Saturday, September 15, 2012

முருக வேட்டை_35


கிலா ஆபீசில் நுழைந்ததும் செந்தில் பாண்டியன் கேபினுக்கு ஃபோன் செய்தாள். அருகில் இருந்தவர் ஃபோனை எடுத்து “மேம், பாண்டியன் இன்னும் வரலை” என்றார்.

நேற்று கவிதா வந்து MARS என்பதும் 1024 என்பதும் முருகன் தான் என்று உறுதியாகச் சொல்லியது ஞாபகம் வந்தது. விஸ்வநாதன் ‘முத்துராமன் ஒருமுறை தவறு செய்ததாக’ சொல்லியதும் உறுத்தியது. பொதுவாக சிபிசிஐடி வழக்குகள் பாதியில் நிற்பதில்லை. நியாயமாக விசாரணை நடத்தி, கேஸை க்ளோஸ் பண்ணுவது வழக்கம். எனவே பாதியில் க்ளோஸ் செய்யப்பட்ட கேஸ்களை ஆராய்ந்தால், தான் தேடுவது கிடைக்கும் என்று அகிலா நம்பினாள்.

ரங்கராஜன் அகிலாவின் அறைக்கு வந்து “குட் மார்னிங் மேம்” என்றார்.

“மார்னிங் சார்” என்றாள் அகிலா. வயதில் பெரியவர் என்பதாலும், முத்துராமன் காலத்தில் இருந்தே பணியில் இருப்பவர் என்பதாலும் அகிலா அவரை மரியாதையுடன் அழைப்பது வழக்கம்.

“செந்தில் பாண்டியனுக்கு ஃபீவராம்..இன்னும் இரண்டு நாளைக்கு வர முடியாதுன்னு சொன்னார்”

“ஓ..ஓகே, நல்லா ரெஸ்ட் எடுத்திட்டே வரச்சொல்லுங்க. முத்துராமன் சார் கேஸ்ல, முக்கியமான சில விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுவோம்னு நினைச்சேன்...ஓகே, நீங்க ஒன்னு பண்ணுங்க சார்..முத்துராமன் சார் பீரியட்ல ப்ராப்பரா விசாரணை முடிஞ்சு க்ளோஸ் ஆகாத கேஸ்களின் டீடெய்ல் வேணும். அந்த ஃபைல்ஸை கொண்டு வர்றீங்களா?”

“ஓகே.. ஆனால் அதையெல்லாம் ஏற்கனவே பாண்டியன் பார்த்திட்டாரு மேம்” என்றார் ரங்கரான்.

”ஓ..சரி பரவாயில்லை..இப்போ சில க்ளூ கிடைச்சிருக்கு..கொண்டு வாங்க பார்ப்போம்”

”ஓகே..மேம்” என்று சொல்லிவிட்டுச் சென்ற ரங்கராஜன், அடுத்த அரை மணிநேரத்தில் மூன்று பெரிய ஃபைல்களுடன் வந்து சேர்ந்தார்.

“நீங்களும் உட்காருங்க சார்..அந்த நேரத்துல நீங்களும்கூட இருந்திருப்பீங்க இல்லியா? சோ, உங்களுக்கு இதுபத்தித் தெரிஞ்சதையும் நீங்க சொன்னா, ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்”

“ஓகே மேம்..அப்போ நான் டாக்குமெண்ட் டிபார்ட்மெண்ட்ல ஜூனியர்..டீடெய்லா எதுவும் எனக்குத் தெரியாது. தெரிஞ்சதைச் சொல்றேன்”  இருவரும் அமர்ந்து ஃபைல்களைப் புரட்டத் தொடங்கினர்.

“அவர் பீரியட்ல மொத்தம் பதிமூணு கேஸ் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கு. அது எல்லாமே இந்த ஃபைல்ஸ்ல இருக்கு மேம்..இது முதல் கேஸ்..ஒரு காலேஜ் பொண்ணு காணாமல் போன கேஸ்..அப்புறம் விசாரணைல டெட்பாடி கிடக்கிற இடத்தையும் கண்டுபிடிச்சாங்க.”

“அப்புறம் ஏன் பாதியில விசாரணை நின்னுடுச்சு?”

“அந்தப் பொண்ணைக் கொலை பண்ணது, அவளை ஒன்சைடா லவ் பண்ண ஒரு ஸ்டூடண்ட் தான்..போலீஸ் நெருங்குறது தெரிஞ்சு சூசைடு பண்ணிக்கிட்டான்..குற்றவாளியே இறந்தப்புறம், விசாரணைக்கு அவசியம் இல்லாமப் போச்சு. சோ, அதனால, கேஸை அதோட முடிச்சுக்கிட்டோம்.”

“அதனாக அந்தப் பொண்ணோட சைடுல யாராவது கோபப்பட்டிருப்பாங்களா? இல்லே, அந்தப் பையன் சைடுல யாராவது கோபப்பட்டு சாரை கொலை பண்ணியிருக்கலாமோ?” என்று கேட்டபடியே யோசித்தாள் கவிதா.

“பொண்ணு சைடு சந்தோசப்படத்தான் செஞ்சாங்க. அரெஸ்ட் பண்ணியிருந்தாக்கூட அவன் தப்பிச்சிருப்பான்..பையன் சைடு பத்தித் தெரியலை மேம்”

”அப்போ பாண்டியன் வரவும் அந்த பையன் சைடை விசாரிக்கச் சொல்வோம்..அந்தப் பையன் பேரு முருகனா?”

“இல்லை மேம்..அவன் பேரு..” ஃபைலைப் புரட்டிவிட்டு “ஜெயக்குமார் மேம்” என்றார் ரங்கராஜன்.

அகிலா ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்கியவாறு “சரி..முதல்ல க்ளோஸ் ஆகாத கேஸ்கள்ல முருகன்னு யாராவது பாதிக்கப்பட்டவங்க சைடுலயோ அல்லது குற்றவாளி சைடுலயோ இருக்காங்களான்னு பாருங்களேன்” என்றாள்.

ரங்கராஜன் ஏதோ யோசனையுடன் அகிலாவைப் பார்த்தபடியே ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.

“என்ன சார்”

“மேம்..முருகன்னு ஏன் பர்டிக்குலராத் தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“ஓ..ஷ்யூர்..சார் இறந்தப்போ சுவர்ல MARS-1024ன்னு எழுதியிருந்துச்சு இல்லியா?..அது என்னன்னு ஓரளவு யூகிச்சுட்டோம். ‘முருகன்’ன்னு தான் அது மீன் பண்ணுது”

ரங்கராஜன் முகம் அஷ்டகோணலானது.

“மேம்..அப்போ நீங்க தேடறது அந்த சித்தர் மலை கேஸா இருக்கலாம் மேம்.”

“ஏன்..அதுல முருகன்னு ஒருத்தர் உண்டா?”

“ஆமாம் மேம்”

”பாதிக்கப்பட்டவங்க சைடுலயா? க்ரிமினல் சைடுலயா?”

“பாதிக்கப்பட்டவங்க சைடு தான் மேம்”

அகிலா ஆர்வத்துடன் “யார் அது..இப்போ எங்கே இருப்பான்னு தெரியுமா?” என்றாள்.

“அது நம்ம கடவுள் முருகன் தான் மேம்.”   


(தொடரும்)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

 1. என்ன செகோவி,ஒரே நாளில் இரண்டு அத்தியாயங்கள்? கதை நல்ல சூடு பிடிக்கிறது. தொடுருங்கள் . ஆவலோடு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. என்னது யார் தான் mars நெருங்கிவிட்டீர்கள் .கொலையாளி யார்ர்ர்ர்ர்ர்ர்ர்!:)))
  தொடர்கின்றேன் .

  ReplyDelete
 3. மருதமலை மாமானியே பாடல் ஞாபகம் வருகின்றது கதையைப்படிக்கும் போது.ம்ம்ம்

  ReplyDelete
 4. விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது! ஆர்வத்தை தூண்டுகிறது! வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. மீண்டும் தொடங்கின இடத்துக்கேவா?????????????????ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.