நேற்று சென்னையில் ’தனி ஈழமே தீர்வு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழீழப் பிரச்சினைக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்ற ஈழத்தியாகி ஐயா.ராமதாஸ் அவர்கள் தலைமையில் இந்தக் கருத்தரங்கு ‘ஈழத் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்ந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஈழ விஷயத்தில் கடும் மறதி நோயால் அவதிப்பட்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்த ஐயா.ராமதாஸ் அவர்களும் தொல்.திருமாவளவனும், தமிழக மக்கள் தேர்தலில் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் தெளிந்து நோயிலிருந்து மீண்டு வந்ததை, உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அறியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே உலக வாழ் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
முள்வேலியில் ஈழத் தமிழர்களைப் பார்த்துவிட்டு வந்து முள்வலி எழுதிவிட்டு, துக்கம் தாளாமல் முள்வேலி ஸ்பான்சரான காங்கிரசைக் கட்டிப் பிடித்து அழுத திருமாவளவன், ஒருவழியாக தன் துக்கத்தில் இருந்து மீண்டதை சென்ற வாரம் கொடுத்த அறிக்கை மூலமே தெரிந்திருப்பீர்கள்.
அதாகப்பட்டது ‘ராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருப்பதற்கு’ அன்னார் தன் கடும் கண்டனத்தை அந்த அறிக்கையில் பதிவு செய்திருந்தார்கள். அப்போதும் சில துரோகிகள் ‘இலங்கைக்கு டூர் சென்ற திருமாவை உள்ளடக்கிய தமிழக எம்.பிக்கள், ராஜபக்ஷேவுடன் விருந்து உண்ணாமல் வேறு எதை உண்டார்கள்’ என்று கேள்வி எழுப்பியதை நாம் அறிவோம்.
ஆனால் இத்தகைய அவதூறுகளுக்கு அஞ்சுபவனும் மானரோசம் உள்ளவனும் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்ட்டான் என்ற மூதுரைக்கு இணங்க திருமாவளவனும் ராமதாசும் வெட்கம் விட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதற்கு நன்றி சொல்லிக் கொள்வோம். இத்தகைய சிறப்புப் பெற்ற தலைவர்கள் கலந்துகொண்ட சிறப்புப் பெற்ற கூட்டத்தில் திருமாவளவன் பேசிய பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் சாராம்சம் பின்வருமாறு:
”தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். ”
மூன்றாந்தர பிட்டுப் படங்களில்கூடக் கேட்க முடியாத, குடிகாரனின் ரகளையில்கூடக் கேட்டிராத, தெருச்சண்டையில் வீரப் பெண்மணிகளின் வாயில் இருந்தும் கேட்டிராத ஆபாசமான அருவருக்கத்தக்க இந்த வசனத்தை தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ்க்குடிதாங்கி ராமதாஸ் முன்னிலையில் பேசியதைக் கேட்டு, அங்கு கூடியிருந்த தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
நமது நிலை இதையெல்லாம் கேட்கும்படி ஆகிவிட்டதே என தமிழ் உணர்வாளர்கள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி தமிழினத்தலைவரிடம் கருத்துக் கேட்டபோது ‘நான் மெரீனா பீச்சில் நடித்த ஆபாசக்காட்சியையும் இது விஞ்சி விட்டது’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆபாசப் பேச்சு அடங்கிய ஒலிநாடா வெளியில் பரவாமல் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் அவா. செய்வாரா ஈழத் தாய்?
திருமா... இது தகுமா?
ReplyDeleteஆஜர்
ReplyDelete//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதிருமா... இது தகுமா?//
தமிழ்வாசி தானா?..தமிழ் விளையாடுதே..
//மாய உலகம் said...
ReplyDeleteஆஜர்//
ரைட்டு.
தமிழீழப் பிரச்சினைக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்ற ஈழத்தியாகி ஐயா.ராமதாஸ்>>>>>
ReplyDeleteராமதாசின் அடைமொழி நீங்களா யோசிச்சிங்களா?
காங்கிரசைக் கட்டிப் பிடித்து அழுத திருமாவளவன், >>>>
ReplyDeleteஎன்ன கொடுமை சரவணன்?...
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதமிழீழப் பிரச்சினைக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்ற ஈழத்தியாகி ஐயா.ராமதாஸ்>>>>>
ராமதாசின் அடைமொழி நீங்களா யோசிச்சிங்களா?//
ஆமா..நானா யோசிச்சேன்!
”தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். - திருமா>>>>>>
ReplyDeleteநான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...
//
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
”தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். - திருமா>>>>>>
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..//
நீங்க மட்டுமா..செய்தி கேள்விப்பட்ட எல்லாருமே தான்!
திருமாவும், வைக்கோவும் சேர்ந்து கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும்! ஆனால் அதெல்லாம் நடக்க விட மாட்டார்கள்!
ReplyDeleteஇந்த ஆபாசப் பேச்சு அடங்கிய ஒலிநாடா வெளியில் பரவாமல் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் அவா. செய்வாரா ஈழத் தாய்?///செய்வார்!!!!
ReplyDeleteகட்ந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஈழ விஷயத்தில் கடும் மறதி நோயால் அவதிப்பட்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்த ஐயா.ராமதாஸ்.////இன்னமும் இவர்களை புலம்பெயர் தமிழர்கள் நம்புகிறார்களே?
ReplyDeleteமுள்வேலியில் ஈழத் தமிழர்களைப் பார்த்துவிட்டு வந்து முள்வலி எழுதிவிட்டு, துக்கம் தாளாமல் முள்வேலி ஸ்பான்சரான காங்கிரசைக் கட்டிப் பிடித்து அழுத திருமாவளவன்.////என்னங்க நீங்க,இப்புடி சீப்பா கிண்டல் பண்ணுறீங்க?
ReplyDelete”தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன்.///சரியாத் தானே பேசியிருக்காரு?இவரு(திருமா) சிறி-லங்கா பார்லிமெண்டு மெம்பர் தானுங்களே?
ReplyDeleteஇது நல்ல sattireஎல்லோறோம் படிக்க வேண்டிய பதிவு
ReplyDeleteபிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாஸ்.
ReplyDeleteஅரசியலில் மாறி மாறி பேசுவது வழக்கம் தானே .
ReplyDeleteஅப்பிடி பேசவில்லை என்றால் தான் அதிசியம்
//”தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். ”//
ReplyDeleteயோவ் இந்த தமிழக அரசியல் வாதிகள் தொல்லை தாங்க முடியலைப்பா.இலங்கையில் யுத்தம் நடை பெற்ற போது அதைவைத்து அரசியல் நடத்தினாங்க.இப்ப யுத்தம் முழுமையா முடிவடைந்த நிலையில் அமைதியாக கடந்தகால வடுக்களை மறந்து நாம் வாழ்கின்றநிலையில்.மீண்டும் என்னாதுக்கையா தனித்தமிழ் ஈழம் அப்படி இப்படினு உங்கள் அரசியலுக்கு எங்களை பலிக்கடாவாக்குகின்றீர்கள்.
Sunday, August 07, 2011
ReplyDelete6/7
கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்
நண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவும். நம் இந்திய தலைவர்கள் என்ற பெயரில் இருக்கும் திருடர்கள் ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தின் பட்டியல் இது.
நமக்காக ஓடாய் உழைத்து ஓய்வெடுக்க விருப்பம் இல்லாமல் இன்னமும் உழைத்துக் கொண்டு இருப்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளவும். இந்த பட்டியலின் படி கலைஞர் கருணாநிதி பெயரில் ஸ்விஸ் வங்கியில் இருப்பது 35,000 கோடி. ப.சிதம்பரம் பெயரில் 32,000 கோடி. மத்திய அமைச்சராக இருந்தும் இந்த செட்டி நாட்டு தங்கத்துக்கு கலைஞர் அளவுக்கு திறமை போதவில்லை போலும்.
மற்ற தங்கங்களின் பெயர் பட்டியலை இந்த படத்தை சொடுக்கி சற்று பெரிதாக்கி பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளவும். உங்கள் வசதிக்காக இதில் உள்ள சில பெயர்களையும் தந்து விடுகின்றேன். ஆர்வக்கோளாறு காரணமாக நீங்கள் விட்டுவிடக்கூடாது.
பழனிமாணிக்கம், சரத்பவார், பிராணப்முகர்ஜி, திஹார் ராஜா, சுரேஷ்கல்மாடி, இன்னும் நிறைய தறுதலைகள் இருக்கிறார்கள். முறைப்படி இந்த விசயத்தை சுடுதண்ணி எழுதியிருந்தால் சிறப்பாக வந்து இருக்கும். ஆர்வக்கோளாறு காரணமாக நண்பர் சித்ரகுப்தன் சுடுதண்ணிக்கு அனுப்பி விட்டு எனக்கும் இதை அனுப்பியதோடு அழைத்தும் சொல்ல பட்டியலில் உள்ள தலைகளைப் பார்த்து தொடர்ச்சியாக எனக்கு பேதியாக போய்க் கொண்டு இருக்கிறது.
சும்மா சொல்லக்கூடாது?
அசாஞ்சே அசாத்தியமான மனிதர் தானே? எங்கோயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சரவணபவன் விலைப்பட்டியல் மாதிரி என்னவொரு அழகாக தொகுத்து கொடுத்துள்ளார். ஒரு வேளை இது பாகம் ஒன்றாக இருக்கும் போல.
விரைவில் அடுத்த பட்டியல் வெளிவர எல்லாம் வல்ல சக்தியை பிரார்த்தனை செய்வோம். இந்த பட்டியலை கவனமாக படித்து முடித்ததும் யாரும் எவர்மேலும் பொறாமைப்படக்கூடாது. ஒரு வேளை அசாஞ்சே நம்மவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகின்றது. அவருக்கு மின் அஞ்சல் அனுப்ப உடன்பிறப்புகள் துடியாய் இருந்து தொலைக்கப் போகிறார்கள்.
வாழ்க் இந்தியா. வளர்க இந்திய ஜனநாயகம்.
தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். ” //
ReplyDeleteடேய் டேய் டேய் டேய் செவப்பு சட்ட, யாரடா ஏமாத்த பாக்குற?
இன்னுமுமாடா இந்த ஊரு உன்ன நம்பும்னு நெனச்சுகிட்டு இருக்க...
போதும் இவனுங்க ஈழத்துக்கு தீர்வு காணுவாங்கன்னு நம்பி நம்பி கெட்டது எல்லாம் போதும், நம்மால முடிஞ்சத நாமலேதான் செஞ்சுக்கணும்
மாப்ள ஒரு வேலை நண்பர்கள் தின கொண்டாட்டமா இருக்குமோ...நீர் தான்யா தப்ப புரிஞ்சி கிட்டீர் ஹிஹி!
ReplyDeleteமாப்ள தலைப்பு நச் சின்னு இருக்கு மாப்ள..
ReplyDeleteவாழ்த்துக்கள் மாப்ள..
ReplyDeleteநண்பரே!
ReplyDeleteகாமெடியா கடிச்சு குதறி இருக்கீங்க...
ஆனா அவங்களுக்கு வலிச்சிருக்காது.
வலியெல்லாம் சூடு சொரணை இருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்படும்.
@தமிழன் //திருமாவும், வைக்கோவும் சேர்ந்து கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும்! // எதுக்குய்யா இந்த விபரீத ஆசை..
ReplyDelete@Yoga.s.FR //சரியாத் தானே பேசியிருக்காரு?இவரு(திருமா) சிறி-லங்கா பார்லிமெண்டு மெம்பர் தானுங்களே?//
ReplyDeleteஏறக்குறைய அப்படித்தான்..
@ரியாஸ் அஹமது நன்றி ரியாஸ்..
ReplyDelete@KANA VARO //பிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாஸ்.// நன்றி + வாழ்த்துகள் கண வரோ!
ReplyDelete@M.R //அரசியலில் மாறி மாறி பேசுவது வழக்கம் தானே .// ஆனாலும் நெஞ்சு பொறுக்குதில்லையே..
ReplyDelete@Kss.Rajh //இப்ப யுத்தம் முழுமையா முடிவடைந்த நிலையில் அமைதியாக கடந்தகால வடுக்களை மறந்து நாம் வாழ்கின்றநிலையில்.மீண்டும் என்னாதுக்கையா தனித்தமிழ் ஈழம் அப்படி இப்படினு உங்கள் அரசியலுக்கு எங்களை பலிக்கடாவாக்குகின்றீர்கள்.// அடுத்த தேர்தல்வரை வேறு எதை வைத்து அரசியல் நடத்துவதாம்..
ReplyDelete@arulgene தகவலுக்கு நன்றி நண்பரே..நம் தலைவர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது..
ReplyDelete@Heart Rider //இன்னுமுமாடா இந்த ஊரு உன்ன நம்பும்னு நெனச்சுகிட்டு இருக்க...// அப்படித்தான் நினைக்கிறாங்க..ஆனா எப்படியும் 2 1/2வருசம் கழிச்சு கண்டிப்பா திருமா ராஜினாமா பண்ணிடுவார் பாருங்க!
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! ரைட்டு.
ReplyDelete>>தமிழ்வாசி - Prakash said... [Reply]
ReplyDeleteதிருமா... இது தகுமா?
யோவ் பிரகாஷ், அண்ணனுக்கே டைட்டில் எடுத்து தர்றீங்களா?எங்கண்ணன் டைட்டில் வைப்பதில் நிரூபனுக்கு அடுத்த இடம் , தெரியுமல்ல?
@FOODஓகே ஆஃபீசர் சார்.
ReplyDelete@உலக சினிமா ரசிகன் //காமெடியா கடிச்சு குதறி இருக்கீங்க...//
ReplyDelete‘மனசாட்சி இருக்கா..மனுசங்களா நீங்க’ன்னு காட்டமா ஒரு பதிவு எழுதிட்டு அப்புறம் வெக்ஸ் ஆகி, இதை எழுதுனேன்...என்ன செய்ய!
@சி.பி.செந்தில்குமார் //அண்ணனுக்கே டைட்டில் எடுத்து தர்றீங்களா?எங்கண்ணன் டைட்டில் வைப்பதில் நிரூபனுக்கு அடுத்த இடம் , தெரியுமல்ல?// உஷ்..இதெல்லாம் வெளில சொல்லலாமா..
ReplyDeleteதிருமாவளவன்:
ReplyDeleteஇன்று சொன்னவை -
தனி ஈழத்துக்காக எம்.பி. பதவியை துறக்கத் தயார்
நேற்று சொல்லாமல் செய்தவை -
எம்.பி.பதவிக்காக தனி ஈழத்தை துறக்கத் தயார்
நாளை என் சொல்வாரோ, என் செய்வாரோ யாரரிவார்
தமிழ்வாசி இன்னைக்கு தான் பேரை காப்பாதியிருக்கிறார் செங்கோவி...
ReplyDeleteஇந்த புத்தி கெட்ட அரசியல்வாதிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
இந்தாளுக்கு வேற வேலையே கிடையாது போல எங்க போனாலும் இதே பேச்சு....
ReplyDeleteஇவங்க கூட்டத்துக்கு எல்லாம் மக்கள் எப்படி நம்பி போறாங்க?
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteராமதாஸ் முன்னிலையில் திருமாவளவன் ஆபாசப் பேச்சு-பரபரப்பு//
ஆகா...இது டெரரா எல்லே இருக்கு, இருங்க உள்ளே போய்ப் படிக்கிறேன்.
கட்ந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் ஈழ விஷயத்தில் கடும் மறதி நோயால் அவதிப்பட்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்த ஐயா.ராமதாஸ் அவர்களும் தொல்.திருமாவளவனும், தமிழக மக்கள் தேர்தலில் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால் தெளிந்து நோயிலிருந்து மீண்டு வந்ததை, உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் அறியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே உலக வாழ் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.//
ReplyDeleteமக்களை இனியும் ஏமாற்றலாம் என்று நினைத்திருப்பார்கள்.
ஆனால் மக்கள் தேறிட்டார்கள் என்பது இவர்களுக்குத் தெரியவில்லைப் போலும்.
இவர்கள்தான் இன்றைய அரசியலின் கதாநாயகர்கள், காமெடியன்கள்.. ஆனால் உண்மையில் இவர்கள்தான் இங்கு வில்லன்களும்.. ஒரே குழப்பமாக இருக்கிறது..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/
”தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். //
ReplyDeleteமச்சி, இலங்கைப் பார்லிமெண்டுக்கு வந்த போது திருமா என்ன சொன்னார்?
ஹி....ஹி...
படத்தோடு முகத்திரை கிழித்திருக்கிறீங்க.
சரியான சாட்டையடிப் பதிவு.
இந்த ஆபாசப் பேச்சு அடங்கிய ஒலிநாடா வெளியில் பரவாமல் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் அவா. செய்வாரா ஈழத் தாய்?//
ReplyDeleteமக்கள் என்ன இளிச்ச வாயர்கள் என்ற நினைப்பிலா இப்படியெல்லாம் பேசுகிறார்கள் இந்தப் புத்தியற்றவர்கள்.
ஒலிநாடா வெளியில் வந்தாலும், மாற்றம் ஏதும் நிகழாது என்பது தான் என் கருத்து.
''தமிழீழப் பிரச்சினைக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்ற ஈழத்தியாகி ஐயா.ராமதாஸ்'' -சூப்பர்ர்ர்ர்ர...
ReplyDeleteமொத்தத்தில்
சரியான சாட்டையடி!!
நீங்க திருமா கருத்தை வஞ்சப்புகழ்ச்சி பாடாமல் நேரடியாக தலையில் கொட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.நேற்றைய கருத்தரங்கின் திருமாவின் பேச்சை வாசிக்க நேர்ந்தது.நீங்க திருமாவை வையற மாதிரி திருமா சீமானை மறைமுகமாகத் தாக்கியிருந்தது புரிந்தது.
ReplyDeleteதிருமா,ராமதாஸின் தமிழீழம் குறித்த உணர்வைக் குறைத்து மதிப்பிட முடியாது.ஆனால் இவர்கள் அனைவரும் செய்யும் ஒரே தவறான அணுகுமுறை தமிழகத்தில் தங்கள் கட்சி சார்ந்த நலனில் தமிழீழத்தை அணுகுவதுதான்.ராமதாஸைக்கூட தனது மகனுக்கான ராஜ்யசபா சீட்டு என்ற சுயநலம் இருக்கும்.ஆனால் திருமாவுக்கான தி.மு.க சார்ந்த காங்கிரஸ் கூட்டணிக்கும்,மேடை அலங்கார சோனியா புகழ்ச்சிக்கும் ராமதாஸ்க்கும் மேலான சுயநல அரசியலே திருமாவுக்கு எனபது வெள்ளிடை மலை.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.
ReplyDeleteஅவனவன் பாராளுமன்றத்தில் ஒரு கேள்வியை முன்வைப்பதற்கு எம்.பிக்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்தாவது கேள்வி எழுப்ப முயற்சி செய்யும் போது திருமா எம்.பி பதவியில் ஒரு பலனும் இல்லையென்பது என்.சி.சியில் பூரி மசாலா சாப்பிட இணைந்தது மாதிரி உள்ளது.
ReplyDeleteஜனநாயக அரசியல் சார்ந்த பதவியென்ற ஆயுதத்தின் மூலமாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாவிட்டாலும் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும்,தொலைக்காட்சி,செய்திகள் வாயிலாக மக்கள் முன் வைக்கவும் கூடியது எம்.பி பதவி என்ற அடிப்படை அரசியல் அரிச்சுவடி கூட தெரியாமல் திருமா பேசுகிறார்.பதவி துண்டு போட்டுக்கிற மாதிரியென்று சொல்லி விட்டு அதுவே தனது கோமணம் என்று விடாமல் பற்றிக்கொள்கிற அரசியல்வாதிகள் மத்தியில் திருமா கூட ஒருவரே.தனக்கான நல்ல சந்தர்ப்பங்களை திருமா இழந்து விட்டார்.
ஒருவரை விமர்சனம் மட்டும் செய்யாமல் தீர்வுகளுக்கான வழிகளையும் முன்வைப்பதே நல்ல பின்னூட்டத்தின் அடையாளமாகும் என்பதில் நம்பிக்கை கொள்வதாலும்,தமிழீழம் என்ற சொல் தமிழர்களின் இன்றைய வாழ்வோடு இணைந்த பிரச்சினையென்பதாலும்,தமிழீழத்துக்குஎதிரானவர்கள் என்பதில் காங்கிரஸ் தவிர அனைத்துக்கட்சிகளும் ஒரே சிந்தனை கொண்டவைகளே என்பதாலும் கீழ்கண்ட தீர்வுகளை அலசுவோம்.
ReplyDeleteகட்சிகளுக்கும் அப்பாலான கொள்கையென்ற புரிதலும் இணைந்தே குரல் கொடுப்போம் என்ற அரசியலுக்கும் அப்பாலான விட்டுக்கொடுப்பும் இருந்தால் இந்தி போராட்டம் மாதிரி மத்திய அரசை தமிழகத்தின் குரலுக்கு அசைய வைக்க இயலும்.அதற்கான முட்டுக்கட்டைகளாக இருப்பது கருணாநிதி,ஜெயலலிதா என்ற ஈகோக்கள்.எனவே இரண்டு வலுவான கட்சிகள் இணைந்த போராட்டமென்பது தற்போதைக்கு சாத்தியமில்லை.முந்தைய தவறுகளை உணர்ந்தோ அல்லது தற்போதைய அரசியல்,சமூக நிலைகளை புரிந்தோ இன்னும் சொல்லப்போனால் கருணாநிதியால் இயலாததை என்னால் செய்ய முடிந்தது என்று தமிழகத்து உணர்த்தும் விதமாக அரசியல் அதிகாரத்தில் இருக்கும் ஜெயலலிதா தமிழீழம் சாதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
இரண்டு வலுவான கட்சிகளும் இணையாத நிலையில் தமிழீழ உணர்வாளர்கள் இணைந்து குரல் கொடுக்கும் வாய்ப்பிருக்கிறது.ஆனால் இங்கேதான் அனைத்து தமிழீழ உணர்வு தலைவர்கள் பல் இளிப்பதோடு பல்லுடைபடவும் செய்கிறார்கள்.
சீமான் செய்வது சரியா தவறா என்பதை அவரது செயலாற்றல்களின் அளவிலே எடை போட முடியும்.அதற்கான திருமாவுக்கான அனுபவ காலங்களைக்கூடத் த்ராது அவரை திருமா குத்திக்காட்டுவதில் அர்த்தமில்லை.
மூன்றாம் அணிக்கான சாத்தியம் சென்ற பாராளுமன்ற காலத்திலே அமைந்தது.அதனைக் கோட்டை விட்டு விட்டனர் தமிழ் உணர்வாளர்கள்.மீண்டும் அதே தவறை செய்யாமல் இணையும் பட்சத்தில் மட்டுமே ஜெயலலிதாவின் அதிகார பீட சாத்தியங்களுக்கும் அப்பாலான இன்னுமொரு வழி தமிழகம் சார்ந்த தமிழீழ குரலுக்கு வழி திறந்து விடப்படும்.
அப்போ அண்ணன் இனி எம்பி பதவிய ராஜினாமா பண்ணிடுவாரா? அய்யகோ என்னே சோதனை இது?
ReplyDelete//Karikal@ன் - கரிகாலன் said...
ReplyDeleteதிருமாவளவன்:
இன்று சொன்னவை -
தனி ஈழத்துக்காக எம்.பி. பதவியை துறக்கத் தயார்
நேற்று சொல்லாமல் செய்தவை -
எம்.பி.பதவிக்காக தனி ஈழத்தை துறக்கத் தயார் //
சூப்பர் பாஸ்..
// Reverie said...
ReplyDeleteதமிழ்வாசி இன்னைக்கு தான் பேரை காப்பாதியிருக்கிறார் செங்கோவி...
இந்த புத்தி கெட்ட அரசியல்வாதிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? // ஆமா, ப்ளாக் காமெடியைத் தவிர வேறெதும் எதிர்பார்க்க முடியாது.
// Carfire said...
ReplyDeleteஇவங்க கூட்டத்துக்கு எல்லாம் மக்கள் எப்படி நம்பி போறாங்க? //
ஃப்ரீயாவும் இருந்து பிரியாணியும் கிடைச்சா போறதுல என்ன தப்பு? டைம் பாஸுக்கு டைம் பாஸ்..பிரியாணிக்கு பிரியாணி.
நிரூபன் said...
ReplyDelete//இனிய காலை வணக்கம் பாஸ் // வணக்கம் நிரூ.
//ஆகா...இது டெரரா எல்லே இருக்கு, இருங்க உள்ளே போய்ப் படிக்கிறேன்.// உள்ளயும் டெரர் தான்..
//படத்தோடு முகத்திரை கிழித்திருக்கிறீங்க.
சரியான சாட்டையடிப் பதிவு.// நன்றி நிரூ.
//Sankar Gurusamy said...
ReplyDeleteஇவர்கள்தான் இன்றைய அரசியலின் கதாநாயகர்கள், காமெடியன்கள்.. ஆனால் உண்மையில் இவர்கள்தான் இங்கு வில்லன்களும்.. ஒரே குழப்பமாக இருக்கிறது..//
மன்னனும் நானே..மக்களும் நானே..மரம்செடி கொடியும் நானே-ங்கிற வாக்கை தப்பாப் புரிஞ்சிக்கிட்டாங்களோ..
//DRபாலா said...
ReplyDelete''தமிழீழப் பிரச்சினைக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்ற ஈழத்தியாகி ஐயா.ராமதாஸ்'' -சூப்பர்ர்ர்ர்ர...மொத்தத்தில் சரியான சாட்டையடி!!//
சவுக்கடி சாட்டையடியெல்லாம் எங்களுக்கு ரொம்பப் பழக்கமப்பு..
/ 'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteஅரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.// தெளிவா இருக்கீங்க போல..
ராஜ நடராஜன் said...
ReplyDelete//நீங்க திருமா கருத்தை வஞ்சப்புகழ்ச்சி பாடாமல் நேரடியாக தலையில் கொட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.//
கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் தான் முதலில் பதிவை எழுதினேன்..அதை மூன்றுமுறை படித்தபிறகே மனது அமைதியானது. பிறகு விரக்தியின் உச்சத்தில் வந்ததே இந்த வஞ்சப்புகழ்ச்சி..எழுதிய ஆவேசப்ப் அதிவை அழித்துவிட்டு, இவர்களுக்கு இது போதும் என்று பாடினேன்!!
//மூன்றாம் அணிக்கான சாத்தியம் சென்ற பாராளுமன்ற காலத்திலே அமைந்தது.அதனைக் கோட்டை விட்டு விட்டனர் தமிழ் உணர்வாளர்கள்.// உண்மை சார்..அருமையான வாய்ப்பு வந்தது..இவர்களின் ஈகோ பிரச்சினையில் அதுவும் நழுவியது. தொடர்ந்து இவர்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வாழ்க!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅப்போ அண்ணன் இனி எம்பி பதவிய ராஜினாமா பண்ணிடுவாரா? அய்யகோ என்னே சோதனை இது? // ஆமாம் பாஸ்..ஊர்ல இனிமே மழை பெய்யுமான்னு தெரியலையே..
ஹும்.. எந்தவித மாற்றுக்கருத்துக்கள் இல்லாமல்
ReplyDeleteஉடனே தடை செய்யவேண்டியது இது.
அம்மா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
\\தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன்.\\ தயாராத்தான் இருக்காரு, விடுறேன்னு அவர் சொல்லல. [வார்த்தைகளை எவ்வளவு நுணுக்கமாக கையால்கிறார்கள்னு கவனிக்கணும்.] கருணாநிதியும் ஆயிரெத்தெட்டு தடவை தமிழனுக்காக உசிரை விடுறேன்னு சொல்லுவார், ஆனா அவரோட தலையில் இருந்ததைக் கூட தமிழனுக்காக அவர் ஒருபோதும் விட்டதில்லை, [தானாத்தான் கொட்டுச்சு].
ReplyDeleteதமிழீழப் பிரச்சினைக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்ற ஈழத்தியாகி ஐயா.ராமதாஸ் அவர்கள் தலைமையில் இந்தக் கருத்தரங்கு ‘ஈழத் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.//எந்தவித மாற்றுக்கருத்துக்கள் இல்லாமல்
ReplyDeleteஉச்ச கட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது ,போரில் சாதாரண மக்கள் சாவது இயல்பான ஒன்று என்று சொல்லிவிட்டு இப்பொழுது மனம் மாறியிருக்கும் ஜெயலலைதாவை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், திருமா மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம் ?
ReplyDelete// "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
ReplyDeleteஹும்.. எந்தவித மாற்றுக்கருத்துக்கள் இல்லாமல்
உடனே தடை செய்யவேண்டியது இது. //
செய்தியைப் படிச்ச நீங்களே இப்படி நொந்தா, நேர்ல பார்த்தவங்க நிலைமையை நினைச்சுப் பாருங்க.
// Jayadev Das said...
ReplyDelete\\தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன்.\\ தயாராத்தான் இருக்காரு, விடுறேன்னு அவர் சொல்லல. //
திருமாவைப் பத்தித் தெரியாமப் பேசாதீங்க..நிச்சயம் அவரு எம்.பி.பதவியை விடுவார் சார்..என்ன அதுக்கு இன்னும் 2 1/2 வருசம் ஆகலாம்.
//மாலதி said...
ReplyDeleteதமிழீழப் பிரச்சினைக்காகப் போராடிப் பலமுறை சிறை சென்ற ஈழத்தியாகி ஐயா.ராமதாஸ் அவர்கள் தலைமையில் இந்தக் கருத்தரங்கு ‘ஈழத் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.//எந்தவித மாற்றுக்கருத்துக்கள் இல்லாமல் //
மாற்றுக் கருத்தும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறீர்களா? நன்றி சகோ..அதை ஏன் வடை மாதிரி பிச்சுப் பிச்சு சொல்றீங்க..
//கொ. வை.அரங்கநாதன் said...
ReplyDeleteஉச்ச கட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது ,போரில் சாதாரண மக்கள் சாவது இயல்பான ஒன்று என்று சொல்லிவிட்டு இப்பொழுது மனம் மாறியிருக்கும் ஜெயலலைதாவை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், திருமா மீது மட்டும் ஏன் இவ்வளவு கோபம் ? //
ஜெ.வை நான் எப்போ ஏத்துக்கிட்டேன்.....அது ஒரு பக்கம் இருக்கட்டும்......சென்ற தேர்தல் வரை ஜெ. ஈழ விஷயத்தில் வெளிப்படையாக எதிர்நிலையே எடுத்தார். தெர்தலுக்குப் பின் மனம் மாறி விட்டார்(னு வச்சுக்குவோம்). இதில் பிரச்சினை ஏதும் இல்லை பாஸ்...ஆனால் தேர்தலுக்கு முன்வரை ராஜபக்ஷே + காங்கிரஸைப் பழித்துவிட்டு, அதன்பிறகு அதே காங்கிரசுக் கூட்டணியில் எம்.பி.சீட்டும் பெற்றுவிட்டு, இப்போது சட்டமன்றத் தேர்தலில் ஆப்பு வைக்கப்பட்டவுடன் மீண்டும் ஈழப்பிரச்சினையை கையில் எடுப்பது ஏன்? ஈழம் என்ன நீங்கள் தொட்டுக்கொள்ளும் ஊறுகாயா? ஆயிரக்கணக்கான மக்கள் புல்டோசர் ஏற்றி அழிக்கப்பட்டபோதெல்லாம், எம்.பி.சீட்டுக்காக காங்கிரசிடம் மண்டியிட்டுக் கிடந்துவிட்டு, இப்போது மீண்டும் ராஜினாமா என்று பேசுவதைக் கேட்க காது கூசவில்லையா..
//மூன்றாந்தர பிட்டுப் படங்களில்கூடக் கேட்க முடியாத, குடிகாரனின் ரகளையில்கூடக் கேட்டிராத, தெருச்சண்டையில் வீரப் பெண்மணிகளின் வாயில் இருந்தும் கேட்டிராத ஆபாசமான அருவருக்கத்தக்க இந்த வசனத்தை தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ்க்குடிதாங்கி ராமதாஸ் முன்னிலையில் பேசியதைக் கேட்டு, அங்கு கூடியிருந்த தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ReplyDeleteஇதை விட கேவலமாக இவர்களை விமர்சிக்க இயலாது. எல்லா பயலுமே அரசியல் வியாபாரிகள். சம்பந்தப்பட்ட சாதிக்காரர்கள் மட்டுமே தலையில் வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.
தனித் தமிழ் ஈழத்திற்காக எனது எம்.பி. பதவியையும் கூட துறக்கத் தயாராக இருக்கிறேன். தமிழ் ஈழத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே பாமகவுடன் கை கோர்த்துள்ளேன். ”//
ReplyDeleteபடு கேவலமான அசிங்கமான ஆபாசமான வசனம் தான்
ரெண்டு பயலுகளும் இனி எந்திரிக்கவே முடியாது....மக்கள் இனி இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.காரணம் எதற்காக இவர்கள் போராடி,முன்னுக்கு வந்தார்களோ அக்காரியத்திலிருந்து இவர்கள் முழுவதும் பின் வாங்கினர்...
ReplyDeleteராமதாஸ்-வன்னியர்கள் விடுதலை
திருமா-ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலை.
இந்த இரு சமூக மக்களின் மனதிலிருந்து இவர்கள் வாஷ் அவுட் ஆகிவிட்டதை இவர்களின் ஓட்டு வங்கி நிலவரம் பார்த்து அறியலாம்.ஆக இவர்களை பற்றி எழுதுவதும் வீண்
//பாலா said...
ReplyDeleteஇதை விட கேவலமாக இவர்களை விமர்சிக்க இயலாது.//
நன்றி பாலா!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDelete//படு கேவலமான அசிங்கமான ஆபாசமான வசனம் தான் // ஆமாண்ணே..கேட்க முடியலை.
//ராமதாஸ்-வன்னியர்கள் விடுதலை
திருமா-ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலை.
இந்த இரு சமூக மக்களின் மனதிலிருந்து இவர்கள் வாஷ் அவுட் ஆகிவிட்டதை இவர்களின் ஓட்டு வங்கி நிலவரம் பார்த்து அறியலாம்.//
கடந்த இரு தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இவர்களின் ஓட்டு வங்கியில் பெரிய ஓட்டை விழுந்துவிட்டது போல்தான் தெரிகிறது.
அண்மையில் ஆனந்த விகடனில் தீண்டாமை தேசம் என்னும் கட்டுரையை படித்து மனது கனத்தது.இன்னும் எத்தனை எத்தனையோ கிராமங்களில் தீண்டாமை அப்படியே இருக்க, அந்த மக்களுக்காக போராடுவதை விட்டு விட்டு ஏன் திருமா இப்படி சராசரி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்? ஈழ மக்களைத் தான் காப்பாற்ற முடியவில்லை, இனி அவர்களது மக்களை என்றாலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லட்டும்.
ReplyDelete//இந்த ஆபாசப் பேச்சு அடங்கிய ஒலிநாடா வெளியில் பரவாமல் தடைசெய்யப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் அவா. //
ReplyDeleteசூப்பர்!
கிழி கிழி கிழிச்சிட்டீங்க,..
ReplyDelete//முன்பனிக்காலம் said...
ReplyDeleteஅண்மையில் ஆனந்த விகடனில் தீண்டாமை தேசம் என்னும் கட்டுரையை படித்து மனது கனத்தது.இன்னும் எத்தனை எத்தனையோ கிராமங்களில் தீண்டாமை அப்படியே இருக்க,//
திருமா-ராமதாஸின் சேர்க்கை சமுதாயரீதியில் எப்போதோ பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க முடியும்..அதற்கான முனைப்பு அவர்களிடம் இல்லையென்பதே பிரச்சினை.
//சென்னை பித்தன் said..
ReplyDeleteசூப்பர்!//
நன்றி சார்..
//
ReplyDeletejothi said...
கிழி கிழி கிழிச்சிட்டீங்க,.//
நான் கிழிச்சதெல்லாம் இருக்கட்டும்..நீங்க எங்கய்யா போய்ட்டீங்க?..சம்சாரம் அது மின்சாரம்னு பதிவு போடும்போதே நினைச்சேன்..குடும்பஸ்தன் அப்படிப் பதிவு போடலாமா...
///அப்போதும் சில துரோகிகள் ‘இலங்கைக்கு டூர் சென்ற திருமாவை உள்ளடக்கிய தமிழக எம்.பிக்கள், ராஜபக்ஷேவுடன் விருந்து உண்ணாமல் வேறு எதை உண்டார்கள்’ என்று கேள்வி எழுப்பியதை நாம் அறிவோம்.// ஹிஹி, பாஸ் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன் செம நச்..
ReplyDeleteஅந்த மூணாவது போட்டோ ................சகிக்கல..))
ReplyDeleteஈழத்தாய் (ஜெயா) தமிழின தலைவர் (கருணா) திருமா ,ராமதாஸ் எண்டு அத்தனை பேரையும் இழுத்து அசிங்கப்படுத்துவிட்டியல் ஹிஹி ...சூப்பர் பதிவு..
ReplyDelete//கந்தசாமி. said...
ReplyDeleteஅத்தனை பேரையும் இழுத்து அசிங்கப்படுத்துவிட்டியல் ஹிஹி //
அவங்க தானே பாஸ் நம்மை அசிங்கப்படுத்தறது..
//நான் கிழிச்சதெல்லாம் இருக்கட்டும்..நீங்க எங்கய்யா போய்ட்டீங்க?..சம்சாரம் அது மின்சாரம்னு பதிவு போடும்போதே நினைச்சேன்..குடும்பஸ்தன் அப்படிப் பதிவு போடலாமா...//
ReplyDeleteஹா ஹா ஹா,..
இதுக்கு நீங்க திருமாவளவனை கிழிச்சதே பரவாயில்லை,.. என்னை இன்னும் மோசமா,.. இருக்கட்டும்,.. உங்களை மாதிரி நிறைய பேர் எழுதும் போது நமக்கென்ன கவலை???
மற்றபடி அந்த பதிவிற்கும் நான் எழுதாதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,..
@jothi //மற்றபடி அந்த பதிவிற்கும் நான் எழுதாதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,..// சும்மா தான் சொன்னேன்..நீங்க ஃபேஸ்புக்ல பிசியா டவுசரோட உலாத்துறது எனக்குத் தெரியும்..
ReplyDeleteகேவலமான ஏமாற்றுகார அரசியல் வாதிகள்
ReplyDelete"எல்லாம் பதவி பண்ணும் வேலை ஒன்னும் செய்ய முடியாது".நன்றி,பிரியாhttp://www.tamilcomedyworld.com
ReplyDeleteஅட புறம்போக்குகளே
ReplyDelete