Monday, November 26, 2012

அடிப்படைக் குழாயியல்(Basics of Piping)_2

இந்தப் பாடத்தில் ஒரு குழாயியல் அமைப்பை உருவாக்கத் தேவைப்படும் அடிப்படைப் பாகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

நாம் ஏற்கனவே பார்த்தபடி, குழாயியல் அமைப்பு என்பதே ஒரு திரவத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் அமைப்பு ஆகும். எனவே ஒரு குழாயியல் அமைப்பில் தொடக்கமும், முடிவும் திரவத்தை தேக்கி வைக்கும் தொட்டியாகவோ அல்லது கொள்கலனாகவோ தான் பெரும்பாலும் இருக்கும். 

உதாரணமாக கீழே உள்ள படத்தினைப் பாருங்கள் :
 
இங்கே இரண்டு தொட்டிகளும், ஒரு கொள்கலனும் இருக்கின்றன. நமது உதாரண குழாயியல் அமைப்பின் நோக்கம், தண்ணீரை முதல் தொட்டியில் இருந்து கொள்கலனுக்கும், கொள்கலனில் இருந்து இரண்டாவது தொட்டிக்கும் கொண்டு செல்வது என்று வைத்துக்கொள்வோம். எவ்வாறு அதைச் செயல்படுத்துவது?

குழாயியலில் (நாம் அறிந்த) முக்கிய பாகம் குழாய் ஆகும். எனவே குழாய்களைக் கொண்டு கீழ்க்கண்டவாறு நாம் தண்ணீரைக் கொண்டு செல்ல முயற்சிக்கலாம்:
 

மேலே உள்ள படத்தில் குழாய்கள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்படாமல், தனித்தனியே தொங்குவதை கவனித்திருப்பீர்கள். 2”க்கு உட்பட்ட குழாய்கள் என்றால், நீளமான குழாயினை எடுத்து வளைத்து, கொண்டு செல்லலாம். ஆனால் பெரிய குழாய்களை எப்படி இணைப்பது?

அதற்கு உதவுபவையே இணைப்பான்கள் (Fittings) ஆகும். இணைப்பான்கள் என்பவை Elbow, Tee, Reducer  என பலவிதங்களில் கிடைக்கின்றன. (இவற்றைப் பற்றி விரிவாக பின்னால் பார்ப்போம்.) எனவே இணைப்பான்களை உபயோகித்து, கீழ்க்கண்டவாறு குழாய்களை இணைக்கலாம்:
 

இப்போது குழாய்களுக்கு இடையே இடைவெளி இல்லாதவாறு இணைப்பான்களால் நிரப்பிவிட்டோம். ஆனால் தொட்டிகள் மற்றும் கொள்கலனுடன் குழாய் இணையாமல் தனித்து நிற்பதைப் பாருங்கள். அந்த இடைவெளியை நிரப்ப, பயன்படுவதே குழாய்ப் பட்டைகள் (Flanges).  

மேலும், குழாயின் நீளம் (பொதுவாக) 6 மீட்டரைத் தாண்டும்போதும், குழாய்ப்பட்டைகளால்
இணைப்பார்கள். குழாய் பொதுவாக 6 மீட்டர் நீள துண்டுகளாக கிடைப்பதும், 6 மீட்டருக்கு அதிகமான நீளமுள்ள குழாய்களை கையாள்வது சிரமம் என்பதாலும் இத்தகைய இடைவெளி குழாய்ப்பட்டைகள் (Breaking Flanges) பயன்படுகின்றன. இப்போது படத்தைப் பாருங்கள் :

 
குழாய்ப் பட்டைகள் உலோகங்களால் ஆனவை என்பதால், இரண்டு குழாய்ப்பட்டைகளை இணைக்கும்போது, (பொதுவாக) ரப்பர் மூலப்பொருட்களால் ஆன இணைப்பிறுக்கிகள் இரு குழாய்ப்பட்டைகளுக்கு இடையே இணைக்கப்படுகின்றன. இணைப்பிறுக்கிகள் 3mm தடிமன் மட்டுமே கொண்டவை என்பதால், மேலே உள்ள படத்திலோ அல்லது வரைபடங்களிலோ தெரியாது.

ஒரு குழாய் வழியே எப்போதும் திரவம் சென்றுகொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது இல்லியா? எனவே தேவைப்படும்போது திரவ ஓட்டத்தை நிறுத்தவோ, ஆரம்பிக்கவோ பயன்படுவதே வால்வுகள் ஆகும். (நம் வீட்டு வாஷ் பேசினில் நீர் திறக்க/பூட்ட உதவும் அதே வால்வுகள் தான்). மேலே உள்ள படத்தில் காட்டியபடி  வால்வுகள் உபயோகிக்கப்படுகின்றன. அவை Gate Valve, Globe Valve, Ball Valve, Butterfly Valve, Check Valve என பலவிதங்களில் கிடைக்கின்றன.

மேலே உள்ள படத்தினை மீண்டும் பாருங்கள். முதல் தொட்டியில் இருந்து தண்ணீர் Reducer, Check Valve, Elbow, Gate Valve-களை உள்ளடக்கிய குழாய் வழியாக கொள்கலனுக்கு வந்து சேரும். முதல் தொட்டி உயரமான இடத்தில் இருப்பதால், இதில் பிரச்சினை ஏதுமில்லை. புவியீர்ப்பு விசை மூலமாகவே தண்ணீர் கொள்கலனை வந்தடையும். ஆனால், இப்போது தண்ணீரானது கொள்கலனில் இருந்து இரண்டாவது தொட்டிக்குச் செல்ல வேண்டும். இதை எப்படிச் செய்வது? அதற்கு உதவுவதே பம்புகள் ஆகும்.

கொள்கலனுக்கும் இரண்டாவது தொட்டிக்கும் இடையே கீழேயுள்ள படத்தில் காட்டியபடி பம்ப்பானது இணைக்கப்படுகிறது:
 

இவற்றைத் தவிர திரவ அழுத்தத்தை அளக்க அழுத்தமானிகளும், வெப்பநிலையை அளக்க வெப்பமானிகளும் பயன்படுகின்றன. மொத்தத்தில் ஒரு குழாயியல் அமைப்பின் அடிப்படைப் பாகங்களாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்:

1. குழாய் (Pipe)
2. இணைப்பான்கள் (Fittings)
3. குழாய்ப் பட்டை (Flanges)
4. (Gaskets)
4. வால்வுகள் (Valves)
5. உபகரணங்கள் (Equipments)
6. தொட்டிகள் / கொள்கலங்கள் (Tanks / Vessels)
7. அளவுமானிகள் (Instruments)

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

 1. இரவு வணக்கம்?செங்கோவி!நலமா?நல்ல விடயம்.இடையில் விட்டதைத் தொடர்கிறீர்கள்.இளைய சமூகத்துக்கு உதவும் மேலான பணி,வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ஒவ்வொன்றையும் படங்களுடன் விளக்கம்... பல நண்பர்களுக்கு உதவும்... நன்றி...

  ReplyDelete
 3. சுவரசியமாக உள்ளது தொடருங்கள்.

  ReplyDelete
 4. புரியாமல் படிக்கும் மாணவர்களுக்கு இது மாதிரி இருந்தா நிச்சயம் புரியும்.நன்றி.தொடருங்கள்.

  ReplyDelete
 5. அன்பு செங்கோவி, உங்களின் மனவருத்தம் சிவகுமாரின் போஸ்டில் கண்டேன் . தயவு செய்து கமெண்ட்ஸ் க்காஹ உங்களின் இந்த நல்ல பணியை நிறுத்தி விடாதிர்கள் . தொடர்ந்து இப்பணியை கொண்டு செல்லவும்.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. @siva

  பதிவுலகம் என்பது அடிப்படையில் பொழுதுபோக்குக்கானது. எனவே நாம் இந்த மாதிரி டெக்னிகல் தொடருக்கு கூட்டம் எதிர்பார்ப்பது நியாயமில்லை தான்..உங்கள் ஆறுதலுக்கு நன்றி!!!

  ReplyDelete
 8. @கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மாதிரியே கமெண்ட் போடுறீங்க?

  ReplyDelete
 9. செங்கோவி said...@கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மாதிரியே கமெண்ட் போடுறீங்க?////நல்ல வேள நான் தப்பிச்சேன்!

  ReplyDelete
 10. //Yoga.S. said...
  செங்கோவி said...@கோகுல் அது எப்படிய்யா, புரிஞ்ச மாதிரியே கமெண்ட் போடுறீங்க?////நல்ல வேள நான் தப்பிச்சேன்!

  //

  ஐயா, உங்களைச் சொல்வேனா?....நீங்களும் ஒரு குழாய் ஸ்பெஷலிஸ்ட் தானே?..ஹி..ஹி!

  ReplyDelete
 11. அடடே ரொம்ப நாளைக்கப்புறம் யோகா ஐயாவின் கமென்ட்ஸ்.. வெல்கம் பேக் ஐயா...

  ReplyDelete
 12. 1. குழாய் (Pipe)
  2. இணைப்பான்கள் (Fittings)
  3. குழாய்ப் பட்டை (Flanges)
  4. (Gaskets)
  4. வால்வுகள் (Valves)
  5. உபகரணங்கள் (Equipments)
  6. தொட்டிகள் / கொள்கலங்கள் (Tanks / Vessels)
  7. அளவுமானிகள் (Instruments)/////

  மாம்ஸ்,
  (Gaskets)தமிழ் விளக்கம்:
  இணைப்பிறுக்கி

  by:
  tamilvaasi prakash

  ReplyDelete
 13. Cad 3D model படத்துடன், எளிய தமிழில், கடினமாக இல்லாமல், சப்ஜெட் தெரியாதவர்களுக்கும் புரியும் வகையில் அடிப்படை குழாயியல் எழுதுறிங்க. அருமை

  ReplyDelete
 14. techinway = tamilvaasi prakash

  hi..hi...

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.