Tuesday, April 24, 2012

நாம ஏங்க இப்படி இருக்கோம்?குவைத்தில் நாங்கள் இருக்கும் ஏரியாவில் ஹைவேஸ் என்றொரு கடை உண்டு. கடைப் பெயர் ஹைவேஸ் என்பதால், முதல் முறை கேட்கும் பலரும் குழம்பி விடுவார்கள், நானும்..

என் அண்ணன் ஒருவர் நான் இங்கு வந்தபோது சொன்னார் :’ நம்ம ஊர் திங்ஸ் எது வேணும்னாலும் ஹைவேஸ் போ..கிடைக்கும்” நானும் ஏதோ ஹைவேஸ் ரோடைத் தான் சொல்கிறார் என்று நினைத்துக்கொண்டு “அப்படியாண்ணே, அங்க நிறையக் கடை இருக்கா?” என்றேன்.

அவரும் சளைக்காமல் “ஆமா, அந்த ஏரியால நிறையக் கடை இருக்கு. ஹைவேஸும் இருக்கு” என்றார்.
“ஹைவேஸ்ன்னா ரொம்ப லென்த்தா இருக்குமே..அதுல கடைகள்லாம் எந்த இடத்துல வரும்? ஏதாவது லேண்ட் மார்க் சொல்லுங்க “என்றேன். 


பிறகு தான் அவர் சுதாரிச்சுக்கொண்டு “தம்பி, ஹைவேஸ்ங்கிறது ரோடு இல்லை, கடை” என்றார்.

அதன்பிறகு பெரும்பாலும் அங்கேயே பொருட்களை வாங்குவது வழக்கம். ஒரு ட்ராலியில் பையனை உட்கார வைத்துக்கொண்டு (பின்னே, உன்னையா உட்கார வைக்க முடியும்னு கமெண்ட் போட்டீங்க........) ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம்.


சென்ற மாதத்தில் ஒருநாள் அதே போன்று போயிருந்தோம்..மகனும் சந்தோசமாக ட்ராலியில் உட்கார்ந்தபடியே வந்தான். அப்போது 25 வயது மதிக்கதக்க ஒருவர் என் மகனைப் பார்த்து “ஏ, செல்லக்குட்டி, கட்டித்தங்கம்’ என்று கொஞ்சினார். அநேகமாக ஏதோ கூலி வேலை செய்வதற்காக இங்கு வந்திருப்பார்போல் தோன்றியது. கொஞ்சம் பழுப்பேறிய இன் பண்ணாத சட்டையும் கலைந்த தலையுமாக கொஞ்சம் கரடுமுரடான தோற்றம் தான்.

என் மகனை அறியாதோர் கொஞ்சுவது புதிதல்ல என்பதால் நானும் தங்கமணியும் சிரித்தபடியே அவரை விலகிக்கொண்டு வெஜிடபிள் செக்சன் நோக்கி நகர்ந்தோம். 

கொஞ்ச நேரம் கழித்து அதே ஆள் மீண்டும் வந்தார். “என்னய்யா..செல்லக்குட்டி..”என்று ஆரம்பித்தார்.நாங்களே அன்று லேட் ஆகி விட்டதே என்று அவசர அவசரமாக வந்திருந்தோம். ‘இந்தாளு வேற இம்சை பண்றானே’ என்று எரிச்சலாய் வந்தது. ஆனாலும் நாம் டீஜண்டு பீப்பிள் இல்லையா, எனவே மீண்டும் புன்சிரிப்புடன் ட்ராலியைத் தள்ளிக்கொண்டு மில்க் செக்சன் போனேன். அருகிலேயே சாக்லேட்ஸும் இருந்ததால், பையன் இறங்கிப் போய் சாக்லேட்ஸை எடுக்க ஆரம்பித்தான்.

ஒரு ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது, அதே ஆள் மீண்டும் பையன் முன் வந்து நின்றார். “எப்படிய்யா இருக்கே...என் ராசா” என்று ஆரம்பித்தார். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. அவர் தொடர்ந்து அருகே இருந்த சாக்லேட் பார் ஒன்றை எடுத்து பையனிடம் நீட்டி “இந்தா வச்சுக்கோய்யா..காசு ஏதாவது வேணுமா..இந்தா” என்றபடியே பாக்கெட்டிலிருந்து கசங்கிய தினார்களை எடுக்க ஆரம்பித்தார்.

நான் கோபத்துடன் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்று சொன்னேன், அல்லது கத்தினேன். அவர் முகம் சுண்டிப் போயிற்று. என்னையும் தங்கமணியையும் பரிதாபமாக மாறி மாறிப் பார்த்தவர், பையன் முன் மண்டியிட்டு உட்கார்ந்தார். பையனின் கன்னத்தைத் தாங்கியபடியே “எம் புள்ளை மாதிரியே இருக்கியேய்யா...வந்து மூணு வருசமாச்சு..அவ மாசமா இருக்கும்போது வந்தவன்..ஃபோட்டோல தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்...அதாம்யா இப்படி” என்று சொன்னார்.

சொல்லும்போதே கண் கலங்கியது. என்னையும் தங்கமணியையும் நிமிர்ந்து பார்க்காது தலையைக் குனிந்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

நாங்கள் விக்கித்துப் போய் நின்றோம்.

தன் குடும்பத்திற்காக, தன் சந்தோசங்களைத் துறந்து அரபு தேசத்திற்கு வந்த பல சொந்தங்களை நான் அறிவேன். மூணு வருசம் தான்,,கொஞ்சம் காசு சேர்த்துட்டுப் போயிடணும் என்று ஆரம்பித்து பிள்ளைகளை நல்ல ஸ்கூலில் படிக்க வைக்கணும்..நல்ல இஞ்சினியரிங் காலேஜில் சேர்க்கணும்..நல்ல இடத்துல கட்டிக்கொண்டுக்கணும் என்று தேவைகள் கூடிக்கொண்டே போக, முப்பது வருடங்களுக்கும் மேலாக அரபு தேச வெயிலையும், குளிரையுமே துணையாகக் கொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்பவர்கள் பலர் இங்கே உண்டு.

அவரும் அத்தகையோரில் ஒருவராய் இருக்கலாம். அறியாமல் செய்த தவறு தான் என்றாலும் இன்னும் மனது உறுத்திக்கொண்டே இருக்கிறது. 

’சக மனிதனின் அன்பைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நம்மை நாம் சுருக்கிக்கொண்டதின் காரணம் தான் என்ன..அன்பைக் கண்டுகூட நமக்குப் பயம் வருவது ஏன்..மனிதர்களின் மீதான நம்பிக்கையை நாம் முற்றிலும் இழந்து விட்டோமா?’ என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றேன்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

29 comments:

 1. உண்மைதான்..... நானும் பலரின் கதையை கேட்டு இதே சிந்தனையில் இந்த அரபு நாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறேன்....சில நேரங்களில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுடன் ஒரு வேலை உணவு உண்பது வழக்கமாகி விட்டது....செங்கோவி....பதிவிட்டதற்க்கு நன்றி......

  ReplyDelete
 2. வணக்கம் செங்கோவி!!அறியாமல் செய்த தவறு தானே?உணர்ந்து வேறு அதனைப் பகிர்ந்து இருக்கிறீர்கள்.உங்கள் "முருகன்"மன்னித்து விடுவார்,கூடவே என்னோட புள்ளையாரும்!

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. இட்லியாக இருங்கள் சோமவள்ளியப்பன் சாரோட புத்தகத்தை படிங்க. ஒரு மாற்றம் வரும்

  ReplyDelete
 5. என் மகனை அறியாதோர் கொஞ்சுவது புதிதல்ல?????!!!!!!!(அப்புடியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு!)

  ReplyDelete
 6. //எது சார் அறியாம செய்த தவறு.... அவரு சொன்னதுக்கு எனக்கே கண் கலங்கிடுச்சு. எதுவுமே அறியாம செய்த தவறுகள் இல்ல. ஏன் கோபம் வருது, எதுக்கெல்லாம் கோபம் வருதுன்னு
  கொஞ்ச நேரம் உக்காந்து யோசிங்க.

  கோபம் வார வீதம் குறையும்....
  எல்லாரோடையும் நல்லா பழகுவோம்
  மனம் விட்டு பேசுவோம்
  மனைவியோட, பிள்ளைகளோட பாசம் எகுரும் //


  நன்றி நண்பரே!

  ReplyDelete
 7. //Yoga.S.FR said...
  என் மகனை அறியாதோர் கொஞ்சுவது புதிதல்ல?????!!!!!!!(அப்புடியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு!)//

  ஐயா, உங்கள் நம்பிக்கை வாழ்க..நம்பிக்கை தானே வாழ்க்கை..என்னைக்காவது நான் ‘திரும்பி’ நிற்கும்போது தெரியும்..பையன் என்னை மாதிரியா,இல்லே என் தங்கமணி மாதிரியான்னு!

  ReplyDelete
 8. நான் கூட ஹைவேஸ் கடையை தான் எதோ குறை சொல்ல போறீங்களோன்னு நினைச்சேன்.

  ReplyDelete
 9. அண்ணன் காந்திய ஃபாலோ பண்றார்னு எங்கயோ படிச்சதா ஞாபகம்...விடுங்கன்னே...உங்களுக்கு தெரியாம கோவம் எட்டி பாத்திடுச்சி...அந்த மனிதனின் என்ன உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது...பகிர்வுக்கு நன்றின்னே!~

  ReplyDelete
 10. Romba negizhvaaga irunthathu. Panam. Sampathikka manitharkal izhappadhu niraiya.

  ReplyDelete
 11. உங்கள் பதிவு மனதை கனக்க செய்துவிட்டது

  ReplyDelete
 12. மனம் வலித்தது, இப்படி எல்லாம் வாழும் எம் மக்கள் கண்கள் குளமாகின - பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. ம்ம்ம்...உங்க நிலைமைல நீங்கள் கோபப்பட்டது சரிதான். அவரும் பாவம்தான்!
  தவிர...பெற்றோர் அனுமதியில்லாம ஒரு குழந்தையைக் கொஞ்சுவது தவறுன்னும் ஒரு விஷயம் சொல்றாய்ங்க..நம்மவர் அநேகமாக கடைப்பிடிப்பதில்லை.

  ReplyDelete
 14. உண்மைதான் சக மனிதரின் அன்பை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. யாராவது தெரியாதவர் வந்து அன்பாக பேசினால் நாம் முதலில் செய்வது சந்தேகப்படுவதே! எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்களோ ஆனால் அதுதான் எம்மையறியாமலே நடக்கிறது!

  ReplyDelete
 15. செங்கோவி said...

  //Yoga.S.FR said...
  என் மகனை அறியாதோர் கொஞ்சுவது புதிதல்ல?????!!!!!!!(அப்புடியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு!)//

  ஐயா, உங்கள் நம்பிக்கை வாழ்க..நம்பிக்கை தானே வாழ்க்கை..என்னைக்காவது நான் ‘திரும்பி’ நிற்கும்போது தெரியும்..பையன் என்னை மாதிரியா,இல்லே என் தங்கமணி மாதிரியான்னு!////காலை வணக்கம்!அதான்,"திரும்பி"யே நிக்க மாட்டேங்கிறீங்களே?Ha!Ha!Haa!!!!!!

  ReplyDelete
 16. மனிதனுக்கு மணிதான் தான் எதிரி... அத்தனைக்கும் ஆசைபடுன்னு சொன்ன மாதிரி. இப்போல்லாம் அதனையும் சந்தேகபடுன்னு இப்போ நிலைமை மாறிடுச்சு.... ::(

  ReplyDelete
 17. இன்றை நவீன உலகு பலரையும் பாதுகாப்பு   
  முன் எச்சரிக்கை என்ற உணர்வைத் தருவதில் பலரிடம் இப்படி நடந்து கொள்ளவேண்டிய நிலை செங்கோவி ஐயா.கடந்து செல்லும் வலிகள்.

  ReplyDelete
 18. நானும் ஹாவேஸ் கடையில் கமலாகாமேஸ் வந்தாங்களோ என்று ஓடிவந்தால்!ஹீ

  ReplyDelete
 19. மனதை நெகிழ வைத்த அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. ஜாலியா கதை சொல்ல ஆரம்பிச்சு கடைசியில பீல் பண்ண வச்சுட்டீங்களே நண்பரே....

  நீங்கள் சொல்வது உண்மைதான். அடுத்தவர் அன்பை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட நமக்கு பொறுமை இருப்பதில்லை.

  ReplyDelete
 21. yennaq pantrathu intha panatha sekarikkurathu kulla namma valkaiyea mudinchu poyiruthu pala ipti ayal nadukalil valkaiyai tholaikirarkal manasu kastama erku........

  ReplyDelete
 22. ’சக மனிதனின் அன்பைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நம்மை நாம் சுருக்கிக்கொண்டதின் காரணம் தான் என்ன
  >>
  அன்பு காட்டுறேன்னு சில நபர்கள் தீங்கிழைப்பதால்தான் சகோ

  ReplyDelete
 23. அன்பைக் கண்டுகூட நமக்குப் பயம் வருவது ஏன்..

  ReplyDelete
 24. நெகிழ்ச்சியான பதிவு மாம்ஸ்...

  சிலரது செயல் நமக்கு அநாவசியமாக தெரிகிறது.

  ReplyDelete
 25. நீங்க கோபப்பட்டது உங்களுக்கு உறுத்தலா தெரிஞ்சாலும், அந்த மனிதர் செய்தது கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் அவருடைய நிலைக்கு, ஒருமுறை கொஞ்சி இருக்கலாம். பட் திரும்ப திரும்பன்னா........ சரியில்ல.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.