நம்மூர்ல வீட்டை விட்டு வெளில இறங்குனாலே ப்ளே ஸ்கூல் தான்..தெரு தான் ப்ளே ஸ்கூல். தெருவுல போற வர்ற பெரியப்பன் - சித்தப்பன்கள் தான் வாத்தியார்கள். எது என்ன கலரு, எந்தக் கலர் எப்படின்னு விலாவரியா சொல்லிக்கொடுத்திருவாங்க..இங்க யாருக்கு டைம் இருக்கு? அதனால ஏறக்குறைய நம்மூரு மதிப்புக்கு மாசம் 5000 ரூபாய் கொடுத்து, ஒரு வீட்டுக்கு விளையாட அனுப்புறோம்..
ஸ்கூலுக்கு போ-ன்னு நாங்க அவன்கிட்ட சொல்லும்முன்னாடியே, அவன் ‘நான் ஸ்கூலுக்குப் போகணும்’னு அடப்பிடிச்சு ஒரே அழுகை. ஏன்னா, எங்க பில்டிங்ல அவன் தான் சின்னப்பையன்.அவனோட தோஸ்த்துங்க எல்லாரும் ஸ்கூலுக்குப் போறதைப் பார்த்து, அவருக்கும் ஆசை வந்திடுச்சு.
ஸ்கூலுக்குப் போவணும்னு அவன் அழுதப்போ, எனக்கு பழைய நினைப்பெல்லாம் பீறிக்கிட்டு வந்திடுச்சு. நான் முதமுதலா ஸ்கூலுக்குப் போனதை நினைச்சுப் பார்த்தேன். வீட்டுல இருந்து ஸ்கூல் வரைக்கும் அம்மா ஒரு குச்சியால அடிச்சுக்கிட்டே கொண்டு போய் விட்டாங்க. நானும் எவ்வளவோ போராடிப்பார்த்தேன். ம்ஹூம்..ஒரு பிரயோஜனமும் இல்லை..தரதரன்னு இழுத்துட்டுப் போய், வாத்தியார் முன்னாடி நிப்பாட்டிட்டாங்க. அந்த ஆளைப் பார்த்ததும், நான் ஆஃப் ஆகிட்டேன்.
ஸ்கூலுக்குப் போவணும்னு அவன் அழுதப்போ, எனக்கு பழைய நினைப்பெல்லாம் பீறிக்கிட்டு வந்திடுச்சு. நான் முதமுதலா ஸ்கூலுக்குப் போனதை நினைச்சுப் பார்த்தேன். வீட்டுல இருந்து ஸ்கூல் வரைக்கும் அம்மா ஒரு குச்சியால அடிச்சுக்கிட்டே கொண்டு போய் விட்டாங்க. நானும் எவ்வளவோ போராடிப்பார்த்தேன். ம்ஹூம்..ஒரு பிரயோஜனமும் இல்லை..தரதரன்னு இழுத்துட்டுப் போய், வாத்தியார் முன்னாடி நிப்பாட்டிட்டாங்க. அந்த ஆளைப் பார்த்ததும், நான் ஆஃப் ஆகிட்டேன்.
நானாவது பரவாயில்லை..அழுதாலும் ஸ்கூலுக்குப் போயிட்டேன். என் அப்பா விஷயம் அதை விடவும் மோசம்..நல்லபிள்ளையா வீட்ல இருந்து கிளம்புவாராம். ஆனால் ஸ்கூலுகுப் போகாம, கண்மாய்-காடுன்னு சுத்திட்டு சாயந்திரமா வீட்டுக்கு வந்திடறது..அப்பப்போ பிடிபடறதும், ரெண்டு நாள் ஸ்கூலுக்கு சும்மா போயிட்டு, திரும்ப கட் அடிக்கிறதும் அவரோட வாடிக்கை ஆயிடுச்சாம். எங்க ஸ்கூல்ல அஞ்சாப்பு வரைக்கும் பரிட்சை கிடையாது. அதனால மூணாப்பு வரைக்கும் பாஸ் ஆகி(!) வந்துட்டாரு.
ஆனால் மூணாவது படிக்கும்போது, கட் அடிச்சுட்டு நொங்கு திங்கப்போன மனுசனை ஸ்கூல் போலீஸ் (இது என்னன்னு பின்னால சொல்றேன்..) விரட்டியிருக்கு. மனுசனை திங்கக்கூட விட மாட்டேங்கிறாங்களேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, ஸ்கூல் போலீஸ் மண்டையை சிலேட்டாலயே அடிச்சு உடைச்சுட்டாரு. அப்புறம், யாருமே அவரை ஸ்கூலுக்கு கூப்பிடலை.. அப்பேப்பட்ட வம்சத்துல வந்த பயபுள்ளை, ஸ்கூலுக்குப் போவணும்னு அழுதுட்டாம்யா..அதை நினைக்கும்போது, ரொம்பப் பெருமையா இருக்கு!!
ஆனால் மூணாவது படிக்கும்போது, கட் அடிச்சுட்டு நொங்கு திங்கப்போன மனுசனை ஸ்கூல் போலீஸ் (இது என்னன்னு பின்னால சொல்றேன்..) விரட்டியிருக்கு. மனுசனை திங்கக்கூட விட மாட்டேங்கிறாங்களேன்னு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, ஸ்கூல் போலீஸ் மண்டையை சிலேட்டாலயே அடிச்சு உடைச்சுட்டாரு. அப்புறம், யாருமே அவரை ஸ்கூலுக்கு கூப்பிடலை.. அப்பேப்பட்ட வம்சத்துல வந்த பயபுள்ளை, ஸ்கூலுக்குப் போவணும்னு அழுதுட்டாம்யா..அதை நினைக்கும்போது, ரொம்பப் பெருமையா இருக்கு!!
ஸ்கூல் போலீஸ்:
எங்க கிராமத்திலேயே நான் படிச்ச ஸ்கூல் இருந்துச்சு. எங்க வாத்தியார்க எல்லாம் மக்களோட மக்களா சகஜமா பழகுவாங்க. ஒரு பையன் ஸ்கூல்ல ஜாயின் பண்றான்னா, அவன் ஃபேமிலி நிலைமைல இருந்து எல்லா விவரமும் வாத்திகளுக்கு அத்துப்படியா இருக்கும். பசங்க ஸ்கூலுக்கு வர்றது பெற்றோர் பொறுப்பு மட்டுமில்லை, ஆசிரியர்களுக்கும் அதுல பங்கு இருக்குன்னு நினைக்கிற நல்ல மனுசங்க அவங்க.
காலையில ஸ்கூல் ஆரம்பிச்சு அரை மணி நேரம் கழிச்சு நல்லாப் படிக்கிற/திட காத்திரமான பசங்களை ஊருக்குள்ள அனுப்புவாங்க. அவங்க வேலை, அன்னிக்கு லீவு போட்ட பசங்களை தேடிப் பிடிச்சு, ஸ்கூலுக்குக் கொண்டு வர்றது தான்..அந்த பசங்களுக்குத் தான் ஸ்கூல் போலீஸ்னு பட்டப்பேரு..(பன்னி பிடிக்கிற கூட்டம்னும் ஊர்ல சிலபேர் சொல்வாங்க!)
நான் நல்லாப் படிக்கிற பையன்கிறதாலயும், பார்க்கிறதுக்கு மாநிற ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ மாதிரி இருப்பேன்ங்கிறதாலயும் என்னையும் ஸ்கூல் போலீஸ் ஆக்கிட்டாங்க. (அதுல நைனாக்கு தனிப்பெருமை.) அன்னிக்கு யார் யார் லீவுங்கிற லிஸ்ட்டோட ஊருக்குள்ள போவோம். பெரும்பாலும் லீவு போட்டவங்க வயித்துவலின்னு தான் சொல்வாங்க. ஏன்னா காய்ச்சல்னு சொன்னா, தொட்டு கண்டுபிடிச்சிடுவோம்ல. வயித்துவலின்னாலும் டாக்டர் மாதிரி வயத்தை அமுக்கிப் பார்த்துட்டு ‘ஆமால்ல..கல்லு மாதிரில்ல இருக்கு..என்னத்தை முழுங்குனலே?’ என்று மிரட்டலாகக் கேட்டு விட்டு வருவோம்.
ஸ்கூல் போலீஸாய் இருப்பதில் சிக்கல் என்னவென்றால், எப்போதும் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்கும் எப்போதாவது ஆபத்து வருவதுண்டு. எங்கள் சத்துணவு டீச்சர்க்கு பாடம் எடுக்கிற டீச்சராக ஆக வேண்டும் என்று ஆசை. அது முடியாமல் போனதால் அப்பப்போ நாலாங்கிளாஸ் பசங்களை உட்கார வைத்து ‘திருக்குறள்’ வகுப்பு எடுப்பார். அப்படி ஒருநாள் ‘ஒழுக்கம் விழுப்பன் தரலான்......”குறளை அவர் சொல்லிமுடிக்கவும், நான் கெக்கேபிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தேன். ஸ்கூல் போலீஸே கட்டுப்பாடு இழந்து சிரிக்கும்போது, மற்றவர்கள் சும்மா இருப்பார்களா? எல்லாப் பசங்களும் சிரிக்க, எனக்கு பட்டக்ஸ் பழுத்துவிட்டது. அதன்பின் டீச்சர் அந்தக் குறளை யாருக்குமே நடத்தியதில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் சொல்லிக்கொள்கிறேன்.
பையன் முதல்நாள் போனதுக்கே இவ்ளோ ஃபீலிங்ஸ் வருதே..அப்போ இன்னும் நாளாக நாளாக என்னெல்லாம் வரப்போகுதோன்னு எனக்கே பயமா இருக்கு!!!
பையன் முதல்நாள் போனதுக்கே இவ்ளோ ஃபீலிங்ஸ் வருதே..அப்போ இன்னும் நாளாக நாளாக என்னெல்லாம் வரப்போகுதோன்னு எனக்கே பயமா இருக்கு!!!
நான் நல்லாப் படிக்கிற பையன்கிறதாலயும், பார்க்கிறதுக்கு மாநிற ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ மாதிரி இருப்பேன்ங்கிறதாலயும் என்னையும் ஸ்கூல் போலீஸ் ஆக்கிட்டாங்க.///
ReplyDeleteநல்லா படிப்பவன் அப்படின்னு நீங்க சொல்றதுக்காக ஸ்கூல் போலீஸ் கதையை உள்ளார சொருகியிருக்கிங்க.
பையன் முதல்நாள் போனதுக்கே இவ்ளோ ஃபீலிங்ஸ் வருதே..அப்போ இன்னும் நாளாக நாளாக என்னெல்லாம் வரப்போகுதோன்னு எனக்கே பயமா இருக்கு!!!///
ReplyDeleteஆமா பயம் இருக்கும்ல...
பையனும் பிளாக் ஸ்டார்ட் பண்ணி "நானா யோசிச்சேன்ல" பத்மினி ரசிகர் மன்றத்தை கண்ட்டிநியு செஞ்சா என்ன பண்றது???
//மாநிற ‘கருப்பு எம்.ஜி.ஆர்’///
ReplyDeleteஇல்லையே! நான் பாத்தனே! சின்ன வயதில கருப்பு எம்ஜியார் மாதிரி அவ்ளோ பயங்கரமாவா இருந்தீங்க? :-)
//வீட்டுல இருந்து ஸ்கூல் வரைக்கும் அம்மா ஒரு குச்சியால அடிச்சுக்கிட்டே கொண்டு போய் விட்டாங்க//
ReplyDeleteஇது செம்ம காமெடியா இருக்கே! :-)
//அப்படி ஒருநாள் ‘ஒழுக்கம் விழுப்பன் தரலான்......”குறளை அவர் சொல்லிமுடிக்கவும், நான் கெக்கேபிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தேன்.//
ReplyDeleteவொய்? வொய்ணே?? வொய்??? புரியல!!!
இரவு வணக்கம்,செங்கோவி!//// ஏறக்குறைய நம்மூரு மதிப்புக்கு மாசம் 5000 ரூபாய் கொடுத்து, ஒரு வீட்டுக்கு விளையாட அனுப்புறோம்..!////அதுக்கும் பின்னாடி மாட்டுற பேக்கு(BAG) கேட்டிருப்பாரே?ஹ!ஹ!ஹா!!!!!
ReplyDeleteஜீ... said... [Reply]
ReplyDelete//அப்படி ஒருநாள் ‘ஒழுக்கம் விழுப்பன் தரலான்......”குறளை அவர் சொல்லிமுடிக்கவும், நான் கெக்கேபிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தேன்.//
வொய்? வொய்ணே?? வொய்??? புரியல!!!///ஹையோ,ஹையோ!!!என்ன ஜி,இம்புட்டு நேரம் செங்கோவி ராமர் கதையா சொன்னார்?ஒழுக்கம்..................ஹி!ஹி!ஹி!!!!!
//அப்பேப்பட்ட வம்சத்துல வந்த பயபுள்ளை, ஸ்கூலுக்குப் போவணும்னு அழுதுட்டாம்யா///
ReplyDeleteதங்கமணிக்கா கிட்ட, பையன் அப்பாகூட சேர்றத கொஞ்சம் குறைக்க சொல்லனும்..
//பையன் முதல்நாள் போனதுக்கே இவ்ளோ ஃபீலிங்ஸ் வருதே..அப்போ இன்னும் நாளாக நாளாக என்னெல்லாம் வரப்போகுதோன்னு எனக்கே பயமா இருக்கு!!!///
ReplyDeleteபேசாம, நீங்களும் மாப்புள கூடவே இஸ்கோலுக்கு போயிருங்கண்ணே... உங்களுக்கும் எதாவது தெரிஞ்சிகிட்ட மாதிரி இருக்கும்...
மகனை பள்ளி அனுப்பி விட்டு தாங்களும் தங்கள் வம்சமும் கதையைச் சொல்லி சிலிப்பார்க்கிவிட்டீங்க.
ReplyDeleteஊர்ஸ் ஸ்கூல்ல எல்லாம் படிச்சிருகீங்களா சொல்லவே இல்லை? :)
ReplyDeleteபள்ளிக் கூடம் போகலாமா ராத்திரி
ReplyDeleteபள்ளிக் கூடம் போகலாமா
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச சுத்தவிட்டு பார்க்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
அடி மைனாவே மைனாவே வா
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச சுத்தவிட்டு பார்க்கலாமா
மனதில் இருக்கு புது கணக்கு
சொன்ன புரியும் அது உனக்கு
கூட்டல் கழித்தல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு
இருக்கிற நாள இருவரும் சேர்ந்து
இனைப் பிரியாம கழிச்சிட வேண்டும்
ஏதோ ஏதோ சொல்லத் தோணும்
அட ஒன்னோடு ஒன்னான மூணாகும் ஹோய்
அது இப்போதும் எப்போதும் தேனாகும் ஹோய்
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
அட ராசாவே ராசாவே வா
பள்ளிக் கூடம் போகலாமா ம் ம்
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
தனியா படிச்ச ஏறவில்லை
துணை நீ இருந்த போதும் புள்ள
இனிப்ப இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க விளக்கெதற்கு
முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம்
இதுதான் காதல் எனும் பாடம்
இது நாளெல்லாம் படித்தாலும்
அலுக்காது ஹோய்
அட நமக்கிந்த புதுப் பாடம்
சலிக்காதம்மா..
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மணச சுத்தவிட்டு பார்க்கலாமா..
பன்னி பிடிக்கிற கூட்டம்னும் ஊர்ல சிலபேர் சொல்வாங்க!///
ReplyDeleteபோச்சு பிரபல பதிவரை அவமான படுத்திட்டீங்க
பையன் முதல்நாள் போனதுக்கே இவ்ளோ ஃபீலிங்ஸ் வருதே..அப்போ இன்னும் நாளாக நாளாக என்னெல்லாம் வரப்போகுதோன்னு எனக்கே பயமா இருக்கு!!!//
ReplyDeleteCongrats
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]
ReplyDeleteபள்ளிக் கூடம் போகலாமா ராத்திரி
பள்ளிக் கூடம் போகலாமா
பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா//
புதுசாக் கல்யாணம் ஆனவங்ககிட்ட இதாம்யா பிரச்சினை!
பையன் சூப்பரா இருக்கான்.சுத்தி போடுங்க.பையன் சூப்பரா படிக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம்....
ReplyDelete:)))))))))
இது "அந்த" ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
ஜூனியர் செங்கோவி இவ்வளவு ஆர்வமா பள்ளிக்கு கிளம்புறத பார்த்தா.... மனது புல்லரிக்குது. வாழ்த்துக்கள் சொல்லுங்க பாஸூ. அத்தோட ஏதாவது ஜூனியர் தமன்னா, ஹன்சிகா பொண்ணுங்க பள்ளியில படிக்கிறாங்களான்னும் பார்த்துக்குங்க...!!
ReplyDeleteநானெல்லாம் பள்ளிக்கு போறத சொல்லிட்டு மாமாவின் தென்னம் தோட்டத்தை சுத்தி வந்தவனாக்கும்.....!!
கெளம்பிட்டாருய்யா அடுத்த செங்கோவியாரு.........
ReplyDelete///// பார்க்கிறதுக்கு மாநிற ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ மாதிரி இருப்பேன்ங்கிறதாலயும் ///////
ReplyDeleteக்கும்.......... (ஏற்கனவே சின்ன எம்ஜிஆரு, பெரிய எம்ஜிஆருன்னு ஆளாளுக்கு கெளம்பிட்டானுங்க, இன்னும் எத்தன எம்ஜிஆரு வர போறாங்களோ....?)
//////அப்பப்போ நாலாங்கிளாஸ் பசங்களை உட்கார வைத்து ‘திருக்குறள்’ வகுப்பு எடுப்பார். அப்படி ஒருநாள் ‘ஒழுக்கம் விழுப்பன் தரலான்......”குறளை அவர் சொல்லிமுடிக்கவும், நான் கெக்கேபிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தேன்.////////
ReplyDeleteநாலாப்புலயேவா? யோவ் நீரு ரொம்ப வில்லங்கமான ஆளுதாம்யா......
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்
வலைச்சர தள இணைப்பு : அனைவரும் பள்ளிக்கூடம் செல்லலாம் வாங்க :)