Monday, May 14, 2012

முருக வேட்டை_9

கவிதா காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள். சரவணன் நின்று கொண்டிருந்தான்.

“என்னங்க திடீர்னு...? ஆஃபீஸ் போகலியா?”

“இல்லை அச்சு... தலைவலி..கொஞ்சம் காஃபி போட்டு எடுத்துட்டு வாயேன்” சொல்லியபடியே சோஃபாவில் சரிந்தான் சரவணன்.

கவிதா கிச்சனை நோக்கி நகர்ந்தாள்.

சரவணனுக்கு குழப்பமாக இருந்தது. தன்னைப் பழி வாங்கத் தான் பாண்டியன் இந்தக் கொலையைச் செய்திருக்கிறானா? முத்துராமன் அகிலாவிற்கு காட் ஃபாதர் போன்றவர். அவரின் வழிகாட்டுதல் மூலமாகவே படித்து இந்தளவிற்கு உயர்ந்தவர் அகிலா. அகிலாவின் தந்தையும் முத்துராமனும் நெருங்கிய நண்பர்கள். எனவே என்னையும் அகிலாவையும் ஒருசேர பழி வாங்கும் விதமாக முத்துராமனை பாண்டியன் கொலை செய்தானா?

பொதுவாக சரவணன் தான் டீல் செய்யும் கேஸ்களைப் பற்றி கவிதாவிடம் டீடெய்லாக விவாதிப்பது வழக்கம். ஆனால் இப்போது கவிதா கன்சீவ் ஆகிவிட்டதால், இந்தக் கேஸ் பற்றி எதுவும் பேசுவதில்லை. அதிர்ச்சியூட்டும் விதமாக எதுவும் அவளுக்கு சொல்லக்கூடாது என்பது அகிலா மேடத்தின் கண்டிசன்.

“இந்தாங்க காஃபி” என்றாள் கவிதா.

காஃபியை வாங்கியபடியே கவிதாவைப் பார்த்தான். மிகவும் சோர்வாக இருந்தாள்.

“இன்னும் வாமிட் நிக்கலையா, அச்சு?”

“இல்லை..சாப்பிடவும் முடியலை..அதுவும் நானே சமைச்சு நானே சாப்பிடறது ரொம்பக் கஷ்டமா இருக்கு”

“அப்போ ரமணாஸ்ல வேணா சாப்பாடு சொல்லட்டுமா?”

“இருக்கட்டும்..பார்த்துக்கலாம்..என்ன ஆச்சு? ஏன் தலைவலி?”

சரவணனுக்கு கொஞ்சமாவது புலம்பினால் தான் தெளிவாகும்போல் தோன்றியது. முத்துராமன் கொலைக்கேஸை ஆரம்பம் முதல் சொன்னான். ஆனாலும் பாண்டியன் பற்றியோ, இன்று பாண்டியன் சொன்னது பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. பாண்டியனை தன் சொந்த அண்ணனாகவே நினைப்பவள் கவிதா. அவன் பேசாததற்கே வருத்தப்பட்டவள், கொலை செய்யுமளவுக்குப் போய்விட்டான் என்று தெரிந்தால் அதிர்ச்சியாகி விடுவாள் என்பதால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

“பூஜை ரூம்ல புகுந்தா திருடியிருக்காங்க, பாவிப்பயக?”

“ஆமா அச்சு..ஆனால் மற்ற ரூம்கள்ல திருடலை”

“அப்படீன்னா அந்த பூஜை ரூம்ல தான் ஏதோ இருக்கு, இல்லியா?”

“ஆமா..அங்கே ஃபுல்லா தேடிப் பார்த்துட்டோம்..வேற தடயமே இல்லை”

”பாண்டியண்ணன் என்ன சொல்றார்?”

“அவன்..அவனுக்கும் ஒன்னும் புரியலை”

“அவரை வீட்டுக்கு கூட்டி வரச்சொன்னேனே, சொன்னீங்களா?”

“இல்லே, மறந்துட்டேன்..சொல்லிடறேன்”


“ம்..பூஜை ரூம்ல என்ன எழுதியிருந்துச்சு?”

“MARS-1024"

”அப்படீன்னா என்ன?”

“அதானே தெரியலை”

“M..ங்கிறது முத்துராமனா இருக்குமா?”

சரவணனுக்கும் அதே தான் தோன்றிக்கொண்டிருந்தது.

“இருக்கலாம்”

“அப்போ...A யாரு?”

“தெரியலை அச்சு”

“அப்படீன்னா அடுத்த கொலை விழுறவரை வெயிட் பண்ண வேண்டியது தானா?”

“மார்ஸ்-ங்கிறது நாம நினைக்கிற மாதிரி ஆள் பேர்னா, வேற வழியில்லை”

கவிதா தீவிரமாக யோசிக்கலானாள். முத்துராமன் மாதிரி ஒரு நல்ல மனிதரை பூஜை ரூம் என்ற புனிதமான இடத்தில் கொன்றது ஏன்? அந்த பூஜை ரூமில் ஏதோ இருக்கிறது. ஆன்மீகரீதியில் ஏதேனும் தவறு செய்திருப்பாரா? ஏறக்குறைய மாதம் ஒரு முறை மருதமலைக்கு போகும் குடும்பம் அது..அதுபோக முருகனின் அறுபடை வீடுகளுக்கும் அடிக்கடி ஆன்மீகச் சுற்றுலா போவார்கள் என்று சரவணனே ஒருமுறை சொல்லியிருக்கிறான். முத்துராமனில் ஆரம்பித்து அவரது பேரப்பிள்ளைகள் வரை அனைவருமே பக்திப்பூர்வமாய் வாழ்பவர்கள். அப்படி இருக்கும்போது, யார் இப்படிச் செய்வது?..அதுவும் பூஜை ரூமிலேயே? ’சாமின்னு ஒன்னு இருக்கா?’ என்று சவால் விடுவது போல் அல்லவா இருக்கிறது?

யோசிக்க யோசிக்க கவிதாவிற்கு தலை கிறுகிறுத்தது.

“நான் படுத்துக்கட்டுமா?” என்றபடியே சரவணனின் மடியில் சாய்ந்தாள் கவிதா.

சரவணன் அவளின் தலையைத் தடவியபடியே யோசித்துகொண்டிருந்தான்.

இன்னொரு கொலை விழுந்து, அவருக்கும் முத்துராமனுக்கும் பொது எதிரி யார் என்று பார்ப்பதற்குள், மேலிடத்தில் வறுத்தெடுப்பார்களே என்று சரவணனுக்கு கவலையாக இருந்தது.

M...A....R...S

பாண்டியன் தான் கொலையாளி என்றால், அடுத்து யாரைக் கொல்வான்?

A......யார்? பாண்டியனுக்கு யாரைப் பிடிக்காது?

நான்..சரவணன்..

அடுத்து

அகிலா?

யோசிக்கும்போதே பகீரென்றது சரவணனுக்கு!

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

 1. ரோம்ப திருப்பம்....இருக்கே....
  இப்ப ஜெட் வேகத்தில கதை பறக்குது....

  ReplyDelete
 2. வணக்கம் செங்கோவி!ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே?சரி,அதெல்லாம் சரவணன் பாத்துக்குவாரு!

  ReplyDelete
 3. அப்போ அடுத்தது அகிலாவா யாராக இருக்கும் முருக வேட்டை மூச்சை வாங்குது!தொடருங்கோ தொடர்கின்றேன்!

  ReplyDelete
 4. ஏ ஃபார் அகிலான்னா அடுத்து ஆர், எஸ்?

  ReplyDelete
 5. //பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]
  ஏ ஃபார் அகிலான்னா அடுத்து ஆர், எஸ்?//
  எஸ் - சரவணன்?

  ReplyDelete
 6. மாம்ஸ்.... கலகல விறுவிறு.....

  க்ளு புஸ் ஆகாதே......

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.