Tuesday, February 15, 2011

ராகுல் காந்தியும் காங்கிரஸும் (தேர்தல் ஸ்பெஷல்)_நிறைவுப் பகுதி

திமுகவும் அதிமுகவும் தங்கள் தோள்களில் காங்கிரஸைச் சுமக்காவிட்டால், எப்போதோ அது தமிழகத்தில் சமாதிக்குப் போயிருக்கும். தமிழக மக்களிடமிருந்து, குறிப்பாக இளைஞர்களிடமிருந்து காங்கிரஸ் அன்னியப்பட்டு எவ்வளவோ நாட்கள் ஆகி விட்டன. ஆனாலும் ஒட்டிக்கொண்டே காங்கிரஸின் காலம் ஓடுகிறது.
ஒரே ஒரு கொலைக்குப் பழிவாங்க, ஒரு இனத்தையே கருவறுத்து நிற்கிறது காங்கிரஸ். அதற்குப் பின்னரும் ஒன்றுமே நடவாதது போல் ராகுலும் காங்கிரஸாரும் பேசுவதையும், கவர் வாங்கிக் கொண்டு மீடியாக்கள் ராகுலின் விசிட்டை கவர் ஸ்டோரி ஆக்குவதையும் பார்க்கும்போது நம்மைப் பற்றி என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

இலங்கையில் போர் முடிந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அங்கு நம் சகோதரர்கள் தம் சொந்த மண்ணிற்குத் திரும்ப இயலவில்லை. இது போதாதென்று, இங்கு மீனவர் படுகொலையும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.  இதையெல்லாம் தடுத்து நிறுத்தக் கூடிய காங்கிரஸ், அதற்காக துரும்பைக்கூட நகர்த்தவில்லை. ஆனாலும் தைரியமாக வாக்குக் கேட்டு கிளம்பி வருகிறார்கள்!

சுதந்திர காலத்தில் இருந்தே இந்தியாவில் வலுவாக வேரூன்றி இருக்கும் காங்கிரஸ் போன்ற பேரியக்கத்தை முற்றாக இல்லாமல் அழித்தொழிப்பது இப்போது நடைமுறச் சாத்தியமில்லாத ஒன்றே. ஆனாலும் இந்தத் தேர்தலில் கடுமையான தோல்வியை காங்கிரஸுக்குத் தருவதன் மூலம், தனது தவறை அவர்கள் உணரவைக்க முடியும். தன்னை சுய பரிசோதனை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தமிழகத்தில் காங்கிரஸை நாம் கொண்டுசெல்வது நம் முன் இருக்கும் தலையாய கடமை.

எப்போதுமே அடுத்தவர் வாழ்வைக் கெடுத்தோர் தமக்குள் அடித்துக் கொண்டு வீழ்வது வழக்கம். இங்கும் அது ஆரம்பித்துள்ளது. அருமை மகள் கனிமொழி & கோ செய்திருக்கும் காரியத்தினால், காங்கிரஸிடம் வசமாக மாட்டிக்கொண்டு நிற்கிறது திமுக. சமீபத்திய கலைஞரின் டெல்லி விசிட்டின்போது, முடிந்தவரை அவரை அவமானப்படுத்தி அனுப்பியதாக செய்திகள் வருகின்றன. அப்போது, ராகுலின் அதிரடி பற்றியும் பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டுள்ளன.
திமுக ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டிருப்பதால், இப்போது அவர்களை மிரட்டி அதிக சீட்டுகளை வாங்கிவிடலாம் என ராகுல் கணக்குப் போடுகிறார். அரசியலின் எல்லா கோல்மால்களை அறிந்த கலைஞரிடம் தன் வேலையைக் காட்டிக் கொண்டிருக்கிறார் ராகுல். கலைஞரும் வேறுவழியின்றி இப்போது இவர்கள் இழுக்கும் இழுப்புக்கு ஒத்துக் கொண்டுவிடலாம். ஆனால், தேர்தலில் ஓட்டுப்போடும்போது திமுகவினர் எப்படி முதுகில் குத்துவர் என ராமதாஸிடம் கேட்டால் நன்றாகச் சொல்லுவார்.

தேர்தல் கூட்டணி என்பது வெறுமனே தலைவர்கள் மத்தியில் மட்டும் நிகழ்வதன்று. தொண்டர்கள் வரை அந்தக் கூட்டணி எவ்வித நெருடலுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வயதான காலத்தில் பிள்ளைகளால் கலைஞர் சீரழிக்கப் படுவதையும், அதை காங்கிரஸ் பயன்படுத்தி, மிரட்டுவதையும் திமுக தொண்டன் கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.

சீமான் போன்றோர் உணர்ச்சிகரமாக ஈழப்பிரச்சினையை எழுப்பும்போது, சுரணை கெட்ட நம் சமூகம் கொஞ்சம் சுரணை கொள்ளும். அதோடு காங்கிரஸின் மிரட்டல் அரசியலின் மீதுள்ள வெறுப்பும் சேரும்போது, காங்கிரஸின் தோல்வி எளிதாகும்.

காங்கிரஸின் விசயத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் பலம், எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருப்பதுதான். குஜராத்தில் நடந்த மதப் பயங்கரவாதத்திற்குப் பின், மக்களுக்கு காங்கிரஸை விட்டால் மத்தியில் ஆள வேறு நாதியில்லை என்றாகி விட்டது. ஆனால் தமிழகத்தில் அந்த துரதிர்ஷ்டமான நிலை இல்லாதது சந்தோசமே.

வைகோ, சீமான் போன்றோர் ’அம்மாவின்’ மேலுள்ள அக்கறையைக் குறைத்துக் கொண்டு, முழுமூச்சாக காங்கிரஸ்க்கு எதிராக பிரச்சாரம் செய்தால், ஸ்பெக்ட்ரமில் அடித்த காசு அள்ளி விடப்படவில்லையென்றால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பீகாரை விடவும் மோசமான தோல்வியைத் தழுவும்.

இல்லையென்றால், எப்படி சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பார்த்து நொந்துபோனோமோ அப்படியே இப்போதும் நொந்து போவோம். சுரணை கெட்ட இனத்தில் பிறந்துவிட்டு வேறென்ன செய்வதாம்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

25 comments:

 1. //இல்லையென்றால், எப்படி சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பார்த்து நொந்துபோனோமோ அப்படியே இப்போதும் நொந்து போவோம்//
  இப்பவெல்லாம் நொந்து போற மாதிரி சம்பவங்கள்தான் தொடர்ந்து நடக்குது பாஸ்!
  பாவம் கலைஞரையே பாருங்க...இந்த வயதில இது தேவையா? காங்கிரசுக்கு எவ்வளவு விசுவாசமா நடந்துக்கிட்டார் 3 மணிநேரம் உண்ணா விரதம் எல்லாம் இருந்து... அவரையே இப்பிடி..ம்ம்ம் :-(

  ReplyDelete
 2. ஆட்சியில் பங்கு கேட்கும் அளவுக்கு கனவுலகில் இருப்பவர்கள் # ஆளுக்கொரு ஆசை.

  ReplyDelete
 3. /ஒரே ஒரு கொலைக்குப் பழிவாங்க, ஒரு இனத்தையே கருவறுத்து நிற்கிறது காங்கிரஸ். //

  ReplyDelete
 4. உங்களின் அரசியல் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்தவை. இன்னும் தொடர்ந்திருக்கலாம்.

  ReplyDelete
 5. @ஜீ...: நீங்க சொல்றது முழுக்க முழுக்க சரி.நன்றி ஜீ!

  ReplyDelete
 6. @பாரத்... பாரதி...://இன்னும் தொடர்ந்திருக்கலாம்// பாஸ், ரெண்டு நாளா ராகுல் பூந்திகூட மல்லுக்கட்டி மண்டை காஞ்சு இருக்கேன்..இன்னும் தொடரவா..//உங்களின் அரசியல் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்தவை.//பாராட்டுக்கு நன்றி பாரதி.

  ReplyDelete
 7. நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.http://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html

  ReplyDelete
 8. @ரஹீம் கஸாலி: நன்றி..நன்றி..நன்றி!! அங்க போய்ட்டுதான் இங்க வர்றேன்!

  ReplyDelete
 9. //ஒரே ஒரு கொலைக்குப் பழிவாங்க, ஒரு இனத்தையே கருவறுத்து நிற்கிறது காங்கிரஸ். அதற்குப் பின்னரும் ஒன்றுமே நடவாதது போல் ராகுலும் காங்கிரஸாரும் பேசுவதையும், கவர் வாங்கிக் கொண்டு மீடியாக்கள் ராகுலின் விசிட்டை கவர் ஸ்டோரி ஆக்குவதையும் பார்க்கும்போது நம்மைப் பற்றி என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை//

  கேணை பயலுங்க அப்பிடின்னுதான். வேறு என்ன?

  ReplyDelete
 10. வேறு ஆள் இல்லாத நிலை


  நம்ப பதிவையும் எட்டிப்பாருங்க

  நாய் உண்மையில் என்ன நினைக்கிறது

  http://speedsays.blogspot.com/2011/02/blog-post_16.html

  ReplyDelete
 11. //எப்படி சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பார்த்து நொந்துபோனோமோ அப்படியே இப்போதும் நொந்து போவோம். சுரணை கெட்ட இனத்தில் பிறந்துவிட்டு வேறென்ன செய்வதாம்.//
  நம்மால் இயன்றவரை காங்கிரசை எதிர்ப்போம்....

  ReplyDelete
 12. தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளீர்..
  உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..

  ReplyDelete
 14. நண்பா அரசியல் பதிவு எழுத உங்களை விட்டா ஆளே கிடையாது, நல்லா ரசிக்கும்படி எழுதறீங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. @விக்கி உலகம் 'நச்’னு கமெண்ட் போட்டதுக்கு நன்றி விக்கி!

  ReplyDelete
 16. @வரதராஜலு .பூ: நான் நினைச்சேன்..நீங்க சொல்லீட்டீங்க..முதல் கமெண்டிற்கு நன்றி சார்.

  ReplyDelete
 17. @Speed Master://வேறு ஆள் இல்லாத நிலை// என்னங்க இப்படிச் சொல்றீங்க..நாங்க 59 ஃபாலோயர்ஸ் இருக்கோம்..அப்படியெல்லாம் விட்ருவோமா..என்ன ஒன்னு, நான் ஆஃபீஸ் விட்டு வரமுன்ன நீங்க அடுத்த பதிவே போட்ருப்பீங்க..வந்தேன் கண்டேன்..நன்றி.

  ReplyDelete
 18. @இரவு வானம்: //அரசியல் பதிவு எழுத உங்களை விட்டா ஆளே கிடையாது// யோவ், இப்பதான்யா கொஞ்சம் தலையெடுக்கேன்..அதுக்குள்ள பொறுக்கலையா..நல்லாக் கிளப்புறாங்கய்யா பீதியை..நைட்டு, ரைட்டு!

  ReplyDelete
 19. @MANO நாஞ்சில் மனோ: கரெக்டாச் சொன்னீங்க சார்..வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கு நன்றி சௌந்தர் சார்..கவிதை வீதியை ஏற்கனவே கண்டிருக்கிறேன்..கமெண்ட் தான் ஹி..ஹி..!

  ReplyDelete
 21. தேர்தல் நேரத்தில் தங்கள் பதிவுகள் அனலை கிளப்புகின்றன!

  ReplyDelete
 22. @! சிவகுமார் !: பாராட்டுக்கு நன்றி சிவா.

  ReplyDelete
 23. //அரசியல் பதிவு எழுத உங்களை விட்டா ஆளே கிடையாது//

  ReplyDelete
 24. @பாரத்... பாரதி...:////அரசியல் பதிவு எழுத உங்களை விட்டா ஆளே கிடையாது// ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்களா..சரிதான்!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.