Monday, February 14, 2011

ராகுல் காந்தியும் காங்கிரஸும் (தேர்தல் ஸ்பெஷல்)



மாபெரும் இன அழிப்பை தமிழர்களுக்குச் செய்துவிட்ட பின்னரும் காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்தில் இன்னும் கிளை பரப்பி நிற்பதும், அதைப் பற்றி நானும் தேர்தல் ஸ்பெஷல் தொடரில் எழுதுவதும் வெட்கப் பட வேண்டிய விஷயம் தான். ஆனாலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வந்த அன்றே நான் வெட்கத்தைத் தொலைத்து விட்டதால்.......
‘காங்கிரஸைக் கலைத்து விடுங்கள்’ என்ற காந்தியின் வேண்டுகோளை நேரு நிராகரித்து விட்டாலும், தொடர்ந்து வந்த இந்திரா, ராஜீவ், சோனியா போன்றோர் தங்களால் முடிந்த அளவு காங்கிரஸை அழிக்க முயற்சி செய்துகொண்டுதான் உள்ளனர். அந்த வரிசையில் புது வரவு ராகுல் காந்தி.

உண்மையில் பிரியங்காவைத் தான் காங்கிரஸார் ராஜீவின் வாரிசாக எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென இப்படி ஒரு காமெடி பீஸ் வந்திறங்கும் என அவர்களே எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கே அப்படியென்றால், நமக்கு?....

காங்கிரஸால் திடீரென களமிறக்கப்பட்ட ராகுல், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், தான் 1995ல் ஹேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிடியில் ‘Developmental Economics'-ல் M.Phil முடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் படித்தது ‘Development Studies'. மேலும் அவர் படித்தது 1995ல் அல்ல, 2005ல். அதை விடவும் மோசம் அவர் இன்னும் M.Phil முடிக்கவில்லை, ஒரு பாடம் புட்டுக்கிச்சு. அதை விடவும் ரொம்ப கேவலமான விஷயம், வருங்கால பாரதப் பிரதமர் ஃபெயிலானது 'National Economic Planing & Policy'.

மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் ஒரு பேப்பர் கூட முடிக்காத ராஜீவ், மெத்தப் படித்த மேதாவியாக தன்னைக் காட்டிக்கொண்டதை விட இது பரவாயில்லை.  Cambridge யுனிவெர்சிடியில் ஒரு ஓரத்தில் நடந்த Lennox Cook School-ல் ஸ்போக்கன் இங்கிலீஸ் கோர்ஸ் படித்த சோனியா, தன்னை Cambridge யுனிவெர்சிட்டி ஸ்டூடண்டாக 2004 தேர்தல் வேட்புமனுவில் சொல்லிக்கொண்டார். குட்டு வெளிப்பட்டதும் அது ‘டைப்போ எரர்’ என்று சமாளித்தார். இவ்வாறு குடும்பமே ஒரு டைப்பா அமைந்தது பெரிய கொடுப்பினைதான்.

படிப்பு அறிவுக்கான அடையாளம் அல்ல. பின் எதற்காக இந்த முட்டாள்தனமான காரியத்தைச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களின் தியாகத்தைப் பற்றிய அறிவு கொஞ்சமாவது உள்ள காங்கிரஸ்காரன்கூட இந்தக் காரியத்தைச் செய்யமாட்டான். 

ரொம்ப நாளா வாய் பேச முடியாம இருந்த பிள்ளை, முதல்முதலா வாய் திறந்ததும்’ நீ, எப்பம்மா தாலியறுப்பே’ன்னு கேட்டுச்சாம். இளைய தலைமுறையின் தலைவராக களமிறக்கப்பட்ட ராகுல் நடவடிக்கையைப் பார்த்தவங்களுக்கு அந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வந்தது.
காங்கிரஸ் பலவீனமாக உள்ள பீகார், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு ராகுலிடம் ஒப்படைக்கப் பட்டது. சிங்கம் பீகாரில் களமிறங்கியது. இளைஞர் காங்கிரஸில் ‘ஏராளமான’ இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர்.  திடீர் திடீரென பீகாருக்கு விசிட் அடித்தார். கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து, காங்கிரஸ்க்கு இனி யார் தயவும் தேவையில்லை என முடிவு செய்தார். பீகார் மக்களும் இனி காங்கிரஸ் தயவு தேவையில்லையென முடிவு சொன்னார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே காங்கிரஸ் பீகாரில் 2 சீட் தான் ஜெயித்தது. புத்திசாலியான ராகுல் பேச்சைக் கேட்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 4 சீட் தான் ஜெயித்தது. (அடேங்கப்பா..டபுள் ஆக்கீட்டாரே!). இவ்வாறு பீகாரில் தன் வேலையைக் காட்டிய ராகுல், இப்போது களமிறங்கியிருப்பது தமிழகத்தில்!

ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர்வது பற்றி ராகுல் அடித்த கமெண்ட், ஒரு சோறு பதமாக, ராகுலின் முதிர்ச்சியைக் காட்டியது. ”ரஜினிகாந்த் ஒரு குற்றவாளி அல்ல. அவர் சேர்வதை நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்போம். குற்றப் பின்னணி இல்லாதவர்கள் சேர்வதற்கு கதவு திறந்து வைக்கப்பட்டு உள்ளது”  ஜெ. கூட ரஜினியைப் பற்றி வெளிப்படையாக இவ்வளவு கேவலமாகக் கமெண்ட் அடித்ததில்லை. 

கட்சியை நட்சத்திர ஓட்டல்களிலும் பிரஸ் மீட்டிங்கிலும் பேசியே வளர்த்துவிட முடியும் எனக் கனவு காண்கிறார் ராகுல். பீகாரிலோ தமிழகத்திலோ எந்தவொரு மக்கள் பிரச்சினைக்காகவும் ஒரு சிறிய போராட்டத்தைக் கூட நடத்தியதில்லை இந்த ஹை-டெக் அரசியல்வாதி.

அதுசரி, எப்படி பிரச்சினைக்கு எதிராகப் போராட முடியும்? பிரச்சினையே காங்கிரஸ் தானே!

--நிறைவுப் பகுதி நாளை.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

  1. SUPER article...all r true, this guy is useless and womanaiser

    ReplyDelete
  2. @Kumar:என்ன செய்ய குமார், நம் தலையெழுத்து இவர்களோடு மாரடிக்க வேண்டியிருக்கு.

    ReplyDelete
  3. அப்பா செங்கோவி,it is not harvard, it is oxford!!!சீக்கிரத்துல அம்மா வந்திருவாங்க.நல்ல சிங்சா , சம்சா எல்லாம் போட்டு பழகிக்கோ!!!

    ReplyDelete
  4. @N: ஆமா, சோனியா படித்தது(?)ம் கேம்ப்ரிட்ஜ் இல்லையா..தகவல் பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பரே..திருத்தி விடுகிறேன்...தப்பைச் சுட்டிக் காட்டினா கோபப்படக்கூடாது இல்லையா!

    ReplyDelete
  5. செங்கோவி...நானும் ஹார்வர்ட் university precious :)) மக்காஸ் னு தான் நினைச்சேன்....ஆனால் இவ்வளவு கோட் அடிச்சது...நம்ம மேடம் ஜீ பற்றிய கல்வி(?) வரலாறு எல்லாம் இப்போ தான் முழுசா தெரிஞ்சுகிட்டேன்...நீங்க சொன்னது கூட சரி...படிப்பு,பல்கலைகழகங்கள் வச்சு நம்மளை ஆப் பண்ண ஏன் வைக்கணும்...கல்வி யை விட திறமை தானே முக்கியம் னு இந்த பதிவிசான மக்காஸ் ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்கிரன்களோ...

    ReplyDelete
  6. வந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு இன்றைய என் பதிவை படித்துவிட்டு வாக்களித்து பின்னூட்டமிடவும் நண்பரே....http://ragariz.blogspot.com/2011/02/blog-post_15.html

    ReplyDelete
  7. காங்கிரஸைக் கலைத்து விடுங்கள்’ என்ற காந்தியின் வேண்டுகோளை நேரு நிராகரித்து விட்டாலும், தொடர்ந்து வந்த இந்திரா, ராஜீவ், சோனியா போன்றோர் தங்களால் முடிந்த அளவு காங்கிரஸை அழிக்க முயர்சி செய்துகொண்டுதான் உள்ளன///

    கலக்கல்..இவனுக சீக்கிரம் அழிச்சிட்டா இந்தியா உருப்படும்

    ReplyDelete
  8. மெட்டல் பிளாஸ்டிக்...... அடப்பாவிங்களா..

    ReplyDelete
  9. அய்யய்யோ! இவன் தொல்லை தாங்க முடியல! இந்த 'ஸ்டன்ட்' எல்லாம் நிறுத்த மாட்டானா? முடியல!!
    அவனப்பிடிச்சு தமிழக மீனவர்களோடு கடலுக்கு அனுப்புங்கப்பா!

    ReplyDelete
  10. @S Maharajan:வருகைக்கு நன்றி மகாராஜன்..தொடர்ச்சி இதோ வந்துக்கிட்டே இருக்கு...

    ReplyDelete
  11. @ஆனந்தி..: நாம அப்படி நினைச்சாலும் தப்பில்லைக்கா..ஏன்னா அம்மணி ரெண்டுலயுமே படிக்கலியே..திறமைப் பற்றாக்குறையால இப்படிப் படம் போடுறாங்களோ என்னவோ.

    ReplyDelete
  12. @Pranavam Ravikumar a.k.a. Kochuraviவருகைக்கு நன்றி ரவி..தமிழ்லயும் கவிதை பின்றீங்க..குட்!

    ReplyDelete
  13. @ஆர்.கே.சதீஷ்குமார்: நீங்களும் பயங்கர காண்டுல இருக்கீங்க போல.

    ReplyDelete
  14. @! சிவகுமார் !: அது ரொம்பப் பழைய கூத்து..பார்த்ததில்லையா நீங்க..

    ReplyDelete
  15. @ஜீ...: //அவனப்பிடிச்சு தமிழக மீனவர்களோடு கடலுக்கு அனுப்புங்கப்பா// இந்தப் பொன்னான ஐடியாவை மறுபடியும் கொடுத்ததுக்கு நன்றி ஜீ.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.