Tuesday, May 15, 2012

ஹார்ட் அட்டாக்- சர்க்கரை நோய் குணமாக...(ஆயுர்வேத மருத்துவம்)


டிஸ்கி-1: இப்பதிவு என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்படுகிறது. இதனால் ஏற்படும் எந்தவொரு பின்விளைவிற்கும் செங்கோவி பொறுப்பல்ல!


றக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் ‘மாமியாருக்கு ஹார்ட் அட்டாக்’ என்று ஃபோன் வந்தது. தகவல் கேட்டதும் மனது பதறிப்போனது.(அட, எனக்கில்லீங்க..தங்ஸ்க்குத் தான்!). ஏற்கனவே அவர் ஒரு சர்க்கரை நோயாளி. இன்சுலின் ஊசி  போட்டே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர். கூடவே ஹார்ட் அட்டாக்கும் சேர்ந்து கொள்ள நிலைமை மிகவும் மோசம் ஆனது. 


முதல் அட்டாக் என்பதால் மாத்திரை மூலம் சரி செய்யலாம் என்று டாக்டர்கள் சொல்ல, வேளைக்கு பத்து மாத்திரை என தினமும் முப்ப்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிலை. மாத்திரைகளும் இன்சுலின் ஊசியும் சேர்ந்து, அவரை மேலும் பலவீனமானவராய் ஆக்கின. எங்கேயும் பயணம் செய்ய முடியாது. ஒருகுடம் தண்ணீர்கூட தூக்க முடியாது. முடிந்தவரை இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்றே அவர் முடிவு செய்தார்.


டாக்டர்களிடம் வேறு ஏதேனும் வழியில்லையா என்றுகேட்டபோது ’ஆபரேசன் செய்ய வேண்டும் என்றும் அடைப்பு இருக்கிறது, இதயம் சிறிது வீங்கினாற்போல் உள்ளது. சரிப்படுத்த முயற்சி செய்து பார்க்கலாம்’ என்றார்கள். அந்த மருத்துவமனை சி.எம் போன்ற பெரிய கைகள் செல்லும் பிரபல உயர்தர மருத்துமனை. ஸ்கேன், சோதனை என பல காரியங்களைச் செய்து என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்கவே லட்சங்களில் பில் வந்திருந்தது. இன்னும் ஆபரேசன் என்றால்..(தங்கமான!) மச்சினனைத் தான் எங்காவது அடகு வைக்க வேண்டும். எனவே மருந்து மாத்திரைகளுடன் கொஞ்ச நாள் வ்ண்டி ஓடட்டும் என்று விட்டுவிட்டோம். 


அப்போது தான் கோயம்புத்தூரில் இருந்து எங்கள் உறவினர் பெண்மணி ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவருக்கும் இதயத்தில் அடைப்பு இருந்ததாகவும் கோவை-டூ-பாலக்காடு செல்லும் வழியில் மதுக்கரையில் உள்ள ஒரு ஆயுர்வேத நிலையத்தில் மருந்து வாங்கிச் சாப்பிட்டதாகவும் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சொன்னார். மீண்டும் அலோபதி டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் இருந்த அடைப்பு நீங்கிவிட்டதாக ரிசல்ட் வந்திருக்கிறது. டாக்டராலும் நம்ப முடியவில்லையாம். 


அந்த மருந்தை 100 நாட்களுக்கு சாப்பிட வேண்டும் என்றும் இருபதாயிரம் ரூபாய் விலை  என்றும் சொன்னார். ஏகப்பட்ட போலிகள் நடமாடும் உலகில், இதை நம்ப் முடியவில்லை. ஆனால் அவர் மீண்டும் வற்புறுத்தி அங்கே சென்று வரச்சொன்னார். போகும்போது இதுவரை செய்த அனைத்து டெஸ்ட் ரிப்போர்ட்களையும் கொண்டு செல்லச் சொன்னார். ‘பல லட்சங்கள் செலவழித்தும் சரியாகாத விஷயம், இருபதாயிரம் ரூபாய் மருந்தில் மட்டும் எப்படிச் சரியாகும்?’ என்று நம் அறிவுஜீவி  மூளை யோசித்தாலும் அதையும் செய்து பார்ப்போமே என்று மதுக்கரைக்கு மச்சினர் சென்று அந்த மருந்தை வாங்கி வந்தார். (ஐயாயிரம், ஐயாயிரமாக நான்கு முறை வாங்கிக் கொண்டோம்.)


ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகள், மற்றொரு பாட்டிலில் டானிக். கேரளா-கொச்சியில் உள்ள ஐ.எஸ்.ஓ.தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் அவை.  50 நாட்கள் மருந்து சாப்பிட்டார் என் மாமியார். உடல்நிலை சீரானது போல் தோன்றியது. இதற்கிடையில் ‘அந்த’ பிரபல மருத்துவமனையில் எங்களுக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் வேலை செய்வதாக அறிந்தோம். எனவே அவர் மூலம் மீண்டும் ‘முழு உடல் பரிசோதனை’ செய்யலாம் என்று அங்கே பழைய ஸ்கேன் ரிப்போர்ட்களுடன் போனோம்.(ஆயிர்வேத சிகிச்சை எடுத்தது பற்றி நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.)


ஒரு மணி நேர சோதனை என்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.  நான்கு மணி நேரம் கழித்தே வெளியில் விட்டார்கள். பின்னர் அந்த உறவினர் டாக்டர் குழம்பிய நிலையில் கையில் பழைய-புதிய ரிப்போர்ட்களுடன் அமர்ந்திருந்தார். நாங்களும் என்ன ஆச்சு என்று பதறிப்போய்க் கேட்க ‘மூணு மாசம் முன்னாடி அடைப்பு-வீக்கம்-சர்க்கரை நோய்னு ஏகப்பட்ட பிராப்ளம் இருந்திருக்கு. இப்போ சர்க்கரை நோயும் இல்லை. 240ல் இருந்த சர்க்கரை அளவு 110க்கு வ்ந்துவிட்டது. இதயத்திலோ ரத்த ஓட்டத்திலோ எந்த்ப் பிரச்சினையும் இல்லை. இனிமே எந்த மருந்தும் எடுத்துக்கத் தேவியில்லை. எப்படி இது சரியாச்சுன்னு புரியாமத் தான் குழம்பிப் போய்த்தான் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்’ என்றார். 


ஆனாலும் அதிகளவு மாத்திரைகள் எடுத்துக்கொண்டதால், இதயத்தைச் சுற்றியிருக்கும் தோல் மட்டும் புண்ணாகியிருப்பதாகவும் அதை மட்டும் சரி செய்தால் போதும் என்றும் அந்த டாக்டர் சொன்னார். இப்போது அதற்கு மட்டுமே மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கிறோம்...


அந்த ஆயுர்வேத மருந்து ரத்தத்தை சுத்தம் மட்டுமே செய்வதாகவும், அதன்மூலமே மற்ற பிரச்சினைகள் தானாகவே தீர்வதாகவும் சொல்கிறார்கள். பைபாஸ் சர்ஜரி, ஆஞ்சியோபிளாஸ்ட்டி போன்ற எதுவும் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள்.


நான் மருத்துவம் கற்றவன் அல்ல. எங்கள் புரிதலில் ஏதேனும் தவறும் இருக்கலாம். இருப்பினும் நாங்கள் பெற்ற பயனை எல்லோரும் பெறும் வண்ண்ம், இங்கே நடந்ததைப் பதிவு செய்திருக்கிறேன். மாற்றுக்கருத்துகள் இருப்பின், பின்னூட்டத்தில் சொல்லவும். 


இதய நோய் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் விருப்பமிருந்தால், கீழ்க்காணும் முகவரியை அணுகி பயன்பெறுங்கள்:


ஃபேர் ஃபார்மா(Fair Pharma),
18/23 & 24, முருகன் காம்ப்ளக்ஸ்,
ஸ்ரீநாராயண குரு பாலிடெக்னிக் பஸ் ஸ்டாப் அருகில்,
மதுக்கரை - 641 105
கோயம்புத்தூர்.


ஃபோன்:
0422-2622383 / 2623240 / 6554382 / 2623506


மின்னஞ்சல் : fairpharmakovai@gmail.com
Website : www.fairpharmacochin.com


டிஸ்கி-2: அந்த மருந்து கம்பெனியுடன் எனக்கோ என் சொந்தக்களுக்கோ யாதொரு வியாபாரத்தொடர்பும் இல்லை.


டிஸ்கி-3: வாலிப வயோதிக அன்பர்களே, அந்த மருந்து நெஞ்சு வலிக்கு மட்டுமே!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

 1. இரவு வணக்கம்,செங்கோவி!அருமையான பயனுள்ள தகவல்/பகிர்வு!உலகில் வாழும் அத்தனை இதய நோயாளிகளுக்கும் இந்தச் செய்தி /தகவல் சென்றடையட்டும்.நன்றி பகிர்வுக்கு,நல்ல வேலை எனக்கு இன்னும் அப்படி ஒன்றும் நேரவில்லை!////டிஸ்கி:3. வாலிப வயோதிக அன்பர்களே,அந்த மருந்து நெஞ்சு வலிக்கு மட்டுமே!////புரிஞ்சிடுச்சு!அஞ்சலிக்கு இல்ல நெஞ்சு வலிக்குன்னு சொல்லுறீங்க,ஹி!ஹி!ஹி!!!!

  ReplyDelete
 2. பயனுள்ள தகவலை சொல்லியிருக்கீங்க...
  பயன்படுத்தி பார்க்கலாம்... லட்சங்கள் செய்யாததை ஆயிரம் செய்வது ஆச்சர்யம்தானே...

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 4. அருமையான தகவலு...அது என்ன கடைசில குசும்பா...யோவ் மாப்ள இந்த மாதிரி குசும்பு டிஸ்கிய தவிருங்க!

  ReplyDelete
 5. //எப்படி இது சரியாச்சுன்னு புரியாமத் தான் குழம்பிப் போய்த்தான் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்’ என்றார். //

  இங்க வந்த யாரையும் நாங்க சும்மா விட்டதே இல்லையே! எப்பிடித்த் தப்பிச்சாய்ங்க? அதான் யோசிக்கிறேன்! - மைன்ட் வாய்ஸ்! :-)

  ReplyDelete
 6. டிஸ்கி-1: இப்பதிவு என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்படுகிறது. இதனால் ஏற்படும் எந்தவொரு பின்விளைவிற்கும் செங்கோவி பொறுப்பல்ல!/////

  டிஸ்கியில எஸ்கேப்பு....

  ReplyDelete
 7. ஏகப்பட்ட போலிகள் நடமாடும் உலகில், இதை நம்ப் முடியவில்லை. ////

  உலகம் இதுதான்யா......

  ReplyDelete
 8. எப்படி இது சரியாச்சுன்னு புரியாமத் தான் குழம்பிப் போய்த்தான் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்’ என்றார். //////

  ஆயுர்வேதம் இம்புட்டு மகிமையா.....

  எப்படியோ உங்க மாமியார் உடல்நிலை சரியாகிவிட்டதே.....

  பதிவாக போட்டு பலருக்கும் உதவி செஞ்சுடிங்க.........

  நல்ல செயல் மாம்ஸ்..........

  ReplyDelete
 9. டிஸ்கி-2: அந்த மருந்து கம்பெனியுடன் எனக்கோ என் சொந்தக்களுக்கோ யாதொரு வியாபாரத்தொடர்பும் இல்லை.////

  ஆமா, ஒன்லி பதிவுல மட்டுமே தொடர்பு... ஹி...ஹி.....

  ReplyDelete
 10. டிஸ்கி-3: வாலிப வயோதிக அன்பர்களே, அந்த மருந்து நெஞ்சு வலிக்கு மட்டுமே!////

  ஆமாம்பா,,,,, நெஞ்சு வலிக்கு மட்டுமே.......

  ReplyDelete
 11. மிக அருமையான பதிவு... நிறையப்பேருக்கு பயன்படும்.. நானும் என்னால் முடிந்த அளவிற்கு ஷேர் செய்கிறேன்.

  ReplyDelete
 12. நன்றி நெஞ்சுவலிக்கு மட்டும் என்று சொல்கிறீர்கள், சர்க்கரை வியாதி குணமானதாகவும் சொல்கிறீர்கள். சர்க்கரை வியாதி மட்டும் உள்ளவர்கள் போகலாமா?.

  ReplyDelete
 13. thanks for this information..yarukavathu sollalam illaiya...useful post..(first time in your life) he he he he...

  ReplyDelete
 14. http://www.youtube.com/watch?v=qApAAkNVzBE
  சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

  ReplyDelete
 15. செங்கோவி நான் ஊருக்கு போகும் போதெல்லாம் அந்த பேர் பார்மா ஒட்டி ஒரு பெரிய ரெண்டாரெண்ட் இருக்கும் அங்க சாப்பிட்டுதான் போவேன், ஒரு தடவை வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன், இப்ப எனக்கு இது ஒரு சந்தோசமான வித்தியாசமான நியூசா இருக்கு :-)

  ReplyDelete
 16. @Yoga.S. அஞ்சு எலியா?.....................................................................................

  ReplyDelete
 17. //chandru said...
  நன்றி நெஞ்சுவலிக்கு மட்டும் என்று சொல்கிறீர்கள், சர்க்கரை வியாதி குணமானதாகவும் சொல்கிறீர்கள். சர்க்கரை வியாதி மட்டும் உள்ளவர்கள் போகலாமா?//

  கடைசி டிஸ்கி சும்மா கிண்டலுக்காகப் போட்டது சார்..பதிவில் சொல்லியபடி நாங்கள் வாங்கியது நெஞ்சு வலிக்காக..கூடவே சர்க்கரை நோயையையும் அது குணப்படுத்தியது..அவர்கள் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள்.

  ReplyDelete
 18. //அமுதா கிருஷ்ணா said...
  useful post..(first time in your life) he he he he...//

  நீங்களும் ரொம்ப நாளா ’என்னிக்காவது இவன் உருப்படியா எழுதுவாங்’கிற நம்பிக்கையோட தொடர்ந்து படிக்கிறீங்க இல்லியாக்கா? அதுக்காகவாவது அப்பப்போ இப்படி எழுதுவோம்..

  ReplyDelete
 19. //திண்டுக்கல் தனபாலன் said...
  "தவறான பதிவு சார் ! உண்மை இது இல்லை ! SORRY !" "நன்றாக தெரிந்த பின் பதிவு செய்யவும் !"//

  உங்களுக்கு இந்த விஷயத்தில் ஏதேனும் கசப்பான அனுபவம் இருப்பின், மொட்டையாகச் சொல்வதை விட சற்று விளக்கமாகச் சொல்லவும். அது பிறருக்கும் பயன்படும் இல்லியா?

  ReplyDelete
 20. இதில் ஆச்சர்யப்படவோ,இல்லை பயப்படவோ எதுவும் இல்லை.நண்பர் திண்டுக்கல் தனபாலன் மாதிரி. ஆயுர்வேதம் குணப்படுத்தும் ஆனால் அந்த மருந்துகள் நோயின் பின்னே இருக்கிற காரணத்தைதான் குணப்படுத்தும்.உடனே சரி செய்யவே செய்யாது. நாள் ஆகும் என்பதுதான் அதை மக்கள் அணுகுவதில்லை என்பதற்கான காரணம்.

  ஐம்பது வருடத்துக்கு முன்பு வரை ஆயுர்வேதமும் சித்தாவும்தான் இங்கே மருத்துவம் என்பது. இப்போது alternative medicine ஆகிப் போனது.

  அதே நேரம் பத்தியம் மிக முக்கியம்.ஏனெனில் ஆயுர்வேத மருந்துகள் அப்படிப்பட்டவை. தாராளமாக முயற்சி செய்யலாம்.

  உடலை கூறு போட்டு விடுவதை விட இந்தமாதிரி முயற்சி செய்வது மேல் இல்லையா?

  ReplyDelete
 21. யோவ் எங்கையா செகப்பு சட்ட பொட்ட கொழந்தைய காணோம்?
  அப்பால உன்னோட பதிவெல்லாம் நான் ஒண்ணு விடாம படிக்கல(ஹீ ஹீ) ஆனா எனக்கு மிகவும் புடிச்சது ரெண்டு(அந்த ரெண்டு இல்லை நீ கரபனையை ஆப் பண்ணு)
  ஒண்ணு நீ திரிசா கமலா காமேஸ் போல இருக்காருன்னு சொன்னது(எம்புட்டு புல் அடிச்சி இந்த கண்டிபிடிப்பை நிகழ்த்தினாய்?)
  ரெண்டு நானா யோசிச்சேன்...
  இந்த டேக் எனக்கு மிகவும் புடிக்குது...முடிஞ்சா எதுனா படிக்க ட்ரை பண்ணுறேன்..

  ReplyDelete
 22. ஆயுர்வேத மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத மருத்துவமுறை ஆகியவற்றை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/black-pimples-disappear-in-the-foot-ayurvedic-medicine_7216.html

  ReplyDelete


 23. சர்க்கரை நோயாளிகளுக்கு
  ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.