Saturday, June 9, 2012

முருக வேட்டை_11


சரவணன் உடனே ஆஃபீசினுள் நுழைந்தான். முன்பு இன்ஸ்பெக்டர் விசாரித்த கேஸ் கட்டை தன் டேபிளில் இருந்து எடுத்தான்.


முத்துராமனுக்கு கடைசியாக வந்த நம்பர் என்ன என்று பார்த்தவன் அதிர்ந்தான்.


23242526.


கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் நம்பர்.



சரவணன் தன் கண்களை நம்ப முடியாமல் பார்த்தான். அது கிண்டி சிபிசிஐடி ஆஃபீசின் நம்பரே தான்.

எவ்வளவு புத்திசாலியான கொலைகாரனாக இருந்தாலும், மாட்டிக்கொள்ளும்படி ஏதேனும் ஒரு க்ளூவை விடுவான் என்பது சிபிஐடி போலீசின் பால பாடம்.

செந்தில் பாண்டியனும் அதே தவறைச் செய்திருப்பது சரவணனுக்கு ஆச்சரியம் அளித்தது.

’அப்படியென்றால், முத்துராமனுக்கு சரவணன் அன்று மாலை ஃபோன் செய்திருக்கிறான். இரவு சந்திப்பதாய்ச் சொல்லியிருக்கிறான். அவரும் காத்திருந்திருக்கிறார்..குட்..வெரிகுட் பாண்டியன்..’ முணுமுணுத்தபடியே சரவணன் அகிலாவின் ரூம் நோக்கி ஏறக்குறைய ஓடினான்.

அங்கே பாண்டியன் அகிலாவுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். தயங்கியபடியே சரவணன் வெளியே நின்றான்.

சரவணன் காத்திருப்பதைப் பார்த்ததும் பாண்டியன் வெளியே வந்தான். முறைத்த பார்வையுடன் சரவணனைக் கடந்து சென்றான்.

சரவணன் வேகமாக அகிலாவின் அறைக்குள் நுழைந்தான்.

“மேம், நம்ம கேஸ்ல முக்கியமான எவிடன்ஸ் கிடைச்சிருக்கு”

அகிலா சுவாரஸ்யமே இல்லாமல் “என்ன எவிடன்ஸ்?’ என்றாள்.

“இங்க பாருங்க..முத்துராமன் சாருக்கு கடைசி நாள்ல வந்த ஃபோன் கால்ஸ் லிஸ்ட்..அதுல கடைசி நம்பரைப் பாருங்க”

அகிலா பார்த்தாள். சாதாரணமான “சரி, அதுக்கு என்ன?” என்றாள்.

“மேம், நீங்க கவனிக்கலையா?..இது நம்ம ஆபீஸ் நம்பர்..கொலையாளி முத்துராமன் சாருக்குத் தெரிஞ்சவனாத் தான் இருக்கணும் இல்லியா? அப்போ அவன் அவருக்கு ஃபோன் பண்ணியிருப்பான், இல்லியா? அந்த நம்பர் தான் இது” என்று ஒருவித வெற்றிப் புன்னகையுடன் சொன்னான் சரவணன்.

“ஓ..அப்போ கொலையாளி நானா?” என்றாள் அகிலா.

சரவணன் அதிர்ச்சியாகி “என்ன மேம் சொல்றீங்க..நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்றான்.

“பின்னே? சாருக்கு கடைசியாக் கால் பண்ணது நான் தான். உங்களுக்கே தெரியும், டெய்லி காலைலயும் ஈவ்னிங்லயும் அவர்கிட்ட நான் பேசுவேன்னு...”

சரவணன் குறுக்கிட்டு “நான் உங்களை நினைக்கலை மேம்..பாண்டியன்னு நினைச்சேன்..” அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் சரவணன் நிறுத்தினான்.

அகிலா தொடர்ந்தாள். “தெரியும் சரவணன்..கொஞ்ச நாளாவே உங்க நடவடிக்கைகளை நான் வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கிறேன்..பாண்டியன்கூட நீங்க சரியா கோ-ஆபரேட் பண்ணலைன்னு அவர் புலம்புறாரு..ரங்கசாமிகிட்ட பாண்டியனோட பெர்சனல் ஃபைலை வாங்கிப் பார்த்திருக்கீங்க..அவர் மேல் உங்களுக்கு இன்னும் கோபம் குறையலை..அதான் பாண்டியனையே சந்தேகப்படற அளவுக்குப் போய்ட்டீங்க..சரவணன், நல்லா யோசிச்சுப்பாருங்க..நியாயத்துக்கு பாண்டியன் தான் நம்ம மேல கோபப் படணும். பெர்ஃபார்மன்ஸ் வைஸ் நீங்க ரெண்டு பேருமே ஈகுவல் தான். நாந்தான் உங்களுக்கு ரெகமண்ட் பண்ணி, புரமோசன் வாங்கிக் கொடுத்தேன். அது பாண்டியனுக்கும் தெரியும்..ஆனாலும் அவர் அதையெல்லாம் மனசுல வச்சுக்காம உங்ககூட பழையபடி ஃப்ரெண்ட்டா இருக்கணும்னு நினைக்கிறார்..ப்ளீஸ், உங்க வே ஆஃப் திங்கிங்கைக் கொஞ்சம் மாத்துங்க”

சரவணன் அதிர்ச்சியாகி நின்றான். பாண்டியன் தொடர்ந்து தன்னைப் பற்றித் தவறாக போட்டுக் கொடுத்திருக்கிறான் என்று புரிந்தது. இனியும் பேசிப் பயனில்லை என்று சரவணன் ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்தான்.

சோர்வுடன் தன் சீட்டில் வந்து உட்கார்ந்தான் சரவணன்.

’பாண்டியன் தான் தான் கொலையாளி என்று சொன்னது உண்மை தானா? ஒருவேளை தன்னை சுற்றலில் விடுவதற்காக அவன் சொன்ன பொய்யா அது? பாண்டியன் கொலையாளியாக இருப்பதற்குத் தானே அதிக வாய்ப்பிருக்கிறது? இல்லையென்றால், கேஸை வேறு எப்படி நகர்த்துவது?’ யோசிக்க யோசிக்க தலை வலித்தது. எழுந்து ஆஃபீசை விட்டு வெளியே வந்தான். 

அருகில் இருந்த டீக்கடைக்குப் போய் காஃபி குடித்தான் சரவணன். டீக்கடைப் பெஞ்சில் தினத்தந்தியைப் படித்தபடியே காரசாரமாக அரசியல் விவாதம் போய்க் கொண்டிருந்தது.

“அரசியல் ஒரு சாக்கடைங்கிறது சரி தாம்யா..இந்தாளு அப்பனும் அந்தாளு அப்பனும் பரம எதிரியா அடிச்சுக்கிட்டாங்க. இப்போப் பாரு, ரெண்டு பேரு பிள்ளைகளும் சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுக்கிறாங்க” என்றார் ஒரு பெருசு.

அருகில் இருந்தவர் “அரசியல்ல நிரந்த எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க? இவங்க அப்பங்களுக்கு இடையில என்ன பிரச்சினைப்பா?” என்றார்.

“ஏதோ ஒரு கோயில்ல இருந்த நகைங்க, தங்க வேல், தங்க கிரீடம் எல்லாத்தையும் இந்தாளு திருடிட்டாருன்னு அவரு பெரிய பெரிய போராட்டமெல்லாம் பண்ணாரு..அப்போ ..”

“அய்யே..அதுவா..அது சும்மா புரளிப்பா..இந்தாளு எதிர்க்கட்சித் தலைவரு..அதனால சும்மா ரவுண்டுகட்டி ஆடுனாரு.”

சரவணன் யாரு அந்த ‘இந்தாளு’ என்று அருகில் போய் பேப்பரைப் பார்த்தான்.

பிரபல அரசியல்வாதி ஒருவர் மற்றொரு பிரபலமில்லா அரசியல்வாதியுடன் சிரித்துக்கொண்டிருந்தார்.

சரவணனுக்கு எப்போதுமே இந்த டீக்கடை விவாதம் ஆச்சரியம் கொடுக்கும். பத்திரிக்கைகளில் வராத, சில நேரங்களில் சிபிசிஐடிக்கு மட்டுமே தெரிந்த சில விஷயங்கள்கூட சர்வசாதாரணமாய் பாமர மக்களால் பேசப்படுவதைப் பார்த்திருக்கிறான். பலநேரங்களில் அவர்கள் உண்மை என்று நம்புவது பொய்யாகவும் இருக்கும்..ஆனாலும் அரசியல் பேச்சு நம் மக்களுக்கு அலுப்பதேயில்லை.

இப்போது மனம் கொஞ்சம் லேசாகியிருப்பது போல் தோன்றியது. ‘எப்படியும் இந்தக் கேஸில் உண்மையான குற்றவாளியைப் பிடித்தே தீருவது’ என்று உறுதியுடன் நினைத்தபடி ஆபீசுக்குள் நுழைந்தான்.

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_11"

Tuesday, June 5, 2012

ஒரு குழந்தையின் இந்தியப் பயணம்...


இந்தியா செல்வதற்காக சென்ற மாதம் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டிருந்த பொழுது, என் பையன் என்ன நடக்கிறதென்று புரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தான். ‘ஊருக்குப் போறோம்யா’ என்று சொன்னாலும் புரிந்த மாதிரித் தெரியவில்லை. 

ஏர்போர்ட் கிளம்பும்போதும் வழக்கம்போல் பர்ச்சேஸ் செய்யத்தான் கிளம்புகிறோம்’ என்று நினைத்துக்கொண்டே கிளம்பினான். ஏர்போர்ட்டில் எல்லா ஃபார்மாலிட்டீஸ்களையும் முடித்துவிட்டு, ஃப்ளைட் ஏற்றியபோதும் சந்தோசமாக ‘ஏதோ பெரிய்ய கார்’ என்ற நினைப்பில் ஏறிக்கொண்டான்.

எப்போதும் என் மகனிடம் / குழந்தைகளிடம் என்னை ஆச்சரியப்படுத்தும் விஷயம், பெற்றோர் மேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. சைக்கிளில் ஏறணுமா?..சரி!........பைக்கிலா?..ஓகே!.......காரிலா? ஓகே...ஃப்ளைட்/கப்பல்.ட்ரெய்ன் என எதில் ஏற்றினாலும் பெற்றோரில் ஒருவர் இருந்தாலும் போதும், சந்தோசமாகக் கிளம்பி விடுகிறார்கள். வேறு யாராவது ‘வா..காரில் போவோம்’ என்றால் போவதேயில்லை.

ஃப்ளைட்டில் அவனது சந்தோசக் குதியாட்டத்தை ரசித்தபடியே, அவன் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ‘இவர்கள் ஒரு போதும் எவ்விதக் கெடுதலும் செய்துவிட மாட்டார்கள்’ என்ற தீவிர நம்பிக்கை குழந்தைகளுக்கு எங்கிருந்து வந்து சேர்கிறது..நானும் இப்படித் தான் நம்பி இருந்திருப்பேனா?’ என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஆனாலும் பையன் கொஞ்ச நேரத்தில் டல்லாகி உட்கார்ந்து தூங்கியேவிட்டான். ’ஏன்..இப்படி?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தால்......அடப்பாவிகளா.............ஏர்ஹோஸ்டஸாக ஒரு பெண்கூட இல்லை..எல்லாம் ஆம்பிளைங்க..ஏர் இண்டியால போனாக்கூட ரெண்டு ஆண்டிங்க+ரெண்டு பாட்டிங்க வந்திருக்குமே..என்ன கொடுமை இது..இப்படி இருந்தா, பையன் டல் ஆகாம என்ன செய்வான்? ‘என்று நினைத்துக்கொண்டே நானும் டல்லாகி தூங்கிவிட்டேன்!

நகரத்துக் குழந்தைகளின் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை ஜெயிலுக்கு ஒப்பானது. செம்மண்ணில் உருண்டு புரளாமல், காட்டில் மாங்காய்/நுங்கு திருடாமல் என்ன வாழ்க்கை இது ‘என்றே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் என் பையனைப் பார்க்கும்போது தோன்றும். எனவே இந்த லீவில் கிராமத்து வீட்டில் தங்குவது என்றும் நன்றாக ஒரு மாதம் விளையாட விட வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.

திருவனந்த புரத்தில் இறங்கி, கேரளா-தென்மலை வழியாக ராஜபாளையம் பயணமானோம். வழியெங்கும் பச்சைப் பசேல் என மலைகளும் மரங்களும். என் மகனுக்கு அதைப் பார்த்து குஷி தாங்கவில்லை. “அப்பா..உஷு..அப்பா இஷு..இங்க..அங்க...” என்று மரங்களைக் காட்டிச் சொல்லிக்கொண்டே வந்தான்.

மாமனார் ஊரில் நான்கு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு, பல உயிர்களுக்கு நிரந்தர ரெஸ்ட்டும் கொடுத்து விட்டு சொந்த ஊருக்குப் பயணமானோம். ஒரு வருடமாக பூட்டிக்கிடந்த வீட்டை க்ளீன் செய்யவே அரை நாள் எடுத்தது. ஊரில் போய் இறங்கவுமே என் மகனின் நண்பர்கள் குழு தேடி வந்துவிட்டது. அதன்பின் தெருவே வீடு ஆனது.

அதன்பின் எங்கள் வீட்டில் அவன் சாப்பிட்டது அபூர்வம். ஏதாவது ஒரு வீட்டில் நுழைவது, இருப்பதைச் சாப்பிடுவது, தெருவில் அந்தக்கடைசி முதல் இந்தக் கடைசி வரை ஓடுவது, ஊரையே சுற்றி வருவது என்று ஒரே கொண்டாட்டம் தான். இதையெல்லாம் இழந்துவிட்டு, ஏ.சி.ஜெயிலில் வாழ வேண்டியிருக்கிறதே..சீக்கிரம் ஊருக்கு வந்து செட்டில் ஆகிவிட வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டேன். 

இடையில் ராமேஸ்வரம் போய் கடலில் (குளத்தில்?) மூழ்கி, எல்லாப் பாவங்களையும் போக்கிவிட்டு, கொஞ்சம் சொறியுடன் வீடு வந்து சேர்ந்தோம். அன்று இரவில் என் மகன் குப்புறப் படுத்துக்கொண்டு “அப்பா..இட்ச்சு..இட்ச்சு” என்று பின்பக்கத்தைக் காட்ட, சின்சியராக சொறிந்து விட்டேன். அவனும் சுகமாக உறங்கிப் போனான்.

அடுத்த வாரம் திருச்செந்தூர் போனோம். பையனுக்கு மொட்டை போட்டு, காது குத்தினோம். மொட்டை போடும்போது பிடிப்பதற்கு பத்துப் பேர் சுற்றி நின்றோம். அதிசயமாக பையன் அழவேயில்லை. காது மரத்துப்போக மருந்து போட்டிருந்ததால், காது குத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற மொட்டைகளைப் பார்த்து “இஹி..இஹி” என்று சிரித்த மகனுக்கு, தன் தலையும் மொட்டை தான் என்று புரியவில்லை. வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்த்துவிட்டு “போச்சு..போச்சு” என்றான். “வளரும்பா..திரும்ப வளரும்” என்று சமாதானம் கூறினேன்.

எல்லாம் முடிந்து கடைசி நாள் கிளம்பும்போது, பையன் இங்கே அனுபவிக்க வேண்டியதில் ஏதோ ஒன்னு குறைவது போல் தோன்றியது. என்ன அதுவென்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, திண்ணையில் உட்கார்ந்திருந்த பையன் “அப்பா..பூச்சி..பூச்சி” என்று ஓடி வந்தான். டவுசரை அவனே இழுத்துக் கழற்றினான். பார்த்தால் சில எறும்புகள்.......பூச்சியை பூச்சி கடித்திருந்தது.

அதைப் பார்த்ததும் சந்தோசம் பீடிட்டது எனக்கு. ஒன்பதாம் வகுப்பு வரை பெரும்பாலும் ஸ்கூலில் எனக்கு மரத்தடி கிளாஸ் தான். டவுசர் போட்டு ஃப்ரீயாக உட்கார்ந்திருக்கும்போது அடிக்கடி எல்லாரையுமே எறும்பு கடித்து விடும். எறும்பு கடித்த இடத்தை சொறிவதும், கசக்குவதும் சுகமான அனுபவம் என்பது நீங்கள் அறிந்ததே. விவகாரமான இடம் என்றால், அதை டீச்சர் பார்க்காத பொழுது செய்வது நம் சாமர்த்தியம். இப்போது மகனைப் பார்த்ததும் பழைய ஞாபகங்கள் நினைவில் வந்து சென்றன.

இந்தியாவில் எல்லாவற்றையும் அனுபவித்த மகனுக்கு, இருந்த ஒரு குறையும் பூச்சி கடித்தவுடன் தீர்ந்தது, பூச்சியில் எலந்தைப் பழம் பழுத்தது. 

மன நிறைவுடன் குவைத் நோக்கிக் கிளம்பினோம்.

மேலும் வாசிக்க... "ஒரு குழந்தையின் இந்தியப் பயணம்..."

Sunday, June 3, 2012

இன்று புதிதாய்ப் பிறந்தேன்....


என் மனைவியின் ஊர் பேரைக் கேட்ட்தும் அலறினேன். ‘அங்கெயா..பொண்ணா...வேண்டாம்’ என்றேன். ஏனென்றால் அங்கே ஏற்கனவே என் சொந்தக்கார குடும்பம் ஒன்று இருந்த்து.. சொந்தக்காரங்க எப்படி இருப்பாங்கன்னு உங்களுக்கு தெரியும்தானே..
கல்யாணக் கல்.....
என் பெரியப்பா என்னைச் சமாதானப்படுத்தினார். “நல்ல குடும்பம்பா..நீ வருவேன்னு வாக்கு கொடுத்துட்டேன். போய் பொண்ணைப் பாரு..நல்ல பிள்ளை” என்றார். மற்ற உறவுகளும் கடும் நெருக்கடியைக் கொடுத்தார்கள். உண்மையில் எனக்கு திருமணத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை. வேண்டா வெறுப்பாக ‘சரி’ என்றேன்.

“நல்லதுப்பா..நீங்க கிளம்பும்போது, அவங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க. அப்போதான் அவங்க பொண்ணை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர கரெக்டா இருக்கும்” என்றார் பெரியப்பா.

நான் கொந்தளித்தேன்.” இதுக்குத் தான் அந்த ஊர் வேண்டாம்னு சொன்னேன்..என்னால ஒரு பொண்ணு படிப்பு பாழாக வேண்டாம்..அந்தப் பொண்ணு நல்லா படிச்சு..”

பெரியப்பா இடைமறித்தார், “ஏலே, பொண்ணு படிக்கலைலே, டீச்சரா வேலை பார்க்குது” என்றார். ’ரொம்ப ஓவரா யோசிக்கிறோமோ’ன்னு குழம்பிக்கிட்டே பெண் பார்க்கப் போனேன்..

என்னிடம் உள்ள பெரிய பிரச்சினை, முதல் சந்திப்பில் நன்றாகப் பேசமாட்டேன். ‘முதல்ல நல்லாப் பழகணும்’..அப்புறம்தான் பேசவே ஆரம்பிப்பேன். எனவே அங்கே போய் ’எதையோ தின்ற எதுவோ போல்’ அமர்ந்திருந்தேன். மிக்ஸர், காஃபி எல்லாம் யாராலோ கொடுக்கப்பட்ட்தும், என் முகம் மேலும் அழகானது! பிறகு பெண்ணை அழைத்து வந்தார்கள்.

நான் அவங்களைப் பார்த்தேன். ஏதோ ஒன்று எனக்குள் நடந்தது. எனக்கு உடனே தோன்றிய எண்ணம் ‘இந்தப் பெண்ணை நல்லபடியாப் பாத்துக்கணும்’ என்பதுதான். நான் பேச ஆரம்பித்தேன்.

என் அருகே அம்ர்ந்திருந்த மாமனாருடன் பல நாள் பழகிய தோழன் போலப் பேசினேன்..பேசினேன்..பேசிக் கொண்டேயிருந்தேன். ‘விட்டுடாதடா செங்கோவி” என்று உள்ளே ஒரு குரல் ஒலித்தது.

மாமனார் வலையில் விழுந்தார். ‘என்னமாப் பேசுதாரு மாப்ள’ என்று பெருமைப்பட்டுக்கொண்டார். கல்யாணம் முடிந்தது. பிறகு அவரே என் பெரியப்பாவிற்குப் போன் செய்து ‘ மாப்ள பேசவே மாட்டேங்கிறாரு’ என்று கம்ப்ளெய்ண்ட் செய்தார்!

என் மனைவி எனக்கு நேரெதிராக இருந்தார். நான் உடல் உழைப்பில் சோம்பேறி. அவரோ ரொம்ப சுறுசுறுப்பு.
எனக்கு நீச்சல் தெரியாது. அவருக்கு நீச்சல் தெரியும். (கவலைப்படாதீங்க, நான் உங்களைக் காப்பாத்திடுவேன்!)

நீச்சல் மட்டுமல்ல, சைக்கிள் ஸ்கூட்டர் போதாதென்று பைக்கும் ஓட்டப் பழகினாராம். இதை அவர் என்னிடம் சொன்னபோது, என் நாக்கில் சனி வந்து உட்கார, நான் அவரைக் கேட்டேன்: ”அப்போ மரம் ஏறவும் தெரியுமா..ஏன்னா எனக்குத் தெரியாது” டீச்சர் டென்சன் ஆனதில் வீடு இரண்டானது. (திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்மபத்தினி அடியும்..ஞாபகம் இல்லையா!)

நான் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமாவரை பார்ப்பவன். அவரோ சோகமான முடிவுள்ள படம் என்றால் பார்க்கமாட்டார். ஏன்னா “அப்புறம் ரெண்டு நாளைக்கு அழுவேன்..சாப்பிடக்கூட மாட்டேன்” என்றார். (அதாவது ரெண்டு நாளைக்கு சமைக்க மாட்டார்..உஷாரய்யா..உஷார்)

நான் ஒரு தீவிர இலக்கிய வாசகன்..அவரோ அதிலும் சுத்தம்.அரசியல் பேசத் தொடங்கினால் அவ்வளவுதான்..(ராமதாஸ்-ன்னா கண்ணாடி போட்டிருப்பாரே...அவர்தானே..)

எனவே எதைப் பற்றியும் பேச முடியாமல் போனதால், நாங்கள் எங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். எங்கள் வீட்டில் யாருக்கும் யார் மீதும் பயமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். சுதந்திரமே முதல் அடிப்படைத் தேவை என்று முடிவு செய்தோம். வீடு அன்பின் பிடியில் சென்றது.

உண்மையில் இப்படி ஒரு திருமண வாழ்வை நான் எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் மோசமானதாக அமையும் என்றே நினைத்திருந்தேன். ஏனென்றால்..
பெற்றோர், அண்ணன், அக்கா என எல்லோராலும் கைவிடப் பட்டவன் நான். எல்லா உறவுகளும் எனக்கு துக்கத்தையும் அவமானத்தையும் துரோகத்தையும் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

எனவே, ரத்த சொந்தங்களே இப்படி இருக்கும்போது, ’எங்கிருந்தோ வருகின்ற சொந்தம் மட்டும் நன்றாகவா வந்துவிடப் போகிறது ‘ என்றே நினைத்திருந்தேன்.

கடவுள் கருணைமிக்கவர். இழந்த எல்லாவற்றையும் இந்த புதிய உறவின் மூலம் மீட்டுக் கொடுத்தார்.

நான் மூன்று வேளையும் சாப்பிடுகிறேனா என்று பார்க்க ஒரு உயிர்..எனக்கு காய்ச்சல் என்றால் தொட்டுப் பார்க்கவும், அக்கறை கொள்ளவும் ஒரு உயிர்..எனக்காக..நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. நான் நேரத்திற்கு வீடு திரும்பவில்லையென்றால், எனக்காக கவலைப்படவும் ஒரு உயிர்..ஒன்றல்ல, இப்போது இரண்டு உயிர்கள்.


நான் பிறந்த தினத்தன்றே என் தாயார் இறந்ததால், நான் என் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. கல்லூரி வாழ்விலும் அலுவலக வாழ்விலும் நண்பர்களிடம் இருந்து என்  பிறந்த நாளை மறைக்க பெரும்பாடு படுவேன். நான் வேலை பார்த்த ஒரு அலுவலகத்தில் ஹெச்.ஆர்.டிபார்ட்மெண்ட்டே எம்ப்ளாயிஸின் பிறந்த நாளைக் கொண்டாடும். எனக்கு அப்படிச் செய்ய வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்ட நாளும் உண்டு.

ஆனால் திருமணத்திற்குப் பின் யார் கேட்டாலும் தைரியமாக ஜீன் - 3 தான் என் பிறந்த நாள் என்று சொல்வேன்..ஆம், இன்று புதிதாய்ப் பிறந்தேன்.

இது கனவல்ல என்ற நம்பிக்கையுடன் இன்று என் திருமண வாழ்வில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றேன்.

நன்றி முருகா!

மேலும் வாசிக்க... "இன்று புதிதாய்ப் பிறந்தேன்...."

Sunday, May 27, 2012

இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு...


டிஸ்கி: தலைப்பை ’பிரபல பதிவர்-தொழிலதிபர் இம்சை அரசன் பாபுவுடன் ஒரு பதிவர் சந்திப்பு’ என்று விரித்துப் புரிந்து கொள்ளவும்.

நமக்கு பதிவர்னாலே பயம்..அதுவும் பதிவர் சந்திப்புன்னா பயமோ பயம்..அதனால யார் கையிலயும் சிக்காம ஃப்ரீயா சுத்திக்கிட்டிருந்த எனக்கு சிரிப்பு போலீஸ் ரமேஷ் மூலமா ஒரு சோதனை வந்தது. இம்சை அரசன் பாபு கோவில்பட்டி தான்..நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டு..அவசியம் போய்ப் பாருங்கன்னு சொல்லி அட்ரசும் சொல்லிட்டார். டெய்லி அந்த வழியாத் தான் நான் போய்க்கிட்டு இருந்ததால பத்து நாள் தீவிரமா யோசிச்சு, இந்த சோதனையை எதிர்கொள்றதுன்னு முடிவு பண்ணேன்.

சிப்பு (இதை சிரிப்பு போலீஸ் ரமேஷ் என்று விரிக்கவும்!) ஃப்ரெண்ட்டுன்னா, அவர் மாதிரியே யாரோ ஒரு சின்னப் பையன்(!)ன்னு நினைச்சுக்கிட்டே அவர்கூட ஃபோன்ல பேசுனேன். இம்சை அரசனும் ரொம்ப சந்தோசமா “ஃப்ரீயா இருக்கும்போது வாங்க”ன்னார். ‘நம்மளோ குளிக்கும்போது தான் ஃப்ரீயா இருப்போம்..அப்போ எப்படிப் போறது’ன்னு நானா யோசிச்சுக்கிட்டே ‘இன்னைக்கு ஈவ்னிங் வர்றேன்’னு சொன்னேன்.

அப்புறம் தான் சோதனை ஆரம்பிச்சுச்சு..உடனே அவரு “வாங்க வாங்க..கோவில்பட்டிலேயே பெரிய்ய்ய ஹோட்டலாப் போய் ரெண்டு மணி நேரம் சாப்பிட்டுக்கிட்டே நிதானமாப் பேசலாம்”னு சொன்னாரு. என்ன இருந்தாலும் அவரு ஒரு பதிவர் இல்லியா..அதனால எங்கயும் சிக்கிக்காத படி ‘போகலாம்..சாப்பிடலாம்’னு சொல்றாரே ஒழிய யாரு காசு கொடுக்கணும்னு சொல்லவேயில்லை. நானும் வர்றேன்னு சொல்லிட்டு ஃபோனை வச்சுட்டேன்.

எனக்கோ இதுல யாரு பலியாடுன்னு புரியலை..எதுக்கு வம்பு..இப்படியே எஸ் ஆகிடுவோம்னு முடிவு பண்ணி சாயந்திரமா அவருக்குக் கூப்பிட்டு “அண்ணே, நான் ரொம்ப பிஸி..வர முடியலை”ன்னு சொன்னேன். அவரும் ‘பரவாயில்லைங்க..நாளைக்கு என் ஆஃபிசுக்கு வந்திருங்க’ன்னு சொன்னாரு.

எனக்கும் அது சரின்னு தோணுச்சு..காலைல பத்து மணிக்குப் போனா யாருக்கும் சேதாரம் இல்லாம தப்பிச்சுடலாம்னு முடிவு பண்ணி, ஒலக முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்புக்கு நான் ஒத்துக்கிட்டேன்.

ஆனாலும் விதி செஞ்ச சதியால பதினொரு மணிக்கு அவர் ஆஃபீஸ் பில்டிங் முன்னாடி போய் நின்னேன். ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல அண்ணன் ஆஃபீசு. மேல போயி ஆஃபீசுல வாசல்ல நின்னுக்கிட்டு ‘இப்போ எப்படிக் கேட்கறது..இம்சை அரசன்னு சொன்னாத் தெரியுமா’ன்னு யோசிக்கும்போதே ”வாங்க...வாங்க”ன்னு ஒரு தேன் மதுரக் குரல் கேட்டுச்சு..திரும்பிப் பார்த்துட்டு அசந்துட்டேன். நீங்களும் அசரணும்னா கீழே இருக்கிற ஸ்டில்லைப் பாருங்க:

‘என்னடா இது..நம்ம ஊருல இப்படி ஒருத்தரா..அஜித்குமாரோட அசல் மாதிரி இருக்காரே..பொதுவா பதிவர்னாலே பேக்கு மாதிரி தானே இருப்பாங்க’ன்னு பிரமிச்சு நின்னப்போ “வாங்க செங்கோவி..உட்காருங்க”ன்னு சொன்னார். ‘இவங்க தான் என் ஒய்ஃப்’ன்னு அண்ணியாரை அறிமுகம் செஞ்சு வச்சார். யாரை முதல்ல பார்த்தாலும் பேக்கு மாதிரி முழிக்கிற என் வழக்கப்படி ஒரு வணக்கம் போட்டுட்டு முழிச்சேன்.

அண்ணனைப் பார்த்தவுடனே எல்லாருக்கும் தோணுற அதே கேள்வி எனக்கும் தோணுச்சு..கேட்டேன்..”இவ்ளோ ஹேண்ட்சமா இருக்கிறீங்களே..நீங்க ஏன் உங்க ஸ்டில்லை உங்க ப்ளாக்ல போடுறதில்லை”ன்னு கேட்டேன்..”அது வேணாங்க..ரசிகைங்க தொல்லை ஜாஸ்தி ஆகிடும்..நானோ ஏக பத்தினி விரதன்”னாரு. எனக்கு புல்லரிச்சுடுச்சு.. அண்ணியாருக்கு கண் கலங்கிடுச்சு..கண்ணைத் துடைச்சுக்கிட்டே”நீங்க பேசிக்கிட்டிருங்க”ன்னு சொல்லிட்டு வெளில போய்ட்டாங்க.

அண்ணியாரும் பிசினஸ்ல கூடவே இருந்து உதவி செய்றாங்கன்னு சொன்னாரு..’அடப்பாவமே..வீட்டுக் கஜானாவை அவங்ககிட்ட கொடுத்தது பத்தாதுன்னு ஆஃபீஸ் கஜானாவையும் அங்க கொடுத்துட்டு உட்கார்ந்திருக்காரே..அப்போ நாம நேத்து எஸ்கேப் ஆனது சரி தான்’ன்னு நினைச்சுக்கிட்டேன்.

ஆனால் அண்ணன் யாரு..விட்டுடுவாரா..”அப்புறம், மதியம் சாப்பிட எங்க போகலாம்?”னாரு..’ஆஹா...மனுசன் கொலைவெறியோட இருக்காரு போலிருக்கே’ன்னு நினைச்சுக்கிட்டு ‘இல்லைண்ணே, இன்னிக்கு நான் விரதம்’னு ஒரே போடாப் போட்டுட்டேன்.
“ஒன்னுமே சாப்பிடமாட்டீங்களா?”ன்னாரு.
“ஒன்லி ஜூஸ்”ன்னு சொன்னேன். அவரும் ஆஃபீஸ் பாயை (பாய் தான்..!) மொபைல்ல கூப்பிட்டு “ஏதாவது ஜூஸ் வாங்கிட்டு வா..ஆப்பிள்..ஆரஞ்சு..எதுன்னாலும் ஓகே”ன்னு சொல்லிட்டு, என்கிட்ட பேச ஆரம்பிச்சாரு.
அண்ணன்கிட்ட ஒரு அருமையான குணம் இருந்துச்சு..பொதுவா ஒரு பதிவர்கிட்ட ‘நான் முருக வேட்டைன்னு ஒரு தொடர் எழுதறேன்’ன்னு சொன்னா, ‘ஆங்..பார்த்தேன்..நான்கூட ஒரு தொடர் எழுதுனேன் முன்னாடி படிச்சீங்களா’ன்னு ஆரம்பிச்சு அவங்க எழுதுனதைப் பத்தியே பேசுவாங்களேயொழிய நம்மளைப் பத்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அண்ணன் ரொம்ப நேரம் என் பதிவுகளைப் பத்தி விலாவரியாப் பேசுனாரு..

அப்புறம் தான் கவனிச்சேன்..அவருக்குப் பின்னாடி வரிசையா ஏகப்பட்ட சாமி ப்டங்களா மாட்டியிருந்துச்சு..அண்ணனோட தேஜஸ்க்கும் அதுக்கும் ஏகப் பொருத்தம்..நம்ம நித்திக்கு வேற மார்க்கெட் போயிருச்சே..பேசாம அண்ணன் கழுத்துல கொட்டையை மாட்டி, களத்துல இறக்கிடலாமான்னு யோசிச்சேன். ஆனாலும் ஆப்பிள் ஜூஸ் வர்ற வரைக்குமாவது சும்மா இருப்போம்னு நான் ஒன்னும் சொல்லலை.

ஆனாலும் தவளையும் தன் வாயால் கெடும்கிற கதையா ‘நான் இன்னிக்கு காலைல ஒரு போஸ்ட் போட்டிருக்கேன்..பார்த்தீங்களா?”ன்னு கேட்டுட்டேன். ‘அப்படியான்னு கேட்டுக்கிட்டே பக்கத்துல இருந்த கம்ப்யூட்ட்ர்ல ‘ஜெ.வின் ஓராண்டு ஆட்சி-ஒரு பார்வை’ங்கிற பதிவை ஓப்பன் பண்ணாரு..கொஞ்சம் படிக்கவுமே டென்சன் ஆகிட்டாரு. அண்ணன் அந்தக் காலத்துல இருந்தே மம்மி ரசிகர் போல..

’பதிவை இன்னும் நல்லா எழுதியிருக்கலாம்’னு ஆரம்பிச்சு ‘இது நல்ல ஆட்சி தான்’ங்கிற மாதிரியே பேசுனாரு. பேசிக்கிட்டே மொபைலை எடுத்து யாருக்கோ மிஸ்டு கால் வேற கொடுத்தாரு. நமக்கு பகீர்னு ஆகிடுச்சு..ஆஹா..தேவையில்லாம ஒரு தொழிலதிபரை பகைச்சுக்கிட்டமேன்னு கவலையாப் போச்சு.

ஜூஸ் வாங்கப் போன ஆளும் திரும்பி வந்தாரு..பார்த்தா அரை டம்ப்ளர்ல கொஞ்சூண்டு பெப்சி..’ஆஹா..அண்ணன் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்து ஜூஸை பெப்சி ஆக்கிட்டாரே..இனிமே யாரையும் சந்திக்கிறதா இருந்தா, அன்னிக்கு பதிவே போடக்கூடாதுங்கிற பாடத்தைக் கத்துக்கிட்டேன். அப்புறம் அண்ணன் பல பதிவுகலக பயங்கர ரகசியங்களைப் பத்திப் பேசுனாரு..பல நல்ல அட்வைஸ்லாம் கொடுத்தாரு. அடுத்து அண்ணன் சொன்னதைக் கேட்டுத் தான் நான் மெல்ட் ஆகிட்டேன்.

ரொம்ப கேசுவலா “எங்கயும் போகணும்னா என் காரை எடுத்துக்கிட்டுப் போங்க..சும்மா தயங்காமக் கேளுங்க’ன்னாரு. நான்லாம் என் பையனோட பொம்மைக் காரையே யாருக்கும் தர மாட்டேன்..பக்கத்து வீட்டுப் பையன் வந்து கதவைத் தட்டுனா, அந்த பொம்மைக் காரை ஒளிச்சு வச்சுட்டுத் தான் கதவையே திறப்பேன்..ஆனா அண்ணனுக்கு எவ்ளோ பெரிய மனசுன்னு நினைச்சு புல்லரிச்சுப் போச்சு எனக்கு.

அண்ணனும் தொடர்ந்து “நான் ரொம்ப சிம்பிளா இருப்பேங்க..கார்ல ஆஃபீசுக்கு வந்தாலும், கீழேயே காரை விட்டுட்டு வந்திடுவேன். இந்த ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு நடந்தே தான் வருவேன்’ன்னாரு..இதன்மூலமா அண்ணன் பூந்தி மாதிரி இனிமையானவர் மட்டுமில்லை, காந்தி மாதிரி எளிமையானவர்னும் தெரிஞ்சுக்கிட்டேன்.

அப்புறமா வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு, வீடு இருக்கிற இடத்தைச் சொன்னாரு..அது என் அண்ணன் இருக்கிற ஏரியா..அவரைத் தெரியுமான்னு கேட்டேன்..அடடா..அவர் என் ஃப்ரெண்டுங்க..அவர் தம்பியா நீங்கன்னு ரொம்ப சந்தோசப்பட்டார்.

‘ஆஹா..நாம ஃபாரின் ரிட்டர்ன்..பெரிய அப்ப்பாடக்கர்னு பீலா விடலாம்னு வந்தா, மனுசன் மெயின் ஆளையே கைக்குள்ள வச்சிருக்காரே’ன்னு நினைச்சுக்கிட்டு, ஆஃப் ஆகிட்டேன்..

அதுக்குள்ள அந்த அரை டம்ப்ளர் பெப்சியும் தீர்ந்து போயிடுச்சு..”சரிண்ணே, நான் கிளம்பறேன்”ன்னு சொல்லிட்டு எழுந்தேன்.

அவரும் எழுந்து கை கொடுத்துட்டு “சரி, ஃப்ரீ ஆகிட்டு வாங்க..சாப்பிடப் போகலாம்”னாரு.

அடப்பாவிகளா..போகலாம்.போகலாம்ங்கிறாங்க..ஆனா யாரு பே பண்ணுவாங்கன்னு சொல்லவே மாட்டேங்கிறாங்களேன்னு நொந்துக்கிட்டே திரும்பிட்டேன்.

இவ்வாறாக ஒரு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்த திருப்தியுடன், அந்த பதிவர் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.

மேலும் வாசிக்க... "இம்சையுடன் ஒரு பதிவர் சந்திப்பு..."

Wednesday, May 23, 2012

தன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா? (நானா யோசிச்சேன்)

நெஞ்சைத் தொட்ட வரிகள்:

ஹய்யோ.ஹய்யய்யோ...
ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ...

ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா!

ஹார்ட் அடிக்குது தானா
நீ ராஜஸ்தானி மானா?

ஹய்யோ.ஹய்யய்யோ...
ஏ..ஹய்யோ.ஹய்யய்யோ!

பதிவர் கலந்துரையாடல்:

காலை 8 மணி:

நான் : ஹலோ...கஸாலி...எப்படி இருக்கீங்க?

கஸாலி: நல்லா இருக்கேங்க..இப்போ கடைக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..அப்புறம் நானே கூப்பிடட்டுமா?

நான்:ஓகே..ஓகே..நான் சும்மா தான் கூப்பிட்டேன்..பார்ப்போம்.

காலை 10 மணி :

கஸாலி: என்ன தலைவரே, எப்படி இருக்கீங்க?
நான் : நல்லா இருக்கேன், கஸாலி, நான் இப்போ கோவில்பட்டி போய்க்கிட்டு இருக்கேன். அப்புறம் கூப்பிடட்டுமா?
கஸாலி: பரவாயில்லைங்க..போய்ட்டு வாங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மதியம் ஒரு மணி:

நான்: என்ன தலைவரே.........பிஸியா?
கஸாலி: இல்லைங்க..சாப்பிடப் போகலாம்னு கிளம்பினேன்.
நான்: ஓ..சரிசரி..சாப்பிடப் போங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மாலை 4 மணி :

கஸாலி: என்னங்க..என்ன செய்றீங்க?
நான் : ஒரு நிலம் ஒன்னு பார்க்க வந்திருக்கிறேன்..அப்புறம் கூப்பிடட்டுமா?
கஸாலி: பாருங்க..அபருங்க..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.

மாலை 6 மணி:
நான் : கஸாலி..செங்கோவி பேசறேன்

கஸாலி : கடைல கொஞ்சம் கூட்டமா இருக்கு..அப்புறம் கூப்பிடட்டுமா?
நான் :ஓகே..ஓகே..நான் சும்மா தான் கூப்பிட்டேன்.


இத்தனையும் பார்த்துக்கிட்டிருந்த என் தங்கமணி : அடப்பாவிகளா.... நீங்க 2 பேரும் தான் இப்படியா? இல்லே, எல்லாப் பதிவர்களுமே இப்படித் தானா?

அவ்வ்வ்வ்வ்!

அஞ்சலியின் அட்டகாசம் :

கலகலப்பு படம் இன்னும் பார்க்கலை. ஆனாலும் அஞ்சலி அதீத கவர்ச்சி காட்டியிருக்கிறதா ஒரு தகவல்...ஏறகனவே அஞ்சலி கவர்ச்சி காட்டுறது ‘ராமராஜன் கையில மெசின்கன்னைக் கொடுத்தா மாதிரி’ இருக்குன்னு சொல்லிட்டேன்...ஆனாலும் அந்தப் புள்ளை திருந்தற மாதிரித் தெரியலியே..இதைவிடக் கேவலமா எப்படிச் சொல்ல..கேப்டன் கையில ரோசாப்பூ கொடுத்த மாதிரின்னு சொல்லலாமா? நமக்கு என்ன வருதோ, அதை ஒழுங்காப் பண்ணிக்கிட்டுப் போனாப் போதாதா..எதுக்கு இந்த வேண்டாத வேலை..

ஏன் அஞ்சலி இப்படி கவர்ச்சிக்கன்னி ஆகியே தீருவேன்னு அடம்பிடிக்குது? யாராவது அதுக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?மத்தவங்களை விடுங்க.. ‘கூடவே’ இருந்த கேபிளாராவது “இதோ பாரும்மா..ஆண்டவனே நினைச்சாலும் இனிமே உன்னால கவர்ச்சியாவும் ஆக முடியாது..கன்னியாவும் ஆக முடியாது”ன்னு சொல்லியிருக்கலாம்ல? ஒருவேளை மனுசன் ‘யூத்’துங்கிறதுக்கு தப்பான அர்த்தத்தை அஞ்சலிக்கும் சொல்லிக் கொடுத்திட்டாரோ?..முடியலை பாஸ், முடியலை!


ரஞ்சிதானந்தா:

நித்தி ஒரு வழியா உண்மையை ஒத்துக்கிட்டாரு..ஆமாங்க..’நான் ஆணுமல்ல..பெண்ணுமல்ல’ன்னு ஓப்பனா சொல்லிப் புட்டாருல்ல..

அந்த வீடியோ பார்த்தப்பவே எனக்கு டவுட்டுங்க..என்னடா இது..ரஞ்சிதாவை சீரியல்ல பார்த்தாலே பசங்க நிலைமை சீரியஸ் ஆகிடுமே..இந்த மனுசன்  ரஞ்சி மாஞ்சு மாஞ்சு சேவை செய்யும்போது யார் வீட்டு எழவோனு டிவில சீரியல் பார்க்கானேன்னு நினைச்சேன்..நினைச்சது சரியாப் போச்சு..ஆனா, அந்த ரஞ்சியைத் தாங்க நம்மால புரிஞ்சிக்க முடியலை..ஏன் இப்படி ஒரு பாழுங்கிணத்துல போயி தண்ணி இறைச்சாரு?

தன்ஷா..ஹன்ஸா?:

போன வாரம் ஏதோ ஒரு வேகத்துல ஹன்சி மன்றத்தைக் கலைக்கலாமான்னு கேட்டுட்டேன்..உடனே ஒரு பதிவர் கிட்டேயிருந்து ஃபோன்..ஒரு பதிவர் என்ன..ஒரு பதிவர்..நம்ம தமிழ்வாசி தான் அது...(இப்போல்லாம் நாம ஒரு கிசுகிசு எழுதுனா, 4 பேர் வந்து என்னைத் தானே சொன்னே?-ன்னு கேட்டு 4 வேறவேற மேட்டர் சொல்றாங்க..எதுக்கு வம்பு!)..

தமிழ்வாசி ஃபோன் பண்ணி எனக்கு ஆறுதல் சொல்லிட்டு “நீங்க ஹன்சிக்குப் பதிலா தன்ஷிகாவை  ஏன் வச்சுக்கக்கூடாது?”ன்னு கேட்டார்.

இன்ப அதிச்சியாகி “வாட் டூ யூ மீன்”னு கேட்டேன். அவரும் உஷாராகி “தலைவியா ஏன் வச்சுக்கூடாது?”ன்னு கேட்டேன்,

“அப்படியா...சரி, தன்ஷிகா யாரு?”ன்னு கேட்டேன்.

“என்னய்யா இப்படிக் கேட்கீரு? தன்ஷிகா தெரியாதா? பேராண்மைல ‘ஒன்னுமில்லாம’ ஹாஸ்டலைச் சுத்தி வருமே..இப்போ அரவான்லகூட காட்டுகாட்டுன்னு காட்டியிருந்துச்சே”ன்னாரு..

நமக்கு டென்சன் ஆகிருச்சு..”யோவ், அது பார்க்கிறதுக்கு எங்கூர்ல ஆடு மேய்க்கிற பிள்ளை மாதிரில்ல இருக்கு..நம்ம ஹன்சி எங்கே..அது எங்கே..போய்யா”ன்னு ஃபோனை கட் பண்ணிட்டேன்..

என்ன அநியாயம் பாருங்கய்யா..நம்ம பரந்த மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு பரந்த ஃபிகரைக் காட்டாம இப்படி வத்தலும் தொத்தலுமாக் காட்டுனா எப்படிய்யா...ஹன்சியை ஏன் விடணும்..இல்லே, ஏன் விடணும்ங்கிறேன்..’பாழடைஞ்ச’ பத்மினியைவே நாம கைவிட்டதில்லையே..இந்த பளபள பங்களாவை ஏன்யா கைவிடணும்? கழுதை, அதுவும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போகட்டும்கிறேன்..என்னாங்கிறீங்க?

குவைத்துக் காரனுகளாம்...........!

என் பையன் அட்டகாசம் தாங்க முடியலீங்க..குவைத்ல ஜெயில்ல இருந்த மாதிரி இருந்துட்டு, இங்க வரவும் ஆளைப் பிடிக்க முடியலை..கடைக்குப் போய்க் காசு கொடுத்தாத் தான் மிட்டாய் தருவாங்கன்னும் புரிஞ்சுக்கிட்டான்..ரெண்டு நாள் முன்னே, பர்ஸை எப்படியோ கீழே வச்சுட்டேன். பையன் அதுல இருந்து ஒரு ஆயிரம் ருபா நோட்டை உருவிக்கிட்டு, நைஸா கடையைப் பார்த்து எஸ் ஆகியிருக்கான். நேரா கடைக்குப் போய் ஆயிர ருபா நோட்டைக் கொடுத்துட்டு, ஒரு ருபா வாட்ச் மிட்டாய் வாங்கிட்டு திரும்பிட்டான். கடைக்காரர் தான் மிரண்டுட்டாரு..

‘ஏ..ஃபாரின் போன எத்தனையோ பயலுகளைப் பார்த்திருக்கேம்யா..ஆனா செங்கோவி மாதிரி ஒரு பந்தாப் பேர்வழியைப் பார்த்ததில்லைய்யா..பிள்ளைக்க்கு முட்டாய் வாங்க ஆயிர ரூபா நோட்டால்ல கொடுத்து வுடுதான்..இங்கே இருந்த வரைக்கும் நல்லாத் தானய்யா இருந்தான்..ஒரு வருசத்துக்குள்ள வடிவேலு மாதிரில்ல ஆகிட்டான்’-ன்னு ஆரம்பிச்சு கடைக்காரரு நம்மை நாறடிச்சுப்புட்டாரு...

அட அசட்டுப்பய மவனே..இப்படியாடா பண்ணுவே...அப்பன் பேரை ஒரே நாள்ல இப்படி ரிப்பேர் ஆக்கிட்டயே...சீக்கிரம் உன்னை பேக் பண்ணனும்டோய்!

தீவிரமா யோசிக்கிறது..:
நம்ம நாடு எப்போ ஃபாரின் மாதிரி ஆகும்னு முன்னாடி யோசிச்சிருக்கேன்..ஆனா விலைவாசி விஷயத்துல இப்பவே ஃபாரின் மாதிரி ஆகிடுச்சே..100 ரூபா இல்லாம பொட்டிக்கடைக்குப் போக முடியலை..500 ரூபா இல்லாம சும்மாகூட கோவில்பட்டிக்குப் போக முடியலை!

மாமனார் ஊருல இருந்து சொந்த ஊருக்கு வந்ததுல இருந்து கறியே எடுக்கலியே..இன்னிக்கு எடுப்போம்னு போனா..ஒரு கிலோ மட்டன் 400 ரூபாங்கிறாங்க..என்னய்யா இது..இப்படி இருந்தா ஒரு மனுசன் எப்படிக் க்றி சாப்பிடறது..இவங்களே நம்மளை ஜீவ காருண்ய சங்கத்துல சேர்த்து விட்ருவாங்க போலிருக்கே...

இப்போ என்ன பண்றது?..பேசாம மாமனார் ஊருக்கே திரும்பப் போயிடலாமா?......ஒரு மனுசனுக்கு எது முக்கியம்? மட்டனா?.....மான ரோசமா?

அய்யோ...அம்மா...:

மேலும் வாசிக்க... "தன்ஷிகா தான் இனி ஹன்சிகாவா? (நானா யோசிச்சேன்)"