Sunday, September 9, 2012

முருக வேட்டை_33



கோயம்புத்தூர் ஜங்சனில் இறங்கியதும், “போனதடவையை விட இப்போ கோயம்புத்தூர் ரொம்ப ஹாட்டாத் தெரியுதுல்ல?” என்றாள் கவிதா.

“ஆமா..எல்லா ஊர்லயும் இதே பிரச்சினை தான். க்ளோபல் வார்மிங்” என்றான் சரவணன்.
அவர்களை அழைத்துச் செல்ல ரெசிடென்ஸி ஹோட்டலில் இருந்து கார் வந்திருந்தது. காரில் ஹோட்டலுக்குக் கிளம்பினார்கள்.

கவிதாவிற்கு சென்றமுறை வந்தபோது, செந்தில் பாண்டியன் சித்தப்பா வீட்டில் தங்கியது ஞாபகம் வந்தது.

“பாண்டியன் சித்தப்பா வீடு எந்த ஏரியாங்க?” என்று கவிதா கேட்டாள்.

“அது ஆர்.எஸ்.புரம்” என்றான் சரவணன்.

சிறுது நேரத்திலேயே ஹோட்டல் வந்துவிட, ரூமிற்குச் சென்று ரெஸ்ட் எடுத்தார்கள்.

மாலையில் மருதமலைக்குக் கிளம்பினார்கள்.

”ஏங்க, நாம பஸ்ல போய் ரொம்ப நாளாச்சு. பைக்...இல்லேன்னா கார் தான்..இங்க ஊரும் நல்லா இருக்கும். பஸ்லயே போவோமே?’ என்று கேட்டாள் கவிதா.

கர்ப்ப நேரத்தில் அவர்களது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று யாரோ அறிவுரை சொன்னது சரவணனுக்கு ஞாபகம் வந்தது. எனவே காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் சென்று, மருதமலை செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்ஸில் அதிகக் கூட்டம் இல்லை. பஸ் ஆர்.எஸ்.புரம் தாண்டி, மருதமலை நோக்கிப் பயணித்தது.

வடவள்ளி பஸ் ஸ்டாண்டில் சில பெண்களும் ஒரு ஆணும் ஏறினார்கள். பஸ்ஸில் ஏறியதும், அவன் கவிதாவையே உற்றுப்பார்த்தான். பிறகு காலியாக இருந்த ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டவன், கொஞ்ச நேரத்தில் மீண்டும் கவிதாவை திரும்பிப் பார்த்தான்.

கவிதா அப்போது தான் அவனைக் கவனித்தாள். அவன் திரும்பிகொண்டான். 30 வயது தாண்டியவனாக இருந்தான்.

பஸ் அடுத்த ஸ்டாப்பில் நிற்கவும் அவன் மீண்டும் திரும்பி கவிதாவைப் பார்த்தான். கவிதாவிற்குக் கோபம் வந்தது.

”ஏங்க, அங்கே உட்கார்ந்திருக்கிறவன் என்னையே பார்க்கிறான்” என்றாள்.

“யாரு? அவனா? ப்ச்..அவன் ஏன் உன்னை பார்க்கப் போறான்? நீயோ கன்சீவ் ஆகியிருக்கே..கன்சீவ் ஆன லேடியை யாராவது பார்ப்பாங்களா?” என்றான் சரவணன்.

“பார்க்கிறானே! அதனால தானே ஆத்திரமா வருது” என்றாள். பஸ் பாரதியார் யுனிவர்சிட்டியில் நிற்க, மீண்டும் அவன் கவிதாவைப் பார்த்தான். சரவணனும் பார்ப்பதைக் கண்டு, உடனே திரும்பிக்கொண்டான்.

“நான் சொன்னேன்ல, பார்த்தீங்களா?” என்றாள்.

“பொறு..இப்போ என்னை பார்த்திட்டான்ல..இனிமே பார்க்க மாட்டான்னு நினைக்கிறேன்”

பஸ் மருதமலை அடிவாரத்தில் நின்றது. இறங்கும்போதும், அவன் கவிதாவைப் பார்த்துவிட்டே இறங்கினான்.

கவிதா கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

பஸ்ஸில் இருந்து எல்லாக் கூட்டமும் இறங்கியபின், கவிதாவும் சரவணனும் இறங்கினர். மலையடிவாரத்தில் இருக்கும் கடைத்தெருவை நோக்கி நடக்கத் துவங்கினர்.

வழியில் அமர்ந்திருந்த ஒரு வயதான பிச்சைக்காரர் இவர்களைக் கண்டதும் எழுந்து நின்றார். சரவணன் புரிந்துகொண்டவனாய், சட்டைப்பையிலி இருந்து ஐந்து ரூபாயினை அவர் தட்டில் போட்டான். அவர் எதுவும் சொல்லாமல், அமைதியாக திரும்ப உட்கார்ந்து கொண்டார். சென்றமுறை பாண்டியன் இதே பிச்சைக்காரருக்கும், மற்றவர்களுக்கும் ஆளுக்கு நூறு ரூபாய் போட்டது ஞாபகம் வந்தது.

கடைத்தெருவை கிராஸ் செய்தபோது, பஸ்ஸில் பார்த்தவன் ஒரு ஹோட்டலில் நிற்பது தெரிந்தது. கடைக்கு வந்திருந்த ஒரு ஜோடிக்கு இலையைப் போட்டுக்கொண்டிருந்தான். சர்வராக வேலை செய்கிறான் போல என்று கவிதா நினைத்துக்கொண்டாள்.

மலைக்குச் செல்லும் பஸ் நிற்கும் இடத்தை நோக்கித் திரும்பினர். அப்போது மலையேறும் படிக்கட்டு வாசலில் உட்கார்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி, திடீரென எழுந்து இவர்களை நோக்கி ஓடிவர ஆரம்பித்தாள்.

அனைவரும் அந்தக் கிழவியைப் பார்க்க, கவிதாவும் திரும்பிப் பார்த்தாள். அவள் ஓடிவருவதைப் பார்த்த பிச்சைக்காரரும் இவர்களை நோக்கி ஓடிவந்தார்.

 அதற்குள் அவர்களை நெருங்கிவிட்ட கிழவி, கவிதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘தாயீ...வந்திட்டயா தாயீ?.......வந்திட்டியா!” என்றாள் கண்ணீர் மல்க!

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

9 comments:

  1. சஸ்பென்ஸ் வச்சிட்டிங்களே தல...
    அருமையா போகுது உங்க வேட்டை...

    ReplyDelete
  2. என்ன சொல்ல?சே.குமார் முந்திக்கிட்டார்!ராஜேஷ்குமார் ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை!!!!

    ReplyDelete
  3. வேட்டை வேகமேடுத்துவிட்டது போலயே!

    ReplyDelete
  4. ம்ம் தாயி!ம்ம் சஸ்பென்ஸ்! நல
    மா செங்கோவி ஐயா!ம்ம்

    ReplyDelete
  5. கடைத்தெருவை கிராஸ் செய்தபோது, பஸ்ஸில் பார்த்தவன் ஒரு ஹோட்டலில் நிற்பது தெரிந்தது. கடைக்கு வந்திருந்த ஒரு ஜோடிக்கு இலையைப் போட்டுக்கொண்டிருந்தான். சர்வராக வேலை செய்கிறான் போல என்று கவிதா நினைத்துக்கொண்டாள்.
    //ம்ம்ம்

    ReplyDelete
  6. ஏங்க, அங்கே உட்கார்ந்திருக்கிறவன் என்னையே பார்க்கிறான்” என்றாள்.//ஹீ சந்தேக பிராணி!ம்ம்ம்

    ReplyDelete
  7. கமேண்டக் காணோம்!

    ReplyDelete
  8. மிகவும் இண்ட்ரஸ்டாக இருக்கிறது! விறுவிறுப்புக்கு குறைவில்லை! தொடருங்கள் தொடர்கிறேன்!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
  9. மிகவும் சுவரஷ்யமாக இருக்கிறது...இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.