Tuesday, December 4, 2012

அதிரடிக்கார மச்சானும் அசாம்காரன் ஜட்டியும்

டிஸ்கி: பதிவெழுத வந்த புதிதில் எழுதிய பதிவு இது. எப்படியோ பப்ளிஷ் ஆகாமல், ட்ராஃப்ட்டிலேயே கிடந்திருக்கிறது. இப்போது தான் பார்த்தேன்..உடனே பப்ளிஷ்ஷ்ஷ்! (இதில் வரும் மச்சான்...நான் தான்!!)


ரொம்ப தர்மசங்கடமான நிலைமை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரம் வரும். நம்ம அதிரடிக்கார மச்சானுக்கு காலேஜ்ல சேர்ந்த முதல்நாள் ஹாஸ்டலில் வந்தது. அவரது ஹாஸ்டல் ரூமில் மொத்தம் 3 பேர்..சேர்ந்தாப்போல் 3 கட்டில்கள்!

அதனால என்ன என நீங்கள் நினைக்கலாம்..மச்சான் ஒரு ’சுதந்திரப் பிரியர்’.தூங்கும்போது ஜட்டி போடுவது அவருக்கு பிடிக்காது. ரூம் மேட்-ல் ஒருவர் நாகர்கோயில்காரர். அவரிடம் நைஸாக மச்சான் மேட்டரை சொன்னபோது, அவர் “ எனக்கும்தான் புடிக்காது..ஹி..ஹி..” என்றார். இன்னொரு ரூம் மேட் அஸ்ஸாம்காரன்..தமிழ் மாலும் நஹி..மச்சானுக்கோ இங்கிலிபீசு டோண்ட் நோ..மனதுக்குள் செண்டன்ஸ் ஃபார்ம் பண்ணி சொல்லுமுன் விடிந்துவிடும்..ஜட்டியை கழட்டமுடியாது போய்விடும் அபாயம்..எனவே துணிந்து பேசத்தொடங்கினார்.

Friend, small request”

“yes..”

“Actually, I don’t put jatti in night”

“what’s jatti?”

“this one” (துணிந்து காமித்தார்)

Oh, underwear?..don’t you wear  while sleeping?”

“Yes”..கேட்டவுடன் கொந்தளிக்கத் துவங்கினான் அவன்.“My god! It’s ridigulous..I can’t, never allow this in my room..This is indecescent..I heard that Tamilians are different kind of people..but I didn’t expect to this level..I can’t sleep without underwear”

தமிழனுக்கு இழுக்கு என்றதும் மச்சான் பின்வாங்கினார். கொசுவர்த்தி சுத்த, அப்பா சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது:” என்ன கஷ்டம் வந்தாலும் சரிடா மவனே, நீ இன்ஜினேரிங் படிச்சு முடிக்கணும், பெரிய பெரிய பாலமா கட்டணும் (கவனிக்க: மச்சான் சிவில் இன் ஜினேயர் அல்ல!!)

மனதைத் தேற்றிக்கொண்டு, படுத்தார் மச்சான். இன்னொரு சுவரோரம் நாகர்கோயில்காரரும் துக்கத்தை அடக்கிக் கொண்டு சாய்ந்தார். நடுவில் இருந்த கட்டிலில் அஸ்ஸாம்காரன் உட்கார்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தான்.

சட்டையைக் கழற்றினான்.
பனியனைக் கழற்றினான்.
பேண்ட்டை கழட்டினான்.

வெறும் ஜட்டியுடன் நின்றவன், ஓடிவந்து இருவருக்கும் இடையில் தொபுக்கடீர் என்று படுத்தான்.

அலறி அடித்துக்கொண்டு, தமிழ்ச் சிங்கங்கள் எழுந்தன. மச்சான் கேட்டார்

”என்னடா பண்றே?..ச்சே..what are you going?”

“Sleeping”

அது தெரியுதுடா வெண்ணை..why only jatti?”

“I told you, no?..I CAN”T SLEEP WITHOUT Jatti”

அடப்பாவி..உன் இங்கிலிபீசுல தீயை வைக்க..அப்போ நாங்க சொன்னதை ’ஜட்டிகூட இல்லாம தூங்குவோம்னா’ எடுத்துக்கிட்டே?“என்று சொன்னவாறே அஸ்ஸாம்காரனுக்கு தர்ம அடி தொடங்கியது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

 1. இரவு வணக்கம்,செங்கோவி!அருமை!!!வால்க இங்கிலீசுபிசு!

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா. செம காமெடி!!! நான் கூட என்னடா நம்ம சிங்கம் தமிழனுக்கு இழுக்கு வந்தும் ஒன்னும் பேசாம இருந்திருக்கேன்னு நெனச்சேன்.

  ReplyDelete
 3. செம செம, நல்லாதான் பல்பு வாங்கியிருக்கார் நம்ம அண்ணன்!

  ReplyDelete
 4. செம காமெடி, காலைலேயே சிரிக்க வச்சுட்டிங்க

  ReplyDelete
 5. எகெ எகெ எகெகெகெகெகெ ஏஏஏஏஏஏஏஏஏ!

  சூப்பர் செங்கோவி

  ReplyDelete
 6. அஸ்ஸாம் காரன் ஜட்டி கிழிஞ்சுதா இல்லையா?

  ReplyDelete
 7. ஹா.ஹா.ஹா. செம செங்க்ஸ். சிரிப்பை அடக்க முடியல எனக்கு. இப்படித்தான் ஒரு தடவை குற்றாலத்தில் குளிக்கப்போகும் போது ஜட்டியை கழட்டாமல் அதன்மேல் ஒரு சீசன் டவலை கட்டிக்கு அருவி அருகில் போனோம். அங்கிருக்கும் சுவரில் கண்டிப்பாக ஜட்டி மட்டும் அணிந்து குளிக்க கூடாது என்று எழுதியிருந்ததை பார்த்ததும் என் நண்பன் ஒருவன் பரபரவென ஜட்டியை கழட்டிவிட்டு வெறும் துண்டுடன் போய்விட்டான். நல்லவேளையாக அங்கே துண்டு மட்டும் அணிந்து கொண்டு குளிக்கக்கூடாது என எழுதியிருக்கவில்லை.

  ReplyDelete
 8. அப்புறம் மூணு பேரும் ஜட்டியில்லாம படுத்தீங்களாண்ணே......?

  ReplyDelete
 9. காலை வணக்கம்,செங்கோவி!பதிவு போட்டு மொத காமெண்டு என்னோடது!ஸ்பாமில போய் உக்காந்துடிச்சோ?

  ReplyDelete

 10. //Yoga.S. said... [Reply]
  இரவு வணக்கம்,செங்கோவி!அருமை!!!வால்க இங்கிலீசுபிசு!

  காலை வணக்கம்,செங்கோவி!பதிவு போட்டு மொத காமெண்டு என்னோடது!ஸ்பாமில போய் உக்காந்துடிச்சோ?//


  தினமும் காலையில் நான் செய்யும் முதல் வேலை ஸ்பேமில் இருக்கும் உங்கள் கமென்ட்களை எடுத்துவிடுவது தான்..இன்று காலை நெட்டுக்கு வரவில்லை என்பதால், ரிலீஸ் செய்ய லேட் ஆகிடுச்சு ஐயா.

  ReplyDelete
 11. //Bag San said... [Reply]
  ஹா ஹா ஹா. செம காமெடி!!! நான் கூட என்னடா நம்ம சிங்கம் தமிழனுக்கு இழுக்கு வந்தும் ஒன்னும் பேசாம இருந்திருக்கேன்னு நெனச்சேன். //

  தமிழைக் காப்பாத்தறதை விட ஜட்டியைக் கழட்டுறது முக்கியமாப் போயிடுச்சு.

  ReplyDelete

 12. // Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... [Reply]
  செம செம, நல்லாதான் பல்பு வாங்கியிருக்கார் நம்ம அண்ணன்! //


  பல்பு வாங்குறதுல நாமெல்லாம் எக்ஸ்பெர்ட்யா!

  ReplyDelete

 13. // Kathir Rath said... [Reply]
  செம காமெடி, காலைலேயே சிரிக்க வச்சுட்டிங்க //


  சந்தோஷம் பாஸ்.

  ReplyDelete


 14. //மருதமூரான். said... [Reply]
  எகெ எகெ எகெகெகெகெகெ ஏஏஏஏஏஏஏஏஏ!

  சூப்பர் செங்கோவி //


  இதுக்குப் பேர் தான் விழுந்து விழுந்து சிரிக்கிறதாய்யா?

  ReplyDelete

 15. // கோகுல் said... [Reply]
  அஸ்ஸாம் காரன் ஜட்டி கிழிஞ்சுதா இல்லையா? //

  இன்னொரு நாள் கிழிஞ்சது..ஆனால் அதற்குக் காரணம் நாங்கள் அல்ல!

  ReplyDelete

 16. // ரஹீம் கஸாலி said... [Reply]
  ஹா.ஹா.ஹா. செம செங்க்ஸ். சிரிப்பை அடக்க முடியல எனக்கு. இப்படித்தான் ஒரு தடவை குற்றாலத்தில் குளிக்கப்போகும் போது ஜட்டியை கழட்டாமல் அதன்மேல் ஒரு சீசன் டவலை கட்டிக்கு அருவி அருகில் போனோம். அங்கிருக்கும் சுவரில் கண்டிப்பாக ஜட்டி மட்டும் அணிந்து குளிக்க கூடாது என்று எழுதியிருந்ததை பார்த்ததும் என் நண்பன் ஒருவன் பரபரவென ஜட்டியை கழட்டிவிட்டு வெறும் துண்டுடன் போய்விட்டான். நல்லவேளையாக அங்கே துண்டு மட்டும் அணிந்து கொண்டு குளிக்கக்கூடாது என எழுதியிருக்கவில்லை. //

  டவல் பிச்சுக்கிட்டுப் போயிருக்குமே?

  ReplyDelete

 17. //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  அப்புறம் மூணு பேரும் ஜட்டியில்லாம படுத்தீங்களாண்ணே......? //

  யோவ், கரெக்டாச் சொல்லும்யா..ஜட்டி இல்லாம லுங்கியோட படுத்தோம்.

  ReplyDelete
 18. அந்த அஸ்ஸாம் காரன் யாருன்னு இன்னும் யோசிச்சிட்டு இருக்கேன் !!

  ReplyDelete
 19. அட கொடுமையே! ஹா! ஹா! ஹா!

  ReplyDelete
 20. @வினையூக்கி

  அவன் பேரு சத்ய..-ன்னு ஆரம்பிக்கும், கிரின்னு முடியும்..செகண்ட் இயர்ல...

  ReplyDelete
 21. :)))))))))))))

  Sema-ya mokkai vaanganeenga pola..!!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.