அதாகப்பட்டது..:
சினிமாவுக்குள் வந்த குறுகிய காலத்திலேயே ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்வது என்பது எல்லோருக்கும் நடப்பது அல்ல..அந்த வகையில் சமீபகாலத்தில் கார்த்திக்கு அப்புறம் அப்படி ஸ்டார் ஆகியிருப்பவர், சிவகார்த்திகேயன். காமெடியனாக ஆவோம் என்று வந்தவர் சட்டென்று உயரே போய்விட்டார். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்..ஒன்று, அவரது காமெடி சென்ஸ், அடுத்து அவரது தன்னடக்கம். இது இரண்டும் இருக்கும்வரை, அவரது வளர்ச்சி தொடரவே செய்யும்.
இன்று தனுஷ் தயாரிப்பில் சிவாவின் காக்கிச்சட்டை ரிலீஸ். ஒரு ஹீரோவின் ஸ்டேடஸ் என்ன என்பதை, இங்கே (குவைத்தில்) டிக்கெட் புக் ஆவதிலேயே தெரிந்துகொள்ளலாம். ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா படங்கள் என்றால், ஆன்லைனில் புக்கிங் ஆரம்பித்த ஒரு மணிநேரத்தில் எல்லா ஷோவும் புக் ஆகிவிடும். அதே போன்றே சிவகார்த்திகேயனுக்கும் தியேட்டர் ஹவுஸ்ஃபுல். வ.வ.சங்கம், மான் காராத்தே தந்த நம்பிக்கையில் ஃபேமிலி சீட்ஸ் உட்பட அனைத்து சீட்களும் ஃபுல். இந்த நம்பிக்கையை சிவா காப்பாற்றினார் என்றால், ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ கேட்டகிரியில் இருக்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இணைவார். இணைந்தாரா என்று பார்ப்போம்.

ஒரு ஊர்ல :
ஆதரவற்ற மனிதர்களைக் கொன்று உடல் உறுப்பைத் திருடும் ஒரு கும்பல் பற்றி கான்ஸ்டபிள் சிவகார்த்திகேயனுக்குத் தெரியவருகிறது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதற்கு உடந்தையாக இருக்க, ஒரு சாதா கான்ஸ்டபிள் எப்படி அதை அந்த கும்பலை ஒழித்துக்கட்டுகிறார் என்பதே கதை.
உரிச்சா:
சிங்கம் சூர்யா போன்று செம பில்டப்புடன் பஞ்ச் டயலாக்ஸுடன் பதற வைத்தபடி இன்ஸ்பெக்டராக அறிமுகம் ஆகிறார் சிவா. ‘போச்சுடா..தொலைஞ்சோம்’ என்று நாம் பதறும்போதே அது கனவு என்றும் அவர் ஒரு சாதாரண கான்ஸ்டபிள் என்றும் தெரியவருகிறது. அங்கேயிருந்து படத்தை ரசிக்க ஆரம்பிக்கிறோம். இன்ஸ்பெக்டர் பிரபு உட்பட ஸ்டேசனில் இருக்கும் அனைவரும் பெரிய கேஸ்களில் சிக்காமல் வாழ்க்கையை ஸ்மூத்தாக ஓட்டிக்கொண்டிருக்க, சிவாவிற்கு மட்டும் இளரத்தம் கொதிக்கிறது. க்ரைம் பிராஞ்ச் என்பதால் யூனிஃபார்ம்கூட போட முடியாமல் அவர் நொந்துபோய் அலையும் காட்சிகளுடன் படம் கலகலப்பாகப் போகிறது. அதிலும் ரயில்வே ஸ்டேசனில் பிச்சை எடுக்கும் சீன், அதகளம். ஸ்ரீதிவ்யா அறிமுகம் ஆக, அவரை காதலிக்க சிவா செய்யும் முயற்சிகளிலேயே முன்பாதியில் பெரும்பகுதி போகிறது. அவ்வப்போது வில்லன்களைக் காட்டி ஏதோவொன்று நடக்கிறது என்று மர்மமாக நமக்குச் சொல்கிறார்கள். அது என்ன என்று தெரிந்து, சிவா களத்தில் இறங்கும்போது இண்டர்வெல்.
ரஜினி படம் மாதிரியே காமெடியும் ஆக்சனும் கலந்த கலவையாக படம் நகர்கிறது. சிவாவின் காமெடி சென்ஸும் கைகொடுக்க, படம் முழுக்கவே ஒரு கலகலப்பு இருந்துகொண்டே இருக்கிறது. இரண்டாம்பாதியில் இவர் தான் வில்லன் என்று சிவா முன்னேற, உண்மையான வில்லன் வேறு ஆள் என்று தெரியவருவது அதிர்ச்சி. ஒரு ஆக்சன் படத்திற்குத் தேவையான வலுவான வில்லன் கேரக்டர். அவருடன் சிவா சவால்விட்டு மோதும் காட்சிகளில் பொறிபறக்கிறது. அதிலும் கமிசனரை தன் பக்கம் இழுக்க, சிவா செய்யும் வேலைக்கு தியேட்டரில் பயங்கர அப்ளாஸ். கூடவே, கிளைமாக்ஸும் ஆக்சனாக இல்லாமல் மூளையை யூஸ் செய்து முடிக்கிறார்கள்.
முதல்பாதியில் கதைக்கு வராமல் லவ்+காமெடியிலேயே ஓட்டுவது, இரண்டாம்பாதியில் சிவாவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் நீள்வது ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் போரடிக்காமல் நல்ல டைம் பாஸ் மூவியாக வந்திருக்கிறது.

சிவகார்த்திகேயன்:
ரஜினி ஃபார்முலாவை கச்சிதமாகக் கடைப்பிடிக்கிறார் சிவா. பில்டப் இல்லாமல் தன்னை சாமானியனாகக் காட்டிக்கொண்டே, ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிறார். காமெடியும் ஆக்சனும் ஒருங்கே கைவருகிறது. இதே ரேஞ்சில் சென்றால், விஜய்க்கு கடும்போட்டியை உருவாக்குவார் சிவா. இன்னொரு ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ உருவாகிக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. நடிப்பில் பலமடங்கு முன்னேற்றம். முந்தைய படங்களில் ஹீரோயிசம் பண்ணலாமா எனும் தயக்கம் இருக்கும், இதில் அதை உதறி மேலே வந்திருக்கிறார்.
செல்ஃபி திவ்யா:
தாவணி அளவிற்கு மாடர்ன் ட்ரெஸ்ஸில் திவ்யா நம்மைக் கவரவில்லை. நர்ஸாக வந்து, ஹீரோவுக்கு உதவி செய்யும் வேடம். பெரிதாக நடிக்காவிட்டாலும், ஃபுல்மேக்கப்பில் பளிச்சென்று இருக்கிறார். வழக்கம்போல் படத்தில் கவர்ச்சி காட்டவில்லை, அது வாட்ஸப்பில் மட்டும் தான் போலும். ராசியான நடிகை & ஜோடி என்று இந்தப் படம் பெயர் பெற்றுத் தரும்.
இமான் அண்ணாச்சி:
ரொம்ப நாளாக சரியான களம் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த அண்ணாச்சி, இதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தூத்துக்குடி பாஷையில் அண்ணாச்சி பேசும் வசனங்கள் சிரிப்பை வரவைக்கின்றன. கூடவே, சிவா வில்லன்களை ஒழிப்பதில் கூடவே இருந்து உதவுகிறார். இனி அதிகப் படங்களில் இவரைப் பார்க்கலாம்.
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- பாடல்கள். எல்லாப் பாட்டுக்கும் தியேட்டரில் எழுந்து செல்கிறார்கள். ’கொக்கி போட்டுத்தான்’ பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. அனிருத்திற்கு இது ஒரு பின்னடைவு தான்.
- ஆர்கன் திருட்டு என்றதும்...என்னை அறிந்தால் படம் ஞாபகத்திற்கு வருவது.
- இண்டர்வெல்வரை கதைக்குள் வராமல் சுற்றிக்கொண்டே இருப்பது.
- வில்லனை ஒழித்தாலும், திருட்டு தொடரும் என்பதே யதார்த்தம். மொத்தக் கும்பலையும் ஒழிக்காமல் வில்லனை ஒழித்ததுடன் திருப்திப்பட்டுக்கொண்டது.

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- சிவகார்த்திகேயன்
- காமெடியாகவே படத்தை நகர்த்துவது
- சிவா+ஸ்ரீதிவ்யா ஜோடிப் பொருத்தம்
- இரண்டாம்பாதியை நல்ல த்ரில்லராகக் கொடுத்திருப்பது
- டெரரான வில்லன்
- சுகுமாரின் ஒளிப்பதிவு. ஸ்ரீதிவ்யாவை சிவா காப்பாற்றும் ஃபைட்டில் ஒளிப்பதிவு அட்டகாசம்.
- க்ளிவேஜ்கூட இல்லாமல் படத்தை குடும்பத்துடன் பார்க்கும்படி நீட்டாக எடுத்தது. (ஒருவேளை குவைத் சென்சாரில் போயிடுச்சா?)
பார்க்கலாமா?
நல்ல டைம் பாஸ் மூவி..பார்க்கலாம்.

14 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.