Monday, May 30, 2011

என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி


டிஸ்கி-1: இது ஆபாசப் பதிவு அல்ல. (நம்ம நிலைமை இப்படி ஆகிடுச்சே!)

டிஸ்கி-2: இது ஆபாச சி.டி. பற்றிய பதிவு

டிஸ்கி-3: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த நல்ல பெண்மணிகளை நான் அவமானப்படுத்தி விட்டதாக யாரும் கருதினால், 108 தோப்புக்கரணம் போடத் தயாராக இருக்கிறேன்.

டிஸ்கி-4: ’யோவ், எத்தனை டிஸ்கிய்யா போடுவே..மேட்டருக்கு வாய்யா’ன்னு நீங்க கடுப்பாவது தெரிவதால், மிச்ச சொச்சம் டிஸ்கியை பதிவின் கடைசியில் போடுகிறேன்.

நான் சென்னையில குப்பை கொட்டிக்கிட்டடு இருந்த நேரம்..ஒரு வீட்ல வாடகைக்கு இருந்தேன். அந்த காம்பவுண்டுக்குள்ள மொத்தம் 3 வீடு. ஒன்னுல ஹவுஸ் ஓனரு. ரஃபா இருப்பாங்க. அதனால அவங்களை விடுங்க..இன்னொன்னுல தென் மாவட்ட குடும்பம்..ரொம்ப நல்லவங்க..ஒரு தம்பதியும் ஒரு குழந்தையும்! நானும் தெக்கத்தி ஆளுங்கிறதால என்கூட நல்லாப் பழகுனாங்க. அந்த சாரும் நல்லாப் பேசுவாரு. அந்த அக்காவும் ரொம்ப நல்லவங்க.வீட்ல கறிக்குழம்பு வச்சா, பாயாசம் வச்சா எனக்கும் கண்டிப்பாக் கொடுப்பாங்க. (அப்போ நல்லவங்க தான்!)
என் கம்பெனில அக்கவுண்ட் செக்சன்ல சிபி சிபின்னு ஒருத்தர் வேலை பார்த்தாரு.(நண்பரின் நலம் கருதி அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது!) அவர் ரொம்ப தங்கமான மனுசன். ஏதாவது சீன் பட சிடி கிடைச்சா தன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ரவுண்ட்ல விடுவாரு. அதை ஃபாலோ பண்றதுக்குன்னே தனியா ஒரு எக்ஸெல் சீட் வச்சிருப்பாரு.

எந்த சிடி யார்கிட்ட, என்னைக்கு கொடுத்தாரு, அதை யாரெல்லாம் வச்சிருந்தாங்க, இப்போ யாரு வச்சிருக்காங்க-ன்னு எல்லா டீடெய்லும் அதுல இருக்கும். ஆனா சிபி கோவக்காரரு. சொன்ன டயத்துக்கு சிடியைத் திரும்பத் தரலேன்னா கெட்ட வார்த்தையிலேயே திட்டுவாரு. அதுகூடப் பரவாயில்லை..அடுத்த தடவை சிடி வந்தா தரமாட்டாரு. அந்த நேரத்துல தான் வரிசையா நடிகைங்கள்லாம் குளிக்கிறது எப்படி, ட்ரெஸ் மாத்துறது எப்படின்னு நடிச்சுக் காட்டுன சிடியா ரிலீஸ் ஆகிக்கிட்டிருந்துச்சு. அதனால சிபி மனசு கோணாம நாங்க நடந்துப்போம்!

ஒருநாளு ’இரு வெள்ளை ஆமைகள் செய்த வெள்ளாமை’-ன்னு ஒரு இங்கிலீஸ் சிடியை ரிலீஸ் பண்ணாரு. அது அவர் வச்ச பேரு. அதனால கூகுள்ல தேடாதீங்க.கிடைக்காது. நான் வாக்குத் தவறாத நல்ல பையங்கிறதால, பெர்ஃபார்மன்ஸ் அடிப்படையில அந்த சிடியை முதல்ல எனக்குத் தான் கொடுத்தாரு. வாங்கிக்கிட்டு நைட் ரூம்ல போய் கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தேன்.(கம்ப்யூட்டர் கண்டுபுடிச்சதே அதுக்குத் தானே!)

அப்போப் பாத்து கதவை டபடபன்னு தட்டுற சத்தம். “யாரு?”ன்னு கேட்டேன். ‘நாந்தான்’ன்னாரு பக்கத்து வீட்டு சார்! அடடா..சார் வந்துருக்காரே..உடனே போனா மூஞ்சியைப் பாத்தே கண்டுபிடிச்சிடுவாரேன்னுட்டு, எப்பவும் எங்கூட இருக்குற திருக்குறளை குத்துமதிப்பா திறந்து ஒழுக்கமுடைமை-ல ரெண்டு குறளைப் படிச்சேன். பிறகு போய் கதவைத் திறந்தேன். 

’என்னப்பா பண்றே?’ன்னு கேட்டுக்கிட்டே என்னையும் தள்ளீட்டு உள்ள வந்தாரு. நான் ‘ஒன்னுமில்லே..கம்ப்யூட்டர்ல ஒர்க் பண்றேன் சார்’னு சொல்லும்போதே சிடி ட்ரைவ் பட்டனை அமுக்கிட்டாரு. இருவெள்ளாமைகளும் வெளில வந்திடுச்சு. அவர் அதை எடுத்துக்கிட்டு ’காலைல தர்றேன்’னு சொல்லீட்டு போய்க்கிட்டே இருந்தாரு. ’எப்படிக் கண்டுபிடிச்சாரு, நாம சத்தம் எதுவும் போடலியே.. ச்சே..திருவள்ளுவர்கூட நம்மைக் காப்பாத்தலியே’ன்னு நொந்து போனேன்.

காலைல 9 மணி பஸ்ஸைப் பிடிச்சாத்தான் ஆபீஸ்க்கு கரெக்ட் டயத்துக்கு போகமுடியும். அடுத்த பஸ்ஸைப் பிடிச்சா அரை மணி நேரம் லேட்டாத்தான் போக முடியும். அதனால 8.50க்கே கிளம்பிட்டேன். சரி, சார்கிட்ட சிடி வாங்குவோம்னு போனா சார் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. அக்கா பக்கத்துல சோறு வச்சுக்கிட்டு இருந்துச்சு. இப்போ எப்படிக் கேட்கன்னு திரும்பி வந்துட்டேன். சரி, இன்னைக்கு 9 மணி பஸ் அவ்வளவு தான். 
லேட் ஆனாலும் பரவாயில்லை..சிடி இல்லாமப் போனா சிபி கொன்னுடுவாரு. இதுவரை கட்டிக்காத்த நல்ல பேரும் போயிடுமே. அப்புறம் எக்ஸெல்ல நம்ம பேரு கடைசிக்குப் போயிடுமேன்னு ஒரே யோசனை. திரும்ப சார் வீட்டு வாசலைக் க்ராஸ் பண்ணிக்கிட்டே நோட்டம் போட்டேன்.அப்பாடி..அக்கா உள்ளே சமையல் கட்டுல! சார் லுங்கில கையத் தொடச்சுக்கிட்டே வெளில வந்து ‘என்னப்பா?’ன்னாரு. எனக்கு பகீர்னு ஆயிடுச்சு. என்ன இப்படிக் கேட்காறேன்னுட்டு ‘சார்..அந்த சிடி சார்’ன்னேன். உடனே உள்ளே திரும்பிப் பார்த்தாரு. 

நான் கிசுகிசு குரல்ல சொன்னேன் ‘அக்கா உள்ள தான் இருக்கு”ன்னு. 

உடனே அவர் ‘ஏம்மாஆஆஆஆஆஆஆஆ’ன்னு கூப்பிட்டாரு.

எனக்கு கை காலெல்லாம் வெலவெலத்துப்போச்சு. 

அது உள்ளேயிருந்து’என்ன்ன்ன்னாஆஆஆஆங்ங்க”ன்னுச்சு. 

இவர் இங்கிருந்து சத்தமா ‘அந்த சிடியை தம்பி கேட்குது. எடுத்துட்டு வா’ன்னாரு. 

அதுக்கு அது இன்னும் சத்தமா ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்த சிடி?”ன்னுச்சு.

அதுக்கு அவர் சொன்னாரு ‘நைட் நம்ம பாத்த்த்த்த்த்த்த்த்தமே.........அந்த சிடி’

பூமி சுத்துதுங்கிர பூகோள உண்மையே எனக்கு அப்ப தான் அனுபவப்பூர்வமா தெரிஞ்சது.

உள்ள இருந்து அக்கா சிடியோட வந்துச்சு. நான் அக்காவுக்கு முகம் காட்டாம திரும்பி, அங்க இருந்த சுவத்தோட சுவரா பல்லி மாதிரி ஒட்டி நின்னுக்கிட்டேன். அது வந்து சார்கிட்ட சிடியைக் கொடுத்துச்சு. அப்பக்கூட அந்தாளு என் மேல பரிதாபப்படலை.

“தம்பி தானே கேட்டுச்சு..தம்பிகிட்ட கொடும்மா’ன்னு அடுத்த இடியை இறக்குனாரு. 

அக்காவும் கொடுத்துச்சு. 

நான் திரும்பியே பாக்காம கையை மட்டும் பின்னால நீட்டி வாங்கிக்கிட்டேன். 

அடச் சண்டாளங்களா..மனுஷங்களாய்யா அவங்க..ஈவிரக்கமே இல்லாத பாவிங்க....ஒரு பச்சப்புள்ளையை இப்படியா மிரட்டுவாங்க!

இனியும் இவங்க மூஞ்சிலயே முழிக்கக் கூடாதுன்னு, அந்த மாசமே சென்னையை விட்டே ஓடி வந்துட்டேன்.


டிஸ்கி -6: டிஸ்கி தொடர்கிறது..

டிஸ்கி-7: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே இவர்கள் நடித்த சிடி என்று நினைத்து, யாரும் என்னிடம் அந்த சிடியைக் கேட்டு இம்சை செய்ய வேண்டாம்.

டிஸ்கி-8: அக்கா வீட்டு அட்ரஸ் யாருக்கும் தரப்பட மாட்டாது. (பதிவெழுத வந்தப்புறம், அது ஒன்னுதான்யா செய்யலை. அந்த வேலையையும் செய்ய வச்சுடாதீங்கய்யா...)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

84 comments:

 1. என்னை சென்னையை விட்டே விரட்டிய ஆபாச சிடி//

  ஏன் ஐயா, நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு. அவ்...

  ReplyDelete
 2. @வினையூக்கிமுதல் சிரிப்புக்கு நன்றி.

  ReplyDelete
 3. டிஸ்கி-2: இது ஆபாச சி.டி. பற்றிய பதிவு//

  சகா, நீங்களும்ம் அப்பப்ப நண்பேன் என்பதை நிரூபிக்கிறீங்களே;-))

  ReplyDelete
 4. அந்த நல்ல பெண்மணிகளை நான் அவமானப்படுத்தி விட்டதாக யாரும் கருதினால், 108 தோப்புக்கரணம் போடத் தயாராக இருக்கிறேன்.//

  அப்பாடா, நாம எப்பவுமே ஆளுங்கட்சி தான்;-))

  ReplyDelete
 5. அக்கவுண்ட் செக்சன்ல சிபி சிபின்னு ஒருத்தர் வேலை//

  நல்ல வேளை, இந்தக் கம்பனி சென்னையில் என்று சொல்லிப் போட்டீங்க, சென்னி மலை என்று சொல்லியிருந்தா,
  அவ்,,,,,,,,,,,,,

  ReplyDelete
 6. @நிரூபன்ஆஹா..ஆராய்ச்சியாளரு வந்துட்டாரே..

  ReplyDelete
 7. //நல்ல வேளை, இந்தக் கம்பனி சென்னையில் என்று சொல்லிப் போட்டீங்க, சென்னி மலை என்று சொல்லியிருந்தா// சொல்லி இருந்தா? நீங்கன்னு நினைச்சிருப்பாங்களா?

  ReplyDelete
 8. ஒருநாளு ’இரு வெள்ளை ஆமைகள் செய்த வெள்ளாமை’-ன்னு ஒரு இங்கிலீஸ் சிடியை ரிலீஸ் பண்ணாரு. அது அவர் வச்ச பேரு. அதனால கூகுள்ல தேடாதீங்க.கிடைக்காது//

  அடப் பாவிங்களா,
  இதெல்லாம் வேறையா. அவ்....

  ReplyDelete
 9. (கம்ப்யூட்டர் கண்டுபுடிச்சதே அதுக்குத் தானே!)//

  அஃதே.........அஃதே..........அஃதே.........

  ReplyDelete
 10. (கம்ப்யூட்டர் கண்டுபுடிச்சதே அதுக்குத் தானே!)//

  நம்ம கட்சியாங்க நீங்க.

  ReplyDelete
 11. அக்கா வீட்டு அட்ரஸ் யாருக்கும் தரப்பட மாட்டாது. (பதிவெழுத வந்தப்புறம், அது ஒன்னுதான்யா செய்யலை. அந்த வேலையையும் செய்ய வச்சுடாதீங்கய்யா...)//

  நம்மாளுங்களை நல்லாத் தான் புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 12. செங்கோவி said...
  //நல்ல வேளை, இந்தக் கம்பனி சென்னையில் என்று சொல்லிப் போட்டீங்க, சென்னி மலை என்று சொல்லியிருந்தா// சொல்லி இருந்தா? நீங்கன்னு நினைச்சிருப்பாங்களா?//

  அது நம்மசெந்தில் குமாரின் ஊர் ஐயா.
  சிபி செந்தில் குமார்.

  ReplyDelete
 13. @நிரூபன்//(கம்ப்யூட்டர் கண்டுபுடிச்சதே அதுக்குத் தானே!)//

  நம்ம கட்சியாங்க நீங்க.// அதுல என்ன சந்தேகம்...

  ReplyDelete
 14. @நிரூபன்//அது நம்மசெந்தில் குமாரின் ஊர் ஐயா.
  சிபி செந்தில் குமார்.// அவர் ஊரு ஈரோடுன்னுல்ல நினைச்சேன்..ஹி..ஹி..இந்தப் பதிவுக்கும் சிபிக்கும் எந்தத் தொட்ர்பும் இல்லைன்னு ஒரு டிஸ்கி போட்டுடலாமா?

  ReplyDelete
 15. @நிரூபன்//நம்மாளுங்களை நல்லாத் தான் புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.// பின்னே,நம்ம வடை குரூப் வந்தா முதல்ல அதைத் தானே கேட்கும்!

  ReplyDelete
 16. ///என் கம்பெனில அக்கவுண்ட் செக்சன்ல சிபி சிபின்னு ஒருத்தர் வேலை பார்த்தாரு.(நண்பரின் நலம் கருதி அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது!) // அதெப்பிடி பாஸ் உங்களால மட்டும் இப்பிடி எல்லாம் ரகசியம் காக்க முடியுது )

  ReplyDelete
 17. ////டிஸ்கி-7: இந்தப் பதிவில் உள்ள படங்களில் காணப்படும் நடிகைகளுக்கும் ஆபாச சிடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே இவர்கள் நடித்த சிடி என்று நினைத்து, யாரும் என்னிடம் அந்த சிடியைக் கேட்டு இம்சை செய்ய வேண்டாம்./// என்ன கொடும சரவணன்..)

  ReplyDelete
 18. @கந்தசாமி.அதெப்பிடி பாஸ் உங்களால மட்டும் இப்பிடி எல்லாம் ரகசியம் காக்க முடியுது )// உஷ்..அதுவும் ரகசியம்.

  ReplyDelete
 19. ஹிஹி செம இண்டரஸ்டிங் கதை பாஸ்

  ReplyDelete
 20. ஹிஹி நல்ல பாமிலி..மிஸ் பண்ணீட்டீங்க.
  அவங்க கிட்ட நீங்க வாங்கி இருக்கலாம் வேற ஏதும் சி டி பாஸ் ஹீ

  ReplyDelete
 21. @மைந்தன் சிவா//அவங்க கிட்ட நீங்க வாங்கி இருக்கலாம் வேற ஏதும் சி டி பாஸ் ஹீ// உண்மையில ரொம்ப ஷாக் ஆகிட்டேன் தம்பி..உங்க அளவுக்கு நான் தைரியமானவன் இல்லைன்னு வச்சுக்கோங்களேன்!!

  ReplyDelete
 22. >>என் கம்பெனில அக்கவுண்ட் செக்சன்ல சிபி சிபின்னு ஒருத்தர் வேலை பார்த்தாரு.(நண்பரின் நலம் கருதி அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது!) அவர் ரொம்ப தங்கமான மனுசன். ஏதாவது சீன் பட சிடி கிடைச்சா தன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ரவுண்ட்ல விடுவாரு. அதை ஃபாலோ பண்றதுக்குன்னே தனியா ஒரு எக்ஸெல் சீட் வச்சிருப்பாரு.

  ஒரு கண்ணியமான பதிவரை இப்படித்தான் அவமானப்படுத்துவதா? ஆள் பலமும் அதிகார பலமும் இருந்து விட்டால் என்ன வேணாலும் செய்யலாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 23. >>அக்கா வீட்டு அட்ரஸ் யாருக்கும் தரப்பட மாட்டாது. (பதிவெழுத வந்தப்புறம், அது ஒன்னுதான்யா செய்யலை. அந்த வேலையையும் செய்ய வச்சுடாதீங்கய்யா...)

  பெண்களை கேவலப்படுத்திய அண்னனின் ஆபாசப்பதிவுக்கு ஒரு மைனஸ் ஓட்டுக்கூட இல்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது ஹி ஹி

  ReplyDelete
 24. இந்தப்பதிவு 400 ஹிட்ஸ் வாங்கி விட்டது.. இன்னும் 1200 ஹிட்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 25. தலைப்பு வைக்க உட்காந்து யோசிப்பீங்களோ ???????

  ReplyDelete
 26. நண்பரின் எக்ஸலில் என் பெயரை சேர்க்க சொல்லவும்

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

  நாமே ராஜா, நமக்கே விருது-8
  http://speedsays.blogspot.com/2011/05/8.html

  ReplyDelete
 27. please anna, அக்கா வீட்டு அட்ரஸ் கொடுங்களேன்

  ReplyDelete
 28. பச்சப்புள்ள பாவம் ரொம்பப் பயந்து ஊரை விட்டே ஓடிப் போயிடுச்சு! இதற்குக் காரணமாக இருந்த அந்த நண்பர் சிபியை(ஏன் இந்தப்பேர்?) கன்டிக்கிறேன்!

  ReplyDelete
 29. பாவம் அவுக!(மைந்தன் சிவாவும்,நிரூபனும்)வட போச்சே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. //கறிக்குழம்பு வச்சா, பாயாசம் வச்சா எனக்கும் கண்டிப்பாக் கொடுப்பாங்க//
   வட குடுத்ததா சொல்லலியே.

   Delete
 30. செமையா மாட்டி முழி பிதுங்கி, சொம்பு நசுங்கி போயிடுச்சோ ஹா ஹா ஹா ஹா ஹா...!!

  ReplyDelete
 31. என்னாச்சுய்யா தமிழ்மணம் ஏழாவது ஓட்டு இன்னைக்கி எல்லாருக்கும் நான்தான் போட்டுட்டு இருக்கேன்....!!!?

  ReplyDelete
 32. நன்றாக இருந்தது செங்கோவி.....பிரிச்சு மேஞ்சுட்டிங்க "வெள்ளாமைய"

  ReplyDelete
 33. நன்றாக இருந்தது செங்கோவி.....பிரிச்சு மேஞ்சுட்டிங்க "வெள்ளாமைய"

  ReplyDelete
 34. நன்றாக இருந்தது செங்கோவி.....பிரிச்சு மேஞ்சுட்டிங்க "வெள்ளாமைய"

  ReplyDelete
  Replies
  1. குத்தகைகாரன் அனுபவிக்ககுதுக்கு முன்பே தான் வீட்டு சொந்தக்காரரு புடுங்கிட்டி போயிட்டாரே. இதுல எங்கன மேய?

   Delete
 35. @சி.பி.செந்தில்குமார்ஹி..ஹி..நானும் எவ்வளவோ பெயர் யோசிச்சேண்ணே..ஆனா உங்க பேரு மாதிரி பொருத்தமான பெயர் ஏதும் கிடைக்கலைண்ணே..

  ReplyDelete
 36. @சி.பி.செந்தில்குமார்//இந்தப்பதிவு 400 ஹிட்ஸ் வாங்கி விட்டது.. இன்னும் 1200 ஹிட்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்// உம்ம வாய் முகூர்த்தம் பலிக்கும்னு நினைக்கேன்..இப்பவே 1000..

  ReplyDelete
 37. @Ponchandar//தலைப்பு வைக்க உட்காந்து யோசிப்பீங்களோ ?// ஹி..ஹி..எப்படி பாஸ் கண்டுபிடிச்சீங்க..இதைவிட நல்ல தலைப்பு இருக்கா என்ன?

  ReplyDelete
 38. @Speed Master//நண்பரின் எக்ஸலில் என் பெயரை சேர்க்க சொல்லவும்// முடியாது மாஸ்டர்..துரதிர்ஷ்டவசமாக அவருக்குக் கல்யாணம் ஆயிடுச்சு.

  ReplyDelete
 39. @அருண் இராமசாமி//please anna, அக்கா வீட்டு அட்ரஸ் கொடுங்களேன்// தம்பி, வேணாம்..வலிக்குது..அழுதுடுவேன்!

  ReplyDelete
 40. @சென்னை பித்தன்//இதற்குக் காரணமாக இருந்த அந்த நண்பர் சிபியை(ஏன் இந்தப்பேர்?) கன்டிக்கிறேன்! // வேறெதுக்கு..நீங்க சிபியைக் கண்டிக்கணும்னு தான்!

  ReplyDelete
 41. @Yoga.s.FR//பாவம் அவுக!(மைந்தன் சிவாவும்,நிரூபனும்)வட போச்சே!// பரவாயில்லை பாஸ்..பாவம் அவங்க..ஒருநாளைக்கு எத்தனை வடை தான் வாங்குவாங்க..சாப்பிடுவாங்க..

  ReplyDelete
 42. @MANO நாஞ்சில் மனோ//செமையா மாட்டி முழி பிதுங்கி, சொம்பு நசுங்கி போயிடுச்சோ ஹா ஹா ஹா ஹா ஹா...!! // இவ்வளவு டீடெய்லு தேவையாண்ணே..கூடவே பி.எஸ்.வீரப்பா மாதிரி சிரிப்பு வேற..

  ReplyDelete
 43. @கிருஷ்ணன் இரா / Krishnan R //நன்றாக இருந்தது செங்கோவி...// நன்றி பாஸ்..அதை ஏன் 3 தடவை கோர்ட்டுல சொல்ற மாதிரிச் சொல்றீங்க..உணர்ச்சிவசப்பட்டுட்டீங்களோ..

  ReplyDelete
 44. @தமிழ்வாசி - Prakash மொக்கைப் பதிவுக்கெல்லாம் 9 கமெண்டு போடறது..இது மாதிரி நல்ல பதிவுக்கு ஹி..ஹி..யா?

  ReplyDelete
 45. @செங்கோவி // சும்மா மூனுதடவை அமுகிட்டேன்...போகுதோ என்னமோன்னு......இதுக்கு ஒரு பஞ்சாயத்தை கூட்டிபுடாதிக செங்கோவி.....

  ReplyDelete
  Replies
  1. //சும்மா மூனுதடவை அமுக்கிட்டேன்//
   என்னது மூணு தடவையா?

   Delete
 46. @கிருஷ்ணன் இரா / Krishnan R இந்தக் காலத்துல கவர்ன்மெண்ட் பஸ்ஸு ஹாரனைக் கூட 3 தடவை அமுக்க முடியாதுய்யா..இருந்தாலும் உங்க ஃபீலிங்ஸ் எனக்குப் புரியறதால இத்தோட பஞ்சாயத்தை முடிச்சிக்கலாம்.

  ReplyDelete
 47. இப்ப அந்த cd யார்கிட்டே இருக்கு அந்த இங்கிலீஷ் பட டைட்டில் சூப்பர்பா

  ReplyDelete
 48. @பிரபாஷ்கரன் அய்யய்யோ..உங்களை மாதிரி நல்ல புள்ளைகளைக் கூட கெடுத்துட்டனே..

  ReplyDelete
 49. என்னய்யா இது பாசப்பதிவை விட ஆபாசப்பதிவு தொல்லை அதிகமா இருக்கு. அதை போடுறதுக்கு முன்ன முன் ஜாமீன், சைட் ஜாமீன் எல்லாம் வாங்குறாங்க...

  ReplyDelete
 50. /நான் சென்னையில குப்பை கொட்டிக்கிட்டடு இருந்த நேரம்..ஒரு வீட்ல வாடகைக்கு இருந்தேன்.//

  குப்பை கொட்டும் நேரத்துல எதுக்கு வீட்ல இருந்தீங்க. வெளில வந்து கொட்டி இருக்கலாமே?

  ReplyDelete
 51. @! சிவகுமார் !//அதை போடுறதுக்கு முன்ன முன் ஜாமீன், சைட் ஜாமீன் எல்லாம் வாங்குறாங்க...// கனிமொழியே ஜாமீன் கேட்கும்போது, நாங்க கேட்கக்கூடாதா..

  ReplyDelete
 52. @! சிவகுமார் ! //குப்பை கொட்டும் நேரத்துல எதுக்கு வீட்ல இருந்தீங்க. வெளில வந்து கொட்டி இருக்கலாமே?// அம்மோ..முடியலை!

  ReplyDelete
 53. //என் கம்பெனில அக்கவுண்ட் செக்சன்ல சிபி சிபின்னு ஒருத்தர் வேலை பார்த்தாரு.(நண்பரின் நலம் கருதி அவர் பெயர் மாற்றப்பட்டுள்ளது!) அவர் ரொம்ப தங்கமான மனுசன். ஏதாவது சீன் பட சிடி கிடைச்சா தன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ரவுண்ட்ல விடுவாரு. அதை ஃபாலோ பண்றதுக்குன்னே தனியா ஒரு எக்ஸெல் சீட் வச்சிருப்பாரு.//
  இப்படி ஒரு பதிவில், எங்கள் அண்ணன் சிபியின் பெயர் பயன்படுத்தியதற்கு,எனது கண்ட.. சாரி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 54. (பதிவெழுத வந்தப்புறம், அது ஒன்னுதான்யா செய்யலை. அந்த வேலையையும் செய்ய வச்சுடாதீங்கய்யா. nice

  ReplyDelete
 55. @FOODசிபி மாதிரி நல்ல மனுசங்க பேரை இப்படிப்பட்ட பதிவுல யூஸ் பண்ணதை நினைச்சா, எனக்கும்...ஹி..ஹி..குஜாலாத்தான் இருக்கு சார்.

  ReplyDelete
 56. @shanmugavelநைஸா?..ஒரு மனுசன் புலம்பறது நைஸாய்யா உங்களுக்கு..

  ReplyDelete
 57. //உடனே போனா மூஞ்சியைப் பாத்தே கண்டுபிடிச்சிடுவாரேன்னுட்டு, எப்பவும் எங்கூட இருக்குற திருக்குறளை குத்துமதிப்பா திறந்து ஒழுக்கமுடைமை-ல ரெண்டு குறளைப் படிச்சேன்//
  சூப்பரண்ணே! இதுதான் ஹைலைட்!! சுஜாதா 'டச்' தெரியுது!!!

  ReplyDelete
 58. இத மாதிரி இன்னும் பல பதிவுகளை நீங்க போடணும்! நாங்க கற்றுக் கொள்ளணும்! நடந்தத கூச்சப்படாம, சென்சார் பண்ணாம எழுதுங்க பாஸ்! அப்போதான் எலக்கியவாதியா ஆகமுடியும்! :-)

  ReplyDelete
 59. செங்கோவி, எனக்கு ஒரு சந்தேகம், இந்த ஷகீலா பார்க்கிறதுக்கு லட்சமா இருக்கிற மாதிரியும் தெரியல, ஆளு ஸ்ட்ரக்சர் நல்லா இருக்கிற மாதிரியும் தெரியல.... அப்புறம் டான்ஸ் நல்லா பண்ற மாதிரியும் தெரியல... இந்த ரோடு ரோலரை எதை வச்சு கவர்ச்சி பன்னியாக.... சாரி... கவர்ச்சி கன்னியாக நம்மாளுங்க நினைக்கிறாங்க, அந்தம்மா படத்தை விரட்டி விரட்டி பார்க்கிறாங்கன்னு உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமா?

  \\அதை ஃபாலோ பண்றதுக்குன்னே தனியா ஒரு எக்ஸெல் சீட் வச்சிருப்பாரு.\\ அஹா... எப்பேர்பட்ட பவர்புல் அப்ளிகேஷன்னு நினைசுகிட்டு இருந்தேனே....!! நமாளுங்க எதுக்கெல்லாம் பயன் படுத்தறாங்கப்பா..!!

  \\எந்த சிடி யார்கிட்ட, என்னைக்கு கொடுத்தாரு, அதை யாரெல்லாம் வச்சிருந்தாங்க, இப்போ யாரு வச்சிருக்காங்க-ன்னு எல்லா டீடெய்லும் அதுல இருக்கும்.\\ சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை நாம வச்சிருக்கோம், சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்காங்க மாதிரி இருக்கே!!

  \\இதுவரை கட்டிக்காத்த நல்ல பேரும் போயிடுமே.\\ இந்தப் பேரு ரொம்ப முக்கியமாச்சே!!
  \\எனவே இவர்கள் நடித்த சிடி என்று நினைத்து, யாரும் என்னிடம் அந்த சிடியைக் கேட்டு இம்சை செய்ய வேண்டாம்.\\ இதுக்கு பேசாம யூ டியூப்ல பன்னிங்க மேயுற படமா தேடித் பிடிச்சு பாத்துக்கறேன்.

  ReplyDelete
 60. @ஜீ...//சுஜாதா 'டச்' தெரியுது!!! // அவருமா டச் பண்ணாரு?

  ReplyDelete
 61. @ஜீ...//நடந்தத கூச்சப்படாம, சென்சார் பண்ணாம எழுதுங்க பாஸ்! // நாம என்னைக்கு கூச்சப்பட்டிருக்கோம்? படிக்கிறவங்க தான்...

  //அப்போதான் எலக்கியவாதியா ஆகமுடியும்! // ஏன்யா நான் நல்லா இருக்குறது பிடிக்கலியா..

  ReplyDelete
 62. @Prasannaakumar MP//Sooper sir...i like you naration.// நன்றி நண்பரே..உணர்ச்சிவசப்பட்டு எழுதுனானே நரெசன் அப்படி வந்துடுது!!

  ReplyDelete
 63. @Jayadev Das//செங்கோவி, எனக்கு ஒரு சந்தேகம், இந்த ஷகீலா பார்க்கிறதுக்கு லட்சமா இருக்கிற மாதிரியும் தெரியல, ஆளு ஸ்ட்ரக்சர் நல்லா இருக்கிற மாதிரியும் தெரியல.... அப்புறம் டான்ஸ் நல்லா பண்ற மாதிரியும் தெரியல... இந்த ரோடு ரோலரை எதை வச்சு கவர்ச்சி பன்னியாக.... சாரி... கவர்ச்சி கன்னியாக நம்மாளுங்க நினைக்கிறாங்க, அந்தம்மா படத்தை விரட்டி விரட்டி பார்க்கிறாங்கன்னு உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமா?// சார், நீங்க தமிழர்களை மட்டுமல்லாம நம்ம சேட்டன்களையும் அவமானப்படுத்துறீங்க..உங்களுக்கு சினிமாஸ்கோப் பிடிக்காம இருக்கலாம், அதுக்காக நாங்களும் அப்படியே இருக்க முடியுமா? உங்களுக்கு ஸ்லிம்மோஃபோபியா-ன்னு ஒரு வியாதி இருக்குன்னு நினைக்கேன்.

  \\இதுக்கு பேசாம யூ டியூப்ல பன்னிங்க மேயுற படமா தேடித் பிடிச்சு பாத்துக்கறேன்// அதுவும் யூஸ்ஃபுல்லா தான் இருக்கும்..இருந்தாலும் அந்த நேரத்துல அதைப் பார்க்குறது டூ மச் சார்.

  ReplyDelete
 64. நைட்டு 12.30-க்கு கெக்கெ பிக்கேன்னு அடக்க முடியாம சிரிச்சிகிட்டு இருக்கேன்.

  இப்படி சிரிச்சி ரொம்ப நாளாச்சிங்க தல. வழக்கமா சாரு எதுனா சீரியஸா எழுதினாதான் இப்படி சிரிப்பேன். :) :)

  ReplyDelete
 65. @புள்ளி ராஜா //நைட்டு 12.30-க்கு கெக்கெ பிக்கேன்னு அடக்க முடியாம சிரிச்சிகிட்டு இருக்கேன். இப்படி சிரிச்சி ரொம்ப நாளாச்சிங்க தல. // ரொம்ப சந்தோசம் தலைவரே..

  //வழக்கமா சாரு எதுனா சீரியஸா எழுதினாதான் இப்படி சிரிப்பேன்// ஒரு மனுசன் சாட் பண்றதைப் பார்த்து சிரிக்கிறது ரொம்பத் தப்புய்யா.

  ReplyDelete
 66. //////இனியும் இவங்க மூஞ்சிலயே முழிக்கக் கூடாதுன்னு, அந்த மாசமே சென்னையை விட்டே ஓடி வந்துட்டேன்.///////

  நம்பிட்டேன்.... (சே நமக்கு இப்படி ஒண்ணு அமையலியே....!)

  ReplyDelete
 67. சிபி கேரக்டர் மிக யதார்த்தமாக இயல்பாக இருந்தது....!

  ReplyDelete
 68. ////டிஸ்கி-8: அக்கா வீட்டு அட்ரஸ் யாருக்கும் தரப்பட மாட்டாது./////

  அப்போ அந்த அட்ரஸ் பத்தரமா இருக்கு? நல்லா வெளங்கிருச்சுய்யா......

  ReplyDelete
 69. @பன்னிக்குட்டி ராம்சாமி //சிபி கேரக்டர் மிக யதார்த்தமாக இயல்பாக இருந்தது.// அவர் பார்க்குறதுக்கும் சிபி மாதிரியே இருப்பார்.

  ReplyDelete
 70. @பன்னிக்குட்டி ராம்சாமி //அப்போ அந்த அட்ரஸ் பத்தரமா இருக்கு? // ஹி..ஹி.

  ReplyDelete
 71. உண்மையிலேயே ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க! எத்தன தடவ படிச்சாலும் சிரிப்ப அடக்க முடியல!

  ReplyDelete
 72. மிகவும் இயல்பான நடை அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 73. இது ஹிட்சுக்கான பதிவா? ;) ( எல்லாத்தையுமே கேட்டுட்டாங்க, நான் வேறென்ன கேக்க?)

  ReplyDelete
 74. இது ஹிட்சுக்கான பதிவா? ;) ( எல்லாத்தையுமே கேட்டுட்டாங்க, நான் வேறென்ன கேக்க?)

  ReplyDelete
  Replies
  1. ஆமாய்யா..இதில் கிடைத்த ஹிட்ஸை வைத்து த் தான் அந்த அஞ்சு கிரவுண்ட் இடம் வாங்கிப் போட்டேன்.

   Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.