Saturday, September 8, 2012

முருக வேட்டை_32


விதா கென்யாவில் கூகியிடன் நடந்த உரையாடலை சுருக்கமாக அகிலாவிடம் சொன்னாள்.

“அப்போ MARS-ங்கிறது முருகன் தானா?” என்று கேட்டாள் அகிலா.

“ஆமாக்கா..இப்போ பாருங்க 1024-ம் கீதையில முருகன் வர்ற ஸ்லோகத்தைச் சொல்லுது. மொத்தத்துல இந்த கொலைக்கும் முருகருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. முத்துராமன் சார் குடும்பமும் அடிக்கடி மருதமலை போகுது. ஆரம்பத்துல இருந்தே நான் இவர்கிட்டச் சொல்றேன்..மார்ஸ் முருகன் தான்னு..இவரு கண்டுக்கலை." என்று விஸ்வநாதனிடம் புகார் சொன்னாள் கவிதா.

அதற்கு சரவணன், “சார், பாம்பைப் பார்த்தாக்கூட ‘முருகரு நைனா கழுத்துல கிடக்குமே, அதானே இது?’ன்னு கேட்பா..அதனால தான் நான் கண்டுக்கலை” என்றான். அதைக் கேட்ட விஸ்வநாதனும் அகிலாவும் சத்தம் போட்டுச் சிரித்தனர்.

“ஓகே..அப்போ இரண்டுமே முருகரைத் தான் சொல்லுதுன்னா, அதுக்கு என்ன அர்த்தம்?” என்று அகிலா பொதுவாக எல்லாரையும் பார்த்துக் கேட்டாள்.

“முத்துராமன் ஒரு முருக பக்தன். அவ்ளோதான் எனக்குத் தெரிஞ்சது.”என்றார் விஸ்வநாதன்.

”சார், உங்களுக்கும் அவருக்கும் எப்படிப் பழக்கம்?” என்று கேட்டாள் கவிதா.

“நானும் முத்துராமனும் ஒரே ஊர்க்காரங்க. அவர் என் ஸ்கூல் சீனியர். அதெல்லாம் அப்போ எனக்குத் தெரியாது. நான் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்த்தப்போ, ஒரு கேஸ் விஷயமா என்கிட்ட வந்தாரு. அப்போத் தான் அறிமுகம் ஆகிக்கிட்டோம். அப்போ அகிலா ஸ்கூல்ல படிச்சுக்கிட்டிருந்தா. ரெண்டு ஃபேமிலியுமே நல்லா ஃப்ரெண்ட் ஆகிட்டோம். அகிலாவுக்கு போலீஸ் ஆகணும்னு ஆசை. சோ, முத்துராமன் அப்போ இருந்தே இவளுக்கு காட் ஃபாதர் ஆகிட்டாரு. அவர் சொன்னதையெல்லாம் படிச்சா, சொன்ன எக்ஸாமையெல்லாம் எழுதினா. ‘இவ என்னோட அஃபிசியல் வாரிசு’ன்னு சொல்வார். சொன்னபடியே அவளை ஆக்கிக்காட்டினார்”

“ஆமாப்பா..அவர் இல்லேன்னா நான் இந்தளவுக்கு ஆகியிருக்க முடியாது.டூட்டில அவர் ரொம்ப சின்சியர். நேர்மை தவறாதவர், இல்லியாப்பா? அவருக்கு யாரு எதிரிங்கன்னு தெரியாமத் தான் குழம்பிக்கிட்டிருக்கோம்”

“ஆமா..ரொம்ப நேர்மை அவரு. அதனால அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கார். ஒருமுறை தனியாப் பேசிக்கிட்டிருக்கும்போது, எப்பவாவது அரசியல்வாதிங்களோட பிரசர்க்கு அடிபணிஞ்சிருக்கீங்களான்னு கேட்டேன். ஒரே ஒருமுறை-ன்னு சொன்னார். மனுசன்னா ஒரு அளவுக்கு மேல நேர்மையா இருக்க முடியறதில்லை. அவரால முடிஞ்சவரை இருந்தார்” என்றார் விஸ்வநாதன்.

“ஒரே ஒருமுறைன்னு சொன்னாரா?” என்று கேட்டாள் அகிலா.

“ஆமாமா.ரொம்ப வருத்ததோட சொன்னார். அதான் நான் ரொம்ப டீடெய்லா கேட்டுக்கலை.”

“அவரோட நேர்மையால பாதிக்கப்பட்ட யாரோ தான் இதைப் பண்ணியிருக்கணும்ங்கிற கோணத்துல தான் இந்தக் கேஸை நாங்க பார்த்துக்கிட்டிருக்கோம். ஒருவேளை அந்த ஒரு கேஸ் தான், இந்தக் கொலைக்குக் காரணமா இருக்குமோ?” என்று கேட்டான் சரவணன்.

“ஆமாம் சரவணன்..அவர் மேல உள்ள மரியாதையால நாம மாத்தி யோசிக்கலை..சிபிசிஐடி விசாரணை முழுக்க முடியாமலேயே க்ளோஸ் பண்ணப்பட்ட கேஸ்களை நாம பார்த்தா, ஒருவேளை நாம தேடுறது கிடைக்கலாம்” என்றாள் அகிலா.

“ஆமாம் மேம், முதல்ல அதைச் செய்வோம்” என்று சரவணன் சொன்னதும் அகிலா தர்மசங்கடத்துடன் பார்த்தாள்.

சரவணன் புரிந்துகொண்டவனாய், “சாரி மேம்.நான் இன்னும் இரண்டு வாரத்துக்கு ஆஃபீஸ் வரமுடியாதுல்ல..வந்தாலும் இந்தக் கேஸ்ல நான் இல்லியே” என்றான்.

“நோ பிராப்ளம்..நான் போய்ப் பார்க்கிறேன்” என்றாள் அகிலா.

குறுக்கிட்ட கவிதா” அப்போ முருகரு?” என்றாள்.

“ம்..முதல்ல பழைய கேஸ்களை ஆராய்வோம்” என்றாள் அகிலா.

“அக்கா..முத்துராமன் சார் குடும்பம் அடிக்கடி மருதமலை போயிருக்குது. நாமளும் அங்கே போனா ஏதாவது க்ளூ கிடைக்கலாம்” என்றாள் கவிதா.

“அங்கே போய் யாரைக் கேட்கிறது?’ என்று சரவணன் கேட்டான்.

“ஏங்க, நாம ஒரே ஒருதடவை தான் மருதமலை போயிருக்கோம், இல்லியா?’
“ஆமாம்..அதுவும் நம்மளுக்கு கல்யாணம் ஆன புதுசுல செந்தில் பாண்டியன் வற்புறுத்திக் கூட்டிட்டுப் போனான்.”

“கரெக்ட்..கரெக்ட்..இப்போ நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க. நமக்கு திருத்தணி தானே பக்கம்? ஏன் சென்னையிலேயிருந்து மருதமலைக்கு கூட்டிட்டுப் போகணும்?” என்று கேட்டாள் கவிதா.

திடுக்கிட்டு நிமிர்ந்தான் சரவணன். அவன் முகத்தைப் பார்த்துப் பயந்தவளாக “என்னாச்சுங்க?” என்றாள் கவிதா.

“அச்சு..ஏறக்குறைய இதே கேள்வியை பாண்டியன் முத்துராமன்சார் பையன்கிட்ட கேட்டான்..அப்படீன்னா.........?” என்று சரவணன் இழுத்தான்.

“அப்படீன்னா நாம இரண்டு பேரும் உடனே மருதமலை போறோம்” என்றாள் கவிதா.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

 1. திக்கு,திக்கு ன்னு இருக்கு!பிரகாஷ் இங்கிலிசுபிசுல சொன்னத நான் தமிழ்ல சொல்லுறனோ???? ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
 2. Real nice narration. Waiting to read the continuation.

  ReplyDelete
 3. ஆஹா அடுத்த கட்டம்!

  ReplyDelete
 4. எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துவிட்டது! அடுத்தபகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
 5. நன்றாக இருந்தது

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.