Tuesday, February 1, 2011

டாக்டர் ராமதாசும் பாமகவும் (தேர்தல் ஸ்பெஷல்)-பகுதி 1

கொள்கைக்காக கூட்டணி, தமிழர் நலனுக்காகக் கூட்டணி, சுய மரியாதையைக் காப்பதற்காகக் கூட்டணிஎன்றெல்லாம் மற்ற கட்சிக்காரர்கள் தன் கூட்டணித் தாவலுக்கு கஷ்டப்பட்டுக் காரணம் கூறும்போது, மிகவும் வெளிப்படையாக ‘இவங்க கூட ஒரு சீட்டு தர்றோம்னாங்க..வந்துட்டேன்என்ற ரேஞ்சில் அரசியலை நல்ல பிஸினஸாக நடத்தி வருபவர் ராமதாஸ். அரசியல் என்பது அதிக சீட்டுகளைப் பெறுவதும், சம்பாதிப்பதும் என்று ஆனபின் முக்காடு எதற்குஎன்ற நிலைப்பாடு கொண்டவர் அவர்.

ஏறக்குறைய தமிழக லல்லுவாகபத்திரிக்கைகளாலும் வன்னியர் தவிர்த்த பிற ஜாதியினராலும் பார்க்கப்படுபவர் ராமதாஸ். அவர் அப்படித்தானா?

ராமதாஸின் அரசியலுக்கு அடித்தளமாக, இன்றளவும் அவரைக் காப்பதாக உள்ளது 1987ல் நடந்த வன்னிய சமூகத்தின் சமூகநீதிப் போராட்டம். வடமாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஜாதி, வசதி வாய்ப்புள்ள ஜாதி ‘ என்று இன்று சொல்லப்படும் வன்னிய குலம், 1987க்கு முன்வரை அவ்வாறு இல்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தும் தன் பலம் அறியா யானையாக, பிற கட்சிகளின் சங்கிலிப் பிடியில் கட்டுண்டு கிடந்தது வன்னிய ஜாதி. அவ்வாறே அவர்களின் வாழ்வும்!

அந்த நேரத்தில், வன்னிய ஜாதியில் படித்து நல்ல நிலைமையில் இருந்த ஏ.கே.நடராஜன் போன்றோர் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தமக்கு உரிய இட ஒதுக்கீட்டைப் பெறுவதே நம் ஜாதியை முன்னேற்றும் எனக் கண்டுகொண்டனர். வன்னிய சங்கத்தை நிறுவி மக்கள் மத்தியில் தொடர்ச்சியான உரையாடல் மூலம், மக்களையும் அதே சிந்தனைக்குக் கொண்டுவந்தனர். மொத்த ஜாதியும் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்ந்ததும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க, தீவிரக் களப்பணியாற்ற களமிறங்கினார் அப்போது திண்டிவனம் பகுதித் தலைவராக இருந்த டாக்டர் ராமதாஸ்.

அவ்ருக்கு அப்போது இருந்ததெல்லாம் சுய ஜாதி அபிமானமும், அவர்கள் முன்னேற வேண்டுமென்ற ஆவலும் மட்டுமே. அந்தப் போராட்ட்த்தை ஒடுக்க, அப்போதைய அதிமுக அரசால் கடும் அரச வன்முறை ஏவப்பட்ட்து. அரசு ஆதரவுடன், ஜாதி மோதல்கள் தூண்டப்பட்டன. அதுவே வன்னியரை மேலும் ஒற்றுமை ஆக்கியது. கடுமையான நெருக்கடியிலும் ராமதாஸ் பின்வாங்காமல், மக்களோடு இருந்தார். தன்னில் ஒருவராக வ்ன்னிய ஜாதி மக்கள் அப்போது அவரைக் கண்டுகொண்டனர். படித்த நாம், நமது ஊரில் ஏதாவதொரு போராட்டம் நடந்தால் எப்படி ஒதுங்குகிறோம்என்பதை யோசித்துப் பார்த்தால் ஒரு மருத்துவர் மக்கள் மனதில் உட்கார்ந்த ரகசியம் புரியும்.

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வென்ற வன்னிய ஜாதி, இனி தனக்கான அரசியலை முன்னெடுக்க ஒரு கட்சியின் அவசியத்தை உணர்ந்தது. பாட்டாளி மக்கள் கட்சி பிறந்தது.

மரம் வெட்டிக் கட்சி என்ற வார்த்தை, அவ்ர்களது போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் செயல் என்பதே என் அபிப்ராயம். ஒரு போராட்டத்தில் மனிதரையே வெட்டும்/கொளுத்தும் தமிழகத்தில், மரத்தை வெட்டியதை மட்டும் குறிப்பிட்டு இழிவாகச் சொல்வதேன்..மரம் வெட்டி என்றதும் உங்கள் மனதில் வரும் உருவத்தை நினைத்துப் பாருங்கள்..அந்த வார்த்தையின் சூட்சுமம் தெரியும்.

1996 சட்டமன்றத் தேர்தல் வரை, தனித்தே போட்டியிட்டது பாமக. கடுமையான ஜெயல்லிதா எதிர்ப்பு அலைவீசிய அந்த்த் தேர்தலில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

திரு.ராமசாமி படையாட்சியின் காலம் தொட்டே, வன்னிய ஜாதி காங்கிரசுக்கும், திமுகவிற்கும் ஆதரவான நிலைப்பாடே கொண்டிருந்தது. பாமகவின் வளர்ச்சி அவ்விரண்டு கட்சிகளின் ஓட்டு வங்கியை வட தமிழ்நாட்டில் கடுமையாகப் பாதித்தது. இதை நன்கு உணர்ந்த ஜெயலலிதா, 1998ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட 5 சீட்டுகளைக் கொடுத்தார். அதில் 4 இடங்களை வென்றது.

இன்றைய அரசியலின் வெளிப்படையான சீர்கேடு, ஜெயலலிதா+சசிகலாவின் முதல் ஆட்சியில் (1991-1996) இருந்து தொடங்கியது. அதுவரை ‘விஞ்சான முறைப்படிதயங்கித் தயங்கி, அளவுடன் செய்யப்பட்ட ஊழலை, ‘அது நம் பிறப்புரிமைஎன்று ஜெ+சசி பிரகடனப் படுத்தினர். ராமதாஸ் அவர்களுடன் இணைந்து, அரசியலை வெளிப்படையாக வியாபாரமாக்கினார். இதுவே அவர் மீதான வெறுப்புக்கும் ஏளனத்திற்கும் அடிப்படையாக அமைந்தது.

‘ஜனநாயகத்தில் நமக்குத் தேவை அதிகாரம். அதற்குத் தேவை மந்திரிப் பதவிகள். அதை யார் கொடுத்தாலும் ஏற்போம். அதிகாரமே நம்மை முன்னேற்றும்என்ற சித்தாந்த்த்தை தம் கட்சியினர் மனதில் விதைத்தார். வன்னிய இனம் எதிர்பார்த்தது, அரசியலில் தமக்குரிய அதிகாரத்தையே. எனவே ராமதாஸின் சித்தாந்தம், பிற ஜாதியினரைத் தான் அதிர்ச்சியடையச் செய்ததே ஒழிய, பாமகவினருக்கு இன்றளவும் அதைப் பற்றி பெரிதாக வருத்தம் இல்லை.

ஒரு ஜாதியின் முன்னேற்றத்திற்குச் சரியாகத் தோன்றிய கூட்டணி விஷயம், ஒரு நாட்டை அளவுகோலாக வைத்துப் பார்க்கும்போது அருவறுக்கத் தக்கதாக ஆகிவிட்டது.

புத்திசாலித் தனமாக ஜெயிக்கிற கூட்டணிக்குத் தாவி, பாமகவால் கூட்டணி ஜெயித்ததா/கூட்டணியால் பாமக ஜெயித்ததா என்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்; சென்ற பாராளுமன்றத் தேர்தல் வரை.

- பதிவு நீண்டு விட்டதால், நிறைவுப் பகுதி நாளை....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

45 comments:

 1. ஒரு ஜாதியின் முன்னேற்றத்திற்குச் சரியாகத் தோன்றிய ’கூட்டணி’ விஷயம், ஒரு நாட்டை அளவுகோலாக வைத்துப் பார்க்கும்போது அருவறுக்கத் தக்கதாக ஆகிவிட்டது.


  ..... ம்ம்ம்ம்....... :-(

  ReplyDelete
 2. >>> இங்கே ...அங்கே....மறுபடியும் இங்கே...சரி இன்னிக்கி அங்கே...நாளைக்கு எங்கே???

  ReplyDelete
 3. அரசியல் களவாணி ராமதாஸ் புகழ் பாடி பச்சோந்தியின் வாழ்கை வாழ்ந்து இன்புறுவோம் ஹிஹி!!!!

  ReplyDelete
 4. //ஒரு ஜாதியின் முன்னேற்றத்திற்குச் சரியாகத் தோன்றிய ’கூட்டணி’ விஷயம், ஒரு நாட்டை அளவுகோலாக வைத்துப் பார்க்கும்போது அருவறுக்கத் தக்கதாக ஆகிவிட்டது//

  அறியாத தகவல்கள்!
  பின்னுறீங்களே பாஸ்! :-)

  ReplyDelete
 5. @! சிவகுமார் !: எங்கே பிசினஸ் நல்லா நடக்குமோ அங்கே தான்..

  ReplyDelete
 6. @விக்கி உலகம்: ஒரு தலைவரின் சீரழிவைச் சொல்லுமுன், வந்த வழியையும் சொல்ல வேண்டும் இல்லையா..அடுத்த பதிவையும் படித்துவிட்டு சொல்லுங்கள் பாஸ்..நன்றி.

  ReplyDelete
 7. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): ரெண்டே பத்தாது..அவ்வளவு தாவல்...அடுத்த பதிவையும் பாருங்கள்..

  ReplyDelete
 8. @ஜீ...: நன்றி ஜீ..அவரைப் பற்றி ’நல்ல’ தகவல்களைத் திரட்டுமுன் எனக்கு மண்டை காய்ந்துவிட்டது..

  ReplyDelete
 9. 1991-ஆம் ஆண்டு ராஜீவ் கொலையில் வீசிய அனுதாப அலையையும் மீறி பாட்டாளி மக்கள் கட்சி முதன் முதலில் பண்ரூட்டி தொகுதியில் ஜெயித்தது. முதல் எம்.எல்.எ.- பண்ரூட்டி ராமச்சந்திரன். அப்போதெல்லாம் ராமதாஸ் மீது வன்னிய மக்களுக்கு நல்ல அபிமானம் இருந்தது. எப்போது வியாபாரியை போல் நடந்து கொண்டாரோ...அப்போதோ வன்னியர் மனதிலிருந்து ராமதாஸ் நீக்கப்பட்டுவிட்டார். அதன் எதிரொலிதான் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு.

  ReplyDelete
 10. மக்களை கோமாளின்னு நினைச்சிட்டு இருக்கும் சிறந்த அரசியல் கோமாளி ராமதாஸ்..நல்ல பகிர்வு செங்கோவி...

  ReplyDelete
 11. Dear Sengovi, In politics, winning matters. If they donot win for long they cannot survive. That also creates some identity crisis for these politicians. Once they taste some victory by way of alliance, they cannot leave that. and cannot live without that power.

  I feel, Mr.Ramdass started off very well. But the current system of politics has made to do such acts to survive in this Great Ocean of Politics.

  Very SAD.

  Your Political posts are very Nice and informative. Keep it up..


  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 12. குறைகளை மட்டும் அலசும் இடங்களில் எங்கோ ஒரு இனத்துக்கு நடக்கும் நல்லதை சுட்டி காட்டியுள்ளீர்கள்

  அருமை

  ReplyDelete
 13. //அந்தப் போராட்ட்த்தை ஒடுக்க, அப்போதைய அதிமுக அரசால் கடும் அரச வன்முறை ஏவப்பட்ட்து. அரசு ஆதரவுடன், ஜாதி மோதல்கள் தூண்டப்பட்டன.//

  அந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட பாதி தமிழகமே ஸ்தம்பித்தது. வன்னியர் அல்லாத மற்ற சமூகத்தினர், வீட்டிலேயே முடங்கி சொல்லொனா துயரத்தை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அனுபவித்தனர். அந்த நேரத்தில் உடல் நலமின்றி வெளிநாடு சென்றிருந்த எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட தன்னுடைய அதிகாரம் அனைத்தையுமே பண்ருட்டி ராமச்சந்திரனிடம் தான் விட்டுச் சென்றிருந்தார். அதனால் அந்த ஏழு நாள் போராட்டத்தை தடுத்து நிறுத்த அரசு எந்த சிறு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. அது தான் வரலாறும்.

  ReplyDelete
 14. 1. அடிக்கடி கூட்டணி மாறும் கட்சி என்றால் - அது தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளையும் குறிக்கும். இன்றைய தேர்தல் முறையில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திப்பது கடினம். தேர்தல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி மாறுவது இயல்பு. இதில் பா.ம.க'வை மட்டும் தனியாக குற்றம் சாட்டும் போக்கை உருவாக்கியவை பத்திரிகைகள்தான். (வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பத்திரிகை உலகில் ஆதிக்கம் செலுத்தும் 'சிறுபான்மை ஆதிக்க சாதி'யினரே பாமக மட்டும் அணி மாறுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.)

  2. வன்னியர்கள் பா.ம.க'வை கைவிட்டுவிட்டனர் என்று பேசுவது (ரஹீம் கஸாலி) ஆதாரமற்ற பேச்சு. நாடாளுமன்ற தேர்தலுக்கு அடுத்துவந்த பென்னகரம் இடைத்தேர்தலில் தனித்து நின்று பா.ம.க 42000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. (கருணாநிதி நேரில் பிரச்சாரம் செய்த ஒரே இடைத்தேர்தல் இது). அதிமுக'வும் தேமுதிக'வும் வைப்புத்தொகையை (டெபாசிட்) இழந்தன.

  3. //ஏறக்குறைய ’தமிழக லல்லுவாக’ பத்திரிக்கைகளாலும் வன்னியர் தவிர்த்த பிற ஜாதியினராலும் பார்க்கப்படுபவர் ராமதாஸ்.// என்று கூறியுள்ளீர்கள். அது உண்மைதான் (லல்லுவை தீவிரமாக ஆதரிக்கும் கட்சி பாமக). லல்லு மோசமானவர் என்கிற பார்வையும் - அவருடன் ஒப்பிட்டு பாமக'வை பேசுவதும் - மற்றவர்களது சாதிவெறி சிந்தனையின் வெளிப்பாடன்றி வேறல்ல!

  ReplyDelete
 15. 4. //ராமதாஸின் சித்தாந்தம், பிற ஜாதியினரைத் தான் அதிர்ச்சியடையச் செய்ததே ஒழிய, பாமகவினருக்கு இன்றளவும் அதைப் பற்றி பெரிதாக வருத்தம் இல்லை.// -- இது பாமக'வைக் குறித்த மிகச்சரியான புரிதல். மிகக்குறிப்பாக இதில் சிறிதளவும் தவறு இருப்பதாக பாமக'வில் ஒருவரும் கருதவில்லை.

  5. //’வடமாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஜாதி, வசதி வாய்ப்புள்ள ஜாதி' என்று இன்று சொல்லப்படும் வன்னிய குலம், 1987க்கு முன்வரை அவ்வாறு இல்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தும் தன் பலம் அறியா யானையாக, பிற கட்சிகளின் சங்கிலிப் பிடியில் கட்டுண்டு கிடந்தது வன்னிய ஜாதி. அவ்வாறே அவர்களின் வாழ்வும்!//-- இதுவும் மிகச்சரியான கருத்தே.

  6. //(ரஹீம் கஸாலி)1991-ஆம் ஆண்டு ராஜீவ் கொலையில் வீசிய அனுதாப அலையையும் மீறி பாட்டாளி மக்கள் கட்சி முதன் முதலில் (தனித்து நின்று) பண்ரூட்டி தொகுதியில் ஜெயித்தது. முதல் எம்.எல்.எ.- பண்ரூட்டி ராமச்சந்திரன்.// -- அந்தத் தேர்தலில் தி.மு.க வென்றதும் ஒரு இடம்தான் (அது கலைஞர்).

  7. //1996 சட்டமன்றத் தேர்தல் வரை, தனித்தே போட்டியிட்டது பாமக. கடுமையான ’ஜெயல்லிதா எதிர்ப்பு அலை’ வீசிய அந்த்த் தேர்தலில் 4 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது// -- அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வென்றதும் 4 இடம்தான்.

  ReplyDelete
 16. செங்கோவி said...

  // //அவரைப் பற்றி ’நல்ல’ தகவல்களைத் திரட்டுமுன் எனக்கு மண்டை காய்ந்துவிட்டது// //

  செயலலிதா, கலைஞர், விசயகாந்த் - இவர்களைப் பற்றி 'நல்ல' தகவல்களைத் திரட்டுமுன் உங்களுக்கு மண்டை காயாதா...?

  ReplyDelete
 17. அருள் சொன்னது
  6. //(ரஹீம் கஸாலி)1991-ஆம் ஆண்டு ராஜீவ் கொலையில் வீசிய அனுதாப அலையையும் மீறி பாட்டாளி மக்கள் கட்சி முதன் முதலில் (தனித்து நின்று) பண்ரூட்டி தொகுதியில் ஜெயித்தது. முதல் எம்.எல்.எ.- பண்ரூட்டி ராமச்சந்திரன்.// -- அந்தத் தேர்தலில் தி.மு.க வென்றதும் ஒரு இடம்தான் (அது கலைஞர்).////

  ராஜீவ் கொலையையும் மீறி அன்று பா.ம.க.- ஜெயித்தது பண்ரூட்டியாரின் தனிப்பட்ட செல்வாக்கினால்...பண்ருட்டியார் எந்த கட்சி சார்பில் நின்றிருந்தாலும் ஜெயித்திருப்பார். அப்போது அவரின் செல்வாக்கு அப்படி.அவர் ஜெயிக்க ராமதாசின் செல்வாக்கும் ஒரு காரணமே தவிர ராமதாஸ் மட்டும் காரணமில்லை. அப்போது அறந்தாங்கியில் அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து திருநாவுக்கரசு கூடத்தான் தனிப்பட்ட செல்வாக்கினால் ஜெயித்தார். ஆனால் கலைஞர் கதை வேறு.....ராஜீவ் கொலைக்கு தி.மு.க-காரணமாக இருக்குமோ என்ற மக்களின் தவறான புரிதலினால் அப்போது தி.மு.க மண்ணை கவ்வியது. துறை முகத்தில் அப்போதைய காங்கிரஸ் வேட்பாளர் க.சுப்புவிடம் என்னுற்றி சொச்சம் வாக்குகளில்மட்டுமே ஜெயித்த கலைஞர், பின்னர் ராஜினாமா செய்து விட்டு அந்த இடத்தில் செல்வராஜை நிறுத்தினார். ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார் அவர்(பின்னர் செல்வராஜ் வைகோவுடன் போய் எம்.எல்.எ-வாகவே மரணமடைந்தது வேறு விஷயம்).ராஜீவ் கொலைக்கு தி.மு.க காரணமில்லை என்று அப்போது மக்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது. அதன் தொடர்ச்சியாக கலவரம் காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழும்பூர் தேர்தலில் பரிதி இளம் வழுதி வென்றார். ஆகவே, தி.மு.க-தோல்வியடைந்தது ராஜீவ் கொலையால் எழுந்த அனுதாப அலையால்.....பண்ரூட்டி ஜெயித்தது தனிப்பட்ட செல்வாக்கினால்....அதையும் இதையும் முடிச்சு போட்டு பார்க்க கூடாது.

  ReplyDelete
 18. @ரஹீம் கஸாலி

  தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர் என்று கூறப்படும் அதே பண்ருட்டி ராமச்சந்திரன் - பாமக'வின் வேல்முருகனிடம் அதே பண்ருட்டிதொகுதியில் தோற்றதை நினைவில் கொள்ளவும்.

  1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இராசீவ் காந்தி அனுதாப அலையையும் மீறி 72 தொகுதிகளில் பா.ம.க 15 விழுக்காட்டிற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றது.

  ReplyDelete
 19. நன்றாக கவனிக்கவும் அருள், நான் அப்போது பண்ரூட்டியாரின் செல்வாக்கு அப்படி என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். இப்போது என்று குறிப்பிடவில்லை. இப்போது அவரின் செல்வாக்கு பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டி இருக்கிறது. 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இராசீவ் காந்தி அனுதாப அலையையும் மீறி 72 தொகுதிகளில் பா.ம.க 15 விழுக்காட்டிற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்று நீங்கள் குறிப்பிட்டதை சரியென்று ஒத்துக்கொண்டாலும் கூட அதே செல்வாக்கை தக்கவைக்காமல் விட்டது யார் குற்றம்? பின்னே எப்படி நாடாளு மன்றத்தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோற்றார்கள். பென்னாகரம் இடைதேர்தலை விடுங்கள்..அது தனிப்பட்ட ஓரிரு தொகுதிகளில் நடப்பதால் எல்லோருமே ஒரு இடத்தில் குவிந்து களப்பணி ஆற்றுவார்கள். பொதுத்தேர்தலில் அது சாத்தியமில்லையே...

  ReplyDelete
 20. மொத்தத்தில் நாங்கள் இருப்பதுதான் வெற்றிக்கூட்டணி என்று சொல்லியே ஏமாற்றி வந்த ராமதாஸ் சாயம் வெளுத்தது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதுதான். அதாவது ராமதாஸ் இருப்பது வெற்றிக்கூட்டணி அல்ல...வெத்துக்கூட்டணி என்று நிரூபித்த தேர்தல் அது. இவ்வளவு நாளாக எந்தக்கூட்டணி வெற்றி பெரும் என்று சரியாக கணித்து அந்த கூட்டணில் இடம் பிடித்து ஜெயித்துவந்தார்.எங்களால்தான் ஜெயித்தது என்றும் சொல்லிவந்தார். அந்த நாடாளு மன்ற தேர்தலில் அவரது கணிப்பு தவறாகி விட்டது. அவரது செல்வாக்கும் பணாலாகி விட்டது.

  ReplyDelete
 21. ரஹீம் கஸாலி said...

  // //செல்வாக்கை தக்கவைக்காமல் விட்டது யார் குற்றம்?// //

  பா.ம.க செல்வாக்கை தக்கவைக்கவில்லை என்று கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு.

  2001 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தல்களிலும், 1998, 1999, 2004 நாடாளுமன்ற தேர்தல்களிலும் பா.ம.க வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் தோற்றது. - ஆக, கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட 6 தேர்தல்களில் 5இல் வெற்றியும் 1இல் தோல்வியும் பெற்றதை எவ்வாறு 'செல்வாக்கு இழப்பாக' வகைப்படுத்த முடியும்.

  1991 சட்டமன்ற தேர்தலில் திமுக 1 இடம் பெற்றும், 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4 இடம் பெற்றும் படுதோல்வி அடைந்தன - அதனால் அந்த கட்சிகள் செல்வாக்கை தக்கவைக்காமல் விட்டதாகக் கூற முடியுமா?

  தேர்தல் தோல்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கும். எனவே, ஒரே ஒரு தோல்வியை வைத்து செல்வாக்கைத் தீர்மானிக்க முடியாது.

  ReplyDelete
 22. ரஹீம் கஸாலி said...

  // //மொத்தத்தில் நாங்கள் இருப்பதுதான் வெற்றிக்கூட்டணி என்று சொல்லியே ஏமாற்றி வந்த ராமதாஸ் சாயம் வெளுத்தது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதுதான். // //

  பாமக மீதான உங்களது காழ்ப்புணர்ச்சி தவிர வேறெதுவும் உங்களது கருத்தில் வெளிப்படவில்லை.

  கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட 6 தேர்தல்களில் 5இல் வெற்றியும் 1இல் தோல்வியும் பெற்றதை 'சாயம் வெளுத்ததாக' கூறுகிறீர்கள். ஒரு கட்சியின் பலம் என்பது அதன் கூட்டணி கட்சிகள் வெற்றியிலும் உள்ளது என்பதை மட்டும் வசதியாக மறந்துவிட்டீர்கள்.

  2009 நாடாளுமன்ற தேர்தலில் பாமக'வை தோற்கடிப்பதில் திமுக அதிகம் கவனம் செலுத்தியது. அதேநேரம், அதிமுக வென்ற 9 தொகுதிகளில் 5 தொகுதிகள் பாமக வலுவாக இருக்கும் பகுதிகளில் உள்ள தொகுதிகளாகும்.

  எது எப்படியோ - "ராமதாஸ் சாயம் வெளுத்தது", "அவரது செல்வாக்கும் பணாலாகி விட்டது" எனும் கேலி வார்த்தைகள் (வன்னியர் அதிகமில்லாத வலைப்பூவுலகில் மட்டுமின்றி) வன்னியர் பரவலாக உள்ள பகுதிகளிலும் வன்னியர் அல்லாதோரால் பேசப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  ReplyDelete
 23. தேர்தல் தோல்விக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கும். எனவே, ஒரே ஒரு தோல்வியை வைத்து செல்வாக்கைத் தீர்மானிக்க முடியாது. ///
  இந்த கருத்துக்கு நான் உடன் படுகிறேன். ஆனால் அது மற்ற கட்சிகளுக்குத்தானே தவிர....பா.ம.க-விற்கு அல்ல....பா.ம.க ஒன்றும் பீனிக்ஸ் பறவையல்ல... இதுவரை பேரம் பேசும் இடத்தில் இருந்த ராமதாஸ், விஜயகாந்தின் வருகைக்கு பிறகு,அந்த இடத்தை விஜயகாந்திடம் இழந்துவிட்டு கொடுப்பதை வாங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்

  ReplyDelete
 24. பாமக மீதான உங்களது காழ்ப்புணர்ச்சி தவிர வேறெதுவும் உங்களது கருத்தில் வெளிப்படவில்லை. /////

  எதை காழ்புணர்ச்சி என்று சொல்கிறீர் நண்பரே....எனக்கும் ராமதாசுக்கும் என்ன வாய்க்கால் தகறாரா? அவரின் நிலைப்பாட்டை விமர்சிப்பது எப்படி காழ்புணர்ச்சி ஆகும்? நான் மொத்தத்தில் எல்லோருடைய நிலையயும்தான் விமர்சிக்கிறேன். என் தளத்தில் வந்து பாரும் புரியும். நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு இல்லை. ஒருவேளை ஆறுமாதத்திற்கு அன்புசகோதரி என்றும் ஆருமாசத்திர்க்கு அன்பு அண்ணன் என்றும் பேசினால் உங்களுக்கு பிடிக்குமோ என்னவோ...

  கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட 6 தேர்தல்களில் 5இல் வெற்றியும் 1இல் தோல்வியும் பெற்றதை 'சாயம் வெளுத்ததாக' கூறுகிறீர்கள். ஒரு கட்சியின் பலம் என்பது அதன் கூட்டணி கட்சிகள் வெற்றியிலும் உள்ளது என்பதை மட்டும் வசதியாக மறந்துவிட்டீர்கள்.////

  அதைத்தான் நானும் சொல்கிறேன். கூட்டணி உதவியுடன் ஜெயித்துவிட்டு, எங்களால்தான் ஜெயித்தார்கள். நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்.என்று இறுமாப்புடன் கூறக்கூடாதல்லவா?

  2009 நாடாளுமன்ற தேர்தலில் பாமக'வை தோற்கடிப்பதில் திமுக அதிகம் கவனம் செலுத்தியது.//////

  அதுதான் உண்மை. எந்த ஒரு கட்சியும் எதிர்த்து நிற்கும் கட்சியை தோற்கடிக்கத்தான் விரும்பும். எதிர்த்து போட்டியிடும் கட்சி உங்களை ஜெயிக்க வைப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அதைத்தான் பா.ம.க-விஷயத்தில் தி.மு.க-வும் கடைபிடித்தது. ஒரு முறை கலைஞரின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் சிவாஜி அவர்கள் காங்கிரஸ் சார்பில் தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் போது, கலைஞரின் நண்பர் என்ற காரணத்திற்க்காக சிவாஜியை எதிர்த்து கலைஞர் வேட்பாளரை நிறுத்த மாட்டார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் நட்புவேறு...அரசியல் வேறு என்று கலைஞர் ஒரு வேட்பாளரை நிறுத்தி சிவாஜியை தோற்கடித்தார்.


  அதேநேரம், அதிமுக வென்ற 9 தொகுதிகளில் 5 தொகுதிகள் பாமக வலுவாக இருக்கும் பகுதிகளில் உள்ள தொகுதிகளாகும்.////

  இதை ஏற்க முடியாது. காரணம் தனக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை கேட்டு வாங்கிக்கொள்வதில் ராமதாஸ் கெட்டிக்காரர். நீ அரிசி கொண்டுவா....நான் உமி கொண்டு வருகிறேன் ரெண்டு பேரும் ஊதி...ஊதி சாப்பிடலாம் என்பதுதான் ராமதாசின் நிலைப்பாடு.

  ReplyDelete
 25. @ரஹீம் கஸாலி

  பா.ம.க'வுக்கு பேரம்பேசும் சக்தி இல்லாமல் போயிருந்தால் - பத்திரிகைகளோ நீங்களோ இப்போது பா.ம.க'வைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மாட்டீர்கள்.

  ReplyDelete
 26. @ரஹீம் கஸாலி

  1. கூட்டணி அரசியலில் எந்த கட்சி உதவியுடன் எந்த கட்சி வென்றது என்பதைக் கண்டுபிடிக்கும் அறிவியல் பூர்வமான கருவி எதுவும் இல்லை. 1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இராசீவ் காந்தி அனுதாப அலையையும் மீறி 72 தொகுதிகளில் பா.ம.க 15 விழுக்காட்டிற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றது. - தனித்து நின்று வலிமையை பா.ம.க மெய்ப்பித்துள்ளது.

  2. தேர்தல் போட்டியில் ஒரு கட்சி அதற்கு எதிராக நிற்கும் கட்சியை தோற்கடிக்க முயலும் என்பது உண்மைதான். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை விட - பா.ம.க'வை தோற்கடிக்கவே திமுக மிக அதிகம் வேலை செய்தது.

  ReplyDelete
 27. பின்றீங்க செங்கோவி, ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க ...

  ReplyDelete
 28. ராமதாஸ் பல அரசியல் தாவல்கள், தவறுகள் செய்தாலும் எனக்கு ஏனோ அவரை பிடித்திருக்கிறது.

  இன்றைய அரசியல் சூழ்நிலையில் எனக்கு தெரிந்த வெளிப்படையான மனிதர்.

  தி.மு.க வுக்கு வெளிப்படையாக தூதுவிட்டதும் எனக்கு அவரை பிடித்த ஒன்றுதான். சில சுயநலங்களை இவர் துறந்தால் இப்போதிருக்கும் அரசியல் தலைவர்களில் இவர்தான் சிறந்தவராக திகழ்வார்.

  மக்கள் டிவி- ஒரு நல்ல முன் உதாரணம், எந்த ஒரு அரசியல்வாதியாலும் செய்யமுடியாத ஒன்று.


  ►செங்கோவி அரசியல் பதிவெல்லாம் அருமையா வந்துக்கிட்டு இருக்கு நீங்க வேணும்னா பாருங்க தேர்தல் முடிவதற்குள் பிரபல பதிவர் லிஸ்ட்டில் இருப்பிங்க.

  ReplyDelete
 29. சில சாதிக்காரங்க மட்டும் எப்பவும் ஒத்துமையா முன்னேறனும், ஆனா வன்னிய, மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் எப்பவும் அடி பணிஞ்சே இருக்கனும். அவங்க சாதி பெற சொன்னா அதுக்கு ஒரு சிரிப்பு, இவனுங்க மட்டும் பேருக்கு பின்னாடி சாதிய போட்டுப்பானுங்க. இல்லன்னு சொல்ல சொல்லு. இவனுங்க வாரம் தவறாம மீட்டிங் போட்டு சாதி மக்களை காப்பாத்துவானுங்க. வருஷா வருஷம் சாதி தலைவருக்கு விழா எடுபானுங்க. அதுவே மத்தவங்க பண்ணா இளக்காரம். பதிவுலகுல இருக்கற அதன பயலும் சாதி வெறியோடதான் இருக்கானுங்க. என்னமோ எல்லா பயலும் உத்தமன் மாதிரி பேசறது. ஆமாயா அந்த ஆளு பொழைப்புக்கு அப்படி செய்றாரு.

  ReplyDelete
 30. சில சாதிக்காரங்க மட்டும் எப்பவும் ஒத்துமையா முன்னேறனும், ஆனா வன்னிய, மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் எப்பவும் அடி பணிஞ்சே இருக்கனும். அவங்க சாதி பெற சொன்னா அதுக்கு ஒரு சிரிப்பு, இவனுங்க மட்டும் பேருக்கு பின்னாடி சாதிய போட்டுப்பானுங்க. இல்லன்னு சொல்ல சொல்லு. இவனுங்க வாரம் தவறாம மீட்டிங் போட்டு சாதி மக்களை காப்பாத்துவானுங்க. வருஷா வருஷம் சாதி தலைவருக்கு விழா எடுபானுங்க. அதுவே மத்தவங்க பண்ணா இளக்காரம். பதிவுலகுல இருக்கற அதன பயலும் சாதி வெறியோடதான் இருக்கானுங்க. என்னமோ எல்லா பயலும் உத்தமன் மாதிரி பேசறது. ஆமாயா அந்த ஆளு பொழைப்புக்கு அப்படி செய்றாரு.

  ReplyDelete
 31. @அருள்://செயலலிதா, கலைஞர், விசயகாந்த் - இவர்களைப் பற்றி 'நல்ல' தகவல்களைத் திரட்டுமுன் உங்களுக்கு மண்டை காயாதா...?// முதலில் தங்கள் அழுத்தமான மற்ற கருத்துக்களுக்கு நன்றி...அலுவலகத்தில் மாட்டிக்கொண்டதால், உடனே பதிலிட முடியவில்லை..மற்றவர்களைப் பற்றி தகவல் திரட்டுவது எளிது நண்பரே..நீங்களே ஒரு கமெண்ட்டில் சொன்னதுபோல் ராமதாஸைப் பற்றி நெகடிவ் செய்திகளயே பத்திரிக்கைகள் ஆர்வமுடன் வெளிவிடுகின்றன. எனது நிலை எப்போதும் எளிமையானது: மக்கள் முட்டாள்கள் அல்ல. ராமதாஸ் வன்னியர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதற்கு ஏதேனும் வலுவான காரணம் இருக்கும்’ என்ற தேடலின் முடிவே இந்தப் பதிவு..கஷ்டப்படாமல் கிடைத்த விஷயங்கள் அடுத்த பதிவில்..அது ஏற்கனவே டைப் செய்தது..நீங்கள் இவ்வளவு பேசியும் மாற்றுவதற்கான காரணம் ஏதும் கிட்டவில்லை..

  ReplyDelete
 32. @Speed Masterநன்றி மாஸ்டர்..அது வரலாற்றில் எப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

  ReplyDelete
 33. @கொக்கரகோ...: அரசு எதுவும் செய்யவில்லை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை நண்பரே..//வீட்டிலேயே முடங்கி சொல்லொனா துயரத்தை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அனுபவித்தனர்.// ஜனநாயகத்தில் தமக்கான உரிமையைப் பெற, யாரையும் பாதிக்காத போராட்டம் உதவாது. இது ஜனநாயகத்தின் நெகடிவ் அம்சம்..வேறு வழியில்லை என்பதே யதார்த்தம். தங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 34. @சே.குமார்: பாராட்டுக்கு நன்றி குமார்.

  ReplyDelete
 35. @ரஹீம் கஸாலி: முதலில் ஸாரி..அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம்..கமெண்ட போட உடனே வரமுடியவில்லை..இடையில் வந்து பார்த்தேன்..நான் செய்யவேண்டிய வேலையை நீங்கள் செய்துகொண்டிருந்தீர்கள். நான் இருந்திருந்தால், என்ன பதில் கொடுத்திருப்பேனோ அதையே நீங்களும் கொடுத்துள்ளீர்கள்..நண்பேன் டா!...நன்றி..நன்றி..

  ReplyDelete
 36. @இரவு வானம்: பாராட்டுக்கு நன்றி நைட் ஸ்கை!

  ReplyDelete
 37. @THOPPITHOPPI: மக்கள் டிவி உண்மையில் ராமதாஸின் சாதனை தான்..தேர்தல் முடிவதற்குள் உள்ளே போகாமல் இருந்தால் சரிதான்! ஊக்கப்படுத்தலுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 38. கட்டுரை நடுநிலையாகவே செல்கிறது, தொடருங்கள்!

  ReplyDelete
 39. @ariyaluraan: எல்லோரும் ஒத்துமையாக முன்னேறனும் என்பதே என் நிலைப்பாடும்..வன்னிய சக்தி ஒன்றாகத் திரள்வதை பதிவு குறை கூறவில்லை இல்லையா..வேறு யாருக்கேனும் பதில் சொல்கிறீர்களா..எப்படியோ, தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 40. @பன்னிக்குட்டி ராம்சாமி: வாங்க சார்..வாங்க..உங்க பாராட்டு எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான்..அடங்கொன்னியான்னு ஆரம்பிக்காததற்கு நன்றி.

  ReplyDelete
 41. விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

  http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.