞ்சம் செல்வாகிடுச்சு பார்த்துக்கோ..அதான் ஒரு மாசம் கழிச்சு...’
‘யோவ், மன்றமே ஆரம்பிக்கலை..அதுக்குள்ள என்னய்யா செலவு வந்துச்சு?’ என்றோம்.
‘மன்றச் செலவு இல்லப்பா...நம்ம பெரியசாமி ஹோட்டல்ல கொத்துபுரோட்டா நல்லாயிருக்கும் பார்த்துக்கோ..ரொம்பநாளா சாப்பிடணும்னு ஆசை. அதனால..’
‘அதனால என்னய்யா? கொத்துபுரோட்டாவே 5 ரூபாக்குள்ள தானே..போனாப் போவுது’
’ஆமாடா தம்பி..ஒருநாளு சாப்பிட்டா 5 ரூபா தான்..அது பார்த்துக்கோ, நல்லா டேஸ்ட்டா இருந்தது பார்த்துக்கோ...’
‘யோவ், இப்போ எவ்வளவு தான்யா இருக்கு?’
‘15 ரூபா தாம் தம்பி இருக்கு’
‘அடப்பாவி..அப்போ 15 + இந்த 15, மொத்தம் 30 தான் இருக்கா?’
‘இல்லைடா தம்பி..அது பார்த்துக்கோ..மொத்தமே இந்த 15 தான் இருக்கு’.
அந்த ஆள்மீது பாய்ந்து அப்போதே கொத்துப்புரோட்டா போட்டோம். பொருளாளர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார். ‘அடச்சண்டாளா..கடைசீல இந்த கொத்துபுரோட்டாக்காகத்தான் சின்ன வயசுல இருந்தே மன்றத்துல இருந்தியா?’ என்று நான் யோசிக்கும்போதே மீதி இரண்டு பலியாடுகளில் செயலாளர் ஆடு அழத்தொடங்கியது.
‘போச்சுண்ணே..எல்லாம் போச்சு’
‘விடுறா..விடுறா’
‘இல்லைண்ணே..எத்தனை ஆசையா உங்க மன்றத்துக்கு வந்தேன் தெரியுமா? அந்த *** மன்றக்காரங்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்ணே..சின்னக்கேள்வி தான்..ஏம்பா, ப்ளூபிலிம், ப்ளூபிலிம்னு சொல்றாங்களே..அது படம் ஃபுல்லா ப்ளூ கலர்லயேவா எடுத்திருப்பாங்கன்னு கேட்டேண்ணே..அந்த ***ப்பய, அஞ்சு நிமிசம் விடாமச் சிரிச்சாண்ணே. அதான், இங்கயாவது தெரிஞ்சுக்கலாம்னு வந்தா..’
‘ஆ..ஆ..என் தங்கமே.அழாதடா செல்லம்..அழாத..அண்ணனுக்கும் அதே டவுட்டு தான். நான் என்ன அழவா செய்றேன். அழக்கூடாது’ என்று ஆறுதல் சொல்லி, மன்றத்தைக் கலைத்தேன்.
இவ்வாறாக எங்கள் சூப்பர் ஸ்டார் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்படும் முன்பே ஜாதிக்கொடுமையாலும் கொத்துப்புரோட்டாவாலும் கலைக்கப்பட்டது. கடைசிவரை நிறைவேறாத கனவாகவே அது போய்விட்டது.
ஆனாலும் என் மனதில் வளர்ந்து நிற்கிறது, ரஜினி ரசிகர் மன்றம்!


அந்த புரோட்டாக்கடை
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

  1. காலை வணக்கம்,தலைவரே!எப்புடியோ மன்றம் ஆரம்பிச்சதே பெரிய விஷயம்.///கொத்து பரோட்டா....................ஹி!ஹி!!ஹீ!!!நல்லாருக்கும்!!!!!

    ReplyDelete
  2. கொத்துப்புரோட்டாவுக்கு ஈடு இணை இல்லை ஐயா.

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா ஹா ரசிச்சி சிரிச்சென்ய்யா...

    ReplyDelete
  4. மன்றத் தலைவர், டவுசரைக் கையில் பிடித்தபடி எங்கள் வீட்டைக் கடந்து ஓடினார். பின்னாலேயே தடிமனான அவர் அண்ணன்.//

    பிடிங்கலேய் பிடிங்கலேய்...ஹா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete

  5. //MANO நாஞ்சில் மனோsaid...
    ஹா ஹா ஹா ஹா ரசிச்சி சிரிச்சென்ய்யா...//
    ஹா..ஹா..ரொம்ப நாளா எழுத நினைச்ச விஷயம்ணே..!

    ReplyDelete
  6. ஹஹ்ஹா.. மன்றம் கலைத்த கதை அருமை.. கொத்து பொரோட்டா மேட்டர் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது..

    ReplyDelete
  7. நாங்கள் வீடு வரும் முன்னே, மன்றம் திறக்கப்பட்ட(!) செய்தி, வீடு வந்து சேர்ந்துவிட்டது.

    படிச்ச உடனே சிரித்து விட்டேன்.என்ன ஒரு ரஜினி பாசம்..

    ReplyDelete

  8. //சிவாஜிக்கும் வயசாக நாங்கள் அடுத்த தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. //

    பாஸ் நீங்க சிவாஜி காலத்து ஆளா... நான் ஏதோ உங்களுக்கு 45 வயசுக்குள்ளதான் இருக்கும்னு நெனச்சேன்.. :-)

    ReplyDelete
  9. //3+1 கேசட்களை // ஹி..ஹி... அப்படியே எங்க காலேஜ் ஹாஸ்டல் ஞாபகம் வருது..

    எங்க ஊர்ல நாங்களும் ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பித்தோம். 'நாட்டுக்கொரு நல்லவன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்' . எங்க ராசியோ என்னவோ தெரியல...படம் செம பிளாப். மன்றத்தை கலைச்சாச்சி .

    ReplyDelete
  10. பரோட்டா கதை சிரிச்சி மாளவில்லை..

    ReplyDelete
  11. ம்ம் நீங்க அப்பவே அப்டி ல.. ஆனா பரோட்டவால.. ஆனா செம தலைவருங்க அவரு..

    ReplyDelete
  12. //கோவை ஆவிsaid...
    ஹஹ்ஹா.. மன்றம் கலைத்த கதை அருமை.. கொத்து பொரோட்டா மேட்டர் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது..//

    ஆமாய்யா..அப்போ கடுப்பானாலும், இப்போ அந்த ஆளைப் பார்த்தா சிரிப்பு வந்திடும் நமக்கு.

    ReplyDelete
  13. //அமுதா கிருஷ்ணாsaid...
    நாங்கள் வீடு வரும் முன்னே, மன்றம் திறக்கப்பட்ட(!) செய்தி, வீடு வந்து சேர்ந்துவிட்டது.

    படிச்ச உடனே சிரித்து விட்டேன்.என்ன ஒரு ரஜினி பாசம்..//

    நன்றி சகோ..செய்தியைப் பரப்புவதில் நம்ம ஆட்களின் வேகம் அப்படி.

    ReplyDelete
  14. Manimaran said...

    //பாஸ் நீங்க சிவாஜி காலத்து ஆளா... நான் ஏதோ உங்களுக்கு 45 வயசுக்குள்ளதான் இருக்கும்னு நெனச்சேன்.. :-) //

    இல்லைய்யா...அது அம்மா கொடுத்த அறிவு!..நான் ரஜினி காலத்து ஆள் தான்.

    //. 'நாட்டுக்கொரு நல்லவன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்' . //

    அது டபுள் அழகுராஜாவாச்சே.ஆனாலும் அந்த குஷ்பூவோட...........!

    ReplyDelete
  15. //ஹாரி R. said...
    ம்ம் நீங்க அப்பவே அப்டி ல.. ஆனா பரோட்டவால.. //

    எங்க ஊரு புரோட்டா டேஸ்ட் அப்படி ஹாரி.

    ReplyDelete
  16. மன்றம் ஆரம்பித்து கலைத்த கதை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது!நன்றி!

    ReplyDelete
  17. ஏம்பா, ப்ளூபிலிம், ப்ளூபிலிம்னு சொல்றாங்களே..அது படம் ஃபுல்லா ப்ளூ கலர்லயேவா எடுத்திருப்பாங்கன்னு கேட்டேண்ணே///
    எல்லாருக்கும் இந்த சந்தேகம் இருக்கும் போல

    ReplyDelete
  18. அந்த கொத்து பரோட்டாக்காரனாக நானே இருந்திருக்கிறேன்.., தொண்டராசிரியருக்கு சேர்த்த காசில விளையாடியிருக்கிறேன்..! ஆனா நாம நாணயஸ்தருங்கோ அம்மா மணிபெர்ஸ ஆட்டையபோட்டு கடனை அடைசோமே..!

    ReplyDelete
  19. //s suresh said...
    மன்றம் ஆரம்பித்து கலைத்த கதை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது!//

    நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  20. //கோகுல் said...

    எல்லாருக்கும் இந்த சந்தேகம் இருக்கும் போல//

    ஆமாய்யா..கேட்டா யாரும் பதிலும் சொல்ல மாட்டாங்க!

    ReplyDelete
  21. //காட்டான் said...
    அந்த கொத்து பரோட்டாக்காரனாக நானே இருந்திருக்கிறேன்.., தொண்டராசிரியருக்கு சேர்த்த காசில விளையாடியிருக்கிறேன்..! ஆனா நாம நாணயஸ்தருங்கோ அம்மா மணிபெர்ஸ ஆட்டையபோட்டு கடனை அடைசோமே..!//

    மாம்ஸ், நீங்க செய்யாத சேட்டையே கிடையாது போல!

    ReplyDelete
  22. ஆகா.. ஆகாகககா... நா எல்லாம் படிக்கிற காலத்துல துள்ளுவதோ இளமை கேசட்ட கடைல கேட்டதுக்கே கொடுக்க மாட்டேன்னு சொன்னாக.. நீங்க எப்புடி அண்ணே அன்ய்ஹா கேசட்ட எல்லாம் வாங்குனீக...

    ReplyDelete
  23. ஆஹா கொத்துப்ப்ரோட்டாவுக்கும் கில்மாவுக்கும் இப்படியா சாமி!ம்ம்

    ReplyDelete
  24. ஆகா.. ஆகாகககா... நா எல்லாம் படிக்கிற காலத்துல துள்ளுவதோ இளமை கேசட்ட கடைல கேட்டதுக்கே கொடுக்க மாட்டேன்னு சொன்னாக.. நீங்க எப்புடி அண்ணே அன்ய்ஹா கேசட்ட எல்லாம் வாங்குனீக...//அதுதானே மொக்கைராசுமாமா நாம் சேம் பி்ளேட்...ஹீஈ

    ReplyDelete
  25. மன்றம் கதை பல இருக்கு சினிமா /அரசியல் என இன்னும் பேசலாம் நேரம் வரும்போது!ம்ம்!ஹீ

    ReplyDelete
  26. //
    மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
    நீங்க எப்புடி அண்ணே அன்ய்ஹா கேசட்ட எல்லாம் வாங்குனீக...
    //

    கடைசிவரை வாங்கவே முடியலேன்னு தானே சொல்லியிருக்கேன்.

    ReplyDelete
  27. //தனிமரம்said...
    ஆஹா கொத்துப்ப்ரோட்டாவுக்கும் கில்மாவுக்கும் இப்படியா சாமி!ம்ம்
    //

    இருபசியும் உறுபசி!

    ReplyDelete
  28. மொ.ராசு (Real Santhanam Fanz ) said...'துள்ளுவதோ இளமை' கேசட்................///அப்பிடி என்ன தான் இருக்கு அந்த கேசட் ல?

    ReplyDelete
  29. உங்க ஆசையில இப்படி கொத்து பரோட்டா அள்ளிப் போட்டிருக்காங்களே தலைவரே!

    ReplyDelete
  30. //Subramaniam Yogarasa said... [Reply]
    மொ.ராசு (Real Santhanam Fanz ) said...'துள்ளுவதோ இளமை' கேசட்................///அப்பிடி என்ன தான் இருக்கு அந்த கேசட் ல? //

    நம்ம ரேஞ்சுக்கு ஒன்னும் இல்லை ஐயா.

    ReplyDelete
  31. //Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... [Reply]
    உங்க ஆசையில இப்படி கொத்து பரோட்டா அள்ளிப் போட்டிருக்காங்களே தலைவரே! //

    நமகும் கொஞ்சம் அள்ளிப் போட்டிருந்தா பரவாயில்லை.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.