Tuesday, April 12, 2011

ஓய்ந்தது பிரச்சாரம்..ஒழியட்டும் காங்கிரஸ் பிசாசுகள்!

கடந்த இரு வாரங்களாக நம்மைத் திணறத் திணற அடித்த தேர்தல் பிரச்சாரம் ஒருவழியாக ஓய்ந்து விட்டது. இரு கூட்டணிகளும் தங்கள் தரப்பை மக்கள் முன் வைத்துள்ளன.  யாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது என்பதில் நம்மிடையே குழப்பங்கள் இருந்தாலும், இந்தத் தேர்தலில் நம் ரத்தத்தைக் குடித்த காங்கிரஸ் பிசாசுகள் ஒழியவேண்டும் என்பதில் குழப்பம் வேண்டாம். 
மீனவர் பிரச்சினையில் இணையம் முதல் தெருமுனை வரை எல்லாப் போராட்டங்களும் நடத்தியாகி விட்டது. இதோ, மீண்டும் நான்கு மீனவர்களைக் காணவில்லை. ஒருவரின் சடலம் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அன்னையும் பிள்ளையும் இதுபற்றி மூச்சு விடவில்லை. ஒரு பெரிய ஜனநாயக நாட்டுக் குடிமக்களை, ஒரு சிறிய சர்வாதிகார நாடு தொடர்ந்து தாக்கிக் கொலை செய்வதும், அதைக் கண்டிக்கக்கூட வக்கற்ற நிலையில் மத்திய அரசு இருப்பதும் வெட்கக்கேடு.

ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதர் கொலை செய்யப்பட்டதற்கே பதறினோம். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கே வாக்களித்து நம் அனுதாபத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், இப்போது 540க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இழந்துள்ளோம். சிறு சலனம் கூட அவர்களிடமிருந்து வரவில்லை.

ராஜீவ் மரணச் செய்தி கேட்டதும், தமிழகமே பதறியது. எனக்கு இப்போதும் அந்த இரவு ஞாபகம் உள்ளது. அந்தக் கொலைக்கு பின்னர் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், பெருவாரியான தமிழர்கள் அப்போது மிகவும் வருத்தப்பட்டார்கள் என்பதே உண்மை. அதனாலேயே அப்போதைய அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வெற்றி வாகை சூடியது. உங்கள் வீட்டில் விழுந்த இழவிற்குக் கண்ணீர் வடித்தோமே, ஆறுதலாய் இருக்கட்டுமென அரியணையில் ஏற்றினோமே, அதற்கு நீங்கள் காட்டும் நன்றியா இது? எங்கள் வீட்டில் தொடர்ந்து விழும் இழவுகளின் ஒப்பாரிச் சத்தம் எப்படி உங்களுக்குக் கேட்க மறுக்கிறது?
மனசாட்சி என்ற ஒன்று இல்லாத அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறோம். இப்போது தான் மனது என்ற ஒன்றே இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்கின்றோம். எமது ஈழச் சொந்தங்களுக்காகப் பேசினால், அது அடுத்த நாட்டுப் பிரச்சினை என்று எங்கள் வாயை அடைப்பீர்கள். தமிழக மீனவனுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? 

எம்மைப் பற்றிய எவ்வளவு கேவலமான மதிப்பீடு இருந்தால், இங்கே வெட்கமின்றி வாக்குக் கேட்டு வருவீர்கள்? பணத்தை விட்டெறிந்தால் பீ தின்னும் சமூகம் என்று முடிவே செய்து விட்டார்களா? சொந்த ஜாதிக்காரன் நின்றால், ஜாதிப்பாசத்தில் ஆதரித்து விடுவோம் என்ற நம்பிக்கையா? கூட்டணியில் இருப்பதால், ஏமாளிக் கூட்டணிக் கட்சிக்காரன் ஓட்டுப் போட்டுவிடுவான் என்ற தெனாவட்டா? 

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்க்கு கிடைக்கப் போகும் முடிவை வைத்தே, தமிழினம் இந்தியாவில் மதிக்கப்படும். காங்கிரஸ் இப்போதும் வெற்றி பெற்றால், இந்திய அளவில் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். ஏற்கனவே உலகில் எங்கு தமிழனுக்கு அடி விழுந்தாலும் கவனிக்க மாட்டார்கள். இப்போது ஜெயிக்கவும் வைத்து, நம் மானரோஷமற்ற தன்மையை நிரூபிக்கப் போகிறீர்களா?

ஒன்று இரண்டல்ல, இருபதினாயிரம் உயிர்கள் புல்டோசர் வைத்து நசுக்கப்பட்டன. அரசியல்வாதிகள் செய்யும் ஊழலைத் தான் மறந்து தொலைப்போம், இந்தப் படுபாதகச் செயல்களையும் மறப்பது மனிதம் தானா? 

கொஞ்சமாவது நம் மனதில் ஈரம் இருந்தால், மனசாட்சி என்ற ஒன்று இன்னும் உயிரோடு இருந்தால் இந்தத் தேர்தலில் காங்கிரஸைப் புறக்கணிப்போம். 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

34 comments:

 1. நண்பர்கள் இந்தப் பதிவில் கும்மியைத் தவிர்க்கவும். புரிதலுக்கு நன்றி!

  ReplyDelete
 2. நல்லதே நடக்கும் நண்பரே.

  ReplyDelete
 3. செங்கோவி said...
  நண்பர்கள் இந்தப் பதிவில் கும்மியைத் தவிர்க்கவும். புரிதலுக்கு நன்றி!//

  Vadai..he he...

  ReplyDelete
 4. மாப்ள.......காங்கிரஸ் மற்றும் திமுக இரண்டுமே வேரறுக்கப்பட வேண்டியவைகளே அன்றி எல்லோரும் பண்ணையார்களை மட்டும் எதிர்ப்பது ஞாயமில்லை அவர்களுக்கு அடிமை ஊழியம் புரியும் தாத்தாவின் குடும்பமும் தொலைக்கப்படவேண்டியதே....

  ReplyDelete
 5. அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை சரியான முறையில் உபயோகிக்கவும்.

  ReplyDelete
 6. என்னுடைய விருப்பமும் அதே...

  ReplyDelete
 7. மறக்க முடியுமா ஈழத்தமிழர்களை கருவறுத்த அந்த நாட்களையும் தமிழர்களின் மனக்கொதிப்பையும் !!

  http://www.youtube.com/watch?v=5JVcD41BxpU

  ReplyDelete
 8. கொஞ்சமாவது நம் மனதில் ஈரம் இருந்தால், மனசாட்சி என்ற ஒன்று இன்னும் உயிரோடு இருந்தால் இந்தத் தேர்தலில் காங்கிரஸைப் புறக்கணிப்போம். ///

  நம் மக்களிடம் இன்னுமா இருக்கு?

  ReplyDelete
 9. @விக்கி உலகம் நீங்கள் சொல்வது சரியென்றாலும் மாற்று சரியான்னு தெரியலையே விக்கி!

  ReplyDelete
 10. @தமிழ்வாசி - Prakash ஓட்டு ஒரு அஹிம்சை ஆயுதம், சரியான முறையில் உபயோகிப்போம்!

  ReplyDelete
 11. @!* வேடந்தாங்கல் - கருன் *! நம்மால் முடிந்ததைச் செய்வோம் கருன்.

  ReplyDelete
 12. @E.சாமி லின்க்-கிற்கு நன்றி சார்!

  ReplyDelete
 13. @வைகை //நம் மக்களிடம் இன்னுமா இருக்கு?// இருக்க வேண்டும், பார்ப்போம்.

  ReplyDelete
 14. வந்தேன் வாக்களித்து சென்றேன்

  கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1

  http://speedsays.blogspot.com/2011/04/1.html

  ReplyDelete
 15. இதை பற்றிதான் என்னுடைய தளத்திலும் இன்று பதிவு செய்துள்ளேன், உங்களின் பதிவின் லிங்கையும் உபயோகப்படுத்திக் கொள்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம் நண்பா...

  ReplyDelete
 16. அன்பு நண்பர் அவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் அருமை , ஆனால் உங்களை போன்ற அதிகம் படித்த , உலக ஞானம் உள்ள , அதிபுத்திசாலி மேதாவி அறிவிஜீவிகள் , இந்த ஊழல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ய தயாரா ? , இந்த ஊழல், கொள்ளைக்காரன் , திருடன் ,ரவுடி கருணாநிதி ஆட்சியை அகற்றி விரட்ட நான் ரெடி , அப்புறம் இந்த நாட்டில் நல்ல ஆட்சி அளிக்க , மக்கள் கடனில்லாமல் வாழ, பசி பஞ்சம் நோய் இல்லாமல் வாழ , அணைத்து பொருட்களும்
  இப்போது உள்ள விலையை விட குறைவாக பெற்று வாழ , நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் நடக்க , அணைத்து அரசு அலுவலகங்களும் லஞ்சம் இல்லாமல் நடக்க , அனைவர்க்கும் நல்ல தரமான கல்வி , மருத்துவம் , வேலை கிடைக்க
  யார் வந்தால் நல்லது , அப்படிப்பட்ட ஒரு கட்சி எது , அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை நடத்தும் உத்தம தலைவர் யார் என்று தயவு செய்து தகுந்த விளக்கத்துடன் , தகுந்த ஆதாரத்துடன் என்னை போன்ற முட்டாள் பாமரனுக்கு சொன்னால் , இந்த ஊழல் கருணாநிதியை வீட்டுக்கு மட்டும் அல்ல , எகிப்து போன்று இந்த நாட்டை விட்டே அனுப்ப தயார் .
  உங்களால் இந்த நாட்டை நல்வழி படுத்த முடியுமா ?
  ஒரு நல்ல தலைவரை அடையலாம் காட்ட முடியுமா ?
  அப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவரின் தொண்டர்களை இந்த உலகத்திற்கு நீங்கள் காட்டுவீர்களா ?

  நாங்கள் உங்களைபோல் ஞாயம் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கும் அறிவுஜீவிகள் அல்ல , உங்களைவிட நன்றாக யோசித்து , வேறு நல்ல வழி இல்லாததால் , இப்போது இந்த நாட்டில் உள்ள திருட்டு கட்சியில் , திருட்டு தலைவர்களில் , யார் குறைவாக கொள்ளையடித்து அதே சமையம் ஓரளவிர்ககவாவது மக்களுக்கு நல்லது செய்வதால்தான் கருணாநிதியை ஆதரிக்கிறோம் புரிந்துக்கொண்டு, இந்த மாதிரி வெட்டி வியாக்கியானம் பேசிக்கொண்டு இர்ராமல் , ஒன்று நல்ல தலைவரை , கட்சியை அடையாளம் காட்டுங்கள் அல்லது இந்தமாதிரி வாய்க்கு வந்ததை பேசி , கைக்கு வந்ததை எழுதுவதை இதோடு தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் .

  ReplyDelete
 17. //கொஞ்சமாவது நம் மனதில் ஈரம் இருந்தால், மனசாட்சி என்ற ஒன்று இன்னும் உயிரோடு இருந்தால் இந்தத் தேர்தலில் காங்கிரஸைப் புறக்கணிப்போம். //

  சரியாக சொன்னீர்கள் மக்கா....

  ReplyDelete
 18. நல்லதொரு கருத்து நண்பரே.....

  ReplyDelete
 19. நான் உங்களை வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 20. செங்கோவி said...

  நண்பர்கள் இந்தப் பதிவில் கும்மியைத் தவிர்க்கவும். புரிதலுக்கு நன்றி!

  இப்படி ஓப்பனிங்க்லயே மிரட்டீட்டீங்க.. சரி.. க்காங்கிரஸ்க்கு என் கணீப்புல 5 சீட் தாண்டாது

  ReplyDelete
 21. /இந்தத் தேர்தலில் காங்கிரஸ்க்கு கிடைக்கப் போகும் முடிவை வைத்தே, தமிழினம் இந்தியாவில் மதிக்கப்படும். //

  தமிழினம் மட்டுமல்ல!மொத்த இந்தியாவே தமிழக தேர்தலை உற்றுக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

  எந்த மாநிலத்திலும் நிகழாத கூத்துக்கள் தமிழகத்தில் மட்டும் தொடர்கிறது:(

  பார்க்கலாம் மக்களின் மனநிலையை.

  ReplyDelete
 22. அண்ணே எவன் வேணா வரட்டும் ஆனா இவய்ங்க மட்டும் வரக் கூடாது . அதுக்காகவே இந்த தடவ மெட்ராஸ்ல இருந்து ஊருக்குப் போறேன் ஓட்டுப் போட. பஸ் டிக்கட் போக வர 1500 .
  ஆனாலும் பரவால்ல. செத்துப் போன பார்வதியம்மாளோட சமாதில நான் ஏத்துற ஒரு தீபமா தி.மு.க. கூட்டனிக்கு எதிரா நான் போடுற ஓட்டு இருக்கட்டும்.

  /இந்தத் தேர்தலில் காங்கிரஸ்க்கு கிடைக்கப் போகும் முடிவை வைத்தே, தமிழினம் இந்தியாவில் மதிக்கப்படும். /

  செய்றதையும் செஞ்சுட்டு கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்வோ இல்லாம காங்கிரஸ்காரத் _________ தமிழ்நாட்டுல எலக்சன்ல நிக்குறாயங்க. அப்ப நம்மள எவ்ளோ இளக்காரமா நினச்சுருக்காய்ங்க. இந்தத் தேர்தல்ல காங்கிரஸ்க்கு விழுகுற ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டுல இன்னும் எத்தன எட்டப்பன் மிச்சம் இருக்கன்னு காட்டும்.

  ReplyDelete
 23. @இரவு வானம்// உங்களின் பதிவின் லிங்கையும் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்,//அதனால் என்ன நண்பா..நீங்களும் பதிவிட்டதில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 24. @jothi உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே..நீங்கள் சொல்வது போல் நான் அறிவுஜீவி அல்ல, உங்களைப் போன்ற பாமரனே. ஆத்திரத்தில் இந்த வலைப்பூவில் உள்ள மற்ற பதிவுகளைக் கூட படிக்காமல் அவசரமாக பின்னூட்டம் போட்டுள்ளீர்கள். எனது ‘ சசிகலா என்ற மம்மியும் ஜெ. என்ற டம்மியும் ’ என்ற பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதி இருந்தேன் : //ஒரு ஊழல்வாதியை ஒழிக்க, இன்னொரு ஊழல்வாதிக்கு ஆவேசப்பட்டு ஆதரவளித்து, நாம் நம் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்வது அவசியம் தானா?

  இவை ஒரு சாமானியனின் மனதில் எழும் சிந்தனைகளே. கலைஞர் குடும்பத்தின் மீதுள்ள ’நியாயமான’ கோபத்தில், நாம் மறுபக்கத்தைச் சரியாக எடை போடத் தவறுகிறோமோ என்ற எண்ணத்தின் தொடர்ச்சியே இந்தப் பதிவு. எம்மைத் தெளிவாக்கும் மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!// -- இப்படி நான் அந்தப் பதிவில் கேட்ட கேள்வியையே இப்போது திரும்ப என்னிடம் கேட்பது நியாயமா?..நான் விமர்சனம் செய்வது இருதரப்பையுமே!...இரண்டில் எது சரி என்று எந்த நிலைப்பாடும் நான் எடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் ஒரு இனவுணர்வுள்ள தமிழனாக எனது விருப்பம் காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும், அதற்கு திராவிட உணர்வுள்ள உங்களைப் போன்ற திமுக தொண்டர்கள் உதவ வேண்டும் என்பதே! மற்றபடி, யார் ஆட்சிக்கு வந்தாலும் எனக்கு ஒன்று தான்...அதுசரி, கலைஞரை இவ்வளவு கேவலமாக காங்கிரஸ் நடத்திய பிறகுமா இப்படிப் பின்னூட்டம் போடுகிறீர்கள்? ஒன்று நீங்கள் ‘ரொம்ப நல்லவராக ‘இருக்க வேண்டும். அல்லது நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருக்க வேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும் எனது வேண்டுகோள் கைச் சின்னத்திற்கு ஓட்டுப் போடாதீர்கள் என்பதே..அப்புறம் உங்கள் விருப்பம். வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 25. @கே.ஆர்.பி.செந்தில் வழிமொழிந்ததற்கு நன்றிண்ணே!

  ReplyDelete
 26. @சி.பி.செந்தில்குமார் காங்கிரஸ்க்கு ஐந்தே அதிகம் தான்!

  ReplyDelete
 27. @ராஜ நடராஜன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்!

  ReplyDelete
 28. @மதுரை ராஜா //இந்தத் தேர்தல்ல காங்கிரஸ்க்கு விழுகுற ஒவ்வொரு ஓட்டும் தமிழ்நாட்டுல இன்னும் எத்தன எட்டப்பன் மிச்சம் இருக்கன்னு காட்டும்.// உங்கள் இனவுணர்வுக்கு ஒரு சல்யூட் நண்பரே!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.