Friday, September 28, 2012

முருக வேட்டை_38

"ரவணன், அந்த மருதமலைக்குப் பின்னால் உள்ள மலைத்தொடரில் சித்தமலை என்று ஒரு பகுதி இருந்துச்சு. தெரியுமா உனக்கு?”

ம்ஹூம்..தெரியாதுஎன்றான் சரவணன்.

தெரியாது..இங்கே கோயம்புத்தூரில் இருக்கிறவங்களுக்கே தெரியாது. அப்படியிருக்கும்போது, உனக்கு எப்படித் தெரியும். அந்த சித்தமலை அடிவாரம் தான் எங்கள் பூர்வீகம். அந்த காட்டிற்குள்தான் எங்களின் குலதெய்வம் முருகன் கோவில் இருந்துச்சு. கோவில்னா..கோவில் இல்லை..ஒரு சிலை..அவ்வளவு தான். மருதமலை முருகனின் ஒரிஜினல் அது தாங்கிறது எங்களோட நம்பிக்கை. அந்த காட்டிற்குள் வர முடியாததால். வெளியே வேறு சிலை வைத்துக் கும்பிட ஆரம்பிச்சு, பிறகு அதுவே நிலைச்சிடிச்சு. ஆனால் எங்க சாமி, எங்களுக்கே மட்டுமானதா, அந்தக் காட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம இருந்துச்சு.”

இருந்துச்சா? அப்படீன்னா, இப்போ இல்லியா?’

இல்லை.அது இருந்தா நான் ஏன் இப்படி நிற்கறேன்?...முப்பது வருசத்துக்கு முன்னாடி, அந்த மலையடிவார மண்ணில் தான் எங்க குடும்பங்கள் வாழ்ந்துக்கிட்டிருந்துச்சு. எங்களுக்கு தனித்தனியா சொத்துன்னு எதுவும் கிடையாது. எல்லாமே சமூகத்துக்குப் பொதுவா வைக்கிற பழக்கம் எங்களுக்கிடையில இருந்துச்சு. குருவி சேர்க்கி மாதிரி, எங்க முன்னோர்கள் சம்பாதிச்சதெல்லாம், பணமா, நகையா எங்ககிட்ட இருந்துச்சு. எங்களுக்கு எதுக்கு அதெல்லாம்? இந்த மலையும் காடும் எங்களுக்கு இருக்க இடமும், சாப்பிட சோறும் போட்டுச்சு. அதனால எங்க சம்பாத்தியம் எல்லாமே பொதுவில் வைக்கப்படும். அத்தனையும் குலசாமிக்கு அர்ப்பணம்னு முருகனுக்கே படைச்சிருவோம். ஒவ்வொரு வருசமும் சஷ்டி அன்னிக்கு, எங்க முருகன் சிலைக்குக் கீழே புதைச்சு வைப்போம். ஏதாவது மழை, புயல் நேரத்துல மட்டும் அதை சமூகத் தலைவர் வெளில எடுத்து, எல்லாருக்கும் பிரிச்சுக்கொடுப்பார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தலைவரா இருந்தது எங்க தாத்தா முத்துச்சாமி!”
உன்னோட சர்ட்டிஃபிகேட்டை நான் பார்த்தப்போ, பழங்குடி இனம்னு போட்டிருந்துச்சு..ஆனால் அதை நான் தீர விசாரிக்காம விட்டுட்டேன். அப்புறம் எப்படி நீங்க திருப்பூர் போனீங்க?”
நாங்க எங்கே போனோம்? விரட்டி அடிக்கப்பட்டோம்

ஏன்..?”

எல்லாத்துக்கும் காரணம் நாகரீகமான படிச்ச கனவான்கள் தான்...எங்க உலகத்தில் இயற்கையே எல்லாத்தையும் கொடுத்துச்சு. எங்களுக்கு பெரிய ஆசைகள்னு எதுவும் இல்லை. சமூகத்துக்கும், கடவுளுக்கும் கட்டுப்பட்டு வாழறதே எங்க வாழ்க்கை முறை. ஆனால் உங்களோட நாகரீக வாழ்க்கைல நீங்க என்ன செய்றீங்க? வம்ச வம்சமா பணத்துக்குப் பின்னே ஓடுறீங்க? எப்படி வாழறதுன்னுகூட உங்களுக்குத் தெரியாது. ஒரு பூ மலர்வதை ரசிக்கக்கூட உங்களுக்குத் தெரியாது. கேட்டா, அது பைசா பிரயோஜனமில்லாத விஷயம்னு சொல்வீங்க..பைசா..பைசா..பைசா தான் எல்லாமே உங்களுக்கு. அப்படி, உங்களோட நாகரீகக் கூட்டத்துல இருந்து சில அதிகாரிங்க, அப்போ..30 வருசம் முன்னே எங்க சாமியைப் பத்தி எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு, காட்டுக்குள்ளே வந்தாங்க. ‘அறநிலையத்துறைன்னு சொல்லிக்கிட்டு சிலபேரு உள்ளே வந்தாங்க. அந்தக் கோவிலை அவங்க கட்டுப்பாட்டுல எடுத்துக்கப்போறதாச் சொன்னாங்க.”

அரசாங்கம் அப்படி முடிவு பண்ணி, அனுப்பி வச்சிருந்துச்சா?”

இல்லை..அப்படி முடிவு எடுக்கலாமான்னு சோதனை பண்ணத்தான் வந்தாங்க. இந்தக் கோவில்ல இருக்கிற நகைகள் பத்தி, அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அது வந்த அப்புறமா, அதுக்கு முன்னாலயே தெரியுமான்னு எங்களுக்குத் தெரியலை. அதைவிடவும் முக்கியமா, அந்தச் சிலையைப் பார்த்ததுமே அவங்களுக்கு ஆசை வந்திடுச்சு

அந்தச் சிலையில அப்படி என்ன விசேஷம்?”

அது முருகர் சிலை இல்லை..அது ஒரு பெரிய வேல்..தங்கத்தால் ஆன வேல்!”

என்ன..தங்க வேலா?” ஒரே நேரத்தில் சரவணனும் கவிதாவும் கேட்டனர்.

ஆமாம்..அந்த வேல் தான் எங்க சாமி. அது பல வம்ச உழைப்பில் எங்க முன்னோர் செஞ்ச சிலை. அந்த அதிகாரிங்க, அப்போ மந்திரியா இருந்தவர்கிட்டப் போய் இதுபத்திச் சொல்ல, அந்த அரசியல்வாதியும் இதுல தீவிரமா இறங்கிட்டார். நாங்க வசிச்ச இடம் காட்டுக்கு வெளில இருந்துச்சு. இவங்களுக்கு அதுவே வசதியாப் போயிடுச்சு. ”

"ஆமா..இதுபத்தி நானும் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கேன்என்றான் சரவணன்.

ஒருநாள் எங்க சமூகம் சாமி கும்பிடுவோம்னு போனப்போ, அங்கே எங்க சாமியும் இல்லை, அதுக்குக் கீழே இருந்த எங்க சேமிப்பும் இல்லை.” என்றான் பாண்டியன்.


(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

  1. அப்பவே கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டாங்க!

    ReplyDelete
  2. சாமி சிலையில் கைவைக்க இந்த அற்ப மானிடர்கள் பதவி என்றும் அதிகாரம் என்றும் செய்யும் செயல் அந்த நேரத்திலும் வந்துவிட்டதே!ம்ம் தொடருங்கள்§

    ReplyDelete
  3. கதை முடியும் நேரம் வந்துடுச்சு........

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.