Sunday, February 24, 2013

ஹரிதாஸ் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
இயல்பான நடிப்புக்குப் பேர்போன கிஷோர் ஹீரோவாக நடிக்கும் படம் + திருமணத்திற்குப்பின் சிநேகா நடிக்கும் படம் என்பதைத்தாண்டி, பெரிதாக எதிர்பார்ப்பை எழுப்பும் காரணிகள் இன்றி வெளியாகியிருக்கும் படம். ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய படமாய் வெளிவந்துள்ளது இந்த ஹரிதாஸ்.



ஒரு ஊர்ல.....................:

என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கிஷோரின் மகனுக்கு ஆட்டிசக் குறைபாடு. தனது என்கவுண்டர் திட்டப்படி ஒரு தாதா குரூப்பை அழிக்கும் அதே நேரத்தில், மகனை எப்படி சாதனையாளனாக ஆக்குகிறார் என்பதே கதை.

உரிச்சா....:

படம் இருவேறு தளங்களில் பயணிக்கிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் பரபரப்பான வாழ்க்கை மற்றும் ஆட்டிசக்குறைபாடுள்ள பையனின் தந்தையின் செண்டிமெண்ட் வாழ்க்கை என இருவேறுபட்ட சூழல்களை மிக யதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள்.

அதிலும் முதல் என்கவுண்டர் சீன், மிகவும் இயற்கையாக் உள்ளது. அதேபோன்றே சிநேகா கேரக்டரும்.ஹரிதாஸ் எனும் ஆட்டிசக்குறைபாடுள்ள சிறுவன், சாதனையாளனாக உருவெடுக்கும் காட்சிகளை மிக சுவாரஸ்யமாய்க் காட்டியிருக்கிறார்கள்.

கிஷோர் :


நடிக்கத் தெரிந்த நல்ல நடிகர். வில்லன் வேடத்திலேயே மிகைநடிப்பின்றி கலக்குவார். இதில் ஒரு நல்ல தந்தையாக, நேர்மையான போலீஸ்காரராக அப்படியே பொருந்திப்போகிறார்.

மழையில் நனைந்தபடியே பையனிடம் பேசும் காட்சி கவிதை. ஆனாலும் அந்தக் காட்சியில் குரலை இன்னும் மென்மையாக்கியிருக்கலாம்.

சிநேகா :
கல்யாணம் ஆகிப் போய்விட்ட சிநேகாவை தேடிப்பிடித்து கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தக் கேரக்டருக்கு சிநேகாவை விட்டால் வேறு பொருத்தமான நடிகை யார் இருக்கிறார்கள்?

ஒரு டீச்சராக இருப்பதில் ஆரம்பித்து பையனிடம் அட்டாச்மெண்ட் ஆகும் உணர்ச்சிகளை அட்டகாசமாக காட்டியிருக்கிறார்.சிநேகாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான் படம் இது. அதிலும் குழந்தையைத் தொலைத்துவிட்டு அழுதபடியே பேசும் காட்சியில் அப்படி ஒரு யதார்த்தம்.

ப்ரித்விராஜ் தாஸ் :

ஆட்டிசக்குறைபாடுள்ள குழந்தையாக நடித்துள்ள சிறுவன். யார் என்ன பேசினாலும் ரியாக்ட் செய்யாமல் அல்லது மிக தாமதமாகச் செய்யும் கேரக்டர். மிகவும் கஷ்டமான நடிப்பு. அருமையாகச் செய்திருக்கிறான். இவனிடம் மிகச் சரியாக வேலை வாங்கிய இயக்குநர் குமாரவேலும் பாராட்டுக்குரியவர்.


நெகடிவ் பாயிண்ட்ஸ் :


- குறைபாடுள்ள குழந்தைகளை அணுகுவது பற்றிய மனிதாபிமானம் போதிக்கும் படம், என்கவுண்ட்டரையும் போதிப்பது. அது வணிகரீதியில் படம் வெற்றியடைய உதவினாலும், கருத்தியல்ரீதியில் பெரிய முரணாக ஆகிவிட்டது.

- படம் இருவேறு தளங்களில் போகின்றது. இரண்டுமே அவ்வளவாக ஒட்டவில்லை. போலீஸ் கதை நடக்கும்போது ஏதோ ஒரு அந்நியத்தன்மை தெரிகிறது.

- அந்த போலீஸ் கதையின் கிளைமாக்ஸ்.

- சிநேகா உடன் வேலைபார்க்கும் டீச்சரை ஒருநேரத்தில் ஒருமையிலும், மற்றொரு நேரத்தில் மரியாதையுடனும் அழைப்பது போன்ற சில கண்டினியுட்டி மிஸ்ஸிங்ஸ்.

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:


- நம்பிக்கை ஏற்படுத்தும் கதையினை எடுத்துக்கொண்டு, ஒரு நல்ல முயற்சியில் இறங்கியது.

- நறுக்குத்தெறித்தாற்போன்ற வசனங்கள்

- அன்னையின் கருவில் மற்றும் வெள்ள குதிர பாடல்கள்

- ரிலாக்ஸ் பண்ண வைக்கும் சூரியின் காமெடி

- அரசுப்பள்ளியில் வரும் மாணவர்கள்+தலைமையாசிரியை கேரக்டர்கள்

- ரத்னவேலுவின் கேமிரா

பார்க்கலாமா? :


ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னதற்காக நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய, பார்க்க வேண்டிய படம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

  1. சிறப்பான விமர்சனம்! நான் பார்க்க நினைக்கும் படங்களுள் ஒன்று எங்க ஊர் பக்கம் வந்தால் நிச்சயம் பார்ப்பேன்! நன்றி!

    ReplyDelete
  2. கல்யாணம் ஆகிப் போய்விட்ட சிநேகாவை தேடிப்பிடித்து கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தக் கேரக்டருக்கு சிநேகாவை விட்டால் வேறு பொருத்தமான நடிகை யார் இருக்கிறார்கள்?///


    அதானே? யார் இருக்காங்க மாம்ஸ்....

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.(வந்தால்)பார்க்கலாம்!இல்லேன்னா இன்டர்நெட் தான்.

    ReplyDelete
  4. நல்லதும் வித்டியாசமானதுமான விமர்சன்ம்,தவிர தமிழுக்கு இது மாதிரியான நல்ல படங்கள் வருவது அறுதல் தருகிற ஆரோக்கியமான விஷயம்/

    ReplyDelete
  5. அருமையான / நறுக்கான விமர்சனம் அண்ணா - இங்கு தியேட்டருக்கு வராது! எனவே நெட் ஒன்றே வழி!

    பாஸிட்டிவ், நெகடிவ் பாயிண்டுகளைச் சொன்னவிதம் அருமை! மொத்தத்தில் அழகிய விமர்சனம்!

    ReplyDelete
  6. நேற்று தான் கடல் பார்த்தேன், அப்போ இது அடுத்த வாரம்.

    ReplyDelete
  7. //சிநேகா உடன் வேலைபார்க்கும் டீச்சரை ஒருநேரத்தில் ஒருமையிலும், மற்றொரு நேரத்தில் மரியாதையுடனும் அழைப்பது போன்ற சில கண்டினியுட்டி மிஸ்ஸிங்ஸ்//

    நானும் ராசு மாமாவும் எப்போவும் இப்படித்தான் பேசிக்குவோம், ஒரு வேள அதுவும் கண்டினியுட்டி மிஸ்ஸிங்ஸ்ஆ? #கண்பியுசன்

    ReplyDelete
  8. \\கல்யாணம் ஆகிப் போய்விட்ட சிநேகாவை தேடிப்பிடித்து கொண்டுவந்திருக்கிறார்கள்.\\ என்னமோ சினிமாவே வேணாம்னு வேற தேசத்துக்கு ஓடிப் போயிட்டா மாதிரியில்ல இருக்கு!! அவரு வீட்டுக்காரரே அவங்க விரும்பினா நடிக்கலாம்னு தானே சொல்லியிருந்தாரு?

    \\அதிலும் முதல் என்கவுண்டர் சீன், மிகவும் இயற்கையாக் உள்ளது.\\ என்கவுண்டர் என்றாலே யாரையாவது போட்டுத் தள்ளுவது என்று எந்த கவுண்டரோ தமிழில் அர்த்தம் கற்ப்பிச்சிட்டு போயிட்டாரே??!!

    ReplyDelete
  9. இவர்கள் மூவர் நடிப்புக்காகவே படத்தை பார்க்கணும் போல இருக்கே...!

    ReplyDelete
  10. கிஷோர் எனக்கும் மிகப்பிடித்த நடிகர். படம் பார்க்கணும்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.