முதல் பகுதிக்கு : டாக்டர் ராமதாஸும் பாமகவும் (தேர்தல் ஸ்பெஷல்)
ஒரு சமூகநீதிப் போராளியான ராமதாஸ், ஆட்சி அதிகாரத்தை ருசித்தபின் முழுமையான அரசியல்வாதி ஆனார். அதன்பின் அவரது வீழ்ச்சி தொடங்கியது.
வன்னியரின் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதனாலேயே இன்று இந்த நிலையில் இருக்கும் ராமதாஸ், இன்றுவரை அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த குடும்பத்தினரில் ஒருவருக்குக் கூட எம்.எல்.ஏ சீட்டோ, எம்.பி. சீட்டோ கொடுத்ததில்லை. ராஜ்யசபா எம்.பி. ஆக அனுப்பாவிட்டாலும் (அது இளவரசருக்கு உரியது!), தேர்தலில் நிற்கக் கூட வாய்ப்பு தரப்படவில்லை.
தன் ஜாதி நலனுக்காக உருவாக்கிய கட்சியை, குடும்ப நிறுவனமாக ஆக்கினார் ராமதாஸ். ‘நானோ என் குடும்பத்தினரோ அதிகாரத்திற்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள்’ என்ற அவரது ஆரம்ப கால வாக்குறுதி காற்றில் பறந்தது.
அவரை எதிர்த்துக் கேள்வி கேட்போர், அடுத்த கட்டத் தலைவராக வாய்ப்புள்ளோர் துரோகி பட்டம் சூட்டப்பட்டு, கட்சியை விட்டே விரட்டப்பட்டனர்.
‘பாபா, மும்பை எக்ஸ்பிரஸ்’ பட விவகாரங்களில் நடந்து கொண்ட முறை பாமகவிற்கு வன்முறைக் கட்சி என்ற தோற்றத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. சினிமாவால் ஏற்படும் சீர்கேடுகள் எதிர்க்கப்பட வேண்டியவையே. அதற்கு வன்முறையையும் மிரட்டலையும் கைக்கொள்வது, சினிமாவை விட அதிகச் சீரழிவையே உண்டாக்காதா?
ராமதாஸின் மகனாகப் பிறந்த காரணத்திற்காக, அரசியலுக்கே வரக்கூடாதவர் அல்ல அன்புமணி. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவரைப் போட்டியிட வைத்து, எம்.பி. ஆக்கியிருந்தால், அன்புமணிக்கு அது மேலும் மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் இன்று வரை கொல்லைப் புற வழியாகவே மகனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, மந்திரியாக்கினார்.
மருமகள் தலைமையில் பசுமைத் தாயகம் தொடங்கப் பட்டு தொடங்கி, பல நூறு மரங்கள் நடப்பட்டன. நல்ல விஷயம் தான். சென்ற வருடம் ஜூ.வி.யில், பாமக மத்திய அரசில் இருந்த போது, மருமகளின் அறக்கட்டளை மகனின் சுகாதார இலாக்காவிடமிருந்து 500 கோடி(தான்!) பெற்றுள்ளது செய்தியானது.
தொடர்ந்த இத்தகைய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் அவப்பெயரைப் புரிந்து கொள்ளாமல், ’பாமக வன்னியர் கட்சி மட்டுமல்ல, அனைத்து ஜாதியினருக்கானது’ என்று கூறிக் கொண்டு பிறரைக் கவருவதற்காக வன்னிய அடையாளத்தை மறைக்க முற்பட்டது மிகப் பெரும் அரசியல் பிழை.
வன்னிய ஜாதியின் பெயரை உபயோகித்து, கட்சியை வளர்த்து சொத்துக்களைக் குவித்திருக்கிறார் என்பது வெளிப்படையான விஷயம். மேற்கண்ட செயல்பாடுகள் பிற ஜாதியினர் மத்தியில் மட்டும் அல்லாமல் வன்னியர் மத்தியிலும் அதிருப்தியை உண்டாக்கியது.
அதனாலேயே சென்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக ‘அள்ளி விட்டதும்’, வன்னியர்கள் ஓட்டு சிதறியது. பாமக வன்னியர் கட்சி மட்டுமே. வசதி, ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்திலெல்லாம் உடன் இருந்த வன்னிய குலம், இப்போது இவரது அரசியலைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்திருப்பதன் விளைவே பாமகவின் தோல்வி.
அப்படியென்றால் வன்னிய குலம், ராமதாஸைக் கைவிட்டு விட்டதா?
வரலாற்றின் போக்கில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தலைவர் ‘ஐகானாக’ உருவாகி வருகிறார். அந்த ஜாதியின் ஒற்றுமை உணர்வுக்கு அறிந்தோ அறியாமலோ அவர் காரணமாகிறார். அவர் மீதான தாக்குதல், தன் ஜாதியின் மீதான தாக்குதலாக அம்மக்களால் எடுத்துக்கொள்ளப் படுகிறது.
1988 போராட்டத்திற்குப் பின் ராமதாஸ் ‘ஏறக்குறைய’ அத்தகைய இடத்தில் பாமகவினரால் வைக்கப் படுகிறார். அவர் மீது விமர்சனங்கள் வைக்கப் படும்போது, பாமகவினர் வ்ன்னியர் மத்தியில் சொல்வது இதுதான்: “நாம் ஒற்றுமையாகத் திரண்டிருப்பது பிறரின் கண்ணை உறுத்துகிறது. ராமதாஸை அழிப்பதன் மூலம் நம் ஒற்றுமையைக் கெடுத்து, நம் முன்னேற்றத்தைத் தடுக்கப் பார்க்கிறார்கள்”
இது வன்னிய ம்க்களால் முழுக்க ஒதுக்கித் தள்ளப் படக்கூடிய வாதம் அல்ல. சில பத்திரிக்கைகள் ராமதாஸின் மேல் வெளிப்படையாக வெறுப்பைப் பொழிகின்றன. வன்னியர்களை இது குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ’ராமதாஸின் நடவடிக்கையின் மீதான தாக்குதலா அல்லது வன்னிய சமூக எழுச்சியின் மீதான மறைமுகத் தாக்குதலா? ‘ என்ற கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு எளிதல்ல. இதுவே ராமதாஸின் மிகப் பெரிய பலம்.
கடந்த தேர்தலின் தோல்விக்குப் பின், வன்னிய அடையாளத்தை மீண்டும் கையில் எடுத்தார். திறமையான திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. அதன் விளைவே பொன்னாகரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று, தன் இருப்பை உறுதிப்படுத்தியது!
வருகின்ற தேர்தலிலும் வன்னிய மக்கள் ‘சந்தேகத்துடனாவது’ பாமகவிற்கே வாக்களிப்பர். வேறு ஒரு மாற்று சக்தி அவர்களுக்குத் தெரியும்வரை, மற்ற கட்சிகளின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை வரும்வரை, ராமதாஸின் அரசியல் அவர்களின் ஆதரவுடன் தொடரும்.
மற்றபடி, பிற ஜாதியினர் அவருக்கு ஆதரவளிப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை.
மக்கள் டி.வி., மதுக்கடைகளை மூடத் தொடர்ந்து வலியுறுத்தல், சினிமாவில் சிகரெட் குடிப்பதை எதிர்ப்பது போன்ற விஷயங்களில் ராமதாஸின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. ஆனாலும் அவரது சந்தர்ப்பவாத அரசியலை ஒப்பிடும்போது, அவரை ஆதரிக்க இவை போதுமானதில்லை.
அதுசரி, பிற ஜாதி மக்களுக்கு ராமதாஸால் நன்மை எதுவும் இதுவரை இல்லையா என்று பார்த்தால், பெருவாரியான பிற ஜாதிமக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பிய காலங்களில், அவர்கள் பக்கம் சாய்ந்து அந்த மாற்றம் நிகழ உறுதுணையாக இருந்திருக்கிறார். அத்தகைய சமயங்களில் பிற ஜாதி மக்களும் அதற்காகவே அவருக்கு வாக்களிப்பர்.
இதுவரை ஏதோவொரு கூட்டணியில் இருந்துகொண்டு, அதன் காரணமாகவே அதிக சீட் எதிர்க்கூட்டணியில் வாங்கித் தாவி வந்த பாமக, இப்போது தனித்து விடப்பட்டுள்ளது. முன்பு போல் அதிக சீட் பேரம் பேச முடியாத நிலையே நிலவுகிறது. இப்போது என்ன செய்யும் பாமக?
-------------------------------------------
தொடர்ந்து இதைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை...
ராமதாஸ் வெளிப்படையாக கூட்டணி பற்றி அறிவிக்குமுன், டெல்லி சென்ற ‘தமிழினத் தலைவர்’ அவசரப்பட்டு, பாமகவும் எங்கள் கூட்டணியில் உள்ளது என்று சொல்லிவிட்டார்.
இப்போது ராமதாஸ் ‘நாங்கள் எந்தக் கூட்டணி என்று இன்னும் முடிவு செய்யவில்லை’ என்று அறிவித்துள்ளார். அதாவது, பேரம் பேச ஒரு பிடி கிடைத்துவிட்டது.
வாழ்க வளமுடன்.
ஒரு சமூகநீதிப் போராளியான ராமதாஸ், ஆட்சி அதிகாரத்தை ருசித்தபின் முழுமையான அரசியல்வாதி ஆனார். அதன்பின் அவரது வீழ்ச்சி தொடங்கியது.
ReplyDelete....இந்த வரிகளே போதுமே.... பல விஷயங்களை தெளிவாக சொல்கிறதே.
>>> வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியா நின்னா???? இல்ல....சும்மா கேட்டேன்.
ReplyDeleteஎந்த ஜாதியத்தலைவனய்யும் முதலமைச்சர் ஆக அனுமத்திப்பது இல்லை தமிழ் மக்கள். அப்படிப்பார்த்தால் எம் ஜி ஆர் , கருணாநிதி, ஜெயலலிதா - இந்த மூவருக்கும் ஜாதிப்பின்புலம் கிடையாது.............ஆனால் மக்கள் இதுவரை பார்த்து வந்த பொதுவான அரசியலவாதி என்பதை என்றுமே ராமதாஸ் நிரூபிக்க முடியாது..........நான் இப்படித்தான்...........அதே நேரத்துல என் ஜாதி எனக்குதான் ஓட்டுப்போடும் அப்படிங்கற விஷயம்...நீர்த்துப்போய் ரொம்ப நாளாச்சி..............
ReplyDeleteஜாதீய கட்சிகளுக்கு சவுக்கடி கொடுப்போம்
ReplyDelete@Chitra: //இந்த வரிகளே போதுமே//..போதும் தான்..ஆனாலும்...
ReplyDelete@! சிவகுமார் !: தனியா யார் நின்னாலும் சங்குதானே சிவா..பதிவில் சொன்னதுபோல், பிற ஜாதி ஓட்டு கிடைக்காது!
ReplyDelete@விக்கி உலகம்: //எந்த ஜாதியத்தலைவனய்யும் முதலமைச்சர் ஆக அனுமத்திப்பது இல்லை// உண்மையான வரிகள் விக்கி..தொடர்ந்து வருவதற்கு நன்றி.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்: ஆனாலும் நமக்குப் பிடித்த கூட்டணியில் நின்றால் ஓட்டுப் போடுகிறோம் இல்லையா..
ReplyDeleteஅருமையான அலசல்... எல்லாரும் அவரை வச்சு காமெடி பண்ணிட்டு இருக்கும் இந்த நிலையில், இந்த பதிவு ரொம்பவே சீரியஸ் !!
ReplyDelete//ராமதாஸின் மகனாகப் பிறந்த காரணத்திற்காக, அரசியலுக்கே வரக்கூடாதவர் அல்ல அன்புமணி. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவரைப் போட்டியிட வைத்து, எம்.பி. ஆக்கியிருந்தால், அன்புமணிக்கு அது மேலும் மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் இன்று வரை கொல்லைப் புற வழியாகவே மகனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, மந்திரியாக்கினார்.//
ReplyDeleteyes...You are right..
நான் இந்த பதிவ படிக்கல.......படிக்கல....படிக்கல.....
ReplyDelete// //மருமகள் தலைமையில் பசுமைத் தாயகம் தொடங்கப் பட்டு தொடங்கி, பல நூறு மரங்கள் நடப்பட்டன. நல்ல விஷயம் தான். சென்ற வருடம் ஜூ.வி.யில், பாமக மத்திய அரசில் இருந்த போது, மருமகளின் அறக்கட்டளை மகனின் சுகாதார இலாக்காவிடமிருந்து 500 கோடி(தான்!) பெற்றுள்ளது செய்தியானது.// //
ReplyDeleteதவறான தகவல் - பசுமைத் தாயகம் அமைப்பு நேரடியாகவோ மறைமுகமாகவோ நடுவண் அரசிடமிருந்தோ அதன் சார்பு அமைப்புகளிடமிருந்தோ ஒரு ரூபாய் கூட பெறவில்லை.
நடுவண் அரசில் அமைச்சராக உள்ள ஒருவர் அவரது மனைவி அல்லது நெருங்கிய உறவினர்களின் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்க சட்டப்படி வழி இல்லை.
நீங்கள் குறிப்பிடும் இந்த 'முட்டாள்தனமான' தவலை வெளியிட்டவர் ஞாநி. (சிலநேரங்களின் அறிவுசீவி போன்றும் பலநேரங்களில் அடிமுட்டாளாகவும் அவர் கருத்து வாந்தி எடுப்பது அனைவரும் அறிந்ததே).
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete// //ஜாதீய கட்சிகளுக்கு சவுக்கடி கொடுப்போம்// //
மிக்க நன்று.
தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளுக்கும் சவுக்கடி கொடுக்க நீங்கள் தயாரா...?
1. திமுக வன்னியர்களை முன்னிறுத்தி பின்னர் முதலியார்களை முன்னேற்றிய கட்சி. இப்போது கருணாநிதி இசைவேளாளர் என்று கூறிக்கொண்டாலும் - அவரது மகள் கனிமொழி நாடார்களின் பிரதிநிதி.
2. அதிமுக முக்குலத்தோரை முன்னிலைப் படுத்தும் கட்சி.
3. விசயகாந்த் கட்சி தலைமை நாயுடுகளுக்கு சொந்தம் என்று முடிவெடுத்துவிட்டார். அவரது முக்கிய தலைவர்களில் ஒருவரான மாஃபா பாண்டியராசன் நாடார்கள் சங்கத்தை தூக்கிப்பிடிக்கிறார்.
4. சீமான், கனிமொழி, கசுபார் - ஆகிய மூன்று நாடார் வகுப்பினர் சேர்ந்து, ஆதித்தனார் என்கிற நாடார் உருவாக்கிய 'நாம் தமிழர்' அமைப்பை தொடங்கினர் (நாம் தமிழர் = நாம் நாடார்). இன்று கனிமொழியும் கசுபாரும் "நாம்" வைத்திருக்கிறார்கள். சீமான் "நாம் தமிழர்" வைத்திருக்கிறார்.
5. சரத்குமார், கார்த்திக், கிருட்டிணசாமி குறித்தெல்லாம் தனியாக சொல்ல தேவையில்லை.
இவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
சாதிக்கட்சி என்றால் எது சாதிக்கட்சி? சாதியை ஆதரிக்கும் கட்சிகளும் சாதிக்கட்சிகள்தானே? அப்படியானால், 'தேவர் குருபூசை'யில் ஆண்டுதோரும் பங்கேற்கும் - அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாசக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை எப்படி வகைப்படுத்துவீர்கள்?
// //ஒரு சமூகநீதிப் போராளியான ராமதாஸ், ஆட்சி அதிகாரத்தை ருசித்தபின் முழுமையான அரசியல்வாதி ஆனார். அதன்பின் அவரது வீழ்ச்சி தொடங்கியது.// //
ReplyDeleteசமூக அமைப்பாக இருப்பதன் மூலம், மற்றவர்களிடம் உரிமைகளை கேட்டு பெற வழியே இல்லை என்பதால்தான் - அரசியல் அமைப்பாக மாறி அதிகாரத்தை நோக்கி பயணிக்க முயற்சிக்கின்றனர். இது பயணத்தின் அடுத்தக்கட்டம். வீழ்ச்சி அல்ல.
// //வன்னியரின் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதனாலேயே இன்று இந்த நிலையில் இருக்கும் ராமதாஸ், இன்றுவரை அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த குடும்பத்தினரில் ஒருவருக்குக் கூட எம்.எல்.ஏ சீட்டோ, எம்.பி. சீட்டோ கொடுத்ததில்லை.// //
ReplyDeleteதியாகிகள் குடும்பத்தினருக்கு வன்னியர் சங்கம் உரிய பணிகளை செய்திருக்கிறது. அவற்றை எல்லாம் பட்டியல் போடுவது நாகரீகம் அல்ல. வன்னியர் சங்கத்தினருக்கு அவர்களே தெய்வங்கள். உரிய மதிப்பினை வழங்கி வருகின்றனர்.
தியாகிகள் குடும்பத்தினர்தான் பதவிகளுக்கு வரவேண்டும் என்று கூறுவது சாத்தியமற்றது. அதற்காக வரவேண்டாம் என்பதும் இல்லை. பதவிக்கு வருவதற்கு தியாகி குடும்பம் என்பதை ஒரு அளவு கோளாக வைக்க முடியாது.
மொழிப்போர் தியாகிகள் எல்லாம் திமுக'விலும் அதிமுக'விலும் பதவிகளில் இல்லை. வைகோ கட்சியைவிட்டு நீக்கப்பட்ட போது உயிர் நீத்த தியாகிகள் குடும்பத்தினர் எல்லாம் மதிமுக'வில் பதவியில் இல்லை.
இப்போது நடுவண் அரசு காங்கிரசு அமைச்சரவையில் அங்கம் வகிப்போரில் எத்தனை பேர் விடுதலைப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினர்?
மற்ற கட்சிகள் எதற்கும் பொருந்தாத விதிகளை பாமக மீது திணிக்காதீர்.
// //’பாமக வன்னியர் கட்சி மட்டுமல்ல, அனைத்து ஜாதியினருக்கானது’ என்று கூறிக் கொண்டு பிறரைக் கவருவதற்காக வன்னிய அடையாளத்தை மறைக்க முற்பட்டது மிகப் பெரும் அரசியல் பிழை.// //
ReplyDeleteஉண்மைதான்.
வன்னியர் சங்கம் என்பது வன்னியர்கள் உரிமைக்காக பாடுபடக்கூடியது. பா.ம.க என்பது வன்னியர் உள்ளிட்ட "ஒடுக்கப்பட்ட சாதிகளின் கூட்டமைப்பு" என்கிற நோக்கில் உருவானது. அதனால்தான் - தலைவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பொதுச்செயலாளர் தலித் வகுப்பு, பொருளாளர் சிறுபான்மை வகுப்பு - என கட்சியிலேயே இட ஒதுக்கீடு கடைபிடிக்கப் பட்டது.
ஆனால், ஒருகட்டத்தில் சாதி கடந்த கட்சியாக காட்ட முயன்றதுதான் பிழை. வன்னியர்களுக்கான - ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான கட்சியாக இருப்பதே பாமக வுக்கு நல்லது.
// //மக்கள் டி.வி., மதுக்கடைகளை மூடத் தொடர்ந்து வலியுறுத்தல், சினிமாவில் சிகரெட் குடிப்பதை எதிர்ப்பது போன்ற விஷயங்களில் ராமதாஸின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. ஆனாலும் அவரது சந்தர்ப்பவாத அரசியலை ஒப்பிடும்போது, அவரை ஆதரிக்க இவை போதுமானதில்லைலை// //
ReplyDeleteதமிழர் பண்பாடு, மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு - இவையெல்லாம் ஒருபோதும் வாக்குகளாக மாறாது. இதைப் பேசும் கூட்டத்தினர் பெரிதளவில் வாக்களிக்கவே வரமாட்டார்கள்.
மறுபுறம் - இவற்றின் முக்கியத்துவத்தை விட அவரவர் சாதி உணர்வு வலிமையானது.
// //வருகின்ற தேர்தலிலும் வன்னிய மக்கள் ‘சந்தேகத்துடனாவது’ பாமகவிற்கே வாக்களிப்பர்.// //
ReplyDeleteசரியான கருத்தை முடிவாக வைத்தமைக்கு நன்றி.
சந்தேகத்துடன்" வாக்களிக்கும் மக்களை, வரும்காலங்களில் "நம்பிக்கையுடன்" வாக்களிக்க செய்வதே பா.ம.க'வின் முன்னுள்ள பணி. அதனை அக்கட்சி மேற்கொள்ளும்.
// //பிற ஜாதியினர் அவருக்கு ஆதரவளிப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை.// //
ReplyDeleteவன்னியர்கள் பெருமளவில் (முடியுமானால் முழுமையாக) பாமக'வுக்கு வாக்களிக்க செய்வதே அக்கட்சியின் பெரிய சாதனையாக இருக்கும். அதுவே, போதுமானதும் கூட.
பிற சாதியினர் வாக்களிக்கதான் கூட்டணி தேவைப்படுகிறது. (வன்னியரின் ஆதரவு முழுமையாக கிடைத்தால், பிற சாதியினரில் மிகச்சிலரின் ஆதரவே போதும். பிறசாதியினரில் பெரும்பாலானோர் பாமக'வுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இல்லை.)
அருமையான அலசல்...
ReplyDelete@Madurai pandiராமதாஸ் வெறும் காமெஅல்ல என்பதே அதன் காரணம்.
ReplyDelete@Madurai pandiராமதாஸ் வெறும் காமெஅல்ல என்பதே அதன் காரணம்.
ReplyDelete@ஆனந்தி..நன்றி சகோதரி
ReplyDelete@ரஹீம் கஸாலிஹா..ஹா.தோள் கொடுங்க நண்பா..
ReplyDelete@அருள்: //நீங்கள் குறிப்பிடும் இந்த 'முட்டாள்தனமான' தவலை வெளியிட்டவர் ஞாநி//...நான் படித்தது கழுகார் பகுதியில்..அப்போ கண்டிப்பாஅவரும் முட்டாளாத்தான் இருக்கணும் இல்லையா!
ReplyDelete@அருள்//சாதிக்கட்சி என்றால் எது சாதிக்கட்சி?// ஒரு ஜாதியின் உஅர்வை மட்டுமே வெளிப்படையாக முன் வைப்பதே ஜாதிக்கட்சி..அதனால் தான்....
ReplyDelete@அருள்://அதன்பின் அவரது வீழ்ச்சி தொடங்கியது.//இங்கே வீழ்ச்சி என்றது ராமதாஸின் சுயத்தின் வீழ்ச்சி..அதுவரை சமூகத்திற்கு தியாகத்தையே செய்தவர், பின் அறுவடை செய்ய ஆரம்பித்ததைச் சொல்வது அது!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDelete// //
@அருள்: //நீங்கள் குறிப்பிடும் இந்த 'முட்டாள்தனமான' தவலை வெளியிட்டவர் ஞாநி//...நான் படித்தது கழுகார் பகுதியில்..அப்போ கண்டிப்பாஅவரும் முட்டாளாத்தான் இருக்கணும் இல்லையா!
// //
அந்தக் கருத்தை யார் சொல்லியிருந்தாலும் அது முட்டாள்தனமான கருத்துதான். அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. அப்படி நடக்க சட்டப்படி வாய்ப்பும் இல்லை.
தெளிவு
ReplyDelete@அருள்: //உரிய மதிப்பினை வழங்கி வருகின்றனர்// இதயத்தில் இடம் கொடுத்தாச்சுன்னு சொல்லுங்க..
ReplyDelete//மற்ற கட்சிகள் எதற்கும் பொருந்தாத விதிகளை பாமக மீது திணிக்காதீர்.// இது மற்ற கட்சிகளுக்கும் பொருந்தும்..பாமக்விற்கு அதிகமாகவே பொருந்தும்..ஏனென்றால் பாமக்வின் அடிப்படையே அந்தத் தியாகம்தான்..அது மட்டும்தான்.
செங்கோவி said...
ReplyDelete// //ஒரு ஜாதியின் உயர்வை மட்டுமே வெளிப்படையாக முன் வைப்பதே ஜாதிக்கட்சி// //
அப்படி ஒரு அளவுகோள் வைத்தால் வன்னியர் சங்கம் கூட சாதி சங்கம் ஆகாது. ஏனெனில், 1987 சாலை மறியல் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையே - சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.
இப்போது பாமக'வும் "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திஅனைத்து ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்" என்று போராடுகிறது.
ஒரு சாதி உயர்வை "மட்டுமே" முன்வைக்கவில்லை.
@அருள்: //பெரும் அரசியல் பிழை.// //உண்மைதான்.// பரவாயில்லை சார்...இதையாவது ஒத்துக்கிட்டீங்களே!
ReplyDelete@அருள்: //மறுபுறம் - இவற்றின் முக்கியத்துவத்தை விட அவரவர் சாதி உணர்வு வலிமையானது.// ஒத்துக்கறேன்!
ReplyDeleteஆஹா.....களம் களை கட்டிருச்சே
ReplyDelete@அருள்: //சந்தேகத்துடன்" வாக்களிக்கும் மக்களை, வரும்காலங்களில் "நம்பிக்கையுடன்" வாக்களிக்க செய்வதே பா.ம.க'வின் முன்னுள்ள பணி.// நல்லது.
ReplyDelete@அருள்:பிற சாதியினர் வாக்களிக்கதான் கூட்டணி தேவைப்படுகிறது// வெளிப்படையாக பேசுவதற்கு நன்றி.
ReplyDelete@அருள்: இன்னும் நமக்குள் மாற்றுக் கருத்து இருப்பினும், உங்களுடன் வெளிப்படையாக விவாதித்ததில் மகிழ்ச்சி.
ReplyDelete@அருள்: இப்போதெல்லாம் மாற்றுக்கருத்து சொன்னாலே வசை பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் நாகரீமாக உங்கள் தரப்பை முன்வைத்து, என் வலைப்பக்கத்தின் தரம் கெடாமல் உதவியதற்கு நன்றி சார்!
ReplyDelete@சே.குமார்நன்றி குமார்.
ReplyDelete@செங்கோவி
ReplyDeleteநன்றி.
அனைத்திலும் உடன்பாடு உள்ள - அனத்திலும் ஒத்த கருத்து கொண்ட இரண்டு பேர் உலகில் இருப்பது சாத்தியமல்ல. அதே போன்று எல்லாவற்றிலும் முற்றிலும் வேறுபாடு கொண்ட இருவர் இருப்பதும் கூட சாத்தியமில்லை.
உடன்படவும் முரண்படவும் எல்லோருக்கும் காரணங்கள் உண்டு. கருத்துகள் மாறலாம், ஆனால், அடிப்படையில் மனிதர்கள் அன்பானவர்கள். எனவே, நாகரீகக் குறைவாக பேசவோ, வசைபாடவோ தேவை எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
Mr.Arul can u answer this paragraph ?!
ReplyDeleteராமதாஸின் மகனாகப் பிறந்த காரணத்திற்காக, அரசியலுக்கே வரக்கூடாதவர் அல்ல அன்புமணி. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் மத்தியில் அவரைப் போட்டியிட வைத்து, எம்.பி. ஆக்கியிருந்தால், அன்புமணிக்கு அது மேலும் மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் இன்று வரை கொல்லைப் புற வழியாகவே மகனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, மந்திரியாக்கினார்.
@Speed Master: தெளிவா இருந்தே இந்தப்பாடு...அதுவும் இல்லேன்னா..
ReplyDelete@ரஹீம் கஸாலி: கிரேட் எஸ்கேப்பா...நேற்று ரொம்ப டயர்ட் ஆகீட்டீங்களோ.
ReplyDelete@K.MURALI: வாங்க முரளி சார்..“மக்கள் அறியா சாமானியரைக் கூட நாங்கள் நிறுத்தி எம்.பி. ஆக்கியுள்ளோம்..அப்படி இருக்கும்போது அன்புமணியை ஆக்குவதா பெரிது?..அப்புறம் ஏன் செய்யலைன்னா நாங்க நினைக்கலை..செய்யலை!” அப்படின்னு அருள் சார் சொல்வாரு..ஆயிரம் தவறு செய்தாலும் ராமதாஸைக் கைவிட இப்போது இவர்கள் தயாரில்லை என்பதும் அதற்கான காரணங்களும் இந்தப் பதிவிலும் ப்பின்னூட்டங்களிலும் இருக்கே..
ReplyDelete”ராமதாஸிற்கு பிற ஜாதியினரின் ஓட்டு தேவையில்லை, வன்னியர் ஓட்டே போதும்” என்று அருள் சார் சொன்னதுடன் இந்த விவாதம் நிறைவு பெற்றுவிட்டது. ஏனென்றால் பதிவில் நானும் “பிற சாதியினர் அவரை ஆதரிக்க காரணம் ஏதுமில்லை” என்றே சொல்லியிருக்கிறேன். அதையே அவரும் வேறு வார்த்தையில் சொல்லியுள்ளார். மீண்டும் நன்றியுடன்
ReplyDeleteசெங்கோவி.
// //Mr.Arul can u answer this paragraph ?!
ReplyDeleteராமதாஸின் மகனாகப் பிறந்த காரணத்திற்காக, அரசியலுக்கே வரக்கூடாதவர் அல்ல அன்புமணி. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால்மக்கள் மத்தியில் அவரைப் போட்டியிட வைத்து, எம்.பி. ஆக்கியிருந்தால், அன்புமணிக்கு அது மேலும் மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் இன்று வரை கொல்லைப் புற வழியாகவே மகனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, மந்திரியாக்கினார்.// //
ஒரு கட்சி முதன்மையாக அதற்கு வாக்களிக்கும் மக்களுக்கு அல்லது தொண்டர்களுக்கு கட்டுப்பட்டது என்று நான் கருதுகிறேன். மற்றதெல்லாம் வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் - அவ்வளவுதான். ஒரு பொருளை விற்கும் நிறுவனம் அதன் நுகர்வோருக்குதான் பயப்பட வேண்டுமே தவிர, நுகர்வோர் அல்லாதோருக்கு - அல்லது எதிர்காலத்தில் நுகர்வோர் ஆக வாய்ப்பே இல்லாதோருக்கு பயப்பட வேண்டிய தேவை இல்லை. இது அரசியல் கட்சிக்கும் பொருந்தும்.
இப்போது உங்களது கேள்விக்கு வருவோம்:
1. எவரும் மாநிலங்களவை உறுப்பினர் ஆக அரசியல் சட்டப்படி வாய்ப்பு இருக்கிறது. அந்த வழியை பயன்படுத்துவதில் என்ன தவறு என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. கொல்லைப்புற வழி என்பது சும்மா ஒரு பம்மாத்து வார்த்தைதான். எல்லோரும் நாடாளுமன்றத்திற்குள் ஒரே வழியாகத்தான் போகிறார்கள்.
2. உங்களது கருத்துப்படி நாட்டின் பிரதமர் கொல்லைப் புற வழியாகத்தான் வந்திருக்கிறார். அது தவறு என்று விமர்சிப்பவர்கள் - அரசியல் அமைப்பிலிருந்து மேலவையை தூக்க முயலட்டும், அதைவிடுத்து விமர்சிப்பது தேவையற்றது.
3. "மத்தியில் அவரைப் போட்டியிட வைத்து, எம்.பி. ஆக்கியிருந்தால், அன்புமணிக்கு அது மேலும் மரியாதை சேர்த்திருக்கும்" -என்பது ஒப்புக்கு பேசுவதாகும். உணமையில், பா.ம.க'வை சேர்ந்தவர்கள் எப்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனாலும், அதனை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கதான் செய்வார்கள். பலரது கண்களுக்கு பா.ம.க தனியாகத் தெரிவதுதான் இதற்கு காரணமாகும் . இதன் பின்னணி அவரவர் ஆழ்மனதோடு தொடர்புடையதாகும். (கருணாநிதியின் மகள் கனிமொழியும் கொல்லைப்புறமாகத்தான் சென்றிருக்கிறார். மூப்பனாரின் மகன் சி.கே. வாசனும் கொல்லைப்புறமாகத்தான் அமைச்சராக ஆகியுள்ளார். அதனை யாராவது விமர்சித்தது உண்டா? என்று யோசித்து பாருங்கள். அப்போது காரணம் புரியும்)
1. ஆனந்த் சர்மா, 2. ஏ.கே. அந்தோணி, 3. அசுவினி குமார், 4. குலாம் நபி ஆசாத், 5. முரளி தியோரா, 6. விலாசுராவ் தேசுமுக், 7. எம். எசு. கில், 8. எசு. எம். கிரிருட்டிணா, 9. செயராம் ரமேசு, 10. வயலார் ரவி, 11. முகுல் ராய், 12. மன்மோகன் சிங், 13. அம்பிகா சோனி, 14. சி.கே. வாசன் - ஆகிய 14 பேர் இப்போது கொல்லைப்புற வழியாக வந்து நடுவண் அமைச்சராக இருக்கிறார்கள். இவர்களிடம் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.
4. பா.ம.க'வினர் எவரும் "மத்தியில் அவரைப் போட்டியிட வைத்து, எம்.பி. ஆக்கியிருந்தால், அன்புமணிக்கு அது மேலும் மரியாதை சேர்த்திருக்கும்" என்று கருதவில்லை. அப்படி எவரும் கூறவும் இல்லை. மாறாக பா.ம.க'வை ஆதரிக்கும் வன்னியர்கள் தமது குடும்பத்தில் ஒருவர் அமைச்சரானதாகவே அப்போது கருதினர்.
-- எனவே இந்த விமர்சனத்தை பா.ம.க கண்டுகொள்ளும் தேவையே எழவில்லை.
@அருள்: தான் சார்ந்துள்ள கட்சியின் மீதான உங்கள் தீவிரம் எனக்கு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது.
ReplyDelete1. ஒரு கட்சியை அதற்கு ஓட்டளிப்போர் மட்டுமே விமர்சிக்கவேண்டும், மற்றவர்கள் கூடாது என்கிறீர்களா? ஒரு அரசியல் கட்சியை நிறுவனத்துடன் ஒப்பிடுவது மிகவும் ஆபாசமாக உள்ளது சார்..சேவை/தியாகம் என்பதெல்லாம் என்ன? 1988ஐ முழுதாக மறந்துவிட்டீர்கள் போலும்.
2. அன்புமணியை மட்டுமல்ல, கனிமொழி உள்ளிட்டோரையும் பல பதிவர்கள் கேள்விகேட்டுக் கொண்டேதான் உள்ளனர். சென்னையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டபோது, கனிமொழியிடம் நேராகவே அந்தக் கேள்வியைக்கேட்டனர். எனவே அன்புமணி மட்டுமே குறிவைத்து தாக்கப்படுவதாக நம்பும் மாயையிலிருந்து விடுபடுங்கள்.
3. //பதவிக்கு வருவதற்கு தியாகி குடும்பம் என்பதை ஒரு அளவு கோளாக வைக்க முடியாது.// வேறு என்ன அளவுகோல் என்று சொல்ல முடியுமா? தியாகிகள் குடும்பத்தில் ஒருவர்கூடவா தகுதியானவர் இல்லை? அன்புமணியை எம்.பி.ஆக்குவதில் காட்டிய அக்கறையை அவர்கள் விஷயத்தில் ஏன் காட்டவில்லை?
4. அதாவது, நீங்கள் எம்.பி. ஆகி, சம்பாதித்து அவர்களுக்கு ‘பல உதவிகளையும்’ செய்வீர்கள்..அவர்கள் காலம் முழுதும் பெற்றுக் கொண்டே இருக்கவேண்டும்..இல்லையா?
5. தொண்டர்களுடன் நெருங்கிப் பழகும் ஒரு சில தலைவர்களில் ஒருவர் ராமதாஸ்..அவரிடம் இதனை ஒரு கோரிக்கையாக வைப்பதற்குக் கூட உங்களுக்கு மனம் வர மறுப்பதேன்?
மீண்டும் இது எங்கள் கட்சிப் பிரச்சினை, மற்றவர் பேச உரிமையில்லை என்று சொல்லாதீர்கள்...அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்..ஓட்டு எல்லோரிடமும்தான் கேட்கிறீர்கள்...இல்லையா!
செங்கோவி said...
ReplyDelete// //ஒரு கட்சியை அதற்கு ஓட்டளிப்போர் மட்டுமே விமர்சிக்கவேண்டும், மற்றவர்கள் கூடாது என்கிறீர்களா?// //
வாக்களிக்காதவர்கள் விமர்சிக்க கூடாது என்று கூறவில்லை. சனநாயக அமைப்பில் யாரும் யாரையும் விமர்சிக்கலாம். அதேநேரத்தில், எந்த ஒரு கருத்திலும் எதிர்கருத்து - விமர்சனம் இருக்கும். எதிர் எதிரான விமர்சனங்களில் வாக்களிப்பவர்களின் கருத்துக்கே கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
எடுத்துக்காட்டாக, வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் 100% இடஒதுக்கீடு வேண்டும் (அதாவது பொதுப்பட்டியல் வேண்டாம்) என்பது ஒரு கோரிக்கை. இதனை வலியுறுத்தினால் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பும். விமர்சனங்கள் முன்வைக்கப்படும். ஆனால், பா.ம.க'வுக்கு வாக்களிப்பவர்கள் இக்கோரிக்கையை ஆதரிப்பார்கள்.அதனால், கட்சியும் விமர்சங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.
மற்றபடி, கட்சியை நிறுவனங்களுடம் ஒப்பிடுவது தவறு அல்ல. தனியார் நிறுவனங்கள் 'இலாப நோக்கில்' இயங்குகின்றன. அரசியல் கட்சிகள் 'அதிகாரத்தை வென்றெடுக்க' முயற்சிக்கின்றன. அவ்வளவுதான். தனியார் நிறுவனங்களின் 'மேலாண்மை' யுக்திகள் இப்போது அரசியலிலும் பயன்படுத்தப்படுகின்றன.
விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html