Saturday, August 27, 2011

ராஜீவ் உயிருக்கு ஈடாக இன்னும் எத்தனை உயிர்கள் தேவை?

’எங்கள் தேசத்தலைவரைக் கொன்றுவிட்டு எங்களிடமே நியாயம் கேட்கின்றீர்களா, சொரணைகெட்டவர்களே’ - சமீபத்தில் ஒரு இணையதளத்தில் ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், மதி.சாந்தன் ஆகியோர் பற்றிய கட்டுரைக்கு வந்த பின்னூட்டம் அது.

அந்தப் பின்னூட்டம் எனது டெல்லி வாழ்க்கையில் நான் சந்தித்த வட இந்தியர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாய் அமைந்தது. ஆங்கில செய்தித்தாள்களையே படிக்கும் என் சக அலுவலுக நண்பன், இறுதிக்கட்டப்போரில் முள்ளிவாய்க்கால் வீழ்ந்த செய்தி பார்த்துவிட்டு ‘இனி செத்தாங்க. ஒருத்தன்கூட உயிரோட இருக்கக்கூடாது. எங்க ராஜீவையே கொன்னீங்கள்ல..சாவுங்கடா” என்றான். அருகில் இருந்த எனக்கு கோபம் சுரீர் என்று வர “இங்கே கசாப் வீடு புகுந்து சுடுகின்றான்..பாராளுமன்றத்துக்குள்ளேயே தாக்குதல் நடத்துகின்றார்கள். பாகிஸ்தானை ஒடுக்க துப்பில்லாத நம் அரசு, அங்கு மட்டும் பாய்ந்து குதறுவது ஏன்? அங்கு இறப்பது புலிகள் மட்டுமே அல்ல..அப்பாவி மக்களும். அதை நினைவில் வை” என்று வாதத்தில் இறங்கினேன். அவனும் பதில் பேச ரசாபாசம் ஆயிற்று. முடிவில் இவனும் இயக்கத்து ஆளோ என்ற சந்தேகத்துடன் எல்லோரும் பார்க்கும் நிலையே எனக்கு வந்து சேர்ந்தது.

அந்த பின்னூட்டமும், வட இந்திய நண்பனும் பிரதிபலிப்பது ஒட்டுமொத்த சாமானிய இந்தியர்களின் மனோபாவத்தையே. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ‘ராஜீவைக் கொன்னுட்டாங்க. பதிலுக்கு அவங்களை தண்டிக்கணும்’ எனப்தே. மற்றபடி ஈழப்போராட்ட வரலாறு பற்றியோ, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை பற்றியோ அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தமிழர்களின் மனநிலையும் இனப்படுகொலை வரை அதுவாகவே இருந்தது. இப்போதும் பெருவாரியான மக்கள் ‘ராஜீவை கொன்னது தப்பு தானே..அப்போ தண்டிக்கப்பட வேண்டியது தான்’ என்றே நினைக்கின்றனர். அவர்களை நோக்கியே நாம் இப்போது பேச வேண்டியது அவசியம்.

ராஜீவ் கொலை என்பது அந்த வகையில் புலிகளின் அரசியல் தற்கொலையே. அரசியல்ரீதியாக அவர்கள் தனிமைப்பட்டுப் போக, அதுவே முக்கியக் காரணம் ஆயிற்று. நியாயரீதியில் புலிகள் தரப்பில் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், செப்டம்பர் 11க்குப் பின் மாறிவிட்ட உலக அரசியல் சூழலில் புலிகளை வெறும் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தி முடக்க ராஜீவ் கொலையே முக்கிய ஆயுதம் ஆயிற்று.

முதலில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது ராஜீவ் கொலைவழக்கின் விசாரணை இன்னும் முடிந்துவிடவில்லை, அது பாதியிலேயே விடை தெரியாத பல கேள்விகளுடன் நிற்கின்றது என்பதையே. ஏதோ எல்லோரையும் விசாரித்து முடித்து இறுதித் தீர்ப்பாக இந்த தூக்குதண்டனை வழங்கப்பட்டுவிடவில்லை.

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் 1991ம் வருடமே ராஜீவ் கொலை பற்றிய நீதிமன்ற விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளை தமிழன் எக்ஸ்பிரசில் எழுதினார். இன்னும் அதற்கு நம் புலனாய்வு அமைப்பு விடை கண்டுபிடிப்படாத நிலையில் மேலும் பல கேள்விகள் இங்கே இருந்தும் வந்து சேர்ந்தது.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படைக் கேள்விகள் இவையே :

1. ராஜீவின் அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் முண்டியடித்துக்கொண்டு, அவருடன் நின்று போஸ் கொடுத்து தன் கோஷ்டியை வலுப்படுத்திகொள்ளும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சரியாக குண்டு வெடிக்கும் நேரம் ராஜீவை தனியே விட்டது ஏன்? ராஜீவின் நிகழ்ச்சி நிரலில் முதலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூர், திடீரென சேர்க்கப்பட்டது ஏன்?

2. ராஜீவ் 1991 மே 21ல் கொலை செய்யப்படுகிறார். அதற்கு முந்தைய நாள் இரவு சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பிரமணியசாமி, அவசராவசரமாக டெல்லி செல்ல வேண்டும் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். ஆனால் மறுநாள் வரை அவர் டெல்லி செல்லவில்லை. இடையில் அவர் சென்றது எங்கே? சந்திராசாமியை சென்னையில் சந்தித்ததாகவும், இருவரும் பெங்களூர் சென்றதாகவும் ஜெயின் கமிசனில் எழுந்த குற்றச்சாட்டுக்கு இன்று வரை சுவாமி பதிலளிக்கவில்லை. அவர்கள் பெங்களூர் சென்றது சிவராசன் குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவா?

3. சந்திராசாமியின் பின்புலத்தில், கர்நாடக காங்கிரஸ்காரரான மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

4. ராஜீவ் கொலை நடந்தது இரவு 10.10 மணிக்கு. மூப்பனார் மற்றும் ஜெயந்தி நடராஜனால் ராஜீவ் உடல் கண்டெடுக்கப்பட்டு, அவர் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.25க்கு தன் கட்சிக்காரர் திருச்சி வேலுச்சாமியிடம் ஃபோனில் பேசிய சுப்பிரமணியசாமி ‘ராஜீவ் செத்துட்டார்?’ என்கிறார்.இந்தியாவில் யாருக்குமே தெரியாத அந்தத் தகவல் சுவாமிக்கு தெரிந்தது எப்படி? ஜெயின் கமிசன் விசாரணையில் இந்த விசயம் கேட்கப்பட்டபோது ‘இலங்கையில் இருந்து ஒரு நபர் தகவல் கொடுத்ததாகச் சொன்னார். அது யார், ஏன் குறிப்பாக சுவாமிக்கு தகவல் கொடுத்தனர் என்று கேட்டதற்கு பதில் இல்லை.ஏன்?

5. ’ராஜீவ் கொலை பற்றி முன்னரே சோனியாவுக்குத் தெரியும்’ என்று சுப்பிரமணியசுவாமியே ஒரு பேட்டியில் சொன்னார். மற்றவர்கள் மேல் பொடா/தடா பாய்ச்சும் காங்கிரஸ், இதைக்கேட்டபின்னும் சுவாமியை ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க பயந்தது ஏன்?

6. சாதாரண குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவரையே வெளிநாடு செல்ல அனுமதிக்காத அரசு, இந்த முக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திராசாமி 2007ல் வெளிநாட்டுக்கு ஓட அனுமதித்தது ஏன்?

7. ஜெயின் கமிசன் ‘ சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை மேலும் விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லையே..ஏன்?

8. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? அமெரிக்க சி.ஐ.ஏ. ஏஜண்ட் என்று வர்ணிக்கப்படும் சுப்பிரமணிய சுவாமியின் பங்கும் இதில் உறுதிப்பட்ட நிலையில். அமெரிக்க சதி பற்றி ஏன் விசாரிக்கவில்லை? இந்திய அரசு பயந்ததா?

9. அப்போதைய காங்கிரஸ் கூட்டாளியான ஜெயலலிதாவிற்கு, ராஜீவ் கொலை பற்றி முன்னரே தெரியுமா?

மேலதிக கேள்விகளை எழுப்பும் முன்னாள் சிபிஐ அதிகாரியின் வீடியோ பேட்டி இங்கே!

ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் ஏற்றுவது சரி தானே என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தியர்கள், இந்த விரிவான பின்புலத்தில் இந்தத் தீர்ப்பின் அபத்தத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்திரசாமி, சுப்பிரமணியசாமி என்று ஆரம்பிக்கும் குற்றவாளிகள் பட்டியல், விடுதலைப்புலிகள், பிற விடுதலை அமைப்புகள், அமெரிக்க சி.ஐ.ஏ. என்று நீள்வதைக் கவனியுங்கள். இவர்களை விசாரிக்க தைரியமற்ற நமது புலனாய்வு அமைப்பு, இந்த வழக்கை இழுத்து மூட கொடுக்கும் பலியே இந்த மூன்று உயிர்கள்.

இந்தத் தண்டனை ராஜீவ் கொலையாளிகளை தண்டிக்க அல்ல, உண்மையான கொலையாளிகளை தப்புவிக்கவே என்பதை நாம் உணர்வோம்.இந்த தண்டனை நிறைவேற்றல் மூலமாக காங்கிரஸ் பல அரசியல் காய்களை நகர்த்துகின்றது.

முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.

ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கபடவேண்டும் என்று நினைக்கும் பெருவாரியான இந்தியர்களை திருப்திப்படுத்த இது உதவும்.அடிவாங்கி இருக்கும் காங்கிரஸ் இமேஜை இது சரி செய்யலாம்.

தமிழகத்தில் புதிதாக ஈழத்தாய் அவதாரம் எடுத்து, காங்கிரஸ்க்கு பெரிய குடைச்சல் கொடுக்கும் ஜெயலலிதாவிற்கு வைக்கப்படும் செக் ஆக இது இருக்கலாம். மேலே எழுப்பப்பட்ட கடைசிக்கேள்விக்கான விடையில் அடங்கியுள்ளது ஜெ.வின் எதிர்வினை.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால்,அது மேல்மட்டத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும். பேரறிவாளன் இரண்டு பேட்டரிகளை மே முதல் வாரத்தில் வாங்கினாராம். சிவராசனுக்கு அதை கொடுத்திருக்கலாம் எனபது குற்றச்சாட்டு. இந்த கொலை பற்றி சிவராசன், தானு தவிர வேறு யாருக்கும் கடைசிவரை தெரியாது என்பதே நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்படும் விஷயம். அப்படி இருக்க, பேரரறிவாளன் அறியாமல் செய்த விஷயமாகவே இது ஆகிறது.

ஈழ விடுதலை அமைப்புகளுக்கு பெட்ரோல் முதல் ஆயுதங்கள் வரை தமிழகத்தில் இருந்து சப்ளை ஆகிக்கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் ஒரு இலங்கைத் தமிழருக்கு பேட்டரி வாங்கித் தந்தவருக்கு தூக்கா? (அந்த பேட்டரியை சிவராசனிடம் கொடுத்தார் என்பதற்கும் ஆதாரம் இல்லை..அது யூகமே!)

நமது நண்பர், சக பதிவர் மதி.சுதாவின் அண்ணனான குற்றம்சாட்டப்படுள்ள சாந்தன், வெளிநாடு செல்வதற்காக இந்தியாவுக்கு கடல்வழியாக வந்தவர். அப்போது ஈழத்தமிழர்கள் அவ்வாரு வருவது நம் அரசாங்களாலேயே கண்டுகொள்ளப்பாடாமல் இருந்த விஷயம். வெளிநாடு செல்லவேண்டும், தன் குடும்பநிலையை உயர்த்த வேண்டும் என நம்மைப் போன்றே எண்ணிய சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் அவர். அவர் இந்தியாவில் ஆவணங்கள் இன்றி நுழைந்த ஒரே காரணத்தினாலேயே இறந்துவிட்ட வேறு சாந்தனுக்குப் பதிலாக பலிகடா ஆக்கப்பட்டவர் அவர்.

இந்த வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய ஆட்சியாளர்கள்/அதிகார வர்க்கம் ஆரம்பம் முதலே முனைப்புடன் செயல்படுகிறது. புலி பற்றிய பயத்தில் பிதற்றாமல், அந்த எளிய உயிர்களின் மேல் உங்கள் கவனத்தை வைக்கவேண்டிய நேரம் இது. இங்கு நீதி நிலைநாட்டப்படவில்லை, குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

இப்போது தமிழக முதல்வர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை நிறுத்தக்கோர முடியும் என்கிறார்கள். வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட இன உணர்வாளர்கள் இந்த விஷயத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். நீங்கள் சார்ந்துள்ள / சாராத அமைப்புக்கு இந்த விஷயத்தில் நியாயத்தின் அடிப்படையில் உங்கள் தார்மீக ஆதரவைத் தாருங்கள்.
நன்றி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

67 comments:

 1. கமெண்ட்டில் சகோதரர்கள் பரஸ்பர வசைகளையும் குற்றச்சாட்டுகளையும் தவிர்த்து, அந்த உயிர்களைக் காப்பாற்ற கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 2. ///இந்தத் தண்டனை ராஜீவ் கொலையாளிகளை தண்டிக்க அல்ல, உண்மையான கொலையாளிகளை தப்புவிக்கவே என்பதை நாம் உணர்வோம்./// எனக்கும் இது தான் படுகிறது..

  ReplyDelete
 3. இன்னும் சிறிய கால இடைவெளி தான் உள்ளது ,நம்மால் முடிந்தசகல வழிகளிலும் இந்த கொலைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்/ போராடுவோம்.

  ReplyDelete
 4. ராஜீவ் காந்தியுடன் ஜெயலலிதா சேர்ந்து பல பிரச்சார மேடைகளில் தோன்றிய போதும், இந்தக் கூட்டத்துக்கு வராதது ஏன்? நளினியின் சொந்தக் காரர் ஒருத்தருக்கு கருணாநிதி பணம் கொடுத்து கண்ணம்மா என்ற ஓட்டை படத்தை எடுக்க உதவியிருக்கிறார், அதன் வெளியீட்டு விழாவுக்கு எல்லா தி.மு.க. பெரிய தலைகளும் வந்தன. குண்டு வெடிக்கும் சமயத்தில், மூப்பனார், வாழப்பாடி, ஜெயந்தி நடராஜன் என்ற யாருமே அருகில் இல்லை...!! இப்படி பல கேள்விகளுக்கு விடையில்லை. பெட்ரோல் நிரப்ப அனுமதித்ததை எதிர்த்ததற்க்காகவெல்லாம் ராஜீவை போட்டுத் தள்ள அமேரிக்கா திட்டமிட்டதாகச் சொல்வதை நம்ப முடியவில்லை. எத்தனை ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், விடுதலைப் புலிகள் இந்த வேலையைச் செய்ய ஒப்புக் கொண்டது மன்னிக்க முடியாத குற்றம்.

  ReplyDelete
 5. ராஜீவ்காந்தி கொலை என்பதே இவர்கள் நடத்தும் அரசியலுக்கு முகமூடி

  ReplyDelete
 6. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. இப்போது யாரட்டும் குற்றம்சாட்டும் மனநிலையும் இல்லை,
  அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்,

  ReplyDelete
 7. மாப்ள நாம பரிதாப படமுடியும்.. அவ்வளவுதான்..

  ReplyDelete
 8. ராஜீவ் கொலைக்கு யார் காரணம் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் அதற்கு ஈடாக உயிர்பலி மட்டும் கேட்க தெரிகிறது, நம்மால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது, வேறென்ன செய்ய முடியும், கேட்கின்ற நிலையில் தமிழர்கள் இருந்த போதும் பதவிக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டார்கள்

  ReplyDelete
 9. விரிவான அலசல்..!!ஆட்சியில் இருப்பவர்கள் வேகமாகவும்,விவேகமாகவும் செயல்படவேண்டிய தருணம் இது..!!

  ReplyDelete
 10. ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க இன்னொரு மனிதனுக்கு உரிமை கிடையாது ......

  ReplyDelete
 11. சந்திராசாமி,சுப்பிரமணியசாமி போன்ற ஆசாமி வகையறாக்களை விசாரணை செய்தால் எல்லா உண்மையும் வெளிவரும்!
  மற்றபடி கார்த்திகேயனின் அருமையான கதையின் அடிப்படையில்... முன்னர் யாரோ ஒரு நீதிபதி புண்ணியவான் காசா பணமா போனாப்போகுதுன்னு மானாவரியா பதினேழு பேருக்கு மரணதண்டனை கொடுத்திருந்தார். அம்மா ஏதாவது செய்வாரா..?

  ReplyDelete
 12. karuthukkal unmaiyaaga irukkum patchathil thavaraana naparkalai thandikka naam idam kodukka koodaathu.

  ReplyDelete
 13. ஜெயலலிதாவிற்கு செக் வைப்பதற்கு தான் இந்த தண்டனை. அதை ஜெயலலிதா தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

  ReplyDelete
 14. poraattangal valu perattum. nallavarkal kaappaatra pada vendum. aappaatra pada vendum.

  ReplyDelete
 15. யாராவது இத்தூக்குத்தண்டனையை நிறுத்துங்கள் கட்சி பேதம் மறந்து காலம் எல்லாம் நன்றி சொல்வார்கள் ஈழத்தவர்!

  ReplyDelete
 16. நல்ல முடிவு விரைவில் கிட்டட்டும். பெரும்பான்மைக் குரல் வெல்லட்டும்!

  ReplyDelete
 17. கட்டுரைக்கு நன்றி செங்கோவி. நல்லது நடக்கும் என்று நம்புவோம்!

  ReplyDelete
 18. நல்லவர்கள் என்றுமே தண்டிக்கபடக்கூடாது

  ReplyDelete
 19. தொடர்ந்து தமிழர்கள் உயிரை பலி கேட்கும் காங்கிரஸ் கட்சியின் கைக்கூலியாக செயல்படும் ஜனாதிபதியின் மூக்கை உடைக்கவும், நியாயத்தை நிலைநாட்டவும், தமிழர்களின் ஒற்றுமையை உணர்த்தவும் இது தான் ஒரு வரலாற்று வாய்ப்பு.

  முதலில் இனத்தைக் காப்போம், பிறகு தேசியத்தைப் பார்ப்போம்.

  ReplyDelete
 20. முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.//


  உண்மை தான் நண்பா... திசை திருப்ப நடத்தும் நாடகமாகத்தான் படுகிறது

  ReplyDelete
 21. பல்வேறு பரிணாமங்களில் பதிவில் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு நல்ல முகாந்திரம் உள்ளது, 6 கோடி தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி ஜெயலலிதாவின் மவுனம் கலையுமா?

  ReplyDelete
 22. பல கோணங்களில் பட்டியலிட்டுள்ளவைகளில் ஜெயலலிதாவுக்கு செக் வைப்பது என்பது முக்கியமானது.

  பாராளுமன்ற தாக்குதலில் உடந்தையென அப்சல்குருவின் மரணதண்டனையும் கூட நிறைவேற்றப் பட வேண்டிய சூழலில் மத்திய அரசு இருப்பதால் இஸ்லாமியர்களின் எதிர்ப்பின் தாக்கத்தை குறைக்க வேண்டியும் கூட மூவரின் மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடும்.

  மூவரின் மரணத்துக்கு எதிரான குரல்கள் தமிழகத்திலிருந்து எழுகின்ற போதிலும் மரணதண்டனையை எதிர்க்கும் வல்லமை தமிழர்களிடம் இல்லையென்றே நினைக்கின்றேன்.ஆனால் இப்போதைய போராட்டங்கள் மரணதண்டனைச் சட்டத்திற்கு எதிரான புதிய பார்வையை வரும் காலத்தில் உருவாகக் கூடும்.

  ReplyDelete
 23. இதுவரை கார்த்திகேயன்,சுப்ரமணியன் சுவாமி,ரகோத்தமன் மூவரால எழுதப்பட்ட புத்தகங்களில் சி.பி.ஐ கண்ணோட்டத்தில் சொல்லப்படுவது புலிகளின் மீதான குற்றச்சாட்டு திசை நோக்கி செல்கிறது.

  இதற்கு மாறாக திருச்சி வேலுச்சாமி,சி.பி.ஐயில் பணிபுரிந்த மோகன்ராஜ் போன்றவர்களின் குரல்கள் பத்திரிகைகளில் உரக்கச் சொல்லப்படவில்லை.

  முந்தைய நிலையிலும்,இப்போதான பதவி சுமையிலும் ஜெயலலிதா மூவரின் மரணதண்டனையில் மௌனம் சாதிப்பார் என்பதே எனது கணிப்பு.

  மரணத்தின் நுனியிலும் தனது இறை மறுப்புக் கொள்கையில் உறுதியாக இருந்த பகத்சிங் பற்றி நேற்று ஆங்கில தளம் ஒன்றிற்கு இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி...

  “LTTE leader velupillai Prabakaran lived an elusive life with an admiration to Bhagat Singh and Subash Chandra Bose with a vision of freedom from Srilanka's Singala Chavanism.Yet he was brandized as a terrorist as Bhagat Singh was named by British.

  Long live Bhagat singh's visionary thoughts.”

  பிரபாகரனுக்கு எதிரான விமர்சனங்களையும் பின் தள்ளி விட்டு பிரபாகரனையும் வரலாறு நிரந்தரமாக பதிவு செய்யும்.

  ReplyDelete
 24. நண்பர்களே இதில் கையெழுத்திடுங்கள்
  http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-tamils-rajiv-ghandy-assassination

  ReplyDelete
 25. அன்பரே!
  மிகவும் ஆய்வு செய்து
  எழுதிவுள்ள பதிவு
  போற்றிப் பாராட்டுகிறேன்
  தங்கள் கருத்து முற்றிலும்
  உண்மை!
  எது எப்படி இருந்தாலும்
  உயிர்பலி தடுக்கப்பட வேண்டும்
  நானும் வேண்டுகோள் ஒன்று
  கவிதை வழி எழுதிக் கொண்டிருக்கிறேன்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 26. சாந்தன் மதி.சுதாவின் அண்ணன் என்பது எனக்கு புது தகவல்.

  சென்ற பின்னூட்டத்தின் பகத்சிங்கின் பாதிப்பில் பகத்சிங் பிரிட்டிஷ் அரசுக்கு சொன்னதாக...

  தனி மனிதர்களை மரணிக்கச் செய்ய இயலும்.அவர்களின் கொள்கையை எப்படி மரணிக்கச் செய்ய?

  ReplyDelete
 27. செங்கோவி…!

  மிகவும் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிற பதிவு. வல்லவர்கள் எளியவர்களை ‘பலிகடா’ ஆக்கியிருக்கின்றனர்.

  ReplyDelete
 28. அப்ப கசாப்பையும் விடுதலை செய்ய சொல்லுகின்றேர்களா ?

  ReplyDelete
 29. ஐயா ! இறந்தது ராஜீவ் மட்டும் அல்ல .. ஒன்றும் அறியாத அப்பாவிகளும் தான்

  ReplyDelete
 30. முதலாவது அன்னா ஹாசாரேயால் உருவாகியுள்ள சலசலப்பை அடக்க, மீடியாவை திசை திருப்ப இது உபயோகமாகும்.//


  ஆமா மாப்பிள அதோடு நீங்கள் சொன்னதைப்போல் ஜெயலலிதாவிற்கும் சேர்த்து இவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் இப்ப அம்மாதானே பக்ஸ சகோதரர்களை சர்வதேச நீதிமன்றத்தில நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுக்கிறா... ஆனா இந்த விடயத்தில் அம்மா பின்வாங்குவாங்கன்னுதான் நான் நினைக்கிறேன்.. ஒவ்வருவரும் தங்கள் அரசியலுக்காக மூன்று உயிர்கள பலியிடப்போகிறார்களா????

  ReplyDelete
 31. இதுவே தமிழன் அல்லாமல் வேறு மாநிலத்தவராய் இருந்தால் ???

  ReplyDelete
 32. காலாவதியான தடா சட்டங்களின்படி வழங்கபட்ட தண்டனைகளை ரத்து செய்யவேண்டும். இவர்களின் மீது சுமத்த பட்டுள்ள குற்றசாட்டுகள் கடுமையனவைகள் அல்ல. அப்படியே குற்றம் என்றாலும், அவர்கள் ஏற்கனேவே சுமார் 20 ஆண்டுகள் தனிமை சிறையில் அனுபவித்த தண்டனைகளை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்கவேண்டும். அப்படி விடுவிகமுடியவிட்டால், தூக்கு தண்டனையை மாற்றி, அரசாங்கம் விரும்பும் வரை சிறையிலாவது உயிருடன் இருக்கவிடுங்கள்...

  ஆனால் நடப்பவை கவலை அளிபதாக உள்ளது, இந்த பிரச்னையை சட்டசபையில் பற்றி பேச 15 முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுப்பு. சட்டசபையில் பேசியதும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம். இலங்கைத் தமிழர்களுக்காக திடீர் குபீர் ஆதரவு தெரிவித்தவர்கள் இப்படி திடீர் என்று மாறி சட்டசபையில் பேசக்கூட முடியாத நிலைமை.

  தங்களால் முடியாத, தான் நேரடியாக செய்யமுடியாத ஒன்றிற்காக ஆவேசமாக தீர்மானம் நிறைவேறும் போது, தனது அரசு சமந்தப்பட்ட, தன்னால் நேரடியாக செய்யமுடிந்த ஒன்றை பற்றி, குறைந்தபட்சம் சட்டசபையில் பேச கூட அனுமதி இல்லை..
  அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியவில்லை...

  கருணாநிதியும் மற்ற அனைத்து தமிழகத்து தலைவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டனர், காங்கிரேசை தவிர. இன்னும் ஜெயா இதுகுறித்து எந்த கருதும் தெரிவிக்கவில்லை...சோனியா இந்த முறையாவது கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்பாரா ?..
  அப்படி செய்தல், ஈழ துரோகத்தால் காயம்பட்டு உள்ளவர்களுக்கு , சிறிது மருந்திடுவது போல இருக்கும்...செய்வாரா ?

  ReplyDelete
 33. இதில் அப்பாவிகள் மரணம் என்பது கொடுமையானது...உங்க விரிவான விளக்கமான பதிவுக்கு நன்றி மாப்ள....நல்லதே நடக்கும் என்று நம்புவோம்..!

  ReplyDelete
 34. இவர்களுக்காக இறைவனைப்பிராத்திப்போம்

  ReplyDelete
 35. மூன்று உயிர் காக்கப்படவேண்டும்.ஆளுவோர் மனசு வைக்க வேண்டும்.

  ReplyDelete
 36. இந்த வழக்கு இத்தனை வருடங்கள் நீடித்ததே இந்திய நீதித் துறைக்குத் தலைக்குனிவு.

  இன்னும் செஷன்ஸ்கோர்ட்,ஹை கோர்ட்,சுப்ரீம்கோர்ட்,சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்,ஜனாதிபதியின் கருணை மனு,மத்திய அமைச்சரவையின் பரிந்துரை,முதல்வரின் சிறப்பு வாசல் என்று இன்னும் எத்தனையோ கதவுகளை தட்டிப் பார்த்து விட்டு கடைசியில் மக்கள் முன்பு நீதி கேட்கும் தாய்.

  இதோ இன்று மைக்கைப் பிடித்து சேதி கேட்கும் அராஜாகம் பிடித்த பத்திரிகை வர்க்கம்தானே அன்று அவர்களை நீதியின்றி நேர்மையின்றி தக்க காரணமின்றி கைது வாரண்ட் இன்றி கைது பன்னும் போது ஊடகங்களை போலியாக காண்பித்து அப்பாவிகளின் உயிர்களுக்கு உலை வைத்தது.

  அதற்குதானே அந்த தாயார் சவுக்கடி கொடுக்கிறார்.

  இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலேயாவது உண்மையை எழுதுங்கள் என்று.

  ராஜுவை கொன்றவனை கொல்லத்தான் வேண்டும் மறுப்பதற்க்கில்லை ஆனால் அதை காரணம் காட்டி அப்பாவி மக்கள்களை தகுந்த சாட்சியம் இன்றி சிறையில் தண்டிப்பதோ அல்லது மரண தண்டனை விதிப்பதோ ஜன நாயக நாட்டிற்கு அழகல்ல.

  மதுரை தினகரன் ஆபிசில் பட்டப் பகலில் மூன்று பேரை வெட்டிக் கொன்ற மூக்க அழகரியை இந்த சட்டம் என்ன செய்தது?

  சரவணபவன் அண்ணாச்சிக்கு பத்து வருடம் சிறை தண்டனை கொடுக்கப் பட்ட பின்பும் நிரந்தரமாக அவர் ஜாமீனில் வெளியே இருக்கும் மர்மம் என்ன ?

  தேவைப் படும் பொழுது தேவைப் படுபவர்களின் கேஷ்கள் மட்டும் விசாரிக்கப் பட்டு மீண்டும் மர்மமாக மறந்து போக்கடிக்கப்படும் மர்மம் என்ன ?

  இந்தியாவில் தண்டனை அப்பாவிகளுக்கும், வக்கற்றவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுவது வேதனைக்குறியது.

  போப்பாலில் இருபாதியிரம் பேரை விசம் வைத்து கொன்ற அந்த அமெரிக்கனுக்கு என்ன தன்டனை கொடுத்தது இந்தியா?

  அரசியல் தலைமையின் கடைக்கண் பார்வைக்காக அப்பாவிகளை பஸ் எரிப்பின் மூலம் கொன்ற அடிவருடி அடிமைகளை தனது ஆட்சிக்காலத்தில் காப்பாற்ற முயற்சித்து தோல்வியுற்ற ஜெயலலிதாவிடம் இந்த அம்மா மனு கொடுத்திருக்க கூடாதுதான்.

  சட்டம் ஒரு இருட்டறை அதில் நாம் கவனமாகத்தான் நடக்க வேண்டும் இல்லையேல் அது நம்மையே கொன்றுவிடும்.


  நீதிக்கு குரல் கொடுப்போம்.

  ReplyDelete
 37. @அந்நியன் 2
  அருமையான கருத்து, நன்றி.!!

  ReplyDelete
 38. சரியான விளக்கம்.ராஜீவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்து சின்னவரை அரியாசனம் ஏற்றுவதே முக்கிய நோக்கம்.அத்தோடு தமிழ் நாட்டு உறவுகளின் மன நிலையை நாடி பிடித்துப் பார்க்கும் ஓர் நடவடிக்கையாகவும் இருக்கலாம்.

  ReplyDelete
 39. நீதி மன்றின் தீர்ப்புக்கு எதிராக முதல்வர் பேசுவது நாகரிகமற்ற செயலாக இருக்கும் என்பதால் "அம்மா"மவுனம் காக்கிறாரோ?ஆனால்,கோரிக்கை வைக்க முடியுமே?

  ReplyDelete
 40. தங்களது பதிவின் லிங்கை எனது பதிவில் இணைத்துள்ளேன் நண்பரெ....

  ஒற்றுமையுடன் பதிவில் குரல் கொடுப்போம் ஓட்டு மொத்த சக்தியும் சென்றடையட்டும்... பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 41. போபாலில் பல்லாயிரக்கணக்கான நம் தேச மக்கள் சாவுக்கு காரணமான ஆண்டர்சனை பாதுகாப்பாக வெளிநாடு அனுப்பி வைத்தவர்கள் இவர்கள். இன்று குற்றமே சரி வர நிரூபிக்கப்படாதவர்களை தூக்கிலிட முனைப்பு காட்டுவது இவர்களது உடைந்து போயிருக்கும் காலுக்கு கட்டு போடுவதர்க்குதான்.

  நண்பர்களே நியாயத்திற்கு குரல் கொடுப்போம்!சமூக வலைதளங்களில் நம்மால் முடிந்த அளவிற்கு ஆதரவு தருவோம்!

  ReplyDelete
 42. ???? 3 ???????? ??????? ??????? ????????? ?????????? ??????????? ???????????? ??????? ???????? ????????????? ??????? ????? ??????????????? ??????? ??????????????? ????? ?????????? ?????????????? ??????????? ?????? ???????? ????? ?????? ??????? ??????? ?????????

  ReplyDelete
 43. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்கக் கோரி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் ஒரு தேசத்தின் தலைவர் கொலை செய்யப்பட்டதில் அனுதாபமோ, பாரபட்சமோ பார்க்கக் கூடாது என இந்தியத் தேசம் நினைக்கிறது.
  இந்த மூவருக்கும் வழங்கப்பட்ட கருணை மனு இவ்வளவு காலம் கிடப்பில் கிடந்து தற்போது முழு மூச்சாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்துச் சிந்திக்கையில் பொங்கியெழும் தமிழ்ச் சமூகத்துக்கு மறைமுகமான பதிலடியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
  எவ்வாறாயினும் தமிழக முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மரணத்தின் விளிம்பிலிருக்கும் இவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கை உலகத் தமிழரிடத்தே உண்டு என்பது யதார்த்தமான உண்மையாகும்.////இது இன்றைய வீரகேசரி(கொழும்பு)பத்திரிகையில் வெளியான இராமானுஜம் நிர்ஷனின் கருத்தோட்டம். நன்றி;வீரகேசரி.

  ReplyDelete
 44. வணக்கம் மச்சி,
  காத்திரமான கேள்விகள். பதில் சொல்லத் திரானியற்று சம்பந்தப்பட்ட தரப்பினர் நிற்கிறார்கள் என்று என்பது மட்டும் உறுதி.
  விரிவான பின்னூட்டமிட முடியவில்லை.
  இப்போது வேண்டியதெல்லாம் மக்கள் எழுச்சி மாத்திரமே.

  ReplyDelete
 45. அனைத்தும் நியாயமான கேள்விகளே... அனைவரும் அணிதிரள்வோம்.... !

  ReplyDelete
 46. ஒரு வழக்கில் நாட்டின் உச்சமான நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்து வாதங்களையும் கேட்டபிறகு அந்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்கிறதென்றால் அந்தத் தண்டனையை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். கருணை மனுவுக்கு வாய்ப்புள்ளது ....போட்டார்கள்....உடனே மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் அதுக்கும் கூப்பாடுதான் வரும்..... தமிழர்களைத் தூக்கில் போட்டால் தமிழர்கள் போராட்டம் நடத்துவார்கள்.....அப்சல் குருவைத் தூக்கிலிட்டால் காஷ்மீரிகள் போராடுவார்கள்...... கல்லூரி மாணவனைத் தூக்கிலிட்டால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலவரம் வெடிக்கும்... மளிகைக்கடைக்காரனைத் தூக்கில் போட்டால் , மளிகைக்கடைக்கார்கள் எல்லாம் பெரும் போராட்டம் நடத்துவார்கள் என்றால் அப்புறம் நாட்டில் சட்டத்தின் நடைமுறைதான் என்ன..?

  கொலை வழக்கு நடந்து முடிந்து குற்றவாளிக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு ஆயுள் தண்டனை கிடைப்பதற்குள் பத்து வருடமாகி விடுகிறது .. ஆயுள் தண்டனை என்பது பதினாலு வருஷம் என்று எந்த அறிவிலி சொன்னானோ தெரியவில்லை...எல்லா மூடர்க ளும் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்...அப்புறம் அண்ணாதுரை, காந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாள் ...அவர்கள் கோமணம் அவிழ்த்த நாள் என்று ரெமிஷன் கொடுத்து எல்லாம் செய்து அவன் அவன் பரோல் லீவில் கூட ஊரைச்சுத்துகிறான்...

  சமூகத்தின் அமைதியைப் பொருட்டுதான் சிறைகள் ஏற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தனிமைப்படுத்தபடுகிரார்கள் ...திருந்தி வாழும் வாய்ப்புக்காகத்தான் வெளியில் விடுகிறார்கள் ...அதுகூட செய்ய முடியாத நபர்கள் என்பவர்களுக்குத்தான் தூக்கு தண்டனை கிடைக்கிறது . எதையுமே செய்யக்கூடாது என்றால் என்ன மயித்துக்குப்பா இந்த கோர்ட்டு புண்ணாக்கு எல்லாம்.....எல்லாத்தையும் மூடிட்டு .....எவனுக்கு என்ன சவுரியமோ..செஞ்சுக்குங்கடானு விட்டுட வேண்டியது தான்

  ReplyDelete
 47. ஒவ்வொரு கேள்விகளும் இடிபோல் இருக்கு

  ReplyDelete
 48. தேனி மாவட்டம் சின்னக்கோளாறுபட்டியில் இருவத்துநாலு கொலை விழுந்த கேசில்
  "ஜெயிலர் வெளியே வந்து ரிப்போர்ட் எழுதுனாத்தானே என்குயரி? போலீஸ்காரனை FIR எழுதவுட்டே..அம்புட்டுதான்..இவன் என்ன? இருவத்துநாலு கொலையா செஞ்சான்? நான் FIR எழுதித் தூக்கு வாங்கலை?" என்று சமூக ஆர்வலர் ஏஞ்சலாவின் காமிராவிலே பதிவாகிக்கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலே ஜெயிலிலே சுயவாக்குமூலத்தை உதிர்க்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேய்க்காமன்தான் சாட்சியம்..
  நடந்த கொலைகள் தொடர்பான சம்பவங்களில் தனக்குச் சாதகமான அம்சங்களை மட்டும் ஆங்காங்கே உண்மையை மறைத்தும் கொஞ்சம் நீட்டியும் எடிட்டிங் செய்து வாக்குமூலம் கொடுத்துவிட்டு ஆயுள்தண்டனையுடன் தப்பிக்கும் கொத்தாளத்தேவரின் அணுகுமுறைக்கு எதிராக உண்மையை வெளிக்கொணர முடியாமல் முடங்கிப்போய்
  மரணதண்டனைக்கு ஆளாகும் விருமாண்டியின் தரப்புவாதங்களையும் இரண்டு தரப்பிலிருந்துமான பார்வையில் எடிட்டிங்கில் சீன்களை ஒட்டி வெட்டி இரண்டுமுறை காட்சியை காண்பித்திருப்பார் டைரக்டர் கமலஹாசன்..
  அதன்பின்னாலேயே விருமாண்டியின் கொலைப்பழிக்குப் பின்னாலிருக்கும் உண்மையை மக்கள் உணரமுடிந்தது..
  உள்ளூரில் செல்வாக்கு படைத்த செகண்ட் அக்க்யுஸ்ட் கொத்தாளத் தேவரால் இது முடியும் என்றால் உலக அளவில் தனது சித்துவேலைகளை செய்துவரும் பெருந்தலைகளுக்கு இதெல்லாம் ஜுஜுபிதான்..உலக அளவில் 85 நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்ட நிலையில் அகிம்சையை போதிக்கும் இந்தியா இப்படி நடந்துகொள்வது நியாயமா என்கிற ரீதியில் மீடியாவின் குரலாகத் தனது கருத்தை பதிவுசெய்வார் படத்தின் கடைசி நிமிடங்களில் டைரக்டர் கமலஹாசன்...
  இந்தப் படத்தை ஒருதரம் பார்ப்பது உண்மைதேடும் உயர்ந்தவர்களின் உணர்வுகளுக்கு உரம் கொடுக்கும்..
  உண்மைக்குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்..அம்புகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் எய்தவர்கள் அடையாளம் காணப்பட்டால்தான் வழக்கு உண்மை வெளிவரும்..பாவம் தமிழன்..
  இந்தியாவிலே இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்குப் பதில் சிபிஐ மோகன்ராஜ் அவர்களின் பேட்டிதான்..

  ReplyDelete
 49. காந்தி தேசம் என்று பெருமை பேசுவார்கள்!திலீபன் உண்ணா நோன்பிருந்து இறந்த போது கூட வாய் மூடி மெளனம் காத்தது இந்த ராஜீவ் அரசு தான்!"காந்தி" உண்ணா நோன்பிருந்து தண்டி யாத்திரை செய்து,உப்புச் சத்தியாக்கிரகம் செய்து சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்.இன்று உண்ணா நோன்பிருக்கவோ,கேவலம் இன அழிப்பை நிறுத்து என்று கோரி ஒரு ஊர்வலமே செல்ல முடியாத "காந்தி தேசம்"இது!இந்த அப்பாவிகள் மூவரையும் தூக்கில் போட்டு சாகடித்ததுடன் ராஜீவ் கதைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறார்கள் போலும்.சிங்கள அரசுக்கு வேண்டிய மட்டும் உதவி வி.பு.களின் கதையை முடித்தாயிற்று!மீதமிருப்பது இந்த மூவர் தானே,இத்துடன் முடித்துவிடலாம் என்று கருதுகிறார்கள் போலும்!பலிக்கடா ஆக்கப்பட்டது,ஆகியது எல்லம் சரி தான்.இது முடிவில்லாதது என்பதை புரிந்து கொள்ள ஏன் மறுக்கிறார்களோ தெரியவில்லை.ராஜீவுக்காவது ஒரு ஆண்,ஒரு பெண்.இனி?????????????

  ReplyDelete
 50. பலரும் சிந்தனை செய்து இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும்.

  ReplyDelete
 51. Well Written. தேசபக்தி என்னும் பெயரில் குருட்டாம்போக்கில் செயல்படாமல், இனம் மதம் மொழி தேசம் என்னும் வேற்றுமைகளை கடந்து, உண்மை ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் எழுதும் சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நினைக்க பெருமையாக இருக்கிறது. நன்றி செங்கோவி.

  ReplyDelete
 52. மறப்போம் மன்னிப்போம் என்பதே தமிழர் பண்பாடு! தவறே செய்திருந்தாலும் தண்டணைக்கு இது நேரமல்ல! ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

  ReplyDelete
 53. தமிழக முதல்வரும் ஆளுனரும் நினைத்தால் இவர்களை தூக்கில் இருந்து காப்பாற்ற இயலும்.

  http://ibnlive.in.co​m/news/window-of-opp​ortunity-for-rajiv-k​illers/179212-60-118​.html

  ஏற்கனவே இந்த சட்ட வழிமுறையில் தமிழகத்திலேயே சிலர் தூக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்​கின்றனர்.

  ஜெயா இவர்கள் இப்படி சொல்வதை கேட்பாரா....

  பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை தமிழக அரசு ரத்து செய்ய முடியும்: வழக்கறிஞர் புகழேந்தி

  குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் கூட, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

  அதன்படி முதல்வர் ஜெயலலிதா தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60329

  அல்லது இவர்கள் இவர்கள் சொல்வதை கேட்பாரா....

  தூக்கில் போட ராம. கோபாலன் ஆதரவு..

  அப்போது அவர்,ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனைக்கு தயாராகியுள்ளனர்.
  அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60310

  ReplyDelete
 54. இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவித்து வரும் அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருப்போம்.

  ReplyDelete
 55. ஞாயிற்றுக்கிழமை,28ஓகஸ்ட்2011. தூக்குக்கு எதிராக பெண் ஒருவர் தீக்குளிப்பு மரணம்!- அவர் எழுதிய உருக்கமான கடிதம்;;;;;;;;;;;;
  பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.
  காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங்கொடி ( வயது 27) என்பவரே இவ்வாறு தீக்குளித்து இறந்தவராவார்.
  மக்கள் மன்றம் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், இன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.
  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
  இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
  செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
  21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

  ReplyDelete
 56. @Yoga.s.FR :

  இப்படி நிகழக்கூடாதே...மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி.

  ReplyDelete
 57. நடந்து விட்டதே செங்கோவி.போர் என்று பெயரிட்டு இலங்கை அரசு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்த்து நடாத்திய இன அழிப்பை நிறுத்துமாறும் எத்தனையோ உறவுகள் உயிரை துச்சமென மதித்து தற்கொடையாளர் ஆனார்களே,அப்போதும் மவுனம் தானே காத்தார்கள்,ஆட்சியாளர்கள்?

  ReplyDelete
 58. @Yoga.s.FR :

  ஆம்..தீக்குளிப்பு இந்த ஆட்சியாளர்களின் மனதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு முத்துக்குமரனின் மரணமே அவல சாட்சியாக நிற்கிறது.

  ReplyDelete
 59. செங்கோவி said...

  கமெண்ட்டில் சகோதரர்கள் பரஸ்பர வசைகளையும் குற்றச்சாட்டுகளையும் தவிர்த்து, அந்த உயிர்களைக் காப்பாற்ற கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  kகிரேட்

  ReplyDelete
 60. மிக அருமையான கட்டுரை தோழரே . மிக்க நன்றி . இந்த கட்டுரை சில அறிவிலிகளை தட்டி எழுப்பினால் சந்தோஷ படுவேன் . மீண்டும் என் நன்றி .

  ReplyDelete
 61. முடிவில் இவனும் இயக்கத்து ஆளோ என்ற சந்தேகத்துடன் எல்லோரும் பார்க்கும் நிலையே எனக்கு வந்து சேர்ந்தது.//

  இது அவர்களின் கையாலாகத் தனம் பாஸ்,
  இந்த நிலையினை எண்ணி நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர,
  இந்த வசை மொழி கேட்டு மனந் தளரக் கூடாது பாஸ்,

  ReplyDelete
 62. ராஜீவ் கொலை என்பது அந்த வகையில் புலிகளின் அரசியல் தற்கொலையே. அரசியல்ரீதியாக அவர்கள் தனிமைப்பட்டுப் போக, அதுவே முக்கியக் காரணம் ஆயிற்று. நியாயரீதியில் புலிகள் தரப்பில் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், செப்டம்பர் 11க்குப் பின் மாறிவிட்ட உலக அரசியல் சூழலில் புலிகளை வெறும் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தி முடக்க ராஜீவ் கொலையே முக்கிய ஆயுதம் ஆயிற்று.//

  காத்திரமான கருத்து,
  இந்தக் கொலையில் வரதராஜப் பெருமாளுக்கு கூட தொடர்பிருப்பதாக ஒரு நூலில் படித்தேன், ஆனால் தீவிரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்ட புலிகள்ம் மீது கொலைக் குற்றச்சாட்டு முழுவதும் விழுந்தது தான் இதற்கான காரணம்,

  ReplyDelete
 63. இங்கே நீங்கள் எடுத்தியம்பியுள்ள தர்க்க ரீதியான கருத்துக்கள் நிச்சயம் பலரைச் சென்றடைய வேண்டும்,

  இரவு சந்திக்கிறேன்.

  ReplyDelete
 64. இப்ப சொல்லிய விஷயங்களை கோர்ட்டில் சொல்லாதது ஏன்...?????

  ReplyDelete
 65. @thiyagarajan.

  அண்ணே...பதிவை நல்லாப் படிங்க..//மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் 1991ம் வருடமே ராஜீவ் கொலை பற்றிய நீதிமன்ற விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகளை//

  ..அதாவது இந்தக் கேள்விகள் கோர்ட்டில் எழுப்பப்பட்டவையே..

  ReplyDelete
 66. ஒன்றிணைந்த போராட்டங்கள் பலன் தெரிகிறது. இப்பொழுது ஒர் சற்றே ஆறுதல் தரும் செய்தி வெளியாகி இருக்கிறது. நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் தமிழ்நாடு சட்டச்பையிலும் முதல்வர் ஜெயல்லிதா அம்மையார் இம்மூவருக்கும் ஆதரவாகப் பிரேரணை நிறைவேற்றியுள்ளார். மாறுதல் தெரிகிறது

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.