Tuesday, August 23, 2011

Ocean's Eleven-ன் காப்பியா மங்காத்தா?


கொஞ்சநாளாவே பதிவுலகத்துல (தம்பி ஜீ புண்ணியத்துல) Ocean's Eleven - படத்தைத் தான் காப்பி பண்ணி, வெங்கட் பிரபு மங்காத்தா எடுத்துக்கிட்டு இருக்காருன்னு பரபரப்பா பேச்சு அடிபட்டது. ரொம்ப நாள் முன்னாடி நான் பார்த்தது. இப்போ திரும்ப எல்லாரும் சொல்றாங்களே. அடுத்து மங்காத்தாவுக்கு வேற விமர்சனம் எழுதணுமேன்னு திரும்ப ஓசியன் லெவனை பார்த்தேன். ஏற்கனவே I am Sam பார்க்காம தெய்வத்திருமகளுக்கு ஆஹா..ஓஹோன்னு விமர்சனம் எழுதி அசடு வழிஞ்சது ஞாபகம் வந்ததால ஓசியனை முதல்லயே பார்த்துடறதுன்னு முடிவு பண்ணிப் பார்த்தா.....
டேனி ஒரு கெட்டவர்..கெட்டவர்னா கைல மல்லிப்பு சுத்திக்கிட்டுப் போய் ரேப் பன்ணுவாரோன்னு யோசிக்காதீங்க. டீசண்டா பெரிய திருட்டு+ பொய்-னு பொழைப்பை ஓட்டுற கெட்டவர். அது தெரிஞ்சு அவர் மனைவி டெஸ் பிரிஞ்சு போயிடறாங்க. அது ஒன்னும் பிரச்சினை இல்லை.அப்படி பிரிஞ்ச மனைவி மகா பணக்கார வில்லன்கூட போய் சேர்ந்துக்கறாங்க. அவரும் சேர்த்துக்கறாரு.அதாவது டேட்டிங்காம். 

ஜெயில்ல இருந்து திரும்பி வர்ற டேனி கடுப்பாகிடறாரு.பின்னே பொண்ட்டாட்டியை தூக்குனா கடுப்பாக மாட்டாங்களா..அதனால வில்லனோட 3 கேசினோ மேல கண்ணு வைக்காரு டேனி..கேசினோ யாரு, வில்லனோட வைப்பாட்டியான்னு கேட்கக்கூடாது..அது லாஸ் வேகஸ்ல இருக்கிற சூதாட்ட விடுதி. நம்மூருல லுங்கியை ஏத்திக்கடிக்கினு சீட்டு விளையாடுவாங்களே..அது மாதிரி நினைச்சுக்காதீங்க..இது கலர் கலரா லைட் எல்லாம் போட்டு, ஸ்ட்ரிப் டான்ஸ் சகிதம்...என்ன, புரிஞ்சிடுச்சா..ஓகே நெக்ஸ்ட்...

வில்லனோட கேசினோவை அடிக்க தன் பழைய ஃப்ரெண்டு ரயந்ஐ கூட்டு சேர்க்கிறாரு. அவரு ‘எதையும் ப்லன் பண்ணிப் பண்ணனும்’ங்கிறதுல தெளிவான ஆளு. அதனால நல்லா ப்லான் பண்ணி மொத்தம் 11 பேர் சேர்ந்தா, கேசினோல வர்ற பணத்தை (160 மில்லியன் தான்!) லவட்டிடலாம்னு முடிவு பண்றாங்க. 

பரபரப்பான கிளைமாக்ஸ்க்கு அப்புறம், கேசினோவையும் அம்மணி டெஸ்-ஐயும் அந்த 11 பேர் வில்லன்கிட்ட இருந்து லபக்கி, பங்கு போட்டுக்கறாங்க..அச்சச்சோ..அதாவது பணத்தை பங்கு போட்ட்டுக்கறாங்க..டெஸ்-ஐ நம்ம டேனி எடுத்துக்கிடுதாரு..சரிங்க, அவ்ளோ தான் கதை..போதும்யா! நல்ல விமர்சனம் வேணும்னா ஹாலிவுட் பாலாவை நாடவும். இல்லேன்னா இங்க பாருங்க! இப்போ மேட்டருக்கு வருவோம்..
இந்தக் கதையை வெங்கட் பிரபு காப்பி அடிச்சு மங்காத்தாவா எடுத்தா எதனால கேவலமா இருக்கும்னு ஒன்னொன்னா பார்க்கலாம்..

முதல்ல, ஹீரோயின் வில்லன்கூட ஐக்கியம் ஆகுறதை நம்ம ஆளுங்களால சகிச்சுக்கவே முடியாது..ஒன்னு கிளைமாக்ஸ்ல அது ‘என்னை மன்னிச்சிருங்க’ன்னு சாகணும்..இல்லே அதுவும் ‘ஹா..ஹா’ன்னு வில்லி ஆகிடணும். ஷாஜகான்ல ஹீரோயின் அதோட லவ்வர்கூட(!) ஆடுனதுக்கே நம்ம ஆளுங்க டென்சன் ஆகிட்டாங்க..இதை ஏத்துப்பாங்களா?

இரண்டாவது, ஹீரோ பொண்டாட்டி அப்படி விட்டுட்டுப் போனப்புறம், இவ்ளோ பெரிய ப்ளான் போட்டு அவ கூட திரும்பச் சேர்றதை நம்ம ஆளுக ஏத்துக்கவே மாட்டாங்க..’அப்படி ஒரு பொண்டாட்டி அவசியம் தேவையா?’ன்னு தான் கேட்பாங்க. ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும். அதனால அதுவும் வேலைக்கு ஆகாது.

மறக்க முன்னாடி சொல்லிடறேன்.. இது இங்க்லீஸ் படமாச்சேன்னு யாரும் ‘நம்பி’ போயிடாதீங்க..படத்துல ஒன்னும் கிடையாது..சரி, ஆராய்ச்சியை தொடர்வோம்..


மூணாவதா படத்துல டீடெய்லா ப்ளான் பண்றது, அதிக சீன் அதாவது அதிக காட்சி வர்றது ஹீரோ கிடையாது..பிட் தான். இதை அஜித் ரசிகர்களால எப்படி ஏத்துக்க முடியும்..அவரு ஒன்னும் பண்ணாட்டியும் பரவாயில்லை..கோட் போட்டுகிட்டு குறுக்க மறுக்கா ஸ்லோ மோசன்ல நடந்தா போதும்’னு தானே அவங்க கேட்பாங்க..அதுவும் இல்லேன்னா, அவரு என்ன கலைக்கிறது..அவங்களே கலைஞ்சிர மாட்டாங்களா..


நாலாவதா படத்துல லேடி கேரக்டர்னா அது ஹீரோயின் தான்..மீதி எல்லாரும் ஆம்பிளைங்க தான்..ஐ டோண்ட் லைக் இட்!..நான் மட்டும் இல்லே, வேற யாரு தான் இதை ஒத்துப்பாங்க.கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..

அஞ்சாவதா கிளைமாக்ஸ் பார்க்கலைன்னா, படம் லாஜிக்கே இல்லாம லபக்குற மாதிரி தெரியும்..கடைசில வர்ற ட்விஸ்ட் தான் படத்தோட பெரிய பலமே! அங்க ஒன்றரை மணி நேரத்துல ட்விஸ்ட் வந்துரும்..இங்க மூணு மணி நேரம் கஷ்டம் இல்லையா..

அதனால இந்த படத்தைத் தான் அப்படியே காப்பி பண்றாங்கன்னா அஜித்துக்கு இன்னொரு ஆப்பு கன்ஃபார்ம்.

இதை நம்ம ‘கலாச்சாரத்துக்கு’ ஏத்த்த மாதிரி மாத்தி எடுத்தாலும் படம் பரவாயில்லை கேட்டகிரில தான் வரும்.
மங்காத்தால ஆக்சன் கிங் அர்ஜூன் போலீஸ்காரா நடிச்சிருக்காராம்.ஓசியன்ல இல்லாத கேரக்டர் இது.த்ரிஷா அம்மையார் மட்டுமில்லாம அஞ்சலிக்குட்டியும் நடிச்சிருக்கு. அப்போ கதைல (மட்டும்) கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்..

ரெண்டு விஷயத்துல தான் மங்காத்தா ஓசியன் லெவன் கூட ஒத்துப்போகுது..

1) அஜித் கெட்டப்
2) ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.

அதனால இந்த ரெண்டு மேட்டர் மட்டுமே ஓசியன்ல இருந்து சுட்டதுன்னு  இப்போதைக்கு நம்பிவோம். 

இதுல இருந்து நாம ரெண்டு முடிவுக்கு நாம வரலாம்:

ஒன்னு, வெங்கட் பிரபு ஓசியனை சுட்டு இந்தப் படம் எடுக்கலை.

ரெண்டாவது, கண்டிப்பா வேற எதோ படத்தை சுட்டுத் தான் எடுத்திருக்காரு..

அது என்னன்னு படம் ரிலீஸ் ஆகவும் ஒலகப் பட ரசிகர்கள் சொல்வாங்க..அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

159 comments:

 1. //தமிழ்வாசி - Prakash said...
  தல அஜித் தி மாஸ்.//

  தல போல வருமா?

  ReplyDelete
 2. Ocean's Eleven-ன் காப்பியா மங்காத்தா?>>>

  என்ன சொல்றாரு செங்கோவி... ஓ... சாரி பதிவை படிக்கனும்ல...

  ReplyDelete
 3. யோவ் பிரகாஷ் செங்கோவி எப்ப பதிவு போடுவார்னு கழுகு போல பார்த்துகிட்டே இருக்கியா

  ReplyDelete
 4. //தமிழ்வாசி - Prakash said...
  Ocean's Eleven-ன் காப்பியா மங்காத்தா?>>>

  என்ன சொல்றாரு செங்கோவி... ஓ... சாரி பதிவை படிக்கனும்ல..//

  இன்னைக்காவது படிச்சிட்டு கமெண்ட் போடுங்க..கமெண்ட் போட்டுட்டு படிக்காதீங்க..

  ReplyDelete
 5. ஏற்கனவே I am Sam பார்க்காம தெய்வத்திருமகளுக்கு ஆஹா..ஓஹோன்னு விமர்சனம் எழுதி அசடு வழிஞ்சது ஞாபகம் வந்ததால>>>>

  ஆகா... விமர்சனத்துக்கு பல்பு வாங்கிட்டிங்களா?

  ReplyDelete
 6. சசிகுமார் said...
  யோவ் பிரகாஷ் செங்கோவி எப்ப பதிவு போடுவார்னு கழுகு போல பார்த்துகிட்டே இருக்கியா>>>>

  இந்நேரத்துல தொழில்நுட்பத்துக்கு என்ன வேலை... தூங்காம?

  ReplyDelete
 7. //
  சசிகுமார் said...
  யோவ் பிரகாஷ் செங்கோவி எப்ப பதிவு போடுவார்னு கழுகு போல பார்த்துகிட்டே இருக்கியா //

  அடடா..சசியே டென்சன் ஆயிட்டாரே..

  ReplyDelete
 8. 12 மணிக்கு பதிவா?யதேட்சையா பார்த்தேன்,வேறொரு தளத்தில் லின்க்”கிடைத்தது.

  ReplyDelete
 9. இது இங்க்லீஸ் படமாச்சேன்னு யாரும் ‘நம்பி’ போயிடாதீங்க..படத்துல ஒன்னும் கிடையாது.. ஏமாந்த அனுபவம் தெரியுது!

  ReplyDelete
 10. //தமிழ்வாசி - Prakash said...
  ஏற்கனவே I am Sam பார்க்காம தெய்வத்திருமகளுக்கு ஆஹா..ஓஹோன்னு விமர்சனம் எழுதி அசடு வழிஞ்சது ஞாபகம் வந்ததால>>>>

  ஆகா... விமர்சனத்துக்கு பல்பு வாங்கிட்டிங்களா?//

  விமர்சனம் ஹிட் ஆச்சு..ஆனா அது காப்பின்னு எனக்குத் தெரியல..ஹி..ஹி!

  ReplyDelete
 11. யோவ் படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா இப்ப

  ReplyDelete
 12. // R.Elan. said...
  12 மணிக்கு பதிவா?யதேட்சையா பார்த்தேன்,வேறொரு தளத்தில் லின்க்”கிடைத்தது.//

  இங்க எப்பவும் மிட் நைட் ஷோ தான் பாஸ்!

  ReplyDelete
 13. காப்பியோ டீயோ தமிழுக்கு புதுசுல அப்ப ஓகே தான்

  ReplyDelete
 14. //M.R said...
  இது இங்க்லீஸ் படமாச்சேன்னு யாரும் ‘நம்பி’ போயிடாதீங்க..படத்துல ஒன்னும் கிடையாது.. ஏமாந்த அனுபவம் தெரியுது!//

  ஆமாம் பாஸ்..ப்ச்!

  ReplyDelete
 15. சசிகுமார் said...
  யோவ் படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா இப்ப>>>>

  ஹா...ஹா...மாப்ளே! படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் புக் பண்றப்பவே விமர்சனம் எழுதற காலம் இது...

  ReplyDelete
 16. //சசிகுமார் said...
  யோவ் படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா இப்ப//

  ஆமா பாஸ்..நமக்கும் பொழுது போகணும்ல?

  ReplyDelete
 17. செங்கோவி said...
  //M.R said...
  இது இங்க்லீஸ் படமாச்சேன்னு யாரும் ‘நம்பி’ போயிடாதீங்க..படத்துல ஒன்னும் கிடையாது.. ஏமாந்த அனுபவம் தெரியுது!//

  ஆமாம் பாஸ்..ப்ச்!>>>>

  ரெண்டு பெரும் ரொம்ப ஏமாந்துட்டிங்களோ

  ReplyDelete
 18. //தமிழ்வாசி - Prakash said...
  சசிகுமார் said...
  யோவ் படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா இப்ப>>>>

  ஹா...ஹா...மாப்ளே! படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் புக் பண்றப்பவே விமர்சனம் எழுதற காலம் இது..//

  நல்ல முன்னேற்றம் ங்கொய்யால நீ படம் எடு அப்ப தெரியும்

  ReplyDelete
 19. //சசிகுமார் said...
  காப்பியோ டீயோ தமிழுக்கு புதுசுல அப்ப ஓகே தான்//

  இது கரெக்ட்..கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரி தான்..(இதுக்கு வேற ஏதோ பழமொழி சொல்வாங்க..ஞாபகம் வரலை)

  ReplyDelete
 20. //செங்கோவி said...
  //சசிகுமார் said...
  யோவ் படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா இப்ப//

  ஆமா பாஸ்..நமக்கும் பொழுது போகணும்ல//

  மாப்ள உனக்கு பொழுது போகணும் என்பதற்காக அவன் பொழப்ப கெடுக்குறியே ஹீ ஹீ

  ReplyDelete
 21. அப்போ கதைல ""(மட்டும்) ""கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்..
  அதானே பார்த்தேன்

  ReplyDelete
 22. சசிகுமார் said...
  //தமிழ்வாசி - Prakash said...
  சசிகுமார் said...
  யோவ் படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா இப்ப>>>>

  ஹா...ஹா...மாப்ளே! படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் புக் பண்றப்பவே விமர்சனம் எழுதற காலம் இது..//

  நல்ல முன்னேற்றம் ங்கொய்யால நீ படம் எடு அப்ப தெரியும்.>>>>

  ஏன் உனக்கு படம் எடுத்த அனுபவம் இருக்கா? இம்புட்டு டென்சன் ஆகற

  ReplyDelete
 23. //M.R said...
  அப்போ கதைல ""(மட்டும்) ""கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்..
  அதானே பார்த்தேன்//

  இவரு என்னத்தை பாத்துப்புட்டாரு?

  ReplyDelete
 24. ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 25. கலக்குங்க,கலக்குங்க கமண்ட்ல புகுந்து.இரவு வண்க்கம்.

  ReplyDelete
 26. //தமிழ்வாசி - Prakash said...
  சசிகுமார் said...
  //தமிழ்வாசி - Prakash said...
  சசிகுமார் said...
  யோவ் படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா இப்ப>>>>

  ஹா...ஹா...மாப்ளே! படத்துக்கு ஹீரோ, ஹீரோயின் புக் பண்றப்பவே விமர்சனம் எழுதற காலம் இது..//

  நல்ல முன்னேற்றம் ங்கொய்யால நீ படம் எடு அப்ப தெரியும்.>>>>

  ஏன் உனக்கு படம் எடுத்த அனுபவம் இருக்கா? இம்புட்டு டென்சன் ஆகற//

  நான் படம் எடுக்கிறதா இருந்தா கடைசி வரைக்கும் படம் பெயரையே சொல்ல மாட்டேன். எதுக்கு உங்க கிட்ட மாட்டிக்கணும்

  ReplyDelete
 27. இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை. "எந்த படம்"

  ReplyDelete
 28. //ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.//

  வேற யார போட்டு இருக்கலாம் அனுஷ்கா ஒகேவா

  ReplyDelete
 29. //R.Elan. said...
  கலக்குங்க,கலக்குங்க கமண்ட்ல புகுந்து.இரவு வண்க்கம்.//

  இரவு வணக்கம் நண்பரே!

  ReplyDelete
 30. சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..>>>

  அதுதான் செங்கோவி....

  ReplyDelete
 31. //அதனால இந்த படத்தைத் தான் அப்படியே காப்பி பண்றாங்கன்னா அஜித்துக்கு இன்னொரு ஆப்பு கன்ஃபார்ம்//

  தலய கவுத்துடுவாங்க போல இருக்கே

  ReplyDelete
 32. அவ கண்ண பாத்தா ஹையோ அம்மா அவ கலரை பாத்தா ஐயோ அம்மா ச்சீ ஹையோ அம்மா

  ReplyDelete
 33. //சசிகுமார் said...
  //ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.//

  வேற யார போட்டு இருக்கலாம் அனுஷ்கா ஒகேவா//

  அனு ஓகே..ஹன்சி டபுள் ஓகே!

  ReplyDelete
 34. சசிகுமார் said...
  //ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.//

  வேற யார போட்டு இருக்கலாம் அனுஷ்கா ஒகேவா>>>>

  சசி, நீ செங்கோவியை பற்றி தெரியாத ஆளா இருக்கியே.... நமீதா இல்லையினா ஹன்சிகாவை போட்டிருக்கணும்...

  ReplyDelete
 35. //அனு ஓகே..ஹன்சி டபுள் ஓகே//

  அவளுக்கு நடிக்கவே தெரியாதே மாப்ள..

  நடிப்பா முக்கியம்னு சொல்றீங்களா அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 36. செங்கோவி said...
  //சசிகுமார் said...
  //ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.//

  வேற யார போட்டு இருக்கலாம் அனுஷ்கா ஒகேவா//

  அனு ஓகே..ஹன்சி டபுள் ஓகே!>>>

  பார்த்தியா சசி நான் சொன்னேன்ல... ஹன்சி தான் போட்டிருக்கனும்னு?

  ReplyDelete
 37. // M.R said...
  இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை. "எந்த படம்"//

  அந்த படத்துக்கு பேரு கிடையாது...ரொம்ப இயல்பான நடிப்பு..சிறந்த ஒளிப்பதிவு..

  ReplyDelete
 38. சசிகுமார் said...
  //அனு ஓகே..ஹன்சி டபுள் ஓகே//

  அவளுக்கு நடிக்கவே தெரியாதே மாப்ள..

  நடிப்பா முக்கியம்னு சொல்றீங்களா அவ்வ்வ்வ்...>>>>

  ஹன்சியின் தீவிர விசிறி அவர்... அவர் கிட்ட இப்படி கேட்கலாமா சசி?

  ReplyDelete
 39. //வேற யார போட்டு இருக்கலாம் அனுஷ்கா ஒகேவா>>>>

  சசி, நீ செங்கோவியை பற்றி தெரியாத ஆளா இருக்கியே.... நமீதா இல்லையினா ஹன்சிகாவை போட்டிருக்கணும்.//

  நமீதா தமிழ்நாட்ல இல்லையாம் ஊருக்கு ஓடி புட்டாலாம்... அவளுக்கும் ஏதாவது நில அபகரிப்பு வழக்கு போடா போறாங்கன்னு பயந்துடான்கலாம்

  ReplyDelete
 40. //தமிழ்வாசி - Prakash said...
  சசிகுமார் said...
  //அனு ஓகே..ஹன்சி டபுள் ஓகே//

  அவளுக்கு நடிக்கவே தெரியாதே மாப்ள..

  நடிப்பா முக்கியம்னு சொல்றீங்களா அவ்வ்வ்வ்...>>>>

  ஹன்சியின் தீவிர விசிறி அவர்... அவர் கிட்ட இப்படி கேட்கலாமா சசி//

  அதெப்படி வெள்ள தோலா பார்த்து புடிச்சிடுறீங்க

  ReplyDelete
 41. ரெண்டாவது, கண்டிப்பா வேற எதோ படத்தை சுட்டுத் தான் எடுத்திருக்காரு..>>>

  ஹா..ஹா... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

  ReplyDelete
 42. இந்த பதிவுல அஞ்சலி படம் எதுக்கு? அதுவும் ரெண்டு தடவ போட்டிருக்கிங்க....

  ReplyDelete
 43. தமிழ்வாசி - Prakash said...
  ரெண்டாவது, கண்டிப்பா வேற எதோ படத்தை சுட்டுத் தான் எடுத்திருக்காரு..>>>

  ஹா..ஹா... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

  இது ராமசாமி அண்ணனொட டயலாக்காச்சே

  ReplyDelete
 44. அஞ்சலி படம் போட்டு மனதை குளிர வைத்த செங்கோவிக்கு நன்றி...!

  இப்படிக்கு,
  தமிழ்வாசி!

  (சாட்ல வந்து சொல்ல சொல்றாருங்க)

  ReplyDelete
 45. // தமிழ்வாசி - Prakash said...
  இந்த பதிவுல அஞ்சலி படம் எதுக்கு? அதுவும் ரெண்டு தடவ போட்டிருக்கிங்க...//

  யோவ், நீங்கெல்லாம் தல ரசிகரா..அஞ்சலியும் மங்காத்தால நடிக்குதுய்யா!

  இந்த லட்சணத்துல மங்காத்தா பத்தி 4 பதிவு இதுவரை போட்டுட்டாரு..

  ReplyDelete
 46. அண்ணன் இன்னிக்கு என்னமோ எழுதி இருக்காரே...?

  ReplyDelete
 47. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அஞ்சலி படம் போட்டு மனதை குளிர வைத்த செங்கோவிக்கு நன்றி...!

  இப்படிக்கு,
  தமிழ்வாசி!

  (சாட்ல வந்து சொல்ல சொல்றாருங்க)>>>

  அண்ணே ஏன் இந்த கொலை வெறி...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 48. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அஞ்சலி படம் போட்டு மனதை குளிர வைத்த செங்கோவிக்கு நன்றி...!

  இப்படிக்கு,
  தமிழ்வாசி!

  (சாட்ல வந்து சொல்ல சொல்றாருங்க)//

  ஆஹா..சிங்கம் களமிறங்குதே..

  ReplyDelete
 49. /////இப்போ திரும்ப எல்லாரும் சொல்றாங்களே. அடுத்து மங்காத்தாவுக்கு வேற விமர்சனம் எழுதணுமேன்னு திரும்ப ஓசியன் லெவனை பார்த்தேன். ///////

  உங்க கடமை உணார்ச்சிக்கு ஒரு அளவே இல்லியாண்ணே...?

  ReplyDelete
 50. செங்கோவி said...
  // தமிழ்வாசி - Prakash said...
  இந்த பதிவுல அஞ்சலி படம் எதுக்கு? அதுவும் ரெண்டு தடவ போட்டிருக்கிங்க...//

  யோவ், நீங்கெல்லாம் தல ரசிகரா..அஞ்சலியும் மங்காத்தால நடிக்குதுய்யா!

  இந்த லட்சணத்துல மங்காத்தா பத்தி 4 பதிவு இதுவரை போட்டுட்டாரு..>>>

  திரிஷா இருக்கறப்ப அஞ்சலி ஏன்? அதான் ஏன் திர்ஷா படத்தை போடலைன்னு கேட்கிறேன்....

  ReplyDelete
 51. கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//

  ஆஹா... ரசிகர் கூட்டம் இப்படித்தான் படத்துக்கு வாராகளா

  ReplyDelete
 52. /////// தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அஞ்சலி படம் போட்டு மனதை குளிர வைத்த செங்கோவிக்கு நன்றி...!

  இப்படிக்கு,
  தமிழ்வாசி!

  (சாட்ல வந்து சொல்ல சொல்றாருங்க)>>>

  அண்ணே ஏன் இந்த கொலை வெறி...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  /////

  நீங்கதானே அஞ்சலிகிட்ட ஏதோ பெருசா எதிர்பார்க்கிறீங்க?

  ReplyDelete
 53. /////ஏற்கனவே I am Sam பார்க்காம தெய்வத்திருமகளுக்கு ஆஹா..ஓஹோன்னு விமர்சனம் எழுதி அசடு வழிஞ்சது ஞாபகம் வந்ததால ஓசியனை முதல்லயே பார்த்துடறதுன்னு முடிவு பண்ணிப் பார்த்தா.....///////

  அடங்கொன்னியா...... அண்ணன் ஒரு முடிவோடதான்யா இருக்காரு.........

  ReplyDelete
 54. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இப்போ திரும்ப எல்லாரும் சொல்றாங்களே. அடுத்து மங்காத்தாவுக்கு வேற விமர்சனம் எழுதணுமேன்னு திரும்ப ஓசியன் லெவனை பார்த்தேன். ///////

  உங்க கடமை உணார்ச்சிக்கு ஒரு அளவே இல்லியாண்ணே...?//

  ஒவ்வொரு பதிவுக்கும் நான் எவ்வளவு கடுமையா உழைக்கேன்னு தெரியுதா..சீன் இல்லாத படத்தை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு!

  ReplyDelete
 55. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அஞ்சலி படம் போட்டு மனதை குளிர வைத்த செங்கோவிக்கு நன்றி...!

  இப்படிக்கு,
  தமிழ்வாசி!

  (சாட்ல வந்து சொல்ல சொல்றாருங்க)>>>

  அண்ணே ஏன் இந்த கொலை வெறி...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  /////

  நீங்கதானே அஞ்சலிகிட்ட ஏதோ பெருசா எதிர்பார்க்கிறீங்க?>>>

  ஆகா.... இன்னமும் நீங்க அதை மறக்கலியா...

  ReplyDelete
 56. /////டேனி ஒரு கெட்டவர்..கெட்டவர்னா கைல மல்லிப்பு சுத்திக்கிட்டுப் போய் ரேப் பன்ணுவாரோன்னு யோசிக்காதீங்க.////////

  அப்புறம்...., கைல கனகாம்பரத்த சுத்திக்கிட்டு போய் ரேப் பண்ணுவாரோ?

  ReplyDelete
 57. //மாய உலகம் said...
  கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//

  ஆஹா... ரசிகர் கூட்டம் இப்படித்தான் படத்துக்கு வாராகளா//

  அது எங்களை மாதிரி நல்லவங்க மாயா!

  ReplyDelete
 58. ////தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////// தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அஞ்சலி படம் போட்டு மனதை குளிர வைத்த செங்கோவிக்கு நன்றி...!

  இப்படிக்கு,
  தமிழ்வாசி!

  (சாட்ல வந்து சொல்ல சொல்றாருங்க)>>>

  அண்ணே ஏன் இந்த கொலை வெறி...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  /////

  நீங்கதானே அஞ்சலிகிட்ட ஏதோ பெருசா எதிர்பார்க்கிறீங்க?>>>

  ஆகா.... இன்னமும் நீங்க அதை மறக்கலியா...
  //////

  பின்ன மறக்கற மாதிரி காரியமா பண்ணீங்க?

  ReplyDelete
 59. //
  தமிழ்வாசி - Prakash said...

  //நீங்கதானே அஞ்சலிகிட்ட ஏதோ பெருசா எதிர்பார்க்கிறீங்க?>>>

  ஆகா.... இன்னமும் நீங்க அதை மறக்கலியா..//

  மறக்க முடியுமா..எப்படிய்யா அஞ்சலியைப் பார்த்து நீரு அப்படிச் சொல்லலாம்?

  ReplyDelete
 60. /////முதல்ல, ஹீரோயின் வில்லன்கூட ஐக்கியம் ஆகுறதை நம்ம ஆளுங்களால சகிச்சுக்கவே முடியாது.///////

  அதுவும் அஞ்சலி மாதிரி ஹீரோயின்னா முடியவே முடியாது..... அப்புறம் தமிழ்வாசி தீக்குளிப்பார்.....!

  ReplyDelete
 61. செங்கோவி said...
  //
  தமிழ்வாசி - Prakash said...

  //நீங்கதானே அஞ்சலிகிட்ட ஏதோ பெருசா எதிர்பார்க்கிறீங்க?>>>

  ஆகா.... இன்னமும் நீங்க அதை மறக்கலியா..//

  மறக்க முடியுமா..எப்படிய்யா அஞ்சலியைப் பார்த்து நீரு அப்படிச் சொல்லலாம்?>>>

  அப்படி என்ன நான் பெருசா சொல்லிட்டேன்? விடுங்கய்யா இனிமே அஞ்சலியை பற்றி ஒண்ணுமே சொல்லல...

  ReplyDelete
 62. ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?

  ReplyDelete
 63. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////டேனி ஒரு கெட்டவர்..கெட்டவர்னா கைல மல்லிப்பு சுத்திக்கிட்டுப் போய் ரேப் பன்ணுவாரோன்னு யோசிக்காதீங்க.////////

  அப்புறம்...., கைல கனகாம்பரத்த சுத்திக்கிட்டு போய் ரேப் பண்ணுவாரோ? //

  அண்ணனுக்கு எதைச் சுத்தியாவது, அது நடந்திடணும்..நல்ல கொள்கை பாஸ்!

  ReplyDelete
 64. ////மறக்க முன்னாடி சொல்லிடறேன்.. இது இங்க்லீஸ் படமாச்சேன்னு யாரும் ‘நம்பி’ போயிடாதீங்க..படத்துல ஒன்னும் கிடையாது../////

  இதுக்கும் சிபி போய்ட்டு வந்து கில்மா விமர்சனம் எழுதுவாரு.... நாங்க அங்க போய் பாத்துக்கிறோம்... அது படத்த விட நல்லாருக்கும்!

  ReplyDelete
 65. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?//

  அண்ணன் த்ரிஷா ரசிகரோ?..நாம வேற த்ரிஷாவை தாக்கி எழுதி இருக்கறமே..

  ReplyDelete
 66. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////முதல்ல, ஹீரோயின் வில்லன்கூட ஐக்கியம் ஆகுறதை நம்ம ஆளுங்களால சகிச்சுக்கவே முடியாது.///////

  அதுவும் அஞ்சலி மாதிரி ஹீரோயின்னா முடியவே முடியாது..... அப்புறம் தமிழ்வாசி தீக்குளிப்பார்.....>>>

  முதல்ல என் தலைவர் பன்னி அவர்கள் தீக்குளிப்பார்

  ReplyDelete
 67. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இதுக்கும் சிபி போய்ட்டு வந்து கில்மா விமர்சனம் எழுதுவாரு.... நாங்க அங்க போய் பாத்துக்கிறோம்... அது படத்த விட நல்லாருக்கும்!//

  ஆமா பாஸ்..படத்துல இல்லாத ஸ்டில் எல்லாம் போடுவாரு..தங்கமான மனுசன்!

  ReplyDelete
 68. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?//

  அண்ணன் த்ரிஷா ரசிகரோ?..நாம வேற த்ரிஷாவை தாக்கி எழுதி இருக்கறமே..
  //////

  யோவ் ஏன்யா திரிஷான்னு சொல்லி என்னைய ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைக்கிறீங்க?

  ReplyDelete
 69. //தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////முதல்ல, ஹீரோயின் வில்லன்கூட ஐக்கியம் ஆகுறதை நம்ம ஆளுங்களால சகிச்சுக்கவே முடியாது.///////

  அதுவும் அஞ்சலி மாதிரி ஹீரோயின்னா முடியவே முடியாது..... அப்புறம் தமிழ்வாசி தீக்குளிப்பார்.....>>>

  முதல்ல என் தலைவர் பன்னி அவர்கள் தீக்குளிப்பார்//

  சீக்கிரம் யாராவது ஒருத்தர் குளிங்கப்பா!

  ReplyDelete
 70. ////அவரு ஒன்னும் பண்ணாட்டியும் பரவாயில்லை..கோட் போட்டுகிட்டு குறுக்க மறுக்கா ஸ்லோ மோசன்ல நடந்தா போதும்’னு தானே அவங்க கேட்பாங்க..///////

  ஏதோ அவரால செய்ய முடிஞ்சத அவர் ரசிகர்கள் கேட்குறாங்க, இதுல எல்லாம் போய் குத்தம் கண்டுபுடிச்சா எப்படிய்யா?

  ReplyDelete
 71. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?//

  அண்ணன் த்ரிஷா ரசிகரோ?..நாம வேற த்ரிஷாவை தாக்கி எழுதி இருக்கறமே..
  //////

  யோவ் ஏன்யா திரிஷான்னு சொல்லி என்னைய ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைக்கிறீங்க?>>>

  ஆகா.... திரிஷாவை பற்றி இப்படி ஒரு கமென்ட் சொன்ன பன்னி ஒழிக...

  ReplyDelete
 72. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?//

  அண்ணன் த்ரிஷா ரசிகரோ?..நாம வேற த்ரிஷாவை தாக்கி எழுதி இருக்கறமே..
  //////

  யோவ் ஏன்யா திரிஷான்னு சொல்லி என்னைய ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைக்கிறீங்க?//

  தமிழ்வாசி, அண்ணன் த்ரிஷாவை அவமானப் படுத்திட்டாரு டோய்!

  ReplyDelete
 73. ///////தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?//

  அண்ணன் த்ரிஷா ரசிகரோ?..நாம வேற த்ரிஷாவை தாக்கி எழுதி இருக்கறமே..
  //////

  யோவ் ஏன்யா திரிஷான்னு சொல்லி என்னைய ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைக்கிறீங்க?>>>

  ஆகா.... திரிஷாவை பற்றி இப்படி ஒரு கமென்ட் சொன்ன பன்னி ஒழிக...

  //////

  ஆஹா..... இந்த தமிழ்வாசி திரிஷாகிட்டயும் பெருசா எதையோ எதிர்ப்பார்க்கிறாரு போல இருக்கே?

  ReplyDelete
 74. //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?//

  அண்ணன் த்ரிஷா ரசிகரோ?..நாம வேற த்ரிஷாவை தாக்கி எழுதி இருக்கறமே..
  //////

  யோவ் ஏன்யா திரிஷான்னு சொல்லி என்னைய ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைக்கிறீங்க?//

  தமிழ்வாசி, அண்ணன் த்ரிஷாவை அவமானப் படுத்திட்டாரு டோய்!

  ////////

  அடடடா செங்கோவியும் திரிஷாகிட்ட பெருசா எதிர்பார்க்கிறாரு போல இருக்கே? யோவ் ஏன்யா இப்படி...?

  ReplyDelete
 75. //அடடடா செங்கோவியும் திரிஷாகிட்ட பெருசா எதிர்பார்க்கிறாரு போல இருக்கே? யோவ் ஏன்யா இப்படி...?//

  சும்மா கோர்த்து விட்டேன்ணே..அங்க என்ன மிச்சம் இருக்கு?

  ReplyDelete
 76. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////தமிழ்வாசி - Prakash said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////// ’தலையில கல்லைத் தூக்கிப் போடாம ஸ்மூத்தா போனாளே..அதே போதும்’னு தான் தினத்தந்தில கள்ளக்காதல் நியூஸ் பார்த்தே நொந்த நம்ம சமூகம் நினைக்கும்.///////

  அய்யய்யோ இந்த கேரக்டர்ல திரிஷாவ நெனச்சுப்பார்த்தாவே நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே...?//

  அண்ணன் த்ரிஷா ரசிகரோ?..நாம வேற த்ரிஷாவை தாக்கி எழுதி இருக்கறமே..
  //////

  யோவ் ஏன்யா திரிஷான்னு சொல்லி என்னைய ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடைக்கிறீங்க?>>>

  ஆகா.... திரிஷாவை பற்றி இப்படி ஒரு கமென்ட் சொன்ன பன்னி ஒழிக...

  //////

  ஆஹா..... இந்த தமிழ்வாசி திரிஷாகிட்டயும் பெருசா எதையோ எதிர்ப்பார்க்கிறாரு போல இருக்கே>>>>

  அய்யயோ... திரிஷாவை பத்தி பெருசா ஒண்ணும் சொல்ல வரல... என்னை ஆளை விடுங்க...

  ReplyDelete
 77. //////செங்கோவி said...
  தமிழ்வாசி எப்பவும் இப்படித் தான் பாஸ்..கமலா காமேஷ்கிட்ட கூட..சரி, வேண்டாம்!

  /////

  யோவ் கமலா காமேஷ் பத்தி உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா?

  ReplyDelete
 78. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////செங்கோவி said...
  தமிழ்வாசி எப்பவும் இப்படித் தான் பாஸ்..கமலா காமேஷ்கிட்ட கூட..சரி, வேண்டாம்!

  /////

  யோவ் கமலா காமேஷ் பத்தி உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா?//

  எனக்கு எப்படிண்ணே தெரியும்..சொல்லுங்க.

  ReplyDelete
 79. //////கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//////

  ஆமா இப்போ மட்டும் திரிஷாவையும், அஞ்சலியவும் வெச்சி என்னத்த கிழிக்க போறாங்க?

  ReplyDelete
 80. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//////

  ஆமா இப்போ மட்டும் திரிஷாவையும், அஞ்சலியவும் வெச்சி என்னத்த கிழிக்க போறாங்க?//

  ஆராய்ச்சில்லாம் இருக்கட்டும்..கமலா காமேஷ் பத்தி சொல்லுங்க.

  ReplyDelete
 81. ////அதனால இந்த படத்தைத் தான் அப்படியே காப்பி பண்றாங்கன்னா அஜித்துக்கு இன்னொரு ஆப்பு கன்ஃபார்ம்./////

  இத எடுத்தா ஆப்பு கன்பர்ம்னா தல இந்த படத்தைத்தான் செலக்ட் பண்ணி இருப்பாரு....

  ReplyDelete
 82. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////அதனால இந்த படத்தைத் தான் அப்படியே காப்பி பண்றாங்கன்னா அஜித்துக்கு இன்னொரு ஆப்பு கன்ஃபார்ம்./////

  இத எடுத்தா ஆப்பு கன்பர்ம்னா தல இந்த படத்தைத்தான் செலக்ட் பண்ணி இருப்பாரு...//

  அவருக்கு அதுல ஒரு சொகம் இருக்கும் போல..

  ReplyDelete
 83. /////இது.த்ரிஷா அம்மையார் மட்டுமில்லாம அஞ்சலிக்குட்டியும் நடிச்சிருக்கு. அப்போ கதைல (மட்டும்) கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்../////

  அடடா...... அப்போ படத்துல பெருசா ஒண்ணையும் எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க..

  ReplyDelete
 84. //
  செங்கோவி said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////கதை இருக்கோ இல்லியோ, சதை முக்கியம் இல்லையா..அதனால அந்த விததுலயும் இந்தப் படம் நமக்கு சரிப்பட்டு வராது..//////

  ஆமா இப்போ மட்டும் திரிஷாவையும், அஞ்சலியவும் வெச்சி என்னத்த கிழிக்க போறாங்க?//

  ஆராய்ச்சில்லாம் இருக்கட்டும்..கமலா காமேஷ் பத்தி சொல்லுங்க.
  //

  அண்ணே, அப்புறம் அந்த கமலா காமேஷ் மேட்டர்ணே?

  ReplyDelete
 85. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இது.த்ரிஷா அம்மையார் மட்டுமில்லாம அஞ்சலிக்குட்டியும் நடிச்சிருக்கு. அப்போ கதைல (மட்டும்) கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்../////

  அடடா...... அப்போ படத்துல பெருசா ஒண்ணையும் எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க..//

  ஆமாண்ணே, கரெக்டா சொன்னீங்கன்னே..

  அந்த கமலா காமேசு...?

  ReplyDelete
 86. //செங்கோவி said...
  //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////இது.த்ரிஷா அம்மையார் மட்டுமில்லாம அஞ்சலிக்குட்டியும் நடிச்சிருக்கு. அப்போ கதைல (மட்டும்) கை வச்சிருக்காங்கன்னு தானே அர்த்தம்../////

  அடடா...... அப்போ படத்துல பெருசா ஒண்ணையும் எதிர்பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க..//

  ஆமாண்ணே, கரெக்டா சொன்னீங்கன்னே..

  அந்த கமலா காமேசு...?//

  யோவ், பன்னிக்குட்டி...என்னய்யா அது கமலா காமேஷ் மேட்டரு..எவ்ளோ நேரமா கேட்டுகிட்டு இருக்கேன்..

  நடுராத்திரில என்னய்யா விளையாட்டு இது..சின்னப் புள்ள மாதிரி...

  ReplyDelete
 87. அண்ணன் இன்னிக்கு கமலாகாமேஷ் பத்தி சொல்லாம விடமாட்டாரு போல இருக்கே?

  ReplyDelete
 88. அடப்பாவிகளா..ரெண்டு பேரும் புலம்ப விட்டுட்டு போய்ட்டாங்களே..

  ReplyDelete
 89. சரி சொல்லுறேன், சொல்லவே கூடாதுன்னு தமிழ்வாசி கெஞ்சுறாரு...

  ReplyDelete
 90. //
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அண்ணன் இன்னிக்கு கமலாகாமேஷ் பத்தி சொல்லாம விடமாட்டாரு போல இருக்கே?//

  அப்பாடி அண்ணன் இருக்காரு..எனக்குத் தெரியும் அண்ணன் நல்லவருன்னு!

  ReplyDelete
 91. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சரி சொல்லுறேன், சொல்லவே கூடாதுன்னு தமிழ்வாசி கெஞ்சுறாரு..//

  அப்போ கண்டிப்பா கில்பான்சி மேட்டர் தான்..சொல்லுங்கண்ணே..

  ReplyDelete
 92. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சரி சொல்லுறேன், சொல்லவே கூடாதுன்னு தமிழ்வாசி கெஞ்சுறாரு...>>>

  நான் சொல்லல... என்னை இழுக்கர்த்தே இவருக்கு வேலையா போச்சு

  ReplyDelete
 93. அதாவது கார்த்திக்குக்கு முதல் காட்சியே கமலா காமேஷ்தானாம், அவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் கார்த்திக்கை பெரிய ஆளாக்குச்சாம்....... போதுமா?

  ReplyDelete
 94. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அதாவது கார்த்திக்குக்கு முதல் காட்சியே கமலா காமேஷ்தானாம், அவங்ககிட்ட கத்துக்கிட்டதுதான் கார்த்திக்கை பெரிய ஆளாக்குச்சாம்....... போதுமா?//

  ஆ......................!

  ReplyDelete
 95. என்ன இதுக்கே செங்கோவி இப்படி ஆகிட்டாரு.....

  ReplyDelete
 96. அண்ணே..எனக்கு மயக்க மயக்கமா வருது.. தலை கிர்ருன்னு சுத்துது...நான் சாயுறேன்..

  ReplyDelete
 97. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  என்ன இதுக்கே செங்கோவி இப்படி ஆகிட்டாரு.....>>>

  இதுக்குதான் வேணாம்னு சொன்னேன்... செங்கோவியே வாயடச்சு போயிட்டார்.

  ReplyDelete
 98. யோவ் இது உண்மைச்செய்திய்யா... ஒரு பிரபல வாரப்பத்திரிக்கைல இதுமாதிரி விஷயங்கள் தொடரா வந்துச்சே, அதுல போட்டிருந்தாங்க....!

  ReplyDelete
 99. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  யோவ் இது உண்மைச்செய்திய்யா... ஒரு பிரபல வாரப்பத்திரிக்கைல இதுமாதிரி விஷயங்கள் தொடரா வந்துச்சே, அதுல போட்டிருந்தாங்க...>>>

  வேற என்னென்ன எல்லாம் அந்த தொடர்ல போட்டிருந்தாங்க அண்ணே...

  ReplyDelete
 100. oceans 12 + 13...
  ல இருக்கும் செங்கோவி...இந்த வெள்ளிக்கிழமை அதையும் பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க...

  அந்த மூன்றும் ஒரு பில்லியன் அடிச்சாலும்... அஜித்தோட க்ளூனி வெள்ளை தாடி மேல தான் பொண்ணுகளுக்கெல்லாம் கண்ணுன்னு தெரிஞ்ச
  வட்டாரத்திலே பேச்சு...

  ReplyDelete
 101. மறக்க முன்னாடி சொல்லிடறேன்.. இது இங்க்லீஸ் படமாச்சேன்னு யாரும் ‘நம்பி’ போயிடாதீங்க..படத்துல ஒன்னும் கிடையாது..சரி, ஆராய்ச்சியை தொடர்வோம்..

  தகவலுக்கு நன்றிங்க 10யூரோ மிச்சமையா...!!??

  காட்டான் குழ போட்டான்

  ReplyDelete
 102. //காட்டான் said...
  மறக்க முன்னாடி சொல்லிடறேன்.. இது இங்க்லீஸ் படமாச்சேன்னு யாரும் ‘நம்பி’ போயிடாதீங்க..படத்துல ஒன்னும் கிடையாது..சரி, ஆராய்ச்சியை தொடர்வோம்..

  தகவலுக்கு நன்றிங்க 10யூரோ மிச்சமையா...!!??

  காட்டான் குழ போட்டான்
  //

  கொழ போட்டதுக்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 103. //ரெவெரி said...

  அந்த மூன்றும் ஒரு பில்லியன் அடிச்சாலும்... அஜித்தோட க்ளூனி வெள்ளை தாடி மேல தான் பொண்ணுகளுக்கெல்லாம் கண்ணுன்னு தெரிஞ்ச
  வட்டாரத்திலே பேச்சு..//

  அந்த கெட்டப் நல்லா தான் இருக்கு!

  ReplyDelete
 104. ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.

  என்னையா நம்ம நாட்டுக்காரி ஜூலியாவ பத்தி இப்பிடி சொல்லுறீங்க.. இப்பிடிதான் என்ர மருமோனுட்டயும் தேவயானிய பற்றி சொல்லுறீங்க அப்ப உங்களுக்கு எப்பிடிப்பட்ட நடிகைகள பிடிக்குமையா..???

  ReplyDelete
 105. //காட்டான் said...

  என்னையா நம்ம நாட்டுக்காரி ஜூலியாவ பத்தி இப்பிடி சொல்லுறீங்க.. இப்பிடிதான் என்ர மருமோனுட்டயும் தேவயானிய பற்றி சொல்லுறீங்க அப்ப உங்களுக்கு எப்பிடிப்பட்ட நடிகைகள பிடிக்குமையா..??//

  பெரிய மனுசன் கேட்கீங்களேன்னு சொல்றேன்..பத்மினி, கே.ஆர்.விஜயா,சரிதா, குஷ்பூ, மும்தாஜ், நமீதா, ஹன்சிகா.....


  புரியுதுங்களா?

  ReplyDelete
 106. அண்ணே நீங்க இப்படி சொன்னத பார்த்து வெங்கட் பிரபு படதிண்ட கதைய மாத்தினாலும் மாத்திபுடுவர் அதனால் படம் வந்த பிறகு கும்ம முடியாது அகவே படம் வரட்டும் அதுமட்டும் கொஞ்சம் பொறுத்து இருபோம்.....

  ReplyDelete
 107. இருந்தாலும் நாலு பேர் சேர்ந்து எப்படி கும்முறது கொஞ்சம் ஓவர் தான் நமக்கும் இடம் கிடைக்கணும் அதனால தான்.....

  ReplyDelete
 108. அண்ணே முதல்ல உங்க பிளாக்ல 18 வயதுக்கு மேல் எண்டு போடிருந்தனியல் அதுதான் கொஞ்சநாளா வரேல்ல இனி வருவம்...

  ReplyDelete
 109. கருவ மையமாய் வச்சு, மிச்சத்த அங்கங்க தட்டி நிமித்தி நம்மாக்களுக்கு எத்த போல கொண்டுவந்துடுவாங்க பாஸ்.

  ReplyDelete
 110. எப்புடியோ நம்ம தலையை படம் வந்தப்புறம் ரெம்ப கும்ம போறாங்க எண்டு மட்டும் தெரியுது
  அவ்வவ் ( பட் தலையோட தளபதி படம் வந்தா தல தப்பிச்சிரும் என்றே தோணுது, அதுதான் பதிவருக்கு கும்ம தளபதி கிடைச்சிருமே..)

  ReplyDelete
 111. //ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.//


  ஐயோ ஐயோ
  என் பிகர்கள் எல்லாத்தையும் ஒண்ணும் விடாம நாறடிக்கிறதே இந்தாளுக்கு பொழப்பா போச்சு
  யோவ் பாஸ், திரிஷா தேவயாணி அந்த வெள்ளைக்கார பொண்ணு எல்லா பாவமும் உம்மா சும்மா விடாதுய்யா

  ReplyDelete
 112. ///காட்டான் said... [Reply]
  ரெண்டு படத்துலயும் பாட்டி மாதிரி ஹீரோயின்..ஜூலியா ராபர்ட்ஸ் தான் டெஸ்..சகிக்கலை...இது எப்படி ஹாலிவுட்ல குப்பை கொட்டுச்சுன்னு தெரியலை. அதே மாதிரி இங்க த்ரிஷா..இது கிட்டயும் என்ன இருக்குன்னு ’அந்தப் படம்’ பார்த்தும் எனக்குப் புரியலை.//

  என்னையா நம்ம நாட்டுக்காரி ஜூலியாவ பத்தி இப்பிடி சொல்லுறீங்க.. இப்பிடிதான் என்ர மருமோனுட்டயும் தேவயானிய பற்றி சொல்லுறீங்க அப்ப உங்களுக்கு எப்பிடிப்பட்ட நடிகைகள பிடிக்குமையா..???
  /////  மாமு, இங்கால பக்கம் வா மாமு
  அவருக்கு "பெருசா" இருந்தாத்தான் புடிக்குமாம் ஹிஹி

  ReplyDelete
 113. //செங்கோவி said... [Reply]
  //காட்டான் said...

  என்னையா நம்ம நாட்டுக்காரி ஜூலியாவ பத்தி இப்பிடி சொல்லுறீங்க.. இப்பிடிதான் என்ர மருமோனுட்டயும் தேவயானிய பற்றி சொல்லுறீங்க அப்ப உங்களுக்கு எப்பிடிப்பட்ட நடிகைகள பிடிக்குமையா..??//

  பெரிய மனுசன் கேட்கீங்களேன்னு சொல்றேன்..பத்மினி, கே.ஆர்.விஜயா,சரிதா, குஷ்பூ, மும்தாஜ், நமீதா, ஹன்சிகா.....


  புரியுதுங்களா?
  ////


  மாமா நான் சொன்னனே பார்த்தியா?? எல்லாத்துக்கும் எம்புட்டு "பெருசா" இருக்குன்னு, அட பெயர் வரிசையா சொன்னய்யா

  ReplyDelete
 114. நான் உள்ள வரலாமா?

  ReplyDelete
 115. யாருமில்லா கடையில நீ ஏண்டா T ஊத்துறாய் வரோ

  ReplyDelete
 116. செங்கோவி சார், உங்களோட நகைச்சுவை எழுத்து நடை நான் வாசித்த அளவில் அந்தணன் (அந்தணன்.blogspot.காம்) அவர்களிடம் மட்டுமே கண்டிருக்கிறேன். அருமை. எழுத்துடன் விரவியிருக்கும் மெல்லிய இரட்டை அர்த்தம் (இரட்டை அர்த்தம் ???) பதிவுக்கு நல்ல spice addition.
  செங்கோவி அவர்களுக்கும் மற்றும் அனைத்து பதிவு நல்லுள்ளங்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், மங்காத்தா ocean's 11 திரைப்படத்தின் நகல் அல்ல. இன்னொரு ஹாலிவுட் திரைப்படமான 21 (ஆம் வெறும் எண் 21 ) பாருங்கள். அதன் அப்பட்டமான தழுவல் (????)

  ReplyDelete
 117. வணக்கம் பாஸ்,
  மங்காத்தா பற்றிய அற்புதமான, புதிய தகவல்களைத் தந்திருக்கிறீங்க.

  எதுக்கும், கொஞ்சக் காலம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
  படம் வந்திடுமில்ல்லே.

  ReplyDelete
 118. ’அகழ்வாராய்ச்சித் திலகம்’ அப்படின்னு ஒரு பட்டமே இதுக்காகக் கொடுக்கலாம்!

  ReplyDelete
 119. பிச்சு பிசைஞ்சு வெட்டி அறுத்து ஒட்டி பொருத்தி என்னமா ஒரு அராய்ச்சி

  மண்டேக்க மூலையா மூலேக்க மண்டையா

  அருமையான பதிவு வாக்குகள் நிச்சயம்

  ReplyDelete
 120. பிச்சு பிசைஞ்சு வெட்டி அறுத்து ஒட்டி பொருத்தி என்னமா ஒரு அராய்ச்சி

  மண்டேக்க மூலையா மூலேக்க மண்டையா

  அருமையான பதிவு வாக்குகள் நிச்சயம்

  ReplyDelete
 121. நான் அஜித்தோட 'கெட்டப்' மட்டும் பார்த்துத்தான் இப்பிடி யோசிச்சேன்! மெய்யாலுமே நாமதான் கொளுத்திப் போட்டுட்டோமா? அவ்வ்வ்வவ்!

  அப்புறமா பிலாசபி பிரபாகரன் டிரைலர் பாத்துட்டும் அதை இன்னும் உறுதி செய்தார்.

  நீங்க சொன்னமாதிரி கதையை உல்டா பண்ண முடியாது! மானாவாரியா பல சீன்களை , பல படங்கள்ல இருந்து சுடலாம்!

  ReplyDelete
 122. ஜூலியா ராபர்ட்ஸ் - அந்தம்மா கிட்ட என்ன இருக்குன்னு ஹாலிவுட் காரங்க மாஞ்சு மாஞ்சு ஜொள்ளு விடுறாங்களோ! கடுப்பாகிடும் பாத்தாலே!

  ஆனா அதுகூட த்ரிஷாவை ஒப்பிடுறது - நல்லா இல்ல அண்ணே! வேணாம்! :-)

  வெங்கட்பிரபு ஓஷன் லெவன்ல இருந்து சுடாம கண்டிப்பா வேற எங்காவது இருந்து சுட்டிருப்பார்.

  ஒருவேளை இவங்கெல்லாம் இப்போ தெளிவா இருக்காங்களோ அதாவது கெட்டப் - ஒரு படம், போஸ்டர் - இன்னொரு படம், கதை - வேறொரு படம்!

  அப்பிடிப்பாத்தா கவுதம் மேனனின் யோஹன் கூட லாகோ வின்ச் ஆ இருக்காது! போசடர் மட்டுமே லாகோ வின்ச்! எப்பூடி?

  ReplyDelete
 123. அது என்னய்யா நீர் என்னமோ இதுல சம்மந்தபடாத போல பதிவ போட்டு இருக்கீரு ஹிஹி!

  ReplyDelete
 124. // ஆகுலன் said...
  அண்ணே முதல்ல உங்க பிளாக்ல 18 வயதுக்கு மேல் எண்டு போடிருந்தனியல் அதுதான் கொஞ்சநாளா வரேல்ல இனி வருவம்.//

  அதை எடுத்திட்டதால திருந்திட்டோம்னு நினைச்சுட்டீங்கள..ஹா..ஹா.

  ReplyDelete
 125. // கந்தசாமி. said...
  கருவ மையமாய் வச்சு, மிச்சத்த அங்கங்க தட்டி நிமித்தி நம்மாக்களுக்கு எத்த போல கொண்டுவந்துடுவாங்க பாஸ். //

  ஆமா பாஸ்..அப்படித் தான் ஆகும்!

  ReplyDelete
 126. "கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
  // எப்புடியோ நம்ம தலையை படம் வந்தப்புறம் ரெம்ப கும்ம போறாங்க எண்டு மட்டும் தெரியுது
  அவ்வவ் ( பட் தலையோட தளபதி படம் வந்தா தல தப்பிச்சிரும் என்றே தோணுது, அதுதான் பதிவருக்கு கும்ம தளபதி கிடைச்சிருமே..) //

  100% கரெக்ட்...எங்களை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க!

  // ஐயோ ஐயோ
  என் பிகர்கள் எல்லாத்தையும் ஒண்ணும் விடாம நாறடிக்கிறதே இந்தாளுக்கு பொழப்பா போச்சு
  யோவ் பாஸ், திரிஷா தேவயாணி அந்த வெள்ளைக்கார பொண்ணு எல்லா பாவமும் உம்மா சும்மா விடாதுய்யா //

  என்னய்யா டேஸ்ட் உங்களுது..ஒன்னும் சரி இல்லையே..

  ReplyDelete
 127. // KANA VARO said...
  நான் உள்ள வரலாமா?

  யாருமில்லா கடையில நீ ஏண்டா T ஊத்துறாய் வரோ //

  நடு ராத்திரில யாருய்யா கடைல இருப்பாங்க?

  ReplyDelete
 128. Vicky R said...
  // செங்கோவி சார், உங்களோட நகைச்சுவை எழுத்து நடை நான் வாசித்த அளவில் அந்தணன் (அந்தணன்.blogspot.காம்) அவர்களிடம் மட்டுமே கண்டிருக்கிறேன். அருமை. எழுத்துடன் விரவியிருக்கும் மெல்லிய இரட்டை அர்த்தம் (இரட்டை அர்த்தம் ???) பதிவுக்கு நல்ல spice addition. //

  இவரு பாராட்டுறாரா..திட்டுறாரா..எதுக்கும் நன்றி சொல்லி வைப்போம்..ரொம்ப நன்றி பாஸ்!

  //செங்கோவி அவர்களுக்கும் மற்றும் அனைத்து பதிவு நல்லுள்ளங்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், மங்காத்தா ocean's 11 திரைப்படத்தின் நகல் அல்ல. இன்னொரு ஹாலிவுட் திரைப்படமான 21 (ஆம் வெறும் எண் 21 ) பாருங்கள். அதன் அப்பட்டமான தழுவல் (????) //

  அடடே..21 நான் பர்த்திருக்கிறேன்..அதுலயும் ஒரு ஹீரோ (புரஃபசர்?) ஒரு குரூப்பையே இறக்கி, சூதாட்டத்துல கோல்மால் பண்ணுவாங்களே..அதுவும் ஆவரேஜ் படம் தானே..

  அப்போ மறுபடி அதையும் பார்க்கணுமா...அவ்வ்!

  ReplyDelete
 129. // நிரூபன் said...
  வணக்கம் பாஸ்,
  மங்காத்தா பற்றிய அற்புதமான, புதிய தகவல்களைத் தந்திருக்கிறீங்க.

  எதுக்கும், கொஞ்சக் காலம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
  படம் வந்திடுமில்ல்லே. //

  நிரூ சொல்லிட்டாப்ல..வெயிட் பண்ணுவோம்!

  ReplyDelete
 130. // FOOD said...
  ’அகழ்வாராய்ச்சித் திலகம்’ அப்படின்னு ஒரு பட்டமே இதுக்காகக் கொடுக்கலாம்! //

  ஆஃபீசர் அடுத்து ஒரு ஃபங்சனுக்கு ரெடி ஆகிட்டாரு..

  ReplyDelete
 131. // கவி அழகன் said...
  பிச்சு பிசைஞ்சு வெட்டி அறுத்து ஒட்டி பொருத்தி என்னமா ஒரு அராய்ச்சி

  மண்டேக்க மூலையா மூலேக்க மண்டையா

  அருமையான பதிவு வாக்குகள் நிச்சயம் //

  முத ரெண்டு வரி என்னென்னமோ சொல்லுதே..கவிஞர்னா சும்மாவா..

  ReplyDelete
 132. ஜீ... said...
  // நான் அஜித்தோட 'கெட்டப்' மட்டும் பார்த்துத்தான் இப்பிடி யோசிச்சேன்! மெய்யாலுமே நாமதான் கொளுத்திப் போட்டுட்டோமா? அவ்வ்வ்வவ்! //

  எப்படியோ, எனக்கு ஒரு பதிவு தேறுச்சுல்ல..

  // நீங்க சொன்னமாதிரி கதையை உல்டா பண்ண முடியாது! மானாவாரியா பல சீன்களை , பல படங்கள்ல இருந்து சுடலாம்! //
  நிறைய கமல் படம் பார்த்த அனுபவம் போல..ஹி..ஹி!

  // ஒருவேளை இவங்கெல்லாம் இப்போ தெளிவா இருக்காங்களோ அதாவது கெட்டப் - ஒரு படம், போஸ்டர் - இன்னொரு படம், கதை - வேறொரு படம்!

  அப்பிடிப்பாத்தா கவுதம் மேனனின் யோஹன் கூட லாகோ வின்ச் ஆ இருக்காது! போசடர் மட்டுமே லாகோ வின்ச்! எப்பூடி? //

  நல்லவேளை சொன்னீங்க..இல்லேன்னா அதையும் பார்த்து ஆராய்ச்சி பண்ணியிருப்பேன்!

  ReplyDelete
 133. // விக்கியுலகம் said...
  அது என்னய்யா நீர் என்னமோ இதுல சம்மந்தபடாத போல பதிவ போட்டு இருக்கீரு ஹிஹி!//

  நமக்குப் பிடிச்ச ஹீரோயின் இல்லேன்னா, நாம அப்படித் தானே இருப்போம்!

  ReplyDelete
 134. ஜூலியா ராபட்ஸுக்கு 44 வயதாகிறது.

  ReplyDelete
 135. இவ்வளவு இருக்கா!

  வெங்கட் பிரபுவும் அஜித்தை ஏமாற்றமலிருந்தால் சரி.

  ReplyDelete
 136. ஜூலியா நடித்த Erin Brockovich (2000) பார்த்துட்டு அவரை திட்டணும்.

  ReplyDelete
 137. நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க பாஸ்.

  ஆனா அஞ்சலி மேடத்தின் படத்தை இடையில் போட்டு இருப்பதால் கவனம் அதில் போய்ட்டு ரைட்டு.ஹி.ஹி.ஹி.ஹி


  இன்று என்பதிவில்-தோனிக்கு சனி பிடித்து விட்டதா(சிறப்புபார்வை)http://cricketnanparkal.blogspot.com/2011/08/blog-post_23.html

  ReplyDelete
 138. த்ரிஷா ரசிகர்கள் சண்டைக்கு வரப்போறாங்க!

  ReplyDelete
 139. தலைவா அடியேனும் ஒம்ம ரசிகனா
  ஆயிட்டொம்

  ReplyDelete
 140. \\ஒன்னு, வெங்கட் பிரபு ஓசியனை சுட்டு இந்தப் படம் எடுக்கலை. ரெண்டாவது, கண்டிப்பா வேற எதோ படத்தை சுட்டுத் தான் எடுத்திருக்காரு.\\ நான் ஆங்கிலப் படங்கள் மட்டுமல்ல, வேறென்கெங்கேயோ இருந்து எல்லாம் கூட சுட்டுத்தான் படமெடுக்கிறேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சத்தம் போட்டு தெரு முச்சந்தியில நின்னு கத்தி சொல்லும் வெங்கட் பிரபுவின் தைரியம் வேறு யாருக்கு வரும்!! ஆங்கிலப் படத்தை தமிழ் படமா எடுக்கிறது நம்மாளுங்களுக்கு சப்பை மேட்டர். அங்கே கதாநாயகி வில்லன் கூட குடித்தனம் நடத்துவது மாதிரி எடுத்திருந்தா, இங்கே "ஒரு பொண்ணு கிட்ட இதை கேட்டிருந்தா பரவாயில்லை, ஆனா ஒரு குழந்தையோட தாய்கிட்ட கேட்கிறீங்களே, இது நியாயமா" என்று ஒரு டயலாக்கைப் போட்டு சரிகட்டத் தெரியாதா என்ன. [இது மக்கள் என்பக்கம் வசனமுங்கோ...ஹி..ஹி.ஹி....]. அதே மாதிரி எல்லாத்தையும் சரி பண்ணுவதில் கில்லாடிங்க நம்மாளுங்க, இப்படி பண்ணிட்டு, இந்தியாவை உலக அளவில் தலை நிமிர வைப்பார் ஷங்கர் என்று ஒரு பதிவு வேற போடுறானுங்க... வெட்கங்கெட்ட பசங்க....

  ReplyDelete
 141. சசி நீயுமா? நானும் ஒருநாள் வரணும்ன்னு பாக்குறேன். முடியல..

  ReplyDelete
 142. பழக்க தோசத்துல படம் ரிலீஸான உடனே ஆஹா ஓகோன்னு எழுதிடாதீங்க, கொஞ்சம் வெயிட் பண்ணி எந்த படத்தோட காப்பின்னும் சேர்த்து எழுதுங்க :-) பதிவு வழக்கம் போலவே அருமை

  ReplyDelete
 143. அட்டகாசம் படத்தில் அஜித் செய்த ஆட்டோ கண்ணாடி காமடியை பார்த்து மண்டை காய்ந்த நாள் முதல்...அஜித் என்றாலே பயம் எனக்கு!

  ReplyDelete
 144. அமுதா கிருஷ்ணா said...
  // ஜூலியா ராபட்ஸுக்கு 44 வயதாகிறது.//

  அடடா..நான் தான் லேட்டா பார்த்துட்டனா...

  //ஜூலியா நடித்த Erin Brockovich (2000) பார்த்துட்டு அவரை திட்டணும்.//

  ஒன்னும் சொல்றதுக்கில்ல...

  ReplyDelete
 145. // மருதமூரான். said...
  இவ்வளவு இருக்கா! //

  ஆமாம் பாஸ்..இன்னும் நிறைய இருக்காம்!

  ReplyDelete
 146. // K.s.s.Rajh said...
  நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க பாஸ்.

  ஆனா அஞ்சலி மேடத்தின் படத்தை இடையில் போட்டு இருப்பதால் கவனம் அதில் போய்ட்டு ரைட்டு.ஹி.ஹி.ஹி.ஹி //

  நீங்க பார்த்ததுல ஸ்டில்லே மங்கல் ஆயிடுச்சே..

  ReplyDelete
 147. // சென்னை பித்தன் said...
  த்ரிஷா ரசிகர்கள் சண்டைக்கு வரப்போறாங்க! //

  வந்துட்டாங்க!

  ReplyDelete
 148. Jayadev Das said...
  \\ஒன்னு, வெங்கட் பிரபு ஓசியனை சுட்டு இந்தப் படம் எடுக்கலை. ரெண்டாவது, கண்டிப்பா வேற எதோ படத்தை சுட்டுத் தான் எடுத்திருக்காரு.\\ நான் ஆங்கிலப் படங்கள் மட்டுமல்ல, வேறென்கெங்கேயோ இருந்து எல்லாம் கூட சுட்டுத்தான் படமெடுக்கிறேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சத்தம் போட்டு தெரு முச்சந்தியில நின்னு கத்தி சொல்லும் வெங்கட் பிரபுவின் தைரியம் வேறு யாருக்கு வரும்!! //

  தைரியமா..அதுக்குப்ப் ஏரு கேவலம் இல்லையா பாஸ்..

  // ஆங்கிலப் படத்தை தமிழ் படமா எடுக்கிறது நம்மாளுங்களுக்கு சப்பை மேட்டர். அங்கே கதாநாயகி வில்லன் கூட குடித்தனம் நடத்துவது மாதிரி எடுத்திருந்தா, இங்கே "ஒரு பொண்ணு கிட்ட இதை கேட்டிருந்தா பரவாயில்லை, ஆனா ஒரு குழந்தையோட தாய்கிட்ட கேட்கிறீங்களே, இது நியாயமா" என்று ஒரு டயலாக்கைப் போட்டு சரிகட்டத் தெரியாதா என்ன. [இது மக்கள் என்பக்கம் வசனமுங்கோ...ஹி..ஹி.ஹி....].//

  பாஸ், அது அம்பிகா படம் தானே..அப்போ சரி!

  ReplyDelete
 149. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  சசி நீயுமா? நானும் ஒருநாள் வரணும்ன்னு பாக்குறேன். முடியல..//

  ஆமா, இங்க .ஐ.நா.சபை மீட்டிங் நடக்கு..வர முடியலேன்னா வருத்தம் வேற!..போய் டியூசன் எடும்யா!

  ReplyDelete
 150. // இரவு வானம் said...
  பழக்க தோசத்துல படம் ரிலீஸான உடனே ஆஹா ஓகோன்னு எழுதிடாதீங்க, கொஞ்சம் வெயிட் பண்ணி எந்த படத்தோட காப்பின்னும் சேர்த்து எழுதுங்க :-) //

  ஆமாய்யா..அதுக்குத் தான் இப்போ கன்னாபின்னா இங்கிலிபீஸ் படமா பாக்குறேன்..ஏதாவது ஒன்னுல மாட்டாமலா போயிடும்..

  ReplyDelete
 151. // ! சிவகுமார் ! said...
  அட்டகாசம் படத்தில் அஜித் செய்த ஆட்டோ கண்ணாடி காமடியை பார்த்து மண்டை காய்ந்த நாள் முதல்...அஜித் என்றாலே பயம் எனக்கு! //

  யோவ், சூப்பர் காமெடியா அது!

  ReplyDelete
 152. என்ன நண்பரே தங்கள் தளம் திடீரெனெ காணாமல் போய் விட்டு திரும்ப வந்துள்ளது

  ReplyDelete
 153. சினிமா சம்பந்தமான செய்தியில் நடிகைகள் புகைப்படம் குறைவாக இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்..

  ReplyDelete
 154. எவன்டா அவன் மைனஸ் ஒட்டு குத்தினது???

  ReplyDelete
 155. ////இதுல இருந்து நாம ரெண்டு முடிவுக்கு நாம வரலாம்:

  ஒன்னு, வெங்கட் பிரபு ஓசியனை சுட்டு இந்தப் படம் எடுக்கலை.

  ரெண்டாவது, கண்டிப்பா வேற எதோ படத்தை சுட்டுத் தான் எடுத்திருக்காரு../////

  தலைவா நீங்க எங்கயோ போய்டீங்க!!!

  மங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்

  ReplyDelete
 156. அடேங்கப்பா.!!!!!! இந்த போஸ்ட்டுக்கு செம வரவேற்பு போல

  ReplyDelete
 157. நம்ம தலய பத்தி தப்பா பேசிற உந்த புண்டைய வலைப்பூவெல்லாம் நமக்கு தேவையா..படம் வந்தா அத பாத்துட்டு அடுத்த வேலைய பாக்காம சல்லித்தனமா ..புண்டையில் கட்டுரை எழுதுறாராம்...நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு அத முதல்ல எழுதுங்கோ....

  ReplyDelete
 158. @தமிழன் இதில் தலயைப் பத்தி தப்பா என்ன சொல்லி இருக்கு? நான் எழுதுறதை ஏத்துக்கவும் மறுக்கவும் உங்களுக்கு முழு உரிமை இருக்கு நண்பரே. உங்க மறுப்பை இன்னும் கொஞ்சம் நாகரீகமா சொல்லியிருந்தால், மகிழ்ந்திருப்பேன். இப்போ வேற வழியில்லாம அதைத் தூக்குறேன்.

  அப்புறம் படம் பார்த்தும் ஒரு விமர்சனம் போட்டிருக்கேன், படிங்க.

  அப்புறம், நாட்டில் உள்ள வேறு பிரச்சினை பத்தியும் எழுதி இருக்கேன், படிங்க.

  இல்லே, அதெல்லாம் படிச்சுட்டுத் தான் இப்படி கமெண்ட் போடுறிங்கன்னா...வாழ்க!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.