Sunday, February 27, 2011

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் : விமர்சனம்

டிஸ்கி: எனக்கு கிரிக்கெட்டைப் பத்தி ஒன்னும் தெரியாது. ஏதோ நான் உண்டு, சினிமா விமர்சனம் உண்டு-ன்னு இருந்தேன். இப்போ உலகக்கோப்பை போட்டி நடக்குறதால டப்பா படம்தான் வருது. இப்போ என்னாச்சுன்னா, விமர்சனம் எழுதாம கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு..அதான் துணிஞ்சு இன்று நடந்த மேட்ச்சு-க்கே விமர்சனம் சுடச்சுட இங்கே ..

லண்டனிலிருந்து இந்தியா வந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் விளையாடும் மேட்ச், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 11 பேர் இணைந்து ஒரே இடத்தில் விளையாடும் மேட்ச் என உலகளாவிய அளவில் படுபயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மேட்ச் இது!
மேட்டர் என்னன்னா, இங்கிலாந்துல இருக்குற 11 பேருக்கு கிரிக்கெட் விளையாடி கப் வாங்கணும்னு ஆசை. அதேபோல இந்தியாவில் டூத் பேஸ்ட், காம்ப்ளான், டாய்லட் க்ளீனர் போன்ற விளம்பரங்களில் நடித்து வாழ்க்கையை ஓட்டும் 11 பேருக்கும் அதே கப்பை வாங்கணும்னு ஆசை. யாரு ஜெயிச்சாங்கிறதை ஏகப்பட்ட விளம்பரங்களோடு சொல்லியிருக்காங்க. 

முதல் சீனிலேயே இரு அணி கேப்டன்களும் அம்பயரிடம் வர அவர் டாஸ் போட்டு இந்தியா டாஸில் ஜெயித்ததாகச் சொல்கிறார்.’மேட்ச்சே அவ்வளவுதானா..இந்தியா ஜெயிச்சிருச்சா..அப்போ மீதி 10+10 பேரு எதுக்கு வந்தாங்க’ன்னு நாம யோசிக்கும்போதே பேட்டிங் பண்ணத்தான் டாஸ் போட்டாங்கன்னு தெரியுது..அப்புறம் என்ன அதகளம் தான்!

முதல் ஜோடியா சேவாக்கும் சச்சினும் இறங்கிறாங்க. அடடா, மறுபடியும் நடுநிசி நாய்களா-ன்னு நீங்க யோசிக்கிறது புரியுது. அவங்க பேட்டிங் பண்ணத்தான் ஜோடியா இறங்குறாங்க. அப்படியெல்லாம் பொது மைதானத்துல பண்ணிட முடியுமா? 

வெள்ளைக்காரத் துரைங்க பந்தை ஒரு மாதிரி சுத்தி போடுதாங்க..நம்மாட்கள் அதை அடிக்கிறாங்க..இப்படியே முதல் பாதி போகுது. இண்டெர்வல் விடும்போது இந்தியா 338 ரன் எடுத்து இருக்கு. அடுத்து இங்கிலாந்துக்காரங்க அதை விட அதிகமா எடுத்தாங்களா..முடிவு என்னாச்சுன்னு முதல் பாதியை விட விறுவிறுப்பாச் சொல்றாங்க.
மேட்ச்சுக்கு இடையே சிறு ஓய்வு எடுக்கின்றனர். அப்போது ஒரு வண்டியைத் தள்ளிக் கொண்டே வந்தனர். பொதுவாக அதைத் திறந்தால் மல்லிகா ஷெராவத்தோ ரகசியாவோ தலையில் மட்டும் முக்காடு போட்டபடி எழுந்து, ஒரு குத்தாட்டம் ஆடுவது வழக்கம். இதில் அந்த நல்ல சான்ஸையும் மிஸ் பண்ணிவிட்டார்கள். வெறுமனே வாட்டர் பாட்டிலும் கூல்ட்ரிங்ஸும் உள்ளேயிருந்து வருவதைப் பார்த்தபோது கடுப்பாக இருந்தது.

இந்த மேட்ச்சோட மிகப் பெரிய குறையே ஆம்பிளைங்க மட்டுமே ஆடுறது தான்..பொதுவாவே நமக்கு ஆம்பிளைங்களைப் பிடிக்காது. என்ன ஆளுங்க... மூஞ்சியில முடி முளைச்ச பயலுவ..அதுவும் 22 பேரைத் தொடர்ந்து 7 மணி நேரம் பார்க்குறதுங்கிறது கொடுமை தான். எஸ்.ஏ.சந்திரசேகர் நம்ம டாகுடரையும் யுவராணியையும்(போட்றா படத்தை!) வச்சு கபடி மேட்ச் எடுத்த மாதிரி, இங்கேயும் 11 பொம்பளங்களைக் களமிறக்கி இருந்தா மேட்ச் கமர்சியல் ஹிட் ஆகியிருக்கும்..ஜஸ்ட் மிஸ்!
விரலா..உரலா!
இடையிடையே ஆடியன்ஸா வந்திருக்கிற துணை நடிகைகளைக் காட்டினாலும், நம்ம எதிர்பார்ப்பை அது பூர்த்தி செய்யலை. இடையிடையே வரும் விளம்பர ஃபிகர்களும் மேட்ச்சோட/மனசோட ஒட்டல.

மேட்ச்சுக்கு பிண்ணனி இசையோ, பாடல்களோ கிடையாது. பிண்ணனியில் வர்றது ஒரு ஆளோட (அதுவும் ஆம்பிளை..ச்சே!) கமெண்ட் மட்டும் தான். என்ன இருந்தாலும் நம்ம மந்த்ரா பேடி மாதிரி வருமா..பாத்ரூமுக்கு அவரமாப் போறவனை நிறுத்திக் கேள்வி கேட்டா பேசுவானே, அந்தத் தொனியிலேயே கமெண்டரி சொல்றதால பாதி புரியலை. ஆனாலும் இந்த மேட்ச்சுக்கு கமெண்டரி தேவைப் படலை.
திரும்பத் திரும்ப வர்ற க்ளிஷே காட்சிகள், டெம்ப்ளேட் கமெண்ட்கள் மேட்சோட ஸ்பீடைக் குறைக்குது. கேமிராமேனைப் பாராட்டலாம். ஏகப்பட்ட டாப்லெஸ்..ச்சே..டாப் ஆங்கிள் ஷாட்ஸ், ஒயிடு அங்கிள்(!) ஷாட்ஸ் என கலக்கி இருக்கார். சில கேமிராக் கோணங்கள் நாம ஏற்கனவே நிறைய மேட்சுகள்ல பார்த்ததுதான்னாலும் நல்லாத் தான் இருக்கு.

பந்துல எச்சியைத் துப்புறது, தப்பான இடத்துக்கிட்ட வச்சுத் தேய்க்கிறது போன்ற ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். (உள் டிஸ்கி: அய்யய்யோ..நான் கலாச்சாரக் காவலன் இல்லை..இல்லை..இல்லை!)

இடையில் கொஞ்சநேரம் போரடித்தாலும், கடைசி ஏழு ஓவரில் கலக்கிவிட்டார்கள். கிரிக்கெட் பற்றி ஒன்றும் தெரியாத நானே ரசித்துப் பார்த்தேன். டெண்டுல்கர் செஞ்சுரி அடிப்பது என்பது ராஜ்கிரண் கோடு போட்ட அண்டர்வேர் போடுவார்ங்கிற மாதிரி இயல்பான விஷயம். இதிலும் செஞ்சுரி அடிக்கிறார்!

இந்த மேட்ச் பல குறியீடுகளைக் கொண்டிருக்கு. பல வருஷத்துக்கு முன்னே வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப் படுத்துனாங்க. அப்புறம் சில அப்பாவிங்க உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்தாங்க.அந்த கான்செப்ட்டை அடிப்படையா வச்சுத் தான் இந்த மேட்சையே எடுத்திருக்காங்க. மேட்ச்சோட முடிவு மூலமா ‘நாம் இனிமேல் யாருக்கும் அடிமைகள் இல்லை, யாரும் நமக்கு அடிமைகள் இல்லை’-ன்னு சிம்பாலிக்கா காட்டியிருக்காங்க.

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் - கலக்கல்


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

 1. கிரிக்கெட் சினிமா.. ஸாரி, கிரிக்கெட் பதிவு - அதிலும் முடிவு சூப்பர்!

  ReplyDelete
 2. //நாம் இனிமேல் யாருக்கும் அடிமைகள் இல்லை, யாரும் நமக்கு அடிமைகள் இல்லை//

  நல்ல வரிகள் செங்கோவி. வித்யாசமான விமர்சனம்.

  ReplyDelete
 3. @middleclassmadhavi: பாராட்டுக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 4. @! சிவகுமார் !: அது அண்ணல் அம்பேத்கர் சொன்னது சிவா..

  ReplyDelete
 5. @சே.குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.

  ReplyDelete
 6. இந்த மேட்ச்சோட மிகப் பெரிய குறையே ஆம்பிளைங்க மட்டுமே ஆடுறது தான்.//
  கருமம் என்ன மேட்சுய்யா அது?

  ReplyDelete
 7. .அதான் துணிஞ்சு இன்று நடந்த மேட்ச்சு-க்கே விமர்சனம் சுடச்சுட இங்கே ..//
  கலக்குறய்யா

  ReplyDelete
 8. மேட்ச்சே அவ்வளவுதானா..இந்தியா ஜெயிச்சிருச்சா..அப்போ மீதி 10+10 பேரு எதுக்கு வந்தாங்க’//
  ரசிகைகளை கரெக்ட் பண்ணத்தான்

  ReplyDelete
 9. என்ன இருந்தாலும் நம்ம மந்த்ரா பேடி மாதிரி வருமா..பாத்ரூமுக்கு அவரமாப் போறவனை நிறுத்திக் கேள்வி கேட்டா பேசுவானே//
  ஒருவேளை மந்த்ராவை நினைச்சி பாத்ரூமுக்கு போவானோ ஹிஹி

  ReplyDelete
 10. அப்புறம் சில அப்பாவிங்க உயிரைக் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்தாங்க//
  பொழக்க தெரியாத ஜென்மங்க

  ReplyDelete
 11. எனக்கு அந்த அளவுக்கு அறிவில்லை அதனால மறு மொழி சொல்றதுக்கு இல்ல ஹி ஹி!

  ReplyDelete
 12. விமர்சனம் அருமை

  ReplyDelete
 13. @ஆர்.கே.சதீஷ்குமார்://கலக்குறய்யா
  //நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்..முடியலை..அதான் பொங்கி எழுந்துட்டேன் பாஸ்!

  ReplyDelete
 14. @விக்கி உலகம்: மறுமொழியை சொல்லாமச் சொன்னதுக்கு நன்றி விக்கி!

  ReplyDelete
 15. அட போங்கப்பா......

  ஆனா அந்த ரெண்டாவது போட்டோ நல்லாருக்கு ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 16. @MANO நாஞ்சில் மனோ: எனக்கு மட்டும் தான்னு நினைச்சேன்..உங்களுக்குமா..

  ReplyDelete
 17. பார்றா வேலைய. விளையாட்டுக்கும் விமர்சனமா/ (டே சி பி நோட் பண்றா..)

  ReplyDelete
 18. விளையாட்டு சம்பந்தமான பதிவில் சாமார்த்தியமாக மந்த்ரா பேடியை அழைத்து வந்த அண்ணன் செங்கோவி வாழ்க..

  ReplyDelete
 19. ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

  http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

  ReplyDelete
 20. @சி.பி.செந்தில்குமார்://விளையாட்டு சம்பந்தமான பதிவில் சாமார்த்தியமாக மந்த்ரா பேடியை அழைத்து வந்த அண்ணன் செங்கோவி வாழ்க..

  //எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டது தானுங்கோ!

  ReplyDelete
 21. \\மந்த்ரா பேடி\\ நீங்க பெண்கள் படத்தை இங்க போட்ட மாதிரியே வெட்கங்கெட்ட ICC பயல்கள் இந்தம்மாவை கிரிக்கெட் பத்தி மேட்சுக்கப்புரம் டிஸ்கசன்ல போட்டிருக்கானுங்க.
  கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் இந்தம்மா உட்கார்ந்துகிட்டு மேட்சைப் பத்தி அலசும் பாருங்க, அதப் பாத்துட்டா அப்புறம் நேரா கங்கையிலோ, யமுனையிலோ போய் முங்கி எழுந்துட்டு அப்படியே காசிக்கு போயிட்டு வந்தாத்தான் சரியாகும். ஐயோ.. ஐயோ...
  \\மேட்ச்சோட முடிவு மூலமா ‘நாம் இனிமேல் யாருக்கும் அடிமைகள் இல்லை, யாரும் நமக்கு அடிமைகள் இல்லை’-ன்னு சிம்பாலிக்கா காட்டியிருக்காங்க.\\ ஆஹா எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா!!

  ReplyDelete
 22. @Jayadev Das:// இந்தம்மாவை கிரிக்கெட் பத்தி மேட்சுக்கப்புரம் டிஸ்கசன்ல போட்டிருக்கானுங்க// இதுவேற நடந்துச்சா..மிஸ் பண்ணிட்டனே சார்...

  ReplyDelete
 23. போட்டது போட்டீங்க இன்னும் நாலஞ்சு நல்ல படங்கள் போட்டிருக்கலாம்....

  ReplyDelete
 24. @பன்னிக்குட்டி ராம்சாமி: போடுறேன் சார்..போடுறேன்..படம் மட்டும் போதுமா..விட்டா ‘டிக்ளேர்’ பண்ணிடுவீங்க போலிருக்கே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.