Thursday, April 21, 2011

காதல் கவிதை முதல் கண்றாவிக் கவிதை வரை..எழுதுவது எப்படி..(கண்டிப்பாக 18+)

டிஸ்கி: குழந்தைகளும் பெண்களும் தயவு செய்து இந்தப் பதிவைத் தவிர்க்கவும்! அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!


டிஸ்கி-2: இது ஒரு நகைச்சுவைப் பதிவு. உண்மையான கவிஞர்கள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!

வருங்காலக் கவிஞர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

கவிதை என்பது படிப்போர்க்கு ஒரு கலவையான உணர்ச்சியைக் கொடுக்கவேண்டும். சரி.. கலவையான உணர்ச்சி என்பது என்ன?..உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ப்ரவுசிங் பண்ணும்போது, ஒரு டேப்பில் ‘சக்தி விகடனையும்’ ஒரு டேப்பில் ‘உண்மைத் தமிழனையும்’ மற்றொரு டேப்பில் ‘You tube-mallu hot’-ஐயும் திறந்து வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி பார்க்கும்போது தோன்றும் உணர்ச்சி ‘கலவையான உணர்ச்சி’க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

இப்போது கவிதைக்கும் வாக்கியத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம். வாக்கியம் என்பது வார்த்தைகளை தொடர்ந்து எழுதி முற்றுப்புள்ளியுடன் முடிப்பது.
கவிதை
என்பது
வார்த்தைகளை
அல்லது
சில ஒத்த  விஷயங்களை
வரிக்கு
ஒன்று
என
ஒவ்வொன்றாக
எழுதி
ஆச்சரியக் குறியுடன் முடிப்பது!

கவிதைகளை காதல் கவிதைகள், புரட்சிக் கவிதைகள், பின் நவீனத்துவக் கவிதைகள், உடனடிக் கவிதைகள் எனப் பிரிக்கலாம். இப்போது ஒவ்வொன்றையும் எப்படி எழுதுவது எனப் பார்ப்போம்.

1.காதல் கவிதைகள்:
இதை எழுத ஒருதலைக்காதலாவது நீங்கள் செய்திருக்க வேண்டும். இதை எழுதுவது மிக எளிது. பார்த்தும் என்ன தோன்றுகிறதோ அது எவ்வளவு கேனத்தனமாக இருந்தாலும் அப்படியே எழுதிவிட வேண்டும். இவை பின்னால் பின் நவீனத்துவக் கவிதைகள் எழுத உபயோகப் படும். உதாரணமாக, என் முன்னாள் காதலி பெயரில் நான் எழுதிய கவிதை கீழே:

குஷ்பூ
நீயே ஒரு
பூ.
உனக்கெதற்கு
தலையில்
பூ!(அடடே..ஆச்சரியக் குறி)

2. புரட்சிக் கவிதைகள்:
இவைகள் ஜாதி, பொருளாதார வர்க்க பேதம், பகுத்தறிவு போன்றவை பற்றி எழுதப்படுபவை. பயப்பட வேண்டாம். நீங்கள் இந்தியா போன்ற தேசத்தில் இருப்பவர் என்றால், உடனே கதவைத் திறந்து, உங்கள் தெருமுனை வரை காலாற நடந்துவிட்டு வாருங்கள். இப்போது நீங்கள் பார்த்தவற்றை வசதி அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக எழுதினால் கவிதை ரெடி:

நவீன இந்தியா
பளபளக்கும் பங்களாக்கள்
பாய்ந்து செல்லும் பென்ஸ் கார்கள்
ஜீன்ஸ் அணிந்த இளைஞர் கூட்டம்
குப்பைத்தொட்டியைக் கிளறும் பிச்சைக்காரன்! (உச்..உச்..உச்)

பகுத்தறிவுக் கவிதைகளை எழுதும்போது உங்கள் வீட்டுப் பெண்கள், வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அவர்களை அந்த நேரத்தில் கோவிலுக்கு அனுப்பிவிடுவது இன்னும் நல்லது!

3. பின் நவீனத்துவக் கவிதைகள்:
இவை அதிரடிக் கவிதைகள், உணர்ச்சிக் கவிதைகள் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றன. இப்போது இதை எப்படி எழுதுவதெனப் பார்ப்போம்.

நீங்கள் இளம்வயதில் காதலித்த, உங்களுக்கு பல்பு கொடுத்த பெண்ணை நினைத்துக்கொள்ளுங்கள். இப்போதுள்ள கடுப்புடன் அல்ல, அப்போதிருந்த காதலுடன் நினைத்துக் கொள்ளுங்கள். அப்படித் தோன்றும் காதல் கவிதையை குறித்துக் கொள்ளுங்கள்..இப்படி:

பார்த்ததும் புன்னகைத்த அவளை
உள்ளத்தைத் திருடிய அவளை
நினைவிலேயே வாழும் அவளை
நினைத்து நினைத்து அழுகின்றேன்!(ரொம்ப நல்லது)

இப்போது ஏதாவது பலான பட டிவிடியை/வெப் சைட்டை திறந்துகொள்ளுங்கள். உள்ளங்கால் முதல் உச்சி வரை மோந்து பார்க்கும் மலையாளைப் படங்கள் வேலைக்காகாது. நல்ல Hardcore படமாகத் தேர்ந்தெடுங்கள். அதில் வரும் ஹீரோ நீங்கள்தான் என வழக்கம்போல் நினைத்துக் கொண்டு பார்த்ததை எழுதுங்கள்:

ஆவேசத்துடன் நெருங்கி
உடையைப் பறித்து
நினைத்த படியெல்லாம் முயங்கி
மூச்சு வாங்கினேன்.

இப்போதான் மெயின் மிக்சிங்..நம்ம ஃபோட்டோஷாப் வேலன் சார் மாதிரி இந்த 2 கவிதைகளையும் கச்சிதமாகச் சேர்த்தீர்கள் என்றால் பின் நவீனத்துவக் கவிதை ரெடி :

கரையாத காமம்
பார்த்ததும் புன்னகைத்த அவளை
ஆவேசத்துடன் நெருங்கி
உள்ளத்தைத் திருடிய அவளின்
உடையைப் பறித்து
நினைவிலேயே வாழும் அவளுடன்
நினைத்த படியெல்லாம் முயங்கி
மூச்சு வாங்க அழுகின்றேன்!

ஏதோவொரு புரிந்தும் புரியாதது போன்ற எஃபக்ட் வருகிறதல்லவா..இதே போன்று வேறு வேறு பெண்கள் மற்றும் படங்களைப் பார்த்து எழுதி தொடர்ந்து பயிற்சி செய்தால் கவிதை வசப்படும்.

எச்சரிக்கை: நீங்கள் ஆண் கவிஞர் என்பதால் நேரடிக் கெட்டவார்த்தை எழுத அனுமதியில்லை

4. உடனடிக் கவிதைகள்:
இவை தீபாவளி-பொங்கல் போன்ற பண்டிகைகளின்போதோ, பூகம்பம், சுனாமி வரும்போதோ, பைலட் விமானத்தை நட்டுக்குத்தலாய் இறக்கும்போதோ எழுதப்படுபவை. முதலிலேயே இவற்றை எதிர்பார்த்து எழுதி, கேட்ட உடன் சொல்ல நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். 


உதாரணமாக என் அலுவலக நண்பர் ஒருவர் சுனாமி பற்றி கவிதை சொல்லுமாறு என்னிடம் ஒருநாள் கேட்டார். நானும் ஒரு ‘சுனாமிக் கவிதை’ சொன்னேன். அதன்பிறகு அவர் என்னிடம் பேசவேயில்லை. அந்தக் கவிதையை இங்கு போடலாமா-ன்னு யோசிச்சேன். அப்புறம் நீங்களும் கடுப்பாகிட்டா, என் கடை என்னாகிறது? அதனால தான் அதை எழுதலை!

விடாமுயற்சியோடு, தொடர்ந்து எழுதிப் பழகுங்கள், கவிதை வசப்படும்! நன்றி!வேண்டுகோள்: பின்னூட்டத்தில் கவிதை எழுதி பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

47 comments:

 1. தங்களின் கவிதைப் பயிற்சியை சிரமேற்கொண்டு , இனி நானும் கவிஞனாக குறிப்பாக பின் - நவீனா கவிஞனாக ஆக முயற்சிக்கலாம் என இருக்கின்றேன்.

  ReplyDelete
 2. @வினையூக்கி ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளரா இருக்கீங்க..அப்படியே இருங்க,,அப்புறம் என்னால தான் கெட்டுப் போனீங்கன்னு சொல்லப்போறாங்க!

  ReplyDelete
 3. ஆஹா அற்புதம் பிரமாதம் . உங்களின் ஐடியா சுப்பர்;
  நான் முயற்சி செய்து பார்கிறேன்;

  ReplyDelete
 4. நாங்களும் முயற்ச்சிக்கிறம் கவிதை எழுத நீங்க சொன்ன முறைப்படி.

  ReplyDelete
 5. //பின்னூட்டத்தில் கவிதை எழுதி பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.//

  கண்டிப்பாக 18+..... அப்ப அடுத்த வருஷம் படிக்கறேன்.

  ReplyDelete
 6. யோவ் இந்த அளவு அப்பாடக்கரா நீ!

  யோவ் மாப்ள என் பதிவு அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

  ReplyDelete
 7. அண்ணன் ரெகுலரா பதிவு போடற டைம்ல 50 நிமிஷம் ஏன் லேட்ன்னா... வேணாம்.. சென்சார்... சென்சார்.. ஹி ஹி

  ReplyDelete
 8. நீங்க போட்ட டிஸ்கி செம அண்ணே..

  ReplyDelete
 9. //பின்னூட்டத்தில் கவிதை எழுதி பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.//

  ஹி ஹி அப்போ நாங்க எங்கே தான் போய் அதை கத்துக்கரது?

  ReplyDelete
 10. விக்கி உலகம் said...

  யோவ் இந்த அளவு அப்பாடக்கரா நீ!

  யோவ் மாப்ள என் பதிவு அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

  தக்காளி... பதிவுங்கறது ரஜினி படம் மாதிரி தானா வந்து படிக்கனும்.. இப்படி விளம்பரம் பண்ணப்படாது ஹி ஹி

  ReplyDelete
 11. இந்தப்பதிவு அண்ணன் எதிர்பார்க்கற மாதிரி சூப்பர் ஹிட் ஆகி 1200 ஹிட்ஸ் வரும்னு எதிர்பார்க்கரேன்

  ReplyDelete
 12. கவிதை என்பது படிப்போர்க்கு ஒரு கலவையான உணர்ச்சியைக் கொடுக்கவேண்டும். சரி.. கலவையான உணர்ச்சி என்பது என்ன?..உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ப்ரவுசிங் பண்ணும்போது, ஒரு டேப்பில் ‘சக்தி விகடனையும்’ ஒரு டேப்பில் ‘உண்மைத் தமிழனையும்’ மற்றொரு டேப்பில் ‘You tube-mallu hot’-ஐயும் திறந்து வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி பார்க்கும்போது தோன்றும் உணர்ச்சி ‘கலவையான உணர்ச்சி’க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.//

  ஆஹா..ஆஹா.. என்ன ஒரு விளக்கம்..

  ReplyDelete
 13. வேண்டுகோள்: பின்னூட்டத்தில் கவிதை எழுதி பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.//

  சகோ, பயங்கர உள் கூத்து இருக்கே. ஆண் கவிஞர், பெண் கவிஞர் என எல்லோரையும் கலாய்த்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 14. எச்சரிக்கை: நீங்கள் ஆண் கவிஞர் என்பதால் நேரடிக் கெட்டவார்த்தை எழுத அனுமதியில்லை//

  உண்மைதான்.. இதன் ஏகபோக உரிமை சில பெண் கவிஞர்களிடம் மட்டுமே உள்ளது.. மீறி எழுதினால் நீங்கள் ஆணாதிக்கவாதி!

  ReplyDelete
 15. இன்னும் கொஞ்சம் நக்கல் அடிக்க வாய்ப்பு உள்ள மேட்டர்..

  சுஜாதா ஒரு முறை சொன்னார், தமிழில் காதல் கவிதைகளை ஒரு பத்து வருசத்துக்கு தடை செஞ்சால் நல்லதுன்னு...

  ReplyDelete
 16. @Mahan.Thameshமனம் தளராமல் முயற்சி செய்யுங்கள் பாஸ்..வெற்றி நமதே!

  ReplyDelete
 17. @Nesan//நாங்களும் முயற்ச்சிக்கிறம் கவிதை எழுத நீங்க சொன்ன முறைப்படி.// அதுக்கு ஏன் இப்படி தமிழைக் குதறுதீங்க>..ஓ, கவிதையா..ஓ.கே..ஓ.கே!

  ReplyDelete
 18. @! சிவகுமார் !//கண்டிப்பாக 18+..... அப்ப அடுத்த வருஷம் படிக்கறேன்.// சிவா, என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்!

  ReplyDelete
 19. @விக்கி உலகம்//யோவ் மாப்ள என் பதிவு அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!// விளக்கத்தை இதோட நிப்பாட்டுங்க விக்கி..இல்லேன்னா என்னையும் சேர்த்து கும்மிடுவாங்க!

  ReplyDelete
 20. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் ரெகுலரா பதிவு போடற டைம்ல 50 நிமிஷம் ஏன் லேட்ன்னா.// ஏன்னா ஒர்நாளைக்கு 3 பதிவு முக்கா கிலோமீட்டர் நீளத்துக்கு போட்டுடறீங்க..அதைப் படிச்சு கமெண்ட்/ஓட்டுப் போடவே என் டைம் எல்லாம் சரியாப் போகுது!

  ReplyDelete
 21. @சி.பி.செந்தில்குமார்//இந்தப்பதிவு அண்ணன் எதிர்பார்க்கற மாதிரி சூப்பர் ஹிட் ஆகி 1200 ஹிட்ஸ் வரும்னு எதிர்பார்க்கரேன்// நீங்க வாய் வச்சா விளங்குமா?

  ReplyDelete
 22. @நிரூபன்//ஆஹா..ஆஹா.. என்ன ஒரு விளக்கம்..// ஆஹா, நம்ம கவிஞர் சகோவே பாராட்டிட்டாரு!

  ReplyDelete
 23. @கே.ஆர்.பி.செந்தில்//இன்னும் கொஞ்சம் நக்கல் அடிக்க வாய்ப்பு உள்ள மேட்டர்..
  // அதை உங்களை மாதிரி கவிஞர் செய்யலாம்ணே..நான் செய்ய முடியுமா...

  ReplyDelete
 24. சூப்பரண்ணே! இதுபற்றி நானொரு பதிவு எழுதி பாதிலயே...சரி விடுங்க இதென்ன புதுசா... :-)

  //எச்சரிக்கை: நீங்கள் ஆண் கவிஞர் என்பதால் நேரடிக் கெட்டவார்த்தை எழுத அனுமதியில்லை//
  இது சூப்பர் பாஸ்!
  இதைப்பற்றி இங்க இருக்கு முடிஞ்சா பாருங்க...

  http://umajee.blogspot.com/2010/10/blog-post_31.html

  ReplyDelete
 25. கை பரபரக்குது பாஸ்! ஆனா பின்னூட்டத்தில எழுதிப்பழக வேண்டாம்னு சொல்லிடீங்களே! :-)

  ReplyDelete
 26. //கரையாத காமம்//

  உங்களின் இந்தக்கவிதையைப் படித்தபோது எனக்குள்தோன்றிய எண்ணங்களை எழுத்தில் விபரிப்பது கடினம். அந்த பரவசமான மனநிலையிலேயே எழுதுகிறேன். இதுவரை நான் யாருக்கும் கடிதமே எழுதியதில்லை .உங்கள் கவிதை என்னையும் எழுதத் தூண்டியது. இந்த இலக்கிய வரட்சிமிக்க தமிழ்ச் சமுதாயத்தில் உங்களின் எழுத்து கொண்டாடப்படாமல் இருப்பது, நிச்சயம் ஒரு சமூகத்தின் சாபக்கேடு.
  சுருக்கமாகச் சொன்னால் இந்த ஒரு கவிதையிலேயே நீங்கள் பிரபல தென் ஆபிரிக்கக் கவிஞர் டக்கீலோ வோட்கனாவை தாண்டிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது!

  ReplyDelete
 27. தங்களின் பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது, த்ங்களின் இந்த புது முயற்சியால பதிவுலகில் கவிதை எழுத தெரியாமல் முழித்து கொண்டிருந்த என்னை போன்ற வரப்போகும் கவிஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, கூடியவிரைவில் நானும் ஒரு கண்றாவிகவிதையாவது எழுதி தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என உளமார உறுதி கூறுகிறேன், வாழிய உங்கள் சேவை, வாழிய பல்லாண்டு, நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 28. " சி.பி.செந்தில்குமார் said...
  விக்கி உலகம் said...

  யோவ் இந்த அளவு அப்பாடக்கரா நீ!

  யோவ் மாப்ள என் பதிவு அரசிலங்கிளவியா "கனி" எனச்சி ஒரு முறை படிச்சிப்பாரு ஹிஹி!

  தக்காளி... பதிவுங்கறது ரஜினி படம் மாதிரி தானா வந்து படிக்கனும்.. இப்படி விளம்பரம் பண்ணப்படாது ஹி ஹி"

  >>>>>>>>>>

  யோவ் நான் விளம்பரப்படுத்தல நல்லா பாரு புரியலன்னு சொன்னத புரிய வைக்கிறேன் ஹிஹி!>...........
  நீயெல்லாம் ................!!!!!!!

  ReplyDelete
 29. கவிதை எழுத கற்றுக்கொடுத்த அண்ணன் வாழ்க..வாழ்க..

  ReplyDelete
 30. தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்..http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_21.html

  ReplyDelete
 31. //எச்சரிக்கை: நீங்கள் ஆண் கவிஞர் என்பதால் நேரடிக் கெட்டவார்த்தை எழுத அனுமதியில்லை//

  சூப்பர்.... :)

  ReplyDelete
 32. 1,2,4 கவிதைகளை மட்டும் படிச்சாச்சு.ஒழிந்து போங்க!!!

  ReplyDelete
 33. நான் இந்த விளையாட்டுக்கு வரலை, எனக்கு கவிதையும், கழுதையும் வேண்டாம்... ஆளை விடுங்கடா சாமி.... [பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.. ஹா..ஹா..ஹா...]

  ReplyDelete
 34. @ஜீ... //ஆபிரிக்கக் கவிஞர் டக்கீலோ வோட்கனாவை தாண்டிவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது! // உங்களுக்குத் தெரியாதா..டக்கீலோ நம்ம பையன் தான்..என்கிட்ட தான் கழுதை..ச்சே..கவிதை எழுதக் கத்துக்கிட்டான்!

  ReplyDelete
 35. @இரவு வானம் //கூடியவிரைவில் நானும் ஒரு கண்றாவிகவிதையாவது எழுதி தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்// நைட்டு, என் பேரைக் காப்பாத்துற அளவுக்கு கவிதை கண்றாவியா இருக்கணும்..சரியா?

  ReplyDelete
 36. ஆஹா அருமையான பயிற்சி

  ReplyDelete
 37. கவிதை எழுதலாம்னா பயமா இருக்கு அவ்வளவு கவிஞர்கள் இருக்காங்க இணையத்துல.. அதனால வாம்மா பொழைப்பை மட்டும் பார்ப்போம்

  ReplyDelete
 38. @!* வேடந்தாங்கல் - கருன் *! கருன் ரொம்ப நொந்து போய்ச் சொல்ற மாதிரி இருக்கே!

  ReplyDelete
 39. @அகல்விளக்கு ரொம்ப காண்டுல இருந்திருப்பீங்க போலிருக்கே!

  ReplyDelete
 40. @அமுதா கிருஷ்ணா//ஒழிந்து போங்க!!// இந்த மட்டிலும் விட்டீங்களே..ரொம்ப நன்றிக்கா!

  ReplyDelete
 41. @Jayadev Dasநீங்க இன்னும் டீடெய்லா பின்னூட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன்..இப்படி ஓடுறீங்களே..

  ReplyDelete
 42. @ஆர்.கே.சதீஷ்குமார்//ஆஹா அருமையான பயிற்சி// நன்றி சதீஷ்!

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
 44. >எச்சரிக்கை: நீங்கள் ஆண் கவிஞர் என்பதால் நேரடிக் கெட்டவார்த்தை எழுத அனுமதியில்லைஹா ஹா

  ReplyDelete
 45. வணக்கம், நான் என் முன்னாள் காதலியை எப்படி மீட்டது என்பதைப் பற்றி உலகெங்கிற்கு இந்த நற்செய்தியை அறிவிக்க இங்கே இருக்கிறேன். என் காதல் மற்றொரு மாதம் என்னை விட்டு போது நான் பைத்தியம் போகிறேன், ஆனால் நான் DR BARBARA என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பர் சந்தித்த போது, ​​அவர் சர்ச் சிறந்த தூதர், நான் என் முன்னாள் காதல் என்னை விட்டு எப்படி DR பார்பரா என் பிரச்சனை கதை நான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைப்பது எப்படி. அவர் வலது பக்கம் வந்தார் என்று சொன்னார். நான் என் இதயம் எந்த பக்க விளைவுகள் இல்லாமல் விரும்புகிறேன் எங்கே. அடுத்த இரண்டு நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். என் அன்பே ஃபோனில் என்னை அழைத்தது. இப்போது எனக்கு முன்னால் வாழ்ந்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். அடுத்த வாரம் என் காதல் என்னை அழைத்த பிறகு என்னை மன்னித்து விடுங்கள், தலைமை நிர்வாக அதிகாரி தேவைப்பட்டால் என் விரும்பிய நிறுவனத்தில் ஒரு நேர்காணலுக்கு என்னை அழைத்தார்கள். நான் பின்வரும் மின்னஞ்சல் முகவரியை டி.ஆர்.பி. பார்பராவைத் தொடர்புகொண்டு அனைவரையும் அவரது பிரச்சனையையும் தீர்த்து வைக்க அனைவருக்கும் இதை சொல்ல வேண்டும் என்று நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரை நேரடியாக தொடர்பு கொள்க: WhatsApp number +2347032152878 .... barbaravoodootempel@gmail.com

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.