Tuesday, January 4, 2011

சீமானும் சீமானின் தாத்தாக்களும்.....(தேர்தல் ஸ்பெஷல்)

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக(!) நான் எழுதி வரும் ’தேர்தல் ஸ்பெஷல்’ தொடரில் வைகோவை அடுத்து இன்று நாம் பார்க்கப் போவது சீமான் அவர்களைப் பற்றி.

தாத்தா#1: சீமானின் முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியில் வந்த முதல் பாடலான ‘வந்தனமய்யா’ வில் வரும் வரிகள் இவை:
மன்னாதி மன்னவராம்
மறவர் குல மாணிக்கமாம்
முக்குலத்து சிங்கமுங்க
முத்துராமலிங்கமுங்க
பொறந்து வளர்ந்த பூமி
அதைப் போற்றிப் பாடறோம் சாமி.

தொடர்ந்து இனியவளே, வீரநடை என இரு டப்பா படங்களைக் கொடுத்தபின் சீமான் எடுத்த புரட்சிப் படமான தம்பியில் முத்துராமலிங்கத் தேவரின் படத்தைக் காட்டினார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும் சுபாஷ் சந்திரபோஸாலேயே ‘தென்னாட்டு போஸ்’ எனப் பாராட்டப் பட்டவருமான முத்துராமலிங்கத் தேவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட லட்சக்கணக்கான தேவரின மக்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக தேவரினத்தில் பிறந்த(?) சீமானும் இருப்பதில் பெரிய தவறேதும் இல்லை தான். ஆனால் எதனாலோ திடீரென புரட்சியாளராக ஆவதென சீமான் முடிவு செய்தார். அடுத்து கீற்றுக்கு கொடுத்த பேட்டியில் தேவர் பற்றி கேட்கப் பட்டபோது கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது... முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.என்று சொன்னார். சரி..மாறுவது மனம்..அதனால் மாறிவிட்டது என்றே நினைத்தோம். 

பிறகு நாம் தமிழர் இயக்கம் பிறந்தது. தொடர்ந்து தேவர் ஜெயந்தியும் வந்தது. அப்போது சீமான் செய்த காரியம் நம்மைத் திடுக்கிட வைத்தது. ‘தனது சினிமாவில் காட்டுவதற்குக் கூட தகுதியில்லாதவராக ஆகிவிட்ட’ தேவரின் சிலைக்கு தொண்டர் படையுடன் சென்று மாலை அணிவித்து போஸ் கொடுத்தார் சீமான். இப்போது நமக்கு எழும் கேள்வியெல்லாம் இவைதான்:
அண்ணன்மார் தேவரைப் பற்றி சொன்ன உண்மைகள் என்ன? அவற்றுக்கு இப்போது என்ன ஆனது? மாலை அணிவித்த கையோடு அந்த உண்மைகளை கூடியிருந்த தேவரின மக்களுக்கு அறிவித்து அவர்களின் அறிவுக்கண்ணை அண்ணன் சீமான் திறக்காதது ஏன்? ‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என அறிவித்தவர் தேவர். சீமானுக்கோ தேசியமும் தெய்வீகமும் வேப்பங்காயை விடவும் கசப்பானவை. அப்படியிருக்கும்போது இந்த நாடகம் எதற்காக?

தாத்தா #2: இவ்வாறாக தனது ஒரிஜினல் தாத்தாவான தேவரைப் பற்றி ’எதையோ’ தெரிந்துகொண்ட சீமான் அவரைத் தாத்தா போஸ்ட்டிலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டு தந்தை பெரியாரை வளர்ப்புத் தாத்தாவாக வரித்துக் கொண்டார். ’கழுதை கெட்டால் குட்டிச்சுவர்’ என்பதற்கிணங்க தேசியத்தை வெறுத்தோர் திராவிடத்திற்கும் திராவிடத்தை வெறுத்தோர் தேசியத்திற்கும் மாறுவது வழக்கம் என்பதால் இதிலும் நமக்குப் பிரச்சினை இல்லைதான். 

கொஞ்சகாலம் பெரியாரின் பேரனாக வலம் வந்த சீமான் திடீரென ‘பெரியார் தாழ்த்தப் பட்டோருக்கு எதுவும் செய்யவில்லை. திராவிடத்தால் வீழ்ந்தோம். இனி நாம் திராவிடர் அல்ல. தமிழர் மட்டுமே “ என்றெல்லாம் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். எப்போது திராவிடத்தை தூக்கியெறிந்தாரோ அப்போதே தந்தை பெரியாரையும் தாத்தா போஸ்டிலிருந்து டிஸ்மிஸ் செய்தார் என்றே அர்த்தம். அதையும் செய்துவிட்டு சென்ற வாரம் பெரியார் பற்றி நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?

தாத்தா #3: இரண்டாவது தாத்தாவும் தன் அறிவுக்கு ஈடானவராக இல்லாமல் போனதால் இப்போது மூன்றாவதாக ஆதித்தனாரைப் பிடித்திருக்கிறார். ஆதித்தனார் கண்ட நாம் தமிழர் இயக்கத்தின் கொள்கைகள் :” தமிழ்நாடு தமிழருக்கே. அரசாளும் உரிமையும் தொழில் நடத்தும் உரிமையும் தமிழருக்கே”. சீமான் ஆதித்தனாரின் இயக்கத்தை மீண்டும் உயிர்த்தெழ வைத்திருப்பதால் வரும் கேள்விகள் இவை: தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்களான நாயுடு சமூகத்தவர், அருந்த்தியினத்தோர், மற்ற மலையாளிகள், கன்னடர் போன்றோர் நிலை என்னவாகும்? அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்? நாம் இவர்களை அடித்து விரட்டினால். பிற மாநிலங்களில் வாழும் தமிழரின் பாதுகாப்புக்கு நீங்கள் தரும் உத்தரவாதம் என்ன? நோக்கியா, ஃபோர்ட், டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்னபிற அயல்நாட்டு/பிற மாநில தொழில்முனைவோரின் நிறுவங்களை என்ன செய்வீர்கள்? அங்கே பொட்டி தட்டிப் பிழைக்கும் ‘மானங் கெட்ட ‘ தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கான வழி என்ன?

தாய் : ஒரு மனிதனுக்கு தாத்தாவை விடவும் முக்கியத் தேவை தாய்தான். எனவே தாத்தாக்களைக் கண்டுபிடிப்பதில் எக்ஸ்பெர்ட்டான சீமான் அடுத்து தாயைக் கண்டுபிடித்தார். சாதாரணத்தாய் அல்ல. ஈழத்தாய். திடீரென ஜெயலலிதாவை வணங்கினார். அதற்குக் காரணம் தமிழீழத்திற்கு ஜெ. ஆதரவு கொடுத்ததுதான் என்றே வைத்துக்கொள்வோம்.
இப்போது மற்றொரு தமிழீழ ஆதரவாளரான வைகோ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என நேரில் ஆஜராகி வாதாடிக்கொண்டிருக்கிறார். அதைப்பற்றி ஜெ. மூச்சுக்கூட விடுவதில்லை. அவ்வளவு ஏன் ஆரம்பித்திலிருந்தே ஜெ. விடுதலைப்புலிகளைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் ஆதரவாக எதுவும் பேசவேயில்லை. இந்த நிலையில் சீமான் ஜூனியர் விகடனிலும் பொதுக்கூட்டங்களிலும் வரும் தேர்தலில் அதிமுகவிற்கே ஆதரவு எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஜெ. காங்கிரஸுடனும் கூட்டணி வைக்க இன்னும் முயன்றுகொண்டு இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்போது நம்முடைய கேள்விகள் இவைதான்: ”காங்கிரஸூடன் கூட்டணியில்லை. புலிகள் மீதான தடையை நீக்க ஆதரவுக்குரல்’ ஆகிய இரு நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதிமுகவிற்கு ஆதரவு என சீமான் ஜெ.விடம் கேட்காதது ஏன்? இதைக் கேட்கக்கூட திராணியில்லையென்றால் சீமானுக்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் என்ன வித்தியாசம்?

தம்பி: தாயைக் கண்டடைந்த சீமானின் அடுத்த கண்டுபிடிப்பு ‘மானமுள்ள தமிழன்’ஆன தம்பி விஜய். கொஞ்சகாலம் முன்புதான் விஜய் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து காங்கிரஸில் சேர ஆலோசனை நட்த்தினார். இவர் கேட்ட அப்பாவுக்கு ஒரு எம்.பி. சீட் அல்லது இவருக்கு இளைஞர் அணித்தலைவர் பதவி (வயசாயிடுச்சு-ராகுல்) கிடைக்காததால் இப்போது தனிக்கட்சி ஆரம்பிப்பது பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பவர் விஜய். 

நமக்கு உண்மையிலேயே புரியாத விஷயம் என்னவென்றால் ‘காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுபவர்களும், காங்கிரஸூடன் கூட்டணி வைப்பவர்களும்’ மானங்கெட்ட தமிழனாக சீமானுக்குத் தெரியும்போது காங்கிரஸில் சேரவே முயன்ற விஜய் மட்டும் மானமுள்ள தமிழனாக ஆனது எப்படி? ஒரு பட வாய்ப்பினாலா? இதுபுரியாமல் சீமானைச் சிறையில் போட்டு சித்திரவதை செய்த கலைஞரை என்னவென்று சொல்வது?

நமது ஈழச் சகோதர்ர்கள்: அப்படியென்றால் சீமான் முழுதாகப் புறக்கணிக்கப் படவேண்டியவரா என்றால், அப்படியும் இல்லை என்பதே நமது பதில்.

போரினால் பேரழிவைச் சந்தித்து இருக்கும் நம் ஈழச் சொந்தங்களுக்கு இப்போதைய உடனடித் தேவை மீள்குடியேற்றப் பணிகளை விரைவு படுத்தலும், சம உரிமையுடன் சிங்கள அரசால் நடத்தப் படுவதுமே. அதற்கு சிங்கள அரசை வற்புறுத்தும் வல்லமை கொண்டது இந்திய மத்திய அரசு. துரதிர்ஷ்டவசமாக பேரழிவுக்குத் துணை போனதும் இதே மத்திய காங்கிரஸ் அரசு தான். காங்கிரஸ் தன் தவறை உணரவேண்டுமென்றால், ஈழ விஷயத்தில் நமது உடனடித் தேவைகளுக்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமென்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முழுதாக காங்கிரஸ் தோற்கடிக்கப் படவேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே, இனி தமிழ்நாட்டில் ஒரு சீட் பிடிக்கவேண்டும் என்றால்கூட ஈழ விவகாரத்தில் இனியாவது நேர்மையுடன் நடக்க வேண்டும் என காங்கிரஸ் உணரும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டதற்கு சீமானின் பிரச்சாரமும் ஒரு முக்கியமான காரணம். குறிப்பாக ப.சிதம்பரம் (உண்மையில்) தோற்கடைக்கப் பட்டதற்கு சீமானே முக்கியக் காரணம் என்பதை நான் அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். சீமானிடம் இருக்கும் பேச்சாற்றல் என்பது உண்மையில் சாதாரண விஷயம் அல்ல. தன் உணர்ச்சியை காண்போர் மேல் ஏற்றிவிடும் வல்லமை கொண்டது அவரது பேச்சு. எனவே கண்டிப்பாக காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரப் பீரங்கியாக இருப்பார் சீமான். அவர் இதுவரை உருவாக்கியிருக்கும் அவரது அரசியலுக்கான இடமும் அவ்வளவு தான்.

மற்றபடி அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மாற்றுசக்தி என நாம் நம்புகிற அளவிற்கு சீமானும் அவரது இயக்கமும் இன்னும் தகுதியடையவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.

சீமான் தங்க ஊசியாகவே இருக்கலாம். அதற்காகக் கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

34 comments:

 1. விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக செயல்படும் சீமானை கைதுசெய்ய வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்ததே ஜெயலலிதாதான் என்பதை மறந்துவிட்டார் போல சீமான்

  ReplyDelete
 2. அருமையான பதிவு

  ReplyDelete
 3. நான் எழுத நினைத்ததும் இது தான் நண்பரே. சீமானை காங்கிரஸ் என்னும் அழும் குழந்தைக்கு பயம் காட்டும் பூச்சாண்டியாக மட்டுமே பயன்படுத்திக்க முடியுமே தவிர ஈழதமிழர்களுக்கோ, வேறு எந்த நாட்டு தமிழர்களுக்கோவான விடிவெள்ளியாக எல்லாம் நினைக்க இயலாது என்பதை கட்டுரை அருமையாக சுட்டி காட்டியிருக்கு

  ReplyDelete
 4. //‘காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுபவர்களும், காங்கிரஸூடன் கூட்டணி வைப்பவர்களும்’ மானங்கெட்ட தமிழனாக சீமானுக்குத் தெரியும்போது காங்கிரஸில் சேரவே முயன்ற விஜய் மட்டும் மானமுள்ள தமிழனாக ஆனது எப்படி?//
  சூப்பர்! ஆனா பாருங்க நம்ம காமெடி பீஸ் டாகுடரும் சீரியஸ் பதிவில வந்திட்டார்!
  ஆமா, டாகுடர்னாலே காமெடி பீசுகளா? ஒருவேளை அதுக்குத்தான் டாக்டர் பட்டமா?...இது ஆராயப்படவேண்டிய விஷயம்!
  நல்ல பதிவு!

  ReplyDelete
 5. @ரஹீம் கஸாலி:இப்போது ஜெ. ஆட்சியில் இருந்திருந்தால் சீமான் இவ்வளவு பேசமுடியாது என்பதும் உண்மைதான்.

  ReplyDelete
 6. @THOPPITHOPPI:பாராட்டுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 7. @அபி அப்பா: பரவாயில்லையே..அபிஅப்பா ரேஞ்சுக்கு நான் யொசிக்கிறேனே...சபாஷ்டா செங்கோவி..முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 8. @ஜீ...: டாக்டருக நம்மைத் தான் காமெடி பீஸ்னு நினைக்கிறாங்க ஜீ..

  ReplyDelete
 9. @சே.குமார்: பாராட்டுக்கு நன்றி பாஸ்..

  ReplyDelete
 10. சூப்பருங்க பல பேரோட எண்ணத்தை நல்லாவே வெளிப்படுத்தி இருக்கீங்க

  ReplyDelete
 11. நல்ல கட்டுரை. சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதால், கருத்துக்கள் திசை மாறுவது தவிர்க்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

  பாஞ்சாலங்குறிச்சி விஷயம், இன்றுதான் அறிகின்றேன். தகவலுக்கு நன்றி.

  .

  ReplyDelete
 12. @கும்மி//கருத்துக்கள் திசை மாறுவது தவிர்க்கப்பட்டுள்ளது// அதை மனதில் கொண்டுதான் எழுதினேன் நண்பரே..இங்கு மையக்கருத்து சீமானைப் பற்றியே..கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. போலி முகமூடிகளை கிழித்தெறியும் பதிவு ..சொல்ல வந்த கருத்துக்களை உணர்சிவசபடாமல் ஒரே நேர்கோட்டில் சொன்ன விதம் அருமை ...இன்னும் நிறைய முகமூடிகள் கிழியும் பதிவுகள் உங்களிடம் எதிர்பார்கின்றோம்

  ReplyDelete
 14. @FARHAN: பாராட்டுக்கு நன்றிஃபர்ஹான்..தொடர்ந்துஆதரவு தாருங்கள்..

  ReplyDelete
 15. பல பேரோட எண்ணத்தை veளிப்படுத்தி இருக்கீங்க

  ReplyDelete
 16. @tharuthalai: வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 17. அருமையான நடை...முழுமையான தொகுப்பு...தொப்பி தொப்பி மூலம் தங்கள் பதிவு தெரிய வந்தது...தொடர்ந்து எழுதுங்கள்....

  ReplyDelete
 18. @Raja: பாராட்டுக்கு நன்றி ராஜா..அறிமுகப்படுத்திய நண்பர் தொப்பிதொப்பிக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  ReplyDelete
 19. i like your way of writing but still seeman is better than others. As mentioned by others initially when i read it may goes such a way like you want to critisize the MUKKULATOR but it looks good.

  They way seeman acted may be wrong but this kind of mistake will come for every one. even we also doing the same kind of mistake.

  ReplyDelete
 20. @ayyadurai: எந்தவொரு இனத்தையும் இழிவுபடுத்தும் உரிமை எனக்கில்லை என்பதை உணர்ந்தே எழுதுகிறேன் நண்பரே. எல்லோரும் நிறை-குறைகளுடனே இருக்கின்றோம் இல்லையா...சீமான் சீக்கிரம் தெளிவடைந்தால் சந்தோஷமே.

  ReplyDelete
 21. சீமான் தேவையா..? சீமானுக்குத் தேவையா..? http://bit.ly/hxxgMx

  ReplyDelete
 22. @தமிழ்பெஸ்ட்: வருகைக்கு நன்றி நண்பரே..நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்த்தேன்..நல்ல கட்டுரை.

  ReplyDelete
 23. //அவர்களில் ஒருவராக தேவரினத்தில் பிறந்த சீமானும் இருப்பதில் பெரிய தவறேதும் இல்லை தான்

  //

  சீமான் தேவர் இல்லை.வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்.பெரும்பான்மையில் ஒருவராக சீன் போட நினைத்தார். அரசியல் ரீதியாக அது பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் பேக் அடித்தார் :)

  ReplyDelete
  Replies
  1. உண்மை அவர் மலையாளி நாடார் என்று அறிகிறேன்

   Delete
  2. உண்மை அவர் மலையாளி நாடார் என்று அறிகிறேன்

   Delete
  3. உண்மை அவர் மலையாளி நாடார் என்று அறிகிறேன்

   Delete
 24. @எம்.எம்.அப்துல்லா: என்னங்க இது புதுக்குழப்பம்..ஏற்கனவே அவர் பேசுறதைப் பார்த்தா தலையைச் சுத்துது..அதுல இது வேறயா?..சரிதான்.

  ReplyDelete
 25. காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுபவர்களும், காங்கிரஸூடன் கூட்டணி வைப்பவர்களும்’ மானங்கெட்ட தமிழனாக சீமானுக்குத் தெரியும்போது காங்கிரஸில் சேரவே முயன்ற விஜய் மட்டும் மானமுள்ள தமிழனாக ஆனது எப்படி?

  ReplyDelete
 26. /// டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்னபிற அயல்நாட்டு/பிற மாநில தொழில்முனைவோரின் நிறுவங்களை என்ன செய்வீர்கள்? அங்கே பொட்டி தட்டிப் பிழைக்கும் ‘மானங் கெட்ட ‘ தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கான வழி என்ன? ///

  1. டி.சி.எஸ் , விப்ரோ இதெல்லாம் அயல் நாட்டு கம்பெனிகள் அல்ல இந்திய கம்பெனிகள்

  2. அப்படியே வெளிநாட்டு கம்பெனிகளாக இருந்தாலும் , அதில் வேலை பார்ப்பதால் என்ன மானம் கெட்டுப்போய்விட்டது ?

  அதென்ன ‘மானங் கெட்ட ‘ தமிழர்கள் ?
  உங்கள் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் ,

  ReplyDelete
 27. @Vijay @ இணையத் தமிழன்: //அதென்ன ‘மானங் கெட்ட ‘ தமிழர்கள் ?
  உங்கள் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்// விஜய், தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க..’மானங்கெட்ட’ங்கிறது என் கருத்து இல்லை..நானும் கடந்த 5 வருஷமா MNC-ல தான் வேலை பார்க்குறேன்..நாம் தமிழர் இயக்க கான்செப்ட் படி, பிற மாநிலத்துக்காரன்கிட்ட, அயல்நாட்டுக்காரன்கிட்ட வேலை பார்க்குற தமிழங்க சூடு சுரணை இல்லாதவங்க..அவங்க சொல்றதைத் தான் மேல Quote பண்ணி ‘மானங்கெட்ட’-ன்னு சொல்லியிருக்கேன்..அயல்நாட்டுக் கம்பெனி இல்லீங்க../ போட்டு ‘போன்ற பிற மாநில’ன்னு சொல்லியிருக்கேனே!...

  டிஎஸ்காரங்களுக்கு சப்போர்ட்டாத் தானே அர்த்தம் வருது..கூல் பாஸ்!

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.