Tuesday, May 31, 2011

சினிமாவும் கார்ப்போரேட் நிறுவனங்களும்

”தமிழ் சினிமாவுக்கு இனிமே வசந்தகாலம்தான்..ஹாலிவுட் சினிமா மாதிரி நம்ம சினிமாவும் மாறப்போகுது”

இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமா ரசிகரான என் நண்பர் குதூகளித்தார். அப்போதுதான் ஐங்கரன், சாய்மீரா, மோசபியர், ரிலையன்ஸ் அட்லப்ஸ் போன்ற பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் நேரடி படத்தயாரிப்பில் இறங்கியிருந்தன. 

நான் அதை முழுதும் மறுத்தேன்.
“இல்லை நண்பரே..இந்த நிறுவனங்கள் அனைத்தும் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும். இது சினிமாத்துறைக்கும் நல்லதல்ல.. ஃபெண்டா மீடியா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு ஜெயிக்கமுடியாமல் போயிருக்கின்றன.” என்றேன். நண்பர் அப்போது அதை ஒத்துக்கொள்ளவேயில்லை. இன்று இந்த நிறுவனங்கள் இருப்பது கடும் நிதிச்சிக்கலில்...

மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் மேனேஜர் போலி பெட்ரோல் பில் கொடுத்து 150 ரூபாய் கமிசன் அடிப்பதை இந்தியா போன்ற தேசத்தில்தான் காணமுடியும். மிகப் பெரிய நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டில் நமது அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. அதுவும் அந்த நிறுவனம் ஒரு லிமிட்டேட் கம்பெனியாக இருந்துவிட்டால், கடிவாளம் அறுந்த குதிரையின் நிலைதான். போன வருடம் ஒரு பிரபல இதழில் வந்த கிசுகிசு இது:

”பட்டம் நடிகை இப்போதெல்லாம் சென்னை வந்தால், கார்ப்போரேட் நிறுவன டைரக்டர்களுடன் காரில் பறக்கிறாராம். நடிகர், இயக்குனர்களைப் பிடிப்பதைவிட நேரடியாக இவர்களைப் பிடிப்பதால் கைமேல் படங்கள்”

இது கிளுகிளுப்பான கிசுகிசு அல்ல. பெரிய நிறுவனங்களில் உள்ள அவல நிலை. ஒரு தனிப்பட்ட மனிதரின் சொந்தப் படமாக இருந்தால் அவராவது கொஞ்சம் அக்கறை கொள்வார். ஆனால் கார்போரேட் நிறுவனங்களின் நிலை அந்த வகையில் மோசம்தான். 
இவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன்ங்கள் என்பதால், இவர்கள் அள்ளி விட்டதில் பெரும்பகுதி மக்கள் பணம். மக்கள் பணத்தைக் கையாளும்போது தாராள மனதாய் நாம் நடந்துகொள்வதும் சகஜமே! (இத்தகைய நிறுவன்ங்களில் முதலீடு செய்வது பலமுறை யோசித்துச் செய்யவேண்டிய ரிஸ்க் மிகுந்த சமாச்சாரம்!)

நடிகர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்களின் சுய சொறிதல்களுக்கு அடிபணிந்ததும், அவர்களின் சம்பளத்தை பல மடங்கு கூட்டிவிட்டதும் இந்த நிறுவனங்கள் செய்த மிகப் பெரிய தவறாகும்.

ஒரு நிறுவனத்தின் பணியானது ஒரு பொருளை(Product) தயாரிப்பது அல்லது தொலைத் தொடர்புத்துறை போன்ற சேவை(service)யினை அளிப்பது. சினிமாவைப் பொறுத்தவரை வரும் சிக்கல் என்னவென்றால் திரைப்படம் என்பதை முழுதாக பொருள்வகையிலோ சேவையிலோ சேர்க்க இயலாது. மேலும் படத்தயாரிப்பு என்பது முழுமையான தொழிலும் அல்ல. அது தொழிலும் சூதாட்டமும் சரிவிகித்தில் கலந்த ஒரு கலவை.

சினிமாவில் ஒரு நிறுவனம் ஜெயிக்கத் தேவை கண்டிப்பான தலைமை. ஏவிஎம், சின்னப்பத்தேவர் போன்ற, பெரிய ஸ்டார்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தலமை இருந்ததால்தான் அந்த நிறுவனங்களால் சினிமாவில் இத்தனை வருடம் நிலைத்திருக்க முடிந்தது. 

எனவே, கண்டிப்பான தலைமையும், நேர்மையான சினிமா அறிவுள்ள அதிகாரிகளும் இல்லாதவரை கார்போரேட் நிறுவனங்களுக்கு சினிமாவில் லாபம் என்பது கனவே.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

44 comments:

 1. அர்த்த ராத்திரில பதிவை இறக்குறதே வேலையா போச்சி!! கௌதமோட நடுநிசி பேய்கள் படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதணும்.

  ReplyDelete
 2. /உயர்பதவியில் இருப்பவர்கள் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டில் நமது அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல//

  கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுக்கும் உயர்பதவிக்கும் என்ன சம்மந்தம்? சும்மா இருக்குற தி.மு.க. நண்பர்களை உரண்டைக்கு இழுக்காதீங்க..

  ReplyDelete
 3. @! சிவகுமார் ! அர்த்த ராத்திரில பதிவு படிக்கறதே வேலையாப் போச்சு..உங்களுக்குத் தான்யா அர்த்தமும் ராத்திரியும்..இங்க 9.30 தான்.

  ReplyDelete
 4. @! சிவகுமார் !//சும்மா இருக்குற தி.மு.க. நண்பர்களை உரண்டைக்கு இழுக்காதீங்க.// ஆஹா..கோர்த்து விட்டுட்டாங்களே..

  ReplyDelete
 5. //இங்க 9.30 தான்//

  அதைத்தான் சொன்னேன். 9.30 என்றால் 9*30 = 270 = 2.70 = 3.10 A.M. விடியப்போகுது . போய் உறங்குங்க.

  ReplyDelete
 6. தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல்.. வீழ்ச்சியை சந்தித்ததோடு நடிகர்களின் சம்பளத்தையும் ஏற்றிவிட்டு சென்று விட்டனர் கோட் சூட் போட்ட கார்ப்பரேட் 'குரு'ஸ்.

  ReplyDelete
 7. @! சிவகுமார் !//9.30 என்றால் 9*30 = 270 = 2.70 = 3.10 A.M. விடியப்போகுது . போய் உறங்குங்க.// யாருய்யா உங்க கணக்கு டீச்சர்?

  ReplyDelete
 8. @! சிவகுமார் !//வீழ்ச்சியை சந்தித்ததோடு நடிகர்களின் சம்பளத்தையும் ஏற்றிவிட்டு சென்று விட்டனர் கோட் சூட் போட்ட கார்ப்பரேட் 'குரு'ஸ்.// ஏத்துன சம்பளமும் விலைவாசியும் அவ்வளவு சீக்கிரம் குறைஞ்சிடுமா?

  ReplyDelete
 9. தலமைத்துவம் இல்லையேல் எல்லாமே அதள பாதாளத்தில் விழுந்து விடும் என்பது இக் காப்பரேட் சினிமாக் கம்பனிகள் மூலமும் நிரூபணமாகிறது.

  ReplyDelete
 10. சினிமா தயாரிப்பு பத்தின கவலை உங்களுக்கு எதுக்கு? நம்மளுக்கு நல்ல படம் கொடுக்கராங்களா? கொடுத்த காசுக்கு பிரயோஜனமா இருந்துச்சா பாருங்க, அவ்வளவுதான்.

  ReplyDelete
 11. கண்டிப்பான தலைமையும், நேர்மையான சினிமா அறிவுள்ள அதிகாரிகளும் இல்லாதவரை கார்போரேட் நிறுவனங்களுக்கு சினிமாவில் லாபம் என்பது கனவே.>>>>

  நம்ம செங்கோவி சொல்லிட்டாரு. அதிகாரிகளே கேட்டுக்கங்க.

  எனது வலைப்பூவில்:
  மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்

  ReplyDelete
 12. //சிவகுமார் ! said... [Reply]
  அர்த்த ராத்திரில பதிவை இறக்குறதே வேலையா போச்சி!! கௌதமோட நடுநிசி பேய்கள் படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதணும்.///
  அதே அதே...
  நடுநிசி பதிவர்னு பெயர் வைக்கலாம் ஹிஹி

  ReplyDelete
 13. அந்தக்காலத்தில் நடிகர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடிந்தது.இப்போது முடியுமா??

  ReplyDelete
 14. @நிரூபன்//தலமைத்துவம் இல்லையேல் எல்லாமே அதள பாதாளத்தில் விழுந்து விடும்// உண்மை..உண்மை.

  ReplyDelete
 15. @தமிழ்வாசி - Prakash //சினிமா தயாரிப்பு பத்தின கவலை உங்களுக்கு எதுக்கு? நம்மளுக்கு நல்ல படம் கொடுக்கராங்களா?// யோவ், ரெண்டும் ஒன்னு தான்யா..நல்ல அதிகார்கள் இருந்தாத்தானே நல்ல டைரக்டர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

  ReplyDelete
 16. @மைந்தன் சிவா //அதே அதே...
  நடுநிசி பதிவர்னு பெயர் வைக்கலாம் ஹிஹி// ஆஹா..ஒன்னு கூடிட்டாங்களே.

  ReplyDelete
 17. @மைந்தன் சிவா//அந்தக்காலத்தில் நடிகர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடிந்தது.இப்போது முடியுமா?// எல்லாருமே கண்டிப்புடன் இருந்தால் முடியும். கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று காலில் விழுவது தான் பிரச்சினையே.

  ReplyDelete
 18. மாப்ள சரியா சொன்னீரு!

  ReplyDelete
 19. அவர்கள் எடுத்த படங்கள் எல்லாமே அட்டர்பிளாப் படங்கள்!
  கதை, தரம் பற்றி எந்தவிதத்திலும் அக்கரை கொண்டதாகத் தெரியவில்லை!
  பெரிய நடிகர்களின் கால்ஷீட் மட்டும்போதும் வேறு எதுவும் தேவையில்லை என்ற மனோபாவத்தில்தான் ஆரம்பத்திலிருந்தன!

  உதாரணம் ஐங்கரன் முதன்முதல் நேரடியாக தயாரித்தது 'ஏகன்'! அஜீத்தை மட்டுமே நம்பி, படமெடுக்கவே தெரியாத ராஜூசுந்தரத்தை போட்டு! (ஏற்கனவே ஒரு படத்தில் பாதியில் துரத்தப்பட்டவர்) இதில இந்த மொக்கைப்படத்தை ஒருவருடமாக எடுத்தார்கள்!
  அடுத்தது வில்லு! - இரண்டு படம் போதாதா?

  இறுதியில் அவர்கள் செய்த ஒரு நல்லகாரியம் 'அங்காடித்தெரு'!

  நீங்கள் சொன்னது போல பொறுப்பெடுக்க வேண்டிய அதிகாரிகள் தங்களைமட்டுமே 'கவனித்துக் கொண்டதால்' தான் இந்தநிலை போலும்!

  ReplyDelete
 20. அண்ணன் செங்கோவி வீட்டுலயும் புலி வெளிலயும் புலி என நினைத்திருந்தேன் ,.. ஹி ஹி இன்று தான் ஒரு உண்மை தெரிந்தது..

  ReplyDelete
 21. @ஜீ...கலக்கலான கமெண்ட் ஜீ..சரியாகச் சொன்னீர்கள்..அங்காடித்தெரு, பூ போன்றவை நல்ல முயற்சிகள் தான்.

  ReplyDelete
 22. @சி.பி.செந்தில்குமார்//அண்ணன் செங்கோவி வீட்டுலயும் புலி வெளிலயும் புலி என நினைத்திருந்தேன் ,.. ஹி ஹி இன்று தான் ஒரு உண்மை தெரிந்தது..// நான் எப்பய்யா வீட்ல புலின்னு சொன்னேன்..நீங்களே நினைச்சுக்கிட்டா நானா பொறுப்பு..

  ReplyDelete
 23. சரியான திட்டமிடல் இருந்தாலும் சிலரின் பொறுப்பில்லாதவர்களால் இது போன்ற சிக்கல்கள் வரவே செய்யும், பொறுப்பில்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் இப்படித்தான். நல்லா சொன்னீங்க நண்பரே...

  ReplyDelete
 24. \\மேலும் படத்தயாரிப்பு என்பது முழுமையான தொழிலும் அல்ல. அது தொழிலும் சூதாட்டமும் சரிவிகித்தில் கலந்த ஒரு கலவை.\\ மிகச் சரியானது. மோசபியர் காரன், சி.டி. தயாரிப்பதும் சினிமா தயாரிப்பதும் ஒன்று என்று நினைத்துவிட்டான் போல. முன்னதில் கச்சாப் பொருட்களைப் போட்டு, ஆட்களுக்கு கூலி கொடுத்து விட்டால் போதும், நிரூபிக்கப் பட்ட தொழிலி நுட்பம் உள்ளதால் சி.டி. தயாராகிவிடும். எப்போ வேண்டுமானாலும் விற்றுக் கொல்லலாம். ஆனால் சினிமாவில், மக்களின் ரசனை என்ற ஒன்று உள்ளது. அது எப்போ தூக்கி விடும், எப்போ காலை வாரி விடும் என்று யாருக்கும் தெரியாது. இந்த பெரிய வித்தியாசம் இருப்பதால், கார்பொரேட் நிறுவனங்கள் சினிமாத் தயாரிப்பில் ஜொலிக்காமல் போனதில் வியப்பேயில்லை.

  ReplyDelete
 25. ஓ,யார் அந்த பட்டம் நடிகை தம்பி...

  ReplyDelete
 26. @ஜ.ரா.ரமேஷ் பாபு//பொறுப்பில்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் இப்படித்தான்.// கரெக்டாச் சொன்னீங்க..சொந்தக்காசுன்னா மட்டும்தான் நம்ம ஆளுக பொறுப்பா இருப்பாங்க!

  ReplyDelete
 27. @Jayadev Das//ஆனால் சினிமாவில், மக்களின் ரசனை என்ற ஒன்று உள்ளது. அது எப்போ தூக்கி விடும், எப்போ காலை வாரி விடும் என்று யாருக்கும் தெரியாது// உண்மை தான் சார்..சில நல்ல படங்கள் ஊத்தி மூடிக்கும்..சில சுமாரான படங்கள் (சின்னத்தம்பி) பிச்சுக்கிட்டு ஓடும்..ஒன்னும் நம்ப முடியாது.

  ReplyDelete
 28. @அமுதா கிருஷ்ணா//யார் அந்த பட்டம் நடிகை தம்பி...// பாருங்கய்யா........நீங்க நயன் கோடி கொடுத்தாலும் சொல்ல மாட்டேன்க்கா!

  ReplyDelete
 29. @middleclassmadhavi//சரியான அலசல்!// அலசுன அப்புறம் பளிச்னு இருக்காக்கா பதிவு?

  ReplyDelete
 30. சிவகுமார் ! said... [Reply]
  அர்த்த ராத்திரில பதிவை இறக்குறதே வேலையா போச்சி!! கௌதமோட நடுநிசி பேய்கள் படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதணும்.//

  அப்போ அண்ணன் மப்புலன்னு சொல்லுங்க ஹிஹி...

  ReplyDelete
 31. @MANO நாஞ்சில் மனோ//அப்போ அண்ணன் மப்புலன்னு சொல்லுங்க ஹிஹி...// இதை மட்டும் தெளிவாப் பேசிடுங்கய்யா..

  ReplyDelete
 32. யோவ் என்கையா பதிவ காணேல ஒன்னும் புதுசா??

  ReplyDelete
 33. யாரு பாஸ் அந்த பட்டம் நடிகை?

  ReplyDelete
 34. மண்ணை கவ்வும் கார்பரேட் நிறுவனங்கள்...சினிமா க்ளாஸா இருந்தாலும் தயாரிக்கிற ஆளு படு லோக்கலா இருக்கணும்

  ReplyDelete
 35. டீசண்டான ஆளுக எல்லாம் தமிழ்சினிமா எடுக்க முடியாது..த்தா ந்னு திட்டி திட்டி வேலை வாங்குற ஆள்தான் கரெக்ட்

  ReplyDelete
 36. சாய்மீரா போன்ற பெரிய கார்ப்போரேட் நிறுவன்ங்களில் முதலீடு செய்வது மட்டும் அல்ல அங்கு வேலைக்கு சேர்வதை கூட பலமுறை யோசித்துச் செய்யவேண்டிய ரிஸ்க் மிகுந்த சமாச்சாரம்! எனக்கு சம்பள பாக்கி Rs.1,00,000/- இதுவரை பதில் இல்லை

  ReplyDelete
 37. @மைந்தன் சிவா//யோவ் என்கையா பதிவ காணேல ஒன்னும் புதுசா??// இன்னைக்குப் போட்டிருக்கேன்..பாருங்க..

  ReplyDelete
 38. @ஆர்.கே.சதீஷ்குமார்//சினிமா க்ளாஸா இருந்தாலும் தயாரிக்கிற ஆளு படு லோக்கலா இருக்கணும்// நச்னு சொன்னாரு நல்ல நேரம் பார்ட்டி.

  ReplyDelete
 39. @MYLAPOORAN//எனக்கு சம்பள பாக்கி Rs.1,00,000/- இதுவரை பதில் இல்லை// அடப்பாவமே..பங்குச்சந்தைல பல கோடி சுருட்டுனாங்களே..அப்படியுமா சம்பளப் பாக்கி...

  ReplyDelete
 40. @FOOD//நடுநிசி, சாரி, நடுநிலைப் பதிவர் கருத்துக்கள் நன்றாய் உள்ளது.// நீங்களுமா சார்..நடத்துங்க..நடத்துங்க!

  ReplyDelete
 41. நடுநிசி, சாரி, நடுநிலைப் பதிவர் கருத்துக்கள் நன்றாய் உள்ளது.

  ReplyDelete
 42. @மாலதிவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோதரி.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.