Sunday, April 10, 2011

மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு_தொடரின் நிறைவுப் பகுதி

இதுவரை மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் என்னென்ன வகையான வேலைகள் உள்ளன, அதற்கு எவ்வாறு ரெசியூம் ரெடி பண்ண வேண்டும் எனப் பார்த்தோம். இன்று தொடரின் நிறைவுப் பதிவாக இண்டெர்வியூ பற்றிய சில டிப்ஸ்களும், முடிவுரையும். 

பலரும் அட்டெண்ட் பண்ணும் நேர்முகத் தேர்வில், நீங்கள் மட்டும் தனித்துத் தெரியவேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? பலரது சி.வி.க்களில் உங்கள் சி.வி.கவனிக்கப்பட என்ன செய்தீர்களோ அதையே இங்கும் செய்ய வேண்டும். 

சென்ற பதிவிலேயே சொன்னபடி, இண்டெர்வியூ செல்லும் முன் உங்கள் சி.வி.யில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெளிவான ஐடியா உங்களுக்கு இருக்க வேண்டும். சி.வி.யில் உள்ள எந்தவொரு வார்த்தையைப் பிடித்தும் கேள்விகள் எழலாம்.உங்கள் சி.வி.யில் NDT என்ற வார்த்தை இருந்தால், அதன் விரிவாக்கம், உபயோகம், செய்முறை என எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

முதலில் அந்தக் கம்பெனி பற்றியும், வேலை செய்யப்போகும் டிபார்ட்மெண்ட் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

’அதற்கேற்றால் போல்’ தயார் செய்த சி.வி.யை நன்றாக மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இண்டர்வியூவில் பொதுவாக முதலில் கேட்கப்படும் கேள்வி ‘Tell about yourself' தான். எனவே உங்களைப் பற்றிய சிறு அறிமுக உரையை தயார் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கல்வி பற்றிக் கேட்கப்படும். தொடர்ந்து உங்களுடைய ஹாபீஸ் என்னென்ன? ரீடிங் என்றால் என்ன பத்திரிக்கை படிப்பீர்கள் என்பது போன்ற எளிய கேள்விகள் கேட்கப்படும். இவையெல்லாம் உண்மையில் உங்களை ரிலாக்ஸ் பண்ணவும், உங்களைப் பற்றிய ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளவுமே. இதற்கு உண்மையைச் சொன்னால் போதும். என்ன படிப்பீர்கள் என்ற கேள்விக்கு வேலை சம்பந்தப்பட்ட பத்திரிக்கை எதையாவது நீங்கள் படித்திருந்தால் அதைச் சொல்லலாம்.

அதன் பிறகு டெக்னிகல் கேள்விகள் ஆரம்பிக்கும். உங்கள் ஏரியா ஆஃப் இண்டெரெஸ்ட் / வேலை பார்த்த துறை பற்றிக் கேள்விகள் கேட்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே நன்றாகத் தயார் செய்துகொண்டு வந்திருந்தால் எளிதாகப் பதில் சொல்லலாம். கவனியுங்கள் பதில் ‘சொல்ல’ வேண்டும். ஒப்பிக்காதீர்கள். 

மெக்கானிகல் லைனில் வேறெதும் அப்டிடியூட் டெஸ்ட், குரூப் டிஸ்கசன் போன்றவை பெரும்பாலும் கிடையாது. ஒரு சில கம்பெனிகளே அவற்றை நடத்தும். அதைப் பற்றி முன்பே விசாரித்துக் கொள்ளுங்கள்.

’எனக்கொரு வேலை கொடுங்கள். எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் சின்ஸியராக வேலை செய்வேன்’ என்று தான் பலரும் சொல்வார்கள். நீங்கள் முதலிலேயே இந்த வேலை பற்றி தெளிவாக அறிந்திருப்பதால், அந்த வேலைக்கு எது தேவையோ, அதைக் குறிப்பிட்டுப் பேசுங்கள். குறிப்பிட்டுப் பேசுங்கள். உதாரணமாக ‘டிசைன் எஞ்சினியராக வேலை செய்யவே விருப்பம். டிராயிங்கில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்..டிசைன் சாஃப்ட்வேர் இது-இது தெரியும்’ என்று சொன்னால்  நிச்சயம் கவனிக்கப்படுவீர்கள்.

இண்டர்வியூவிற்கு நேரத்திற்குச் செல்வது, நீட்டாகச் செல்வது போன்ற அடிப்படை விஷயங்களை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

---------------------------------

நான் ஒரே பதிவாக இதை எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன். பிறகு தான் புரிந்தது, ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கும் ஒரு பதிவு தேவைப்படும் என்று. இந்தத் தொடரின் முதல் நோக்கம், மெக்கானிகல் எஞ்சினியர் என்பது பல வேலைகளைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல், ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லா துறைகளைக் கொண்ட ஏரியா இது என்பதை மெக்கானிகல் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

பெரும்பாலான என் போன்ற முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கம்பெனிச் சூழ்நிலை பற்றி எதுவும் படிக்கும்போது தெரிவதில்லை. எனவே தான் ஒவ்வொரு டிபார்ட்மெண்டின் தினசரி நடவடிக்கைகள் இந்தத் தொடரில் விளக்கப்பட்டன. மேலும், எங்கு அதிக சம்பளம் கிடைக்கும், எதைத் தவிர்ப்பது என்று தெரியாமல் தவறான துறைகளில் மாட்டிக்கொள்ளும் அவலமும் நடக்கிறது. அதைப்பற்றியும் இப்பொழுது ஒரு தெளிவு, உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

சொலல்வலன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது - என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை மனதில் கொண்டு, உங்கள் வாழ்வில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். 

இந்தத் தொடருக்கு ஆதரவளித்து பின்னூட்டமும் ஓட்டும் அளித்த நண்பர்களுக்கு நன்றி.

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், இந்தப் பதிவை எப்போது படித்தாலும் பின்னூட்டதிலோ மின்னஞ்சலிலோ கேளுங்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

 1. @தமிழ்வாசி - Prakash வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் பிரகாஷுக்கே!!!

  ReplyDelete
 2. ///வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் பிரகாஷுக்கே!!!///
  ஆயில் அயிட்டம் வேண்டாம். உடல் நலத்திற்கு நல்லதல்ல.

  ReplyDelete
 3. மெக்கானிகல் எஞ்சினியர்களுக்கு தொடர் நிறைவு பெறுகிறதா! நல்ல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேனே. அவ்வப்போது இந்த தொடர் தங்களிடமிருந்து எட்டிப் பார்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வீர்களா?

  ReplyDelete
 4. மாப்ள இந்த வேலை சம்பந்தப்பட்டவிஷயங்கள் சொல்லி இருக்க நன்றி

  ReplyDelete
 5. //முதலில் அந்தக் கம்பெனி பற்றியும், வேலை செய்யப்போகும் டிபார்ட்மெண்ட் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.//

  இன்டர்வியு செல்லும் கம்பனி குறித்து பொதுவான செய்திகளை வலைதளங்களில் படித்துவிட்டு செல்ல பெரும்பாலான இளைஞர்கள் தவறிவிடுகின்றனர்.

  ReplyDelete
 6. மிக நல்ல தொடர்.. உங்களுக்கு எனது பாராட்டுக்கள் தம்பி...

  ReplyDelete
 7. @தமிழ்வாசி - Prakash //அவ்வப்போது இந்த தொடர் தங்களிடமிருந்து எட்டிப் பார்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வீர்களா?// ஓ.கே, பிரகாஷ், அவ்வப்போது டெக்னிகல் பதிவுகளும் போடுகிறேன்.

  ReplyDelete
 8. @! சிவகுமார் ! //இன்டர்வியு செல்லும் கம்பனி குறித்து பொதுவான செய்திகளை வலைதளங்களில் படித்துவிட்டு செல்ல பெரும்பாலான இளைஞர்கள் தவறிவிடுகின்றனர். // கரெக்ட் சிவா..நிறையப்பேர் செய்யும் தவறு அது!

  ReplyDelete
 9. @கே.ஆர்.பி.செந்தில் //மிக நல்ல தொடர்.. உங்களுக்கு எனது பாராட்டுக்கள் தம்பி... // பாராட்டுக்கு நன்றி அண்ணா!

  ReplyDelete
 10. இவற்றோடு சேர்த்து.. "நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, தெளிவான பேச்சு, நேர்மையான பதில்கள், தன்னம்பிக்கைக் கண்கள் போன்றவையும் கட்டாயம் தேவை..

  நானும் மெகானிகல் தான்.. உங்கள் கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.. நன்றி..

  ReplyDelete
 11. @சாமக்கோடங்கி நம்மாளு தானா நீங்க..உங்களுக்குப் பயன்பட்டால், மகிழ்ச்சியே!

  ReplyDelete
 12. சகோ...இதை நீங்க ஏன் ஒரு புத்தகமாய் போட கூடாது..ஒழுங்கா பதிவின் காபி ரைட் ஐ protect பண்ணிக்கோங்க...

  ReplyDelete
 13. @ஆனந்தி.. நான் இன்னொரு மெகா தொடர் எழுதுவதாக உள்ளேன்க்கா..அதையும் இதையும் சேர்த்து புத்தகமாகப் போட எண்ணம்..அடுத்த தொடர் ஆரம்பிக்கும் முன் ப்ளாக்கரை வெப்சைட்டாக மாற்றலாம் என்றிருக்கிறேன். இப்போதைக்கு Free copy right வேண்டுமானால் செய்து வைக்கிறேன்.தங்கள் அக்கறைக்கு நன்றிக்கா!

  ReplyDelete
 14. @jothi சூப்பரோ சூப்பர்!

  ReplyDelete
 15. வழிகாட்டும் பதிவுக்கு மிக்க நன்றிகள்..

  ReplyDelete
 16. //சகோ...இதை நீங்க ஏன் ஒரு புத்தகமாய் போட கூடாது..//

  ReplyDelete
 17. @பாரத்... பாரதி... இந்தத் தொடருக்கு ஆரம்பம் முதல் நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 18. ஷ் அப்பாடா.. அண்ணன் முடிச்ட்டாரு... (யரைன்னு கேட்கக்கூடாது..)

  ReplyDelete
 19. ஆக்கபூர்வமான அனுபவ தொடர்பகிர்வு..!! வாழ்த்துக்கள் செங்கோவி..!!

  எதேச்சையா உங்க பதிவுகளை பார்த்தேன்.. நல்லாவே நகைசுவையோட ரசிக்கிறமாதிரி படம்போட்டு எழுதுறீங்க..!! ஸாரி காட்டுறீங்க..!!

  ReplyDelete
 20. @tamizh முதல்வரி பாராட்டுக்கு நன்றி பாஸ்..இரண்டாம் வரியில் பாராட்டுறீங்களா, திட்டுறீங்களா என்று தெரியவில்லை..ஆனாலும் நன்றி..ஹி..ஹி!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.