Wednesday, April 6, 2011

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு..

சோனியாவும் காங்கிரஸாரும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் வாக்குக்கேட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. எமது ரத்த சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்தக் கத்தினோம், கதறினோம். அதைக் காதில்கூட வாங்கவில்லை இந்த காங்கிரஸார்.

எமது மீனவச் சொந்தங்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், அதைத் தடுத்து நிறுத்தவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ ஒரு காங்கிரஸ்காரனும் முன்வரவில்லை. எம்மையும் இந்திய மக்களாகக் கருதக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை என்பதே இதுவரையிலான காங்கிரஸின் நடவடிக்கை மூலம் தெரிய வருவது.

ஆனால் இப்போது, சீவிச் சிங்காரித்து ஓட்டுக் கேட்க கிளம்பி வருகிறார்கள். எங்களிடம் ஓட்டுக் கேட்பதற்கான யோக்கியதையோ உரிமையோ காங்கிரசுக்கு உள்ளதா? கடமையைச் செய்தோர் மட்டுமே தனக்கான உரிமையைக் கோர முடியும். போரைத் தடுத்து நிறுத்தவோ, மீனவப்படுகொலையைத் தடுத்து நிறுத்தவோ ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ்க்கு நம்மிடம் ஓட்டுக்கேட்டு வரும் தைரியம் எப்படி வந்தது? உண்மையில் நம்மைப் பற்றி இவர்கள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

கலைஞர் தன் குடும்பம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜெயிலுக்குப் போகாமல் தடுக்க, காங்கிரஸின் காலில் வீழ்ந்து கிடக்கலாம். அதற்காக மொத்தத் தமிழகமுமே அப்படிச் சூடு சுரணையற்றுக் கிடப்பதாக காங்கிரஸார் நினைத்துக் கொண்டுள்ளனரா?
இதுவரை ராஜதந்திரியாகப் புகழப்பட்ட கலைஞர், காங்கிரஸால் அவமானப்படுத்தப்பட்டு, எதுவும் செய்ய இயலாமல் கூனிக்குறுகி நிற்கின்றார். இதனைப் பார்த்த பின்னும் திமுக தொண்டன், காங்கிரசுக்கு வாக்களிக்கலாமா? மானம் ரோஷம் உள்ள திமுககாரன் எவனாவது கைச் சின்னத்துக்கு ஓட்டுப் போடலாமா? ராகுல்காந்தி என்ன மனுசன்..அவரிடம் கேவலப்பட்டு நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலை கலைஞருக்கு! திமுககாரனிடம் முன்பிருந்த இன உணர்வு மரத்துப் போய்விட்டதா?

திமுககாரர்களை வெளிப்படையாகவே வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் வேண்டுமானால் சூழ்நிலைக் கைதியாக இருக்கலாம். உங்களுக்கு என்ன வந்தது? இந்தத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தாவிட்டால், இனி திமுக காங்கிரஸின் முழு அடிமையாகவே ஆகிவிடும். உடன் இருந்தே கொல்லும் வியாதியாக இருக்கும் காங்கிரசை ஒழிக்க எம்முடன் கை கொடுங்கள்.

தமிழின உணர்வுள்ள திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும், ராமதாஸின் பாமகவினரும் கொஞ்சமாவது இன்னும் மனசாட்சி இருந்தால், காங்கிரசுக்கு ஓட்டு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸை விட்டால் தற்போது வேறு வழியில்லை என்ற சூழ்நிலை இருந்திருக்கலாம். ஆனால் சட்ட மன்றத்தேர்தலில் காங்கிரஸ் ஒழிவதால் என்ன கேடு வந்துவிடும்?


இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.

காலமெல்லாம் நம் முதுகில் சவாரி செய்தே பிழைத்து வரும் காங்கிரஸ், தன் தகுதிக்கு மீறிய ஆட்டத்தை கடந்த ஐந்தாண்டுகளில் போட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழர்கள், இனியும் காங்கிரஸைச் சுமக்க வேண்டுமா?

காங்கிரஸை ஒழிக்க நீங்கள் உங்களுக்குப் பிடிக்காத கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டியதில்லை. உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல சுயேச்சை வேட்பாளர்களுக்கு உங்கள் ஓட்டை அளியுங்கள். அது வீணாகப் போனாலும் பரவாயில்லை, ஆனால் காங்கிரசுக்கு மட்டும் தயவு செய்து ஓட்டுப் போடாதீர்கள்.

ஈழப்போரை நிறுத்தச் சொல்லி தெருவுக்கு வந்து போராடினோம். சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.

ஒரு இனத்தையே முள்வேலிக்குள் அடைத்தவர்களுக்கு, மனிதாபிமானமுள்ள நீங்கள் தரப்போகும் பதில் என்ன? உங்கள் கட்சி அபிமானத்தை இந்தத் தேர்தலில் ஒதுக்கி வைத்துவிட்டு, காங்கிரசைத் தோற்கடிக்க கை கொடுங்கள்.

உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள். அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

52 comments:

  1. வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வடை!

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=5JVcD41BxpU&feature=related

    ReplyDelete
  3. வடை போச்சே!!! படிச்சுட்டு வரேன் ஜி...

    ReplyDelete
  4. நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை ஜி...காங்கிரஸ் டெபாசிட் காலியாகப் போவது உறுதி...

    ReplyDelete
  5. @Hopeவருகைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  6. @டக்கால்டி இவங்களைக் கும்மி, உங்க ஸ்டைல்ல ஒரு பதிவு போடுங்க டகால்ட்டி!

    ReplyDelete
  7. @செங்கோவி ஒரு மணிக்கு தான் வொர்க் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன்... இப்ப பதிவு போட்டாத்தான் உண்டு.... காலையில் ஆற்காட்டார் புண்ணியத்தில் மூணு மணி நேரம் பவர் கட். மதியம் வேலைக்கு போகணும்... என்ன செய்ய?

    ReplyDelete
  8. @தமிழ்வாசி - Prakashஓ.கே,ஓ.கே...உங்க கடமை உணர்ச்சி வாழ்க!..குட் நைட்!

    ReplyDelete
  9. இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராசபக்சே
    அதற்க்கு தேவையான பொருள் உதவி, ஆயுத உதவி செய்தது ஈன இந்திய அரசு, இதே இலங்கை அரசு இந்திகாரனுங்கள கொன்று குவித்திருந்தால் சும்மா இருந்திருக்குமா இந்திய அரசு.
    மண் மன்மோகன், காட்டேரி சோனியா இவர்களுக்கு கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கு ஆனா தமிழக மீனவர்கள் படுகொலைக்கு பதில் அடி கொடுக்கவோ இல்ல கண்டனம் தெரிவிக்கவோ நேரம் இல்லை, மட தமிழர்கள் இருக்கும் வரை இது தொடரும், தமிழன் இந்தியாவை ஒரு தலையாக காதலிக்கிறான் ஆனால் இந்தியாவோ தமிழனையும் தமிழ் மொழியையும் முற்றிலுமாக புறக்கணிக்கிறது இதை என்று உணர்கிறானோ அன்றுதான் தமிழனின் வாழ்வு வளமாக அமையும்.
    தமிழன் இந்தியாவை தன்நாடு என்கிறான் ஆனால் இந்தியா என்னும் நாட்டின் மொழியோ ஆங்கிலம், இந்தியாக இருக்கிறது இதில் முரண்பாடு உள்ளது ஒன்று தமிழன் பிழப்பு தேடி இங்கு வந்தானா?, இல்லை தமிழன் இந்திகாரனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்,பெரும்பாலும் தமிழன் பாடும் விடுதலை பாடல்கள் அனைத்தும் வடமொழியாகவே உள்ளது. என்று தமிழ்நாடு முழுமையான தனிநாடாக மாறுமோ அன்றுதான் உண்மையான விடுதலை இப்ப நாம் கொண்டாடிகொண்டிருப்பது ஊமை விடுதலை
    இலங்கை தமிழ் மக்களின் எதிரி
    இந்தியா தமிழ் மக்களின் துரோகி

    ReplyDelete
  10. மாப்ள துரோகிய சேர்ந்தவங்க கிட்ட போயி எதிரிய தோக்கடிக்க கேக்குரீரே என்னையா ஞாயம்..........கூட இருந்தே முதுகுல குத்துற துரோகிய தான்யா முதல்ல களை எடுக்கணும்!

    ReplyDelete
  11. உண்மைதான் எந்த தைரியத்தில் இவர்கள் தங்கள் ரத்தக்கறைகளை மறைத்து கொண்டு ஓட்டுக்கேட்டு வருகிறார்கள்??

    ReplyDelete
  12. //சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.//

    ReplyDelete
  13. கூட்டத்தில் திருமாளவன் சோனியாவை வரவேற்றதை பார்த்தீர்களா? இதற்க்கு பிறகும் அவரு மானமுள்ள தமிழன்னு நம்புறிங்களா?

    ReplyDelete
  14. நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை ஜி...காங்கிரஸ் டெபாசிட் காலியாகப் போவது உறுதி...

    ReplyDelete
  15. உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள்.---

    தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  16. ஒன்றுபட்டு இவர்களை ஒழிப்போம்..

    ReplyDelete
  17. மானம் இருந்தா அங்கே போவாங்களா?

    ReplyDelete
  18. நண்பா மன்னிக்கவும்... தங்களின் அனுமதி இல்லாமல் தங்கள் பதிவின் சில வரிகளை என்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.

    http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_06.html

    ReplyDelete
  19. @புகல்புகல், தங்களது ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  20. @விக்கி உலகம் //துரோகிய சேர்ந்தவங்க கிட்ட போயி எதிரிய தோக்கடிக்க கேக்குரீரே// கட்சித் தொண்டர்களும் மனிதர்களே என்று நான் இன்னும் நம்புகிறேன் விக்கி.

    ReplyDelete
  21. @பாரத்... பாரதி... இவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் பாரதி.

    ReplyDelete
  22. @வைகை//அவரு மானமுள்ள தமிழன்னு நம்புறிங்களா?// அவரை நம்பவில்லை..அவர் கட்சியில் உள்ள தொண்டர்களை நம்புகிறேன்.

    ReplyDelete
  23. @wellgatamil //காங்கிரஸ் டெபாசிட் காலியாகப் போவது உறுதி...// தங்கள் வாக்கு பலிக்கட்டும்.

    ReplyDelete
  24. @சி.பி.செந்தில்குமார்//மானம் இருந்தா அங்கே போவாங்களா?// தலைவர்களுக்கு இல்லை, தொண்டர்களுக்குமா?

    ReplyDelete
  25. @!* வேடந்தாங்கல் - கருன் *! //நண்பா மன்னிக்கவும்... தங்களின் அனுமதி இல்லாமல் தங்கள் பதிவின் சில வரிகளை என்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.//பரவாயில்லை வாத்யாரே..என் கருத்து பலரையும் சென்றடைந்தால் சரி..நண்பர்களிடையே மன்னிப்புக் கேட்பது தவறு..எனவே மன்னிப்புக் கேட்டதுக்காக மன்னிப்புக் கேளுங்கள்!

    ReplyDelete
  26. கட்சி அபிமானமா? காங்கிரஸ் கட்சி மேல எவனுக்காவது அபிமானம் இருந்ததுன்னு அவன முதல்ல செருப்புல போடனும், பார்ப்போம் என்ன நடக்குதுன்னு, கொஞ்சமாவது இன உணர்வு இருந்தா மக்கள் தோற்கடிக்கட்டும், இல்லை வழக்கம் போலவே ஜெயிக்க வச்சாக்கன்னா எங்கேடோ கெட்டு போகடும், தேவையான நேரத்தில் அவசியமான பதிவு நண்பா

    ReplyDelete
  27. //உண்மையில் நம்மைப் பற்றி இவர்கள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?//

    அவங்க என்ன நினைக்கறாங்கன்னா..

    "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா.."

    ReplyDelete
  28. @இரவு வானம் //இன உணர்வு இருந்தா மக்கள் தோற்கடிக்கட்டும், இல்லை வழக்கம் போலவே ஜெயிக்க வச்சாக்கன்னா எங்கேடோ கெட்டு போகடும், // கரெக்டாச் சொன்னீங்க நைட்!

    ReplyDelete
  29. @! சிவகுமார் ! //"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா.." // இதை மறந்தால் நாம் மனுசங்களே இல்லை!

    ReplyDelete
  30. அண்ணன் செம சூடா இருக்கீங்க...! என்னமோ பார்க்கலாம்!

    ReplyDelete
  31. //காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு..//

    என்னாது மானமா...? அப்பிடினா என்னாது..? அது எந்த கடையில் கிடைக்கும் கிலோ என்ன விலை..?

    ReplyDelete
  32. @ஜீ... என்ன செய்யுறது ஜீ, இன்னும் மனசாட்சின்னு ஒன்னு இருக்கே நம்மகிட்ட!

    ReplyDelete
  33. @MANO நாஞ்சில் மனோ அண்ணே, கட்சித்தொண்டர்கள் எல்லாருமே அப்படியா..ஒருத்தராவது யோசிக்க மாட்டாங்களா..

    ReplyDelete
  34. உருப்படியான உதவக்கூடிய விசயத்தை எழுதிவிட்டு அதற்கு வரும் அதகள பின்னோட்டங்களையும் அதற்கு உங்கள் பதிலையும் பார்க்கும் போது சற்று வருத்தமாக உள்ளது. மேலே படித்து விட்டு கீழே வருபவர்கள் வேறு விதமாக நினைக்கக்கூடும் நண்பா.

    ReplyDelete
  35. ஒங்கி கூவினாலும் யார்காதிலும் விழுவதில்லை இறப்பின் வலியும் உறவுகளின் மரனங்களும் இலவசங்கள் அமுக்கிவிடும் தமிழனின் சுரனையை.

    ReplyDelete
  36. தமிழகத்தைப் பொறுத்தவரை சமூகம் சார்ந்த,அரசியல் சார்ந்த,பொருளாதாரம் சார்ந்த ஆதரவையே ஈழத்தமிழர்களுக்கு தர இயலும்.

    இரு கழகங்களின் போட்டியை விட காங்கிரஸின் நிலையாமை தமிழகத்தில் மிக அவசியம்.

    ஜோதிஜி சொன்னது போல் இதுபோன்று கருத்து தேடல் பதிவுகளில் கும்மிகளை தவிர்ப்பது இடுகைக்கு வலு சேர்க்கும்.நன்றி.

    ReplyDelete
  37. அருமையான கேள்விகள் காங்கிரஸை புறக்கணிப்போம்

    ReplyDelete
  38. 3 ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  39. 51-காங்கிரஸ் ஒழிக!

    ReplyDelete
  40. @ஜோதிஜி//உருப்படியான உதவக்கூடிய விசயத்தை எழுதிவிட்டு அதற்கு வரும் அதகள பின்னோட்டங்களையும் அதற்கு உங்கள் பதிலையும் பார்க்கும் போது சற்று வருத்தமாக உள்ளது. // வழக்கம்போல் பேசிக்கொண்டோம்.தவறு தான் நண்பரே. மன்னிக்கவும். நீக்கி விடுகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

    ReplyDelete
  41. @Nesan//ஒங்கி கூவினாலும் யார்காதிலும் விழுவதில்லை.// கூவுவது நம் கடமை...பார்ப்போம்!

    ReplyDelete
  42. @ராஜ நடராஜன்//ஜோதிஜி சொன்னது போல் இதுபோன்று கருத்து தேடல் பதிவுகளில் கும்மிகளை தவிர்ப்பது இடுகைக்கு வலு சேர்க்கும்.// நீக்கிவிட்டேன் நண்பரே..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  43. @ஆர்.கே.சதீஷ்குமார்//அருமையான கேள்விகள் காங்கிரஸை புறக்கணிப்போம்// நன்றி சதீஷ்!

    ReplyDelete
  44. //அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!//

    வ‌ழிமொழிகிறேன் (20000 ரொம்ப‌ க‌ம்மி செங்கோவி),..

    த‌மிழ் ம‌ண‌த்தில் இருப்ப‌து போல் அர‌சிய‌லிலும் மைன‌ஸ் ஓட்டு இருந்தால், காங்கிர‌சுக்கு விழும் முத‌ல் மைன‌ஸ் ஓட்டு எங்க‌கிட்டு இருந்த‌துதான் விழும்.

    ReplyDelete
  45. செங்கோவி அந்த‌ defeat congress ப‌ட‌ம் என‌க்கு பிடிச்சிருக்கு,.. நானும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கவா??

    ReplyDelete
  46. @jothi//அந்த‌ defeat congress ப‌ட‌ம் என‌க்கு பிடிச்சிருக்கு,.. நானும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கவா??// நானே சதீஷ் பதிவுல இருந்து சுட்டுத் தான் போட்டிருக்கேன்..இது மாதிரி நிறையப்படங்களை யாரோ வெளியிட்டிருக்காங்க..இது அசத்தல்!.எடுத்துக்கோங்க!

    ReplyDelete
  47. ரத்தக்கறை கூட காயாத கைகளுடன் வந்து ஓட்டுப்பிச்சை கேட்கும் இந்தக் காங்கிரஸ் கட்சிக்குச் சரியான பதிலடி கொடுக்கப் படும்..

    இல்லையென்றால், தமிழ் நாட்டில் தமிழர்களின் இனமான உணர்வு அடியோடு அழிந்து விட்டது என்று அர்த்தம்.. அதோடு நமது முதுகெலும்பும் ஒடிந்து விட்டது என்று பொருள்.. ஓட்டுப்பெட்டியில் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து, வெளியில் வந்து மீசை முருக்கிச் சொல்லிக் கொள்ளுங்கள் "நான் வீரத்தமிழன்" என்று..

    ReplyDelete
  48. //டக்கால்டி said...

    நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்லை ஜி...காங்கிரஸ் டெபாசிட் காலியாகப் போவது உறுதி...//
    அது தேர்தல் நேர்மையாக நடந்தால், மக்கள் மனசாட்சியோடு வாக்களித்தால்.. இதெல்லாம் நடக்கிற காரியமா...

    ReplyDelete
  49. @சாமக்கோடங்கி//ஓட்டுப்பெட்டியில் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து, வெளியில் வந்து மீசை முருக்கிச் சொல்லிக் கொள்ளுங்கள் "நான் வீரத்தமிழன்" என்று..// அப்படி அடித்துச் சொல்லுங்கள் பாஸ்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.