Wednesday, July 20, 2011

ஆண்களுக்கு பெல்ட் அவசியமா?

உங்களோட ஆலோசனை அவசரமா எனக்குத் தேவைப்படுது பாஸ்..ஏற்கனவே அம்பிகா சிடி/சீதா சிடிக்கு நீங்க கொடுத்த ரெஸ்பான்ஸை நினைச்சா, உங்ககிட்ட திரும்ப உதவி கேட்க மனசு வரலை தான்..ஆனாலும் உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா?

இப்போ என்ன பிரச்சினைன்னா...ஊர்ல இருக்கும்போது தைச்ச பேண்ட் எல்லாம் டைட் ஆகிடுச்சு. அதனால இப்போ பெல்ட் இல்லாமலேயே பேண்ட் கம்பீரமா நிக்குது. ’அட கர்மம் பிடிச்சவனே, இதுல என்னய்யா பிரச்சினை’ங்கிறீங்களா..சொல்றேன்.
இப்போ எனக்கு பெல்ட் தேவையா இல்லையா? பெல்ட் இல்லாம பேண்ட் போட்டா மொட்டையாத் தெரியுது. அப்படிப் போடக்கூடாதுன்னு ‘சர்வதேச சட்டம்’ ஏதாவது இருக்கான்னு யாராவது சொல்ல முடியுமா? சும்மா பெல்ட்டை இடைப்பைச் சுத்திக் கட்டிட்டுத் திரியவும் கஷ்டமா இருக்கு. வேஸ்ட்டா அதைச் சுமந்துக்கிட்டுத் திரியறமேன்னு நினைக்கும்போது வேதனையாவும் இருக்கு.


சும்மா சொருகி வச்சிருக்கிற பெல்ட்டை இங்க லோக்கல்ல சுமந்துக்கிட்டுத் திரியறது கூடப் பரவாயில்லை. ஊருக்குப் போகும்போது.வரும்போது ஏர்போர்ட்ல வேற இந்த பெல்ட்டைக் கழட்டச் சொல்லி இம்சை பண்றாங்க. நாலு தடவையாவது கழட்டி செக் பண்றாங்க. லக்கேஜ்ல போடலாம்னா வெயிட் ஏறிடும்(!)னு ’வீட்ல’ வைக்க விட மாட்டேங்கிறாங்க. என்ன ஒரு கேவலமான நிலைமை பார்த்தீங்களா..!

இப்போ நான் என்ன செய்ய? சரி, இணையத்துல எல்லா தகவல்களும் கிடைக்குதாமே..பெல்ட் பத்தி ஏதாவது சொல்லியிருக்கான்னு பார்த்தா, ஒன்னுமே இல்லை. எப்படி இருக்கும்? இதான் ஆம்பிளைங்க மேட்டர் ஆச்சே..’மனுசன் எழுதுவானா அதைப் பத்தி’-ன்னு விட்டுட்டாங்க போல.

லேடீஸ்க்கு மட்டும் ’உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி’ன்னு ஆரம்பிச்சு ‘உத்துப் பார்க்கிறவன் கண்ணை நோண்டுறது எப்படி’ங்கிறது வரைக்கும் அட்வைஸா கொட்டிக்கிடக்கு.

ஆனா ஆம்பிளைங்களுக்கு?..ஷேம் ஷேம்..பப்பி ஷேம். ஏன் நம்ம பிரச்சினைகளைப் பத்தி யாருமே எழுதறதில்லை? இந்த ஆம்பிளைப் பதிவர்கள் எல்லாம் என்ன தான் செஞ்சுக்கிட்டு இருக்காங்க?

மூணு டைப் ஆம்பிளைப் பதிவருங்க இங்க இருக்காங்க. முத டைப் என்ன பண்றாங்கன்னா, அதைச் சொல்லவே நாக்கூசுது. அந்தக் கொடுமையை நீங்களே பாருங்க:
பார்த்தீங்களா அந்த அநியாயத்தை..இந்த மாதிரி நல்லா பெரிய்ய்ய நடிகைங்க படத்தை பதிவுல போட்டுட்டு, நாள் பூரா அதைப் பார்த்துக்கிட்டே பொழுதை ஓட்டுறாங்க.ஆண் இனத்திற்கு ஏதாவது செய்வோம், எழுதுவோம்னு ஒரு இனப்பற்றே இவங்க கிட்ட இல்லை.

ரெண்டாவது டீசண்ட் குரூப்.பெண்னுரிமைக்காக தூங்காமக் குரல் கொடுக்குறவங்க. எங்காவது பொம்பளைப் படம் போட்டாங்கன்னா ‘எப்பிடி நீ இப்படிப் பண்ணலாம்..ஃபூக்கோ என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? பெண்களை எப்படி மதிக்கணும் தெரியுமா?”ன்னு மிரட்டுவாங்க.

மூணாவது குரூப் இன்னும் டீசண்டு. பொம்பளைங்களே பிடிக்காது. ஒன்னு ‘சம்போ சிவ சம்போ’ன்னு எழுதறாங்க .இல்லேன்னா ‘பொம்பளைங்க என்ன பெரிய அப்பாடக்கரா’ன்னு எழுதி புரட்சி பண்றாய்ங்க.(ச்சே..ச்சே..நம்ம தொப்பி தொப்பியைச் சொல்லலீங்க!)

ஆக மொத்தத்துல எல்லா ஆம்பிளைங்களும் பொம்பளைங்களைப் பத்தித் தான் எழுதிக்கிட்டு இருக்காங்க. ஆம்பிளைங்களை அம்போன்னு விட்டுட்டாங்க.ஆண் இனத்தோட அவல நிலையை நினைச்சுப் பார்க்கும்போது கண்ணீரு முட்டிக்கிட்டு வருது.

ஒரு பெல்ட் வேணுமா, வேணாமான்னு கூட இணையத்துல நாம ஒரு தீர்மானம் நிறைவேத்தலைன்னா, மத்த இனங்கள்லாம் நம்மளைக் கேவலமா நினைக்காதா? 

இன்னும் கொஞ்சம் தீவிரமா யோசிச்சா...நாகரீகம்ங்கிற பேர்ல நம்மோட ஃப்லெக்ஸிபிள் பெல்ட்டான ’அண்ணாக்கயிறு’ என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும் அரைஞான் கயிறை மறந்தது தான் இதற்கெல்லாம் காரணமோன்னு தோணுது.

இதைப் பத்தி பதிவுல தான் ஒன்னும் இல்லை. சரி..நம்ம சங்க கால இலக்கியங்கள்ல ஏதாவது சொல்லி இருக்கான்னு தேடிப்பார்த்தா, அங்கயும் ஒன்னும் கிடைக்கலை.

திருக்குறள் அடக்கமுடைமை அதிகாரத்தையும் படிச்சுப் பார்த்துட்டேன்.ம்ஹூம்..திருவள்ளுவரும் நம்மளை தெருவுல விட்டுட்டாரு.

இனியும் நாம தூங்கிக்கிட்டு இருந்தா ஆண் இனத்துக்கு பெரிய அழிவு தான் வந்து சேரும். அப்புறம் வரலாறுல “ராஜராஜ சோழன் ஆண் என்பது பெரும் புரட்டு. அவர் ஒரு பெண். அவரது உண்மையான பெயர் ராஜராஜ சோழி”ன்னு நம்ம பேரப் புள்ளைங்க படிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை வந்து சேரும்.

அதனால இதைப் படிக்கிற ஆண் சிங்கங்கள் எனக்கு ஒரு முடிவைச் சொல்லுங்க.

தேவையே இல்லாத ஒரு பெல்ட்டை நான் சுமந்துக்கிட்டுத் திரியத் தான் வேணுமா? வேற வழியே இல்லையா? பெல்ட் என்பது அவ்வளவு அவசியமான விஷயாமாஆஆஆஆஆஆஆ?


டிஸ்கி: அந்த பெல்ட்டை கழுத்துல மாட்டிக்கிட்டுத் தொங்கு - என்பது போன்ற ஆக்ரோச பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

106 comments:

 1. முதல் விதை முளைத்ததே.....

  ReplyDelete
 2. அட தலைப்பே வித்யாசமா இருக்கே...? என்னமோ சொல்ல வர்றாரு... படிப்போம்!

  ReplyDelete
 3. //தமிழ்வாசி - Prakash said...
  முதல் விதை முளைத்ததே...// முதல் ஆண் சிங்கம் களத்தில் இறங்கி விட்டது.

  ReplyDelete
 4. ஏற்கனவே அம்பிகா சிடி/சீதா சிடிக்கு நீங்க கொடுத்த ரெஸ்பான்ஸை நினைச்சா,>>>>

  அட,,, இன்னமுமா சிடி கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு???? அய்யோ பாவம்...

  ReplyDelete
 5. //தமிழ்வாசி - Prakash said...
  அட தலைப்பே வித்யாசமா இருக்கே...? என்னமோ சொல்ல வர்றாரு... படிப்போம்!//

  நானும் நீங்க என்ன சொல்றீங்கன்னு பார்க்கேன்.

  ReplyDelete
 6. இப்போ எனக்கு பெல்ட் தேவையா இல்லையா? பெல்ட் இல்லாம பேண்ட் போட்டா மொட்டையாத் தெரியுது.>>>>

  பெல்ட் "லூப்பாவது" இருக்கா அதையும் எடுத்துடிங்களா? ம்ம்ம் டவுட்டு...

  ReplyDelete
 7. //பெல்ட் "லூப்பாவது" இருக்கா அதையும் எடுத்துடிங்களா? // இருக்குய்யா..நான் என்ன சட்டை பேண்ட்டை கிழிச்சுக்கிட்டா திரியறேன்?

  ReplyDelete
 8. ஷேம் ஷேம்..பப்பி ஷேம். ஏன் நம்ம பிரச்சினைகளைப் பத்தி யாருமே எழுதறதில்லை?>>>>

  உங்கள் ஆதங்கம் புரியுது... செங்கோவின்னு ஒரு பிளாக்கர் இருக்காரு அவரு நமீதா, ஹன்சிகா, ஏன் ஓல்ட் பத்மினி படமெல்லாம் போடுவாரு...

  ReplyDelete
 9. மேல இருக்கற கமென்ட் போட்டுட்டு அடுத்து என்ன போட்டிருக்காருனு பார்த்தா, நமீதா படம் போட்டிருக்காரு, அப்ப நான் சொன்னது சரி தான், இவரு தான் செங்கோவி போல....

  ReplyDelete
 10. // செங்கோவின்னு ஒரு பிளாக்கர் இருக்காரு அவரு நமீதா, ஹன்சிகா, ஏன் ஓல்ட் பத்மினி படமெல்லாம் போடுவாரு.// அப்படியா?..லின்க் கிடைக்குமா..ஹி..ஹி.

  ReplyDelete
 11. //அப்ப நான் சொன்னது சரி தான், இவரு தான் செங்கோவி போல..// ஆத்தீ..கண்டுபிடிச்சுட்டாருய்யா போலீஸ்காரு!

  ReplyDelete
 12. எத்தினை மணிக்கு தூங்குறதா உத்தேசம்

  ReplyDelete
 13. (ச்சே..ச்சே..நம்ம தொப்பி தொப்பியைச் சொல்லலீங்க!)>>>
  என்ன கொடுமை இது. பெல்ட் பற்றி தலைப்பை போட்டுட்டு பெண்களை பற்றி எழுதிட்டு இப்ப நல்ல பதிவர் கூட சண்டைக்கு போறாரு? இன்னைக்கு என்னாச்சு இவருக்கு?

  ReplyDelete
 14. //KANA VARO said...
  எத்தினை மணிக்கு தூங்குறதா உத்தேசம்// எவ்வளாவு பெரிய பிரச்சினை பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம்..தூக்கம் எப்படி பாஸ் வரும்?

  ReplyDelete
 15. அந்த பெல்ட்டை கழுத்துல மாட்டிக்கிட்டுத் தொங்கு - என்பது போன்ற ஆக்ரோச பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்.
  //

  பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுது

  ReplyDelete
 16. //இப்ப நல்ல பதிவர் கூட சண்டைக்கு போறாரு? // அவரு நம்மாளுங்கிற நம்பிக்கை தான்.

  ReplyDelete
 17. பெல்ட் விசயத்துல திருவள்ளுவரையும் விட்டு வைக்கலையா... அட பாவமே.... நேத்து புரியாத பதிவு போட்டிரு... இன்னைக்கு குழப்பமா எழுதியிருக்கீரு.... முடியல...முடியல....

  ReplyDelete
 18. //
  KANA VARO said...
  பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சுது//

  நேர்மைன்னா ஹமாம் சோப்பு தானே? எனக்கும் பிடிக்கும் பாஸ். நீங்களும் அதான் யூஸ் பண்றீங்களா?

  ReplyDelete
 19. காந்தம் வைச்ச பெல்டை கட்டினா ஆண்மை குறையுமாமே! உண்மையா?

  ReplyDelete
 20. //
  KANA VARO said...//

  கணவரோ-ன்னு ஒரு பேரா? உங்க கிட்ட பெயர்க்காரணம் கேட்டா ஒரு பதிவு தேறும் போலிருக்கே..

  ReplyDelete
 21. பெல்ட் என்பது அவ்வளவு அவசியமான விஷயாமாஆஆஆஆஆஆஆ?>>>>

  இவ்வளவு எழுதியும் உங்க கேள்விக்கு விடை தெரியலையா.... இணையத்திலேயே இல்லையினா வேற எங்க தான் போறது?

  ReplyDelete
 22. // KANA VARO said...
  காந்தம் வைச்ச பெல்டை கட்டினா ஆண்மை குறையுமாமே! உண்மையா?//

  அரிய அறிவியல் தகவலுக்கு நன்றி பாஸ்..அப்போ நமக்குப் பிடிக்காதவன் பேண்ட்டுக்குள்ள காந்தத்தைப் போட்டுட வேண்டியது தான்.

  ReplyDelete
 23. நான் நடுவில அழகா கப்(gap( விட்டிருக்கிற மாதிரி நீங்களும் பிரிச்சு படியுங்க பாஸ்!

  ReplyDelete
 24. @KANA VARO
  காந்தம் வைச்ச பெல்டை கட்டினா ஆண்மை குறையுமாமே! உண்மையா?>>>

  யாருய்யா இவரு... சயன்டிஸ்ட்டா இருப்பாரோ?

  ReplyDelete
 25. //தமிழ்வாசி - Prakash said...
  நேத்து புரியாத பதிவு போட்டிரு... இன்னைக்கு குழப்பமா எழுதியிருக்கீரு..//

  என் பெல்ட் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குறவரைக்கும் இப்படி குழப்பமாத்தான் எழுதுவேன்.

  ReplyDelete
 26. பிடிக்காதவன் பேண்ட்டுக்குள்ள காந்தத்தைப் போட்டுட வேண்டியது தான்//

  காந்தத்துக்கு பதிலா கத்தியை போட்டுடாதீங்க..

  ReplyDelete
 27. உம்மேல கொலை வெறியில இருக்கேன்.... நாளைக்காவது நல்ல பதிவா போடுமய்யா....

  ReplyDelete
 28. //KANA VARO said...
  நான் நடுவில அழகா கப்(gap( விட்டிருக்கிற மாதிரி நீங்களும் பிரிச்சு படியுங்க பாஸ்!//

  கேப் அழகானதா? புதுசு புதுசாச் சொல்றீங்களே...யாரு ராசா நீங்க? பிரகாஷ் சொல்றமாதிரி சயிண்டிஸ்ட் தானோ?

  ReplyDelete
 29. //KANA VARO said...
  பிடிக்காதவன் பேண்ட்டுக்குள்ள காந்தத்தைப் போட்டுட வேண்டியது தான்//

  காந்தத்துக்கு பதிலா கத்தியை போட்டுடாதீங்க..//

  சந்தேகமேயில்லை..இவரு சயிண்டிஸ்ட் தான்.

  ReplyDelete
 30. யாரு ராசா நீங்க? //

  நான் ஆ ராசா எல்லாம் இல்லை. அந்தளவு ஊழல் பண்ண தெரிஞ்சா ஏன் இங்க இருக்கன்.

  ReplyDelete
 31. //நான் ஆ ராசா எல்லாம் இல்லை. அந்தளவு ஊழல் பண்ண தெரிஞ்சா ஏன் இங்க இருக்கன்.//

  ஃபீல் பண்ணாதீங்க கண வரோ?

  ReplyDelete
 32. //தமிழ்வாசி - Prakash said...
  நாளைக்காவது நல்ல பதிவா போடுமய்யா....//

  நல்ல பதிவுன்னா என்ன பிரகாஷ்?

  ReplyDelete
 33. ஒரு ஆர்வத்தில நான் கமெண்ட் பண்ண முதல் பதிலை போட்டுடாதீங்க பாஸ், நீங்க ரொம்ப ஸ்பீடு..

  ReplyDelete
 34. //ஒரு ஆர்வத்தில நான் கமெண்ட் பண்ண முதல் பதிலை போட்டுடாதீங்க பாஸ், நீங்க ரொம்ப ஸ்பீடு.. //

  எந்த கமெண்ட்? தூக்கணுமா?

  ReplyDelete
 35. @செங்கோவி
  நல்ல பதிவுன்னா என்ன பிரகாஷ்?>>>>

  உம்மகிட்ட வேறென்ன எதிர்பார்க்க போறேன்? நானா யோசிச்சேன், சினி விமர்சனம், முக்கியமா "லீலைகள்" இது போல தான்...
  லீலைகளின் மன்னன் கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

  ReplyDelete
 36. நல்ல பதிவுன்னா என்ன பிரகாஷ்?//

  நான் நினைக்கிறன், சமையல் குறிப்போ? ஏன்னா இப்ப ஆண்களுக்கு அது ரொம்ப யூஸ் ஆகும்.

  ReplyDelete
 37. //உம்மகிட்ட வேறென்ன எதிர்பார்க்க போறேன்? நானா யோசிச்சேன், சினி விமர்சனம், முக்கியமா "லீலைகள்" இது போல தான்...// ஒரு மனுசனைத் திருந்த விட மாட்டாங்க போலிருக்கே..

  ReplyDelete
 38. @செங்கோவி
  //ஒரு ஆர்வத்தில நான் கமெண்ட் பண்ண முதல் பதிலை போட்டுடாதீங்க பாஸ், நீங்க ரொம்ப ஸ்பீடு.. //

  எந்த கமெண்ட்? தூக்கணுமா?>>>>

  செங்கோவி அண்ணே உணர்ச்சிவசப்பட்டு பெல்ட்டால் தூக்கிராதிங்க... பாவம் அவரு...

  ReplyDelete
 39. செங்கோவி அண்ணே உணர்ச்சிவசப்பட்டு பெல்ட்டால் தூக்கிராதிங்க... பாவம் அவரு...//

  நல்ல வேளை, அலர்ட் பண்ணிட்டீர். இல்லைன்னா கண்ணு போயிருக்கும்

  ReplyDelete
 40. //தமிழ்வாசி - Prakash said...
  லீலைகளின் மன்னன் கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்?//

  நீங்களும் மெக்கானிகல் ஸ்டூடண்ட்தானே? மாங்கு மாங்குன்னு ஒரு டெக்னிகல் தொடர் எழுதுனனே..அது கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா...

  ReplyDelete
 41. //KANA VARO said...
  செங்கோவி அண்ணே உணர்ச்சிவசப்பட்டு பெல்ட்டால் தூக்கிராதிங்க... பாவம் அவரு...//

  நல்ல வேளை, அலர்ட் பண்ணிட்டீர். இல்லைன்னா கண்ணு போயிருக்கும்//

  ரைட்டு கண வரோ...காத லரோ!

  ReplyDelete
 42. ரைட்டு கண வரோ...காத லரோ!//

  நல்ல எதுகை மோனை. விஜய் அன்டனி மியூசிக்கில பாட்டெழுத ட்ரை பண்ணலாமே!

  ReplyDelete
 43. //ஆக மொத்தத்துல எல்லா ஆம்பிளைங்களும் பொம்பளைங்களைப் பத்தித் தான் எழுதிக்கிட்டு இருக்காங்க.//

  இப்பத்தான் ஐஸ்கிரிம் பதிவைப் போட்டுட்டு ஆற அமர இங்கே வந்தா....

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

  இப்ப உங்களுக்கு பெல்ட்டப் பத்தி யாருமே ஒன்னுமே சொல்றதில்லைன்னுதானே வருத்தம்?
  சில வருடங்களுக்கு முன்னாடி பெல்ட் கிளிப்புக்குள்ள ஆண் தன்மை குறையற மாதிரி பட்டன் மாதிரி ஒன்றை உள்ளே வைத்து இஸ்ரேல்காரன் பாலஸ்தீனயர்களின் ஜனத்தொகை குறைப்பதற்கு திட்டம் தீட்டிய வதந்தி ஒன்று பரவிகிட்டிருந்தது.எனக்கு சொன்னவனே ஒரு பாலஸ்தீனியன்.ஒருவேளை அதைப் பார்த்து பயந்து ஒருத்தரும் பதிவு போடலையோ என்னவோ?

  ReplyDelete
 44. @ராஜ நடராஜன் பரவாயில்லை சார்..நீங்களாவது மனசுக்கு ஆறுதலா ஒரு காரணம் சொன்னீங்களே..ரொம்ப சந்தோசம் சார்..ஐஸ் க்ரீம் பதிவா? வர்றேன்.

  ReplyDelete
 45. //
  KANA VARO said...
  ரைட்டு கண வரோ...காத லரோ!//

  நல்ல எதுகை மோனை. விஜய் அன்டனி மியூசிக்கில பாட்டெழுத ட்ரை பண்ணலாமே!//

  அடுத்த டி.ஆர்னு சொல்லாம விட்டதுக்கு நன்றி..நன்றி.

  ReplyDelete
 46. ///ஊருக்குப் போகும்போது.வரும்போது ஏர்போர்ட்ல வேற இந்த பெல்ட்டைக் கழட்டச் சொல்லி இம்சை பண்றாங்க. நாலு தடவையாவது கழட்டி செக் பண்றாங்க. //பெல்ட்ட மாட்டுமா கழட்டுறாங்க ,காலில போட்டிருக்கிறத கூட கழட்டி தடவிராங்களே...))

  ReplyDelete
 47. பெல்ட் கெடக்குதுங்க, அத விடுங்க, ஆம்பளைங்களுக்கு பேன்ட் எதுக்குங்க? ஒரு பட்டபட்டி அண்டர்வார் போதாதுங்களா? நாடாவை இழுத்துக்கட்டினா போதுமிங்களே?

  ReplyDelete
 48. மாப்ள வர்க்க பிரச்சனைய இழுத்தாப்போல இருக்கு ஹிஹி!.....இருந்தாலும் அவசியமான விஷயம் எனும் போது இந்த பொருள் அவசியம்தான்...அதுக்காக அவசியம் இல்லாத நேரத்துல அவசியம் கிடையாது...ஹிஹி!......

  பேன்ட் என்பதே பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆடைன்னு எங்கோ படிச்சதா ஞாபகம்!

  ReplyDelete
 49. பெல்ட் கட்டலைன்னா மொட்டையா தெரியும்! அதனால தேவையோ இல்லையோ கட்டியே தீரணும்ணே!

  ReplyDelete
 50. வாழ்க்கையில சில விஷயங்கள் அப்பிடித்தானே! :-) நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை!
  தேவையில்லேன்னு தோணும்...ஆனா கழட்டிவிட முடியாது! (இசகுபிசகா எதையாவது சம்பந்தப்படுத்தி யோசிக்காதீங்க!) பெல்ட்டும் அப்பிடின்னே வச்சுக்குங்க!

  ReplyDelete
 51. /////லேடீஸ்க்கு மட்டும் ’உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி’ன்னு ஆரம்பிச்சு ‘உத்துப் பார்க்கிறவன் கண்ணை நோண்டுறது எப்படி’ங்கிறது வரைக்கும் அட்வைஸா கொட்டிக்கிடக்கு.////

  நீங்க சொல்லுறது 10000 வீதம் உண்மை பாஸ். பாவப்பட்ட ஆம்பிளைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. ஹிஹிஹி

  ReplyDelete
 52. @DrPKandaswamyPhD //பெல்ட் கெடக்குதுங்க, அத விடுங்க, ஆம்பளைங்களுக்கு பேன்ட் எதுக்குங்க? ஒரு பட்டபட்டி அண்டர்வார் போதாதுங்களா? நாடாவை இழுத்துக்கட்டினா போதுமிங்களே?//

  ஆஹா..சார் பேண்டையும் உருவப் பார்க்கிறாரே..

  ReplyDelete
 53. @விக்கியுலகம் //இருந்தாலும் அவசியமான விஷயம் எனும் போது இந்த பொருள் அவசியம்தான்...அதுக்காக அவசியம் இல்லாத நேரத்துல அவசியம் கிடையாது...ஹிஹி!......// யோவ், மப்புல இருக்கும்போது கமெண்ட் போடாதய்யா.

  ReplyDelete
 54. @ஜீ... //பெல்ட் கட்டலைன்னா மொட்டையா தெரியும்! அதனால தேவையோ இல்லையோ கட்டியே தீரணும்ணே!//

  அருமையான தீர்ப்பு..நன்றி தம்பி.

  ReplyDelete
 55. @ஜீ... //தேவையில்லேன்னு தோணும்...ஆனா கழட்டிவிட முடியாது! //

  புல்லரிக்குது தம்பி..இதை விடத் தெளிவா எப்படிச் சொல்ல முடியும்?

  ReplyDelete
 56. @!* வேடந்தாங்கல் - கருன் *! //Nice.,
  Thanks 4 sharing..//

  இந்த ஆளு இன்னைக்கும் பதிவைப் படிக்கலை போலிருக்கே.

  ReplyDelete
 57. @மருதமூரான். //நீங்க சொல்லுறது 10000 வீதம் உண்மை பாஸ். //

  ஆயிரம் சதவீதமா..ரொம்ப நொந்திருப்பீங்க போலிருக்கே..

  ReplyDelete
 58. பிரமாதமான பதிவு. ஆனால் டைட்டில் இன்னும் ஜனரஞ்சகமாக வைத்திருந்தால் அதிக மக்களை போய்ச்சேர்ந்திருக்கும்..

  ReplyDelete
 59. >>.(ச்சே..ச்சே..நம்ம தொப்பி தொப்பியைச் சொல்லலீங்க!)

  வம்பை விலை குடுத்து வாங்கிட்டீர்.. இனி அவர் ஒரு எதிர்ப்பதிவு போடுவார்( அண்ணே.. போட்டு என் மானத்தைகாப்பாத்துங்க. ஹி ஹி

  ReplyDelete
 60. உங்கள் ஆதங்கம் புரியுது.

  ReplyDelete
 61. \\பார்த்தீங்களா அந்த அநியாயத்தை..இந்த மாதிரி நல்லா பெரிய்ய்ய நடிகைங்க படத்தை பதிவுல போட்டுட்டு, நாள் பூரா அதைப் பார்த்துக்கிட்டே பொழுதை ஓட்டுறாங்க.ஆண் இனத்திற்கு ஏதாவது செய்வோம், எழுதுவோம்னு ஒரு இனப்பற்றே இவங்க கிட்ட இல்லை.\\ பெரிய்ய்ய நடிகையோட படத்தை போட்டாங்களே, இதை விட பெரிய்ய்ய உதவி ஆண்களுக்கு வேறென்ன வேணும் செங்கோவி?

  ReplyDelete
 62. செங்கோவி, நான் இப்போதெல்லாம் சட்டையை insert செய்வதை விட்டுவிட்டேன், மேலும் பெல்ட் அணிவதுமில்லை. இதெல்லாம், மற்றவர்களுக்காகச் செய்வது, நமக்கு அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது என் கருத்து. மற்றவர்களை இம்பிரஸ் செய்ய வேண்டுமானால் எல்லா கருமாந்திரத்தையும் சுமக்கத்தான் வேண்டும், நான் எனக்காக வாழ்கிறேன் என்றால் விட்டு விடலாம், யாரும் கேட்கப் போவதில்லை.

  ReplyDelete
 63. ஒரு பெல்ட் வேணுமா, வேணாமான்னு கூட இணையத்துல நாம ஒரு தீர்மானம் நிறைவேத்தலைன்னா, மத்த "இனங்கள்"லாம் நம்மளைக் கேவலமா நினைக்காதா?////இந்தியாவுல எப்புடியோ தெரியல! ஆனா,இங்க வெளி நாட்டில கண்டிப்பா நீங்க குறிப்பிட்ட இனத்துக்கு!(ஒங்கள சொல்லல) பெல்ட் கண்டிப்பா வேணும்!

  ReplyDelete
 64. KANA VARO said...
  எத்தினை மணிக்கு தூங்குறதா உத்தேசம்?///"அவுக" கிட்ட கேக்க வேண்டிய கேள்விய,இவரு கிட்ட கேக்குறீங்க?????????

  ReplyDelete
 65. செங்கோவி said...
  @மருதமூரான். //நீங்க சொல்லுறது 10000 வீதம் உண்மை பாஸ். //
  "ஆயிரம்" சதவீதமா..ரொம்ப நொந்திருப்பீங்க போலிருக்கே?..§§§§§பத்துன்னா சைபரு, நூறுன்னா ஒரு சைபரு, ஆயிரம்னா ரெண்டு சைபரு, பத்தாயிரம்னா மூணு சைபரு!!!!கரெக்டா???????(குற்றம் கண்டு பிடித்தே..............!)

  ReplyDelete
 66. சி.பி.செந்தில்குமார் said...
  //பிரமாதமான பதிவு. ஆனால் டைட்டில் இன்னும் ஜனரஞ்சகமாக வைத்திருந்தால் அதிக மக்களை போய்ச்சேர்ந்திருக்கும்.// உங்க கிட்ட நான் நிறைய கத்துக்க வேண்டி இருக்குண்ணே.

  //வம்பை விலை குடுத்து வாங்கிட்டீர்.. இனி அவர் ஒரு எதிர்ப்பதிவு போடுவார் // இப்படி கோள் மூட்டுறதே வேலையாப் போச்சு.

  ReplyDelete
 67. ///அண்ணே அந்த சினேஹா படத்த பாத்தோடனே ஆட்டோமேடிகாவே///

  ,ஆணா எதுக்கு அண்ணன்தான் டபுள் மீனிங்ள பதிவு எழுதிருக்காருணா நாமளும் அதே மாதிரி டபுள் மீனிங்ள கமெண்ட் போடணுமான்னு யோசிச்சிட்டு விட்டேன்

  ReplyDelete
 68. // HajasreeN said...
  nalla irukke //

  எது? பெல்ட் வேஸ்ட்டா நான் சுமந்துக்கிட்டுத் திரியறதா?

  ReplyDelete
 69. //சே.குமார் said...
  உங்கள் ஆதங்கம் புரியுது.// புரிதலுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 70. Jayadev Das said...
  // பெரிய்ய்ய நடிகையோட படத்தை போட்டாங்களே, இதை விட பெரிய்ய்ய உதவி ஆண்களுக்கு வேறென்ன வேணும் செங்கோவி? //பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி..ஒத்துக்கறேன்.

  //செங்கோவி, நான் இப்போதெல்லாம் சட்டையை insert செய்வதை விட்டுவிட்டேன், மேலும் பெல்ட் அணிவதுமில்லை. இதெல்லாம், மற்றவர்களுக்காகச் செய்வது//

  கரெக்ட் சார்..எனக்கும் பெல்ட்டும் ஷூவும் பிடிப்பதில்லை. ஆனால் ஆஃபீஸ் ரூல்ஸ் நம்மை ஃப்ரீயா விட மாட்டேங்குதே!

  ReplyDelete
 71. //Yoga.s.FR said...
  இந்தியாவுல எப்புடியோ தெரியல! ஆனா,இங்க வெளி நாட்டில கண்டிப்பா நீங்க குறிப்பிட்ட இனத்துக்கு!(ஒங்கள சொல்லல) பெல்ட் கண்டிப்பா வேணும்! //

  அட..ஆமால்ல...அப்போ நானும் இவ்ளோ நேரமா அவங்களுக்காகத் தான் பேசிக்கிட்டு இருக்கனா............அவ்வ்வ்!

  //எத்தினை மணிக்கு தூங்குறதா உத்தேசம்?///"அவுக" கிட்ட கேக்க வேண்டிய கேள்விய,இவரு கிட்ட கேக்குறீங்க?// அவரு ஏதோ பொம்பளைப் புள்ளைகிட்ட சாட் பண்ணும்போது, தூக்கக் கலக்கத்துல இங்க கமெண்ட்டாப் போட்டிட்டாரு..அதை கண்டுக்காம நான் விட்டாலும் நீங்க விட மாட்டேங்கிறீங்களே..

  ReplyDelete
 72. @நா.மணிவண்ணன் //ஆணா எதுக்கு அண்ணன்தான் டபுள் மீனிங்ள பதிவு எழுதிருக்காருணா நாமளும் அதே மாதிரி டபுள் மீனிங்ள கமெண்ட் போடணுமான்னு யோசிச்சிட்டு விட்டேன்//

  இதுல எங்கய்யா டபுள் மீனிங் வந்துச்சு..எப்பவும் அதே நினைப்பா..மதுரை எப்படித் தான் தாங்குதோ?

  ReplyDelete
 73. நல்லா சாத்தியிருக்கீங்க பாஸ்..

  உங்க பெல்ட் பதிவர்களை அடிக்க இல்லையே!!?? ஏன்டா இப்பிடி பதிவ போடுறீங்கன்னு கேட்டு // டவுட்

  ReplyDelete
 74. சி.பி.செந்தில்குமார் said...
  பிரமாதமான பதிவு. ஆனால் "டைட்"டில் இன்னும் ஜனரஞ்சகமாக வைத்திருந்தால் அதிக மக்களை போய்ச்சேர்ந்திருக்கும்..///
  இப்ப பிரச்சினையே அது தாங்க!(பெல்ட்) "டைட்"டா நிக்க மாட்டேங்குதாம்!இதுல வேற ஜனரஞ்சகத்துக்கு எங்க போறது??????

  ReplyDelete
 75. இதான் ஆம்பிளைங்க மேட்டர் ஆச்சே.."மனுசன்" எழுதுவானா அதைப் பத்தி’-ன்னு விட்டுட்டாங்க போல.///
  அதனால, அனுதாபப்பட்டு அவங்க(மனுசங்க)எழுதாத மேட்டர "இவரு" எழுதியிருக்காரு!!!!!!

  ReplyDelete
 76. நா.மணிவண்ணன் said...
  ///அண்ணே அந்த சினேஹா படத்த பாத்தோடனே ஆட்டோமேடிகாவே///
  அக்கா நெனைப்பு வந்துடுச்சா???

  ReplyDelete
 77. கந்தசாமி. said...//பெல்ட்ட மட்டுமா கழட்டுறாங்க ,காலில போட்டிருக்கிறத கூட கழட்டி தடவிராங்களே...))////
  அடுத்த தடவ ஊருக்குப் போறப்போ,அழுக்கு ஷூ மாட்டிகிட்டு போங்க!!!!

  ReplyDelete
 78. பெல்ட் வேணுமா வேணாமா என்பது ப்ரோப்லேம் இல்லை . உன் இடுப்பு அடுப்பா மாறிட்டு இருக்குறது தான் பிரச்னை . அதுக்குதான் நாங்க நெறைய டிப்ஸ் தந்து இருக்கோம் லே அத படிடானா . அத விட்டு வேற எதோ கேக்குறான் .

  ReplyDelete
 79. ‘//உத்துப் பார்க்கிறவன் கண்ணை நோண்டுறது எப்படி//

  அருமையான தகவல்..

  பெல்ட்டை சாட்டை மாதிரி மனைவியினை யூஸ் செய்ய சொல்லலாம்.சும்மா பொழுது போகாம அவுங்க இருக்கும்போது!!!

  ReplyDelete
 80. @ஜ.ரா.ரமேஷ் பாபு //உங்க பெல்ட் பதிவர்களை அடிக்க இல்லையே!!?? ஏன்டா இப்பிடி பதிவ போடுறீங்கன்னு கேட்டு //

  பாஸ், என்னையை அடிக்கவே கீழ பலபேரு நிக்காங்க..இதுல நான் அடுத்தவங்களைச் சொல்ல முடியுமா?

  ReplyDelete
 81. @Yoga.s.FR //அதனால, அனுதாபப்பட்டு அவங்க(மனுசங்க)எழுதாத மேட்டர "இவரு" எழுதியிருக்காரு!!//

  நீங்க எந்தக் கட்சின்னே எனக்குப் புரிய மாட்டேங்குதே..கமல் மாதிரியே பேசுறீங்களே.

  ReplyDelete
 82. @Gramatha மாதாஜீ, இதைச் சொல்ல கஷ்டப்பட்டு ஒரு புரஃபைல ரெடி பண்ணீங்களாக்கும்..

  ReplyDelete
 83. @அமுதா கிருஷ்ணா //பெல்ட்டை சாட்டை மாதிரி மனைவியினை யூஸ் செய்ய சொல்லலாம்.சும்மா பொழுது போகாம அவுங்க இருக்கும்போது!!!//

  ஏற்கனவே அப்படித் தானேக்கா?

  ReplyDelete
 84. முன்னாடி வீங்கியிருக்கிற தொப்பையை லைட்டா சீவி சைஸ் பண்ணிட்டீங்கண்ணா அப்புறம் பேண்ட் லூசாயிடும், பெல்ட் கட்டியே தீரனும் , இப்படி ஒரு கேல்வியே மனசுல வராதுண்ணே....

  இல்லைனா இந்த பெல்ட் சமாச்சாரத்தை துக்கி கடாசிடுங்கண்ணே. வயசான காலத்துல இனி யாரை போய் வசீகரம் பண்ண போறீங்க. இதுல இன்னொரு சவுகரியமும் இருக்கு, அவசரத்துக்கு நம்ம பெல்ட்டையே கையில எடுத்துகிட்டு வீட்டு அம்மணிக சலம்புறதுக்கும் வாய்ப்பிருக்கு அதிலிருந்தும் விடுதலை...

  ReplyDelete
 85. செங்கோவி அண்ணே - ஊருக்கு வரும் போது அதை ஏன் இடுப்புல காட்டுறீங்க,
  சூட்கேஸ் கட்டும் கயிற்றுக்கு பதிலா இந்த பெல்ட் பயன் படுதிக்கலாமே

  அடுத்து ஊரில் இருக்கும் போது பைக் ஓட்டும் பழக்கம் இருந்தா, நம்ம ஊருல பைக் டயர்க்கு பூட்டு போடுவாங்களே அது மாதிரி உங்க பைக் டயர் கட்ட பயன் படுத்துங்க.

  ReplyDelete
 86. பேண்ட் போட்டா மொட்டையாத் தெரியுது.
  அப்ப பேண்ட்ல கிழிசல் ஏதும் இருக்கும்.தையக்கட காரர பாருங்க.
  அப்பிடியே இந்த விமர்சனத்தனையும்(சென்னை பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம்)http://sekkaali.blogspot.com/2011/07/blog-post_20.htmlபடிச்சுட்டு கும்முங்க

  ReplyDelete
 87. ஒரு பெல்ட் இந்தப் பாடு படுத்துதே!

  ReplyDelete
 88. இதுக்கொரு முடிவே இல்லியா பாஸ்??!!!

  ReplyDelete
 89. செங்கோவி
  கண்டு பிடிச்சு வந்துட்டன்....
  நல்ல கேள்விதான் பெரிய ரூம் போட்டு யோசிக்கணும்....

  மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்............

  ReplyDelete
 90. ஒருத்தருக்கு அப்பதான் பொழுது புலருது, இன்னொருவருக்கு அப்பதான் ஷிப்ட் முடியுது. ரெண்டு பேரும் ராத்திரில பண்ற ரவுசு, ஸ்ஸ்ஸ் அப்பப்பா!

  ReplyDelete
 91. //சி.பி.செந்தில்குமார் said...
  வம்பை விலை குடுத்து வாங்கிட்டீர்.. இனி அவர் ஒரு எதிர்ப்பதிவு போடுவார்( அண்ணே.. போட்டு என் மானத்தைகாப்பாத்துங்க. ஹி ஹி//
  சிண்டு முடியறதே சிபியோட வேலையாப் போச்சே!

  ReplyDelete
 92. முற்போக்கா வேற ஏதாவது தேவையான்னு யோசிக்க கூடாதா செங்கோவி...'I AM A FREE MAN ,NOT SUPERMAN'

  ReplyDelete
 93. என்னங்க நடக்குது

  ReplyDelete
 94. @Jey //முன்னாடி வீங்கியிருக்கிற தொப்பையை லைட்டா சீவி சைஸ் பண்ணிட்டீங்கண்ணா அப்புறம் பேண்ட் லூசாயிடும், பெல்ட் கட்டியே தீரனும் , //

  ஆஹா..இவங்க கையில மாட்டுனா சிதைச்சுடுவாங்க போலிருக்கே.

  ReplyDelete
 95. @ஸ்வீட் ஜல்சா உங்க கமெண்ட் கலக்கல் நண்பரே..பேரு ம்.ம்ம்!

  ReplyDelete
 96. @சேக்காளி //அப்ப பேண்ட்ல கிழிசல் ஏதும் இருக்கும்.தையக்கட காரர பாருங்க.//

  ஹா...ஹா..

  //அப்பிடியே இந்த விமர்சனத்தனையும்(சென்னை பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம்)http://sekkaali.blogspot.com/2011/07/blog-post_20.htmlபடிச்சுட்டு கும்முங்க//

  அதை விட்டுடுங்க சேக்காளி..இரண்டாம் பாகம் படிச்சீங்கள்ல?

  ReplyDelete
 97. @மைந்தன் சிவா //இதுக்கொரு முடிவே இல்லியா பாஸ்??!!!// ம்ஹூம்...100 கமெண்ட் தாண்டியும் முடிவு வரலியே.

  ReplyDelete
 98. @ஆகுலன் //செங்கோவி
  கண்டு பிடிச்சு வந்துட்டன்....// நன்றி ஆகு.

  ReplyDelete
 99. @FOOD//ஒருத்தருக்கு அப்பதான் பொழுது புலருது, இன்னொருவருக்கு அப்பதான் ஷிப்ட் முடியுது. ரெண்டு பேரும் ராத்திரில பண்ற ரவுசு, ஸ்ஸ்ஸ் அப்பப்பா!// ஹா..ஹா..ஆஃபீசரை நோக வச்சுட்டமோ..

  ReplyDelete
 100. @Reverie //முற்போக்கா வேற ஏதாவது தேவையான்னு யோசிக்க கூடாதா செங்கோவி...'I AM A FREE MAN ,NOT SUPERMAN'//

  நாம ஏற்கனவே அப்படித் தானே ரெவரி.

  ReplyDelete
 101. @மாய உலகம் //என்னங்க நடக்குது//

  மாய உலகத்திற்குத் தெரியாதா ’எல்லாம் மாயை’ன்னு!

  ReplyDelete
 102. @செங்கோவி
  எனது பெயர் சரவணன்.
  நல்ல வேலை பெயர் மட்டும் கேட்டீங்களே,
  பெயர் காரணம் கேக்காம விட்டீங்களே,

  இதை காபி அடித்து தான் 3 பாட்டு எழுதிட்டங்களே.

  ReplyDelete
 103. ஆண்களுக்கு பெல்ட் அவசியம் பாஸ், அதுவும் ஆப்பிஸ் வேலை செய்யும் ஆண்களுக்கு ஒரு Smart look தேவை என்றால், பெல்ட் கண்டிப்பாக அவசியம்.

  ReplyDelete
 104. நிரூபன் said...

  ஆண்களுக்கு பெல்ட் அவசியம் பாஸ், அதுவும் ஆப்பிஸ் வேலை செய்யும் ஆண்களுக்கு ஒரு Smart look தேவை என்றால், பெல்ட் கண்டிப்பாக அவசியம்.///இது இடுப்பில Trouser க்கு கட்டுற பெல்ட்டாம்,நிரூபா!!!!!!!!!!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.