அதற்குள் அவர்களை நெருங்கிவிட்ட கிழவி, கவிதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘தாயீ...வந்திட்டயா தாயீ?.......வந்திட்டியா!” என்றாள் கண்ணீர் மல்க!
அந்தக் கிழவர் அவர்களை நெருங்கி, கிழவியின் பிடியில் இருந்து கவிதாவை விடுவித்தார்.
“போ..போ லூஸு..போ” என்று அதட்டி அந்தக் கிழவியை விரட்டினார்.
அந்தக் கிழவி “வரலியா? இன்னும் வரலியா?” என்று கத்தியபடியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.
“மன்னிச்சிருங்கம்மா..அது ஒரு லூசு..எம்பொஞ்சாதி தான்..யாரோன்னு நினைச்சு வந்திருச்சு. நீங்க போங்க” என்றார் அவர். அதற்குள் அந்த சர்வர் இவர்களை நோக்கி நடந்து வருவதை கவிதா பார்த்தாள்.
“வாங்க..போவோம்” என்று சொல்லிவிட்டு, பஸ்ஸை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சரவணனும் பின்னாலேயே சென்றான்.
மலைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி, மேலே கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர். பின் கோவிலுக்கு வெளியே அமர்ந்தார்கள்.
“என்னங்க இது..இன்னிக்கு ஒன்னுமே சரியில்லை..நம்மளை டென்சன் ஆக்குற மாதிரியே எல்லாம் நடக்குது” என்றாள் கவிதா சலிப்புடன்.
“விடு..இப்போ என்ன ஆகிடுச்சு..ஏதோ கொஞ்சம் மனநிலை சரியில்லாத பொம்பளை..அதுவும் பாவம் தானே?” என்றான் சரவணன்.
“சரி..போனதடவை செந்தில் பாண்டியன்கூட வந்தப்போ என்ன பண்ணோம்னு யோசிப்போம்.” என்றாள் கவிதா.
“
ம்..சும்மா இருந்த நம்மளை வலுக்கட்டாயமா மருதமலைக்குக் கூட்டிவந்தான்.
அவனோட சித்தப்பா வீட்ல தங்கினோம். ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிட்டாங்க. அப்புறம் அவன்கூட கிளம்பி மருதமலை வந்தோம். இன்னிக்குப் பார்த்த கிழவர், கிழவி அப்புறம் வேற சில பிச்சைக்காரங்களுக்கு அவன் காசு போட்டான். நாம மேல போய் சாமி கும்பிட்டோம். திரும்ப, அவன் சித்தப்பா வீட்டுக்குப் போயிட்டோம்..இதில் என்ன க்ளூ இருக்கு?”
"எனக்கும் ஒன்னும் தெரியலை” என்றாள் கவிதா.
“இங்க வந்ததே வேஸ்ட்டோ?”
“அங்கே இருக்கும்போது, இங்கே உடனே போகணும்னு தோணுச்சு. இப்போ நட்டாத்துல விட்ட மாதிரி இருக்கு. ஏங்க, நாம செந்தில் பாண்டியன் சித்தப்பா வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா?”
“அங்கே போனா, நாம இங்கே வந்தது செந்தில் பாண்டியனுக்குத் தெரிஞ்சிடுமே?” என்று சொல்லிவிட்டு யோசித்தான் சரவணன்.
“ தெரிஞ்சா என்ன? அவர்தானே சவால் விட்டார், பிடிச்சுக்காட்டுன்னு? அப்போ, நாம விசாரிக்க இங்கே வரத்தானே செய்வோம்?”
“அதுசரி, ஆனால் இப்போ நான் டூட்டில இல்லையே?”
“அது உங்களுக்கும் எனக்கும் தெரியும். செந்தில் பாண்டியன் சித்தப்பாவுக்குத் தெரியுமா?”
“தெரிஞ்சிருக்கலாம்..சரி, அப்போ நான் மட்டும் போய்ப் பார்க்கறேன்”
“இல்லையில்லை..நானும் வருவேன்..அங்கே ஏதாவது க்ளூ கிடைக்கலாம்..நீங்க ஒருவேளை மிஸ் பண்ணாலும், நான் நோட் பண்ணிடுவேன்ல?” என்றாள்.
“ம்...பேசாம நீ சிபிசிஐடி வேலையில ஜாயின் பண்ணிடேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் சரவணன்.
ஆர்.எஸ்.புரத்தில் இறங்கி, ஆட்டோ பிடித்து பாண்டியனின் சித்தப்பா ஃப்ளாட் இருக்கும் அப்பார்ட்மெண்ட்டின் முன் கவிதாவும், சரவணனும் இறங்கியபோது, நன்றாக இருட்டியிருந்தது.
“சரி, வா,,போவோம்” என்று சொல்லிவிட்டு, சரவணன் அப்பார்ட்மெண்ட்டிற்குள் நுழைந்தான். வழிமறித்த வாட்ச் மேனிடம் விவரம் சொல்லிவிட்டு, ஃபர்ட்ஸ் ஃப்ளோர் நோக்கி நடந்தார்கள்.
பாண்டியன் சித்தப்பாவின் வீட்டின் முன் நின்றுகொண்டு, காலிங் பெல்லை அடிக்க, வேறு யாரோ ஒருவர் திறந்தார்.
”யார் வேணும்?” என்றார்.
“ரங்கராஜன்”
“ரங்கராஜனா? அப்படி யாரும் இல்லியே?”என்றார் குழப்பத்துடன்.
“ஏற்கனவே இங்கே வந்திருக்கிறோம்..முன்னாடி வேற ஒருத்தங்க இருந்தாங்களே?”என்று கேட்டாள் கவிதா.
“ஓ..ஆனா அது ரங்கராஜன் இல்லியே..சுந்தர்ராஜன் ஆச்சே?”
“ஆங்..ஆமா..அவர் தான்..அவர் இப்போ இங்க இல்லியா?”
அவர் சந்தேகத்துடன் இருவரையும் பார்த்தார்.
சரவணன் விளக்க ஆரம்பித்தான். “அவர் அண்ணன் பையன்கூட போலீஸ்ல இருக்காரே?”
“ஓ..பாண்டியன்..பாண்டியன் சித்தப்பாவைக் கேட்கறீங்களா?”என்று கேட்டார் அவர்.
“ஆமாங்க..கோயம்புத்தூர்க்கு வேற வேலையா வந்தோம். அப்படியே அவரையும் பார்த்திட்டுப் போகலாம்னு...”
“பாண்டியன் சித்தப்பா இப்போ இங்கே இல்லீங்க..அனுவாவி பக்கம் போயிட்டாரு.”
“ஓ..அந்த அட்ரஸ் இருக்கா?”
”இல்லியே..நீங்க ஒன்னு பண்ணுங்க..இதுக்கு பேரலல ரெண்டு தெரு தாண்டி, 6த் க்ராஸ் கட் வரும்..அங்கே பாண்டியனோட அப்பார்ட்மெண்ட் ஃப்ளாட் இருக்கு. வாடகைக்கு விடணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. அங்கே போய்க் கேட்டா, ஒருவேளை அட்ரஸ் கிடைக்கலாம்”
“பாண்டியனோட ஃப்ளாட்டா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் சரவணன்.
“ஆமா..அவர் அதை வாங்கி ஆறு மாசம் ஆச்சே..அதை வாங்கினப்போ, யதேச்சையா அவரை நான் பார்த்தேன். அப்போ சொன்னார்” என்றார்.
“சரி, வாங்க..அங்கே போய்ப் பார்க்கலாம்” என்றாள் கவிதா.
சரவணன் “சார், அங்கே வேற ஏதவது லேண்ட் மார்க் இருக்கா?” என்று கேட்டான்.
“அந்தத் தெருவில் இது ஒன்னு தான் அப்பார்ட்மெண்ட்...பில்டிங் நம்பர் தெரியலை..பில்டிங்ல மார்ஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ்-ன்னு போட்டிருக்கும்”
சரவணனும் கவிதாவும் அதிர்ந்தார்கள்.
“மார்ஸா?” என்றான் சரவணன், சுதாரித்துக்கொண்டு.
“ஆமாங்க”
“M..A..R..S--ஆ?”
“மார்ஸுன்னா அதானுங்களே ஸ்பெல்லிங்” என்றார் அவர் பரிதாபமாக.
(தொடரும்)
இரவு வணக்கம்,செங்கோவி!அருமையாக நகர்த்திச் செல்கிறீர்கள்,வாழ்த்துக்கள்!!!!!////“M..A..R..S--ஆ?”“மார்ஸுன்னா அதானுங்களே ஸ்பெல்லிங்”/////ஹ!ஹ!ஹா!!!!!!
ReplyDeleteஅண்ணே, இன்னும் எத்தன பாகம் வரும்? வர வர டென்சன் தாங்கல. இந்த படத்துக்கு எல்லாம் வீ ஐ பி பிரீமியர் போடுற மாதிரி மொத்த கதையையும் முன்னாடியே எங்களுக்கு படிக்க குடுக்க மாட்டீங்களா?
ReplyDeleteDr. Butti Paul said...
ReplyDeleteஅண்ணே, இன்னும் எத்தன பாகம் வரும்? வர வர டென்சன் தாங்கல. இந்த படத்துக்கு எல்லாம் வீ ஐ பி பிரீமியர் போடுற மாதிரி மொத்த கதையையும் முன்னாடியே எங்களுக்கு படிக்க குடுக்க மாட்டீங்களா?/////சீரியலெல்லாம் ஒண்ணுமே சொல்லாம பாப்பீங்க,இதுக்கு மட்டும் முன்கதைச் சுருக்கம் வேணுமோ?ஹ!ஹ!ஹா!!!!!!
Yoga.S. said...
ReplyDeleteDr. Butti Paul said...
அண்ணே, இன்னும் எத்தன பாகம் வரும்? வர வர டென்சன் தாங்கல. இந்த படத்துக்கு எல்லாம் வீ ஐ பி பிரீமியர் போடுற மாதிரி மொத்த கதையையும் முன்னாடியே எங்களுக்கு படிக்க குடுக்க மாட்டீங்களா?/////சீரியலெல்லாம் ஒண்ணுமே சொல்லாம பாப்பீங்க,இதுக்கு மட்டும் முன்கதைச் சுருக்கம் வேணுமோ?ஹ!ஹ!ஹா!!!!!!////
சீரியல் பாக்கிற பழக்கமே இல்ல ஐயா! ஒரு படம் பாக்குறப்போ கூட ஸ்க்ரோல் பார்ல இன்னும் எத்தன நிமிஷம் மிச்சமிருக்குன்னு பார்குற வழக்கம் இருக்கு. முகத்தை சுருக்கம் தேவையில்ல, பின்கதை சுருக்கம்தான் அவசியம்.
விடுபட்ட எல்லா பாகமும் முடிச்சிட்டு இப்பதான் வர்ரேன்.......
ReplyDeleteம்ம்..
ReplyDeleteநெருங்கிப் பொயிட்டிங்க போல...
அடுத்தபகுதி எப்போ? என்ற ஆர்வத்தை தூண்டுகிறது! சூப்பர்!
ReplyDelete@Dr. Butti Paul இன்னும் 8 பாகங்களைத் தாண்டாது புட்டிப்பால்!
ReplyDeleteதிகிலுடன் தீராத தேடலுடன் தொடர்கின்றது ஆவல் அதிகம்.
ReplyDelete